சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

தோல் நோய்கள் ஓர் அறிமுகம் .. Khan11

தோல் நோய்கள் ஓர் அறிமுகம் ..

2 posters

Go down

தோல் நோய்கள் ஓர் அறிமுகம் .. Empty தோல் நோய்கள் ஓர் அறிமுகம் ..

Post by ஹனி Wed 2 Feb 2011 - 16:50

தோல் நோய்கள் ஓர் அறிமுகம் .. Diseasesofthezk4
மனித உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல் தான். கிட்டத்தட்ட இரண்டு சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. உடலின் மொத்த எடையில் 16 முதல் 20 சதவீதம் தோலின் எடை இருக்கும். கண், காது, மூக்கு, இதயம், சிறுநீரகம், மூளை போன்றவற்றைப் போன்றே, தோலும் மிக முக்கியமான உறுப்பாகும்.
தோல் என்பது, ஒரு மனிதனுடைய தலை முதல் கால் வரை இருக்கிறது. அதாவது, முழுவதுமாகத் தோலால் மூடப்பட்ட உரவம்தான் மனித உடல். ஒரு மனிதனைப் பார்க்கும் போது, கண்ணுக்கு முதலில் தெரிவது அந்த நபரின் தோல்தான். அந்த வகையில், ஒரு மனிதனைப் பொறுத்தவரை தோல் ஒரு முக்கியமான உறுப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வளவு முக்கிய உறுப்பான தோலில் வரக்கூடிய நோய்கள் ஏராளம். இதுவரை உலகில் கண்டறியப்பட்டுள்ள தோல் நோய்களின் எண்ணிக்கை 600&க்கும் மேல். அவற்றை ஆராய்ந்து, அவை என்ன மாதிரியான நோய்கள், எதனால், எப்படி வருகின்றன என்பதைத் தெரிந்து கொண்டு, அவற்றுக்கு ஏற்றார்போல் சிகிச்சை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தட்பவெப்ப நிலை
ஒரு மனிதன், அவன் வசிக்கும் பகுதியில் நிலவும் தட்ப வெப்ப நிலை, நாகரிகம், செய்யும் தொழில், பழக்க வழக்கங்கள், அணியும் உடை, உணவுப் பழக்கம் போன்ற பலவற்றைப் பொறுத்து அவனுக்கு தோல் நோய்கள் வரக்கூடும். அதோபோல், மனிதனுக்கு மனிதன் வரக்கூடிய நோய்களும் வித்தியாசப்படும்.
ஓர் இந்தியனுக்கு வரக்கூடிய தோல் நோயும், வெள்ளைக் காரர்கள் என்று சொல்லப்படும் வெளிநி£ட்டினருக்கு வரக்கூடிய தோல் நோயும் ஒன்றாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், இருவருடைய தோலின் தன்மைகளில் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.

எந்த தோல் நோயாக இருந்தாலும், முதலில் பார்க்கும் போது அவை ஒரே மாதிரியாகத்தான் தோற்றமளிக்கும். தோலில் ஏதோ பிரச்னை என்பதை கண்ணால் பார்த்தாலே தெரிந்து விடும். ஆகையால், மற்ற நோய்களைப்போல், தோல் நோய் குறித்து டாக்டர் என்ன சொல்கிறாரோ அதுதான் உண்மை என்று நம்ப வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், பாதிக்கப்பட்ட நபரே, தன்னுடைய கண்ணால் தோலில் வந்திருக்கும் நோயை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருப்பார். தோலில் வந்திருக்கும் நோய், சரியாகிக் கொண்டிருக்கிறதா, இல்லை பிரச்னை தீவிரமாகிக் கொண்டிருக்கிறதா என்பதை அவரால் கண்டிறிந்து கொள்ள முடியும்.
ஆக, பாதிக்கப்பட்ட ஒருவரே அவருடைய கண்ணாலேயே பிரச்னையைப் பார்த்து நிலைமையைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலையில், அது எந்த வகையான தோல் நோய் என்பதைக் கண்டுபிடித்து அதற்கு ஏற்ற சிகிச்சை முறையைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதே நேரத்தில், மிகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும் என்பதுடன், மருத்துவர்களுக்கு அது ஒரு தீவிர சவாலாகவே பல சமயங்களில் அமையும் என்பதே உண்மை.

ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

தோல் நோய்கள் ஓர் அறிமுகம் .. Empty Re: தோல் நோய்கள் ஓர் அறிமுகம் ..

Post by ஹனி Wed 2 Feb 2011 - 16:53

பார்க்கதற்குச் சாதாரணமான ஒன்றாகத் தெரியும். தோல், கற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. சுற்றுப்புற தட்பவெப்ப நிலை, மக்களுடைய பழக்க வழக்கங்கள், சமுதாய, நாகரிக, பொருளாதார நிலைகள், சுற்றுப்புற உயிர், ரசாயான, பௌதிக காரணிகளுக்கு ஏற்ப, தோல் மேற்கண்ட காரணிகள் மாற்றிவிடுகின்றன என்று சொல்லலாம். இது மிகவும் அதிசயத்தக்க ஒரு விஷயம்.
நம் இந்தியாவை எடுத்துக் கொள்வோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்த நாடு இந்தியா. இங்கு வெவ்வேறு வகையான தட்பவெப்ப நிலைகள் நிலவுகின்றன. வெவ்வேறு வகையான கலாசாரங்கள், மதங்கள், பலவகையான உணவுப் பழக்கவழக்கங்கள் என எத்தனையோ மாறுபட்ட தன்மைகள் இருக்கின்றன. இதனால், இந்தியாவிதலயே ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் வெவ்வேறு வகையான தோல் நோய்கள் வருகின்றன என்பது ஆராய்ச்சிபூர்வமாகக் கண்டறியப்பட்ட உண்மை.
மதச் சடங்கு
ஹிந்து, முஸ்லிம் என இரண்டு மதங்களைச் சேர்நத்வர்களை எடுத்துக் கொள்வோம்.
ஹிந்து மதத்தில், ஆண்களில் ‘சுன்னத்’ எனப்படும் ஆண் குறியின் முன்பக்கத் தோலை வெட்டி எடுத்துவிடும் பழக்கம் இல்லை. ஆனால், அதுவே முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு பழக்கமாகவும், மதச் சடங்காகவும் கட்டாயமாகச் செய்யப்படுகிறது. சர்கம்ஸிஷன் எனப்படும் இந்தப் பழக்கத்தால், மிகப் பெரிய நன்மை இருக்கிறது. அதாவது, ஆண் குறியின் தோல் பகுதியில் ‘ஸ்குவாமஸ்செல் கார்சிநோமா’ எனப்படும் புற்றுநோய், முஸ்லிம் மதத்¬ச் சேர்ந்த ஆண்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
தென் இந்தியாவைச் சேர்ந்த பெண்கள், அழகுக்காக இயற்கையான முறையில் மருதாணி இலைகளை அரைத்து கையில்வைத்துக்கொள்வார்கள். ஆனால், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மருதாணிப் பொடி அல்லது விழுதைக் கையில் வைத்துக் கொள்வார்கள். இப்போது இந்தப் பழக்கம் தென் இந்தியப் பெண்களிடமும் பரவி வருகிறது. அதே போல், கண் இமைகளில் காஜல் எனப்படும் கலர் மையைத் தீட்டிக் கொள்வார்கள்.


புதிய கலாச்சாரம் என்ற ரீதியில், செய்றைகையான பலவகையான ரசாயனப் பொருக்ளைச் சேர்த்து செய்யப்படும் அழகு சாதனப் பொருள்களைப் பெண்கள் பயன்படுத்துவதால், புதிய புதிய ‘அலர்ஜிக் ரியாக்ஷன்’ எனப்படும் தோல் நோய்கள் வருகின்றன.
அதே போல், குறிப்பாக தென் இந்தியர்கள் நெற்றியில் சந்தனம், விபூதி, குங்குமம் பூசிக் கொள்வார்கள். ஒரு காலத்தில் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இப்பொருள்கள், இன்று செயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, நம் நாகரிக, கலாசார, பண்பாட்டுச் சின்னமாக பெண்கள் தங்களுடைய நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம்.
இதன் காரணமாக, நெற்றிப் பகுதியில் அலர்ஜி ஏற்பட்டு புண்களும், ‘எக்ஸிமா’ அல்லது ‘டெர்மடைடிஸ்’ என்று சொல்லப்படும் ‘கரப்பான்’ போன்ற தோல் நோய்களும் வருகின்றன.
எனவே, மத, கலாசார, பண்பாட்டு நடவடிக்கைகள், ஒருவருக்கு வரக்கூடிய தோல் நோயைத் தீர்மனிக்கின்றன என்பது நிரூபணம் ஆனாலும், ஒருவருடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்களும் தோல் நோயைத் தோன்றுவிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
சிலர், ரசாயனப் பொருள்கள் சேர்க்கப்பட்ட ஷாம்பூ, எண்ணெய், கலர் சாயம் பூசி தலைக் குளித்து, தலை முடியை விரித்துக் காய வைப்பார்கள். அப்படிச் செய்யும் போது அவர்கள் பயன்படுத்திய பொருள்களால், தலைமுடி படும் முதுகுப் பகுதி தோலில் நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
அதே போல், சீக்கியர்கள் தங்களுடைய மதச் சடங்காக, தலைமுடியை ஒரு கொண்டைபோல் இழுத்துக் கட்டுவார்கள்.’
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

தோல் நோய்கள் ஓர் அறிமுகம் .. Empty Re: தோல் நோய்கள் ஓர் அறிமுகம் ..

Post by ஹனி Wed 2 Feb 2011 - 16:58

அதே போல், சீக்கியர்கள் தங்களுடைய மதச் சடங்காக, தலைமுடியை ஒரு கொண்டைபோல் இழுத்துக் கட்டுவார்கள். தொடர்ந்து இவ்வாறு செய்யும்போது ‘டிராக்ஷன் அல்லபேஷியா’ என்று சொல்லப்படும் வழுக்கை பிரச்னை அவர்களுக்கு ஏற்படும். ‘குதிரை வால் கொண்டை’ போட்டுக் கொள்ளும் பெண்களும், தலைமுடியை இழுத்துக் கட்டுவதால் இது போன்ற பிரச்னை வரலாம்.
சிலர் சம்மணம் போட்டு உட்காருவார்கள். அப்படி உட்காரும் போது தரையில் அழுத்தமாகப்படும் தோல் கறுப்பு நிறமாக மாறிவிடும். ‘கேலஸ்’ எனப்படும் தோல் தடிப்பும் ஏற்படும். சிலர், காலணிகள் அணியாமல் தெருக்களில் நடப்பார்கள். இதனாலும் காலில் தோல் நோய்கள் வரும்.
குளிர் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள், குளிரில் இருந்து தப்பிப்பதற்காக, பானை ஓட்டை சூடாக்கி வயிற்றில் ஒரு துணியில் வைத்துக் கட்டிக் கொள்வார்கள். சுருட்டு, பீடி பிடிக்கும் சிலர், நெருப்புப் பகுதியை வாய்க்குள் வைத்துப் புகைப்பார்கள். இவற்றாலும் வயிறு மற்றும் வாயில் தோல் நோய்கள் வரும்.
தோல் நோய்க்கான அடுத்த முக்கியமான காரணம், சுகாதார மற்ற சூழ்நிலை, அடிப்படை வசதி இல்லாமை. வசிப்பது நகரமோ, கிராமமோ, நடைபாதையோ எதுவாக இருந்தாலும், ஒரு சிலர் வசிக்கும் இடம் சுகாதாரமற்று இருக்கும். அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கம், படுத்துக் கொள்ளும் இடம், குடிநீர் போன்றவை தூய்மையாக இல்லாமல் இருக்கும் என்பதால், அவர்களுக்கு மிக எளிதாக நோய்த்தொற்று ஏற்படும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற தோல் நோய்கள் வரும்.
இந்தியா ஒரு வெப்ப மண்டலப் பகுதியில் இருக்கும் நாடு. இதனால் சாதாரணமாகவே தோல் நோய்கள் வரும் என்றாலும், சுற்றுச்சூழல் சுகாதாரமற்ற நிலை, பொருளாதார காரணங்கள், அடிப்படை வசதிகள் இல்லாமை போன்றவற்றாலும், மிகவும் குறிப்பாக அறியாமையாலும் தோல் நோய்கள் அதிக அளவில் மக்களைத் தாக்குகின்றன.
மேலை நாடுகளில் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மேலும், மக்களுக்கும் ஓரளவு பொது அறிவும் இருக்கிறது. அதனால், அவர்களுக்கு நோய்த் தொற்று போன்ற பிரச்னைகள் வருவதில்லை. ஆனால் அலர்ஜி, வழுக்கை, வெண் குஷ்டம், புற்று நோய் போன்ற பிற பிரச்னைகள் அதிக அளவில் வருகின்றன.

உணவுச் சத்துக் குறைபாடு
அடுத்து உணவுச் சத்துக் குறைபாடு. புரதச்சத்து, வைட்டமீன் சத்துகள் மிகவும் குறைவாக இருப்பதாலும் தோல் நோய்கள் வரக்கூடும். இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதிலும், தேவையான அடிப்படைச் சத்துகள் உள்ள உணவுகளைச் சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவு. சத்துக் குறைபாடல், நுரையீரலில் வரும் என்று கருதப்படும் காசநோய்கூட, தோலில் வரக்கூடும். தொழுநோயும் அப்படித்தான். உலகில் உள்ள தொழு நோயாளிகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் இருப்பதாகக் கணக்கெடுப்பு சொல்கிறது.
அதேபோல், பூச்சிக்கடிகள், கொசு உள்ளிட்ட பல வகையான பூச்சிகள் கடிளப்பதால் தோலில் அலர்ஜி பிரச்னைகள் ஏற்படுகின்றன. பூச்சி தவிர, பார்த்தீனியம் போன்ற செடிகளில் இருக்கும் மகரந்தங்கள், காற்றில் பரந்து சென்று அலர்ஜியை ஏற்படுத்தி, தீராத தோல் நோயைத் தோற்றுவிக்கின்றன.

ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

தோல் நோய்கள் ஓர் அறிமுகம் .. Empty Re: தோல் நோய்கள் ஓர் அறிமுகம் ..

Post by ஹனி Wed 2 Feb 2011 - 17:03

வெப்ப மண்டலப் பகுதி என்பதால், இந்தியாவில் சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோய்கள் அதிகம். அதாவது, உடலின் எந்தப் பகுதியில் அதிக அளவில் சூரிய ஒளி படுகிறதோ அந்த இடத்தில் நோய் வரும். அதோ நேரத்தில், இந்திகளுக்கு உள்ள கறுப்பு நிறத்தோல் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று சொல்லலலாம்.
ஒருவருடைய தோலின் நிறத்துக்குக் காரணம் தோலில் இருக்கும் ‘மெலானின்’ என் நிறச்சத்துதான். கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்த மெலானின் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தோல் கறுப்பாக இருக்கும்.
அதே நேரத்தில், இந்த மெலானினுக்கு சூரிய ஒளியைத் தடுத்து தோல் புற்குநோய் வராமல் காக்கும் சக்தி அதிகம். அதனால், கறுப்பு தோல் இருப்பவர்களுக்கு தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், வெள்ளைத் தோல் இருப்பவர்களுக்கு, தோலில் மெலானின் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு சூரிய ஒளியால் உண்டாகும் தோலி புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்தியர்களான நாம், வெள்ளையர்களால் ‘பிளாக்ஸ்’ என்று அழைக்கப்பட்டாலும், தோல் புற்றுநோய் வராது என்பதால் ‘தைரியமாக’ இருக்கலாம்.
செய்யும் தொழில்
ஒரு தனி நபர், அவர் செய்யும் தொழில் காரணமாகவும் அவருக்குத் தோல் நோய்கள் வரக்கூடும். சிமெண்ட் பயன்படுத்தப்படும் கட்டட வேலை செய்பவர்களுடையு கை, கால்களில் ‘டைக்ரோமேட்’ ஒவ்வாமையால் ‘எக்ஸிமா’ என்ற நோய் வருகிறது. அதேபோல், வீட்டு வேலை செய்பவர்கள் அதிக நேரம் தண்ணீரிலும், சோப்பு நீரிலும் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அவர்களுடைய கால், கைகளில் எக்ஸிமா வரக்கூடும்.

இப்படி சுற்றுச்சூழல், மத கலாசார, இயற்கைக் காரணங்களால் தோல் நோய்கள் வரலாம். அதே நேரத்தில், மக்களே தங்களுடைய அறியாமையால் வருவித்துக் கொள்ளும் நோய்கள் அதிகம்.
உதாரணமாக, தோலில் வரும் சிரங்கு, அக்கி போன்றவை பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் வருபவை. தொற்றுநோயான இவற்றை, ‘அக்கி’ என்ற பொதுவாகச் சொல்லி அவற்றுக்கு ‘கை’ வைத்தியம் செய்து கொள்வார்கள். அதாவது, மன் பானை ஓட்டைத் தண்ணீரில் ஊறவைத்துத் தேய்த்துத் தோலில் பூசுவார்கள். இது தவறு. தோலில் அலர்ஜி ஏற்பட்டு, நீரும் சீழும் சேர்ந்து தீராத, தோல் நோயை ஏற்படுத்திவிடக்கூடிய அபாயம் அதிகம்.
அதே போல், சிலர் மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசுவார்கள். வேறு ஒரு நோய்க்குக் கொடுக்கப்பட்ட மருந்தை இன்னொரு நோய்க்காகப் பூசுவார்கள். மருந்துக்கடைக்குச் சென்று ஏதோ ஒரு மருந்தை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இவை தவறான அணுகுமுறைகள். இவற்றால் ஏற்படும் பின்விளைவுகள் தீர்க்க முடியாமல் போய்விடக்கூடும். சில சமயங்களில் தோலே பிய்ந்து போய், சரிப்படுத்த முடியாமல் தீராத சிக்கலை ஏற்படுத்தி, சிலருக்கு உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.
உலகில், தோல் நோய்கள் அதிகமாக உள்ளன. ஆனால், அவறுக்கு உரிய முக்கியத்துவத்தை மருத்துவர்களோ, மக்களோ யாரும் கொடுக்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். ‘டெர்மடாலஜிஸ்ட்’ என்ற முறையில், பல ஆண்டுகளாக தோல் நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன்.
இத்தனை ஆண்டுகளில், தங்களுக்கு வந்திருக்கும் தோல் நோய் எப்படிப்பட்டது.

இத்தனை ஆண்டுகளில், தங்களுக்கு வந்திருக்கும் தோல் நோய் எப்படிப்பட்டது. எதனால் வந்தது, அதற்கான சிகிச்சை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இதுவும் வருத்தமான விஷயம்தான். இதற்கு மிக முக்கியமான காரணமாக நான் சொல்வது அவர்களுடைய அறியாமையையும் மூடப்பழக்கத்தையும் தான்.
எந்த நோயாக இருந்தாலும், அதைப் பற்றி வெளியே சொன்னால்தான் தீர்வு கிடைக்கும். ஆனால், வெளியே சொன்னால், அசிங்கம், என்ன நினைப்பார்களோ என்று சொல்லாமல் இருந்துவிடுவார்கள். நமக்குள்ளேயே இருக்கட்டு என்று நினைத்து தாங்களாகவே ஏதேதோ செய்து, ஐயோ குணமாகவில்லையே என்ற கடைசிக்கட்டத்தில்தான் மருத்துவர்களிடம் வருகிறார்கள். அது, மருத்துவள்£களையும் மீறிய காலகட்டமாக இருப்பதில்தான் பிரச்னைகளும், சிகிச்சை முறை தோல்விகளும் மக்களைப் பாதிக்கின்றன.



ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

தோல் நோய்கள் ஓர் அறிமுகம் .. Empty Re: தோல் நோய்கள் ஓர் அறிமுகம் ..

Post by நண்பன் Wed 2 Feb 2011 - 22:16

விரிவான மருத்துவக்கட்டுரைக்கு நன்றி உமா ##*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தோல் நோய்கள் ஓர் அறிமுகம் .. Empty Re: தோல் நோய்கள் ஓர் அறிமுகம் ..

Post by ஹனி Thu 3 Feb 2011 - 7:05

நண்பன் wrote:விரிவான மருத்துவக்கட்டுரைக்கு நன்றி உமா ##*

:];: :];:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

தோல் நோய்கள் ஓர் அறிமுகம் .. Empty Re: தோல் நோய்கள் ஓர் அறிமுகம் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum