சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து Khan11

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து

2 posters

Go down

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து Empty இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 10:24

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து





இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து S1இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது.
அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் குக் சதம் அடித்தார்.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4
டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லோர்ட்ஸ் மற்றும் டிரென்ட்பிரிட்ஜில்
நடந்த முதல் இரு டெஸ்ட்டிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சில் மிரண்ட இந்தியா முதல் இன்னிங்சில் 224
ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 84 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. காலையில் மழை தூரல்
விழுந்து கொண்டிருந்ததால் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. தலைவர் ஸ்ராசும் (52),
அலஸ்டயர் குக்கும் (27) முந்தைய நாள் ஸ்கோருடன் இந்திய பந்து வீச்சை எதிர்கொண்டனர்.
விக்கெட்டை எளிதில் இழந்து விடக்கூடாது என்பதில் ரொம்ப உஷாராக செயல்பட்டனர். இதனால்
அவர்களின் ஸ்கோர் மெதுவாக நகர்ந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார்
தான் வீசிய முதல் 7 ஓவர்களில் 2 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால்
அவர்களின் ரன் விகிதத்தை இந்திய பந்துவீச்சாளர்களால் ஓரளவு கட்டுப்படுத்த முடிந்ததே
தவிர, நங்கூரும் பாய்ச்சிய இந்த கூட்டணியில் தடுப்பு அரணை சுலபமாக உடைக்க
முடியவில்லை. உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட்டும் இந்திய பந்துவீச்சாளர்களால்
கைப்பற்ற இயலவில்லை.
ஸ்டிராஸ்- குக் ஜோடி இந்த சீசனில் முதல் முறையாக 100 ஓட்டங்களை கடந்தது மட்டுமன்றி,
இங்கிலாந்துக்கு வலுவான தொடக்கத்தை அமைத்து தந்தது. அணியின் ஸ்கோர் 186 ஓட்டங்களாக
உயர்ந்த போது, ஒரு வழியாக இந்த இணையை இந்தியா பிரித்தது. தலைவர் ஸ்ட்ராஸ் 87
ஓட்டங்கள் (176) பந்து, 13 பவுண்டரி) எடுத்த நிலையில், அமித் மிஸ்ராவின் பந்து
வீச்சில் ஸ்வீப் செய்ய முயற்சித்த போது ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் குக்குடன்,
இயான் பெல் கைகோர்த்தார். இயான் பெல், ஓட்டம் எடுப்பதில் துரிதம் காட்டினார்.
தொடர்ந்து துடுப்பாட்ட வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியதால், இங்கிலாந்து அணி எளிதில்
முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.
மறுமுனையில் அபாரமாக ஆடிய குக் தனது 19வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
முந்தைய இரு டெஸ்ட்டில் வெறும் 20 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த குக், இந்த சதத்தின்
மூலம் நெருக்கடியில் இருந்து மீண்டும் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
ஆனால் இதற்கு அடுத்த பந்தில் இயான் பெல் 34 (43 பந்து, 6 பவுண்டரி) பிரவீன் குமாரின்
பந்து வீச்சில் கிZன் போல்டானார். முன்னதாக பெல் 30 ஓட்டங்களில் இருந்த போது
கொடுத்த எளிதான பிடி வாய்ப்பை முதலாவது ஸ்லிப்பில் நின்ற டிராவிட் கோட்டை விட்டது
குறிப்பிடத்தக்கது.
இயான் பெல்லை தொடர்ந்து ஆட வந்த கெவின் பீட்டர்சனும் அதிரடியான ஆட்டத்தை
வெளிப்படுத்தினார். இதனால் இங்கிலாந்தின் ஸ்கோர் வேகமாக உயரத் தொடங்கியது.
வெளுத்துக்கட்டிய கெவின் பீட்டர்சன் 63 ஓட்டங்களில் (78 பந்து, 9 பவுண்டரி, ஒரு
சிக்சர்), விரவீன் குமாரின் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதை தொடர்ந்து 4வது
விக்கெட்டுக்கு இறங்கிய இயான் மோர்கனும் நிலைத்து நின்று அணிக்கு வலு சேர்த்தார்.
மறுபக்கம் குக்கின் ஆட்டம் பிரமிப்பாக இருந்தது.
2வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்
இழப்புக்கு 456 ஓட்டங்கள் குவித்து இருந்தது. அலஸ்டயர் குக் 182 ஓட்டங்களுடனும்
(330 பந்து, 26 பவுண்டரி), மோர்கன் 44 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இது
இந்தியாவை விட 232 ஓட்டங்கள் அதிகமாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து Empty Re: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து

Post by jasmin Sat 13 Aug 2011 - 11:22

பேசாம வாபஷ் வாங்கிக்கிட்டு இந்திய அணி இந்தியாவுக்கு ஓடி வந்துரது நல்லது இல்லைனா பிச்சு ஒதரிப் புடுவானுக இங்கிலாந்து
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து Empty Re: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 12:13

jasmin wrote:பேசாம வாபஷ் வாங்கிக்கிட்டு இந்திய அணி இந்தியாவுக்கு ஓடி வந்துரது நல்லது இல்லைனா பிச்சு ஒதரிப் புடுவானுக இங்கிலாந்து
:cheers: :cheers:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து Empty Re: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum