சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

யார் இந்த ஒசாமா? Khan11

யார் இந்த ஒசாமா?

3 posters

Go down

யார் இந்த ஒசாமா? Empty யார் இந்த ஒசாமா?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 17 May 2011 - 15:51

யார் இந்த ஒசாமா? 20110502a_003101002-150x150உசாமா பின் முகமது உபின் அவாத் பின் லாடின் - இது தான் ஒசாமா பின் லேடனின் முழுப் பெயர்.சவுதி அரேபியாவின் ரியா தம் நகரில் 1957 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி பிறந்தவர். சவுதியைச் சேர்ந்த பின்லாடின் குரூப் நிறுவனம் உலகப் புகழ் பெற்றது. உலகின் பல நாடுகளி லும் எண்ணெய் வர்த்தகம் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.22 ஆயி ரம் கோடிக்கு வர்த்தகம் செய்யும் பிரமாண்ட நிறுவனம். சவுதி அரச குடும்பத்துடன் நெருங்கிய நட்புக் கொண்ட நிறுவனம். இக்குடும்பத் தில் பிறந்தவர் பின்லேடன்.

இந்த குடும்பத்தில் பிரபல தொழிலதிப ராக விளங்கிய முகமது பின்லேட னுக்கு 10 ஆவது மனைவி ஹமீதா அல் அட்டாசுக்கும் மகனாகப் பிறந் தார். அட்டாசுக்கு மொத்தம் 52 பிள்ளைகள். பின்லேடன் 17 ஆவது. இவர் பிறந்த சிறிது காலத்திலேயே அம்மா விவாகரத்து செய்துவிட்டு முக மது அல் அட்டாஸ் என்பவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு 4 குழந்தைகள். அவர்களுடனேயே வளர்ந்தார் பின்லேடன். ஜெட்டா நகரில் உள்ள அல் தாகர் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். கிங் அப்துல் அஜீஸ் பல்க லைக் கழகத்தில் பொருளாதாரம் மற் றும் வர்த்தக முகாமைத்துவம் படித் தார்.குடிசார் இயந்திரவியல் முடித் ததாவும் சிலர் கூறுகின்றனர். படிக்கும் காலத்திலேயே மதம் தொடர்பான கருத்துகளில் பின்லே டன் அதிக ஆர்வம் காட்டிவந்தார். புனிதப்போர் தொடர்பாக கூறப்பட் டுள்ள கருத்துக்களை நிறையப் படித்துவந்தார். 1974 இல் திருமணம். மனைவி பெயர் நஜ்வா கானம். அப்போது பின்லேடனுக்கு வயது 17.2002 ஆம் அண்டு கணக்குப்படி அவருக்கு மொத்தம் 4 மனைவிகள். 26 குழந்தைகள்.

பில்லேடனின் கல்லூரிப் பேராசி ரியர் அப்துல்லா அஜாம் என்பவர் பாகிஸ்தானின் பெஷாபர் நகரில் தங்கியிருந்தார். அந்த நேரத்தில் ஆப்கான் மீது சோவியத் யூனியன் 1979 இல் கடும் தாக்குதல் நடத் தியது. அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய முஜாகிதீன் கொரில்லா படையினருக்கு அஜாம் ஆதரவு அளித்தார். கைபர் கணவாய் இந்துக்குஷ் மலைத் தொடர் பகுதி வழியாக வெளிநாடுகளில் இருந்து படையி னரை இறக்கி சோவியத்துக்கு எதி ரான தாக்குதலை அஜாம் தீவிரப் படுத்தினார். கல்லூரிப் படிப்பை முடித்த பின்லேடன் தனது ஆசிரி யருக்கு ஆதரவாக இறங்கினார். இதற்காக கல்லூரி படிப்பை 3 ஆம் அண்டிலேயே பின்லேடன் விட்டுவிட்டு வந்ததாக கூறப்படுகி றது. பிறகு சிறிதுகாலம் பெஷாவரிலேயே பின்லேடனும் தங்கினார்.

பணம் படைத்த இஸ்லாமிய நாடுகளில் இருந்து பணம், ஆயுதங் கள் பெற்று புனிதப் போரில் ஈடு பட்டவர்களுக்குக் கொடுப்பதற்காக மக்தாப் அல் கடாமத் என்ற அமைப் பை அஜாமும் பின்லேடனும் 1984 இல் தொடங்கினர். இதற்கிடையில் சோவியத் தாக்குதல்கள் நின்றபின் பின் லேடன் சவுதி திரும் பினார். குடும்பத் தின் கட்டுமானத் தொழிலை கவ னிக்க ஆரம்பித் தார். ஆனாலும் முஜாகிதீன்களு டனான தொடர்பு நின்றுவிடவில்லை. அவர்களுக்கு நிதி திரட்டும் வேலை யையும் தீவிரமாகக் கவனித்தார்.

மதச் சட்டங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக் கப்பட வேண்டும் என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பின்லேடன் வேறு சிலருடன் சேர்ந்து 1988-89 இல் அல் கய்தா அமைப்பை தொடங்கினார். அரசு சட்டங்களுக்கு எதிராக செயல் படுவதாக கூறி சவுதி அரேபிய அரசு அவருக்கு தடை விதித்தது. அவரது சவுதி குடியுரிமை ரத்துச் செய்யப்பட் டது. அவருடன் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று பின்லாடின் குடும் பத்தினர் அறிவித்தனர். சூடானில் அடைக்கலம் புகுந்தார். அமெரிக்காவிலும் நைரோபி, கென்யா, தான்சானியா உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அமெரிக் கத் தூதரகங்களிலும் குண்டுவெடிப் பை நடத்தியது அல்கய்தா. அமெ ரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக அவரை நாடுகடத்துவதாக சூடான் 1996 இல் அறிவித்தது.

மனைவிகள், 10 குழந்தைகளுடன் அங்கிருந்து புறப்பட்டார் பின்லே டன். ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்த அவர் அமெரிக்காவுக்கு எதிராக புனிதப்போர் அறிவித்தார்.பலஸ்தீனத்துக்கு எதிராகவும் இஸ் ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா செயல்படக் கூடாது. இஸ்லாமிய நாடு களில் நிறுத்தியிருக்கும் ராணுவப் படைகளை அமெரிக்கா உடனே வாபஸ்பெற வேண்டும். அப்படி செய்யா தவரை அமெரிக்க இராணுவத்தின ரையும் அந்நாட்டினரையும் கொன்று குவிக்க வேண்டும் என்று அல்கைதா இயக்கம் முதலில் 1996 ஆம் ஆண்டும் பிறகு 1998 ஆம் ஆண்டும் பத்வா மத உத்தரவு பிறப்பித்தது.

குண்டு வெடிப்புகளில் அவரைக் குற்றவாளியாக அறிவித்தது அமெ ரிக்கா. உலகையே உலுக்கிய 2001 செப்ரெம்பர் 11 சம்பவத்திலும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் 10 ஆண்டு தேடுதல் வேட்டைக்குப் பிறகு தற்போது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் பின்லேடன்.யார் இந்த ஒசாமா? 20110502a_0031010023-123x300யார் இந்த ஒசாமா? 20110502a_0031010024-300x153
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

யார் இந்த ஒசாமா? Empty Re: யார் இந்த ஒசாமா?

Post by மீனு Tue 17 May 2011 - 18:51

##* ##*
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

யார் இந்த ஒசாமா? Empty Re: யார் இந்த ஒசாமா?

Post by ஹம்னா Tue 17 May 2011 - 20:52

##* :”@:


யார் இந்த ஒசாமா? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

யார் இந்த ஒசாமா? Empty Re: யார் இந்த ஒசாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum