சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

வாழ்க்கையில் விரக்தியா.... Khan11

வாழ்க்கையில் விரக்தியா....

Go down

வாழ்க்கையில் விரக்தியா.... Empty வாழ்க்கையில் விரக்தியா....

Post by gud boy Sat 28 Dec 2013 - 13:08

ஈமானின் வாளைக் கூர்மையாக்குதல்

வாழ்க்கையில் விரக்தியா.... Sharpening
பொறுமையாளர்களுக்கு நற்செய்தி

‘நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்.  ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நற்செய்தி கூறுவீராக!’[அல் குர்ஆன்,2:155]
நீங்கள் எப்போதாவது நோயினால், பிரியமானவர்களின் இழப்பினால், வேலையின்மையால், வேலையிழப்பினால், அல்லது பண இழப்பினால் சோதிக்கப்பட்டுள்ளீர்களா? உங்கள் வாழ்க்கை துன்பங்களாலும், சோதனைகளாலும் சிதைந்துவிட்டதாகத் தோன்றுகிறதா?  உங்களுடைய வாழ்வை அர்த்தமற்றதாக நினைக்கிறீர்களா?  உங்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணை கிடைக்காமல், அல்லது உங்கள் துணைவரோடு கடினமான உறவு அல்லது, உங்களுக்குக் குழந்தை இல்லை போன்ற காரணங்களால் விரக்தியாக இருக்கிறீர்களா? சில சமயம், இனிமேல் தாங்க முடியாததால் நீங்கள் மரணத்தைக் கேட்கிறீர்களா?
‘(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.”என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும் நற்கிருபையும் உண்டாகின்றன.  இன்னும் இவர்கள் தாம் நேர்வழியை அடைந்தவர்கள்.’’[அல் குர்ஆன், 2:155-157]
இன்பத்திலும், துன்பத்திலும் அல்லாஹ்வின் உதவி தேடுதல்
நபி (ஸல்) அவர்களுடைய சுன்னாவின்படி, நாம், துன்ப நேரத்தை விட,  இன்ப நேரத்தில் தான் அதிக நேரம் அல்லாஹ்வை வழிபட வேண்டும்.  இது தான் நாம் அல்லாஹ்விடம் நன்றியோடு இருக்கிறோம் என்பதற்கு மிகப்பெரிய அடையாளம். அவனுடைய அடிமைகள் நன்றியில்லாமல் இருக்கும்போது அல்லாஹ் அதனை வெறுக்கிறான்.  துரதிருஷ்டவசமாக, நம் உம்மத்தின் நிலை எதிர்மறையாக உள்ளது. அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்காக நன்றிப்பெருக்கில் கண்ணீர் விடுவதன் மூலம் நாம் நன்றியைத்தெரிவிப்பதில்லை.  மாறாக, நாம் துவண்டிருக்கும்போது தான் அதிகமாகத் தொழுகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் இரவு முழுதும் கண்விழித்து, கால் வீங்கி, அவர்களுடைய் தாடி கண்ணீரால் நனையும்வரை அழுது தொழுது கொண்டிருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘அல்லாஹ் உங்களுடைய முன், பின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்திருக்கும்போது, நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’எனக் கேட்டபொழுது நபி (ஸல்) அவர்கள், “நான் ஒரு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?”என்று கேட்டார்கள்
நாம் சிரமங்களுக்குள்ளாக்கப்படும்போது, நாம் ஒருவனும் ஏகனுமாகிய அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும்.  ஆனால் ஏன்? ஏனென்றால், அவன் உங்களுடைய பொறுப்பாளனும், பாதுகாவலனும் ஆவான்.அவன் தான் மிக்க அன்புடையவன், உங்களுக்கு தொடர்ந்து உணவளிக்கிறான், நீங்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவு அருட்கொடைகளை வழங்குகிறான்.
‘நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்.  அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கிறான்.’[அல் குர்ஆன்14:34]
கவலைப்படாதீர்கள்! ‘அல் வக்கீல்’‘பொறுப்பாளன்’உங்களோடு இருக்கிறான்.
உலக முழுதும் உங்களுக்கெதிராக இருந்தாலும், அல்லது அவர்கள் அனைவரும் ஒரு இடத்தில்ஒன்று சேர்ந்து உங்களுக்கு உதவ நினைத்தாலும், அதில் ஒருவருக்குக்கூட உங்களை ஆபத்திலிருந்தும், இடரிலிருந்தும் காக்க முடியாது.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பிலிருந்து– நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். அவர்கள் கூறினார்கள்: ‘இளைஞனே, நான் உனக்கு சில வார்த்தைகளை [அறிவுரைகளை] கற்றுத்தருகிறேன்: அல்லாஹ் (இறைநெறியை)வின் விஷயத்தில் கவனமாக இரு, அல்லாஹ் உனக்குப் பாதுகாவலான இருப்பான்; அல்லாஹ்வின் விஷயத்தில் கவனமாக இருக்கும்போது, அல்லாஹ்வின் அருளை உன் கண் முன் பார்ப்பாய்! நீ உதவி கேட்க வேண்டுமென்றால் அல்லாஹ்விடமே கேள்.  அறிந்து கொள், சமுதாயம் முழுதும் ஒன்று கூடி உனக்கு நன்மை செய்திட முயன்றாலும் அவர்களால் உனக்கு நன்மையளித்திட முடியாது.  ஆனால் உனது விதியில் இறைவன் எந்த அளவு எழுதியுள்ளானோ அந்த அளவு தான் அவர்களால் உனக்கு நன்மை அளிக்க முடியும்.  அதேபோல் அவர்கள் ஒன்று திரண்டு உனக்குத்தீமை செய்ய முயன்றாலும், அவர்கள் உனக்கு எந்தத்தீங்கையும் செய்திட முடியாது.  ஆனால் உனக்கு எந்த அளவு இழப்பு ஏற்பட வேண்டும் என இறைவன் தீர்மானித்து இருக்கிறானோ அந்த அளவுதான் அவர்கள் உனக்குத் தீங்கிழைத்திட முடியும். எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன, பக்கங்கள் உலர்ந்து விட்டன.[திர்மிதி]
“சோதனைகள்”என்ற பெயரிட்டு அல்லாஹ்விடமிருந்து  பரிசுகளும் அருட்கொடைகளும்
சற்றே கற்பனை செய்து பாருங்கள் – அல் வதூத் (மிக்க அன்புடையவன்) உங்களை உங்கள் தாய், தந்தையரை விட, பிள்ளைகளை விட, அல்லது உலகில் உங்களை விரும்பும் எவரையும் விட அதிகமாக நேசிக்கிறான்.  உங்கள் தாய் உங்கள் விதியை எழுதுவதாக இருந்தால் உங்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய எதையும் எழுதுவது சாத்தியமா? இல்லை.  அப்படியானால், நீங்கள் ஏன் அல்லாஹ் (சுபஹ்) உங்களைச் சோதிப்பது உங்களுக்கு கேடு விளைவிக்க என்று ஏன் எண்ணுகிறீர்கள்?
அழிவுகளும், பேரழிவுகளும் சோதனை, ஆனால் அவை அல்லாஹ்வுடைய அன்பின் அடையாளங்களும் கூட. அவை மருந்துகள் போல் – கசப்பாக இருந்தால் கூட உங்களுக்குப் பிரியமானவர்களுக்குக் கொடுக்கிறீர்கள், என்பது தான் மிக உயர்ந்த விளக்கம்.
மிக உயர்ந்த பரிசு மிக உயர்ந்த சோதனையோடு வருகிறது.  அல்லாஹ் மக்களை விரும்பும்போது அவர்களைச் சோதிக்கிறான். எவர் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வின் திருப்தியை வெல்கிறார் ஆனால், எவர் திருப்தி இல்லாமல் இருக்கிறாரோ அவர் அல்லாஹ்வின் கோபத்தைச் சம்பாதிக்கிறார். [திர்மிதி (2396) இப்னு மாஜா (4031]
அல் ஃபதல் இப்னு சஹ்ல் கூறினார்கள்: ‘துன்பங்களில் ஒரு நற்பேறு இருக்கிறது என்பதை ஒரு அறிவுள்ள மனிதன் புறக்கணிக்கக்கூடாது. அவை பாவங்களை அழிக்கின்றன, பொறுமையாக இருந்ததற்க்காக நற்கூலி பெறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது, அலட்சியப்போக்கை மாற்றுகிறது, ஆரோக்கியமாக இருக்கும்போது அல்லாஹ்வின் அருட்கொடையை நினைவு படுத்துகிறது, பாவமன்னிப்பு தேட வைக்கிறது, தர்மம் அளிக்க தூண்டுகிறது.’
இறுதி வார்த்தைகள்
துன்ப நேரத்தில் பொறுமை (ஸபர்) காப்பது ஒரு பொற்கொல்லனின் தீ போன்றது – அது தங்கத்தில் உள்ள அசுத்தங்களைப் போக்கி தூய்மையாக்கிறது.  தன்னுடைய அடியார்களின் இக்லாஸையும், யகீனையும் உலகத்திற்கு முன்னால் வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் (சுபஹ்) உபயோகிக்கக் கூடிய பரிட்சை தான் சோதனைகளும், துன்பங்களும். அதன் மூலம் முஹ்ஸினூன் (நற்செயல் புரிபவர்கள்) தங்களுடைய ஈமான் என்ற வாளைக் கூர்மைப்படுத்துகிறார்கள்.  அல்லாஹ் (சுபஹ்) தனக்கு மிகப்பிரியமான அடியார்களின் இந்த வாள் எப்போதும் திகைப்பூட்டுவதாகவும், பள பளப்பாகவும், இருக்க வேண்டும் என விரும்புகிறான். ஏனென்றால், தயாராக இருக்கும் ஷைத்தானின்கண்கள், இந்த மகத்தான வாளின் பளபளப்பில் குருடாகும். அதனால் தான் அல்லாஹ்(சுபஹ்) இப்லீசின் பகிரங்க சவாலுக்கு பதிலளிக்கும்போது கூறுகிறான்:
நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை – உன்னைப்பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர.’ [அல் குரான் 15: 42]
அல்லாஹ்வின் ஔலியாக்கள், துன்பங்களும், சோதனைகளும், தங்களுடைய ஹுப்புத்துன்யா (உலகின் மேல் ஆசை)வை விட ஹுப்புல்லாஹ் (அல்லாஹ்வின் மேல் பிரியம்)வை உயர்த்தக்கூடிய அரிய சந்தர்ப்பமாகக் கருதுவார்கள்.
சகோதரி நஸிரா உஸ்மானி, பி.எஸ்.ஸி. எஞ்சினியர், எம்.பி.ஏ. (இஸ்லாமிய கல்வி இளங்கலை மாணவி), அல்லாஹ் (சுபஹ்) வின் முழு நேர அடிமை. அல் ஹம்துலில்ல்லாஹ்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum