Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
+2
கமாலுதீன்
ahmad78
6 posters
Page 1 of 1
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டு விடுவார்கள். அப்படியே ஒரு 5ஆண்டுகள் கழித்து பார்த்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளுவிதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு, களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொளுத்தவன், கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பழமொழிகள் மூலம் மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது. அதாவது மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும். மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும். ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப் பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும்
சிலர் கூறுகின்றனர்.
கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணம்:
கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப் புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.
வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.
குதிரைகள் பலமைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்கமாட்டார்கள். கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச்சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போய்விடும்.
அப்படி ஒரு அருமையான மருத்துவகுணம் இந்த கொள்ளுக்கு உண்டு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர் கள் வரை அனைவரும் அருந்தலாம். குளிர்காலத்தி்ல் தான் அதிகம் சளிபிடிக்கும். அந்த காலக்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது. சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும். அதைவிட ராத்திரி ஒரு கைப் பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளுவை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியைபோட்டால் அருமையாக இருக்கும். இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3481
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
தொப்பைக்கும் எனக்கும் பலகோடி மைல்கல் தூரம்.
பயனுள்ள தகவல். நன்றி.
பயனுள்ள தகவல். நன்றி.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
நிஜம் தான்! கொள்ளை கொள்ளை கொண்டால் நம் நோய்களை கொள்ளு கொல்லுமாம்!
நன்றிங்க வைத்தியரே!
நன்றிங்க வைத்தியரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
கமாலுதீன் wrote:தொப்பைக்கும் எனக்கும் பலகோடி மைல்கல் தூரம்.
பயனுள்ள தகவல். நன்றி.
நிஜமாவா நம்ப முடிய வில்லை வில்லை வில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
கமாலுதீன் wrote:தொப்பைக்கும் எனக்கும் பலகோடி மைல்கல் தூரம்.
பயனுள்ள தகவல். நன்றி.
அவ்வளவு பெரிய தொப்பையா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
கமாலூதின் போட்டோவை போட வைக்க எப்படில்லாம் ஐடியா செய்யிறாங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
Nisha wrote:கமாலூதின் போட்டோவை போட வைக்க எப்படில்லாம் ஐடியா செய்யிறாங்கப்பா!
ஐடியா சூப்பரா இருக்கே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
நல்ல பதிவு....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
"சேனையின் தொப்பையில்லா தோழர்"ன்னு போட்டி நடத்தி எல்லோரும் அவங்க போட்டவ அனுப்பினா, நானும் அனுப்புவேன். கண்டிப்பா பரிசு எனக்குதான்.சுறா wrote:Nisha wrote:கமாலூதின் போட்டோவை போட வைக்க எப்படில்லாம் ஐடியா செய்யிறாங்கப்பா!
ஐடியா சூப்பரா இருக்கே
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
சேனையில் வரும் உறவுகளின் போட்டோ ஏற்கனவே இங்கே இருக்கு சார்?
நீங்க பார்க்கவே இல்லையா?
நீங்க பார்க்கவே இல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
கமாலுதீன் wrote:"சேனையின் தொப்பையில்லா தோழர்"ன்னு போட்டி நடத்தி எல்லோரும் அவங்க போட்டவ அனுப்பினா, நானும் அனுப்புவேன். கண்டிப்பா பரிசு எனக்குதான்.சுறா wrote:Nisha wrote:கமாலூதின் போட்டோவை போட வைக்க எப்படில்லாம் ஐடியா செய்யிறாங்கப்பா!
ஐடியா சூப்பரா இருக்கே
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
நிஷா மேடம் எங்கு உள்ளது...Nisha wrote:சேனையில் வரும் உறவுகளின் போட்டோ ஏற்கனவே இங்கே இருக்கு சார்?
நீங்க பார்க்கவே இல்லையா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» தொப்பையைக் குறைக்க அன்னாசி சாப்பிடுங்கள்
» தொப்பையைக் குறைக்க “டயட்டில்” இருப்பவரா நீங்கள்.
» தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு..!
» ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது. -
» தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி நீச்சல்
» தொப்பையைக் குறைக்க “டயட்டில்” இருப்பவரா நீங்கள்.
» தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு..!
» ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது. -
» தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி நீச்சல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|