சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Khan11

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:47

மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?

கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.

தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.

அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:47

அனைத்து எழுத்துகளும் அடங்கியது!

`வெஸ்டர்ன் யூனியன்' என்ற நிறுவனம், டெலக்ஸ் ஆப்பரேட்டர்களுக்காக `தி குய்க் பிரவுன் பாக்ஸ் ஜம்ப்ஸ் ஒவர் தி லேசி டாக்' (The quick brown fox jumps over the lazy dog) என்ற 35 எழுத்துகளைக் கொண்ட சொற்றொடரை உருவாக்கியது.

ஆனால், ஆங்கிலத்தின் எல்லா எழுத்துகளையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மிகச் சிறிய சொற்றொடர் என்ற பெருமைக்குரியது வேறொன்று.

அது, `ஜேக்டாஸ் லவ் மை பிக் ஸ்பிங்ஸ் ஆப் குவார்ட்ஸ்' (Jackdaws love my big sphinx of quartz) என்பதாகும்.

இதில் 31 எழுத்துகளே உள்ளன. இச்சொற்றொடரை உருவாக்கியவர் யார் என்று தெரியவில்லை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:47

சுங்கவரி `டாரிப்' எனப்படுவது ஏன்?

அரேபிய `மூர்' இனத்தினர் எட்டாம் நூற்றாண்டில் ஸ்பெயின் மீது படையெடுத்தனர். அங்கு ஆக்கிரமிப்புச் செய்தபோது தங்களுடன் மிகச் சிறந்த கலாச்சாரத்தையும், படைப்பாற்றல் மிக்க கொள்கைகளையும் கொண்டு வந்தனர். அவற்றின் தாக்கத்தை இன்றளவும் ஸ்பெயினில் நாம் காணலாம்.

ஜிப்ரால்டரில் இருந்து இருபது மைல் தொலைவில் `டாரிபா' (Tarifa) என்ற துறைமுகம் உள்ளது. மத்தியதரைக் கடலுக்குள் நுழையும் கப்பல்களில் வணிகர்களுக்கு அளிக்கப்படும் (bounties) ஊக்கத்தொகையை மூர் இனத்தவர் அறிமுகப்படுத்தினர். அதில் இருந்து உருவானது, Tarifa என்ற சொல்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:48

முதல் கிரெடிட் கார்டு!

ஒரு காலத்தில் மனிதர்கள் பணத்தை மட்டுமே பயன்படுத்தினர். ஒரு வியாபாரிக்கும், வாடிக்கையாளருக்கும் இடையில் கடன் என்பது தனிப்பட்ட முறையில் வழக்கத்தில் இருந்தது.

1920-களில் பெட்ரோல் நிலையங்களும், ஒரே ஓட்டலின் பல கிளைகளிலும் தங்கள் நிறுவனங்களுக்கு இடையில் மட்டும் பயன்படுத்தக்கூடிய கிரெடிட் கார்டுகளை வெளியிட்டனர். 1930-களின் இறுதியில் இந்த நிறுவனங்களில் சில, மற்றவர்களின் கார்டுகளையும் அங்கீகரிக்கத் தொடங்கின. பிறகு 1950-ல் `டைனர்ஸ் கிளப்', பணம் கொடுத்துப் பெறும் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல நிறுவனங்களில் பயன்படுத்தக்கூடியவையாக அந்த கார்டுகள் இருந்தன.

விரைவிலேயே `அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்', அந்த மாதிரியான கார்டுகளை கொண்டுவந்தது. `பாங்க் அமெரிகார்டு' (Bank Americard) என்பது பின்னர் `விசா' (VISA) கார்டு என்றானது. 1959-ல் முதல் வங்கி கிரெடிட் கார்டாக இது வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, 1966-ல் `மாஸ்டர் கார்டு' தோன்றியது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:48

`பை ஹார்ட்' என்று சொல்வது ஏன்?

ஒரு விஷயம் மனப்பாடமாகத் தெரியும் என்பதை `பை ஹார்ட்டாக' (I know it by heart) தெரியும் என்கிறோம். திரும்பத் திரும்பப் படிக்கும் முறையால்தான் மனப்பாடம் ஆகிறது. திரும்பத் திரும்பப் படிப்பதை `ரோட்' என்கிறோம். `ரோடா' என்ற லத்தீன் சொல்லில் இருந்து `ரோட்' (Rote) உருவானது. `ரோடா' என்பது சக்கரம் எனப் பொருள்படும். அதாவது திரும்பச் திரும்பச் சுழல்வது. பண்டைய கிரேக்கர்கள் மூளைக்குப் பதிலாக இதயத்தில்தான் எண்ணங்கள் வைக்கப்பட்டுள்ளன என்று கருதியதால் `பைஹார்ட்' என்று கூறினார்கள்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:48

ஸ்டாக் பெயர்க் காரணம்!


முதலீட்டைப் பங்குதாரர்கள் உரிமையாக்கிக் கொள்வது என்ற கருத்து, டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் 1612-ல் தோற்றுவிக்கப்பட்டது.

சிறு சிறு வியாபார அமைப்புகளை பொதுமக்களுக்கு விற்று அக்கம்பெனி பணம் திரட்டியது. இதனால் அந்த கம்பெனி வளர்ந்து, லாபத்தைப் பங்குதாரர்களோடு பங்கு போட்டுக் கொண்டது.

`ஸ்டாக்' (stock) என்பதன் பொருள், மரத்தின் அடிப்பாகம். மரத்தின் அடிப்பாகத்தைப் போல ஒரு கம்பெனியின் `ஸ்டாக்குகள்' கிளைகளுக்குத் தேவையானவற்றை அளித்தன. இதற்கான ஊட்டச்சத்து எந்த அளவிலான கம்பெனிக்கும் பணம் மட்டுமே.

`ஸ்டாக்'கும், `ஷேர்' என்பதும் ஒன்றுதான். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்வது, `ஸ்டாக்'. ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பங்குகளை உடைமையாக்கிக் கொள்வது, ஷேர் (share).
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:50

Don’t count your chickens before they hatch

முட்டை பொரிந்து வெளிவரும் முன் குஞ்சுகளை எண்ணாதே (Don’t count your chickens before they hatch) என்பது ஆங்கிலத்தில் பிரபலமான வழக்கு. ஒரு விஷயம், உண்மையாக முடியும் முன் ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்பது இதன் பொருள்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில்தான் இது இவ்வாக்கியம் முதன்முதலில் எழுதப்பட்டது. ஈசாப் கதைகளில் ஒன்றான `பால்காரியும் அவளுடைய வாளியும்' என்ற கதையில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்.

ஈசாப் அடிமையாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தன்னுடைய அறிவுக் கூர்மை, சாமர்த்தியம் ஆகியவற்றால் அவர் விடுதலை அடைந்தார். உலகப் புகழும் பெற்றார். எனவே அவரது வாழ்க்கையே இச்சொற்றொடருக்குச் சரியான விளக்கமாக அமைகிறது.

இந்த வாக்கியம் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டது 16-ம் நூற்றாண்டில்தான்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:51

குறைவான அறிவு ஆபத்தானது

அற்ப அறிவோடு, எல்லோரையும் விட தனக்கு எல்லாம் அதிகமாகத் தெரியும் என்ற எண்ணத்தோடு இருந்தால் அது பிறருக்குத் தீங்கு விளைவிப்பதில் முடியும். அலெக்சாண்டர் போப் (1688- 1744) எழுதிய திறனாய்வுக் கட்டுரைகள் (Essays on Criticism) என்பதில் முதன்முதலாக இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:51

Eaves dropping

ஒட்டுக் கேட்பது eaves dropping என்று குறிப்பிடப்படுகிறது. இடைக்கால வீடுகளில், கூரையில் இருந்து மழைநீரை எடுத்துச் செல்ல குழாய்கள் இருக்காது. அதற்குப் பதிலாக ` eaves ' என்பவை இருக்கும்.

அவை சரிவான கூரையின் கீழாக அகலமாக நீட்டப்பட்டிருக்கும். அவற்றின் முனைகள், கூரையில் இருந்து வழியும் மழைநீரில் இருந்து மண் சுவர்களைப் பாதுகாக்கும். திடீரென்று மழை பெய்யும்போது யாராவது இந்த `ஈவுக்கு' அடியில் ஒதுங்கினால் உள்ளே இருப்பவர்கள் பேசுவதைக் கேட்க முடியும். அப்படித்தான் மேற்கண்ட வார்த்தை பிறந்தது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:51

லிட்டில் ஜாக் ஹார்னர்

மழலையர் பள்ளிப் பாடலில் (Rhymes) வரும் `லிட்டில் ஜாக் ஹார்னர்' யார் என்று தெரியுமா?

இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி அரசனாக இருந்தபோது மாதா கோவில் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு துறவி, அரசனைச் சமாதானம் செய்வதற்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட `கிறிஸ்துமஸ் பை' என்ற பலகாரத்தை அவருக்குப் பரிசாக அனுப்பி வைத்தார்.

`சோமாசி' போல் உள்ள அந்தப் பலகாரத்தின் உள்ளே 12 மாளிகைகளின் பத்திரங்கள் வைக்கப்பட்டு அரசனுக்கு அளிக்கப்பட்டது. துறவி தமது மடாலயத்தை தாமே வைத்துக்கொள்ள அனுமதி வேண்டி மாற்றாக அந்தப் பத்திரங்களை அனுப்பி வைத்திருந்தார்.

அந்தப் பத்திரங்களோடு கூடிய பலகாரத்தை லண்டனுக்கு எடுத்துச் சென்ற அதிகாரியின் பெயர், ஜாக் ஹார்னர். செல்லும் வழியில், அவற்றுள் சிறந்த மாளிகையின் பத்திரத்தை அவர் தனக்கு எடுத்துக்கொண்டார். `மெல்ஸ் மேனர்' (Mells Manor) என்று அழைக்கப்பட்ட அந்த மாளிகையில் இப்போதும் ஹார்னரின் சந்ததியினர் வசித்து வருகின்றனர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:52

பிக்கி பேங்க் பிறந்தவிதம்!

காசு சேமிக்கப் பயன்படும் உண்டியல் ஏன் பன்றிப் பொம்மை வடிவத்தில் அமைக்கப்பட்டு `பிக்கி பேங்க்' என்று அழைக்கப்படுகிறது?

இடைக்கால இங்கிலாந்தில் மண்குடங்களும், சட்டிகளும் `பிக்' (pygg) எனப்படும் ஒரு குறிப்பிட்ட களிமண்ணால் செய்யப்பட்டன. சமையலறைப் பாத்திரத்தில், அவசரத்துக்கு உதவும் என்று சில நாணயங்களைப் போட்டு வைப்பது வழக்கம்தானே! 1600-களில் இந்தப் பழக்கத்தை அறியாத ஒரு குயவனிடம் `பிக் பேங்க்' செய்யுமாறு கூறப்பட்டது. அதை அவன் தவறாகப் புரிந்துகொண்டான். அவன் பன்றி வடிவத்தில் ஒரு களிமண் பொம்மை செய்தான். அதன் முதுகில், நாணயம் போட ஒரு துளை அமைக்கப்பட்டது. அதிலிருந்து பிக்கி பேங்க் (piggy bank) வழக்கத்துக்கு வந்தது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 21:11

`ஹைவேஸ்'


ரோம சாம்ராஜ்ஜியத்தில் நகரங்களுக்கு இடையே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சாலைகளை அமைத்தனர். தனியார் அமைத்த சாலைகளை விட அவை உயரமாகவும், சிறந்ததாகவும் அமைக்கப்பட்டன. அதனால் அவை `ஹைவேஸ்' என்று அழைக்கப்பட்டன. நெடுஞ்சாலை எனப்படும் `ஹை வேஸ்' தோன்றிய விதம் இதுதான்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 21:12

ஹாம் ஸ்லாப் ஸ்டிக்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில், இரண்டாந்தர நடிகர்களால் முக ஒப்பனையைக் கலைக்க கோல்டு கிரீமை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அதனால் அவர்கள் ஒப்பனையைக் கலைக்கப் பன்றிக் கொழுப்பை (ham fat) பயன்படுத்தினர். எனவே அவர்கள் `ஹாம் பேட்டர்ஸ்' (ham fatters) என்று அழைக்கப்பட்டனர். மோசமான நடிகர்களான அவர் கள், 20-ம் நூற்றாண்டில் சுருக்கமாக `ஹாம்' என்று அழைக்கப்பட்டனர்.

கீழே விழுவது, சறுக்கி விழுந்து எழுவது போன்ற நகைச்சுவை `ஸ்லாப் ஸ்டிக்' (slap stick) என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் நாகரீகமற்ற முறையில் எழுப்பப்படும் ஒலிகளால் இந்தப் பெயர் ஏற்பட்டது. திரையின் பின்னால் இரு குச்சிகளை ஒன்றுடன் ஒன்று அடித்து, நடிகர் கீழே விழும் சப்தத்தைக் குறிக்கும்வகையில் ஒலி எழுப்பப்படும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 21:12

டேலன்ட்!

பண்டைய காலத்தில் தங்கம், வெள்ளியை எடை போடும் அளவு `டேலன்ட்' என்று சொல்லப்பட்டது.

இன்றைய அர்த்தத்தில் பயன்படும் அந்தச் சொல் `புக் ஆப் மேத்யூ'வில் (Book of Mathew) குறிக்கப்பட்டுள்ளது. ஒரு முதலாளி தனது வேலைக்காரர்கள் மூவருக்குச் சமமான அளவில் டேலன்ட் எனப்படும் பணத்தைக் கொடுத்தார். இருவர் அதைப் புத்திசாலித்தனமாக முதலீடு செய்து லாபம் அடைந்தனர். மூன்றாமவன் அதைப் புதைத்து வைத்து எந்த லாபத்தையும் அடையவில்லை.

அறிவு, சாமர்த்தியம் எல்லாம் நம்மோடு இயற்கையாகப் பிறப்பது என்பதை இக்கதை விவரிக்கிறது. இதன் நீதி என்னவென்றால், நம்முடைய அறிவு, திறமையை நாம் புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியைத் தழுவுவோம் என்பதாகும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 21:12

குதிரைச் சக்தி

கார் என்ஜின் போன்ற எந்திரங்களின் திறனை ஏன் `குதிரைச் சக்தி' என்று குறிப்பிடுகிறோம் தெரியுமா? ஸ்காட்லாந்துக்காரரான ஜேம்ஸ் வாட், 1775-ல் தான் கண்டுபிடித்த நீராவி என்ஜினுக்கு காப்புரிமை (patent) பெற்றார். அப்போது சுரங்கங்களில் வெட்டியெடுக்கப்பட்ட கரியை குதிரைகள் மேலே இழுத்து வந்தன.

ஒரு குதிரையால் 330 பவுண்டு எடையை ஒரு நிமிடத்தில் 100 அடி தூரம் இழுத்துவர முடியும் என்று ஜேம்ஸ் வாட் கணக்கிட்டார். ஒரு நீராவி என்ஜின், கூட்டமான குதிரைகளுக்கு மாற்றாகச் செயல்பட முடியும் என்பதையும் அவர் நிரூபித்தார். நீராவி என்ஜினை கண்டுபிடித்ததன் மூலம் ஜேம்ஸ் வாட் செல்வந்தரானார். என்ஜினின் திறனை குதிரைச் சக்தியில் கணக்கிடும் `பார்முலா'வையும் நமக்கு அவரே அளித்தார்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 21:13

ஆல்பபெட், டெல்டா


ஏ, பி, சி என்று தொடங்கும் ஆங்கில மொழியில் உள்ள எல்லா எழுத்துகளையும் கொண்ட வரிசையைப் பள்ளியில் நாம் கற்கிறோம்.

கிரேக்க மொழி எழுத்து வரிசையில் முதல் இரண்டு எழுத்து ஆல்பா, பீட்டா (alpha, beta) ஆகும். அதன் அடிப்படையில்தான் `ஆல்பபெட்' (alphabet) என்பது பிறந்தது.

நைல் நதி கடலில் சேரும் முகத்துவாரம், `டெல்டா' என்று கூறப்படுகிறது. கடலை அடையும் எல்லா ஆறுகளும் அந்த வடிவத்தில் பாய்கின்றன.

அந்த வடிவம், கிரேக்க மொழியின் நான்காவது எழுத்தான `டெல்டா' (delta) வடிவில் உள்ளது. எனவே நைல் நதிக்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பெயர் மற்ற நதிகளின் முகத்துவாரங் களையும் குறிப்பதாக ஆனது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 21:13

குடை ராட்டினம்!

மத்திய காலத்தில் ஐரோப்பிய உயர்குலப் பிரபுக்கள் அதுவரை நடைபெற்றுவந்த வன்முறை கலந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுச் சலிப்படைந்தனர். அவற்றுக்கு மாற்றாகப் புதிதாக ஒன்றை ஏற்படுத்த முயன்றனர்.

குதிரை மீது அமர்ந்தவாறே கையில் இருக்கும் ஈட்டிகளால் வளையங்களைப் பிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர். அதற்கு ஸ்பெயின் மொழியில் `கரோஸிலா' (carossela) என்று பெயர். `சிறிய யுத்தம்' என்பது இதன் பொருள். உயிருள்ள குதிரைகளுக்குப் பதிலாக தொங்குகின்ற, சுழலுகின்ற இருக்கைகள் வைக்கப்பட்டன. பின்னர், வண்ணம் தீட்டப்பட்ட மரக்குதிரைகள் வந்தன. இவ்வாறு `மெர்ரி-கோ- ரவுண்டு' எனப்படும் குடை ராட்டினம் மேலை நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்தது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 21:13

வான்கோழி Turkey ஆனவிதம்!

மெக்சிகோவையும், பெருவையும் வென்ற ஸ்பானிய வீரர் ஹெர்னான்டோ கார்டெஸ் 1519-ல் ஸ்பெயினுக்கு திரும்பிவந்தபோது வான்கோழியைக் கொண்டுவந்தார்.

மெக்சிகோ நாட்டுப் பழங்குடியினர் அவருக்கு அந்தப் பறவையைக் கொடுத்திருந்தனர். வினோதமான அந்தப் பறவை, ஐரோப்பியர்களைக் குழப்பியது. பிரெஞ்சு மக்கள் அது இந்தியாவில் இருந்து வந்தது என்று எண்ணி `டின்டன்' (dindont) என்று பெயரிட்டனர். ஜெர்மானியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் சுவீடன் நாட்டினரும் அப்பறவை இந்தியாவில் இருந்து வந்ததாகக் கருதினர். ஆனால் கல்கத்தா என்பதைக் குறிக்கும் விதமாக `கில்கான்' Kilcon என்று பெயரிட்டனர்.

இந்தச் செய்தி இங்கிலாந்தை அடைவதற்குள்ளாக, அப்பறவை துருக்கியில் இருந்து வந்ததாக வதந்தி பரவியது. அதனால் வான்கோழிக்கு `டர்க்கி' Turkey என்ற பெயர் நிலைத்து விட்டது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 21:14

நயாகரா!

உலகின் மிகப் பெரிய அருவியான நயாகராவுக்கு அப்பெயர் எப்படி ஏற்பட்டது தெரியுமா? நயாகரா பகுதியில் வாழ்ந்த மக்களின் மொழியில் இந்த அருவி `ஒங்கியாஹ்ரா' என்று அழைக்கப்பட்டது. அதற்கான சான்று 1641-ல் காணப்பட்டது. ஆனால் அந்தப் பழங்குடியின மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை.

ஒங்கியாஹ்ரா என்பது பின் ஒங்கியாரா என்று சுருங்கியது. `ஒங்கியாஹ்ரா' என்பதற்கு `இடி போல விழுகின்ற நீர்' என்று பொருள். ஒங்கியாரா என்ற வார்த்தை வாய்மொழி வழியாகவே பரவியதால் அது நாளடைவில் நயாகரா என்று மருவி விட்டது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 21:15

வெளிப்படையான பொய்!

`வெளிப்படையான பொய்' என்பது தெள்ளத்தெளிவானது, திரித்து, மாற்றிச் சொல்லாமல் ஓர் அறிவற்றவர் அல்லது தைரியசாலியால் அடுத்தவர் முகத்துக்கு நேரே சொல்லப்படுவது என்பதாகும்.

இதை ஆங்கிலத்தில் ('bare faced Lie') என்று குறிப்பிடுகிறார்கள்.

16-ஆம் நூற்றாண்டில் ஆண்களில் பலரும் தாடி, மீசை, கிருதா வைத்திருப்பார்கள். புரட்சியாளர்கள் மட்டுமே முகச்சவரம் செய்து கொள்வார்கள். பட்டவர்த்தனமாக ஒரு பொய்யைச் சொல்லக்கூடிய தைரியம் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்று கருதப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே இந்தச் சொற்றொடரும் பிறந்தது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:15

வினாடிகள், நிமிடங்கள்...

கி.மு. 2400-ல் சுமேரியர்கள் தமது அடிப்படை அலகு எண்ணாக 6-ஐக் கருதினர். அவர்கள் ஒரு வட்டத்தை 360 டிகிரிகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு டிகிரியும் மற்றொரு 60 பாகங்களாகப் பிரிக்கப்பட்டன. இவ்வாறு தொடர்ந்து பிரித்தனர். ரோமாபுரியினர் இதை minute prime (முதல் சிறிய பகுதி), secunda minute (இரண்டாவது சிறிய பகுதி) என்று பிரித்தனர். வட்ட வடிவக் கடிகாரங்களுக்கு இந்தக் கணக்குச் சரியாக இருந்ததால் காலத்தின் பிரிவுகளாக நிமிடங்களும், வினாடிகளும் ஏற்கப்பட்டன.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:16

சதுரங்கம்

கி.மு. 500-ல் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு, `செஸ்' எனப்படும் சதுரங்கம்.
இதில், விளையாடும் இருவருக்கும் ராஜா, ராணி தவிர சதுரங்கப் படைகளான காலாட்படை, குதிரை, தேர், யானை என்று 16 காய்கள் இருக்கும். ஒருவர் மற்றவரின் ராஜாவை வீழ்த்துவதன் மூலம் அவரைத் தோல்வியடையச் செய்யலாம்.

முதலில் இதை இந்தியாவில் இருந்து கற்றுக் கொண்டவர்கள் பாரசீகர்கள். அவர்களிடம் இருந்து அரேபியர்கள் கற்றனர். ஸ்பெயினை கைப்பற்றிய அரேபியர், இவ்விளையாட்டை ஐரோப்பாவுக்குக்குக் கொண்டு சென்றனர். அரசர் என்பதற்கான பாரசீகச் சொல் ஷா. அரேபிய `ஷாமாட்' என்பதில் இருந்து `செக்மேட்' பெறப்பட்டுள்ளது. இதன் பொருள் `அரசன் இறந்துவிட்டான்' என்பதாகும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:17

உண்ணாவிரதம்

`உண்ணாவிரதத்தை' ஏன் ஆங்கிலத்தில் `பாஸ்ட்டிங்' (fasting) என்று சொல்கிறார்கள் தெரியுமா? fast என்பதற்கு உறுதியாகப் பிடித்துக் கொள்வது என்று பொருள். அந்த வகையில், சாப்பிடாமல் உறுதியாக இருப்பதை `பாஸ்ட்டிங்' குறிக்கிறது. இக்காலத்தில் பல தரப்பினராலும் உண்ணாவிரதம் இருக்கப்படுகிறது.

ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களும், ஆன்மிக நம்பிக்கை இல்லாதவர்களும் பல்வேறு காரணங் களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். `உறுதியான கட்டுப்பாடு' என்ற பொருளில்தான் இந்தச் சொல் பண்டைக் காலத்தில் புழக்கத்துக்கு வந்தது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:17

கயிறு திரித்தல்

இஷ்டம்போல மிகைப்படுத்திக் கூறுபவனை `கயிறு திரிக்கிறான்' என்று சொல்வோம். ஆங்கிலத்தில் இது spinning a yarn என்று சொல்லப்படுகிறது. 1812-ல் முதல் முறையாக இது அச்சில் இடம்பெற்றது.

வீட்டில் நூற்கும் நூலுக்கும் இதற்கும் தொடர்பில்லை. இது கடல்பகுதியோடு தொடர்புடையது.

அக்காலத்தில் பாய்மரக் கப்பல்களைச் செலுத்த பல மைல் நீளமுள்ள சணல் நார் தேவைப்படும். மாலுமிகள் இருவர் இருவராக நீண்ட நேரம் சணல் நார்களை நூற்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

கயிறைத் திரிக்கும்போது மாலுமிகள் அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக கற்பனையாக நிறையக் கதை அளப்பார்கள். அதிலிருந்துதான் இச்சொற்றொடர் உருவானது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:20

அனாக்ரம்

ஆங்கிலத்தில் உள்ள வார்த்தை விளையாட்டு, `அனாக்ரம்' (Anagram). கொடுக்கப்பட்டுள்ள ஒரு வார்த்தையின் எழுத்து அல்லது சொற்றொடரை வைத்துக்கொண்டு மற்றொரு சொல்லையோ, சொற்றொடரையோ உருவாக்குவதுதான் இந்த விளையாட்டு. தமிழிலும் இதுபோல் உண்டே? `பாட்டுக்குப் பாட்டு' போன்ற நிகழ்ச்சிகளை நீங்கள் வானொலியில் கேட்டிருப்பீர்கள், தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்களே? ஒரு பாட்டின் கடைசி அடியில் உள்ள எழுத்தை முதலில் வைத்துப் பாடுவார்களே, அது போன்றதுதான், `அனாக்ரம்'.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum