சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு ஒருபோதும் இனவாதத்தை தூண்டவில்லை : ஜனாதிபதி Khan11

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு ஒருபோதும் இனவாதத்தை தூண்டவில்லை : ஜனாதிபதி

Go down

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு ஒருபோதும் இனவாதத்தை தூண்டவில்லை : ஜனாதிபதி Empty பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு ஒருபோதும் இனவாதத்தை தூண்டவில்லை : ஜனாதிபதி

Post by முனாஸ் சுலைமான் Wed 29 Feb 2012 - 4:59

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு ஒருபோதும் இனவாதத்தை தூண்டவில்லை எனவும் அதனால், சமாதானத்தையும், ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான மக்களின் ஆசிர்வாதத்தை இலங்கை கொண்டுள்ளது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
30 வருடகால யுத்தத்தில் இலங்கை படைகள் பாரியளவிலான படுகொலைகளையோ, சட்டத்திற்குப் புறம்பான கொலைகளையோ கொலைக்களங்களையோ மேற்கொள்ளவில்லை. இந்நாட்டில் ஜனநாயகம் முழுமையாக நிலைநாட்டப்பட்டது என அவர் கூறினார்.
'ராவய' பத்திரிகையின் வெள்ளிவிழா, பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
"1971, 1989-90 களின் கிளர்ச்சிக் காலம் மற்றும் 30 வருடகால பயங்கரவாதம் ஆகியன இந்நாட்டில் இரத்தத்தையும் கண்ணீரையும் தவிர வேறெதையும் ஏற்படுத்தவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என நாம் திருப்தியடைய முடியாது. ஆனால், பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் மீண்டும் தலைதூக்காத வகையிலான சூழ்நிலையொன்றை நாம் ஏற்படுத்த உறுதிபூண வேண்டும்" என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டீ.எஸ். சேனநாயக்க தனது முதலாவது சுதந்திர தின உரையில் மக்கள் தமது மத, சாதி, இன வேறுபாடுகளை மறந்து ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுத்தார்.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைககள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை கொண்டுவருவதற்கு ஒரு பகுதியினர் முயற்சிக்கின்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்காக வீதியில் இறங்கினார்கள்.
அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகள் சுமார் 10,000 பேருக்கு புனர்வாழ்வளித்தது. 250,000 இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்தது. 1971 ஆம் ஆண்டு, ஆயுதமேந்திய இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு மிக நீண்டகாலம் சென்றது. 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி தொடர்பாக விசாரணை நடத்திய ஆணைக்குழு 18 ஆண்டுகளுக்குப்பின் 1989 ஆம் ஆண்டில்தான் அதை நிறைவுசெய்தது" எனவும் ஜனாதிபதி கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில், இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பத்றகு உள்நாட்டு அடிப்படையிலான தீர்வு தேவை எனக் கூறினார்.
"ராவயவானது 1977 ஆம் ஆண்டு ஐ.தே.க.வின் தேர்தல் வெற்றியின்பின்னர் ஏற்பட்ட சமூக மாற்றத்தின் ஒரு விளைவாகும். ராவயவானது மாற்றுக்கருத்து, மாற்று சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் சக்திவாய்ந்த ஐ.தே.க. அரசாங்கத்தை விமர்சித்தது.
1977 ஆம் ஆண்டு காலத்தில் நிலவியதைப்போன்ற அரசியல், சமூக, கலாசார சூழல் மீண்டும் இந்நாட்டில் ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல், சமூக, கலாசார மாற்றத்தை ஏற்படுத்துவத்றகு அத்தகைய சக்திகள் மீண்டும் உருவாகுவது தவிர்க்கப்பட முடியாது" என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum