சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Khan11

கவிதைப் போட்டி முடிவுகள்.

+18
Atchaya
பானுஷபானா
Ibnu Hussain
மதி
பாயிஸ்
puthuvaipraba
புதிய நிலா
gud boy
agilan
யாதுமானவள்
jasmin
அப்துல்லாஹ்
நண்பன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
அப்புகுட்டி
*சம்ஸ்
22 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Empty கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by *சம்ஸ் Sat 10 Dec 2011 - 20:19

First topic message reminder :

முதலாம் இடம்
கவிஞர்:-puthuvaipraba

எட்டும்வரை. . .

உலகில்-
தமிழர்களின் எண்ணிக்கை
மிக மிகக் குறைவு.

வாக்கியம் தாக்கி
அதிர்ச்சியின் மடியில்
ஆச்சரியமாய் விழாதீர்!
தமிழர்தொகை
கணக்கெடுப்பு பட்டியிலை
சரி பார்க்க எழாதீர்!

என் கூற்றுபடி
உயிரோடு இருப்பவர்கள் எல்லாம்
தமிழர்கள் இல்லை.
உணர்வோடு இருப்பவர்கள் மட்டுமே
தமிழர்கள்.

ஆம்.
உலகில்-
தமிழர்களின் எண்ணிக்கை
மிக மிகக் குறைவு.

தமிழா..
தூங்கிக்கிடந்ததுபோதும்
எழு!
உன்னை புதுக்கிக்கொள்ள
உணர்வு குளத்தில்போய்
விழு!

"தமிழர்கள் இளிச்சவாயர்கள்"
என்று பேசுவதை
நீ முதலில் நிறுத்து.
"தமிழர்கள் ஒற்றுமையற்றவர்கள்"
என்று நிலவும் கருத்தை
உன் நடத்தையால் திருத்து.

உலகமொழிகள்
உன்னிடம்
கையேந்துமளவு
உயர் இலக்கியம் செதுக்கு
நம் இனமொழி வரலாற்றை
ஆர்வத்தோடு அறிந்துகொள்ள
உன் ஆயுளின்
ஒரு பங்கு ஒதுக்கு

மூடப்பழங்கதைகளை மற!
தினம்-
புத்தம் புதியதாய் பிற!

எழு!
உயர எழு!
நீ எழவேண்டியது
உலகப்பந்து
உன் கைக்கு
கிட்டும்வரையல்ல. . .
பிரபஞ்சத்தின்
பின்முதுகு
உன் கைக்கு
எட்டும்வரை.

இரண்டாம் இடம்
கவிஞர்:- jasmin

காதல்

காலையின் கதிரவன் ஒளிரட்டுமே

அதில் காலத்தின் விடியல்கள் உதிக்கட்டுமே

கருத்தினில் கவிஞர்கள் குளிக்கட்டுமே

அதில் காவியம் கவிதையாய் உளரட்டுமே

காமத்தின் காரியம் நடக்கட்டுமே

அதில் நாடகம் குழவியாய் பிறக்கட்டுமே

கண்களும் கண்களும் கலக்கட்டுமே

அதில் கலக்கமும் காதலாய் மலரட்டுமே

உயரத்தில் மேகங்கள் உரசட்டுமே

அதில் ஒளிகளில் மின்னல்கள் மிதக்கட்டுமே

உயிர்களில் உறவுகள் உலவட்டுமே

அதில் உதிரத்தின் உணர்வுகள் வடியட்டுமே

உண்மையை ஊமைகள் பேசட்டுமே

அதில் மறைத்திடும் மடமைகள் மறையட்டுமே

உள்ளத்தை உள்ளங்கள் உணரட்டுமே

அதில் உண்மையின் காதல் உதிரட்டுமே

வஞ்சகர் நெஞ்சங்கள் வதங்கட்டுமே

அதில் வன்மமும் வாதமும் வடியட்டுமே

பஞ்சுகள் இழைகலாய் திரியட்டுமே

அதில் பின்னிய ஆடைகள் அணியட்டுமே

கொஞ்சிடும் குழந்தைகள் அழுகட்டுமே

அதில் தாய்மையின் முத்தங்கள் முளைக்கட்டுமே

வஞ்சியர் கன்னங்கள் சிவக்கட்டுமே

அதில் வண்ணத்தின் காதல் மிளிரட்டுமே

பதவிகள் பட்டங்கள் கிடைக்கட்டுமே

அதில் பரிவுகள் பணிவுடன் இருக்கட்டுமே

பாலுடன் பழங்களைப் பருகட்டுமே

அதில் பல்சுவை இனிமைகள் கிடைக்கட்டுமே

பருவத்தின் பார்வைகள் படரட்டுமே

அதில் பாவையின் நளினங்கள் தெரியட்டுமே

பாசத்தின் அன்புகள் அழைக்கட்டுமே

அதில் காதலின் வெற்றி கனியட்டுமே

மூன்றாம் இடம்
கவிஞர்:-Parthi

ஆக்ரா அனாதையாகிறது

ஒரு சமாதியே இங்கு சமாதியாகக் காத்திருக்கிறது!
விருட்சம் ஒன்று விரகாகக் காத்திருக்கிறது!
சரித்திரம் ஒன்று சரியக் காத்திருக்கிறது!
அதிசயம் ஒன்று அஸ்தமிக்கக் காத்திருக்கிறது!

கல்லறையாய் நின்று காதல் சொன்ன மாளிகை
சில்லரைய்யை விழுந்து சிதறப் போகிறது!

கல்லறையில் எழுதப்படும் தோற்றம்-மறைவு - முதன்முறையாக
ஒரு கல்லறைக்காக எழுதப்படப் போகிறது!

காதலின் தூய்மையை இக்கல்லறை விளக்கும்!
காதலற்கெல்லாம் இது கலங்கரை விளக்கம்!
ஈடில்லாப் பெருமையை இனி ஆக்ரா இழக்கும்!
இந்தியர்க்கெல்லாம் இனி இதயம் வலிக்கும்!

யமுனை கேடிழைத்ததால்
காதல் தேவதை தன் வீடிழக்கிறாள்!

நதிக்கரை நகரம் - இனி
நாதியற்ற நரகம்!
தாஜ்மஹால் இல்லாத ஆக்ரா - இனி
இந்தியாவின் சஹாரா!

பொறியியல் சிற்பிகளுக்கோர் பொதுவான வேண்டுகோள்!
அந்த அற்புத மாளிகையை
அன்னாந்து பார்க்க மட்டுமே எங்களுக்கு சம்மதம்!
அதைக் குனிந்து பார்க்கும் கொடூரத்தை
குருதி சிந்தியேனும் தவிர்த்திடுங்கள்!

வில்விடுத்த அம்பாகச் செயல்படுங்கள் விறைந்து!
எங்கள் விசும்பலுக்கெல்லாம் உங்கள் விஞ்ஞானமே மருந்து!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 18:54

Atchaya wrote:புதிய தலைமுறை இளங்கவிஞர்களைத் தேர்வு செய்த தேர்வாளர்களுக்கும், வெற்றியாளர்களான புதுவை பிரபா, ஜாஸ்மின், பார்த்தி ஆகிய மூவர்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களும் அன்பும்......
என்றும் எமது சேனையினை தனி நிகரில்லா செந்தமிழில் சேவை செய்து, சிறப்பாய் வழி நடத்த துணை நிற்க அன்பு வேண்டுகோளுடன் ......
உங்கள் அட்சயா!
வாருங்கள் அட்சயா நலமாக உள்ளீர்களா இணைந்திருங்கள் உங்கள் அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து தாருங்கள் கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 930799 கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by பார்த்திபன் Fri 16 Dec 2011 - 9:22

நண்பன் wrote:
puthuvaipraba wrote:அடடா. . .மகிழ்ச்சி. . மகிழ்ச்சி. மகிழ்ச்சி. .நேற்று மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் (அவன் பிறந்த நாளன்று) கால் பதித்து, ஆனந்த கண்ணீர் வடித்து, ஒருவித நெகிழ்வுணர்வினை அனுபவித்துவிட்டு இன்று வீடு திரும்பி. . .நம் தலத்தில் நுழைந்து பார்க்கையில். . .அடடா. . அடடா. .கவிதைப்போட்டியில் எனக்கு முதல் பரிசு. . .இது அந்த கவிராஜனின் வேலையேதான். . .மகிழ்ச்சிப்பெருங்கடலில். . .நான்.
உடன் வெற்றி பெற்ற மற்ற கவிஞர்களுக்கும், போட்டில் பங்கேற்ற படைப்பாளருக்கும், இப்போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய- பரிசுக்குரியனவற்றை தேர்ந்தெடுத்த அன்புள்ளங்களுக்கும். . .நன்றி. . நன்றி. . நன்றி. . . கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 517195
பெரிய போராட்டத்தின் பின் உங்கள் கவிதை முலிடம் பிடித்தது கவிஞர் பார்த்தி அவர்களும் அருமையாக கவிதை எழுதி இருந்தார் உங்கள் இருவருக்கும் போட்டி அதிகமாக இருந்தது நடுவர்கள் தலையைப் பிச்சிக்கிட்டார்கள் இறுதியில் உங்களுக்கு முதலிடம் கிடைத்தது கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 331844 கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 331844 கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 331844

அன்புள்ள சேனைத் தமிழுலா சொந்தங்களுக்கு,

மூன்றாவது பரிசு பெற்ற
செய்தி அறிந்து முழ மனதும் குளிர்ந்தது. தேர்வு செய்த நல்ல நெஞ்சங்களுக்கு
தேனில் துவைத்த நன்றிகள். முதல் பரிசோடு மோதி விளையாடி முடிவில் மூன்றாவது
பரிசைப் பெற்றேன் எனக் கேட்கும்போது உள்ளபடியே உள்ளம் மகிழ்ந்தேன். முதல்
மற்றும் இரண்டாம் பரிசுக்கான கவிதைகள் வாசித்து வியந்தேன். அருமையான
தேர்வு. பரிசுபெற்ற முன்னோடிகள் இருவருக்கும் என் பணிவான வாழ்த்துகள்.
ஜாஸ்மின் அவர்களின் ஈகைக்குத் தயக்கமின்றி தலை வணங்குகிறேன். வாழ்க உங்கள்
தொண்டு! வாழ்த்து சொன்ன நல்ல நெஞ்சங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்!
செழித்தோங்கட்டும் சேனையின் மேன்மை. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும்
என் வாழ்த்துகள்!

இதயம் நிறைந்த அன்புடன்,
இர.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 16 Dec 2011 - 10:09

அன்புத்தோழரின் வார்த்தையில் மகிழ்கிறது மனம் மிக்க நன்றிகள்
தொடர்ந்து அன்புடனும் இதே நட்புடனும் எமது இலக்கியப்பயணம் தொடரட்டும் மிக்க நன்றிகள்

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 16 Dec 2011 - 10:11

வெற்றியாளர்களுக்கான காசோலைகள் தயாராகிவிட்டது அதன் நகல் நாளை பிரதி செய்து பிரசுரித்துவிடுகிறேன் உரியவர்களுக்கு நற்சான்றிதள்களுடன் பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கப்படும் நன்றி்கள்

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by Atchaya Fri 16 Dec 2011 - 11:11

எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால், வழங்கப்படும் இச் சிறுதொகையினை பெரிய தொகையாக பாவித்து, மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளுங்கள் வெற்றியாளர்களே! ஜாஸ்மின் சகோதரி கூறியபடி, ஏழைகளுக்கு உதவிடும் உள்ளத்தினையும், அவர்களை கைதூக்கி விடும் செயலை இனி வரும் காலங்களில் சிந்தித்து செய்ய கேட்டுக்கொள்கிறேன் என் அன்பு உறவுகளை!.....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by நண்பன் Fri 16 Dec 2011 - 12:14

Parthi wrote:
நண்பன் wrote:
puthuvaipraba wrote:அடடா. . .மகிழ்ச்சி. . மகிழ்ச்சி. மகிழ்ச்சி. .நேற்று மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் (அவன் பிறந்த நாளன்று) கால் பதித்து, ஆனந்த கண்ணீர் வடித்து, ஒருவித நெகிழ்வுணர்வினை அனுபவித்துவிட்டு இன்று வீடு திரும்பி. . .நம் தலத்தில் நுழைந்து பார்க்கையில். . .அடடா. . அடடா. .கவிதைப்போட்டியில் எனக்கு முதல் பரிசு. . .இது அந்த கவிராஜனின் வேலையேதான். . .மகிழ்ச்சிப்பெருங்கடலில். . .நான்.
உடன் வெற்றி பெற்ற மற்ற கவிஞர்களுக்கும், போட்டில் பங்கேற்ற படைப்பாளருக்கும், இப்போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய- பரிசுக்குரியனவற்றை தேர்ந்தெடுத்த அன்புள்ளங்களுக்கும். . .நன்றி. . நன்றி. . நன்றி. . . கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 517195
பெரிய போராட்டத்தின் பின் உங்கள் கவிதை முலிடம் பிடித்தது கவிஞர் பார்த்தி அவர்களும் அருமையாக கவிதை எழுதி இருந்தார் உங்கள் இருவருக்கும் போட்டி அதிகமாக இருந்தது நடுவர்கள் தலையைப் பிச்சிக்கிட்டார்கள் இறுதியில் உங்களுக்கு முதலிடம் கிடைத்தது கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 331844 கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 331844 கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 331844

அன்புள்ள சேனைத் தமிழுலா சொந்தங்களுக்கு,

மூன்றாவது பரிசு பெற்ற
செய்தி அறிந்து முழ மனதும் குளிர்ந்தது. தேர்வு செய்த நல்ல நெஞ்சங்களுக்கு
தேனில் துவைத்த நன்றிகள். முதல் பரிசோடு மோதி விளையாடி முடிவில் மூன்றாவது
பரிசைப் பெற்றேன் எனக் கேட்கும்போது உள்ளபடியே உள்ளம் மகிழ்ந்தேன். முதல்
மற்றும் இரண்டாம் பரிசுக்கான கவிதைகள் வாசித்து வியந்தேன். அருமையான
தேர்வு. பரிசுபெற்ற முன்னோடிகள் இருவருக்கும் என் பணிவான வாழ்த்துகள்.
ஜாஸ்மின் அவர்களின் ஈகைக்குத் தயக்கமின்றி தலை வணங்குகிறேன். வாழ்க உங்கள்
தொண்டு! வாழ்த்து சொன்ன நல்ல நெஞ்சங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்!
செழித்தோங்கட்டும் சேனையின் மேன்மை. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும்
என் வாழ்த்துகள்!

இதயம் நிறைந்த அன்புடன்,
இர.பார்த்திபன்
:”@: :”@: தொடர்ந்து எங்களுடன் இணைந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். :!@!:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by நண்பன் Fri 16 Dec 2011 - 12:16

Atchaya wrote:எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால், வழங்கப்படும் இச் சிறுதொகையினை பெரிய தொகையாக பாவித்து, மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளுங்கள் வெற்றியாளர்களே! ஜாஸ்மின் சகோதரி கூறியபடி, ஏழைகளுக்கு உதவிடும் உள்ளத்தினையும், அவர்களை கைதூக்கி விடும் செயலை இனி வரும் காலங்களில் சிந்தித்து செய்ய கேட்டுக்கொள்கிறேன் என் அன்பு உறவுகளை!.....
நன்றி ஐயா :!+: :!+: :!+:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by ansar hayath Fri 23 Nov 2012 - 19:11

:!@!: அனைவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்...வாழ்க ..வழர்க .. #heart
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by ராகவா Wed 13 Feb 2013 - 9:51

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் @.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by ராகவா Wed 13 Feb 2013 - 9:54

என்ன இப்படி இவ்வளவு நாள் கழித்து வாழ்த்து என்று நினைக்கலாம்...
எல்லாம் ஒரு மகிழ்ச்சிதான்..
இனி இப்படி நடந்தால் எம்மக்கள் மகிழ்ச்சி குறைந்து இருக்க வாய்ப்பில்லை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by மீனு Wed 13 Feb 2013 - 10:16

அச்சலா wrote:என்ன இப்படி இவ்வளவு நாள் கழித்து வாழ்த்து என்று நினைக்கலாம்...
எல்லாம் ஒரு மகிழ்ச்சிதான்..
இனி இப்படி நடந்தால் எம்மக்கள் மகிழ்ச்சி குறைந்து இருக்க வாய்ப்பில்லை.
இனி இப்படி நடந்தால் மகிழ்சிதான் நான்தான் கவிதை எழுத மாட்டேனே நீங்கள் எழுதுங்கள் நான் ரசிக்கிறேன் :.”: :.”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். - Page 4 Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum