சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் அரபு லீக் கண்காணிப்பாளர் விலகல்  Khan11

சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் அரபு லீக் கண்காணிப்பாளர் விலகல்

Go down

சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் அரபு லீக் கண்காணிப்பாளர் விலகல்  Empty சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் அரபு லீக் கண்காணிப்பாளர் விலகல்

Post by *சம்ஸ் Thu 12 Jan 2012 - 6:20

பாதுகாப்புச் சபையும் கண்காணிப்பு பணியில் அதிருப்தி
சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் அரபு லீக் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஒருவர் தனது கண்காணிப்பு பணியில் இருந்து விலகி சிரியாவில் இருந்து வெளியேறியுள்ளார்.

தாம் அங்கு நிலவும் வன்முறைகளை பார்த்ததாகவும், கண்காணிப்புக் குழுவுக்கு சுயாதீனமாக இயங்க முடியாதுள்ளதாகவும் எனக் கூறியே அவர் கண்காணிப்பு பணியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.

அல்ஜீரியாவைச் சேர்ந்த அரபு லீக் கண்காணிப்பாளர் அன்வர் மாலிக் என்பவரே இவ்வாறு கண்காணிப்பு பணியில் இருந்து விலகியுள்ளார். இவர் சிரிய கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக அணியும் செம்மஞ்சள் நிற உடையுடன் அல் ஜkரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

‘சிரிய இராணுவத்திற்கு ஆதரவாக பணியாற்றுவதுபோல் உணர்ந்ததால் நான் கண்காணிப்பு பணியில் இருந்து விலகிக் கொண்டேன்’ என்று அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும் போது, ‘நான் எப்படி இராணுவத்திற்கு உதவுகிறேன்? இராணுவத்தின் தொடர்ச்சியான கொலைகளுக்கு நான் சந்தர்ப்பம் வழங்குகிறேன். அதனை என்னால் தடுக்கவும் முடியவில்லை’ என்றார்.

சிரியாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அத்துடன் அங்கு நிலவும் வன்முறைகளில் 5000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அண்மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அரபு லீக் கண்காணிப்பு குழுவினர் கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி முதல் சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தற்போது 165 கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அல் ஜkரா தொலைக்காட்சி தலைமையகமான கட்டாரில் வைத்து பேட்டியளித்த முன்னாள் கண்காணிப்பாளர் அன்வர் மாலிக்கிடம், ஏன் கண்காணிப்பு பணியில் இருந்து விலகியதாக கேட்டதற்கு ‘இதில் முக்கிய விடயம் என்னவென்றால் ஒரு மனிதனுக்கு மனித உணர்வு புரிய வேண்டும். நான் ஹோம்ஸ் நகரில் 15 நாட்களுக்கு மேல் இருந்தேன். நான் அங்கு பயங்கரங்களை கண்டேன். மனித உடல்கள் பற்றி எரிவதை கண்டேன். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மனிதாபிமான உணர்வோடு என்னால் அங்கு இருக்க முடியாமல் போனது’ என்றார்.

இது தொடர்பில் அவர் மேலும்கூறும் போது; ஸ்னைப்பர் துப்பாக்கிதாரர்கள் எல்லா பக்கமும் இருந்து மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். மக்கள் கடத்தப்படுகிறார்கள். சிறைக் கைதிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். எந்த சிறைக் கைதியும் விடுதலை செய்யப்படவில்லை என்றார்.

அதேபோன்று சிரியா இராணுவம் நகர்களில் இருந்து வெளியேறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்காணிப்பாளர்கள் வரும்போது அவர்கள் ஒளிந்து கொள்கிறார்கள் பின்னர் அவர்கள் வெளியே வருகின்றனர் என்றும் அன்வர் மாலிக் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த ஆண்டின் முதலாவது ஐ. நா. பாதுகாப்பு சபை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிரிய நிலவரம் குறித்து மூடிய அறையில் பாதுகாப்புச் சபை அங்கத்தவர்கள் விவாதித்தனர்.

இதன்போது அரபு லீக் கண்காணிப்பாளர்கள் சிரியா சென்றபோது அங்கு வன்முறைகள் குறையவில்லை என்ற விபரம் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்கு வந்ததாக அதன் அமெரிக்காவுக்கான தூதுவர் சுசான் ரைஸ் தெரிவித்துள்ளார்.

‘அரபு லீக் கண்காணிப்பாளர்கள் சிரியா சென்றது தொடக்கம் இதுவரையில் 400 பேரளவில் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் சபையின் கவனத்திற்கு வந்தது. இதன்படி பார்த்தால் கண்காணிப்பாளர்கள் சென்றதன்பின் அங்கு நாளொன்றுக்கு சராசரியாக 40 பேர் வீதம் கொல்லப்பட்டுள்ளனர். இது கண்காணிப்பாளர்கள் அங்கு செல்வதற்கு முன்னர் இருந்ததை விடவும் மோசமான நிலையாகும்’ என்று சுசான் ரைஸ் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
» சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்
» சிரியாவில் ஐ.நா - அரபு லீக் இணைந்து கண்காணிப்பு பணியை தொடர திட்டம்
» சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum