சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Today at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

இங்கிலாந்துடனான தீர்க்கமான 2ஆவது டெஸ்டில் இலங்கை அணி இன்று களத்தில் Khan11

இங்கிலாந்துடனான தீர்க்கமான 2ஆவது டெஸ்டில் இலங்கை அணி இன்று களத்தில்

Go down

இங்கிலாந்துடனான தீர்க்கமான 2ஆவது டெஸ்டில் இலங்கை அணி இன்று களத்தில் Empty இங்கிலாந்துடனான தீர்க்கமான 2ஆவது டெஸ்டில் இலங்கை அணி இன்று களத்தில்

Post by நண்பன் Fri 3 Jun 2011 - 10:19

இங்கிலாந்துடனான தீர்க்கமான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. காடிபில் நடந்த இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில்தொடர் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி இன்று ஆரம்பமாகும் டெஸ்டில் தோல்வியைத் தவிர்ப்பது கட்டாயமாகும்.

குறிப்பாக வலுவான துடுப்பாட்ட வரிசையுடன் இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி இரண்டாவது டெஸ்டில் தமது துடுப்பாட்ட திறமையை வெளிக்காட்டுவது கட்டாயமாகும். குறிப்பாக சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன, திலான் சமரவீர ஆகியோர் சோபித்தால்தான் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இதில் தரங்க பரணவிதான, அணித்தலைவர் டில்ஷான், பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் இரண்டாவது டெஸ்டிலும் சோபிக்க வாய்ப்புள்ளது. காடிப் டெஸ்ட்டை இலங்கை அணி சமன் செய்ய அதிக வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி நாளின் கடைசி பகுதியில் 24.4 ஓவர்களில் வெறும் 82 ஓட்டங்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் டெஸ்டில் வலுவற்ற பந்துவீச்சு வரிசையுடன் களமிறங்கிய இலங்கை அணியில் இரண்டாவது டெஸ்டில் மாற்றம் இருக்கலாம். குறிப்பாக காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத தில்ஹார பெர்னாண்டோ இரண்டாவது டெஸ்டில் கிளமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சுழல் பந்துவீச்சிலும் மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறத்தில் இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் விளையாடிய அதே வலுவான அணியுடனேயே இன்றும் களமிறங்கும். ஒரே ஒரு மாற்றமாக காயத்திற்கு உள்ளாகியுள்ள ஜேம்ஸ் அன்டர்ஸனுக்கு பதில் ஸ்டிபன் பின் இரண்டாவது டெஸ்டில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இன்னிங்ஸால் வெற்றியீட்டியுள்ளதோடு அந்த அணி லோட்ஸில் கடந்த 5 ஆண்டுகளில் தோல்வியை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று லோட்ஸில் இலங்கை அணி கடைசியாக 2006 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அந்த டெஸ்டில் பலோ ஓன் செய்த இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 ஓவர்கள் முகம்கொடுத்து போட்டியை சமன் செய்தது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum