சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Khan11

வெளுத்ததெல்லாம் பால் அல்ல!

2 posters

Go down

வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Empty வெளுத்ததெல்லாம் பால் அல்ல!

Post by யுவராஜா Thu 29 Nov 2012 - 5:43

பாலில் 68 சதவிகிதம் கலப்படம் உள்ளது என்று மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ள தகவல் இந்தியாவையே அதிரவைத்துள்ளது.உலகின் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. இந்திய நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நாட்டு மக்களின் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக்கூடிய காரணிகளில் ஒன்றாக பால் உற்பத்தி உள்ளது. ஆனால், அந்தப் பாலில் 68 சதவிகிதம்கலப்படம் உள்ளது என்கிற செய்தி மக்களை பதற வைத்துள்ளது.
இந்திய உணவு மற்றும் தர நிர்ணய அமைப்பு, பாலில் கலப்படம் குறித்து தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்தியது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நுகர்வோரிடம் சென்றடையும் பாலில் 68 சதவிகிதம் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டது. 33 மாநிலங்களில் 1,791 பால் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில், 1,228 மாதிரிகள் இந்திய தர நிர்ணய மதிப்பீடுகளுக்கு ஒப்பாக இல்லை.
மிசோரம், ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் விற்கப்படும்பாலில் நூறு சதவிகித கலப்படம் உள்ளது என்ற செய்தி அம்மாநில மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தமிழகம் கொஞ்சம் பரவாயில்லை. இங்கு உற்பத்தியாகும் பாலில் 12 சதவிகிதம் கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது. ஆந்திரா பாலில் 6 சதவிகிதமும், டெல்லியில் 76சதவிகிதமும் கலப்படம் உள்ளதாம். புதுச்சேரி மற்றும் கோவா மக்களுக்கு மட்டும்தான் சந்தோஷமான செய்தி. அந்த இரு மாநிலங்களிலும் நூறு சதவிகித தூய்மையான பால் தயாராகிறது என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
பாலில் உள்ள நடுநிலைக் காரணிகள், அமிலத் தன்மையின்சதவிகிதம், ஹைட்ரஜன் பெராக்சைடு, கார்பனேட்டர், சர்க்கரை, ஸ்டார்ச், யூரியா,உப்பு, சோப்பு, தண்ணீர், கொழுப்பு, கொழுப்பு அல்லாத திடப்பொருட்கள் (Solid Not Fat – SNF), பதப்படுத்தப்பட்ட பால் பவுடர், பார்மலின் மற்றும் தாவரக் கொழுப்பு ஆகியவை கலந்திருக்கும் விகித அடிப்படை போன்றவை கலப்படத்தை அறியும் காரணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
கிராமப்புறங்களில் 83.2 சதவிகித மாதிரிகளும், நகர்ப்புறங்களில் 68.6 சதவிகித மாதிரிகளும், நேரடியாக விற்பனை செய்யப்படும் பாலில் இருந்து எடுக்கப்பட்டவை. பால் மாதிரிகளில் அரசு மற்றும் தனியார் பால் இரண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்திய அளவில் 31.5 சதவிகிதம் தூய்மையும், 68.5 சதவிகிதம் கலப்படமும் பாலில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 74 மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில், ஒன்பது மாதிரிகளில் கலப்படம் இருந்துள்ளது.
கலப்படத்துக்கு என்ன காரணம்?
பாக்கெட்டாக அல்லாமல், நேரடியாக விற்கப்படும் பாலில்தான் அதிகக் கலப்படம் உள்ளதென்று தெரியவந்துள்ளது. குளம், குட்டை, ஆறு, ஏரி, போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் எடுத்து பாலில் கலக்கப்படுவதால், அதில் சோப்பு கலந்துள்ளது. பால் கெட்டியாக தெரியவேண்டும் என்று குளுக்கோஸ், பால் பவுடர், மாவுப் பொருட்கள் ஆகியவை கலக்கப்படுகின்றன. மாட்டுத் தீவனத்திற்கு பற்றாக்குறையும், அதில் கலப்படமும் அதிகரித்துள்ளன.இதனால் மாடுகள் குறைவாக பால் சுரக்கின்றன. அதிகமாகப் பால் தர வேண்டும்என்பதற்காக மாடுகளின் மடியில் ஆக்சிடோசின் எனப்படும் ஹார்மோன் ஊசி போடப்படுகிறது. இதுவும் கலப்படங்களுக்கான காரணிகளில் முக்கியமானதாகும். கலப்படப்பாலில் இருந்து தயாரிக்கப்படுகிற பால்கோவா, சீஸ், ஐஸ்க்ரீம், தயிர், மோர், மைசூர்பா, லெஸ்ஸி, பன்னீர், குலோப்ஜாமூன், பால் பவுடர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் கலப்படம் மிகுந்ததாகவே உள்ளன.
கலப்படப் பால் பலவிதமான நோய்களையும் உருவாக்குகிறது.கலப்படப் பால் அருந்துவதால் வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட கோளாறுகள் உண்டாகின்றன. செரிமானக் கோளாறு, இதயக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கக்கூடிய நோய்கள் வருகின்றன. புற்றுநோய் போன்ற அபாயத்திற்கும் வித்தாகிவிடக் கூடிய ஆபத்தும் உள்ளது” என்று எச்சரிக்கிறார், மருத்துவர் செந்தில்குமார்.
இப்பிரச்சினை குறித்து தமிழக பால் வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தியிடம் கேட்டோம்:
தமிழக அரசின் நிறுவனமான ஆவின் உற்பத்தி செய்யும் பால் மிகவும் சுத்தமானது. அதில், கலப்படம் இருக்க வாய்ப்பே இல்லை. இந்த ஆய்வைப் பார்க்கும்போது, பாக்கெட்டாக அல்லாமல் நேரடியாக விற்பனையாகிற பாலில்தான் அதிகக் கலப்படம் இருக்கிறது என்று தெரிகிறது. ஆவின் பால் பல நிலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுத்தான் மக்களிடம் வருகிறது. ஆகவே அதன் தரமும், அதன் மீதான நம்பிக்கையும் என்றுமே குறைவதில்லை. அதனால்தான், தனியார் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் மீறி இன்றுவரை மக்களின் ஏகோபித்த ஆதரவு ஆவின் பாலுக்கு இருந்து வருகிறது” என்றார் அமைச்சர் மூர்த்தி.
பாலில் கலப்படத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?
*. பாலில் தண்ணீர் கலந்திருப்பதைக் கண்டுபிடிக்க வழவழப்பான செங்குத்தான தரையில் பாலைஒரு சோட்டுவிட்டால் எந்த அடையாளமும் இல்லாமல் வழிந்தோடும். இதுவே தண்ணீர் கலக்காத பால் என்றால், வெள்ளைக் கோடிட்டதுபோல் வழியும் அல்லது லேக்டோ மீட்டர் மூலம் கண்டறியலாம். லேக்டோ மீட்டர் 1.026 எண்ணுக்குக் கீழே காட்டினால் அந்தப் பாலில்தண்ணீர்க் கலப்படம் உறுதி.
*. பாலைக் காயவைத்து ஆற்றும்போது அதிகமாக நுரைபொங்கி வழிந்தால் சோப்புக் கலக்கப்பட்டிருக்கும்.
120 நாள் பால் நல்லதா?
120 நாள் வரை கெடாத பால் ஒன்று புதிதாக விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த பாக்கெட் பாலை ஃப்ரிஜ்ஜில் வைக்க அவசியமில்லை, காய்ச்சாமல் அப்படியே குடிக்கலாம். இந்த வகைப் பால் பாக்கெட்டை திறந்துவிட்டால் உடனே பயன்படுத்திவிட வேண்டும். ஆனால் இவ்வகையான பால் நெடுந்தூரப் பயணத்தில் செல்பவர்களுக்கும், பால்வரத்து இல்லாத நீண்டதூரக் கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் வசிப்போருக்குமே பயன்படும்.
ஏனெனில் பால் கிடைக்காத சமயங்களில் அவர்களுக்கு பாலின் மூலம் கிடைக்கக்கூடிய சத்துக்கள்சிறிதளவாவது கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் தயாரிக்கப்பட்டது. சாதாரண இடங்களில் மக்கள் இதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
யுவராஜா
யுவராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 53
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Empty Re: வெளுத்ததெல்லாம் பால் அல்ல!

Post by முfதாக் Thu 29 Nov 2012 - 17:26

(*(:

முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum