சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 8
by rammalar Today at 13:08

» பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட "P2"இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by rammalar Today at 11:30

» பதார்த்தங்களுடன் படையல்!
by rammalar Today at 8:32

» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 7:32

» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27

» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52

» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43

» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

மனிதனின் மதிப்பு. Khan11

மனிதனின் மதிப்பு.

2 posters

Go down

மனிதனின் மதிப்பு. Empty மனிதனின் மதிப்பு.

Post by ஹம்னா Thu 16 Jun 2011 - 20:27

மனிதனின் மதிப்பு. Manithan


காட்டு வழியே ஒரு மனிதன் பயணம் செய்து கொண்டிருந்தான். அவன் மிகவும் கொடியவன். காட்டில் தங்கியிருந்த திருடர்கள் அவனைத் தாக்கி, அவன் உடைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றார்கள். படுகாயமுற்ற அந்த மனிதன் வீழ்ந்து அரை மயக்கமாகக் கிடந்தான்.

அந்தக் காட்டில் ஒரு நரியும் வசித்து வந்தது. அது மிகச் சிறப்பான நுண் உணர்வு மிக்கது. ஒருவரைப் பார்த்த உடனே அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதையெல்லாம் அறிந்துகொண்டுவிடும். அதற்கு இரண்டு குட்டிகள்.

அவை மூன்றும் அந்த நேரத்தில் நடந்து வந்துகொண்டிருந்தன. தங்கள் அம்மாவிற்கு முன்னால் ஓடி வந்த குட்டி நரிகள், விழுந்து கிடக்கும் அந்த மனிதனைப் பார்த்தன. விரைந்து சென்று தங்கள் அம்மாவிடம் விவரத்தைக் கூறின:

""சீக்கிரம் வாருங்கள் அம்மா. ஒரு மனிதன் மிகவும் ஆபத்தான நிலையில் கிடக்கிறான். நாம் அவனுக்கு உதவி செய்து காப்பாற்ற வேண்டும்.''

அம்மா நரி, தன் குட்டிகளுடன் அந்த மனிதனின் அருகில் வந்தது. குட்டி நரிகளில் ஒன்று தன் அம்மாவிடம் சொன்னது:

""அம்மா, நாம் முதலில் இந்த மனிதனின் முகத்தில் நீர் தெளித்து இவன் மயக்கத்தைத் தெளியவைப்போம். பிறகு இவன் காயங்களுக்கு மூலிகைகளால் மருந்திடுவோம்.''

அவை பேசிக்கொள்வதையெல்லாம் அந்த மனிதன் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.


"இவனுக்கு நாம் உதவி செய்யலாமா கூடாதா என்று நான் உங்களுக்கு ஆராய்ந்து பார்த்துச் சொல்கிறேன். அது வரையில் பொறுத்திருங்கள்!'' என்றது அம்மா நரி. பிறகு அது நீண்ட நேரம் அந்த மனிதனைச் சுற்றிச் சுற்றி வந்து ஆராய்ந்தது. பின்பு தன் குட்டிகளிடம் சொன்னது:

""பிள்ளைகளே, இந்த மனிதன் எந்த உதவிக்கும் தகுதியானவன் அல்ல! இவனுக்கு நாம் உதவி செய்யக்கூடாது.''

குட்டிகள் கேட்டன: ""ஏன் அம்மா இவனுக்கு நாம் உதவி செய்யக்கூடாது. ஆபத்தில் இருப்பவனைக் காப்பாற்றவேண்டியது நம் கடமை அல்லவா?''

அம்மா நரி சொன்னது: ""என் பிள்ளைகளே! நான் இந்த மனிதனைப் பார்த்தே இவனது குணநலன்களையும், இவனது கடந்த கால வாழ்க்கையையும் தெரிந்துகொண்டுவிட்டேன். இவனுக்கு உதவி செய்து நாம் பிழைக்க வைத்தால் நாம் இந்தச் சமூகத்திற்குத் தீங்கு செய்தவர்கள் ஆவோம்.

ஏனென்றால், இவன் இதுவரை வாழ்ந்த காலத்தில் தன் காதுகளை நல்ல விஷயங்களைக் கேட்பதற்குப் பயன்படுத்தவில்லை. துன்பப்படுபவர்களையும் ஏழைகளையும் கண்டு இவன் தன் கண்களைத் திருப்பிக்கொண்டான். இவன் தலை நிறைய ஆணவம்தான் இருந்தது. மற்றவர்களை ஏமாற்றிய செல்வத்தால்தான் இவன் உண்டான். எவருக்கும் உதவி செய்ய இவன் தன் கால்களைப் பயன்படுத்தி எங்கும் செல்லவில்லை. இவன் கரங்களோ எந்த தானதருமங்களையும் செய்யவில்லை.

தன் சுயநலம் ஒன்றிற்காக மட்டும்தான் தன் உடலையும் அறிவையும் பயன்படுத்தினான். இவனைக் காப்பாற்றினால் மீண்டும் இவன் இதுபோன்றுதான் வாழ்வான். அதனால் நிறையப் பேருக்குத் துன்பம் விளையும். ஒரு மனிதன் செய்யும் நல்ல காரியங்கள்தான் அவனுக்கான மதிப்பைத் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் இந்த மனிதனுக்கு எந்த மதிப்பும் இல்லை.''

நரிகள் சென்றதும் அந்த மனிதன் கண்விழித்தான். நரியின் பேச்சு பேரிடியைப்போல அவனைத் தாக்கியது. மிருகங்கள்கூட தன்னைப் புறக்கணித்து கைவிட்டுச் செல்லும் அளவிற்கு தான் இழிந்தவனாக இருப்பதை நினைத்து பெரிதும் வேதனையுற்றான்..


தன் வாழ்க்கை சற்றும் பொருட்படுத்தத் தகுதியற்றதாக இருப்பதை அப்போதுதான் அவன் கண்ணீருடன் உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து எழுந்து தட்டுத் தடுமாறி நடந்து சென்றான். போனதெல்லாம் போகட்டும். வருங்காலத்திலாவது எனக்கென்று மதிப்பை உருவாக்கிக்கொள்வேன் என்று உறுதிகொண்டிருந்தான் அவன்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மனிதனின் மதிப்பு. Empty Re: மனிதனின் மதிப்பு.

Post by kalainilaa Thu 16 Jun 2011 - 21:20

நன்றி பகிர்வுக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum