சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 12:18 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm

» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm

» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm

» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm

» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm

பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்! ( பெண்களுக்குகான பதிவு ) Khan11

பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்! ( பெண்களுக்குகான பதிவு )

3 posters

Go down

பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்! ( பெண்களுக்குகான பதிவு ) Empty பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்! ( பெண்களுக்குகான பதிவு )

Post by *சம்ஸ் Sun Feb 23, 2014 9:18 pm

பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே ‘சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதைவெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.
இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும்.
கர்ப்பப்பை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.
வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர் போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் குணம் நாட்பட நாள்பட நிறமும் மாறுபடும்.
இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு வகையான நோய்.
வகைகள்:
* உடல் மாற்றங்களால் ஏற்படுவது – Physiological Leucorrhoea (உதாரணம் உடலுறவிற்க்கு முன்பு, மாதவிடாய்க்கு முன்பு, காம உணர்வுகள் ஏற்ப்படும் போது)
* நோயால் அல்லது நோய்த்தொற்றால் – Pathological Leucorrhoea ஏற்படுவது வெள்ளைப் படுதல்.
* நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள்:
* பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்.
* வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் சுரத்தல்.
* முட்டை வெள்ளைக்கரு போலவோ, மோர் அல்லது தயிர் போன்று கட்டி கட்டியாக கூட படலாம்.
* சிலருக்கு தண்ணீர் போன்றோ, பால் போலவோ கூட இருக்கும்.
* வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் ஏற்படுதல்.
* மிகுந்த எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல்
* வெள்ளைப் படுவதால் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாதல்.
* இடுப்பு வலி, முதுகு வலி.
* உடல் மெலிந்து போதல். இளைத்தல்.
* இந்நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் இறங்குவதற்கு முன்போ பின்போ வெண்ணிறத்துடன் சீழ்போல் வெளிப்பட்டு சிறுநீர் போகும் போது எரிச்சலை ஏற்படுத்தும்.
* உடல் மெலிந்து இடுப்பு, கை, கால்கள், உடல், கணுக்கால், தசை அனைத்து முட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும்.
* உடல் நலிவடைந்து விரைவிலேயே களைப்படையச் செய்வதால் மாடிப்படி ஏறுவதற்கும், இடுப்பில் தண்ணீர் தூக்குவதற்கும் முடியாது.
* பிறப்பு உறுப்புகளில் அறிப்பு, புண் ஏற்படுவதோடு உஷ்ணம் அதிகமாவதால் வயிற்றைப் பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, கண்களைச் சுற்றி கருவளையம், மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி ஆகியவையும் ஏற்படும்.
* மாதவிலக்கு சரிவர வராமல் இருப்பது என்பது உட்பட பல அறிகுறிகளைக் கூறலாம்.
* இந்த வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பல பெண்கள் வெளியில் செல்ல வெட்கப்பட்டு மருத்துவரை அணுகுவதில்லை. அதன் விளைவு கர்ப்பபையை அகற்றுவதோடு கர்ப்பபை புற்று நோயால் ஏற்படக் கூட காரணமாகிறது.
* பொதுவாக ஒரு சில பெண்களுக்கு வயதிற்க்கு வந்த நாள் முதலே வெள்ளைப் படுதல் இருக்கும்.
இந்த நோய் வருவதற்கான காரணங்கள்.
* தவறான உணவுப் பழக்கங்கள்.
* கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல்.
* சுகாதாரமற்ற உள்ளாடைகள்.
* சுய இன்பம் காணுதல்.
* மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல்.
* ஊளை சதை உள்ளவர்கள் ரத்த சோகை உள்ளவர்கள்.
* உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் ஏற்படும் பெண்கள்.
* கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்கள்.
* சிலருக்கு பூஞ்சை நோய் தொற்றால் வெள்ளைப்படலாம்.
* ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.
* தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படலாம்.
* சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.
* அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.
* மாதவிடாய் நின்றவர்களுக்கும் வயதானவர்களுக்கும் வரும் வெள்ளைப்படுதல் மிக ஆபத்தானது, இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும்.
* எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
வெள்ளைப்படுதலை போக்குவதற்கு.
* பொரித்த படிகாரம், மாசிக்காய், வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சீழ்வெள்ளை, ரத்த வெள்ளை குணமாகும்.
* இளநீரில் ஒரு ஸ்பூன் சந்தனத்தூளை ஊற வைத்து, அந்த நீரை வடித்துப் பருகி வரலாம். .
* திப்பிலி 5 பங்கு, தேற்றான் விதை 3 பங்கு கலந்து நன்றாய்ப் பொடித்து, அதில் 4 கிராம் எடுத்துக் கழுநீரில் 3 நாட்கள் சேர்த்து உண்ணலாம்.
* ஓரிதழ் தாமரை இலை, யானை நெருஞ்சில் இலை இவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து அருந்தலாம்.
* பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, நற்சீரகம் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம்.
* சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
* கட்டுக் கொடி மூலிகையை நன்கு அரைத்து எருமை தயிரில் கரைத்து சாப்பிட வேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நோய் தீர்ந்து விடும்.
* வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.
* அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.
* வெள்ளைப்படுதலால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த இலுப்பை புண்ணாக்குடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து தூளாக்கி எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்து வெந்நீரால் கழுவ வேண்டும்.
* தென்னம்பூ இரண்டு பிடி, உதிர மரப்பட்டை சிறுதுண்டு இவை இரண்டையும் நன்கு இடித்து பாத்திரத்தில் வைத்து மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி ஒரு டம்ளராக வற்றியவுடன் ஆற வைத்து வடிகட்டி குடித்தால் சுமார் 25 நாட்களுக்குள் வெள்ளைப்படுதல் குணமாகும்.
* அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகலாம்.
* பொடுதலை இலையுடன், சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
* கைப்பிடி அளவு வெள்ளறுகுடன் 5 மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தலாம்.
* இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.
* ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.
நோயைத் தவிர்க்க:
* உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
* உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.
* சத்தான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவு முறைகள்:
* உணவில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* சரியான நேரத்தில், உப்புக் காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.
* எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்கள் சாப்பிடலாம்.
* மசாலா பொருட்கள், காபி, டீ, புளியை தவிர்த்தல் நல்லது.
* இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.
இந்த நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
* தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.
* பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.
* பச்சை வாழைக்காயை இடித்து, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கால ரத்தப்போக்கு கட்டுப்படும்.
* நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.
* புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது!
* மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.
* கொள்ளுவின் அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம்.
* புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.
* வேப்பமரப் பட்டை, பூ, வேர், காய், பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்!
* பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்!
* உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.
நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
நன்றி
பரமக்குடி சுமதி 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்! ( பெண்களுக்குகான பதிவு ) Empty Re: பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்! ( பெண்களுக்குகான பதிவு )

Post by பானுஷபானா Tue Feb 25, 2014 2:19 pm

பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்! ( பெண்களுக்குகான பதிவு ) Empty Re: பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்! ( பெண்களுக்குகான பதிவு )

Post by ராகவா Tue Feb 25, 2014 10:19 pm

மிகவும் அருமையான பதிவு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்! ( பெண்களுக்குகான பதிவு ) Empty Re: பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்! ( பெண்களுக்குகான பதிவு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum