சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் Khan11

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

+2
Nisha
சுறா
6 posters

Go down

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் Empty பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

Post by சுறா Tue 23 Dec 2014 - 19:32

சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும்.
பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் Nuno-Gomes-diverஇப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை.
ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது. நீருக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவது என்பது சுலபமான விஷயம் அல்ல.
பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் Scuba-diverஎவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான சிகரங்கள் அனைத்தையும் மனிதன் வென்றிருக்கிறான். மனிதனின் காலடி படாத பாலைவனங்கள் கிடையாது. உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற தென் துருவத்தை எட்டியிருக்கிறான். வட துருவத்தையும் விட்டு வைக்கவில்லை. சந்திரனுக்கும் சென்று வந்திருக்கிறான். ஆனால் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் உண்டென்றால் அது கடலடித் தரையாகும்.
விண்வெளி வீரர் போல மிகப் பாதுகாப்பான உடை அணிந்து கடலில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் யாரேனும் போய் நிற்க முடியுமா என்றால் அது ஒரு போதும் சாத்தியமில்லை. ஒரே கணத்தில் பற்பசை டியூப் போல நசுக்கப்பட்டு மடிந்து போவார். கடலுக்கு அடியில் அந்த ஆழத்தில் அழுத்தம் மிக பயங்கரமான அளவில் இருக்கும்.
தரையில் நாம் காற்றின் எடையைச் சுமந்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். காற்றுக்கு எடை உண்டு. அது நம்மை ஒரு சதுர செண்டிமீட்டருக்கு ஒரு கிலோ வீதம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கிறது. இதை ஒரு மண்டல் அழுத்தம் என்று குறிப்பிடுகின்றனர்.
கடலுக்குள் 10 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் நம் தலைக்கு மேலே உள்ள அத்தனை தண்ணீரும் சேர்ந்து நம்மை அழுத்தும். அத்துடன் நம்மைச் சுற்றிலும் உள்ள தண்ணீரின் எடையும் சேர்த்து நம்மை அழுத்தும். அந்த அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதை விட இரண்டு மடங்காக இருக்கும். 20 மீட்டர் ஆழத்துக்குச் சென்றால் அழுத்தம் மூன்று மடங்காகி விடும். 30 மீட்டர் ஆழத்தில் அழுத்தும் நான்கு மடங்காகி விடும்.
உலகின் கடல்களின் சராசரி ஆழம் நான்கு கிலோ மீட்டர். அந்த ஆழத்தில் அழுத்தம் 400 மடங்காக இருக்கும். ஒருவரைப் படுக்க வைத்து அவர் மீது பல சிமெண்ட் மூட்டைகளை வைத்தால் எப்படி இருக்கும்? கடலில் மிக ஆழத்தில் நிலைமை அதை விட மோசமாக இருக்கும்.
பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் Oceanic_divisions-300x225உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் உள்ளது. அந்த  இடத்தின் பெயர் மரியானா அகழி (Mariana Trench). அந்த அகழியின் நடுவே தான் உலகிலேயே மிக ஆழமான பள்ளம் உள்ளது. அதன் பெயர் சேலஞ்சர் மடு (Challenger Deep), ஆழம் சரியாக 10,902 மீட்டர். அவ்வளவு ஆழத்தில் அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதைப் போல 1100 மடங்கு. ஆகவே யாராலும் என்றுமே அந்த ஆழத்துக்குப் போய் கடலடித் தரையில் காலடி பதிக்க முடியாது
1960 ஆம் ஆண்டில் இரண்டே இரண்டு பேர் கனத்த உருக்கினால் ஆன ஒரு கோளத்துக்குள் உட்கார்ந்தபடி சேலஞ்சர் மடுவில் போய் இறங்கினர். கனத்த பிளாஸ்டிக்கினால் ஆன ஜன்னல் வழியே கடலடித் தரையை சிறிது நேரம் கண்டனர். அதோடு சரி. ட்ரீயஸ்ட் என்னும் பெயர் கொண்ட அந்த நீர் மூழ்கு கலத்தின் மூலம் இவ்வாறு சென்றவர்களில் ஒருவர் கடல் ஆராய்ச்சி நிபுணரான ஜாக் பிக்கா, மற்றொருவர் அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ்.
கடலில் மிக ஆழபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் Mariana-Trieste-bathtscapeத்தில் கடும் அழுத்தம் மட்டுமில்லை – சுமார் 800 மீட்டர் ஆழத்துக்கு கீழே சென்றால் ஒரே காரிருள் சூழ்ந்திருக்கும். தவிர, கடல் நீரானது கடும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படியாக கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவதில் பிரச்சினைகள்.
கடந்த பல ஆண்டுகளில் கடல் ஆராய்ச்சித் துறையில் பல நவீன தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் ஆழ் கடலை மனிதனால் இன்னும் வெல்ல முடியவில்லை.
எனினும் பிக்கா, வால்ஷ் ஆகியோரைத் தொடர்ந்து சேலஞ்சர் மடுவுக்கு நவீன நீர் மூழ்கு கலங்கள் மூலம் செல்ல இப்போது மூவர் தனித்தனியே திட்டமிட்டுள்ளனர்.. மூவருமே உலகப் பிரசித்தி பெற்றவர்கள். கோடீசுவரர்கள்.
நன்றி: என் ராமதுரை – அறிவியல்புரம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் Empty Re: பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

Post by சுறா Wed 24 Dec 2014 - 12:33

நோபடி ரீடிங் திஸ் :(


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் Empty Re: பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

Post by Nisha Wed 24 Dec 2014 - 12:56

கடலடியில் என்ன   நான் காலடி வைக்காத இடம்  இந்த உலகில் என்னன்னமோ இருக்கே! 

நல்ல பதிவு! நான் அறியாப்பதிவு!  நன்றி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் Empty Re: பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

Post by பாயிஸ் Wed 24 Dec 2014 - 16:15

படிக்கும் போதே பயமாக இருந்தது அப்படிருக்க இந்த மூன்று பேரும் திரும்பிவிடுவார்களா..?
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் Empty Re: பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

Post by rammalar Thu 25 Dec 2014 - 15:36

பயனுள்ள தகவல் பகிர்வு...
-
மகிழ்ச்சி மகிழ்ச்சி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் Empty Re: பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

Post by Muthumohamed Thu 25 Dec 2014 - 18:57

ஆச்சர்யமாக இருக்கிறதே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் Empty Re: பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 5:14

தகவலை அறிந்தேன்
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் Empty Re: பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum