சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 11:24 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 11:20 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

திருக்குறள் கதைகள் Khan11

திருக்குறள் கதைகள்

2 posters

Go down

திருக்குறள் கதைகள் Empty திருக்குறள் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 14, 2015 6:34 pm

ஒரு எறும்பிற்கு தாங்க முடியாத தாகம்…தண்ணீர் குடிக்க ஒரு நதிக்கு சென்றது.அது தண்ணீர் குடிக்கும் சமயத்தில் வெள்ளம் வந்து அதை அடித்துக்கொண்டு போயிற்று.தண்ணீரில் மூழ்கும் தறுவாயில்

இருந்த எறும்பை அருகாமையில் மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.உடனே அது மரத்திலிருந்த ஒரு இலையை பறித்து எறும்புக்கு அருகே தண்ணீரில் போட்டது.இலையின் மேல்
எறும்பு மெதுவாக ஏறி கரையைஸ் சேர்ந்தது.சிறிது நேரத்திற்குப் பிறகு….வேடன் ஒருவன் வந்து …

மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறாவைப் பிடிக்க எண்ணி….அதை நோக்கி…வில்லில் அம்பைப் பொருத்தி
குறி பார்த்தான்.அதை கவனித்துக் கொண்டிருந்த எறும்பு வேடனின் காலில் கடித்தது.அதனால் ஏற்பட்ட வலியில் வேடனின் குறி தப்பியது.புறாவும் அங்கிருந்து “சட்” என பறந்தோடி தப்பியது.

ஒருவர் நமக்கு செய்த உதவிக்காக அவரிடம் நன்றியுள்ளவனாக இருப்பதோடு…..சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவருக்கு உதவவும் வேண்டும்.

இதையே திருவள்ளுவர்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்கிறார்.

ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறக்கக்கூடாது.அதே சமயம் யாரேனும் நமக்கு தீமை செய்தால் அதை மறந்துவிடுவது நல்லது.

நன்றி ;விவேக பாரதி தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறள் கதைகள் Empty Re: திருக்குறள் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 14, 2015 6:37 pm

இன்னா செய்தாரை ஒறுத்தல்!!!
-------------------------------------------------

ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது.

துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள்.
பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான்.

“அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி….” என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.
அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்:

“ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?”

துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்”

குறள்: 314

நன்றி ;விவேக பாரதி தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறள் கதைகள் Empty Re: திருக்குறள் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 14, 2015 6:40 pm

புகழ்ச்சியும் ஒரு போதை!!!
-------------------------------------------

புகழ்ச்சியும் ஒரு போதைப் பொருள்தான் – வளர்க்கும் (அ) வீழ்த்தும் சிலரை
புகழுக்காய் மயங்காதவர்கள் யாரும் கிடையாது. சிலருக்கு தானாய் அமைகின்றது. சிலர் அதனைத் தேடிப் பெற்றுக்கொள்கின்றனர். சிலர் பணம் கொடுத்து வாங்குகின்றனர். புகழ்ச்சியாய் இருந்தாலும் அல்லது இகழ்ச்சியாய் இருந்தாலும் கூட அதில் நமக்கு நன்மையைத் தரக்கூடியவற்றின் வினையூக்கியின் மீதே நம்பார்வை அமைதல் வேண்டும்.

“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று ”

அதாவது, பிறர் உள்ளங்களில் தோன்றினால் புகழோடு தோன்றுக. அது முடியாதவர்கள் இகழோடு தோன்றுவதைக் காட்டிலும் இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து தான் வாழ்ந்த சுவடே தெரியாமல் மறைந்துபோகும் மக்களைப் போல ஒன்றுமே தோன்றாதிருப்பது நன்று.

கதை:

ஒரு ஏரிக்கரையில் இருந்த மாமரத்தின் அடியில், அவ்வழியே சென்ற நரி இளைப்பாற ஒதுங்கியது. அவ்வேளையில் காற்றில் ஒரு மாம்பழம் கீழே விழுந்தது.
அதைச் சுவைத்த நரி, “ஆஹா! பழம் தித்திப்பாக இருக்கிறதே!’ என்று மகிழ்ந்து, மரத்தை அண்ணாந்து பார்த்தது. நிறைய பழங்கள் தொங்கின. மேலும் சில பழங்களைச் சுவைக்க ஆசை எழுந்தது.
மரத்தில் ஒரு காகம் அமர்ந்திருந்தது. நரிக்கு அதன் புத்தி வேலை செய்தது. காகத்தைப் புகழ்ந்து பேசினால் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டது.

காகத்தை பார்த்து, “”தங்கம் போன்று பொன்னிறமாக இருக்கும் அன்புக்காகமே! நல்ல மயிலின் அழகும், குயிலின் குரலும் கொண்டு விளங்குகிறாயே!” என்று ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியது.

இதைக்கேட்ட காகம்,”” உத்தமமான குலத்தில் பிறந்திருப்பதால் உமக்கு என் அருமை பெருமை எல்லாம் தெரிந்திருக்கிறது. பாவம்! நடந்து வந்த களைப்பும், அயர்வும் உம் முகத்தில் தெரிகிறது. உம் வயிறு நிறையும்படி நன்கு மாம்பழங்களைப் புசியுங்கள்!” என்று கூறி மாம்பழங்களை கொத்திக் கிழே போட்டது.
நரி, “”என்ன நாம் சொல்லி விட்டோம். மயில், குயில் என்று புகழ்ந்து பேசினோம். அவ்வளவுதானே! அதற்காக நம்மை உத்தமகுலம் என்று புகழ்ந்ததோடு, பசிக்கு பழங்களும் தந்து அமர்க்களப்படுத்தி விட்டதே!” என்று எண்ணியவாறே சுவைத்து மகிழ்ந்தது.

தங்களுக்கு ஏதோ கிடைக்கிறதே என்பதற்காக, தகுதியற்றவர்களைப் புகழ்ந்து பேசுவதை தவிருங்கள்.

நன்றி ;விவேக பாரதி தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறள் கதைகள் Empty Re: திருக்குறள் கதைகள்

Post by கமாலுதீன் Tue Apr 14, 2015 7:26 pm

"புகழ்ச்சியும் ஒரு போதைப் பொருள்தான் – வளர்க்கும் (அ) வீழ்த்தும்"


உண்மையான வரிகள்... ஒருவனுக்கு மிகப் பெரிய எதிரியே அவனைப் பற்றி பிறர் கூறும் புகழ்தான். பணிவு என்ற ஆயுதம் தான் அவனை புகழ் என்ற எதிரியிடம் இருந்து காக்கும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

திருக்குறள் கதைகள் Empty Re: திருக்குறள் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum