சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

பள்ளி மாணவிக்கு தந்தை திருமண "டார்ச்சர் Khan11

பள்ளி மாணவிக்கு தந்தை திருமண "டார்ச்சர்

Go down

பள்ளி மாணவிக்கு தந்தை திருமண "டார்ச்சர் Empty பள்ளி மாணவிக்கு தந்தை திருமண "டார்ச்சர்

Post by *சம்ஸ் Sun 30 Jan 2011 - 6:27

கோவை : திருமணத்துக்கு சம்மதிக்குமாறு பள்ளி மாணவியை அடித்து துன்புறுத்திய தந்தை, பள்ளிச்சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை பறித்துச் சென்றார். செய்வதறியாது கண்ணீர் விட்டு கதறிய மாணவி, கோவை போலீஸ் கமிஷனரிடம் முறையிட்டு அவற்றை மீட்டார். மாணவியின் வறுமை நிலை கண்ட கமிஷனர், மேற்
படிப்புக்கான நிதி உதவிக்கு ஏற்பாடு செய்தார். கோவை, பீளமேட்டில் வசிக்கும், பிளஸ்2 படிக்கும் மாணவி, நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவை சந்தித்து தந்தை மீது புகார் செய்தார். "எனது தந்தை பர்னிச்சர் கடையில் வேலை செய்கிறார். அவரால் எங்களது குடும்பத்துக்கு எவ்வித பயனுமில்லை. தினமும் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வரும் அவர், எனது தாயை அடித்து துன்புறுத்துவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார். போதிய வருமானமின்றி வறுமையில் வாடும் எங்களது குடும்பத்தை, 10ம் வகுப்பு படித்த எனது அண்ணன் கூலி வேலைக்குச் சென்று காப்பாற்றுகிறான். "இரு நாட்களுக்கு முன் போதையில் வீட்டுக்கு வந்த தந்தை, எனக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக தாயிடம் பேசினார். எதிர்ப்பு தெரிவித்த தாயை உருட்டு கட்டையால் தாக்கினார். தடுக்க முயன்றபோது எனது தலையிலும் அடித்தார். அதுமட்டுமின்றி, "படிச்சு நீ கிழிச்சது போதும்' எனக்கூறி எனது பாடபுத்தகங்களையும், பள்ளிச் சீருடைகளையும் பறித்துச் சென்றுவிட்டார். இதன் காரணமாக, என்னால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை' எனக்கூறி அழுதார்.
இவரது பிரச்னையை கேட்ட கமிஷனர் சைலேந்திரபாபு, "பீளமேடு போலீசில் இதற்குமுன் முறையிட்டிருக்கிறாயா' என்று கேட்டார். இதற்கு பதிலளித்த மாணவி, " புகார் அளித்தும் பிரச்னை தீர்க்கப்படவில்லை' என்றார். இதையடுத்து, அந்த மாணவியின் வீட்டுக்கே சென்று விசாரித்த கமிஷனர், மாணவியின் குடும்பத்தாரிடமும், பக்கத்து வீட்டாரிடமும் விசாரித்தார். மாணவியின் தந்தையை கண்டுபிடித்து பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளிச்சீருடைகளை கைப்பற்றுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். பல இடங்களிலும் விசாரணை நடத்திய போலீசார், மாணவியின் தந்தை பணியாற்றுமிடத்தில் வைக்கப்பட்டிருந்த பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை கைப்பற்றி, மாணவியிடம் ஒப்படைத்தனர். கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது: பள்ளி வயது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற தந்தையின் செயல் சட்டப்படி குற்றம். புகார் கொடுத்தது பள்ளி மாணவி என்றாலும், சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் நடவடிக்கை மேற்கொண்டோம். அந்த மாணவி, நன்கு படித்து, தான் ஆசிரியையாக வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். எனினும், அதற்கான பொருளாதார வசதி தங்களிடமில்லை என்றும் தெரிவித்தார். எனவே, மாணவியின் மேற்படிப்புக்கான நிதி உதவிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். ஏழை, எளிய மாணவ, மாணவியரின் படிப்புக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் "டீம்' என்ற நண்பர்கள் சேவை அமைப்பு, உதவ முன் வந்திருக்கிறது. பெற்றோர், தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, சுயஒழுக்கத்துடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். சமீபத்தில், என்னை சந்தித்து முறையிட்ட பள்ளி மாணவி ஒருவர், "தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக எனது தாய் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அழைத்து வந்து குடும்பத்துடன் சேர்த்து வையுங்கள்' என கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை மீதும் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

நன்றி தினமலர்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum