சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். Khan11

பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள்.

3 posters

Go down

பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். Empty பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள்.

Post by ஹம்னா Sun 18 Dec 2011 - 17:37

பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். M%2B%25287%2529

பயறு அல்லது பயத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும்.

தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர் இங்கேயே பெரிதும் பயிரப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது ஒரு முக்கிய இடத்தப் பெறுகிறது. கொழுக்கட்டை, மோதகம் ஆகியவை பயற்றைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன.

*

முளைக்கவைத்தும் சமைப்படுதவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்கப்படுவதுண்டு. தோல் உரிக்காமல் பச்சை நிறத்தில் இருப்பது பச்சைப் பயறு என்றும், அதுவே தோல் உரித்து உடைத்த பருப்பை பாசிப் பருப்பு என்றும் கூறுகிறோம்.


பாசிப் பருப்பு பொதுவாக பொங்கல் வைக்கவும், கூட்டு செய்யவும் மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். அதன் பயன்கள் ஏராளம் ஏராளம். பாசிப் பருப்பில் இருக்கும் சத்துக்களோ தாராளம் தாராளம்.


பயறு வகைகளில் ஏராளமான புரதச் சத்து நிறைந்துள்ளது. பாசிப் பருப்பில் புரதமும், கார்போஹைட்ரேட்டும்,கலோரியும் சரிவிகிதத்தில் கலந்து உள்ளது.


இந்த பருப்பு வகைகளை நன்கு வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்பதால்தான், குழைந்து செய்யும் பொங்கல்மற்றும் கூட்டுக்களை இந்த பருப்பை வைத்து செய்துள்ளனர் நம் முன்னோர்கள்.


பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். Empty Re: பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள்.

Post by ஹம்னா Sun 18 Dec 2011 - 17:40

எளிதில் செரிக்கும் பச்சைப் பயறு:


பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். Damu%2B%252822%2529


ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பச்சைப் பயறு பெரும் பங்கு வகிப்பதாக கேரள தேசத்தில் பொதுவாக நம்பப்படுகிறது. முழுப் பச்சைப் பயறு பற்றி குறிப்புகள் ஏதேனும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா?


புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும். இது சீக்கிரம் ஜீரணமாவதும், வயிற்றில் வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும்தான் காரணம். பயறு அறுவடையாகி ஆறுமாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக் காட்டும்.

*

கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு, அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து, உபயோகிக்க மிக எளிதில் ஜீரணமாகக் கூடியது.

*

நீர்த்த கஞ்சி, குழைந்த கஞ்சி, பாயசம், வேகவைத்த பருப்பு, துவையல், ஊறவைத்து, வறுத்து, உப்பு, காரமிட்ட பயறு, சுண்டல், கறிகாய்களுடன் சேர்த்து அரைகுறையாக வெந்த கோசுமலி, பொங்கல் எனப் பலவகைகளில் உணவுப் பொருளாக இது சேர்கிறது.


பயறு பல வகைப்படும். பாசிப் பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு என்று. இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது. தட்டைப் பயறும், காராமணியும் பயறு என்ற பெயரில்குறிப்பிடப்படுபவையாயினும், வேற்றினத்தைச் சேர்ந்தவை. தட்டைப் பயிறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய்.

*

பச்சைப் பயறு இரண்டுவிதமாகப் பயிரிடப்படுகின்றன. புஞ்சை தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாட்களில் விளைச்சல் பெறுவது ஒருவகை. புஞ்சை தானியமாக விளைவது நல்ல பசுமையுடனிருக்கும். மற்றது கறுத்தும், வெளுத்த பசுமை நிறத்திலும், சாம்பல் நிறத்துடனும் காணப்படும். இரண்டும் சற்றேறக்குறைய ஒரே குணமுள்ளவைதான்.

*

பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது. ரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். ரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே ரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.


பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்ற பின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.


உபவாசமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை லகுவாக உணவேற்பதாயின், பயற்றங் கஞ்சித் தெளிவுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து உண்பர். சீக்கிரம் ஜீரணமாவதுடன் உபவாச நிலையில் அதிகரித்துள்ள பித்தத்தின் சீர் கேட்டைத் தணிக்க இது பெரிதும் உதவும்.

*

பச்சைப் பயிரை வேக வைத்து, கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.


*

தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்க இதன் தூள் மிகச் சிறந்தது. தலைக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி தரும். சிகைக்காய் போன்றவை ஒத்துக் கொள்ளாத போது, இது அதிகம் உதவுகின்றது. இதன் மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி, தாய்ப்பால் தரும் மாதரின் மார்பில் பற்றிட பால்க்கட்டு குறைந்து, வீக்கம் குறையும். மார்பின் நெறிக் கட்டிகளும் குறையும்.


இவ்வாறு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பச்சைப் பயறு பெரும் பங்கு வகிப்பதாக கேரளத்தில் நம்புவதுபோல, தமிழகத்திலும் பயறின் மகத்துவத்தை நாமும் உணர்ந்து அதைப் பயன்படுத்தத் துவங்குவோம்.


பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். Empty Re: பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள்.

Post by ஹம்னா Sun 18 Dec 2011 - 17:45

பயறு சாப்பிடக் கூடாதவர்கள்:
பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். Ht275


1. பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.

*

2. பச்சைப் பயறின் தன்மை ஈரலின் ‌பிர‌ச்‌சினையை அ‌திகமா‌க்கு‌ம்.

*

3. எனவே ஈரலில் கல் இருப்பவர்களோ, பிரச்சினை உள்ளவர்களோ பச்சைப் பயறை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*

4. மேலும், பச்சைப் பயறை வேக வைத்து, அ‌ந்த நீரை வடித்துவிட்டுச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

*

5. ப‌ச்சை‌ப் பயறை அ‌திக‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உட‌ல் அ‌திக கு‌ளி‌ர்‌ந்த த‌ன்மையை அடை‌ந்து‌விடு‌ம். எனவே ஆ‌ஸ்துமா, சைன‌ஸ் போ‌ன்ற நோயு‌ள்ளவ‌ர்க‌ள் கவனமாக கையாள வே‌ண்டு‌ம்.



பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். Empty Re: பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள்.

Post by *சம்ஸ் Sun 18 Dec 2011 - 20:09

சிறந்த மருத்துவ பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். Empty Re: பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள்.

Post by முனாஸ் சுலைமான் Sun 18 Dec 2011 - 20:34

@.
*சம்ஸ் wrote:சிறந்த மருத்துவ பகிர்விற்கு நன்றி
பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். Ht275 ##* :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள். Empty Re: பாசிப் பருப்பு - பச்சைப் பயறு மருத்துவ குணங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum