சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது Khan11

தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது

2 posters

Go down

தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது Empty தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது

Post by நேசமுடன் ஹாசிம் Tue 2 Aug 2011 - 14:52

கடந்த தி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் இவர் அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அ.தி.மு.க.விடம் தோல்வியைத் தழுவினார்.

ரங்கநாதன் மீது கடந்த 2008-ம் ஆண்டு நில அபகரிப்பு புகார் எழுந்தது. நொளம்பூரில் போலீஸ் நிலையம் அருகே உள்ள முகப்பேர் ஏரிக்கரை திட்டத்தில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை அவர் அபகரித்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

முகப்பேர் ஏரித் திட்டம் பகுதியில் அமைந்துள்ள நொளம்பூரில் சர்வே எண் 81ல் அமைந்துள்ள நிலத்தை கடந்த 1994-ம் ஆண்டு 120 பேர் விலை கொடுத்து வாங்கினார்கள். அதன் மொத்த பரப்பளவு 20 ஏக்கர். இந்த நிலத்துக்கு 120 குடும்பத்தினரும் சென்னை பெருநகர வாரியத்தில் அனுமதி மற்றும் பட்டா பெற்றுள்ளனர். அந்த இடத்தில் 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். அந்த பகுதிக்கு அண்ணாமலை அவென்யூ குடியிருப்பு என்று பெயரிடப்பட்டிருந்தது. 120 குடும்பத்தினரும் முறையான வரியும் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு அண்ணாமலை அவென்யூ குடியிருப்பு சங்கத்துக்கு பூந்தமல்லி கோர்ட்டில் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில் இந்த 20 ஏக்கர் நிலத்துக்கு கவுரிசங்கர் என்பவர் பவர் பத்திரம் பெற்றுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதை பார்த்ததும் 120 குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 2009-ல் ஒருநாள் அண்ணாமலை அவென்யூ குடியிருப்புப் பகுதிக்கு ப.ரங்கநாதனும், அவரது ஆதரவாளர்களும் வந்தனர். இந்த 20 ஏக்கர் நிலம் அருமைநாயகம் என்பவருக்கும் அவரது 4 மகன்களுக்கும் சொந்தமானது. எனவே நீங்கள் இங்கு இருக்க முடியாது. உடனே காலி செய்யுங்கள் என்று ரங்கநாதன் கூறினார்.

இதை 120 குடும்பத்தினரும் ஏற்கவில்லை. காலி செய்ய முடியாது என்று கூறினார்கள். இதனால் ரங்கநாதன் ஆதரவாளர்களுக்கும், அண்ணாமலை அவென்யூ குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து 120 குடும்பத்தினரையும் அழைத்து பேசிய ரங்கநாதன், இந்த 20 ஏக்கர் நிலம் தொடர்பாக அருமைநாயகம் பவர் கொடுத்துள்ளார். எனவே வீட்டை காலி செய்யுங்கள். உங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நில மதிப்பில் 25 சதவீதத்தை பணமாக தந்து விடுகிறோம் என்றார்.

இதையும் அண்ணாமலை அவென்யூ குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து 15 பேர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கடுமையாக மிரட்டி, அச்சுறுத்தி 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர். பிறகு அந்த இடத்தில் அவர்கள் குடிசை அமைத்தனர்.

இதற்கிடையே வீடுகளையும், நிலத்தையும் இழந்த 120 பேரும் மீண்டும் அங்கு வந்து விடக்கூடாது என ரங்கநாதன் நினைத்தார். உடனடியாக ரங்கநாதனின் உதவியாளர் கவுரிசங்கர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.

அதில் அவர், முகப்பேர் ஏரித் திட்டம் பகுதியில் உள்ள நொளம்பூரில் இருக்கும் 20 ஏக்கர் நிலம் அருமை நாயகத்தின் 4 மகன்களுக்கு சொந்தமானது. அதில் வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறி இருந்தார். அந்த மனுவோடு அவர் நிலத்துக்கான சொத்து வரி ஆவணங்களையும் கொடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களில் ஒருவரான வக்கீல் செல்வமணி என்பவர் நொளம்பூர் போலீசில் புகார் செய்தார். அவர் தனது மனுவில், வில்லிவாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், அவரது உதவியாளர் வெங்கடேஷ் என்ற கவுரிசங்கர் மற்றும் தன்சிங், ரத்தினாபதி, ஜுலியட் என்ற ஞானவதி ஆல்பர்ட், ஜெயபால் ஆகிய 7 பேரும் போலி ஆவணம் தயார் செய்து எங்களது நிலத்தை அபகரித்து கொண்டனர் என்றும், அந்த இடத்தில் கொட்டகை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்பாபு இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். திருமங்கலம் உதவி கமிஷனர் கலிதீர்த்தான், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், அவரது உதவியாளர் கவுரிசங்கரிடம் விசாரணை நடத்தினார்.

அதன் பிறகு சென்னை ஐகோர்ட்டில் ரங்கநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 20 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் அந்த ஆவணங்கள் போலியானவை என்று தெரிய வந்தது. 2003-ல் தயார் செய்யப்பட்ட ரசீது எண்ணில் 1998, 1999 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் சொத்து வரி கட்டி உள்ளதாக போலி ஆவணம் தயாரித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தாசில்தாரும், அந்த நிலப்பத்திரங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்று சான்றளித்தார். இதையடுத்து போலீசார் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தனர். இதன் மூலம் ரங்கநாதனும் அவரது ஆதரவாளர்களும் முகப்பேர் ஏரித் திட்டத்தில் உள்ள 20 ஏக்கர் நிலத்தை அபகரித்து இருப்பது உறுதியாகத் தெரிய வந்தது. அபகரிக்கப்பட்ட அந்த நிலத்தின் மதிப்பு சுமார் 150 கோடி ரூபாயாகும்.

வக்கீல் செல்வமணி கொடுத்த புகாரின் பேரில் இன்று அதிகாலை முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் பெரவள்ளூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். மேடவாக்கம் டேங்க் சாலை பகுதியில் வசித்து வரும் அவரது உதவியாளர் கவுரிசங்கரையும் போலீசார் பிடித்து சென்றனர். அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ரங்கநாதன் மற்றும் 6 பேர் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 147 (கூட்டமாக செல்லுதல்), 148 (ஆயுதங்களுடன் செல்லுதல்), 420 (மோசடி செய்தல்), 506(2) (கொலை மிரட்டல்), 387 (ஆக்கிரமித்தல்), 427 (அச்சுறுத்தி வீடுகளை காலி செய்ய வைத்தல்) மற்றும் 447, 465, 468, 471 ஆகிய 10 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு ரங்கநாதன், கவுரிசங்கர் இருவரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு அம்பத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ரங்கநாதனும், கவுரிசங்கரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ரங்கநாதனுடன் சேர்ந்து நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தன்சிங், ரத்தினாவதி, ஜுலியட் என்ற ஞானவதி, ஆல்பர்ட் மற்றும் ஜெயபால் ஆகிய 5 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இன்று மாலைக்குள் அவர்கள் 5 பேரையும் கைது செய்து விடுவோம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது Empty Re: தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது

Post by kalainilaa Tue 2 Aug 2011 - 14:55

அது என்ன ஆட்சி மாறினால் தான் எல்லாம் தெரிய வருமா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது
» முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உட்பட 11 பேர் கைது
» தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது
» தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்கள் கோவையில் கைது
» ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது-திகார் சிறையில் ஓராண்டை நிறைவு செய்த முன்னாள் அமைச்சர் ராசா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum