சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Khan11

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Sat 18 May 2013 - 20:47

First topic message reminder :

மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?

கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.

தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.

அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:22

அகாடமி

இப்போதெல்லாம் கல்விக் கழகங்களுக்கு `அகாடமி' என்று பெயர் வைக்கிறார்கள். இதன் வரலாறு என்ன? `அகாடமி', ஒரு கிரேக்கச் சொல். இதன் பொருள், `மரங்கள் அடர்ந்த தோப்பு' என்பதே. புகழ்பெற்ற தத்துவஞானியான பிளேட்டோ, அம்மாதிரியான இடங்களில்தான் தனது சீடர்களுக்குக் கல்வி பயிற்றுவித்து வந்தார். ஆனால் பிற்காலத்தில் இதே வார்த்தை, ஏதோ ஒருவகைப்பட்ட உயர்கல்விப் பிரிவை பயிற்றுவிக்கும் மையத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. வரலாறு, மருத்துவம், இசை, கலை என்று பல பிரிவுகள் இதைப் பயன்படுத்தத் தொடங்கின.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:22

அலிபி

`அலிபி' (Alibi) என்பது ஒரு சட்ட சம்பந்தமான வார்த்தை. இந்த லத்தீன் சொல்லுக்கு `எங்கோ' என்று பொருள். ஒரு சம்பவம் நடந்தபோது தான் `அங்கில்லை' என்று நிரூபிக்கும் தடயம் இது. திட்டமிட்டுத் தவறு செய்யும் ஆசாமிகள் இது போன்ற `அலிபி'களை உருவாக்கி, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வார்கள்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:23

டிரிவியா

வீண்பேச்சு மற்றும் முக்கியமற்ற தகவல்களை ஆங்கிலத்தில் ஏன் `டிரிவியா' (trivia) என்கிறோம்? சாலைகளை அமைப்பதில் ரோமாபுரியினர் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்ந்தார்கள். லத்தீன் மொழிச் சொல்லான `டிரிவியம்' (trivium) என்பதற்கு மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் என்று பொருள். அதிலிருந்து முக்கியமற்ற சங்கதிகளுக்கான சொல் தோன்றியது. மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து குறைவான வேகத்தோடு, நெரிசலாக இருக்கும். அப்போது வெற்று அரட்டைக்கும், வீண்பேச்சுக்கும் அதிக வாய்ப்பு உண்டு. tri என்பது 3. via என்பது சாலை வழி. அதிலிருந்துதான், பயனற்ற தகவலைக் குறிக்கும் `டிரிவியா' பிறந்தது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:23

பொருத்தமற்ற செயல் - taboo

பொருத்தமற்ற அல்லது ஏற்கமுடியாத செயலை `டாபூ' என்கிறோம். 1777-ம் ஆண்டில் கேப்டன் ஜேம்ஸ் குக் பிரெண்ட்லி தீவுக்கு வந்தார். அங்கிருந்த பாலினீசியர்கள் taboo என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் கண்டார். அதைத் தனது குறிப்பேட்டிலும் எழுதினார். `செய்யக் கூடாதது' என்பதை அச்சொல் குறித்தது. ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு ஜேம்ஸ் குக்கும், அவரது ஆட்களும் அந்தச் சொல்லை எடுத்துச் சென்றனர். உண்மையில் அந்த வார்த்தைக்கு `போய்விடு' என்ற பொருள் இருந்ததை அவர்கள் அறியவில்லை. ஜேம்ஸ் குக் குழுவினர் அந்தத் தீவை அடைந்தபோது தீவுக்காரர்கள் அதைத்தான் சொன்னார்கள்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:24

அலுமினியம் ஆன `அலுமினம்'!

அலுமினம் (Aluminum) பூமியின் மேற்பரப்பில் மிக அதிகளவில் கிடைக்கும் உலோகம். இது பெரும்பாலும் பாக்சைட்டுடன் இணைந்து காணப்படுகிறது.

1808-ல் ஆங்கிலேய அறிவியலாளர் சர் ஹம்பிரி டேவி (1778- 1829) அலுமினத்தை எப்படித் தனியாகப் பிரிப்பது என்று சோதித்தார். அவர் முதலில் இதை `அலுமியம்' என்று குறிப்பிட்டார். 1812-ல் அவரே இதற்கு `அலுமினம்' என்று வேறு பெயரிட்டார். அமெரிக்காவில் இன்றும் இப்படித்தான் அழைக்கிறார்கள். அதே ஆண்டில் பிரிட்டீஷ்காரர்கள் இதை அலுமினியம் என்றே அழைக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.

மற்ற மூலகங்களான சோடியம், பொட்டாசியம் போல இதுவும் `இயம்' என்று முடிவடைய வேண்டும் என்பதற்காக அவ்வாறு முடிவு செய்தனர்.

1812-ல் பிரிட்டனின் `குவார்ட்டர்லி ரிவ்யூ'வில், `அலுமினம்' என்று சொல்வதில் அழகில்லை. அதனால் இனிமேல் இதை அலுமினியம் என்றே குறிப்பிடும் உரிமையை எடுத்துக்கொள்கிறோம்' என்று எழுதப்பட்டது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:24

ரூபிக் கியூப்

மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுச் சாதனமான `ரூபிக் கியூப்' 1980-ல் உலகம் முழுவதும் தீவிர ஆர்வத்தை ஏற்படுத்தியது. அங்கேரியைச் சேர்ந்த எர்னோ ரூபிக் என்ற பேராசிரியர் இதைக் கண்டுபிடித்தார். அவருடைய மாணவர்களுக்குக் கணக்குப் போட உதவும் ஒரு சாதனமாக இதை அவர் உருவாக்கினார்.

ஆனால் ஒரு விளையாட்டுப் பொருளாக இதன் மீது மக்களுக்கு ஏற்பட்ட பேரார்வத்தைக் கண்ட அவர், அங்கேரியில் மட்டும் 20 லட்சம் கியூப்களை விற்றார். அதன்பிறகு மேலைநாடுகளிலும் அதை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம், கம்யூனிஸ்டு உலகில் சொந்த முயற்சியில் தானாகவே உருவான முதல் லட்சாதிபதி என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:25

இடதுசாரி... வலதுசாரி...!

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரெஞ்சு மன்னரான பதினாறாம் லூயி, பாராளுமன்றத்தை நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். அவருடைய சபையில், தீவிர மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பியவர்கள் இடதுபுறம் அமர்ந்து கொண்டனர். பழமைவாதிகள் வலதுபுறத்தில் அமர்ந்தனர். அதிலிருந்துதான் `இடதுசாரிகள்... வலதுசாரிகள்' என்ற வார்த்தைப் பிரயோகம் உருவானது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:25

ஸ்பிங்ஸ்

எகிப்தில் உள்ள `கிஸா' என்ற சிற்பம்தான் மிகப் பிரபலமான `ஸ்பிங்ஸ்'. ஆனால் அதைப் போல இன்னொன்றும் உள்ளது.

கிரேக்க புராணக் கதைப்படி, முதன்முதலில் இருந்த ஸ்பிங்ஸ் இறக்கைகளுடன் கூடியது. சிங்கத்தின் உடலில் பெண் முகம் அமைந்திருந்தது. தீப்ஸ் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அந்த உருவம் கவர்ந்திழுக்கும். அவள் கூறும் புதிருக்கு விடை சொல்லாதவர்களைச் சாப்பிட்டுவிடுவாள்.

அவளுடைய புதிர், `இந்தப் பிறவிக்கு ஒரு குரல் இருக்கும், நான்கு கால்கள் உடையதாகும். பின்னர் இரண்டு கால்களாகும், அப்புறம் மூன்று கால்களாகும். அது என்ன?'

இறுதியில் அந்தப் புதிருக்கான பதிலைக் கூறி ஸ்பிங்ஸை இடிபஸ் என்பவர் தோற்கடித்தார். அவர் கூறிய பதில், `மனிதக் குழந்தை பிறந்ததும் இரண்டு கால்களால் தவழ்கிறது. வளர்ந்த பிறகு இரண்டு கால்களால் நடக்கிறான். வயதானபின் ஓர் ஊன்றுகோலைப் பயன்படுத்துவதால் மூன்று கால்களைப் பெறுகிறான்.'

எகிப்திய புராணப்படி, `ஸ்பிங்ஸ் ஓர் அசிங்கமான, இறக்கையற்ற சிங்கத்தின் உடலோடு கூடிய ஓர் ஆணின் உருவம். `ஸ்பிங்ஸ்' என்பதற்கு கிரேக்க மொழியில், `கழுத்தை நெரித்துக் கொல்பவன்' என்று பொருள்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:26

உண்ணாவிரதம் `பாஸ்ட்டிங்' எனப்படுவது ஏன்?

ஆங்கிலச் சொல் fast என்பதற்கு `உறுதியாகப் பிடித்துக்கொள்வது' என்று பொருள். சாப்பிடாமல் இருக்கும் பழக்கத்தைக் குறிக்கும் fasting என்பதற்கு `உறுதியான தன்னடக்கம்' என்பது விளக்கம். இக்காலத்தில் உண்ணாவிரதம் இருப்பது பல தரப்பினரால் மேற்கொள்ளப்படுகிறது.

ஆன்மிக உணர்வு உடையவர்களாலும், இல்லாதவர்களாலும் இது மேற்கொள்ளப்படுகிறது. தங்களைப் பிடித்துச் சிறையில் அடைத்தவர்களுக்கு தங்கள் மனம் அல்லது உடல் மீது கட்டுப்பாடு கிடையாது என்பதை வெளிப்படுத்த கைதிகள் உண்ணாவிரதம் இருப்பார்கள். கடவுளின் மீதுள்ள தீவிர நம்பிக்கையை வெளிப்படுத்த ஆன்மிகப் பயிற்சியாக பக்தர்களால் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறது. உடலி லிருந்து விஷத் தன்மையை வெளியேற்ற சிலர் உண்ணாவிரதம் இருப்பதும் உண்டு. உறுதியான கட்டுப்பாட்டோடு இருப்பது என்ற பொருளில்தான் பழைய காலத்தில் இருந்து இச்சொல் வழக்கத்தில் உள்ளது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:27

ஓக்கே - Okay

இன்று நாம் பயன்படுத்தும் Okay அல்லது O.K. அமெரிக்கச் சொல். `பாஸ்டன் மார்னிங் போஸ்ட்' என்ற செய்தித்தாளில் 1839-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி இது முதன்முதலில் வெளியானது. All correct என்பதை நகைச்சுவையாக Oll Korrect என்று தவறாக அச்சிட்டு வெளியிட்டார்கள். அதன் சுருக்கம்தான் O.K. அப்படிச் சுருக்கப்பட்டது உலகெங்கும் பரவிவிட்டது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:27

சாம்பியன்

லத்தீன் மொழிச் சொல்லான `காம்பஸ்' (campus) என்பதில் இருந்து இது தோன்றியுள்ளது. திறந்த மைதானத்தில் போர்கள் நடைபெறுவதை இவ்வார்த்தை குறித்தது.

`சாம்பியன்' என்ற இந்த வார்த்தை முதலில் பிரெஞ்சு மொழிக்கு வந்து பிறகு 13-ம் நூற்றாண்டில் ஆங்கிலத்துக்குச் சென்றது. `அடுத்தவருக்காக ஒருவர் சண்டையிடுவது' அல்லது `ஒரு நபரையோ அல்லது ஒரு கொள்கையையோ பாதுகாக்கும் ஒருவர்' என்பது இதற்கான உண்மையான அர்த்தமாகும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:28

சாக்லேட் சுவையுள்ள காபி!

சாக்லேட் சுவையுள்ள காபி `மோச்சா' (mocha) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இப்பெயர் எப்படிப் பிறந்தது தெரியுமா?

எத்தியோப்பிய காபி கொட்டைகள் 1773-ல் ஏமன் துறைமுகமான `மோச்சா'வில் இருந்து அனுப்பப்பட்டதால் அந்தப் பெயர் ஏற்பட்டது. ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான காபியாக அது ஆனது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் அமெரிக்கர்கள் மோச்சா காபிக்கு சுவைïட்ட சாக்லேட்டை கலந்தனர்.

ஆனால் சமீபகாலமாக `பொட்டீக்' (boutique) கடைகள் சாக்லேட் ருசியுள்ள காபி என்று `மோச்சா காபி'யை பிரபலப்படுத்திய பிறகே அப்பெயர் பரவியது. மோச்சா காபிக்கான ஆரம்பகால விளக்கமான `காரம், மணம், குணம் நிறைந்த அரேபிய காபி' என்பதுதான் இன்றளவும் நிலைத்துள்ளது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Fri 24 May 2013 - 22:16

`எக் பிளான்ட்'

`எக் பிளான்ட்' (egg plant) என்பது பழ வகையைச் சேர்ந்தது. ஆனால் மக்கள் அதை காய்கறியைப் போல உண்கிறார்கள். தென்கிழக்கு ஆசியாவில் கிடைக்கும் இச்செடியைப் பாரசீகர்கள் ஆப்பிரிக்காவுக்குக் கொண்டு சென்றனர். 8-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் வழியாக இதை அரேபியர்கள் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினர். 18-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் `எக் பிளான்ட்' என்று ஐரோப்பியர்கள் இதற்குப் பெயர் சூட்டினர். இது வாத்து முட்டையைப் போல வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருந்ததுதான் அதற்குக் காரணம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Fri 24 May 2013 - 22:16

`பைப்பிங் ஹாட்'

அடுப்பிலிருந்து நேரடியாக உணவு மேஜைக்கு வசதியாக, சுடச்சுட வரும் உணவை `பைப்பிங் ஹாட்' (piping hot) ஆக உள்ளது என்கிறோம். இந்த அர்த்தத்தில் இதைப் பயன்படுத்துவதற்குச் சில நூற்றாண்டுகள் ஆயின. ஒரு காலத்தில், அண்டை அயலில் அல்லது கிராமத்தில் உள்ள பேக்கரிடம் இருந்து அன்றாடம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட ரொட்டியை வாங்கும் பழக்கம் இருந்தது. ரொட்டிக்காரர் வாயிலில் நின்று ஒரு குழாய் அல்லது கொம்பை ஊதி, ரொட்டி தயாராகிவிட்டது என்று அறிவிப்பார். தீர்ந்து போவதற்கு முன் அதை வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் விரைந்து செல்வார்கள். அதிலிருந்து `பைப்பிங் ஹாட்' என்பது வந்தது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Fri 24 May 2013 - 22:17

வேலியின் மீது...!

ஒரு விஷயத்தில் ஓர் உறுதியான தீர்மானம் எடுக்காதவர்களை `வேலியின் மீது உள்ளனர்' (on the fence) என்று கூறுவது வழக்கமாக இருக்கிறது. அமெரிக்கச் சுதந்திரப் போராட்டத்தின்போது நியூஜெர்சியில் இருந்த முக்கியமான நீதிபதியான இம்லே (Imlay), புரட்சியாளர் பக்கமா அல்லது பிரிட்டனுக்கு விசுவாசமாக இருப்பதா என்பது புரியாமல் குழம்பியதால் எந்தப் பக்கத்துக்கும் ஆதரவு தராமல் இருந்தார். நீதிபதியின் அடிமை ஒருவனிடம் ஜார்ஜ் வாஷிங்டன், `நீதிபதி எந்தப் பக்கம் சார்ந்துள்ளார்?' என்று கேட்டார். அதற்கு அந்த அடிமை கூறிய பதில்: `எது வலிமையான பக்கம் என்று தெரிந்துகொள்ளும்வரை என் எஜமானர் வேலியின் மீது அமர்ந்திருப்பார்'. அந்தச் சொற்றொடரைக் கேட்டுக் குதூகலமடைந்த வாஷிங்டன், பலமுறை பல நபர்களிடம் அதைப் பகிர்ந்து கொண்டார். அவர் மூலமாக, நிச்சயமற்ற தன்மையைக் குறிப்பதாக அச்சொற்றொடர் ஆங்கில மொழிக்கு வந்தது. `மதில் மேல் பூனை' என்று நாம் சொல்கிறோம் அல்லவா, அதைப் போலத்தான்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Fri 24 May 2013 - 22:17

`கெஸட்'

கி.மு. 59-ல் ஜுலியஸ் சீசர் கையால் எழுதப்பட்ட தினசரி செய்தித்தாளை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். அவை முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டன. கூட்டன்பர்க்கின் அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் செய்தித்தாள், தொழில்முறையில் தயாரிக்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் செய்தியைப் பொதுமக்களுக்குப் படித்துக் காட்டுவதற்கு வெனிஸ் நகர மக்கள் காசு கொடுத்தனர். அதற்கான விலை, ஒரு சிறிய இத்தாலிய செப்பு நாணயம். அதன் பெயர் கெஸட்டா. அதிலிருந்துதான் செய்தி ஏட்டுக்கு `கெஸட்' என்ற பெயர் வந்தது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Fri 24 May 2013 - 22:18

`ஆம்புலன்ஸ்'

1809-ல் பிரெஞ்சுக்காரர்கள் போர்க்களத்தில் காயமடைந்த போர்வீரர்களைக் குணப்படுத்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நடக்க முடிந்தவர்கள் அல்லது ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லக்கூடியவர்களைப் போர்க்களத்துக்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து உடனடியாகச் சிகிச்சை அளித்தனர்.

பிரெஞ்சு மொழியில், நடப்பது என்பதற்கான சொல் `ஆம்புலேர்' (Ambulare). அதற்கு இணையான ஆங்கிலச் சொல் Ambulare. 1242-ல், `உதவி வேண்டுவோருக்கான புகலிடம்' என்ற பொருளில் `ஹாஸ்பிடல்' என்ற சொல் வழங்கி வந்தது. `ஆம்புலன்ஸ்' என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பு- `உதவி வேண்டுவோர் நடந்தோ, சுமக்கப்பட்டோ சென்றடையும் இடம்' என்பதாகும். 19-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் கிரிமியாவில் நடைபெற்ற போரில் குதிரைகளால் இழுக்கப்பட்ட வாகனங்களில், காயமடைந்த போர்வீரர்களை முதல்முறையாக மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றனர். அந்த வாகனங்கள் `ஆம்புலன்ஸ்' என்று அழைக்கப்பட்டன.

1600- 1613-ம் ஆண்டுகளில் கனடாவின் அகேடியாவில் போர்டு ராயல் துறைமுகத்தில் சிக் பே (sick bay) என்ற முதல் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது. செயின்ட் ஜுன் டீ டீயு ஆர்டரை சேர்ந்த இருவர் அதை நடத்தி வந்தனர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Fri 24 May 2013 - 22:18

`நீதிக்குக் கண் இல்லை' என்பது ஏன்?

குற்றவாளிகள், சாட்சி சொல்பவர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் நாடகமாடி தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்படுமாறு செய்யலாம் என்று எகிப்திய பாரோக்கள் (pharaohs) கருதினர்.

அதனால் வழக்கு விசாரணையை சிறிதும் வெளிச்சமில்லாத இருட்டறையில் நடத்தும் வழக்கத்தை மேற்கொண்டனர். அதன் காரணமாக, குற்றஞ்சாட்டப்பட்டவர், வக்கீல்கள், நீதிபதி ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாது. உண்மையைத் தவிர வேறு எதனாலும் நீதிபதியை அசைக்க முடியாது.

இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் தற்போதைய நீதிமன்றங்களில் நாம் பார்க்கும் நீதி தேவதையின் சிலை ஏற்பட்டது. அதன் கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். கையில் தராசு ஏந்தியிருக்கும்.

யாரைப் பார்த்தும் நீதியை வளைக்கக் கூடாது, தராசுத் தட்டு போல நீதி அனைவருக்கும் சமமாக அளிக்கப்பட வேண்டும் என்பதை இவை குறிக்கின்றன.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Fri 24 May 2013 - 22:18

ஊரடங்கு!


`ஊரடங்கு' என்பது ஆங்கிலத்தில் `கர்ப்யூ' (Curfew) எனப்படுகிறது. இதன் பொருள், `உன் வீட்டினுள் இரு' என்பதாகும். பிரெஞ்சுச் சொல்லான `கவுரே ப்யூ' என்பதில் இருந்து `கர்ப்யூ' வந்தது.

இதன் ஆதிகால அர்த்தம், `நெருப்பை மூடுவது' என்பதாகும். வெற்றி வீரர் வில்லியம் (Willium the Conquerer) இவ்வார்த்தையை இங்கிலாந்துக்குக் கொண்டு வந்தார். ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்கு அவரவர் வீட்டு நெருப்பை அணைக்க வேண்டும் அல்லது நெருப்பை மூடி வைக்க வேண்டும் என்று சமிக்ஞை அளிக்கப்படும்.

நெருப்பால் ஏற்படும் பெரிய ஆபத்தைத் தடுப்பதற்காக இந்த `கர்ப்யூ' சட்டம் முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. அரசியல் சார்ந்த கொந்தளிப்பு ஏற்படும் சமயத்தில் கர்ப்யூ மணி அடிக்கப்படும். அதன் மூலம், மக்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Fri 24 May 2013 - 22:18

பிளையிங் கலர்ஸ்


பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கடற்படைக் கப்பல்கள் தமது தகுதியை, நலத்தை அறிவிக்க கொடிகளைப் பயன்படுத்தின.

அந்தந்த நாட்டுக் கப்பல்களில் அவரவர் நாட்டுக் கொடி பறக்க விடப்படும்.

அது தவிர பத்துக்கும் மேற்பட்ட மற்ற கொடிகளும் உண்டு. அவை Colours எனப்பட்டன.

கடல் போரில் வெற்றி பெற்ற கப்பல் முழுமையாக எல்லா வண்ணக் கொடிகளையும் பறக்கவிட்டவாறு பெருமிதத்தோடு நாடு திரும்பும்.

அதிலிருந்துதான், ஒருவர் flying colours-ல் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்லும் வழக்கம் தொடங்கியது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Fri 24 May 2013 - 22:19

பாதுகாவல் தேவதைகள்

சொர்க்கவாசி ஒருவரை, கடவுள் பாதுகாக்கும் தேவதையாக (Guardian angels) நியமிக்கிறார் என்பது நம்பிக்கை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் காவல் காக்கும் பணியை அவருக்குக் கடவுள் அளிக்கிறார்.

தேவதை அல்லது `ஏஞ்சல்' என்பது ரோமன் கத்தோலிக்க நம்பிக்கையின் மறுக்கமுடியாத கொள்கையின் ஒரு பகுதி. தீயவை மற்றும் ஆபத்துகளில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றி வழிநடத்தும் பொறுப்பு ஏஞ்சலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதி பாதுகாவல் ஏஞ்சல்களுக்கு மரியாதை செய்யும் விருந்து நடைபெறும்.

அடையாளம் காண முடியாத அன்னிய கிரக பறக்கும் தட்டுகள் போல ஏஞ்சல்கள் பல உருவங்களிலும் வருவார்கள். அவரவருக்கு உள்ள நம்பிக்கைக்கு ஏற்ற விதத்திலான உருவங்கள் அவரவர் கண்களுக்குத் தெரியும்.

எரியும் புதர் போன்ற வேடத்தில் மோசசிடம் ஒரு ஏஞ்சல் வந்தது. இறக்கைகள் இல்லாத ஏஞ்சல்கள் சொர்க்கத்துக்கு ஏணியில் ஏறிச் செல்வதைப் பார்த்ததாக ஜேக்கப் சொன்னார். இயேசு கிறிஸ்துவின் கல்லறைக்கு அருகில் மனித உருவில் ஏஞ்சல்களைப் பார்த்ததாக சாட்சிகள் உறுதியாகச் சொன்னார்கள்.

எசகில் (Ezekiel of the Wheel fame) நான்கு இறக்கைகளை உடைய உயர்வகைத் தேவதூதனைக் கண்டதாகக் கூறினார். அதன் பின்னர், சாதாரணமாக எல்லோரும் ஏற்கக்கூடியதாக இரண்டு இறக்கைகளைக் கொண்ட தேவதை உருவத்தை ஓவியர்களும் வரையத் தொடங்கினார்கள். இன்றளவும் இதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

கிரேக்கச் சொல்லான `ஏஞ்சலோஸ்' என்பதற்கு `தூதன்' என்று பொருள். ஏஞ்சல் என்ற ஆங்கிலச் சொல் அதிலிருந்து உருவானது. ஹீப்ரு மொழிச் சொல்லான `மலாக்' என்பதும் தூதன் என்ற பொருளைத் தருகிறது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Fri 24 May 2013 - 22:19

டக்கர்!


நேர்த்தியாக ஆடை அணிந்தவரை, `டக்கரா டிரஸ் பண்ணியிருக்கேப்பா' என்று சொல்வது சாதாரண வழக்கம். இது `பிப் அண்ட் டக்கர்' (bib and tucker) என்ற சொற்றொடரில் இருந்து பிறந்தது.

17-ம் நூற்றாண்டில், மோசமாக உண்ணும் பழக்கத்தினால் ஆண்கள் உடையோடு `பிப்களும்' (bibs) அறிமுகம் செய்யப்பட்டன. இது கழுத்தில் கட்டித் தொங்கவிடப்படும் சிறு துணி. சாப்பிடும்போது உடை பாழாகாமல் தடுப்பது.

இந்தப் பிப்களை பெண்களும் அணிந்தனர். அவர்களுக்கான பிப்களில் `லேஸ்' வைக்கப்பட்டிருக்கும். மஸ்லின் துணியில் சுருக்கங்கள் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். ஆடைகளின் கழுத்துப் பகுதியில் இவை செருகும்படியாக இருக்கும். செருகிக்கொள்வதன் பெயர்தான் `டக்கர்ஸ்'.

சிறப்பு விழாக்களின்போது, தங்கள் உடையோடு பொருந்தக்கூடிய பிப்களையும், டக்கர்களையும் ஆண்களும், பெண்களும் தாங்களே கொண்டு வருவார்கள். பின்னர் இந்தச் சொற்றொடர் நாகரீக ஆடைகள், அழகாக ஆடை அணிவது என்ற வகையில் பிரபலம் ஆனது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Fri 24 May 2013 - 22:20

ரகசிய ஆலோசனைக் கூட்டம்!


பொதுவாக, ரகசியமாக நடக்கும் கூட்டத்தை ஏன் `இன் காமிரா' என்று குறிப்பிடுகிறோம்?

லத்தீன் மொழிச் சொல்லான `காமிரா' என்பதற்கு அறை என்று பொருள். மூடப்பட்ட இடம் அல்லது மேலே உள்ள அறை என்பதைக் குறிக்கும் பொருளில் இது 19-ம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்தது.

பிற்பாடுதான், `புகைப்படம் எடுக்கும் கருவி' என்ற அர்த்தத்தில் `காமிரா' பயன்படுத்தப்பட்டது. உண்மையில், in camera என்பதற்கு நீதிபதியின் பாதுகாக்கப்பட்ட அந்தரங்கமான அறை என்பது சரியான விளக்கம்.

புகைப்படக் கருவி ஆரம்பத்தில் `இருட்டறை' என்ற பொருளில் camera obscura என்று அழைக்கப்பட்டது. பின்னர், ஒளிபுகும் அறை என்ற பொருளில் `camera lucida' என்று அழைக்கப்பட்டது. 1840-ல் தற்கால புகைப்படக் கருவி அறிமுகமான பிறகு அது சுருக்கப்பட்டு `காமிரா' (camera) என்று வழங்கப்படுகிறது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Fri 24 May 2013 - 22:23

அன்னையர் தினம்


1907-ல் மேற்கு விர்ஜினியாவில் வசித்த மிஸ் அன்னா ஜார்விஸ், தன் தாயின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். சர்ச் பிரார்த்தனையின்போது வெள்ளை கார்னேஷன் மலர்களை அவர் எல்லோருக்கும் அளித்தார்.

அதில் தொடங்கிய `அன்னையர் தினம்', பின்னர் வணிகரீதியாகப் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. அத்தினத்தை மிக எளிமையாகக் கொண்டாடும் வழக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக ஜார்விஸ் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். அந்த முயற்சியில் அவர் தனது பணம் முழுவதையும் இழந்துவிட்டார்.

அன்னையர் தினம் ஆடம்பரமாகக் கொண்டாடப்படும் முறையை நிறுத்த எடுத்துக் கொண்ட முயற்சியாலும், அது ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவதைக் கண்டு வருந்தியதாலும் உடல் நலிந்த ஜார்விஸ், முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு யாருமில்லாத அனாதையாக 1948-ம் ஆண்டு ஜார்விஸ் மரணமடைந்தார்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Muthumohamed Fri 24 May 2013 - 22:24

காயத்துக்கு முத்தம்!


தங்கள் குழந்தைக்கு காயம் அல்லது சிராய்ப்பு ஏற்படும்போது அந்த இடத்தில் முத்தமிடுவது பல நாட்டுப் பெற்றோருக்கு வழக்கமாக உள்ளது. அதன்மூலம், காயத்தை விரைவில் குணப்படுத்தலாம் என்று எண்ணுகிறார்கள்.

இது, பழைய காலத்திய மருத்துவ முறையில் இருந்து தோன்றியதாகும். பாம்பு கடித்த இடத்தில் வாயை வைத்து உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் அந்த நபர் காப்பாற்றப்படுவார் என்பது பழங்கால மக்களின் நம்பிக்கை. அப்படியே, எல்லா புண்களையும், காயங்களையும் குணப்படுத்திவிடலாம் என்ற எண்ணத்தில், காயம்பட்ட இடத்தில் முத்தமிடுவது தொடர்கிறது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Empty Re: முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum