சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02 Khan11

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02

3 posters

Go down

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02 Empty இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02

Post by ansar hayath Thu 3 Jan 2013 - 21:14

விழித்துக் கொண்ட இலங்கைச் சோனகரின் மூதாதையர்...

நவீன கால சோனகர் வரலாற்றைப் பொறுத்தவரை, மற்ற எல்லா இனங்கள் போன்றும் ஆசியா எங்கும் வியாபித்துத் தம் காலணித்துவத்தை நிறுவிப் பரப்பியிருந்த ஆங்கிலேயர்களின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறுகளும் அதைத் தொடர்ந்த ஆய்வுகளும் எமது சமூகத்திற்கும் இன்றியமையாத சாட்சியாகவும் சான்றாகவும் இருக்கிறது.

19ம் நூற்றாண்டின் ஆங்கிலேய வரலாற்று ஆய்வுகள்,பதிவுகள் பெரும்பாலான ஆசிய சமூகங்களின் நவீன கால ஆவணங்களின் ஆரம்பமாக இருப்பது போன்றே இலங்கைச் சோனக சமுதாயத்திற்கும் அமைகிறது. அக்காலத்தில் அவர்கள் முன் சமர்ப்பிக்கப்படும் எமது பூர்வீகம் தொடர்பான ஆய்வுகள், அறிக்கைகள், ஆவணங்கள், வரலாறுகள் சவால் மிகுந்ததாகவும், கவனமாகவும், வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்டு அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவும், ஆவணப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டிய கட்டாயத் தேவை அமைந்திருந்தது.
இந்த சவால்களை நம் முன்னோர்கள் எவ்வாறு முகங்கொடுத்தார்கள், நம் தனித்துவத்தை அவர்கள் சபையிலேயே எவ்வாறு எடுத்தியம்பினார்கள், எமது இனத்தின் உரிமைகளை எவ்வாறு வென்றெடுத்தார்கள் போன்றன பற்றிய நமது அறிவு மிக முக்கியமானதாகும்.
இலங்கையில் சோனகர்கள் என்றவுடன் எடுத்த எடுப்பில் அதை கி.பி 8ம் நூற்றாண்டிலிருந்தும் பின்னர் வந்த வரலாறுகளோடும் மாத்திரம் தொடர்பு படுத்திப் பார்த்து வந்த தமிழ் அரசியல் ஆய்வாளர்களைப் பொறுத்தவரை அதற்கு முன்னரும் இலங்கையில் சோனகர்கள் இருந்தார்கள் எனும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்குள் இன்னும் வளரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் அப்படியொரு சமூகம் எம் பெருமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முந்தைய காலத்தில் இலங்கைத் தீவில் இருந்தது என்று ஏற்றுக்கொண்டாலே, சோனக சமூகத்தைத் “தமிழர்” என்று தமக்குள் ஒரு சிறுபாண்மையாக வெளிக்காட்டி, எமது உரிமைகளுக்காக அவர்களிடம் நாங்கள் தங்கியிருக்க வேண்டிய நிலையைக் கட்டிக் காப்பாற்ற அவர்களால் முடியாது போய்விடும்.
இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னராகவே இலங்கையில் சோனகர்கள் சமுதாயம் இருந்தது என்று அறைகுறையாக ஒத்துக்கொள்ள விளையும் சில தமிழ் ஆய்வாளர்கள், தமது நலனைக் காத்துக்கொள்ள, ஒரு வேளை அவர்கள் எல்லோரும் தமிழர்களாகவே இருந்தார்கள், இருந்த பின் இஸ்லாத்தைத் தழுவியதன் மூலம் முஸ்லிம்களாக மாறினார்கள், ஆகவே அவர்கள் தனியினம் அல்ல, தமிழரே என்று வாதிக்க நப்பாசை கொள்கிறார்கள்.
இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னரான தமிழர்கள், இஸ்லாம் வந்து விட்டது என்கிற ஒரே காரணத்திற்காக ஒட்டு மொத்தமாக இலங்கைத் தீவில் முஸ்லிம்களாக மாறியிருக்க வாய்ப்பில்லை என்பதை சிறு பிள்ளையும் ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, சைவர்களாக அல்லது சிலை வணக்க நம்பிக்கையில் இருந்த யாருமே இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம்களாக மாறவில்லை என்று வாதிப்பது நமது நோக்கமல்ல. அப்படி வாதிப்பது மனச்சாட்சிக்குப் புறம்பானது மாத்திரமன்றி வரலாற்றையும் பொய்யாக்குவதாகும்.

தற்கால மனிதர்களான நானோ நீங்களோவாக இருந்தாலும் கூட நமது நம்பிக்கைக்குச் சரியெனப் படாத எதையும் திடீரென நம்பவோ அல்லது நமக்காக நாம் வாழ வரையறுத்துக்கொண் வழி முறைகளை ஒட்டு மொத்தமாக மாற்றவோ செய்யக்கூடிய எதையுமே அவ்வளவு சீக்கிரமாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
அடிப்படையில் நமக்குள் ஒரு கொள்கை மாற்றத்தை உருவாக்கிக்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அந்தக் கொள்கை ஆகக்குறைந்த அளவிலாவது நமக்குள் ஏற்கனவே இருக்கும் சிந்தனைகளுடனும், பழக்க வழக்கங்களுடனும், பண்பாட்டுடனும் ஒத்துச்சென்றாலே தவிர, திடீரென ஒரு புதுமையான கொள்கையை அவ்வளவு சீக்கிரமாக யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதற்கு நமக்கு நாமே சாட்சிகளாகும்.

அந்த வகையிலே அன்றைய அரேபிய சூழ்நிலையிலும் கூட நபிகளாரின் செய்தியை உடனடியாக நம்பியவர்கள் அத்தனை பேரும் ஏதோ ஒரு வகையில் அக்காகல அரேபியரின் சிலை வணக்கம் மற்றும் பல்லிறைக் கொள்கைகள், நம்பிக்கைகளுக்குப் புறம்பானவர்களாகவே இருந்தார்கள் என்பதை வரலாறு நமக்கு எடுத்தியம்பியிருக்கிறது.
இதையே சிறு அடிப்படையாகக் கொண்டு நோக்கினும், இலங்கையில் வாழ்ந்த நபிகளாருக்கு முந்தைய சோனக சமுதாயம், அதிலும் ஆகக்குறைந்தது கி.மு 300ம் நூற்றாண்டளவு வரையாவது மேலை தேசத்தவர்களால் சாட்சியளிக்கப்படும் இலங்கையில் வாழ்ந்த அரேபிய சமுதாயமானது அவ்வளவு சீக்கிரமாக இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதா? அவர்கள் தந்தையர், பாட்டன் மார், முப்பாட்டன்கள் நம்பிவந்த நம்பிக்கைகளை இலங்கை எனும் தீவில் வாழ்கிறோம் என்பதற்காக ஒரே விநாடியில் தூக்கியெறிந்தார்களா? என்ற மிக யதார்த்தமான கேள்வியை நமக்கு நாமே கேட்டுப் பார்த்தோமாயின், அது அவ்வாறிருப்பதை விட, அப்படித்தான் ஒரு அரேபிய சமுதாயம் இலங்கையில் வாழ்ந்து, அந்த சமுதாயம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமலே இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டது, அதுவும் நபிகளாரை நேரில் கண்டு அல்ல, மாறாக தமக்குக் கிடைக்கப்பெற்ற செய்தியின் அடிப்படையில் என்று இன்னும் ஆழமாக நோக்குவமாக இருந்தால், இந்தக் குறிப்பிட்ட சமுதாயம் மாத்திரம் இலங்கை நோக்கி வந்ததற்கும், அவர்கள் இலங்கையிலேயே தங்கியதற்கும், தம் சமூகத்தை உருவாக்கியதற்கும், வாழ்ந்ததற்கும் வேறு ஏதோ ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகப் புரியக்கூடிய விடயமாகும்.

அவ்வாறு அவர்கள் வாழ்ந்ததன் நோக்கம் வியாபாரம் மாத்திரமே என்று வாதிடக்கூடியவர்கள் பின்னர் அவர்கள் பரம்பரையினரின் மனதில் இலகுவாகப் புகுந்து கொண்ட கொள்கையைப் பற்றி சிந்தித்து, அது ஏன் அவ்வளவு இலகுவாக அவர்களை வந்து அடைந்து விட்டது என்பதற்கும் பதில் சொல்ல வேண்டும், அத்துடன் அவர்களைச் சுற்றிலும் பெளத்த மதம், சைவம், இந்து மத்தின் இன்ன பிற வழி முறைகள் மற்றும் இலங்கைத் தீவின் ஆதி குடிகளின் வெவ்வேறு கடவுள் நம்பிக்கைகள் மத்தியில் அவ்வளவு இலகுவாக இஸ்லாம் அவர்களுக்குள் ஏன் புகுந்து கொண்டது? இன்னும் தெளிவாகக் கேட்பதானால் அவர்கள் மூதாதையர்கள் பல கடவுள்களின் நம்பிக்கையைத் தூக்கியெறிந்து ஏக இறைக் கொள்கை அவர்களிடம் சாந்தமாகக் குடி கொண்ட சூட்சுமம் என்ன? என்பதற்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.


எனவே, அப்படித்தான் ஒரு அரேபிய சமுதாயம் இத்தீவிற்கு வந்திருந்தாலும், வாழ்ந்திருந்தாலும் அன்றைய கால கட்டத்தில் அவர்கள் மனதில் “வேறு” ஏதோ ஒரு தாக்கமும் தேவையும் இருந்து அவர்கள் இங்கே வந்திருக்க வேண்டுமே தவிர திடீரெனக் குடிபெயர்ந்தவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். அத்தேவையும் காரணமும் என்னவாக இருக்கலாம் என்பது தொடர்பில் ஒரு சில வரலாற்று விடயங்களையும் மற்றும் நம் நம்பிக்கையின் அடிப்படையிலான சில விடயங்களை ஒப்பிட்டு இவ்வுரைத்தொடரின் பிற்பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

அதன் அடிப்படையாக, ஆகக்குறைந்தது நம் கைகளில் ஆதாரபூர்வமாகக் கிடைக்கக் கூடிய 19ம் நூற்றாண்டின் இறுதிக் கால கட்டங்களிலிருந்து நமது முன்னோர் மற்றும் நம் சமுதாயத்தின் நிலையை அறிந்து கொள்ள முயல்வதே சரியான ஆரம்பமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.


ஆங்கிலேயக் காலணித்துவத்துக்குள்ளான பல நாடுகளில் மிக முக்கியமான நாடு இந்தியாவாக இருந்ததை வரலாறு நமக்கு எடுத்தியம்பியிருக்கிறது. தமது ஆட்சிக்காலத்தின் ஒரு தேவையாக தம் ஆளுமைக்குட்பட்ட நாடுகளில் வாழும் இனங்கள், சமூகங்கள் மற்றும் இன்னபிற வரலாற்று வகையறாக்களையும் ஆராய்ந்து, பதிவுகளை மேற்கொண்டு ஆவணப்படுத்துவதையும் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்து வந்தார்கள்.
அந்த வகையில் R.A.S அல்லது Royal Asiatic Society என அறியப்பட்ட பிரித்தானியாவின் அரச ஆசியக் கழகம் வரலாற்று ஆவணப்படுத்தலில் மிகப் பெரும் பங்கினை வகித்திருந்ததை நாம் அறிந்திருப்பதோடு, அரச ஆசியக்கழகத்தின் இலங்கை வரலாறு, கலாச்சாரம், பண்பாடு மற்றும் இனங்கள் மீதான ஆய்வின் போது ஆங்கிலேய சபையில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஆய்வுகள் நவீன கால வரலாற்றில் முக்கியம் பெறுவதையும் அறிந்திருக்கிறோம்.

அப்பேற்பட்ட இவ்வரச ஆசியக் கழகத்திடம் அன்றைய இன்றைய தமிழர்கள் தம் சமுதாயத்தின் மாபெரும் புத்திஜீவி எனக் கொண்டாடும் திரு. இராமநாதன் மிகக் கவனமாக செதுக்கியெடுத்து சமர்ப்பித்த “இலங்கைச் சோனகர் இன வரலாறு” எனும் ஆராய்ச்சிக்கட்டுரையிலிருந்து நமது விளக்கத்தேடலை ஆரம்பிப்பதே காலத்தின் கடமை என்று கருதுகிறேன்.


நமது விளக்கத் தேடலில் முதற் பகுதியாக திரு. இராமநாதன் பற்றி அவரைத் தம் பிதாவாகக் கொண்ட சைவர்களின் அரச பரம்பரையாகத் தம்மை அடையாளங்காட்டிக்கொள்ளும் யாழ்ப்பாண அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் மற்றும் திரு. இராமநாதன் பற்றித் தகவல் வழங்கும் இன்னபிற இணையத்தளங்களும் விக்கிபீடியா தகவல் சேமிப்பும் கூட அவர் மிகச் சிறந்த “சைவ” ஆர்வலர், அதற்காகவே வாழ்ந்தவர், அதன் பணியில் தன்னை மிக்க சிரத்தையுடன் ஈடுபடுத்திக்கொண்டவர் என்பதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டி நிற்கின்றன.
இந்து மதத்தின் பிரிவான சைவப்பணியில் தன்னை ஆழ்த்தியதோடு மாத்திரமல்லாமல் பெரும்பாண்மை பெளத்தர்களோடு இணைந்து பெளத்த – இந்து மத ஒற்றுமையைப் பேணும் வண்ணம் பாடசாலைகள் மற்றும் இன்ன பிற அமைப்புகளைத் தோற்றுவித்து, சிங்களவர் நலனைக் காப்பாற்றி, தமக்கும் சிங்களவருக்கும் பெரும் நெருக்கத்தை மத ரீதியாக இந்து – பெளத்த நெருக்கமாகவும், இன்னொரு பக்கத்தால் கிறிஸ்தவ சிந்தனைகளையும் அவற்றிற்குள் இணைத்துக்கொண்டு எவ்வாறாயினும் “சோனகர்” தவிர்ந்த ஏனையோரின் இலங்கைக் கூட்டணியை உருவாக்குவதன் மூலம், இலங்கையில் சோனகரைத் தனியான ஒரு இனமாகவோ அல்லது அவர்கள் தனித்துவமானவர்களாகவோ வரலாறு பார்க்கக் கூடாத வண்ணம் திட்டமிட்டுச் செயற்பட்டார் என்பது வரலாற்றில் இன்று அம்பலமாகியிருக்கும் விடயமாகும்.
பெளத்தர்களையும் – இந்துக்களையும் ஒன்றிணைத்துத் தம் அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்ய அவர் எடுத்துக்கொண்ட எந்தவொரு முயற்சியிலும் மிகக் கவனமாக முஸ்லிம்களை அதாவது சோனகர்களை கலக்கவிடாமலும், சோனகர்களை மொழியடிமைகளாகவும், பாரம்பரியமற்றவர்களாகவும், இன ரீதியாக தனித்துவமற்றவர்கள் என்று பறை சாற்றவும் அவர் தன் வாழ் நாளில் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டார் என்பதை அவர் தொடர்பாக பரவாகக் காணப்படும் வரலாற்றுப் பதிவுகள், தகவல்கள் தெளிவாக எடுத்தியம்புகின்றன.
அதன் உச்ச கட்டமாக ஆசிய அரசக் கழகத்தில் அவர் சோனகர் இன வரலாறு தொடர்பாக ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கி ஆங்கிலேயர்களிடம் தனக்கிருந்த செல்வாக்கையும், வசதிகளையும் பயன்படுத்தி சோனக இனத்தின் தனித்துவத்தை முற்றாக அழிக்க விளைந்த போது, வழக்கம் போலவே எல்லாம் வல்ல இறைவன் துணையால் இலங்கைச் சோனகன் விழித்துக் கொண்டான்.
அன்று விழித்தது மாத்திரமன்றி, நம் வரலாறு, நம் பாரம்பரியம், நம் இனத்தின் தனித்துவம், நம் சமுதாயத்தின் நிலை மற்றும், நாம் பெற வேண்டிய மாற்றங்கள், அறிவு என்று ஒவ்வொரு சோனகனையும் சிந்திக்க வைத்தது மாத்திரமன்றி, சோனகர்களின் உரிமை தொடர்பில் பேரார்வமும், சமூக அக்கறையும் கெண்டவராகவும், அவர் போன்றே உயர் அரங்குகளில் நின்று வாதாடி எம் உரிமைகளை வென்றெடுக்கவும் கூடிய நல்ல பல முன்னோடிகளை நாம் காண்பதற்கும் நம் சமூகம் அறிந்துகொள்வதற்கும் தந்தையாக இருந்தவர் எம் பெரு மதிப்பிற்குரிய சோனகத் தலைவர் திரு. ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் அவர்கள் ஆவார்.

அன்று உலகளவில் செல்வாக்கும், அரச ஆசியக் கழகத்தில் பெரும் பதவியும், தனிப்பெரும் திறமை வாய்ந்த சட்ட வல்லுனராகவும் திகழ்ந்த, ஆனால் அடிப்படையில் சோனக இனத்தினை முற்றாகத் தரமிழக்கச் செய்வதில் முனைப்பாகச் செயற்பட்ட திரு. இராமநாதனை அவரது காலத்திலேயே அவரது மன்றிலேயே, அவரது முன் நிலையிலேயே எதிர்த்து, அவர் ஆராய்ச்சியை அங்கம் அங்கமாக முறியடித்த எம் முன்னோர்களை நினைவு கூறுவதும் அவர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் மற்றும் வழி காட்டல்களை சரி வரப் பின்பற்றுவதும் நவீன கால இலங்கைச் சோனகர்களின் கடமையுமாகும்.

அன்று விழித்துக்கொண்ட சோனகன் இன்று வரை தொடர்ந்து விழித்துக்கொண்டு தான் இருக்கிறான், வரலாற்றில் நாம் கண்ட அரசியல் மாற்றங்களை அவர்கள் எவ்வாறு முகங்கொடுத்தார்கள், இன்றைய நம் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எதிர்கால சோனகர்களை அவை எவ்வாறு பாதிக்கும் போன்ற விடயங்கள் பின்னால் அலசப்படவேண்டிய விடயங்களாகும்.

மேலே நீங்கள் படத்தில் காண்பது தான் நவீன கால சோனகர்களின் தனித்துவமிக்க தலைவர் திரு. ஐ.எல்.எம் அஸீஸ் அவர்கள்.

தம் மொழித்திறமையாலும், சிந்தனை நுணுக்கத்தாலும் அன்று திரு. இராமநாதனுக்கு அன்னார் விடுத்த சவால் இன்று வரை எதிர்கொள்ளப்பட முடியாமல் இருக்கும் பொக்கிஷமாகும். ஒரு நூற்றாண்டு வரை எப்படியோ இவை பாதுகாக்கப்பட்டு விட்டன என்றாலும், இனி வரும் காலங்களுக்காக இவற்றை மிக அவதானமாகப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
இத்தலைப்பின் மீதான நமது விளக்கத் தேடலை மேலும் தொடர முன்னர், நம் வாசகர்களும் அனைத்து முஸ்லிம்களும் (சோனகர்களும்) அன்று நடந்தது என்ன? என்று அறிந்து கொள்ள வேண்டியதும் கட்டாயமாகும்.

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02 542878_511107128922589_1891733117_n

எழுத்தாளர் 'மானா'
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02 Empty Re: இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02

Post by *சம்ஸ் Thu 3 Jan 2013 - 21:19

சிறப்பான தகவல் தொடருங்கள் அன்சார் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02 Empty Re: இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02

Post by ansar hayath Thu 3 Jan 2013 - 21:48

:];: சம்ஸ்...
இதை காலத்தின் தேவையாக கருதுகிறேன்...எமது எழுத்தாளர் மானா' அவர்களின் இப்பணி தொடர நானும் இறைவனை வேண்டியவனாக...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02 Empty Re: இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02

Post by *சம்ஸ் Thu 3 Jan 2013 - 21:51

ansar hayath wrote: :];: சம்ஸ்...
இதை காலத்தின் தேவையாக கருதுகிறேன்...எமது எழுத்தாளர் மானா' அவர்களின் இப்பணி தொடர நானும் இறைவனை வேண்டியவனாக...
கண்டிப்பாக நானும் வேண்டியவனாக உள்ளேன் அன்சார் @. @. :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02 Empty Re: இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02

Post by Muthumohamed Thu 3 Jan 2013 - 21:53

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02 800522 இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02 517195
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02 Empty Re: இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02

Post by ansar hayath Thu 3 Jan 2013 - 22:22

*சம்ஸ் wrote:
ansar hayath wrote: :];: சம்ஸ்...
இதை காலத்தின் தேவையாக கருதுகிறேன்...எமது எழுத்தாளர் மானா' அவர்களின் இப்பணி தொடர நானும் இறைவனை வேண்டியவனாக...
கண்டிப்பாக நானும் வேண்டியவனாக உள்ளேன் அன்சார் @. @. :];:

:+=+:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02 Empty Re: இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 02

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum