சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள் Khan11

கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள்

4 posters

Go down

கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள் Empty கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள்

Post by jafuras Mon Jul 15, 2013 7:13 pm

கோடை காலத்தில்

சிறுநீர்
நீர்கடுப்பு
பிரச்சனைகள்..

கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும்.கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது.நோய்க்கான அறிகுறிகள்:அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம் போல் உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது.உணவுகள்:இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச் சத்து ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி அவரது உதவியோடு எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.மருந்துகள்:ஹோமியோபதியில் ஆபிஸ் மெல், லைகோபோடியம், காந்தாரிஸ், பெர்பெரிஸ் வல்காரிஸ், ஹய்ட்ரஜ்யா போன்ற மருந்துகள் சிறுநீர்க் கடுப்பிற்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுப்பதற்கும் மிகச் சிறந்தவை.


கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள் 1014266_547581171954131_363960639_n
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள் Empty Re: கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள்

Post by *சம்ஸ் Mon Jul 15, 2013 8:11 pm

பயனுள்ள சிறந்த மருத்துவ கட்டுரை பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள் Empty Re: கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள்

Post by Muthumohamed Wed Jul 17, 2013 1:08 am

நல்ல பதிவு ஆனால் இங்கு இப்போது ஒரே குளிர்தானுங்க
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள் Empty Re: கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள்

Post by *சம்ஸ் Wed Jul 17, 2013 1:53 am

Muthumohamed wrote:நல்ல பதிவு ஆனால் இங்கு இப்போது ஒரே குளிர்தானுங்க

அறிந்து வைத்துக் கொண்டால்  தேவை ஏற்படும் போது சிரம படவேண்டியதில்லை முஹமட் அத்தோடு மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க முடியும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள் Empty Re: கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள்

Post by ahmad78 Wed Jul 17, 2013 5:37 pm

அறிய வேண்டிய தகவல்கள்.

பதிவிடும்போது ஒரே பாராவாக இல்லாமல் பிரித்து பதிவிட்டால் பார்க்க நன்றாக இருக்கும். படிக்கவும் ஆர்வம் ஏற்படும்.

உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள் Empty Re: கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள்

Post by *சம்ஸ் Wed Jul 17, 2013 5:43 pm

ahmad78 wrote:அறிய வேண்டிய தகவல்கள்.

பதிவிடும்போது ஒரே பாராவாக இல்லாமல் பிரித்து பதிவிட்டால் பார்க்க நன்றாக இருக்கும். படிக்கவும் ஆர்வம் ஏற்படும்.

உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும்.

 நானும் இதை ஆமோதிக்கிறேன்.!_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள் Empty Re: கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள்

Post by jafuras Sat Jul 20, 2013 3:45 am

:”@: :”@: :”@:
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள் Empty Re: கோடை காலத்தில் சிறுநீர் நீர்கடுப்பு பிரச்சனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum