சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Today at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24

» பல்சுவை 5
by rammalar Today at 17:48

» பல்சுவை - 4
by rammalar Today at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

பாம்பு விஷம் Khan11

பாம்பு விஷம்

2 posters

Go down

பாம்பு விஷம் Empty பாம்பு விஷம்

Post by ahmad78 Sun 14 Sep 2014 - 11:07

'ஒரு விஷயம் தெரியுமா? பாம்பு கடித்த ஒருவர் அதன் விஷத்தால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் 'பாம்பு கடித்துவிட்டதே’ என்ற அதிர்ச்சி காரணமாகப் பாதிப்படைகின்ற நிகழ்வுகளே இங்கு அதிகம். 
ஆம், எல்லாப் பாம்புகளுமே விஷத்தன்மை கொண்டவை அல்ல. இந்தியாவில் காணப்படும் சுமார் 200 வகைப் பாம்புகளில் நச்சுத்தன்மை கொண்டவை வெறும் 52 வகை மட்டுமே. தமிழ்நாட்டில் உள்ள பாம்புகளில் கட்டு விரியன், கண்ணாடி விரியன், ரம்பச் செதில் கொண்ட விரியன், நாகப் பாம்பு, பவழப் பாம்பு, ராஜநாகம் போன்றவைதான் கொடிய விஷம் கொண்டவை.
கடித்த பாம்பைப் பொருத்து பாதிப்பு ஏற்படும். உரிய தருணத்தில் சரியான முதல் உதவி அளிக்கப்படாததால் இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கின்றன. பாம்பு கடித்தவர்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய முதல் உதவிகள்பற்றி பொது மருத்துவர் டாக்டர் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.
பாம்பு விஷம் P43
''ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் டாக்டர்?''
''கடிபட்ட இடத்தில் கடுமையான வலி மற்றும் வீக்கம், ரத்தம் வடிதல், எரிச்சல், பேதியாகுதல், அதிகபாம்பு விஷம் P42அளவில் வியர்ப்பது, கண் பார்வை மங்குவது, கை - கால்கள் மரத்துப்போவது, தாகம், வாந்தி, காய்ச்சல், தசைகள் கட்டுப்பாட்டை இழப்பது, வலிப்பு, நாடித் துடிப்பு தாறுமாறாக எகிறுவது, சோர்வு, மயக்கம் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட அறிகுறிகள் ஏற்படலாம்.''
''ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்குச் செய்ய வேண்டிய முதல் உதவிகளைப் பற்றிச் சொல்லுங்களேன்?'
''கடிபட்டவரைச் சுற்றிக் கூட்டம் போட்டுக் காற்றோட்டத்தைத் தடுக்கக் கூடாது. கடிபட்டவர் சுய நினைவோடு இருக்கும்பட்சத்தில், அவருக்கு ஆறுதல் மற்றும் தைரியம் அளிக்கும் வகையில் பேச்சு கொடுக்கலாம்.
பாம்பு கடித்த இடத்தில் அதனுடைய பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்தப் பகுதியைச் சுத்தமான தண்ணீரினால் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். கடிபட்ட இடத்தைச் சற்றுத் தூக்கி உயரமாக வைத்திருக்க வேண்டும். காயத்துக்கு இரண்டு முதல் நான்கு அங்குலம் மேலாக உள்ள பகுதியில், ஈரமானத் துணியைக்கொண்டு அழுத்திக் கட்டு போட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் காயத்தின் மீது மஞ்சள் போன்ற பொருட்களைப் பூசக் கூடாது. கடிபட்ட இடத்தை அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதைவிடுத்து, சினிமாக்களில் காட்டப்படுவதைப் போலக் கடிவாயில் வாயை வைத்து விஷத்தை உறியக்கூடாது. கூரிய ஆயுதங்கள் மூலம் கடிபட்ட இடத்தைக் கீறவும் கூடாது. ஏனென்றால், காயத்தை வைத்துதான் எந்த வகை பாம்பு கடித்துள்ளது, கடி ஆழமாக இருக்கிறதா, கீறலா என்பதை எல்லாம் அறிந்துகொள்ள வேண்டும்'' என்று விவரித்தார் டாக்டர் ஸ்ரீனிவாசன்.
''பொதுவாக காடுகளை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்களும் ட்ரெக்கிங் செல்பவர்களும் பாம்புக் கடிக்கு அதிகமாக ஆளாகிறார்கள். பாம்புக் கடியைத் தவிர்க்க எச்சரிக்கையாக இருப்பது எப்படி?' என்று தமிழ்நாடு வனப் பயிற்சிக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் பெருமாளிடம் கேட்டோம்.
''ட்ரெக்கிங் போகும் சமயத்தில், குழிகளுக்குள்ளோ மரப் பொந்துகளுக்குள்ளோ கை கால்களை விடக் பாம்பு விஷம் P43aகூடாது. உயரமான புற்களுக்கிடையில் நடப்பதைத் தவிர்க்கலாம். பாறைகளுக்கிடையிலும் பாம்புகள் இருக்கும் என்பதை மறக்கக் கூடாது. இரவில் நடமாடும்போது கையில் டார்ச் விளக்குடன் செல்வது நல்லது' என்றார்.
நாட்டு வைத்தியர்கள், பாம்புக்கடிக்கு முதல் உதவியாகச் 'சர்ப்ப கந்தி’ என்னும் மூலிகையின் வேரைப் பொடி செய்து உட்கொள்ளக் கொடுப்பார்கள். ''பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் ஆழியாறு வன மரபியல் பூங்காவில், இந்தச் செடிகள் விலைக்குக் கிடைக்கின்றன. விலை 3 ரூபாயில் இருந்து 10 ரூபாய்க்குள்தான். வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கலாம். சர்ப்ப கந்திச் செடியின் வேரை வால்மிளகுடன் சேர்த்துப் பொடி செய்து கடிவாயின் மேல் தடவுவதோடு, உட்கொள்ளவும் கொடுக்கலாம்'' என்கிறார் மூலிகை வளர்ப்பில் அனுபவம் மிக்கவரான ஷாஜஹான்.
வீடு மற்றும் தோட்டங்களில் இருக்கும் பல விதமான பாம்புகளையும் பிடித்து வனப் பகுதியில் விடுவதில், ஊட்டியைச் சேர்ந்த சாதிக் வல்லுநர். 'ஸ்னேக் சாதிக்’ என்றால், ஊட்டியில் எல்லோருக்கும் தெரியும். அவருடைய அனுபவம் இது:
''நான் பாம்புகளைப் பிடிக்கப் போகும்போது ஹோமியோபதி மருந்து ஒன்றையும் கையில் வைத்திருப்பேன். யாரையாவது பாம்பு கடித்திருந்தால், கடித்த இடத்தில் இந்த மருந்தின் சில துளிகளை வைப்பதோடு, அரை டம்ளர் தண்ணீரில் பத்து சொட்டுக்கள் இந்த மருந்தைவிட்டு மணிக்கு ஒரு முறை குடிக்கவும் கொடுப்பேன். விஷத்தின் பாதிப்புக்குச் செய்யப்படும் இந்த முதலுதவி மிகவும் பலன் தரும். அனுபவம் இல்லாமல் பாம்பு பிடிக்கப் போகாதீர்கள். பாம்பிடம் இருந்து குறைந்தது 15 அடி தூரத்தில் இருங்கள். சாக்குப் பைக்குள் இருந்தபடியேகூடச் சில பாம்புகள் கடிக்கும் என்பதை மறக்காதீர்கள்'' என எச்சரிக்கிறார் சாதிக்.
விகடன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாம்பு விஷம் Empty Re: பாம்பு விஷம்

Post by Nisha Sun 14 Sep 2014 - 11:24

பாம்பு என்ன கரப்பான் பூச்சி , பல்லி என்றாலே எனக்கு பயம்!

நாய் பூனை என்றாலே வீட்டிலிருக்கும் மேசைக்கு மேல் ஏற் நிற்பேன். அதனால் நான் இந்தப்பதிவை படிக்கவில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum