சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

யாருக்குப் பாதுகாப்பு? Khan11

யாருக்குப் பாதுகாப்பு?

Go down

யாருக்குப் பாதுகாப்பு? Empty யாருக்குப் பாதுகாப்பு?

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 16:25

திருத்தப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவு, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கு அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், சட்டம் நிறைவேறுவதில் சிக்கல் இருக்க வழியில்லை. ஆனால், உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும் நேரமும், முறையும்தான், இந்தச் சட்டம் எந்த அளவுக்கு வெற்றி அளிக்கும் என்கிற கேள்வியை எழுப்புகிறது.

உணவுப் பாதுகாப்புப் பற்றி பேசுவதற்கு முன்னால், இன்றைய உண்மை நிலவரத்தை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு தானியத்தைப் பொருத்தவரை ஒரு விசித்திரமான சூழல் இந்தியாவில் நிலவுகிறது. அரசின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. வரவிருக்கும் நிதியாண்டில் அரிசி மற்றும் கோதுமையின் இருப்பு 60 மில்லியன் டன்களைக் கடக்கும் என்று கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு இருப்பைவிட மூன்று மடங்கு அதிகம்.

நிலைமை இப்படி இருக்க, வெளிச் சந்தையிலாகட்டும், உணவு தானியங்களின் விலை அளவுக்கதிமாகத் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதங்களில் இருந்ததைவிட, அரிசியின் விலை 30 முதல் 40 விழுக்காடுகள் அதிகரித்திருக்கிறது.

ஒருபுறம், தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும்போது, இன்னொரு புறம் காரணமே இல்லாமல் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றால், அரசு உடனடியாகத் தலையிட்டுச் சந்தையில் தானிய வரத்தை அதிகரிக்க வேண்டாமா? தேவைக்கும் அதிகமான வரத்து இருந்தால், அதிகரிக்கும் விலையுயர்வு பொங்கி வரும் பாலில் தண்ணீர் ஊற்றியதுபோல சத்தம் போடாமல் குறைந்துவிடுமே. இது தெரிந்தும் அரசு, தானியங்களின் விலையுயர்வைப் பற்றிய கவலையே இல்லாமல் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

ஒருபுறம், உணவுப் பாதுகாப்புப் பற்றிப் பேசும் அரசு, பதுக்கலையும் திட்டமிட்ட விலையுயர்வையும் கட்டுப்படுத்துவதில் முயற்சி எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, திட்டமிட்டு முறையாக தானிய சேமிப்பை நிர்வாகம் செய்யவும் தவறுகிறது. இதற்குப் பின்னால், மக்களின் நலனை விடவும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அரசுக்கு உதவத் தயாராக இருக்கும் மிகப்பெரிய தனியார் உணவு தானிய வியாபார நிறுவனங்களின் நலன் காணப்படுகிறதோ என்றுகூட சந்தேகமாக இருக்கிறது.

திருத்தப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்டம், பழைய சட்டத்திலிருந்து எந்தெந்த வகைகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று கேட்கலாம். முந்தைய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 7 கிலோ அரிசி அல்லது கோதுமை மானிய விலையில் அளிப்பது என்பதாக இருந்தது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் என்கிற வரைமுறைக்குள், உறுதியான சுவர்களுடன் கூடிய ஓடு அல்லது கான்க்ரீட் தளம் அமைந்த வீடு இல்லாத, கழிப்பறை இல்லாத வீடுகளில் வாழ்பவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

யாருக்குப் பாதுகாப்பு? Empty Re: யாருக்குப் பாதுகாப்பு?

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 16:25

இப்போது, வறுமைக் கோட்டுக்குக் கீழே, மேலே என்கிற பாகுபாடு இல்லாமல், மானிய விலையில் தானியம் பெறுவோரின் எண்ணிக்கை விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், டிராக்டர் வைத்திருக்கும், நீர்ப்பாசன வசதியுடன் கூடிய பெரிய பண்ணைகள் வைத்திருக்கும் விவசாயிகள் ஆகியோர் தவிர, ஏனைய அனைவருக்கும் திருத்தப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்க வழிவகை செய்யப்படுகிறது.

புதிய சட்டப்படி, ஊரகப் பகுதிகளில் நான்கில் மூன்று பகுதியினரும், நகர்ப்புறங்களில் ஏறத்தாழ சரிபாதியினரும் மானிய விலையில் உணவு தானியம் பெறும் தகுதி பெறுகிறார்கள். முன்பு ஒரு நபருக்கு மாதம் 7 கிலோ தானியம் என்று இருந்தது, இப்போது மாதம் 5 கிலோ என்று குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய், அரிசி 3 ரூபாய் என்று மானிய விலையில் தானியங்கள் பொது விநியோகத்தின் மூலம் வழங்கப்பட இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

பொது விநியோக அமைப்பு நாடு தழுவிய அளவில் உருவாக்கப்பட்டு, அவை முறையாகச் செயல்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகளாகியும், இந்தியாவின் பல மாநிலங்களில் இன்னும் பொது விநியோகம் முறையாகச் செயல்படுவதுகூடக் கிடையாது. வட மாநிலங்கள் பலவற்றில், நகர்ப்புறங்களில் மட்டும்தான் ரேஷன் கடைகள் இருக்கின்றன.

அதுமட்டுமல்ல. அப்படியே பொது விநியோகம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தென் மாநிலங்களிலும்கூட, முறைகேடுகளின் ஊற்றுக் கண்களாகத்தான் அவை செயல்படுகின்றன. அரசு ஊழியர்களே பொது விநியோகத்திற்கு வரும் தானியங்களைத் தனியாருக்கு வழங்கி, அவர்கள் கொள்ளை லாபமடைய வழிகோலும் நடைமுறைகள் தொடர்கின்றன.

அகில இந்திய அளவில், பொது விநியோகத் துறை, ஊழலும், முறைகேடுகளும் அகற்றப்பட்டு, ஒரு மணி தானியம் விரயமானாலும், தவறாகப் பயன்படுத்தப்பட்டாலும் ஊழியர் தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்படாவிட்டால், உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருவதால் எந்தவித நன்மையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. நிரம்பி வழியும் அரசு தானியக் கிடங்குகளில் உள்ள தானியங்கள், பொய்க் கணக்குக் காட்டப்பட்டு, குறைந்த விலையில் தனியாருக்குத் திருப்பி விடப்படுவதும், அவர்கள் மூன்று ரூபாய் அரிசியை முப்பது ரூபாய்க்கு விற்றுக் கொழிப்பதும்தான் நடக்கும்.

சட்டமெல்லாம் சரி, திட்டமிடல் சரியில்லையே!

தினமணி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum