சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Today at 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53

» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Khan11

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

+5
rammalar
ராகவா
பர்ஹாத் பாறூக்
Nisha
*சம்ஸ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by *சம்ஸ் Wed 26 Mar 2014 - 12:26

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

மொழிப் பயிற்சி – 1 :

ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை. அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி உங்களுக்காக…
அச்சுறுத்த வேண்டா:

“”தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள், கற்றுக்கொள்வது எளிதன்று” என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா. தமிழில்,

“”எழுத்தெனப் படுவ

அகரமுதல் னகர இறுவாய்

முப்பஃது என்ப…”

என்றார் தொல்காப்பியர். ஆய்தம் ஒன்று சேர்த்து முப்பத்தோர் எழுத்துகளே தமிழில் உள. கூட்டு ஒலிகளையெல்லாம் எழுத்தெண்ணிக்கையாக்கிஅச்சுறுத்தல் ஏனோ?

ஆங்கிலத்தில் தலைப்பு எழுத்து, சிறிய எழுத்து என இருவகையும், ஒவ்வொன்றிலும் இரண்டு பிரிவுகளுமாக மொத்தம் நூற்றுநான்கு எழுத்துகள் உள்ளன என்று நாம் சொல்லுவதில்லை. அன்றியும் ஆங்கிலத்தில் சில எழுத்துகளை ஒலிக்காமலேயே உச்சரிக்க வேண்டும் (Psychology-சைக்காலஜி). சில எழுத்துகளின் ஒலி இடத்திற்கேற்ப மாறுபடும், இப்படிப்பட்ட சிக்கல்கள் தமிழில் இல்லை. என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே படிக்கலாம்.

÷தமிழில் வல்லெழுத்துகள் இடம் நோக்கி மென்மைபெற்று ஒலிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. க்ஷஹ இத்தகைய ஒலி வேறுபாடுகள் வடசொற்கலப்பினால் வந்தவை.

தமிழ் இயற்கை மொழி:

மாந்த இனம் கை, கால்களை அசைத்து முகக்குறிகாட்டி (சைகைகளால்) கருத்தை-எண்ணத்தைப் புலப்படுத்திய நிலையிலிருந்து மேம்பட்டு வாய்திறந்து பேசக் கற்றுக்கொண்ட முதல்மொழி-இயற்கைமொழி தமிழேயாகும். எந்த மொழிக்காரரும், எந்நாட்டவரும் பேசவேண்டுமாயின் முதலில் வாய்திறத்தல் வேண்டும். ஒன்றும் பேசாதிருப்பவரைப் பார்த்து “”என்ன வாயைத் திறக்க மாட்டீங்களா?”  என்போமன்றோ?  வாயை மெல்லத் திறந்தால் தோன்றும் ஒலி “அ’. சற்று அதிகம் திறந்தால்  “ஆ’ தோன்றும். இவ்வாறே அங்காத்தலில் தொடங்கி தமிழ் ஒலிகள் (எழுத்துகள்) இயற்கையாகவே-இயல்பாகவே எழுந்தவை என்றுணர வேண்டும்.

ஒலிப்பு-உச்சரிப்பு:

இந்த இனிய மொழியின் தனிச்சிறப்பு உச்சரிப்பாகும். நாம் இன்று தமிழ் என்னும் சொல்லையே சரியாக உச்சரிப்பதில்லை. தமில், தமிள், டமில் என்று பலவாறு உச்சரிப்பவர் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லில், த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். மூவினமும் தமிழில் அடக்கம். தமிள் வாள்க! என்று மேடையில் முழக்கமிடுகிறார்கள். தமிளா… தமிலா… என்று அழைக்கிறார்கள். “தமிழ்மொழி என் தாய்மொழி’ என்ற தொடரை ஒவ்வொருவரும் ஒரு நாளில் பத்து முறையாவது பிழையின்றி ஒலித்திடப் பயிற்சி செய்யவேண்டும்.

÷”"என்ன நேயர்கலே நிகழ்ச்சியைப் பார்த்திங்கலா… உங்கல் கருத்தை எங்கலுக்கு எளுதியனுப்புங்கள்” என்று ல, ழ, ள மூன்றையும் கொலைசெய்து அறிவிப்பவர்கள் ஊடகங்களில் பலர் உள்ளனர். நிகழ்ச்சி என்னும் சொல்லில் “ச்’சை விழுங்கி, நிகழ்சி என்பது ஒரு தனிபாணி போலும். இவற்றையெல்லாம் எப்படிச் சரிசெய்வது?

நுண்ணொலி வேறுபாடுகள்:

தமிழில் உள்ள எல்லா எழுத்துகளிலும் வல்லினம், மெல்லினம் என்றிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். அதனால், “சார் இங்கே என்ன “ல’னா சார் போடணும்? வல்லினமா மெல்லினமா? என வினவுவர். பதினெட்டு மெய் எழுத்துகளை மூன்றாக, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பிரித்துள்ளனர். ய், ர், ல், வ், ழ், ள் இவ்வாறு இடையின எழுத்துகள். மேற்பல் வரிசையின் முன்பகுதி உட்புறத்தை (அண்ணம்) நாக்கின் நுனி கொண்டு தொட்டால் (ஒற்றுதல்) தோன்றுவது ஒற்றல் “ல’கரம். நாக்கின் நுனியை உள்ளே வளைத்து அண்ணத்தை (மேற்பல் வரிசை உட்புறம்) வருடினால் தோன்றுவது வருடல் “ள’கரம். இரு நிலைக்கும் இடையில் நாக்கின் நுனி வளைந்து நின்று தோன்றும் ஒலி “ழ’கரம். இது சிறப்பு ழகரம் என்று சுட்டப்படும். இம்மூன்று ஒலிகளையும் வேறுபடுத்திச் சரியாக ஒலித்தால் பொருள் வேறுபடுதலை அறியலாம்.

எடுத்துக்காட்டுகள்:

தால் – நாக்கு, தாள்-எழுதும்தாள், பாதம் (அடி);

தாழ் – தாழ்ப்பாள், பணி(ந்து);

வால் – தூய்மை (வெண்மை)-

வாலறிவன், வாலெயிறு;

வாள் – வெட்டும் கருவி,

வாழ் – வாழ்வாயாக

இப்படிப்பல காட்டலாம்.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

Last edited by *சம்ஸ் on Thu 3 Apr 2014 - 11:05; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty மொழிப் பயிற்சி – 2

Post by *சம்ஸ் Wed 26 Mar 2014 - 12:29

இடையின ரகரம் வல்லின றகரம்:

இவற்றைச் சின்ன “ர’ பெரிய “ற’ என்று சொல்லுதல் வழக்கத்தில் உள்ளது. பெரியவருக்குச் சின்ன “ர’ போடவேண்டும்; சிறியவருக்குப் பெரிய “ற’ போடவேண்டும் என்று வேடிக்கையாகச் சொல்வர்.

÷ய ர ல வ ழ ள என்னும் இடையின எழுத்துகளுள் ஒன்று “ர’. க ச ட த ப ற என்னும் வல்லின எழுத்துகளுள் ஒன்று “ற’. தகராறு எனும் சொல்லில் (தகர்+ஆறு) “ர்’ இடையினம்; “று’-வல்லினம். சுவர் என்னும் சொல்லுடன் “இல்’ உருபு சேர்த்தால் சுவர்+இல்=சுவரில் என்றுதான் ஆகும். ஆனால் பலரும் சுவற்றில் எழுதாதே என்று (சுவறு+இல்=சுவற்றில்) தவறாக எழுதுகிறார்கள். சோறு+இல்=சோற்றில் என்பது சரி. (வல்லொற்று இரட்டித்தல் என்பது இலக்கணம்) கயிறு என்று எழுதவேண்டிய சொல்லைக் கயர் எனத் தவறாக எழுதுவோர் உளர் (கயர் வியாபாரம்).

“ண’கர, “ந’கர, “ன’கரங்கள்:

÷மூன்று சுழி “ண’னா, இரண்டு சுழி “ன’னா, காக்கா மூக்கு “ந’னா என்றெல்லாம் சொல்லுவதை விட்டு விடுவோம். தமிழ் எழுத்துகளின் வரிசையில் “ட’ பின் வருவது டண்ணகரம்; “த’பின் வருவது தந்நகரம்; “ற’பின் வருவது றன்னகரம் என்று சுட்டப்படுதல் வேண்டும். இந்த மூன்றும் இடம்மாறி-எழுத்துமாறி போடப்பட்டால் பெரும் குழப்பமாகிவிடும். பொருள் வேறுபட்டுச் சிதைவு ஏற்படும். ஆதலின் கவனமாக இவ்வெழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

பனி – குளிர்ச்சியானது

பணி – பணிந்து போ, தொண்டு

பதநி – (பதநீர்) இளநி (இளநீர்) – பருகுபவை

அன்னை – தாய்; அண்ணன் – தமையன்; அந்நாள் – அந்தநாள். எந்த இடத்தில் எந்த எழுத்தைப் போடவேண்டும் என்று அறிதல் அவசியம். இன்றைய தமிழில் நேர்ந்துவிட்ட சிதைவுகள் – பிழைகள் பற்றி இனி விரிவாகக் காண்போம்.

சரியெனக் கருதும் பிழையான சொற்கள்:

1. கோர்வை, கோர்த்து:

÷அவர் நன்றாகக் கோர்வையாகப் பேசினார் என்றும், இருநாட்டு அதிபர்களும் சந்தித்தபோது கைகோர்த்துக் கொண்டனர் என்றும் செய்தித்தாளில் படிக்கிறோம். கோவையாகப் பேசினார், கை கோத்துக் கொண்டனர் என்பனதாம் சரியானவை. இடையில் ஒரு “ர்’ சேர்ப்பது தவறு. சான்று: நான்மணிக்கோவை, ஆசாரக்கோவை. “”எடுக்கவோ கோக்கவோ என்றான்” (வில்லி).

2. முகர்ந்து:

÷மலரை எடுத்து முகர்ந்து பார்த்தான் என்று கதையில் எழுதுகிறார்கள். முகர்ந்து என ஒரு சொல் தமிழில் இல்லை. நுகர்ந்து என ஒரு சொல், அனுபவித்து எனும் பொருள் கொண்டது. முகந்து என ஒரு சொல், (நீரை முகந்து) அள்ளி எனும் பொருள் கொண்டது. மோந்து எனும் சொல்லே முகர்ந்து என மாறிவிட்டது. மோந்து பார்த்தல் என்று சொல்லுவதில்லையா? மோப்பநாய், “மோப்பக்குழையும் அனிச்சம்’ என்பன காண்க.

3. முயற்சிக்கிறேன்:

÷”உனக்காக நான் முயற்சிக்கிறேன்’ என்று பேசுகிறார்கள். உனக்காக நான் முயல்கிறேன் என்றோ, முயற்சி செய்கிறேன் என்றோ சொல்ல வேண்டும். முயற்சிக்கிறேன் என்பது பிழை. முயற்சி ஒரு தொழில்பெயர். முயல் என்பது வினைப் பகுதியாயினும் முயற்சி எனும் சொல் (தொழில்) பெயர்ச்சொல் ஆகிவிடுவதால் முயற்சிக்கிறேன் பிழையாகிறது. ஆடுதல், பாடுதல் என்பனவும் தொழில் பெயர்களே. ஆடுதலிக்கிறேன், பாடுதலிக்கிறேன் என்பதுண்டோ?

4. அருகாமையில்:

÷என் வீடு அருகாமையில் உள்ளது என்று சொல்லுகிறோம். அருகில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அருகாமை எனில் அருகில் இல்லாமை (அருகு+ஆ+மை) – சேய்மை எனும் பொருள் உண்டாகும். இல்லாமை, கல்லாமை, நில்லாமை, செல்லாமை என்பனவற்றுள் “ஆ’ எதிர்மறை இடைநிலை இருப்பதுபோலவே, அருகாமையிலும் உள்ளது.

5. முன்னூறு:

÷”நான் உனக்கு முன்னூறு ரூபா கொடுத்தேன்’ என்றால், முன்-நூறு ரூபா கொடுத்தேன் என்று பொருளாகும். முந்நூறு கொடுத்தேன் என்றால், மூன்று நூறு ரூபாய் கொடுத்தேன் என்று பொருளாகும். மூன்று எனும் சொல்லில் றன்னகரம் வரினும் மூன்று + நூறு சேரும்போது, மூன்றில் உள்ள இரண்டு எழுத்தும் கெட்டு (நீங்கி) “மூ’ எனும் நெடில் “மு’ எனக் குறுகி மு+நூறு=முந்நூறு ஆகும். இலக்கியச்சான்று: “பாரியின் பறம்பு முந்நூறு ஊர் உடைத்தே’.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

Last edited by *சம்ஸ் on Thu 3 Apr 2014 - 11:06; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by Nisha Wed 26 Mar 2014 - 12:50

ஆஹா !

அழகான ஆரம்பம்! நாம் தவறுதலாய் தட்டச்சிடும் ஒரேழுத்து சொல்ல வரும் கருத்தினை மாற்றி  நம் தலைவிதியையே மாற்றிடுமாம்.

தால் – நாக்கு,

தாள்-எழுதும்தாள், பாதம் (அடி);

தாழ் – தாழ்ப்பாள், பணி(ந்து);

வால் – தூய்மை (வெண்மை)-வாலறிவன், வாலெயிறு;

வாள் – வெட்டும் கருவி,

வாழ் – வாழ்வாயாக

எந்த இடத்தில் எந்த எழுத்தைப் போடவேண்டும் என்று அறிந்தே எழுத பயில்வோம்!

சம்ஸ் இது நல்லதொரு முயற்சி!தொடர்ந்து பகிருங்கள்!

Last edited by Nisha on Wed 26 Mar 2014 - 12:54; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by Nisha Wed 26 Mar 2014 - 12:53

சேனையில் என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது! ஒன்றுமே புரியல!

ஆளாளுக்கு  தேடலோடு புறப்பட்டு இருக்காங்க.

நிஷா ஜாக்கிரதையாக  இருந்துக்கோ.!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 12:58

Nisha wrote:சேனையில் என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது! ஒன்றுமே புரியல!
ஆளாளுக்கு  தேடலோடு புறப்பட்டு இருக்காங்க.
நிஷா ஜாக்கிரதையாக  இருந்துக்கோ.!

அனைத்திற்கும் மூலகாரணமே நீங்கதான்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by Nisha Wed 26 Mar 2014 - 13:12

பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:
சேனையில் என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது! ஒன்றுமே புரியல! 
ஆளாளுக்கு  தேடலோடு புறப்பட்டு இருக்காங்க.
நிஷா ஜாக்கிரதையாக  இருந்துக்கோ.!

அனைத்திற்கும் மூலகாரணமே நீங்கதான்

என்னப்பா இது! பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அணுகுண்டைத்தூக்கி என்மேல போடுகின்றீர்கள்! இப்படில்லாம் சொல்லி என்னை தள்ளி வைக்ககூடாதாம்
 உங்கள் எல்லோரையும்விட என் தமிழ் அறிவு ரெம்ப கம்மி தான் !
நீங்கள்  எல்லோருமே  தமிழில்  கற்றறிந்தவர்கள் தாம் ! 

உங்களிடம் மறைந்திருந்த திறமை, சேனை  தலைமையிடம் இருந்த அன்பும் பொறுமையும்,புரிதலும், உறவுகளிடம் இருந்த அறிவும் நட்பும்  குடத்தில் வைக்கப்ட்ட விளக்காய் இருந்தது. நான்  கொஞ்சமாய் தூண்டி விட்டேன. ஏற்கனவே கற்பூர புத்தி இயலபாகவே இருப்பதால் சட்டென பற்றினீர்கள்!

எல்லாமே நல்லதற்கே!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by Nisha Wed 26 Mar 2014 - 13:19

இனி கோர்வை  இல்லை கோவை என்போம்.
முகர்ந்து இல்லை நுகர்ந்து அல்லது முகந்து என்போம்.

பூவை மோந்து பார்ப்போம்!

பர்ஹாத்  நேற்று முந்நூறு ரூபாய் பணத்தை சம்ஸ் முன்னூறு  ரூபாய் நோட்டாக என்னிடம் கடன் வாங்கினார்!

கட்ன வாங்கியது யார்?
சாட்சி யார்?
இது எப்படி இருக்கிறது. *#
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by *சம்ஸ் Wed 26 Mar 2014 - 15:23

Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:
சேனையில் என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது! ஒன்றுமே புரியல! 
ஆளாளுக்கு  தேடலோடு புறப்பட்டு இருக்காங்க.
நிஷா ஜாக்கிரதையாக  இருந்துக்கோ.!

அனைத்திற்கும் மூலகாரணமே நீங்கதான்

என்னப்பா இது! பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அணுகுண்டைத்தூக்கி என்மேல போடுகின்றீர்கள்! இப்படில்லாம் சொல்லி என்னை தள்ளி வைக்ககூடாதாம்
 உங்கள் எல்லோரையும்விட என் தமிழ் அறிவு ரெம்ப கம்மி தான் !
நீங்கள்  எல்லோருமே  தமிழில்  கற்றறிந்தவர்கள் தாம் ! 

உங்களிடம் மறைந்திருந்த திறமை, சேனை  தலைமையிடம் இருந்த அன்பும் பொறுமையும்,புரிதலும், உறவுகளிடம் இருந்த அறிவும் நட்பும்  குடத்தில் வைக்கப்ட்ட விளக்காய் இருந்தது. நான்  கொஞ்சமாய் தூண்டி விட்டேன. ஏற்கனவே கற்பூர புத்தி இயலபாகவே இருப்பதால் சட்டென பற்றினீர்கள்!

எல்லாமே நல்லதற்கே!
அவர் அவர் திறமைகளை இனங்கண்டு சரியான தூண்டலினால் நல்லது நடக்கிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by Nisha Wed 26 Mar 2014 - 15:30

Nisha wrote:இனி கோர்வை  இல்லை கோவை என்போம்.
முகர்ந்து இல்லை நுகர்ந்து அல்லது முகந்து என்போம்.

பூவை மோந்து பார்ப்போம்!

பர்ஹாத்  நேற்று முந்நூறு ரூபாய் பணத்தை சம்ஸ் முன்னூறு  ரூபாய் நோட்டாக என்னிடம் கடன் வாங்கினார்!

கட்ன வாங்கியது யார்?
சாட்சி யார்?
இது எப்படி இருக்கிறது. *#

கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியலலயா..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by *சம்ஸ் Wed 26 Mar 2014 - 15:47

Nisha wrote:
Nisha wrote:இனி கோர்வை  இல்லை கோவை என்போம்.
முகர்ந்து இல்லை நுகர்ந்து அல்லது முகந்து என்போம்.

பூவை மோந்து பார்ப்போம்!

பர்ஹாத்  நேற்று முந்நூறு ரூபாய் பணத்தை சம்ஸ் முன்னூறு  ரூபாய் நோட்டாக என்னிடம் கடன் வாங்கினார்!

கட்ன வாங்கியது யார்?
சாட்சி யார்?
இது எப்படி இருக்கிறது. *#

கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியலலயா..
கடன் வாங்கியது சம்ஸ் சாட்சி பர்ஹாத் சரியா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by Nisha Thu 27 Mar 2014 - 0:45

தப்பு தப்பு தப்பு சார்..  உங்க முன்னாடி மூன்று நூறு  ரூபாய் நோட்டுக்களை என்னிடம் வாங்கியது பார்ஹாத்!

பர்ஹாத் திடிரென அமைதியாயிட்டாரே..  என்னாச்சிது.

அடுத்த பாடம் தொடருங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by *சம்ஸ் Thu 27 Mar 2014 - 7:37

Nisha wrote:தப்பு தப்பு தப்பு சார்..  உங்க முன்னாடி மூன்று நூறு  ரூபாய் நோட்டுக்களை என்னிடம் வாங்கியது பார்ஹாத்!

பர்ஹாத் திடிரென அமைதியாயிட்டாரே..  என்னாச்சிது.

அடுத்த பாடம் தொடருங்க!

நன்றி  !_ 

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty மொழிப் பயிற்சி – 2 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

Post by *சம்ஸ் Sun 30 Mar 2014 - 8:13

இடையின ரகரம் வல்லின றகரம்:

இவற்றைச் சின்ன “ர’ பெரிய “ற’ என்று சொல்லுதல் வழக்கத்தில் உள்ளது. பெரியவருக்குச் சின்ன “ர’ போடவேண்டும்; சிறியவருக்குப் பெரிய “ற’ போடவேண்டும் என்று வேடிக்கையாகச் சொல்வர்.

÷ய ர ல வ ழ ள என்னும் இடையின எழுத்துகளுள் ஒன்று “ர’. க ச ட த ப ற என்னும் வல்லின எழுத்துகளுள் ஒன்று “ற’. தகராறு எனும் சொல்லில் (தகர்+ஆறு) “ர்’ இடையினம்; “று’-வல்லினம். சுவர் என்னும் சொல்லுடன் “இல்’ உருபு சேர்த்தால் சுவர்+இல்=சுவரில் என்றுதான் ஆகும். ஆனால் பலரும் சுவற்றில் எழுதாதே என்று (சுவறு+இல்=சுவற்றில்) தவறாக எழுதுகிறார்கள். சோறு+இல்=சோற்றில் என்பது சரி. (வல்லொற்று இரட்டித்தல் என்பது இலக்கணம்) கயிறு என்று எழுதவேண்டிய சொல்லைக் கயர் எனத் தவறாக எழுதுவோர் உளர் (கயர் வியாபாரம்).

“ண’கர, “ந’கர, “ன’கரங்கள்:

÷மூன்று சுழி “ண’னா, இரண்டு சுழி “ன’னா, காக்கா மூக்கு “ந’னா என்றெல்லாம் சொல்லுவதை விட்டு விடுவோம். தமிழ் எழுத்துகளின் வரிசையில் “ட’ பின் வருவது டண்ணகரம்; “த’பின் வருவது தந்நகரம்; “ற’பின் வருவது றன்னகரம் என்று சுட்டப்படுதல் வேண்டும். இந்த மூன்றும் இடம்மாறி-எழுத்துமாறி போடப்பட்டால் பெரும் குழப்பமாகிவிடும். பொருள் வேறுபட்டுச் சிதைவு ஏற்படும். ஆதலின் கவனமாக இவ்வெழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

பனி – குளிர்ச்சியானது

பணி – பணிந்து போ, தொண்டு

பதநி – (பதநீர்) இளநி (இளநீர்) – பருகுபவை

அன்னை – தாய்; அண்ணன் – தமையன்; அந்நாள் – அந்தநாள். எந்த இடத்தில் எந்த எழுத்தைப் போடவேண்டும் என்று அறிதல் அவசியம். இன்றைய தமிழில் நேர்ந்துவிட்ட சிதைவுகள் – பிழைகள் பற்றி இனி விரிவாகக் காண்போம்.

சரியெனக் கருதும் பிழையான சொற்கள்:

1. கோர்வை, கோர்த்து:

÷அவர் நன்றாகக் கோர்வையாகப் பேசினார் என்றும், இருநாட்டு அதிபர்களும் சந்தித்தபோது கைகோர்த்துக் கொண்டனர் என்றும் செய்தித்தாளில் படிக்கிறோம். கோவையாகப் பேசினார், கை கோத்துக் கொண்டனர் என்பனதாம் சரியானவை. இடையில் ஒரு “ர்’ சேர்ப்பது தவறு. சான்று: நான்மணிக்கோவை, ஆசாரக்கோவை. “”எடுக்கவோ கோக்கவோ என்றான்” (வில்லி).

2. முகர்ந்து:

÷மலரை எடுத்து முகர்ந்து பார்த்தான் என்று கதையில் எழுதுகிறார்கள். முகர்ந்து என ஒரு சொல் தமிழில் இல்லை. நுகர்ந்து என ஒரு சொல், அனுபவித்து எனும் பொருள் கொண்டது. முகந்து என ஒரு சொல், (நீரை முகந்து) அள்ளி எனும் பொருள் கொண்டது. மோந்து எனும் சொல்லே முகர்ந்து என மாறிவிட்டது. மோந்து பார்த்தல் என்று சொல்லுவதில்லையா? மோப்பநாய், “மோப்பக்குழையும் அனிச்சம்’ என்பன காண்க.

3. முயற்சிக்கிறேன்:

÷”உனக்காக நான் முயற்சிக்கிறேன்’ என்று பேசுகிறார்கள். உனக்காக நான் முயல்கிறேன் என்றோ, முயற்சி செய்கிறேன் என்றோ சொல்ல வேண்டும். முயற்சிக்கிறேன் என்பது பிழை. முயற்சி ஒரு தொழில்பெயர். முயல் என்பது வினைப் பகுதியாயினும் முயற்சி எனும் சொல் (தொழில்) பெயர்ச்சொல் ஆகிவிடுவதால் முயற்சிக்கிறேன் பிழையாகிறது. ஆடுதல், பாடுதல் என்பனவும் தொழில் பெயர்களே. ஆடுதலிக்கிறேன், பாடுதலிக்கிறேன் என்பதுண்டோ?

4. அருகாமையில்:

÷என் வீடு அருகாமையில் உள்ளது என்று சொல்லுகிறோம். அருகில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அருகாமை எனில் அருகில் இல்லாமை (அருகு+ஆ+மை) – சேய்மை எனும் பொருள் உண்டாகும். இல்லாமை, கல்லாமை, நில்லாமை, செல்லாமை என்பனவற்றுள் “ஆ’ எதிர்மறை இடைநிலை இருப்பதுபோலவே, அருகாமையிலும் உள்ளது.

5. முன்னூறு:

÷”நான் உனக்கு முன்னூறு ரூபா கொடுத்தேன்’ என்றால், முன்-நூறு ரூபா கொடுத்தேன் என்று பொருளாகும். முந்நூறு கொடுத்தேன் என்றால், மூன்று நூறு ரூபாய் கொடுத்தேன் என்று பொருளாகும். மூன்று எனும் சொல்லில் றன்னகரம் வரினும் மூன்று + நூறு சேரும்போது, மூன்றில் உள்ள இரண்டு எழுத்தும் கெட்டு (நீங்கி) “மூ’ எனும் நெடில் “மு’ எனக் குறுகி மு+நூறு=முந்நூறு ஆகும். இலக்கியச்சான்று: “பாரியின் பறம்பு முந்நூறு ஊர் உடைத்தே’.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by ராகவா Mon 31 Mar 2014 - 5:45

*_  *_  *_  *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by rammalar Mon 31 Mar 2014 - 6:02

தமிழ் தெரியாதவங்களுக்கு

தமிழ் சொல்லிக் கொடுக்கிறது ரொம்ப ஈஸி...
-
ஏன்னா அவங்க திருப்பி ஏதும் கேள்வி கேட்க மாட்டாங்க...!
-
உதாரணமா தகராறு என்பதற்கு என்பதற்கு
ர அல்லது ற எது போட வேண்டும் என்று
சதேகம் வந்தால் சின்ன சண்டையா இருந்தா
தகராறு
பெரிய சண்டையா இருந்தா
தகறாறு
போடணும்...!
-
அவ்வளவுதான்..!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by Nisha Mon 31 Mar 2014 - 6:51

rammalar wrote:தமிழ் தெரியாதவங்களுக்கு

தமிழ் சொல்லிக் கொடுக்கிறது ரொம்ப ஈஸி...
-
ஏன்னா அவங்க திருப்பி ஏதும் கேள்வி கேட்க மாட்டாங்க...!
-
உதாரணமா தகராறு என்பதற்கு என்பதற்கு
ர அல்லது ற எது போட வேண்டும் என்று
சதேகம் வந்தால் சின்ன சண்டையா இருந்தா
தகராறு
பெரிய சண்டையா இருந்தா
தகறாறு
போடணும்...!
-
அவ்வளவுதான்..!!
-
ஆஹா!

ராம் மலர் ஐயா உங்களுக்கு என்னாச்சு! ர வோடு றா வோடும் ராவோடு ராவாக சண்டையோ!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by Nisha Mon 31 Mar 2014 - 6:56

மூன்றாவது பகுதிக்கு பதில்  மீண்டும் இரண்டாவது பயிற்சியே பதிந்திருக்கின்றீர்களே!

அடுத்தது எங்கே!

தலைப்பில்  பயிற்சி  2, 3 என  எழுதி வந்தால்  இலகுவாய் இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty மொழிப்பயிற்சி – 4 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

Post by *சம்ஸ் Thu 3 Apr 2014 - 11:01

13.பண்டகசாலை

பண்டங்கள் உடைய இடம் பண்டகம் அல்லது பண்டசாலை எனல் போதுமானது. ஆனால் கூட்டுறவுப் பண்டக சாலை என்னும் வழக்கு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது. அகம் எனின் மனம், வீடு, இடம் எனப் பலபொருள் உண்டெனினும் ஈண்டு இடம் எனப் பொருள் கொள்க. நூல்கள் உடைய இடம் நூலகம்; பண்டங்கள் உடைய இடம் பண்டகம். பின் ஏன் சாலை என்று ஒரு சொல். உணவுச்சாலை என்பது போல் பண்ட சாலை எனலும் சரியாம்.

14.பதட்டம்

நம் மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்திலும் பதட்டம் எனும் சொல் நிரம்பப் பயன்பாட்டில் உள்ளது. இச்சொல்லுக்குப் பொருள் இல்லை. இது பதற்றம் என்று இருத்தல் வேண்டும். பதறு, பதற்றம் எனும் சொற்கள் சரியானவை; பொருளுடையவை. இனி, பதட்டம் விட்டு பதற்றம் கொள்ளுவோம்.

15.கண்றாவி

இப்படி ஒரு சொல் எந்த அகர முதலியிலாவது (அகராதி) பார்த்ததுண்டா? இப்படி ஒரு சொல் இல்லவே இல்லை. ஆனால் பத்திரிகை, தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்கிறோம். கேட்கிறோம். மிகக் கொடிய காண்பதற்குக் கூடாத காட்சியை இப்படிச் சொல்லி வருகிறோம். இது கண் அராவும் காட்சி. ஆதலின் இச்சொல் கண்ணராவி என்றிருத்தல் வேண்டும். (அராவுதல்- இரும்பால் தேய்த்தல், அறுத்தல்)

ஊர்ப் பெயர்த் திரிபுகள்

பயன்பாட்டில் உள்ள பல சொற்கள் எப்படிப் பிழையானவை என்பது பற்றி எடுத்துக் காட்டுகள் வழியாகப் படித்தீர்கள். இவ்வாறே பல  ஊர்களின் பெயர்கள் சிதைந்து பொருள் திரிந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆறுகளால் பெயரமைந்த ஊர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, அடையாறு, செய்யாறு, திருவையாறு எனும் பெயர்கள் காண்க.

அடையாறு என்பதை அடையார் என்று எழுதுகிறார்கள். பேருந்துகளிலும், பெயர்ப் பலகைகளிலும் காண்கிறோம். அடையார் என்றால் அடையமாட்டார் என்று பொருள். இனிப்பகம் ஒன்று அடையார் எனும் சொல்லோடு பயன்பாட்டில் உள்ளது. அந்த இனிப்பகத்தை யாரும் சென்றடையமாட்டார்களா? எவ்வளவு பெரிய தவறு இது?

செய்ய நீர் (சிவந்தநீர்-புதுவெள்ளம்) ஓடிய ஆறு செய்யாறு. அந்த ஆற்றின் பெயரமைந்த ஊரைச் செய்யார் என்று எழுதியுள்ளார்கள். செய்யமாட்டார் என்ற பொருள் இதற்குண்டு. என்ன செய்யமாட்டார்? ஏன் செய்யமாட்டார்? இப்படிச் சிதைக்கலாமா?

தஞ்சை அருகே திருவையாறு எனும் திருத்தலம் ஒன்றுள்ளது. ஐந்து ஆறுகள் அருகருகே ஓடிச் செழித்த மண் இது. இந்தத் திருவையாற்றைத் திருவையார் என்றெழுதுகிறார்கள். திருவையுடையவர் இவர் என்று பொருள் சொல்லலாமா? அல்லது திரிகை (மாவு அரைக்கும் சிறு கருவி) எனும் சொல்லை “திருவை’ என்று பாமரர் சொல்லுவர். இவர் திருவையார் என்பதா? என்ன கொடுமை இது?

ஆறுகளின் பெயர்களும் இப்படி ஆர் விகுதியோடு வழங்கப்பட்டு வருகின்றன. காட்டாறு என்பதைக் காட்டார் (காட்டமாட்டார்) என்றும், புது ஆறு புத்தாறு என்பதைப் புதார் என்றும் குடமுருட்டியாறு என்பதைக் குடமுருட்டியார் (குடத்தை உருட்டியவர்) என்றும் ஓடம்போக்கியாறு என்பதை ஓடம் போக்கியார் (ஓடத்தைப் போக்கியவர்) என்றும் வழங்குதல் பிழையன்றோ?

வேறு சில ஊர்ப் பெயர்கள் வெவ்வேறு வகையில் சிதைந்து பிழையுறப் பயன்பாட்டில் உள்ளன. (பழைய) சோழநாட்டின் கோடியில் (கடைசியில்) இருந்த கடற்கரை ஊரைக் கோடிக் கரை என்றனர். இப்போதும் தமிழ்நாட்டின் வரைபடத்தைப் பார்த்தால் கிழக்குக் கோடியில் ஒரு புள்ளியாக அவ்வூர் அமைந்துள்ள இடத்தைக் காணலாம். அதனை இன்று கோடியக்கரை என்று எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள். ஒருகால் வளைந்த கரை என்னும் பொருளுடையது என்றால் கோடிய கரை என்று “க்’ போடாமல் எழுத வேண்டும். (கோடுதல்-வளைதல்; கோட்டம்-வளைவு)

ஆனால் இந்த ஊர்க் கடற்கரையில் கோட்டம் (வளைவு) எதுவும் இல்லை. ட எனும் எழுத்தை இடம் வலமாக மாற்றிப் போட்டதுபோல் இரண்டு நேர்க்கோடுகளின் சந்திப்பாக அவ்விடம் இருப்பதைப் படத்தில் காணலாம். ஆதலின் கோடிக்கரை என்றே குறித்தல் பிழையற்றது.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty மொழிப்பயிற்சி – 5 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

Post by *சம்ஸ் Thu 3 Apr 2014 - 11:02

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் (அமிர்தம்) தோன்றியதன்றோ? அந்த அமிர்தத்தைக் குடத்தில் கொண்டு வந்து திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யப் பெற்ற ஈசன் பெயர் அமிர்தகடேசுவரர்.(கடம்-குடம்). அந்தப் பெருமான் அருள்பாலிக்கும் ஊர் திருக்கடவூர். திரு எனும் அடைமொழி, தலங்களைச் சார்ந்து வருதல் அறிவோம். (அமிர்த) கடம் கொண்டு பூசிக்கப்பெற்ற ஊர் கடவூர். இந்த அழகான பெயர் இன்று என்ன ஆயிற்று? திருக்கடையூர் என்று வழங்கப்பட்டு வருகிறது.

அறுபது அகவை நிறைவு (சஷ்டியப்த பூர்த்தி) எண்பதகவை நிறைவு (சதாபிஷேகம்) விழாக்கள் செய்திட மிகச் சிறந்த புனிதத் திருத்தலம்-மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வரம் தந்த சீர்த்தலம், கடையூரா? கடைப்பட்ட ஊரா? சிந்தியுங்கள்; பிழையைத் திருத்துங்கள்.

சோலை ஒன்றில் ஒரு சிலந்தியும், ஆனையும் (யானையும்) சிவனை வழிபட்டு முத்தி பெற்ற திருத்தலம் திருவானைக்கா. திருச்சிராப்பள்ளி நகரில் திருவரங்கம் செல்லும் வழியில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலம் இது. ஆனையொன்று தான் தோன்றியாய் (சுயம்புவாக) எழுந்த சிவனை வழிபட்ட சோலை, ஆனைக்கா எனப் பெயர் பெற்றது. (கா-சோலை) திரு என்னும் அடைமொழியோடு திருவானைக்கா ஆயிற்று.

இந்நாளில் இத்தலத்தின் பெயரைத் திருவானைக்கோவில் என்றும் திருவானைக் காவல் என்றும் எழுதுகிறார்கள். எழுத்தாளர்களும் தவறான பெயருக்கு விளக்கம் வேறு தருகிறார்கள். இது சரிதானா? திருத்தப்பட வேண்டாவா?

நல்லவேளை; மயிலாடுதுறை இன்று தப்பித்துக் கொண்டது. மயில்கள் ஆடுகின்ற வளமார்ந்த காவிரித்துறையுடைய ஊர் மயிலாடுதுறை என்று சொல்லப் பெற்றது. இதனை மாயூரம் என்று பின்னாளில் வடமொழியால் குறித்தனர். (மயூரம்-மயில்). இந்த மயூரத்தை மக்கள் மாயவரம் ஆக்கிவிட்டார்கள். இன்றைக்கும் இந்தப் பெயரைப் பலரும் சொல்கிறார்கள். மாய்வதற்கு (சாவதற்கு ) வரம் தரும் ஊரா இது?

ஒப்பார் இல் அப்பன்- ஒப்பிலியப்பன் என்று பெருமாளுக்குப் பெயர் சூட்டிப் பாடிப் பரவினர் அடியார்கள். பரம்பொருள், ஒப்பு-நிகர் அற்றது அன்றோ? இப்பெருமான் எழுந்தருளியுள்ள ஊரின் பெயர் என்ன தெரியுமா? உப்பிலியப்பன்கோவில். ஒப்பு இலி என்பதைப் பேச்சு வழக்கில் உப்பு இலி-உப்பிலி என்று ஆக்கி, அந்தப் பெருமாளுக்கே உப்பில்லாத திருவமுது படைத்து வழிபடுகிறார்கள். கடவுளுக்கே உப்பில்லாப் பத்தியமா? தமிழை அறியாத கொடுமையல்லவா இது?

ஒற்று மிகுதலும் மிகாமையும்

ஒற்று மிகுதலை வலி மிகுதல் என்று இலக்கண நூலார் சொல்வர். வல்லெழுத்து ஆறனுள் க,ச,த,ப என்னும் நான்கு மட்டுமே மொழி முதல் எழுத்தாக வரும். ஒரு சொல்லிருக்க (நிலை மொழி) மற்றொரு சொல் வந்து சேரும்போது சில இடங்களில் இந்த க,ச,த,ப- என்பவை மிகும். சில இடங்களில் மிகா. சிறந்த தமிழறிஞர்களின் நூல்களைப் படித்தாலே, மிகுதல், மிகாமைப் பற்றி இயல்பாகவே புரிந்து கொள்ள முடியும்.

எதற்கையா இந்த வம்பு? க்,ச், த்,ப் எதுவும் போடாமல் இரண்டு சொற்களை அப்படியே எழுதிவிட்டால் என்ன என்று கருதுபவர் இருக்கிறார்கள். வாழை பழம், கீரை கறி – படித்துப் பாருங்கள், இயல்பாக உச்சரிக்க முடிகிறதா? வாழைப்பழம், கீரைக்கறி என்று சொன்னால்தான் நிறைவாக உணர்கிறோம். இந்த ஒற்றெழுத்து மிகுவதாலும், மிகாமையாலும் பெரிய பொருள் வேறுபாடு உண்டு என்பதைத் தமிழர் அறிய வேண்டும். பல எடுத்துக்காட்டுகளைத் தரலாம்.

மருந்து கடை – மருந்தைக் கடை

மருந்துக்கடை – மருந்து விற்கும் கடை

ஏழை சொல் – ஏழையின் வார்த்தை

ஏழைச்சொல் – ஏழு எண்ணிக்கையைச் சொல்

வேலை தேடு – ஒரு வேலையைத் தேடிக் கொள்

வேலைத் தேடு – வேல் என்னும் ஆயுதத்தைத் தேடு

நடுகல் – செத்தார்க்கு நடப்படுவது

நடுக்கல் – நடுவில் உள்ள கல்; உடம்பு நடுக்கல் (நடுக்குதல்)

சாகாடு – வண்டி

சாக்காடு – சாவு, மரணம்

கைமாறு – ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு மாறுவது

கைம்மாறு – நன்றிக்கடன்

பொய் சொல் – பொய் சொல்வாயாக

பொய்ச்சொல் – பொய்யான சொல்

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by Nisha Thu 3 Apr 2014 - 12:46

ஒரு ச், க், த் , ப்  இரு சொற்களின் இடையில்  நுழைந்ததும்  அதன் அர்த்தமே மாறுதே!

மருந்து கடை – மருந்தைக் கடை
மருந்துக்கடை – மருந்து விற்கும் கடை

ஏழை சொல் – ஏழையின் வார்த்தை
ஏழைச்சொல் – ஏழு எண்ணிக்கையைச் சொல்

கொஞ்சம் கவனமாக கருத்தெடுத்து படித்தோமானால்  பிழை இல்லாத் தமிழ் நம் வசப்படும்!நல்ல திரி இது  

பின்னுட்டங்கள் வந்தாலும் வராவிட்டாலும் தொடர்ந்து பகிருங்கள் சம்ஸ்! 
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by ahmad78 Fri 4 Apr 2014 - 13:24

உண்மையில் அருமையான ஒரு பதிவு. நானும் தவறுதலாக நிறைய வார்த்தைகளை பயன்படுத்தித்தான் இருக்கிறேன்.

எந்த பதிவிலும் யார் தமிழை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்களோ அதை கூறினால் அந்த தவறு நமக்கு புலப்படும். நாம் அவர்கள் மனது புண்படுமோ என கூறுவதில்லை. ராம்மலர் அண்ணன் மட்டும் இதில் விதிவிலக்கு.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by *சம்ஸ் Thu 27 Nov 2014 - 5:34

அண்ணாமலை பல்கலை கழகம் என்று எழுதுகின்ற பத்திரிகைகள் உள்ளன. சட்ட படிப்பு, கல்வி துறை, வருகை பதிவேடு என்றெல்லாம் வருவனவற்றை ஏடுகளில் பார்க்கும்போது தமிழ் நெஞ்சம் கொதிக்கிறது. அதேநேரம், ஒற்று மிகக் கூடாத இடத்தில் ஒற்றெழுத்தைப் போட்டு எழுதி அந்தச் சொல் இன்று எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அச்சொல்: சின்னத்திரை என்பதாம். வீட்டில் பார்க்கும் தொலைக்காட்சியைத்தான் இப்படிச் சுட்டுகிறோம். திரைப்பட அரங்கிலிருப்பது பெரிய திரை. ஆதலின் இது சிறிய திரை.

சிறிய, பெரிய, சின்ன, பெரிய எனும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது. சிறிய திரை, சின்ன திரை, பெரிய தம்பி, சின்ன கடை, பெரிய பையன் என்று இயல்பாக எழுதிட வேண்டும். சின்னத் திரை என்றால் சின்னம்+திரை – ஏதோ ஒரு சின்னம் வரையப்பட்ட திரை என்று பொருளாகும். சிறிய கொடியை சின்ன கொடி என்றுதான் சொல்ல வேண்டும். சின்னக்கொடி என்றால் ஒரு சின்னம் (எழுகதிர், இரட்டை இலை, கதிர் அரிவாள், தாமரை) பொறித்த கொடி என்று பொருளாகும்.

தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று ஏன் பிழையாகச் சொல்லிப் பழகிவிட்டோம் என்பது தெரியவில்லை. பேசியைத் தொலைத்துவிடு என்றன்றோ பொருள்தரும். தொலைவிலிருந்தும் காணக் கூடியது தொலைக்காட்சி எனில் தொலைவிலிருந்து பேசக் கூடியது தொலைப்பேசிதானே? கை என்றால் உடம்பின் ஓர் உறுப்பு என்பதன்றிச் சிறியது என்னும் பொருளும் உண்டு. கைக்குட்டை, கைப்பை, கைக் குழந்தை, கைப்பெட்டி எனச் சொல்லுகிறோம். கையில் வைத்துப் பேசுகின்ற (சிறிய) பேசியும் கைப்பேசிதானே? ஏன் இதனை மட்டும் கைபேசி என்கிறார்கள்? பிழையன்றோ? கைக்கடிகாரம் எவ்வளவு காலமாக வழங்கப்பட்டு வரும்  சொல். எப்படி இந்தக் கைபேசி வந்ததோ? இப்படியே நீளச் சொன்னால் முடிவே இல்லை. ஆதலின் வல்லெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள் பற்றி ஒரு சுருக்கமான பட்டியல் தருகிறோம்.

வல்லெழுத்து மிகும் இடங்கள்:
1. அ, இ, எ இம்மூன்று எழுத்தின் முன்னும், அந்த, இந்த, எந்த என்பவற்றின் முன்னும் மிகும்.
(எ-டு) அப்பையன், இப்பையன், எக்குழந்தை?
அந்தப் பையன், இந்தத் தாத்தா, எந்தச் சாத்தன்?

2.ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும்.
(எ-டு) பூப் பறித்தான், கைக் குழந்தை

3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
(எ-டு) அறியாப் பிள்ளை, தீராத் துன்பம்

4.அகர, இகர ஈற்று முன் மிகும்.
(எ-டு) வரச் சொன்னான், ஓடிப் போனான்

5.வன்தொடர்க் குற்றுகரம் முன் மிகும்.
(எ-டு)எட்டுத் தொகை, கற்றுக் கொடுத்தான்

6. திரு, நடு, முழு, பொது என்னும் சொற்கள் முன் மிகும்.
(எ-டு) திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி,

7.இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரியின் பின் மிகும்.
(எ-டு) பூனையைப் பார்த்தான், கடைக்குப் போனான்.

8.பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்.

9.இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம்

10. உவமைத் தொகையில் மிகும்.
(எ-டு) முத்துப்பல், கமலச் செங்கண்.
(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 7:00

அவசியமானதொரு திரி சிறப்புற வாழ்த்துகளுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள் விடுபட்டதில் வீணாகிப்போனதுபோல் இருக்கிறது இனிமேலாவது தொடருங்கள் நல்லதொரு பாடம் அனைவரும் கற்றுத்தேர்ந்திட வாய்ப்பாக இருக்கும் 
நானும் சிலவற்றை பதிகிறேன் நன்றி

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by நண்பன் Thu 27 Nov 2014 - 7:44

அடியேனுக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by Nisha Thu 27 Nov 2014 - 14:00

தொடருங்கள்!

பதியும் போது பந்திகளை போதிய இடைவெளி விட்டு பிரித்து பதியுங்கள். நீங்கள் பதிவதை நீங்கள் ஒரு முறை ஆழ்ந்து படித்து விட்டு பதியுங்கள்.

இப்பகுதி 78, 80 பகுதிகளுக்கு மேல் சென்று விட்டது! தினம் ஒன்று என ஒரு திட்டத்துடன் பதிந்தால் சேனையில் அப்பதிவு முழுமையாகி விடும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்   Empty Re: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!கவிக்கோ ஞானச்செல்வன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum