சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கலைகள் பலவிதம் Khan11

கலைகள் பலவிதம்

2 posters

Go down

கலைகள் பலவிதம் Empty கலைகள் பலவிதம்

Post by யாதுமானவள் Sat 11 Jun 2011 - 12:30

கலைகள் பலவிதம். அக்கலைகளைப் படைப்பவன் கலைஞன்.

ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் தத்தம் பாணியில் வெளிப்படுத்தும் அழகுதான் தனிப்பட்ட அக்கலைஞனின்
திறமையாக வரையறுக்கப்படுகிறது.

ஒரு பெண்ணை கற்பனை செய்யும் போது ஒரு கவிஞன் தன் எழுத்துக்களால் வடிக்கிறான். ஒரு சிற்பியோ சிலையாகச் செதுக்கி செப்பணிடுகிறான். அதே போலத்தான் ஒரு ஓவியன் தன் தூரிகையால் வடித்துவிடுகிறான்.

கவிஞன் பெண்ணை வர்ணித்த மார்பகங்களோ மறைவிடங்களோ விரசமாகத் தெரியவில்லையாம், சிற்பி செதுக்கிய சிலையில் கொங்கைகளும், இடுப்பும் கலைநயமாகவே தெரிகிறதாம் ஆனால் ஒரு ஓவியன் வரைந்துவிட்ட நிர்வாணம்தான் விரசமாகத் தெரிகிறதாம். என்ன விந்தை இது?

இது தான் நடந்தது இன்று . "ஓவியம் ஆனான் ஓவியன்" என்ற எனது கவிதையைப் படித்துவிட்டு M.F. ஹுசைன் ஐ பாராட்டி எழுதிவிட்டு நான் இந்தியத்தாயின் நிர்வாணத்தை ரசிப்பதாக கூறுகிறார்கள்.

கலையை கலைநயத்தோடு பார்க்கத் தவறிவிட்டு மதச்சாயம் பூசி மெருகேற்றிக் குளிர் காயும் சில சுயநலக் கும்பல்களை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு ஒரு கலைஞனை கேவலப்படுத்துவது எந்தக் கலாச்சாரத்தைச் சேர்ந்ததென நானறியேன்.

M.F. ஹுசேனின் பாரத மாதா ஓவியத்தில் நிர்வாண ஆபாசம் இருப்பதாகக் கூறும் அறிவாளிகளே... சீதாவை பெண்தெய்வமாகப் போற்றும் நீங்கள், அவளை கம்பராமாயணத்தில் கம்பன் வர்ணித்த விதத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? ஆபாசத்தின் உச்சமாக, அருவெறுப்பாக உள்ள கவிதைகளை புனிதமாகக் கொண்டாடுகிறீர்களே இது எந்தவிதமான கலையைச் சேர்ந்து? உங்கள் மூளையில் என்னவிதமான ரசனைக் குறைபாடுள்ளது என சோதித்துப் பாருங்கள்.

கம்பராமாயணத்தில் ஒரு சில பாடல்களிலுள்ள விரசத்தை மட்டும் இங்கு கொடுக்கிறேன். இதுவரை அறியாதவர்கள் அறிந்துகொள்ள....

அறிஞர் அண்ணா எழுதிய கம்பரசத்திலிருந்து சில எடுத்துக்காட்டுகள்...

கம்பன் கற்பனைமட்டுமல்ல எக்ஸ்-ரே உம் எடுக்கிறார் என்கிறார் அண்ணா... எப்படி?

இராமன் வில்லொடித்தது கேட்ட சீதை ..." "இராமனே தனக்கு மணாளன் என்பது உறுதியானது கேட்டு உளம் பூரித்த சீதையின் உணர்ச்சியை விளக்கக் கம்பன் அந்த அம்மையாரின் மறைவிடம் அந்த நேரத்திலே அந்த நினைப்பாலே என்ன நிலை அடைந்தது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டுமா? இராம பிரவாகமோ, பிராட்டியாரின் பெருமையோ அந்த மறைவிடத்தைப்பறிய விளக்கமில்லாவிட்டால் பூர்த்தியாகாதா என்று பக்தர்களைக் கேட்கிறார்!

பாடலை உங்களுக்குக் கூறுகிறேன் தீர்ப்பளியுங்கள் தோழர்களே!" - என்கிறார்.

கோமுனியுடன் வருகொண்டலென்றபின்
தாமரைக் கண்ணினாநேன்ற தன்மையா
லாமவனே கொலேன்றைய நீங்கினான்
வாம மேகலையிற வளர்ந்த தல்குலே!

தெரிகிறதா நடந்த விஷயம்? காட்சியை இதோ காணுங்கள்

சேடி: அம்மா, வில்லை ஒடித்தார்!
சீதை: ஒடித்தது யாரடி?
சேடி: அவர்தான் , தேவி!
சீதை: யாரடி , சொல் சீக்கிரம்!
சேடி: சொன்னேனே அம்மா, அவர்தான் ஒடித்தார் ..

இந்த உரையாடல் நடக்கும்போது, சந்தோஷத்தில் சீதை திளைக்க "கலீரெ"ன்று ஒரு சத்தம் கேட்கிறதாம். அந்த சத்தம் கீழே விழுந்த மேகலையின் சத்தமாம். மேகலைஎன்றால் பெண்கள் மறைவிடத்தில் அணியும் அணிகலன்,! ஆனந்தத்தால் அல்குல் வளர, மேகலை அற்றுக் கீழே விழுந்ததாம் ஐயனின் பிராட்டிக்கு, சர்வலோக ரட்சகிக்கு...

இன்னொரு இடத்தில்...

இராமபிரான் தன் மனைவியை வர்ணிக்கிறாராம். இந்த உலகத்திலேயே மதபோதனைக்காக
என்று மக்கள் கொண்டாடப்படும் எந்தக் காவியத்திலும் காணமுடியாதை கம்பராமாயணத்தில் காணலாம்
என்கிறார் அண்ணா.

அயோத்தியாக் காண்டம் , சித்திரக் கூடப் படலம் 31 ஆவது செய்யுளின் முதல் அடி:

"பாந்த டேரிவை பழிபடப் பரந்த பேர் அல்குல் ".

அதாவது வனத்தின் வசீகரத்தைக் காட்டிவரும்போது ... ஆசைக்கிளியே அங்கே பார் ஆரணங்கே இங்கே பார் என்று சொல்லாமல் ...

பாந்தள் - பாம் பின் படம் , தேர் - தேர்;
தட்டும்- ஆகியவையும்; பழிபட - உவமையாகாததால் ,
பழிப் புடைய பரந்த - பரவிய அகலமான;
பேர் அல்குல் - பெரிய அல்குல் உடையவளே! இங்கே பாரடி ...
என்று வனத்தின் காட்சிகளைக் காட்டிக்கொண்டு வருகிறாராம் இராமபிரான்.

எனக்குக் குமட்டுகிறது உங்களுக்கு எப்படியோ என்கிறார் அண்ணா.. .

இதைவிடக் கொடுமையாக இன்னொரு எடுத்துக்காட்டும் கூறிவிடுகிறேன்

சீதையைத் தேடி அனுமன் போகையில் அனுமநிடத்தில் சீதையின் அங்க அடையாளங்களை இராமன் கூறுவதாகக் கம்பன் கவிபுனைந்தது இது:

வாராழி கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசார் அல்குல் தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தங்கும், பாந்தழும் பணி வெண் றோங்கும்
ஓராலித் தேறும் கண்ட உனக்கு நான் உரைப்ப தென்ன?

இதன் அர்த்தமோ... என் மனைவியின் மேலிடமும் மறைவிடமும் இவ்விதமாக இருக்கும் என்று கூறி, இன்னின்ன அங்க இலட்சணமுடைய அவளை தேடிக் கண்டுபிடி என்று இராமர் பணிக்கிறார் என கம்பன் வர்ணிக்கிறார் ...

பரிதாபத்திற்குரிய அனுமனின் பாடு எவ்வளவு திண்டாட்டமாக இருந்திருக்கும்? இந்த அங்க லட்சணங்களை உடையவளை ஆராய்ந்து அறிந்து கண்டுபிடிக்க வேண்டுமே ... இப்படி ஏகப்பட்ட ஆபாச அணிவகுப்புகள் கொண்டதுதான் கம்ப இராமாயணம்.

இதையெல்லாம் புனிதமாகப் போற்றும் இவர்கள் ஹுசேனின் நிர்வாண மாதாவிற்கு வக்கிர சாயம் பூசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

பாரத மாதா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவளா என்ன? இந்தியக் குடிமக்களாகிய இன்னது முஸ்லிம் கிறிஸ்டியன் சீக்கியர் ஆகிய ஒவ்வொருவருக்கும் சொந்தமானவளள்லவா? இதை எப்படி இந்துக்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிக்கொள்கிறார்கள் என்பது தான் புதிராக உள்ளது.

நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், கலைஞன் என்பவன் காலத்திற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டவன். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் எழுத்தோ, சிலையோ, ஓவியமோ... கலைஞனுக்கு ஒன்றுதான்.

அதனால் மூளைமேல் முலாம் பூசியிருக்கும் மதச்சாயத்தைத் துடைத்துவிட்டு
கலையை கலையாகப் பாருங்கள் . கலைஞனை அவன் வாழும்
காலத்திலேயே போற்றப் பழகிக் கொள்ளுங்கள்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கலைகள் பலவிதம் Empty Re: கலைகள் பலவிதம்

Post by நண்பன் Sat 11 Jun 2011 - 13:30

//கலையை கலையாகப் பாருங்கள் . கலைஞனை அவன் வாழும்
காலத்திலேயே போற்றப் பழகிக் கொள்ளுங்கள்.//

இதுதான் எனது கருத்தும் நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum