Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
கோடையை சமாளிக்க சுலபமான வழிகள்...!
Page 1 of 1
கோடையை சமாளிக்க சுலபமான வழிகள்...!
கோடை வந்துவிட்டால் உடனே கையில் கூல் ட்ரிங்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில்லென்றும் இனிப்பாகவும் இருப்பதனாலேயே அவை கோடைக்கு ஏற்ற அரு மருந்தாகிவிடாது. நம் நாட்டில் காலம் காலமாக கோடையை சமாளித்திருக்கிறார்கள். எப்படி? இதோ சில சுலபமான தயாரிப்பு முறைகள்..
பானகம்
ஒரு கிலோ அச்சு வெல்லத்தில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு கெட்டிப்பாகு வைத்து ஒரு ஜாரில் ஊற்றி குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது கொஞ்சமாக எடுத்து ஏலக்காயையும், சுக்கையும் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். கடல்பாசி என்று ஒரு வகை உடலுக்குக் குளிர்ச்சி கொடுக்கும் பொருள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பெரிய டம்ளர் பானகம் தயாரிக்க...
இரண்டு ஸ்பூன் வெல்லப்பாகு, ஒரு சிட்டிகை ஏலம் சுக்குப் பொடி, ஒரு எலுமிச்சை பழச்சாறு, இரண்டு ஸ்பூன் ஊறவைத்த கடல் பாசி. ஒரு டம்ளர் தண்ணீர் கலக்கினால் உடலுக்கு சத்தான குளிர்பானம் ரெடி! கடல்பாசி இல்லையென்றாலும் பரவாயில்லை, அருந்தலாம். சுவையாக இருக்கும். இரும்புச்சத்து, விட்டமின்-சி நிறைந்த டானிக்கும் கூட இது!
பாதாம் கீர்
பாதாம் பருப்பைச் சுடுநீரில் 5 நிமிடங்கள் போட்டுத் தோலை உரித்து விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் ஏலக்காய் சேர்த்து அரைக்கவும். பாலை ஆற வைத்து இந்த பாதாம் கலவையை சர்க்கரையுடன் சேர்த்து குளிர்பதனப் பெட்டியில் வைத்து குளிரச் செய்து அருந்தவும். சூப்பர் ஆன ஹெல்த் டிரிங்க்!
ரோஸ் மில்க்
பாலைக் காய்ச்சி ஆறவிட்டு ரோஸ் எஸ்ஸென்ஸ் மட்டும் சில துளிகள் விட்டு குளிர்பதனம் செய்து அருந்தலாம். கலர் வேண்டியதில்லை. இதிலும் கடல்பாசி சேர்க்கலாம். ஒரு கிலோ சர்க்கரையைக் கெட்டிப் பாகு வைத்து ஆரஞ்சு, ரோஸ், தாழம்பூ, நன்னாரி போன்ற தேவைப்பட்ட எஸ்ஸென்ஸ்களை சேர்த்து ஆற வைத்து பாட்டிலில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் வைத்துக் கொண்டும் பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறு மற்றும் கடல்பாசி சேர்த்துக்கொள்ளலாம். செயற்கை வண்ணம் இல்லாத இயற்கையான சர்பத் ரெடி! சுவைக்குச் சுவை, உடல் நலத்துக்கு ஏற்றதும்கூட.
* பால், வெல்லப்பாகு, ஏலப்பொடி -கூல் செய்து அருந்தவும்.
* பயத்தம் பருப்பை வேகவைத்த தண்ணீர் மற்றும் பார்லி வேக வைத்த தண்ணீரில் பால் வெல்லம் ஏலக்காய் சேர்த்து அருந்தினால் மிகவும் உடலுக்கு நல்லது!
* தர்ப்பூசணி சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு, புதினா தழை, தேன் கலந்து குடிக்கலாம். வெயிலுக்கு பெஸ்ட் ஜூஸ் இது.
* வாட்டர் கூலரில் வெட்டி வேர் போட்டு வைத்தால் தண்ணீர் குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
* தினசரி உணவில் பாகற்காய் சேர்த்துக் கொண்டால் கோடை காலத்தில் சகஜமாக ஏற்படும் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளைத் தவிர்க்கலாம்.
* களைப்பாகும்போது கண்களில் ஜில்லென்ற ரோஸ் வாட்டரை அடித்துக் கொண்டால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.
Similar topics
» கோடையை சமாளிக்க சுலபமான வழிகள்...!
» கோடையை சமாளிக்க.
» கோடையை சமாளிக்க
» கோடையை சமாளிக்க உதவும் பழ வகைகள்
» கோடையை குளிர்ச்சியாக்கலாம்!
» கோடையை சமாளிக்க.
» கோடையை சமாளிக்க
» கோடையை சமாளிக்க உதவும் பழ வகைகள்
» கோடையை குளிர்ச்சியாக்கலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|