Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Yesterday at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Yesterday at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
சத்துப் பட்டியல்:பிளாக் பெர்ரி
4 posters
Page 1 of 1
சத்துப் பட்டியல்:பிளாக் பெர்ரி
நாம் திராட்சையை சுவைப்பதுபோல உலக நாடுகளில் பிளாக்பெர்ரி விரும்பி சுவைக்கப்படுகிறது. தித்திப்பான சுவையுடைய பிளாக் பெர்ரி, உடலுக்கு அவசியமான பல்வேறு சத்துப் பொருட்களை கொண்டுள்ளன. அது பற்றி பார்ப்போம்...
ஐரோப்பாவை தாயகமாக கொண்டவை பிளாக்பெர்ரி கனிகள். புதர்கள்போல பிளாக்பெர்ரி செடிகள் வளரும். வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறங்களில் பூக்கள் பூக்கும். சிறு திராட்சைகள் ஒட்டியதுபோல பார்வைக்கு அழகான, இனிய சுவையான பிளாக் பெர்ரிகள் பழுக்கும். 3 முதல் 4 செ.மீ. நீளமுள்ள இந்த கனியில் 80 முதல் 100 அறை வடிவங்கள் காணப்படும்.
வட அமெரிக்கா மற்றும் சைபீரியா பகுதிகளில் பிளாக்பெர்ரி அதிகமாக விளைகின்றன. பிளாக்பெர்ரிகள் குறைந்த அளவில் கொழுப்புச் சத்து கொண்டு உள்ளன. 100 கிராம் பழத்தில் 43 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
நீரில் கரையத்தக்க மற்றும் கரைக்க இயலாத நார்ச்சத்து இதில் கணிசமாக உள்ளது. 100 கிராம் பழத்தில் 5.3 கிராம் நார்ப்பொருள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிளாக்பெர்ரியில் உள்ள நார்ப்பொருட்களில் ஒன்றான சைலிட்டால் என்ற சர்க்கரைக்கு மாற்றாக இனிப்பு சுவையை வழங்குகின்றன.
இது குடலில் மெதுவாக குளுக்கோசை கிரகிக்க உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது. பல்வேறு நோய் எதிர்ப்பு பொருட்கள் பிளாக்பெர்ரியில் உள்ளன.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை குவர்செடின், காலிக் அமிலம், சையனிடின், பெலாரகானிடின்ஸ், கேடசின்ஸ், காயெம்பிரால், சாலி சிலிக் அமிலம். இவை புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், வயது முதிர்ச்சி, உடல் அழற்சி போன்றவற்றிற்கு எதிராக உடல் ஆரோக்கியத்தை காக்கும்.
100 கிராம் பழத்தில் 23 மில்லி கிராம் அளவு வைட்டமின்-சி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது சக்திவாய்ந்த இயற்கை நோய் எதிர்ப்பு பொருளாகவும், அத்தியாவசிய ஊட்டச்சத்தாகவும் விளங்குகிறது. கனிகளை அதிகமாக உண்டு வைட்டமின் சியை உடலில் சேர்த்துக் கொள்வது நோய்த் தொற்றில் இருந்து உடலைக் காக்கும்.
உடல் அழற்சியை தடுப்பதுடன், தீங்குவிளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அகற்றும் பண்பு கொண்டது. இதர வைட்டமின்களான வைட்டமின்-ஏ, வைட்டமின்-இ மற்றும் வைட்டமின்-கே போன்ற அத்தியாவசிய சத்துப்பொருட்களுடன், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்களும் உள்ளன.
பொட்டாசியம், மாங்கனிசு, மக்னீசியம், தாமிரம் போன்ற தாதுப்பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன. தாமிரம் தாதுவானது எலும்பு வளர்ச்சிதை மாற்றத்திற்கும், ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கும் பெரிதும் உதவுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப் பட்டியல்:பிளாக் பெர்ரி
ம்ம்ம்ம்ம் இதெல்லாம் எங்க சாப்பிட முடியும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப் பட்டியல்:பிளாக் பெர்ரி
ஏன் அக்கா உங்க ஊரில் கிடைக்காதாபானுஷபானா wrote:ம்ம்ம்ம்ம் இதெல்லாம் எங்க சாப்பிட முடியும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப் பட்டியல்:பிளாக் பெர்ரி
கிடைக்கும் பட் வாங்குவதில்லை*சம்ஸ் wrote:ஏன் அக்கா உங்க ஊரில் கிடைக்காதாபானுஷபானா wrote:ம்ம்ம்ம்ம் இதெல்லாம் எங்க சாப்பிட முடியும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப் பட்டியல்:பிளாக் பெர்ரி
நீங்க சரியான கஞ்சி_*பானுஷபானா wrote:கிடைக்கும் பட் வாங்குவதில்லை*சம்ஸ் wrote:ஏன் அக்கா உங்க ஊரில் கிடைக்காதாபானுஷபானா wrote:ம்ம்ம்ம்ம் இதெல்லாம் எங்க சாப்பிட முடியும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முந்திரிப் பருப்பு சத்துப் பட்டியல்
» சத்துப் பட்டியல் :ஆலிவ் எண்ணெய்
» இத்தனை வித்தைகள் தேங்காயில் உண்டா? தேங்காயின் சத்துப் பட்டியல்!
» சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா..
» தயிர் பெர்ரி ஸ்மூத்தி
» சத்துப் பட்டியல் :ஆலிவ் எண்ணெய்
» இத்தனை வித்தைகள் தேங்காயில் உண்டா? தேங்காயின் சத்துப் பட்டியல்!
» சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா..
» தயிர் பெர்ரி ஸ்மூத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum