சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என்பது வெறும் கட்டுக்கதை!  Khan11

2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என்பது வெறும் கட்டுக்கதை!

2 posters

Go down

2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என்பது வெறும் கட்டுக்கதை!  Empty 2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என்பது வெறும் கட்டுக்கதை!

Post by Muthumohamed Fri 21 Dec 2012 - 8:35

2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழிவடையும் என்ற வதந்திகளில் எந்தவிதமான
உண்மையும் இல்லை என்பதை முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா" மீண்டும்
வலியுறுத்தியுள்ளது.

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பூமிக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்நிறுவனம் திட்ட வட்டமாகக் கூறியுள்ளது.

பூமி
மூன்று நாட்களுக்கு இருளடையும் என்ற கருத்துக்களுக்கோ, பூமியின் மீது
விண்கற்கள் மோதும் என்பதற்கோ எவ்விதமான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களும்
இல்லையென்றும், அவ்வாறான பாரிய அசம்பாவிதங்கள் தொடர்பான கதைகள்யாவும்
கற்பனையில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் என்றும் நாசா நிறுவனம்
தெரிவித்துள்ளது.

மாயன் நாள்காட்டி மீண்டும் ஜனவரி மாதம் முதலாம்
திகதியுடன் மற்றுமொரு நீண்ட காலப் பகுதிக்கு நிலைத்திருக்கும் என்றும் நாசா
தெரிவித்துள்ளது.

உலகம் அழியுமா என்பது தொடர்பில் மக்கள்
மத்தியில் தோன்றியிருக்கும் பல்வேறு கேள்விகளுக்கு நாசா நிறுவனம்
அளித்திருக்கும் பதில்களின் விபரங்கள் வருமாறு,

கேள்வி: 2012ஆம்
ஆண்டில் பூமிக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படலாமா? பல இணையத்தளங்கள் 2012
டிசம்பர் மாதத்தில் உலகம் அழிவடையுமென்று கருத்துத் தெரிவித்துள்ளன?

பதில்:
உலகம் 2012 இல் அழிவடையப்போவதில்லை. எங்கள் பூமி நான்கு பில்லியன்
வருடங்களுக்கு மேலாக மிகவும் பாதுகாப்பாக இருந்து வருகின்றது. உலகின்
முன்னணி விஞ்ஞானிகள் 2012ல் உலகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை
தெரிவிக்கவில்லை.

கேள்வி: 2012ஆம் ஆண்டில் உலகம் அழிவடையும் என்று தீர்க்கதரிசனம் சொன்னதற்கான பின்னணி என்ன?

பதில்:
சுபநேரியன்கள், நிபிரு என்ற விண்கோள் ஒன்றை கண்டுபிடித்ததையடுத்தே இந்த
உலகம் அழிவுறும் கதை ஆரம்பமானது. இந்த விண்கோள் உலகத்தை நோக்கி
நகர்ந்துகொண்டு இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள். இத்தகைய அனர்த்தம்
பூமிக்கு ஏற்படும் என்று 2003 மே மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

அன்று
எவ்வித அழிவும் உலகத்துக்கு ஏற்படாத காரணத்தினால் உலகம் அழியும் என்ற
காலக்கெடு 2012 டிசம்பர் மாதத்துக்கு பின்போடப்பட்டது. பண்டைய மாயன்
நாள்காட்டிக்கு அமைய உலகம் 2012 மாரி காலத்தில் அழியும் என்று
அறிவிக்கப்பட்டது. அதன் மூலமே 2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும்
என்று அறிவிக்கப்பட்டது.

கேள்வி: மாயன் நாள்காட்டி 2012 டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறதா?

பதில்:
உங்கள் சமயல் அறை சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் மாயன் நாள் காட்டியைப்
போன்று உலகம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அழியப்போவதில்லை. மாயன்
நாள்காட்டியும் 2012 டிசம்பர் 21ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதும் இல்லை.
இந்தத் திகதி மாயன் நாள்காட்டியின் நீண்டகாலத்தை நிறைவு பெறுவதை
எடுத்துக்காட்டுகின்றபோதிலும், மாயன் நாள்காட்டி மீண்டும் ஜனவரி மாதம் 1ஆம்
திகதியன்று ஆரம்பமாகும். இதன்மூலம் மீண்டும் ஒரு நீண்ட காலப்பகுதிக்கு
மாயன் நாள்காட்டி நிலைத்திருக்கும்.

கேள்வி: டிசம்பர் 23ஆம் திகதி
முதல் 25ஆம் திகதிவரையான காலப்பகுதியில் பூமி முழுமையாக இருளில் மூழ்கும்
என்று நாசா அமைப்பு அறிவித்துள்ளதா?

பதில்: நாசா அமைப்போ உலகில்
எந்த விஞ்ஞான அமைப்போ இவ்விதம் பூமி இருளில் மூழ்கும் என்று
அறிவிக்கவில்லை. அண்டவெளியில் கோள்கள் ஏதோ ஒரு வகையில் இணையும்போதே பூமி
இருளில் மூழ்கும் என்று கூறப்படுகிறது. அப்படியான எந்தவித இணைவும்
அண்டவெளியில் கோள்களுக்கிடையில் ஏற்படப்போவதில்லை.

கேள்வி:
இப்படியான அனர்த்தத்துக்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று நாசா
அமைப்பின் நிர்வாகி சார்ள்ஸ் போல்டன் தெரிவித்திருப்பதாக வதந்திகள்
பரவுகின்றனவே?

பதில்: மக்கள் எவ்வித ஆபத்தை எதிர்நோக்குவதற்கும்
தயார் நிலையில் இருப்பதற்காகவே இந்த செய்தி விடுக்கப்பட்டது. அரசாங்கமும்
எதற்கும் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்ற போதிலும்,
பூமி இருளில் மூழ்கும் என்று என்றுமே அறிவிக்கவில்லை.

கேள்வி: விண்வெளியில் கோள்கள் ஒன்றிணைவதனால் பூமிக்கு தாக்கம் ஏற்படுமா?

பதில்:
அடுத்த பல தசாப்தங்களுக்கு விண்கோள் ஒன்றிணையப் போவதில்லை. இவ்விதம்
ஒன்றிணையும் சந்தர்ப்பங்களிலும் கூட அதனால் பூமிக்கு ஏற்படக்கூடிய தாக்கம்
உணரக்கூடியதாக இருக்காது. 1962 ல் இவ்விதம் பாரிய விண்கோள்களின் இணைப்பு
இடம்பெற்றது. அதுபோன்று 1982ஆம் ஆண்டிலும், 2000ஆம் ஆண்டிலும் இவை
ஏற்பட்டன. ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும் பூமியும், சூரியனும் அண்டவெளியில்
ஒரே திசையில் ஒன்றிணைவதுண்டு. இது வருடாவருடம் இடம்பெறும் நிகழ்வாகும்.

கேள்வி: விண்கோள்கள் ஒன்றிணைவது பற்றி மேலதிக தகவல்கள் இருக்கின்றனவா?

பதில்:
விண்கோள்கள் விண்வெளியில் அமைந்திருக்கும் ஸ்தானங்கள் 2012 டிசம்பருக்குப்
பின்னர் மாற்றமடையலாம் என்று சில கருத்துக்கள் நிலவுகின்றன. என்னைப்
பொறுத்த மட்டில் ஒரு நல்ல புத்தகத்தை அல்லது ஒரு திரைப்படத்தை பார்த்து
மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறேன். என்றாலும் தொலைக்காட்சி சேவைகள்,
திரைப்படங்கள் ஆகியன விஞ்ஞானத்தின் அடிப்படையிலேயே அறிமுகம் செய்யப்பட்டன.

கேள்வி:
நிபுரு அல்லது எக்ஸ் விண்கோள் அல்லது ஈரிஸ் என்று அழைக்கப்படும்
மண்ணிறத்திலான குள்ளமான விண்கோள் ஒன்று பூமியை நோக்கி நகர்ந்துகொண்டு
இருக்கிறதா? இது பூமியில் அனர்த்தங்களை ஏற்படுத்துவதற்கு எமக்கு
அச்சுறுத்தலாக இருக்கிறதா?

பதில்: நிபுரு மற்றும் ஏனைய விண்கோள்கள்
பற்றிய செய்திகள் இணையத்தளங்கள் கற்பனையில் எழுதி உங்களை ஏமாற்றும்
பொய்யான தகவலாகும். இவற்றை விண்வெளி ஆய்வாளர்கள் கடந்த தசாப்தத்தில்
அவதானித்துள்ளார்கள். இது இப்போது நாம் வெறுமனே எங்கள் கண்களால்
பார்க்கக்கூடியதாக இருக்கும். ஆனால் அப்படியான ஒரு விண்கோள் உண்மையிலேயே
இல்லை. ஆயினும் ஈரிஸ் உண்மையான விண்கோள் ஆகும். இது புளூட்டோ விண்கோளைப்
போன்று ஒரு குள்ளமான சிறிய விண்கோள் ஆகும். இது சூரியமண்டலத்துக்கு அப்பால்
இருக்கும் ஒரு விண்கோள் ஆகும். இது பூமியிலிருந்து நான்கு பில்லியன் மைல்
தொலைவில் இருக்கின்றது.

கேள்வி: துருவங்கள் மாறும் சித்தாந்தம்
என்றால் என்ன? பூமி 150 பாகையிலேயே தன்னைத் தானே
சுற்றிக்கொண்டிருக்கின்றது. இதன் மையம் பல நாட்களில் அல்லது
மணித்தியாலங்களில் தன்னைத்தானே சுற்றக்கூடியதாக இருக்கிறதா?

பதில்:
பூமி தன்னைத்தானே சுற்றுவதில் மாற்றம் ஏற்படுவது அசாத்தியமாகும்.
பூமியிலுள்ள கண்டங்கள் சிறிதளவு அசைவு ஏற்படுவது ஏதோ உண்மைதான். வடதுருவம்
ஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்தது.
அதை வைத்துக்கொண்டு வடதென் துருவங்களின் நிலை மாற்றமடையும் என்று கூறுவது
தவறு. பல இணையத்தளங்கள் இத்தகைய செய்திகளை வெளியிட்டு மக்களை
முட்டாள்களாக்குகின்றன.

இந்த இணையத்தளங்கள் பூமி தன்னைத்தானே
சுற்றுவதிலும், பூமியிலுள்ள புவியீர்ப்பு சக்திக்கும் இடையில் தொடர்புகள்
இருப்பதாக கூறுகின்றன. இந்த புவியீர்ப்பு சக்தி வழமையாக மாறுவ தில்லை.
புவியீர்ப்பு சக்தி சராசரியாக ஒவ்வொரு நான்கு இலட்சம் வருடங்க ளுக்கு
ஒருதடவையே மாற்றமடைவதுண்டு. எனவே, நாங்கள் அறிந்த அளவுக்கு இத்தகைய
புவியீர்ப்பு சக்தியின் பின்வாங்கல் பூமியிலுள்ள உயிரினங்களுக்கு அடுத்த பல
ஆயிரம் ஆயிரம் வருடங்க ளுக்கு மாற்றமடையப் போவதில்லை.

கேள்வி: 2012 பூமி அழிவடையும் என்ற கருத்துக் குறித்து நாசா விஞ்ஞானிகள் என்ன நினைக்கிறார்கள்?

பதில்:
இதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. இவை அனைத்துமே
கற்பனையில் உருவாகிய கட்டுக்கதைகளாகும். இந்தக் கற்பனைக் கதைகளை
மையமாகவைத்து சிலர் நூல்கள், திரைப்படங்கள், விபரண சித்திரங்கள் ஆகியவற்றை
அல்லது இணையத்தளத்தில் செய்திகளை வெளியிடுகிறார்கள்.

கேள்வி: 2012ல் சூரியமண்டத்திலிருந்து ஏற்படக்கூடிய பாரிய சூரிய சூறாவழிகளினால் எமக்கு ஆபத்து ஏற்படுமா?

பதில்:
சோளார் செயற்பாடுகள் சுழற்சியாக வழமையாக இடம்பெறுவதுண்டு. 11
வருடங்களுக்கு ஒருதடவை இது உச்சகட்டத்தை அடையும். அத்தகைய காலகட்டத்தில்
சூரிய மண்டலத்திலிருந்து நெருப்புக்கதிர்கள் வெளியாவதுண்டு. இவை செய்மதி
தொலைத்தொடர்புக்கு தீங்கிளைப்பதற்கான வாய்ப்பு உண்டு.

இப்போது எமது
விஞ்ஞானிகள் செய்மதி தொலைத்தொடர்பை இதிலிருந்து பாதுகாப்பது பற்றி
ஆய்வுகளை நடத்தி வருகின்றார்கள். ஆயினும் 2012ஆம் ஆண்டுக்கும்
இதற்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை. அடுத்த சூரியகதிர்கள் 2012,
2014ஆம் ஆண்டில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இவை பூமியின் வரலாற்றில்
வழமையாக இடம்பெறும் நிகழ்வுகளாகும்.

திவ்யா அபி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என்பது வெறும் கட்டுக்கதை!  Empty Re: 2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என்பது வெறும் கட்டுக்கதை!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 21 Dec 2012 - 8:44

:,;: :!.: :)+:


2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என்பது வெறும் கட்டுக்கதை!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum