சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

சிவராத்திரி பூஜையில் பங்கேற்று ஈசனை தரிசனம் செய்தால்   நோய்கள் நீங்கும்... செல்வம் பெருகும்..! Khan11

சிவராத்திரி பூஜையில் பங்கேற்று ஈசனை தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்... செல்வம் பெருகும்..!

Go down

சிவராத்திரி பூஜையில் பங்கேற்று ஈசனை தரிசனம் செய்தால்   நோய்கள் நீங்கும்... செல்வம் பெருகும்..! Empty சிவராத்திரி பூஜையில் பங்கேற்று ஈசனை தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்... செல்வம் பெருகும்..!

Post by rammalar Fri 8 Mar 2024 - 7:26

சிவராத்திரி பூஜையில் பங்கேற்று ஈசனை தரிசனம் செய்தால்   நோய்கள் நீங்கும்... செல்வம் பெருகும்..! 71c9cbef4664bcca2b2a7f0fb04e0aa7355f92e098b38993e159ac66ccdb1bb4



சிவராத்திரி நாளில் ஒரு காட்டில் பல பறவைகளை கொன்ற 
வேட்டைக்காரன் ஒருவனை பசியுள்ள சிங்கம் ஒன்று துரத்தி 
சென்றுள்ளது.


சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்ற 
வேட்டைக்காரர் வில்வ மரத்தில் ஏறினார். சிங்கம் மரத்தின் 
அடிப்பகுதியில் இரவு முழுவதும் காத்திருந்தது. மரத்திலிருந்து 
தூக்கத்தில் விழுவதைத் தவிர்ப்பதற்காக விழித்திருக்க 
வேட்டைக்காரர் வில்வ மரத்தின் இலைகளை பறித்து கீழே 
இறக்கி போட்டு கொண்டே இருந்தார். 


அப்போது மரத்தின் அடிப்பகுதியில் அமைந்திருந்த ஒரு 
சிவலிங்கத்தின் மீது இலைகள் விழுந்தன. வில்வ இலைகளை 
வழங்குவதன் மூலம் மகிழ்ச்சி அடைந்த சிவன், பறவைகளை 
கொல்வதன் மூலம் வேட்டைக்காரன் செய்த பாவங்கள் 
அனைத்தையும் மன்னித்து வேட்டைக்காரனைக் காப்பாற்றினார். 


இந்த கதை சிவராத்திரியில் வில்வ இலைகளுடன் சிவனை 
வழிபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.


சிவலிங்கத்தின் புராணக்கதை மகா சிவராத்திரியுடன் ஆழமாக 
தொடர்புடையது. மஹா சிவராத்திரி நாளில் தான் சிவன் முதலில் 
ஒரு லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்தினான் என்று 
நம்பப்படுகிறது. அப்போதிருந்து, இந்த நாள் மிகவும் 
புனிதமானதாகக் கருதப்படுகிறது மற்றும் சிவாவின் மகத்தான 
இரவு மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. 


இந்நாளை கொண்டாட, சிவபெருமானின் பக்தர்கள் பகலில்
விரதம் இருந்து இரவு முழுவதும் இறைவனை வணங்குகிறார்கள். 
சிவராத்திரியில் சிவபெருமானை வணங்குவது ஒருவருக்கு 
மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருகிறது என்று கூறப்படுகிறது. 


எனவே இன்று இரவு சிவனுக்கு பால், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட
 அபிஷேகங்கள் நடைபெற்று நான்கு கால பூஜைகள் வெகு 
விமர்சையாக நடைபெறும்.


முதல் கால பூஜை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடை
பெறும். இது ஜோதி சொரூபமான ஈசனின் தலைப்பகுதியை தேடி 
அன்னப்பறவையாய் மாறிய நான்முகன் பிரம்மன் எம்பெருமான் 
ஈசனுக்கு செய்யும் பூஜையாகும். 


மும்மூர்த்திகள் முதல் முப்பது முக்கோடி தேவர்களும் ரிஷிகள் 
யாவரும் உறையும் கோமாதா எனும் பசுவின் மூலம் பெறப்படும் 
பொருட்களால் செய்யப்படும் பூஜை இதுவே. 


இந்த கால பூஜையில் பஞ்ச கவ்வியம் எனப்படும் பசும்பால், பசுந்தயிர், 
பசுநெய், கோமயம், கோசாணம் அபிஷேகம் செய்ய வேண்டும். 
சந்தனம் பூசி மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்து வில்வ அர்ச்சனை 
செய்து தாமரைப்பூவினால் அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். 


நைவேத்தியமாக பாசிப்பருப்பு பொங்கல் படைப்பார்கள். ரிக்வேதமும், 
சிவபுராணமும் பாராயணம் செய்வார்கள். நெய் தீபம் காட்டி முதல் கால 
பூஜை செய்வார்கள். இந்த பூஜையை தரிசனம் செய்பவர்களின் பிறவிப்
பிணி நீங்கும்.


இரண்டாம் ஜாம பூஜை இரவு 9 - நள்ளிரவு 12 மணி வரைக்கும் நடை
பெறும். அக்னியாய் ஒளிர்ந்த சிவபெருமானின் திருவடியை தேடி சென்ற
 மகாவிஷ்ணு ஈசனுக்கு செய்யும் பூஜை இரண்டாம் ஜாம பூஜை. இந்த 
காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படும். பச்சைக்கற்பூரம் 
பன்னீர் சேர்த்து இறைவனை அலங்கரிப்பார்கள். 


வெண்பட்டினால் ஆடை அணிவிப்பார்கள். இந் நேரத்தில் வில்வம், 
தாமரைப்பூ, துளசியினால் அர்ச்சனை செய்வார்கள். இனிப்பு பாயாசம் 
நைவேத்தியம் செய்வார்கள். நல்லெண்ணெய் தீபத்துடன் பூஜை 
செய்வார்கள். 


யஜூர்வேதம் பாராயணம் செய்வார்கள். எட்டாம் திருமுறையில் 
கீர்த்தி திருவகவல் பாராயணம் செய்யப்படும். இந்த பூஜையில் 
பங்கேற்று இறைவனை தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும் செல்வம் 
பெருகும். சிவ அருளுடன் திருமாலின் அருளும் கிடைக்கும்.


மூன்றாவது கால பூஜை நள்ளிரவு 12 - அதிகாலை 3 மணி வரை 
நடைபெறும். மூன்றாம் ஜாம பூஜை காலத்தினை லிங்கோத்பவ காலம் 
என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி 
பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள 
லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். 


அப்பன் ஈசனுக்கு அம்பாள் பார்வதி மன மகிழ்ச்சியோடு செய்யும் 
பூஜைதான் மூன்றாம் கால பூஜை. தேன் அபிஷேகம் செய்து பச்சைக்
கற்பூரம் சாற்றுவார்கள். மல்லிகை, வில்வ இலைகளால் அலங்காரம் 
செய்து சிவப்பு வஸ்திரம் அணிவிப்பார்கள். எள் சாதம் நிவேதனமாக 
படைத்து நெய் தீபம் ஏற்றுவார்கள். 


சாம வேதம் எட்டாம் திருமுறையில் திருவண்டகப்பகுதி பாராயணம் 
செய்வார்கள். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய 
சக்தியும் நம்மை அண்டாமல் இருக்கும் சிவ சக்தியின் அருள் கிடைக்கும்.


நான்காவது கால பூஜை மறுநாள் அதிகாலை 3 மணி காலை 6 மணி
வரைக்கும் நடைபெறும். நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி 
தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் 
அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். 


இந்த காலத்தில் குங்குமப்பூ சாற்றி கரும்பு சாறு, பால் அபிஷேகம் 
செய்வார்கள். பச்சை அல்லது நீல வண்ண வஸ்திரம் சாற்றுவார்கள். 
நந்தியாவட்டை பூக்கள், அல்லி, நீலோற்பவ மலர்களால் அர்ச்சனை 
செய்வார்கள். சுத்தம் நைவேத்தியம் படைப்பார்கள். அதர்வண வேதம், 
எட்டாம் திருமுறையில் போற்றி திருவகவல் பாராயணம் செய்வார்கள். 
தூப தீப ஆராதனை செய்து வழிபடுவார்கள்.


Dailyhunt &
நியூஸ் டி.எம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum