சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

விளம்பர அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி யாழ். மாநகர சபைக்கு 50 லட்சம் ரூபா நட்டம்; தொடர்கிறது மாநகர முதல்வரின் ஊழல் Khan11

விளம்பர அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி யாழ். மாநகர சபைக்கு 50 லட்சம் ரூபா நட்டம்; தொடர்கிறது மாநகர முதல்வரின் ஊழல்

Go down

விளம்பர அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி யாழ். மாநகர சபைக்கு 50 லட்சம் ரூபா நட்டம்; தொடர்கிறது மாநகர முதல்வரின் ஊழல் Empty விளம்பர அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி யாழ். மாநகர சபைக்கு 50 லட்சம் ரூபா நட்டம்; தொடர்கிறது மாநகர முதல்வரின் ஊழல்

Post by veel Wed 25 May 2011 - 23:44

விளம்பர அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி யாழ். மாநகர சபைக்கு 50 லட்சம் ரூபா நட்டம்; தொடர்கிறது மாநகர முதல்வரின் ஊழல்


யாழ். மாநகர சபை எல்லைக்குள் விளம்பரப்பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளது. இதனால் 2010 ஆம் ஆண்டில் மாநகர சபைக்கு 50 லட்சத்து 09 ஆயிரத்து 833 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக உயர் மட்ட விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த மோசடி தொடர்பாக யாழ்.மாநகர முதல்வருக்கும் ஆணையாளருக்கும் விளக்கம் கேட்டு 13.10.2010 ஆம் திகதி என்என்/ கேஎல்/மாநச /2010/06 இலக்கம் இடப்பட்டு அனுப்பப் பட்டு கணக்காய்வாளர் திணைக் களத்தால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இன்று வரை மாநகரசபையிடம் இருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் யாழ்.கிளையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.கணக்காய்வாளர் திணைக்களத்தின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கமுடியாமல் தடுமாறும் மாநகர முதல்வர், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மோசடியைக் கண்டு பிடித்து வெளிப்படுத்திய அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
மாநகர சபை எல்லைக்குள் நல்லூர் கோயில் பின் பக்கவீதியில் 14 விளம்பரப் பதாகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் 5 இற்கு மட்டுமே மாநகரசபைக்கு கட்டணமாக 27லட்சத்து 83 ஆயிரத்து233 ரூபா அறவிடப்பட்டுள்ளது.
ஒன்பது பதாகைகள் எந்த விதமான கட்டணமோ அனு மதியோ இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாநகர சபைக்கு வரவேண்டிய 50 லட்சத்து 09 ஆயிரத்து 833 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநகர சபையின் அங்கீகாரம் இன்றி விளம்பரப் பதாகைகளுக் கான கட்டணம் இரண்டு மடங்காக அறவிடப்பட்டுள்ளதுடன் நில வாடகை சதுர அடி ஒன்றுக்கு 200 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளது.2009 ஆம் ஆண்டில் ஒரு சதுர அடிக்கு 25 ரூபா மட்டுமே அறவிடப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்புத் தொடர்பாக பகிரங்க அறிவிப்போ அன்றி அரச வர்த்தமானி அறிவித்தலோ விடப்படவில்லை.வழமையாக விளம்பரப் பதாகைகளுக்கான விண்ணப்பப் படிவத்துடன் விளம்பர மாதிரி விளக்கங்கள் எதுவும் இணைக்கப்பட வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இணைக்கப்படவில்லை.அங்கீகாரம் இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகளில் தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநகர சபையின் வருமான மேற்பார்வை அதிகாரிகளாக ஏழு உயர் அதிகாரிகள் இருக்கும் போது ஒரே ஒரு குறிப்பிட்ட அதிகாரி மட்டுமே அனுமதி வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதில் பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விளம்பரக் கட்டண அறவீட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி கணக்கறிக்கையில் கையொப்பமிடவில்லை.இவற்றுக்கு உடனடியாக விளக்கம் அளிக்கும்படியும் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பதில் அளிக்கும்படியும் எழுதிய கடிதத்துக்கு எட்டு மாதங்களாகியும் முதல்வரிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் உயர்மட்ட விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top

- Similar topics
» கனடா அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது
» யாழ். சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது
» விளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு - சுப.வீரபாண்டியன்
» உரிமம் பெறாத விடுதிகளை மூடுவதற்கு யாழ்.மாநகர சபை நடவடிக்கை!
» யுத்த உபகரணமொன்றை நாட்டிற்குள் கொண்டு வந்த தமிழருக்கு 5 லட்சம் ரூபா அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum