சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm

» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm

» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm

» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm

» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm

ஹஜ்ஜின் வரலாறு Khan11

ஹஜ்ஜின் வரலாறு

+2
நண்பன்
*சம்ஸ்
6 posters

Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty ஹஜ்ஜின் வரலாறு

Post by *சம்ஸ் Wed Nov 23, 2011 10:41 am

இப்ராஹீம்(அலை) அவர்களின் மகனார் இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப்பிறகு அவர்களின் வழித்தோன்றல்கள் மார்க்கத்தில் எவ்வளவு காலம் நிலைத்து நின்றார்கள் என இறைவன்தான் அறிவான்! எப்படியோ சில நூற்றாண்டுகளில் இந்த மக்கள் வழிகேட்டில் புகுந்துவிட்டனர். ஒரே இறவனை வணங்குவதற்கும் அழைப்பதற்கும் அமைக்கப்பட்ட இறை ஆலயத்தில் நூற்றுக்கணக்கில் சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன.

இதில் விசித்திரம் என்னெவென்றால் சிலை வணக்கத்தை ஒழிப்பதற்காகவே தம் வாழ்நாளெல்லாம் உழைத்த இப்ராஹீம் நபி இஸ்மாயீல் நபி ஆகியோருக்கும் சிலைகள் தயாரிக்கப்பட்டு விட்டன. நேர்வழியில் நின்ற இப்ராஹீம் நபியின் சந்ததியினர் ‘லாத்’ ‘மனாத்’ ‘ஹூபல்’ ‘நஸ்ர்’ ‘யாகூது’ ‘உஸ்ஸா’ ‘அஸாப்’ ‘நாயிலா’ இப்படி பல பெயர்களில் சிலைகளை வடித்து வணங்கினார்கள். செவ்வாய், புதன், வெள்ளி, சனி இப்படி இன்னும் எந்த எந்தத் கோளங்களை அவர்கள் வணங்கினார்கள் என்றும் தெரியவில்லை. பேய், பிசாசு, வானவர்கள் இறந்து போன தங்களுடைய பெரியார்கள் ஆகியோரையும் அவர்கள் வணங்கினார்கள். அறியாமை இந்த அளவுக்கு முற்றிப் போயிருந்தது.

அவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டு விட்டால் பயணத்தில் வணங்குவதற்கு தெய்வச் சிலை இல்லாவிட்டால் கல் ஒன்று கிடைத்தாலும் வணங்க ஆரம்பித்து விடுவார்கள். கல்லும் கிடைக்கவில்லை என்றால் மண்ணைத் தண்ணீரில் குழைத்து உருவம் அமைத்து ஆட்டு பாலைத் தெளித்து வணங்குவார்கள்.

ஹஜ்ஜின் தவறான வடிவங்கள்:

அந்த அஞ்சான காலத்தில் ஹஜ்ஜின் கதி எப்படி இருந்தது என்பத எண்ணிப்பாருங்கள்; ஒவ்வொரு ஆண்டும் அங்கே ஒரு திருவிழா நடைபெற்றது. பல குலத்தவர்கள் தம் இனத்தாரோடு இங்கே வந்து தனித்தனியே முகாம் போடுவார்கள். அவரவர்கள் தங்களைச் சேர்ந்த கவிஞர்கள் அல்லது துதி பாடர்கள் தம்மிடமும் தம் குலத்தாரிடம் உள்ள பெருமைகளை பாடி பெருமையடித்துக் கொள்வதில் மற்றவர்களை முந்துவார்கள். இறுதியில் அவர்கள் ஒருவரையொருவர் இழித்துரைக்கும் அளவுக்கு நிலைமை முற்றிவிடும்.

அப்புறம் எவர் தர்மப்பிரபு எவர் கொடைவள்ளல் என்கிற போட்டி நடக்கும்! குலத்தலைவரும் தமது பெருமையை பறைசாற்ற சமையலில் பெரிய பெரிய அண்டாக்களையும் குண்டாக்களையும் வரிசை வரிசையாக அடுப்புகளில் ஏற்றுவார்கள். ஒருவரையொருவர் மிகைப்பதற்காக ஒட்டகத்திற்கு மேல் ஒட்டகத்தை அறுத்துக்கொண்டே போவார்கள். இந்த வீண் செலவுக்காண நோக்கம் இதுதான். இந்தத் தடவை நடந்த திரு விழாவில் இத்தனை பேருக்கு உணவளித்தார் என்று பிரசாரம் ஆகவேண்டும். இந்தக் கூட்டத்தில் மதுபானம், விபச்சாரம், இசை படுமோசமான செயல்கள் அனைத்தும் தாராளமாக நடந்து கொண்டிருந்தன.

நிர்வாணமாக வலம் வருதல்:

காபாவை சுற்றி வலம் வருதலும் நடந்துகொண்டுதான் இிருந்தது. ஆனால் எப்படி நிர்வாணமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்? எங்கள் அன்னையர் எங்களை எந்த நிலையில் பெற்றெடுத்தார்களோ அந்த நிலையில்தான் நாங்கள் இறைவன் முன் செல்வோம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

இறைவன் பெயரால் பலியும் தியாகச் செயல்களும் கூடச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் எப்படியென்றால் பலியிடப்பட்டவற்றின் இரத்ததை கஃபாவின் சுவர்களிலெல்லாம் தடவுவார்கள். மாமிசத்தை வாசலில் பரப்புவார்கள்; இந்த இரத்தமும் மாமிசமும் இறைவனுக்கு தேவை என்ற எண்ணத்தில்!

இப்ராஹீம் நபியவர்கள் ஹஜ்ஜின் நான்கு மாதங்களை தடுக்கப்பட்டவை என்றும், இந்த மாதங்களில் எந்த விதமான சண்டையும் வம்பும் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தார்கள். இந்த மக்கள் ஏதோ அந்த மாதங்களின் கண்ணியத்தை சிறிதளவு மனத்தில் வைத்திருந்தார்கள். ஆனால் மனம் சண்டையிட விரும்பினால் துணிச்சலான சந்தர்ப்பவாதத்தை வைத்துக்கொண்டு ஓர் ஆண்டில் தடை செய்யப்பட்ட மாதத்தை அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொண்டு அடுத்த ஆண்டில் அதற்கு ஈடு செய்து கொள்வார்கள். அத்துடன் தமது மார்க்கத்தில் நல்லெண்ணம் கொண்டிருந்த அவர்களில் ஒரு சிலரும் தமது அறியாமையின் காரணத்தினால் நூதனமான புதிய முறைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

நூதனமான தடைகள்:

சிலர் வழிச்செலவுக்கு எவ்வித ஏற்பாடும் இல்லாமல் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு மற்றவர்களிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே போய்க்கொண்டிருந்தார்கள். இது புண்ணியமான செயல் என்றும் நினைத்தார்கள். தாங்கள் இறைவன் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் எனவே உலகப் பொருள்களை நாங்கள் ஏன் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பொதுவாக ஹஜ் பயணத்தில் வணிகம் செய்வதும் சம்பாதிப்பதற்காக உழைப்பதும் தடுக்கப்பட்டவை என்று கருதிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலோர் உண்ணுவதையும், குடிப்பதையும் துறந்திருந்தார்கள். இதையும் இறை வழிபாடு என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by *சம்ஸ் Wed Nov 23, 2011 10:41 am

சிலர் ஹஜ்ஜுக்கு புறப்பட்டால் உரையாடலை நிறுத்திக் கொள்வார்கள். இதற்கு ‘ஹஜ்ஜெமுஸ்மித்’ மெளன ஹஜ் என்று பெயர். இப்படிப்பட்ட தவறான நடைமுறைகள் கணக்கின்றி இருந்தன.

இந்த நிலைமை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்தன. பின்னர் இப்ராஹீம் நபியின் வழித்தோன்றலில் இருந்து முழுமையான மனிதர் ஒருவர் தோன்றினார். அவர்களின் திருப்பெயர் முஹம்மது பின் அப்துல்லாஹ். எவ்வாறு இப்ராஹீம் நபி அவர்கள் பண்டிதர்களும் குருக்களும் கொண்ட குலத்தில் பிறந்தார்களோ அவ்வாறே முஹம்மத்(ஸல்) அவர்களும் பல நூற்றாண்டுகளாக கஃபாவுக்கு குருக்களாயிருக்கும் குடும்பத்தில் பிறந்தார்கள்.

இப்ராஹீம் நபியவர்கள் பொய்யான தவறான தெய்வ மூடக்கொள்கைகளை அழிக்க பெரும்பாடு பட்டதைப் போல் முஹம்மது(ஸல்) அவர்களும் தாங்கள் கொண்டு வந்த கலப்படமற்ற மார்க்கத்தை 21 ஆண்டு காலத்தில் இறைப்பணியை எல்லாம் செய்து முடித்தபோது அவர்கள் இறைக்கட்டளைப்படி முன்போலவே காபாவை முழு உலகத்துக்கும் இறைவனுக்கு வழிபட்டோருக்குரிய கேந்திரமாக எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஹஜ் செய்ய வாருங்கள் என முன்போலவே அறிவித்தார்கள்.

அந்த ஆலயத்திற்குச் சென்று வர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்கு ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான். (3:97)

சிலை வணக்கம் ஒழிந்தது:

கஃபாவிலுள்ள சிலைகள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டன. இறைவனைத் தவிர மற்றவருக்கு செய்த வழிபாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இணைவைக்கும் பழக்கங்கள் அடியோடு அழிக்கப்பட்டன. இறைவன் பெயரால் திருவிழாக்களும், வேடிக்கைகளும் தடை செய்யப்பட்டன.

அவன் எவ்வாறு (தன்னை நினைவு கூறவேண்டுமென்று) உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றானோ அவ்வாறு அவனை நினைவு கூறுங்கள்! இதற்கு முன்னரோ நீங்கள் வழி தவறியவர்களாய் இருந்தீர்கள். (2:198)

அபத்தமான செயல்:

ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக்கூடிய சொல் செயல் மற்றும் தீவினை சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது! (2:197)

பின்னர் நீங்கள் உங்களுடைய ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டீர்களானால், நீங்கள் (முன்னர்) உங்கள் மூதாதையரை நினைவு கூர்ந்தது போல- ஏன், அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். (2:200)

விளம்பரத்திற்காக தடை:

பெயருக்காகவும், விளம்பரத்துக்காகவும் செய்யப்பட்டு வந்த ஆடம்பரமான தான தர்ம போட்டிகள் அனைத்திற்கும் முடிவு கட்டப்பட்டது. இந்த இடத்தில் இப்ராஹீன் நபியவர்கள் காலத்திலிருந்த அதே செயல்முறை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டது. இறைவனின் திருப்பெயர் கொண்டு பிராணிகளை அறுங்கள், வசதியுள்ளவர்களின் தியாகத்தால் ஹஜ்ஜுக்கு வருகிற ஏழைகளுக்கும் உண்ணும் வாய்ப்பு கிடைக்கட்டும்.

உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை. (7:31)

குர்பானியின் இரத்தத்தை பூசத் தடை:

குர்பானியின் இரத்தத்தை கஃபாவின் சுவர்களில் தடவுவதும், இறைச்சியை கொண்டு வந்து பரப்புவதும் நிறுத்தப்பட்டது.

அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. (22:37)

நிர்வாணமாக வலம் வரத்தடை:

(நபியே! அவர்களிடம்) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடிமைகளுக்காகத் தோற்றுவித்துள்ள (ஆடை) அலங்காரத்தை தடை செய்தது யார்? (7:32)

நீர் கூறும்: அல்லாஹ் மானக்கேடானவற்றைச் செய்யும்படி எப்போதும் கட்டளை இடுவதில்லை. (7:28)

புனித மாதங்களை மாற்றத் தடை:

ஏதேனும் ஓர் ஆண்டில் (போர் தடுக்கப்பட்ட) ஒரு மாதத்தை (போருக்காக) அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் மறு ஆண்டில் அதே மாதத்தில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். எனெனில் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்டுள்ள மாதங்களின் எண்ணிக்கையைப் பூர்த்தியாக்க வேண்டும் என்பதற்காக! (9:37)

வழிச்செலவுக்கு வசதியில்லாமல் ஹஜ்ஜுக்கு செல்வது தடுக்கப்பட்டது:

மேலும் நீங்க (ஹஜ்ஜுக்காக) வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள்! உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். (2:197)

ஹஜ் காலத்தில் வியாபார அனுமதி:

ஹஜ் பயணத்தில் சம்பாதிக்காமலிருப்பது நற்செயல் என்றும், வருமானம் தேடுவது ஆகாத செயல் என்றும் கருதப்பட்டு வந்தது.

(ஹஜ் பயணத்தில்) உங்கள் இறைவனின் அருளை தேடிக்கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. (2:198)

மெளன ஹஜ்ஜும். உண்ணாமலும், பருகாமலும் இதர அறியாமைச் சடங்குகள் அனைத்தும் அழித்து விட்டு இறையச்சம், ஒழுக்கம், தூய்மை எளிமை ஆகியவற்றின் முழு வடிவமாக ஹஜ் ஆக்கப்பட்டது.

கஃாபாவிற்கு வருகிற பாதைகள் அனைத்திலும் கஃபாவிலிருந்து இருபது மைலுக்கு அப்பால் ஒவ்வோர் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய இல்லத்தில் எளியவராகவும், தாழ்மையுடையவராகவும் வருகை புரியவேண்டும். பணக்காரர்கள், ஏழைகள் எவராயினும் அந்த எல்லையை அடைந்ததும் ‘இஹ்ராம்’ எனும் எளிய உடைகளை அணியவேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது.

அமைதியான சூழ்நிலை ஏற்படுதல்:

சாந்தி சமாதானத்தை நேசிக்கும் மனப்பாங்கு ஏற்படவும் இறை ஆலயத்திற்கு வருவோர்க்கு எவராலும் எந்தத் தீங்கும் நிகழக்கூடாது என்பதற்காகவே ஹஜ்ஜுக்குறிய நான்கு மாதங்களை கண்ணியப்படுத்தி அம்மாதங்களில் போரிடுவது தடுக்கப்பட்டது. ஹாஜிகள் கஃபாவுக்கு வரும்போது அவர்களுக்கு அங்கே திருவிழாக்களோ, ஆடலோ பாடலோ இராது. மாறாக ஒவ்வோர் அடியிலும் இறைவனின் தியானம் இருக்கும்; தொழுகைகள் இருக்கும், வழிபாடுகள் இருக்கும்; தியாகங்கள் இருக்கும்; கஃபாவைச் சுற்றி வலம் வருதல் இருக்கும்; அங்கு உச்சரிக்கப்படும் வாக்கியங்கள் இவையே!

لًبّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاشَرِيْكَ لَك
“நான் வந்திருக்கிறேன். எனது இறைவனே! வந்திருக்கிறேன். உனக்கு இணை துணை கிடையாது. நான் வந்திருக்கிறேன். நிச்சயமாக புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானவை. அருட்கொடைகள் அனைத்தும் உன்னுடையவை. எல்லாவிதமான ஆட்சிகளும் உனக்கே உரித்தானவை. உனக்கு இணை எவரும் கிடையாது.”

அபுல் அஃலா மெளதூதி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by நண்பன் Wed Nov 23, 2011 2:45 pm

எனக்கு எப்போது கிட்டும் இந்தப் பாக்கியம்


لًبّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ
لَبَّيْكَ، اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاشَرِيْكَ لَك


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by jasmin Wed Nov 23, 2011 2:52 pm

என்ன நண்பரே இப்படி கேட்டுவிட்டீர் ,,இறைவன் உங்களை க்ஃப்பாவுக்கு அருகில் இருக்கும் கத்தாருக்கு கொண்டு வ்னதுவிட்டான் அல்லவா முயற்சி செய்யுங்கள் முடியும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by நண்பன் Wed Nov 23, 2011 2:55 pm

jasmin wrote:என்ன நண்பரே இப்படி கேட்டுவிட்டீர் ,,இறைவன் உங்களை க்ஃப்பாவுக்கு அருகில் இருக்கும் கத்தாருக்கு கொண்டு வ்னதுவிட்டான் அல்லவா முயற்சி செய்யுங்கள் முடியும்
தனியாகச்செல்வெதென்றால் என்றோ செய்திருப்பேன் அன்பு மனைவியோடு செல்லத்தான் காத்திருக்கிறேன் இங்கு அவர்கள் இருந்த நேரம் நான் தப்புப் பண்ணி விட்டேன் அதனால் போக முடிய வில்லை மீண்டும் முயற்சி செய்கிறேன் உங்கள் துஆக்களுடன் நன்றி உறவே ஹஜ்ஜின் வரலாறு 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by jasmin Wed Nov 23, 2011 3:11 pm

அடடா நல்ல வாய்ப்பை இழந்து விட்டீரே ..சரி பரவாயில்லை .....வரும் ரமழானில் குடும்பத்தோடு உம்ரா செய்வதற்கு நிய்யத்து செய்து கொள்ளுங்கள் ....அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான் .......யார் ரமழானில் உம்ரா செய்கிறார்களோ அவர்கள் என்னோடு ஹஜ் செய்த பயனைப் பெறுவார்கள் என்று பெருமானார் சல் அவர்கள் கூறி இருக்கிறார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by நண்பன் Wed Nov 23, 2011 3:14 pm

jasmin wrote:அடடா நல்ல வாய்ப்பை இழந்து விட்டீரே ..சரி பரவாயில்லை .....வரும் ரமழானில் குடும்பத்தோடு உம்ரா செய்வதற்கு நிய்யத்து செய்து கொள்ளுங்கள் ....அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான் .......யார் ரமழானில் உம்ரா செய்கிறார்களோ அவர்கள் என்னோடு ஹஜ் செய்த பயனைப் பெறுவார்கள் என்று பெருமானார் சல் அவர்கள் கூறி இருக்கிறார்கள்
இறைவன் உங்களுக்கும் நற்கூலி தருவானாக இன்ஷா அல்லாஹ் அவன் நாட்டப்படி நடக்கும் எனது முயற்சி உண்டு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by jasmin Wed Nov 23, 2011 3:24 pm

முயற்சி செய்யுங்கள் நண்பரே ..எங்கள் கம்பேனியில் இருந்து மக்காவின் கஃபாவுக்கு அருகில் ஒரு பெரிய ஹோட்டல் கட்ட சுமார் 500மில்லியன் புராஜெக்ட் இப்போது எங்கள் கம்பேனியில் இருந்து அனுமதி கேட்டிருக்கிறார்கள் இடம் வாங்கியாகிவிட்டது ,,மற்ற அரசாஙக அனுமதிகளுக்கு காத்திருக்கிறோம் அது கிடைத்து விட்டால் நாங்கள் அங்கு சென்று விடலாம் ..என் கணவர் புரோஜெச்ட் டெரெக்டராக மாற்றப்படுவார் .. நானும் குடும்பமும் அங்கு சென்று விடுவோம் இன்ஷா அல்லாஹ் ..அவ்வாறு சென்று விட்டால் தாங்கள் குடும்பத்தோடு வந்து எங்களோடு தங்கியே உம்ரா செய்துவிட்டுப் போகலாம் என் கணவரின் அனுமதி வாங்குவது என் பொறுப்பு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by நண்பன் Wed Nov 23, 2011 3:28 pm

jasmin wrote:முயற்சி செய்யுங்கள் நண்பரே ..எங்கள் கம்பேனியில் இருந்து மக்காவின் கஃபாவுக்கு அருகில் ஒரு பெரிய ஹோட்டல் கட்ட சுமார் 500மில்லியன் புராஜெக்ட் இப்போது எங்கள் கம்பேனியில் இருந்து அனுமதி கேட்டிருக்கிறார்கள் இடம் வாங்கியாகிவிட்டது ,,மற்ற அரசாஙக அனுமதிகளுக்கு காத்திருக்கிறோம் அது கிடைத்து விட்டால் நாங்கள் அங்கு சென்று விடலாம் ..என் கணவர் புரோஜெச்ட் டெரெக்டராக மாற்றப்படுவார் .. நானும் குடும்பமும் அங்கு சென்று விடுவோம் இன்ஷா அல்லாஹ் ..அவ்வாறு சென்று விட்டால் தாங்கள் குடும்பத்தோடு வந்து எங்களோடு தங்கியே உம்ரா செய்துவிட்டுப் போகலாம் என் கணவரின் அனுமதி வாங்குவது என் பொறுப்பு

மாஷா அல்லாஹ் கேட்கும் போது எவ்வளவு சந்தோசமாக உள்ளது உங்கள் கணவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளும் வெற்றிப்படிகளாக மாற இறைவன் துணை எனது வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் ஹஜ்ஜின் வரலாறு 930799 ஹஜ்ஜின் வரலாறு 930799 ஹஜ்ஜின் வரலாறு 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by jasmin Wed Nov 23, 2011 3:30 pm

எங்களுக்கு நெருங்கிய உறவினர்கள் யரும் அதிகம் இல்லை சகோதரரே ..உங்களைப் போன்ற நல்ல சகோதரர்களின் அன்பும் ஆதரவுதான் அதிகம் மற்றவை தனி மடலில்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by நண்பன் Wed Nov 23, 2011 4:05 pm

jasmin wrote:எங்களுக்கு நெருங்கிய உறவினர்கள் யரும் அதிகம் இல்லை சகோதரரே ..உங்களைப் போன்ற நல்ல சகோதரர்களின் அன்பும் ஆதரவுதான் அதிகம் மற்றவை தனி மடலில்
மிக்க சந்தோசம் சகோதரி இந்த நண்பனின் அன்பும் ஆதரவும் என்றும் உண்டு வாழ்க வழமுடன் நல்ல உள்ளங்களுடன் பயணிப்பதில் உள்ளம் எவ்வளவு மகிழ்வைத்தருகிறது ஹஜ்ஜின் வரலாறு 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by jasmin Wed Nov 23, 2011 8:22 pm

அதுதான் நட்பின் இலக்கணம் நண்பரே ஆரோக்கியமான நட்புக்கு இணையாக எதுவும் இல்லை .. நபிகளாரின் வாழ்வைப் பாருங்கள் உறவினர்களைவிட நண்பர்களே அவர்களின் நபித்துவ வெற்றிக்குப் பின்னால் இருப்பார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by நேசமுடன் ஹாசிம் Wed Nov 23, 2011 8:23 pm

jasmin wrote:அதுதான் நட்பின் இலக்கணம் நண்பரே ஆரோக்கியமான நட்புக்கு இணையாக எதுவும் இல்லை .. நபிகளாரின் வாழ்வைப் பாருங்கள் உறவினர்களைவிட நண்பர்களே அவர்களின் நபித்துவ வெற்றிக்குப் பின்னால் இருப்பார்கள்

@. @. @. :”@:


ஹஜ்ஜின் வரலாறு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by முனாஸ் சுலைமான் Wed Nov 23, 2011 8:25 pm

இப்ராஹீம் நபியவர்கள் ஹஜ்ஜின் நான்கு மாதங்களை தடுக்கப்பட்டவை என்றும், இந்த மாதங்களில் எந்த விதமான சண்டையும் வம்பும் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தார்கள். இந்த மக்கள் ஏதோ அந்த மாதங்களின் கண்ணியத்தை சிறிதளவு மனத்தில் வைத்திருந்தார்கள். ஆனால் மனம் சண்டையிட விரும்பினால் துணிச்சலான சந்தர்ப்பவாதத்தை வைத்துக்கொண்டு ஓர் ஆண்டில் தடை செய்யப்பட்ட மாதத்தை அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொண்டு அடுத்த ஆண்டில் அதற்கு ஈடு செய்து கொள்வார்கள். ##* :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by jasmin Wed Nov 23, 2011 8:27 pm

அக்கால மக்கள் மக்களாகவா இருந்தார்கள் அப்பபா மாக்களாக அல்லவா இருந்து இருக்கிறர்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by நண்பன் Wed Nov 23, 2011 8:28 pm

jasmin wrote:அதுதான் நட்பின் இலக்கணம் நண்பரே ஆரோக்கியமான நட்புக்கு இணையாக எதுவும் இல்லை .. நபிகளாரின் வாழ்வைப் பாருங்கள் உறவினர்களைவிட நண்பர்களே அவர்களின் நபித்துவ வெற்றிக்குப் பின்னால் இருப்பார்கள்
ஹஜ்ஜின் வரலாறு 111433 ஹஜ்ஜின் வரலாறு 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by jasmin Wed Nov 23, 2011 8:29 pm

யோவ் சும்மா கைதட்டுனா போதாது ஏதாவது மதிப்பீடு கூட்டுங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by நண்பன் Wed Nov 23, 2011 8:30 pm

jasmin wrote:யோவ் சும்மா கைதட்டுனா போதாது ஏதாவது மதிப்பீடு கூட்டுங்க
பதிவுக்குச் சொந்தக்காரர் யாருப்பா கொடுங்கப்பா மதிப்பீடு ஹஜ்ஜின் வரலாறு 459498 ஹஜ்ஜின் வரலாறு 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by அப்துல்லாஹ் Wed Nov 23, 2011 8:44 pm

ஹஜ் இந்த அவனியின் பாவக்கறைகளை மாந்தரிடமிருந்து கழுவ மகத்துவத்துடன் இறைவன் நமக்கு பரிசாயளித்த கொடை... ஹஜ்ஜாளிகளின் எண்ணிக்கை இன்று அதன் ஒவ்வொரு ஆண்டுகளின் கூடுதலின் போதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது... இனிவரும் காலங்களில் பாதுகாப்பு மிக அவசியம்.
அரபாப் பெருவெளியில் குறிப்பிட்ட அந்தக் காலக் கட்டத்தில் ஹாஜிகள் தங்களின் ஹஜ்ஜுக் க்காக குழுமும் போது அங்கு அவர்களின் மொத்தமும் சொரிமணல் போல எண்ணமுடியாத மனிதத் தலைகளும் அங்கு விசும் காற்றின் மூலக்கூறுகள் எங்கும் ஏக இறைவனிடம் தங்களின் பாவம் போக்க கண்ணீர் விட்டுக் கதறும் அந்த ஹாஜிகளின் கண்ணீர் குமுறலும் காணுமிடமெல்லாம் ஈரம் நனைந்த அந்த விழிமலர்கள் ரப்பே ... அந்தக் காட்சி....
சம்சு நன்றி
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by நண்பன் Wed Nov 23, 2011 9:38 pm

இன்ஷா அல்லாஹ் எனக்கும் அந்தக் காலம் வரும் ஹஜ்ஜின் வரலாறு 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹஜ்ஜின் வரலாறு Empty Re: ஹஜ்ஜின் வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum