சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Khan11

தொடர்கதை : கலையாத கனவுகள்... !

+2
பானுஷபானா
Nisha
6 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Sat 11 Jul 2015 - 12:50

  
மார்ச் - 2013-ல் மனசு தளத்தில் ஆரம்பித்து 80 பகுதிகளாக பதிந்த 'கலையாத கனவுகள்' என்ற எனது முதல் தொடர்கதையை இங்கு பதிகிறேன். தினந்தோறும் அல்லது வாரத்தில் ஆறு பகுதிகள் (ஒரே நாளில் இரண்டு பகுதிகள்) என்ற கணக்கில் பதியலாம் என்று நினைக்கிறேன். இது எனது முதல் தொடர்கதை... இதில் நிறையைவிட குறைகள் நிறைய இருக்கலாம்... லாம் என்ன இருக்கும். எனவே நிஷா அக்கா (முன்பு படித்திருந்தாலும்) உள்ளிட்ட அனைவரும் தங்கள் உண்மையான கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்... என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள உதவும். வேரும் விழுதுகளைத்தான் நிஷா அக்கா பதியச் சொன்னார். பானு அக்கா கூட கேட்டிருந்தார். ஒரு சில காரணங்களால் இங்கு பதியவில்லை. ஆனால் இதைத் தொடர்ந்து அதையும் பதிவேன். 
நன்றி.

நட்புடன்...,
சே.குமார்.


தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Ayyaதொடர்கதை : கலையாத கனவுகள்... ! Kutties
                      
   என்னை எழுத்தாளனாக ஆக்கிப் பார்த்து... எனது கதைகளைப் படித்து நிறை குறைகளை எடுத்துச் சொல்லி... இன்னும் என்னை எழுதத் தூண்டும் எனது கல்வித்தந்தை பேராசிரியர். மு.பழனி இராகுலதாசனுக்கும் என் கதை பத்திரிக்கைகளில் வந்தால் படிக்கத் தெரியாவிட்டாலும் என் அப்பா எழுதிய கதை என்று புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வீதியெங்கும் விளம்பரம் செய்யும் என் செல்ல மகளுக்கும் இக்கதையை சமர்ப்பிக்கிறேன்....
*****************

அத்தியாயம்_7 : அதிர்ச்சி!
அத்தியாயம்_8 : மொட்டுக்கள் மலருமா?
அத்தியாயம்_9 : கோபம் கொள்ளும் மனம்!
அத்தியாயம்_10 : நெஞ்சுக்குள் காதல் விதை!
அத்தியாயம்_11 : ஊடலுக்குப்பின் நட்பு!
அத்தியாயம்_12 : சண்டை ஆரம்பம்
அத்தியாயம்_13 : தீர்ப்புக்கள் திருத்தப்படுமா?
அத்தியாயம்_14 : பதறும் பாவை
அத்தியாயம்_15 : வாடகை அம்மா
[url=http://www.chenaitamilulaa.net/t50220p121-topic#468857]அத்தியாயம்_16 : மீண்டும் ஊடல்[/url]
அத்தியாயம்_17 : மீண்டும் கூடல்

Spoiler:


Last edited by சே.குமார் on Thu 24 Sep 2015 - 16:22; edited 1 time in total
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Sat 11 Jul 2015 - 21:08

வாவ்! அருமை அருமை, அசத்தல்!

கதை படித்து கதையின் முடிவும் தெரியும் எனினும்  பின்னூட்டம் இடுவதுக்காகவானது மீண்டும் படிப்பதில் சுவாரஷ்யம்  இருக்கின்றதுப்பா!

கதை நிகழ்காலத்தில் நடப்பது போல் ஆரம்பித்து  முடித்தும் இருக்கும் போது... இடையில் கொசுறாக... கீழே இருக்கும் வரிகள் கடந்த காலத்தினை சுட்டுவது போல் வருவதேன்...?

இப்ப இருப்பது போல் இணையதள வசதி இல்லை எனில் யாரோ ஒருவர் கடந்து போனதை  பிளாஸ்பேக் சொல்வதாய் ஆகின்றதே!

Code:
இப்ப இருப்பது போல் இணையதள வசதி அவ்வளவு பிரபலமாகவில்லை. தேர்வு முடிவுகள் எல்லாம் நாளிதழ்கள் மூலமாகத்தான் அறிய வேண்டும். மதியம் இரண்டு மணிக்கெல்லாம் மாலைமலர் சிறப்புப் பதிவில் முடிவு வந்துவிடும் என்பதால் முதல் நாளே கருணாநிதி அண்ணன் பெட்டிக்கடையில் சொல்லி வைத்திருந்தான். இருந்தாலும் இருப்புக் கொள்ளாமல் ஒரு மணிக்கெல்லாம் சைக்கிளில் தேவகோட்டை நோக்கி விரையலானான்.


கதை ஆரம்பம், கிராமிய மண்வாசனை, அன்றாடம் கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளைகளை படிக்க வைக்க ஆசைப்படும் தாயின் மனஏக்கம்,  பெண்களை படிக்க வைக்கவும் ஊரார் சம்மதம் வேண்டும் எனும் நிலைஎன பல விடயங்களோடு ஆரம்பித்திருக்க்ன்றது. 


நாயகன்  பெயர் ராம்கி, அம்மாவின் கஷ்டம் உணர்ந்த பிள்ளையாய் இருக்கின்றான். இனி போகப்போகத்தான் தெரியும்.. என்னாகும் என பார்ப்போம்.   


அடுத்தும் தொடருங்கள்...


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Sat 11 Jul 2015 - 22:03

Nisha wrote:வாவ்! அருமை அருமை, அசத்தல்!

கதை படித்து கதையின் முடிவும் தெரியும் எனினும்  பின்னூட்டம் இடுவதுக்காகவானது மீண்டும் படிப்பதில் சுவாரஷ்யம்  இருக்கின்றதுப்பா!

கதை நிகழ்காலத்தில் நடப்பது போல் ஆரம்பித்து  முடித்தும் இருக்கும் போது... இடையில் கொசுறாக... கீழே இருக்கும் வரிகள் கடந்த காலத்தினை சுட்டுவது போல் வருவதேன்...?

இப்ப இருப்பது போல் இணையதள வசதி இல்லை எனில் யாரோ ஒருவர் கடந்து போனதை  பிளாஸ்பேக் சொல்வதாய் ஆகின்றதே!

Code:
இப்ப இருப்பது போல் இணையதள வசதி அவ்வளவு பிரபலமாகவில்லை. தேர்வு முடிவுகள் எல்லாம் நாளிதழ்கள் மூலமாகத்தான் அறிய வேண்டும். மதியம் இரண்டு மணிக்கெல்லாம் மாலைமலர் சிறப்புப் பதிவில் முடிவு வந்துவிடும் என்பதால் முதல் நாளே கருணாநிதி அண்ணன் பெட்டிக்கடையில் சொல்லி வைத்திருந்தான். இருந்தாலும் இருப்புக் கொள்ளாமல் ஒரு மணிக்கெல்லாம் சைக்கிளில் தேவகோட்டை நோக்கி விரையலானான்.


கதை ஆரம்பம், கிராமிய மண்வாசனை, அன்றாடம் கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளைகளை படிக்க வைக்க ஆசைப்படும் தாயின் மனஏக்கம்,  பெண்களை படிக்க வைக்கவும் ஊரார் சம்மதம் வேண்டும் எனும் நிலைஎன பல விடயங்களோடு ஆரம்பித்திருக்க்ன்றது. 


நாயகன்  பெயர் ராம்கி, அம்மாவின் கஷ்டம் உணர்ந்த பிள்ளையாய் இருக்கின்றான். இனி போகப்போகத்தான் தெரியும்.. என்னாகும் என பார்ப்போம்.   


அடுத்தும் தொடருங்கள்...
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா....
இந்தத் தவறை நானே இப்போதுதான் அறிகிறேன்... அந்த வரியே தேவையில்லை... தவறைச் சுட்டியமைக்கு நன்றி அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Sun 12 Jul 2015 - 12:38

அட! கதை  எழுதி  சில வருடங்களாகி இருக்குமே குமார்! மனசு தளத்திலேயே நிரம்ப பேர் படித்திருப்பார்களே! யாருமே  இதை சுட்டி காட்டவில்லையா? 

அப்படின்னால் எனக்கு என்ன பரிசு தருவீர்கள்? நம்ம கண்ணில்  நல்லது படுதோ இல்லயோ இம்மாதிரி தப்புக்கள் சட்டென பட்டு விடுமே!ஐ ஜாலி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Sun 12 Jul 2015 - 12:43

குமார் நீங்கள்  கதையை தொடராய் பதிவது எனில் இந்த திரியிலேயே அடுத்த தொடரையும் பதியுங்கள். அப்படி தொடராய் பதிந்தால்  தொடர் கதை படிக்க ஆர்வமிருப்போர் அடுத்து அடுத்து என பக்கம் புரட்டி படிப்பார்கள். ஒவ்வொரு அத்தியாயத்துக்குமான பின்னூட்டங்களோடு கதை படிக்கவும் சுவரஷ்யமாக இருக்கும். 

தனித்திரியில் பதிந்தால் தேடி படிக்க சோம்பல் பட்டு படிக்க மாட்டார்கள்.  அத்தியாயங்கள் புதிதாய் பதியும் போது   நான்  உங்கள் முதல் பதிவில்   லிங்க் இணைத்து விடுவேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Sun 12 Jul 2015 - 15:47

Nisha wrote:அட! கதை  எழுதி  சில வருடங்களாகி இருக்குமே குமார்! மனசு தளத்திலேயே நிரம்ப பேர் படித்திருப்பார்களே! யாருமே  இதை சுட்டி காட்டவில்லையா? 

அப்படின்னால் எனக்கு என்ன பரிசு தருவீர்கள்? நம்ம கண்ணில்  நல்லது படுதோ இல்லயோ இம்மாதிரி தப்புக்கள் சட்டென பட்டு விடுமே!ஐ ஜாலி
வணக்கம் அக்கா...
தவறுகள் சுட்டப்படவில்லை... இனி தவறுகள் திருத்தப்படும் அக்கா....
நம்ம கேசுதான் போல  நீங்களும்... தவறுகள் எனக்கு சட்டுன்னு கண்ணில் படும்... ஒருவேளை மற்றரின் தவறுகள் மட்டுந்தான் போல ஏன்னா என்னோட தவறு தெரியாமப் போச்சே... ஆனா இதுக்கு காரணம் இருக்குக்கா... இந்தக் கதையின் முடிவில் ராம்கியின் நினைவுகளாய் மலர்ந்தது போல முடிக்க நினைத்து ஆரம்பித்தது. ஆனா நாமதான் அப்பப்ப எழுதுற ஆளாச்சே... ஒவ்வொரு பகுதியும் போகும் போது கதை மாறி வேற  வேற டிராக்குல போயி 80 தொட்டப்போ மொத்தமா மாறி முடிஞ்சிருச்சு...

அதான் ஆரம்பத் தவறுகள்... ஆனா இப்ப பதியும் போதாச்சும் தவறுகள் திருத்தப் பட்டிருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க என் தவறே... 

என்ன பரிசு அக்கா வேணும்? (எப்பூடி)
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Sun 12 Jul 2015 - 15:53

Nisha wrote:குமார் நீங்கள்  கதையை தொடராய் பதிவது எனில் இந்த திரியிலேயே அடுத்த தொடரையும் பதியுங்கள். அப்படி தொடராய் பதிந்தால்  தொடர் கதை படிக்க ஆர்வமிருப்போர் அடுத்து அடுத்து என பக்கம் புரட்டி படிப்பார்கள். ஒவ்வொரு அத்தியாயத்துக்குமான பின்னூட்டங்களோடு கதை படிக்கவும் சுவரஷ்யமாக இருக்கும். 

தனித்திரியில் பதிந்தால் தேடி படிக்க சோம்பல் பட்டு படிக்க மாட்டார்கள்.  அத்தியாயங்கள் புதிதாய் பதியும் போது   நான்  உங்கள் முதல் பதிவில்   லிங்க் இணைத்து விடுவேன்.
இங்கே என்றால் எப்படி கருத்துப் போல... அல்லது post title -ல தலைப்புக் கொடுத்து பதியணுமா அக்கா?
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Thu 16 Jul 2015 - 14:58

 1.   படிப்பே பிரதானம்
 1996-ஆம் வருடம்...

மாடு,ஆடு, நாய், கோழிகளின் சத்தத்துடன் அழகான கிராமத்துக் காலைப் பொழுது...

"என்னடா குட்டி போட்ட நாயாட்டம் சுத்தி சுத்தி வாறே..."

"இன்னைக்கு ரிசல்ட் வருதுல்லம்மா... அதான் பயமா இருக்கு"

"என்னடா பயம் வேண்டிக்கெடக்கு... பாஸ் பண்ணிருவல்ல... ஒங்கப்பன் போனதுக்கு அப்பறம் பாலு யாவாரம் பாத்துத்தான் ஒங்கள படிக்க வக்கிறேன்... மூத்தவன் குடும்ப சூழ்நிலையால படிக்க முடியல... அக்கா படிச்சா... பொட்டபுள்ளய காலகாலத்துல கரை சேக்குற காரியத்தை பாக்காம படிக்க வச்சி அழகு பாக்குறியோன்னு அங்காளி பங்காளிக சத்தம் போட்டதால படிப்ப நிப்பாட்டி வீட்டுல இருக்க வச்சிட்டேன். நீயாவது நல்லா படிக்கணுங்கிறது என்னோட கனவுடா... அதுல மட்டும் மண் அள்ளிப் போட்டுறாதேடா..."

"ஐய்யோ அம்மா... ஆ...ஊன்னா புராணம் வாசிக்க ஆரம்பிச்சிருவே..."

"ஆமாடா... நாஞ் சொல்றது ஒனக்கு புராணமாத்தான்டா இருக்கும்... காலேசு படிக்கப் போறமுன்னு தெனாவெட்டு வந்திருச்சா..."

"அதெல்லாம் இல்லம்மா... நல்ல மார்க் வாங்கணுமேன்னு கவலையா இருக்கும்மா... நீங்க வேற தேவையில்லாம பேசி டென்சனாக்கிட்டிங்க..."

"நா... பேசுற ஒங்களுக்கு தேவையில்லாததுதான்... நாயி படிச்சா நாளைக்கு ஒம் பொண்டாட்டி புள்ள மதிக்கும்... இல்லயின்னா கேவலந்தான் படணும்... எனக்கா நாளக்கி சம்பாதிச்சு போடப்போறே... எங்கிட்டு கெடக்கே எடுபட்ட சிறுக்கின்னு கூட கேக்குறியோ இல்லையோ.... யாரு கண்டா... சரி சரி கஞ்சிய குடிச்சிட்டு சித்தம் போக்கு செவம் போக்குன்னு சுத்தி வா... எனக்கு வேல கெடக்கு... ஒனக்கு கஞ்சிய ஊத்திட்டு நா போயி மாடுகளை அவுத்து விட்டிட்டு வாறேன்..."

"சரிம்மா..."

---

இப்ப இருப்பது போல் இணையதள வசதி அவ்வளவு பிரபலமாகவில்லை. தேர்வு முடிவுகள் எல்லாம் நாளிதழ்கள் மூலமாகத்தான் அறிய வேண்டும். மதியம் இரண்டு மணிக்கெல்லாம் மாலைமலர் சிறப்புப் பதிவில் முடிவு வந்துவிடும் என்பதால் முதல் நாளே கருணாநிதி அண்ணன் பெட்டிக்கடையில் சொல்லி வைத்திருந்தான். இருந்தாலும் இருப்புக் கொள்ளாமல் ஒரு மணிக்கெல்லாம் சைக்கிளில் தேவகோட்டை நோக்கி விரையலானான்.

ரிசல்ட் வந்து மார்க் சீட்டும் வாங்கியாச்சு... முன்னூற்றி அறுபது மார்க் வாங்கியிருந்தான். விவரம் தெரிந்த நண்பர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சாத்தான் நல்லது என்று சொல்லி அவனையும் அதற்கே அப்ளிகேசன் போடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கு சிலவாகும் என்றும் சொன்னதால் அம்மாகிட்ட கேட்டுத்தாண்டா சொல்லணும் என்று சொல்லிவிட்டான்.

"அம்மா... என் பிரண்டெல்லாம் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல சேரப் போறாங்களாம்."

"என்ன பூட்டரோ படி... வேணாங்கல... நாலு பேருமாதிரி நீ நல்லா இருக்கணும்... அதுவும் ஒம்மாமனுக்கு முன்னால நாலெழுத்து படிச்சு உசந்து நிக்கணும்... இந்த ஸ்கூலுல சேக்கப் போகும்போது படிச்சவன் அவந்தான்னு ஒதவி கேக்கப் போனா வேலயிருக்குன்னு சொல்லி வரமாட்டேனுட்டான்... அன்னைக்கு நா ஒன்னய குறுக்கால நடந்து கூட்டிக்கிட்டு போயி கஷ்டப்பட்டு சேர்த்தேன்... அத மறந்துறாத... அதுதான் முக்கியம்..."

"படிப்பேம்மா... ஆனா கம்ப்யூட்டர் படிப்புக்கு அதிகம் செலவாகுமாம்..."

"எம்புட்டாம்... கூடையிலயா கேக்கப்போறாங்க..."

"இல்ல நம்ம சரவணன் அக்கா படிக்கிறாங்க... அவங்க சொன்னாங்க ஒரு செமஸ்டருக்கு ஆறாயிரத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்குமாம்... "

"வருசத்துக்கா...?"

"வருசத்துக்கு ரெண்டு செமஸ்டராம்... பன்னெண்டாயிரம்... அப்புறம் மத்த செலவு..."

"அம்புட்டுக்காசுக்கு ஆத்தா நா எங்கய்யா போவேன்... குருவி சேக்கிறமாதிரி சீதை கல்யாணத்துக்குத்தான் சேத்துக்கிட்டு வாறேன். அதை எடுத்துக் கொடுத்துப்புட்டா நீ படிச்சு முடிக்கிறவரைக்கும் அவள கரை சேக்காம இருக்க முடியாதேய்யா... அண்ணங்கிட்ட கேளு... நாளக்கி சரவணன் வீட்டுக்கு போகும் போது போன்ல அண்ணன கூப்பிட்டு விவரம் சொல்லு... அவன் என்ன சொல்றான்னு கேக்கலாம்...ம்... சரியா..."

"ம்..."

----

"டேய் உங்கண்ணன்கிட்ட அம்மா பேச சொன்னாங்கன்னாய்... பேசுடா"

"வேணான்டா... அதையும் வீணாவுல செரமப்படுத்திக்கிட்டு... பேசாம பிஸிக்ஸ் சேர்ந்திடலாமுன்னு நினைக்கிறேன்... அது போதுன்டா..."

"சரி... உனக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யிடா..."

“ம்... குடும்ப சூழலையும் பாக்கணுமில்ல... அக்காவுக்கு எப்ப வேணுமின்னாலும் கல்யாணம் வைக்கலாம்...”

"ம்.... சரி... அப்புறம் நாளக்கி காலேசுல அப்ளிகேசன் கொடுக்கிறாங்களாம்... காலயில பத்து மணிக்கெல்லாம் அறிவு வரச் சொல்லியிருக்கான்... அவங்க அப்பா சொன்னாராம்..."

அறிவு அப்பா காலேசு ஆபீஸ்லதான் வேலை செய்யிறார். அதனால அவன் மூலமா நினைக்கிற குரூப் வாங்கிரலாமுன்னு சொல்லியிருந்தான்.

"சரிடா... எங்க வரணும்?"

"கரெக்டா 9.45க்கு காலேசு எண்ட்ரண்ஸ்க்கிட்ட வந்திடு..."

"சரிடா"

"சீக்கிரமா வந்தா செம்மேரிசுக்கு எதிர்த்தாப்புல இருக்க கடைக்கிட்ட நில்லு. நாங்க வந்திடுறோம்..."

"ம்..."

---
மறுநாள் காலை 10 மணி...

முன்னதாகவே செம்மேரிசுக்கு எதிர்த்த டீக்கடையில் நிற்க, நண்பர்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர் எல்லாரும் வந்ததும் சைக்கிள் மீண்டும் கிளம்பி செம்மேரிசை ஒட்டியிருக்கும் ரோட்டில் திரும்ப ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி நுழைவு வாயில் வளைவும் அதன் அருகில் இருந்த கல்லறையும் வரவேற்க சைக்கிளை மிதித்தனர்.

தன் வாழ்வின் புதிய அத்தியாயம் இங்கு ஆரம்பமாகப் போகிறது என்பதை அறியாமல் கல்லூரி நோக்கி நண்பர்களுடன் பயணித்தான் கதையின் நாயகன் ராம்கி என்ற ராமகிருஷ்ணன்.

-தொடரும்...
****************************
-'பரிவை' சே.குமார்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Thu 16 Jul 2015 - 15:10

குமார் இந்த திரியில் உங்கள் அடுத்த  அத்தியாயத்தினை பின்னூட்டம் இடுவது போல்  அத்தியாயம்  2 க்குரிய தலைப்பை   பெரிய எழுத்தில் இட்டு பதியுங்கள்.  அத்துடன்இந்த திரியில்  உங்கள் முதல் பதிவையும்  பாருங்கள்.  நீங்கள் இக்கதையினை தொடராய் பதியும் போது திரி பல பக்கங்கள். தொடரோடும் பின்னூட்டங்களோடும் செல்லும் போது படிக்க சுவாரஷ்யமாகவும்  ஒரு புத்தகம் போல் ஒரே திரியில்  தொகுப்பாகவும் இருக்கும். ஒவ்வொரு அத்தியாயத்துக்குமான பின்னூட்டங்கள்  கதைக்கு இன்னும் சுவாரஷ்யம் சேர்க்கும். 

இப்போது கதை படித்து பின்னூட்டம் இல்லை என கவலைப்படாமல் பதியுங்கள்.எல்லோரும் நோன்பு பிசியில் நெட் வர முடியாமல் இருக்கின்றார்கள். நோன்பு முடிந்த பின் வந்து கருத்திடுவார்கள் குமார். நீங்கள் தொடர்ந்து பதியுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Thu 16 Jul 2015 - 15:13

http://www.chenaitamilulaa.net/t44908-99#388614

இங்கே சென்று பாருங்கள்.     முதல் பதிவிலிருக்கும் பூக்கள் அதன் லிங்குக்கு செல்லும் படி இணைத்திருக்கின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty தொடர்கதை : கலையாத கனவுகள் - 2

Post by சே.குமார் Fri 17 Jul 2015 - 8:23


தொடர்கதை : கலையாத கனவுகள் - 2








2.அம்மாவின் ஆசை
முன்கதை:
ழைக் குடும்பத்தில் பிறந்து  தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்து விட்டு வீட்டில் இருக்கிறான்.
இனி...
ன்ன நாகம்மா... எப்படியிருக்கே... இந்தா உம்மவனுக்கு லெட்டர் வந்திருக்கு...”
“எங்க இருந்து வந்திருக்கு சாமி...”
“காலேசுல இருந்து வந்திருக்கு....”
“காலேசுல இருந்தா... என்னமோ... ஏதோ தெரியலையே... இந்தப் பயலயும் காணாமே... சாமி என்னன்னு கொஞ்சம் பாத்து சொல்லிட்டுப் போங்களேன்...”
லெட்டரைப் பிரித்துப் பார்த்துவிட்டு உம்மவனுக்கு காலேசுல சீட்டுக் கிடைச்சிருக்கு.... வர்ற இருபத்தி ஏழாந்தேதி காலையில பணத்தோட வரச்சொல்லியிருக்காங்க...”
“எம்புட்டுப் பணஞ்சாமி?”
“என்ன யானையிலயா கேக்கப் போறாங்க.... சும்மா எழனூத்தம்பது ரூபாதான் கொண்டாரச் சொல்லியிருக்காங்க...”
“கவருமெண்டு உத்தியோகம் பாக்குற ஒங்களுக்கு இது சும்மா தெரியலாம்... எங்கள மாதிரி அன்னாடங்காச்சிகளுக்கு இது அதிகந்தானே சாமி...”
அவள் சொல்வது அவருக்கு உண்மையாகப்பட ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினார்.
“சரி... எங்க உன்னோட நாத்தனார்..?”
“ஏஞ்சாமி... பணம் கிணம் வந்திருக்கா...”
“பணமெல்லாம் வரல... அதோட வீட்டுக்காரர் லெட்டர் போட்டிருக்கிறார்.”
“எங்கிட்ட கொடுங்க சாமி... நாங்கொடுத்துடுறேன்...”
“சரி... இந்தா... பயல நல்லாப் படிக்க வையி... அவந்தான் இந்தக் குடும்பத்தை தூக்கி நிறுத்தப் போறவன்...”
“சரி சாமி... இருங்க... மோரு கலந்து தாறேன்... வெயிலுக்கு நல்லாருக்கும்...” என்றபடி உள்ளே சென்று குளிர்ந்த மண் பானைத் தண்ணியில் மோர் கலந்து வந்து கொடுத்தாள்.
----

க்கோவ்.... ராசாத்தி அக்கோவ்... உம்மருமவனுக்கு காலேசுல வந்து சேரச் சொல்லி லட்டர் வந்திருக்கு...”
“ம்... மாப்பிள்ளை பெரிய படிப்பு படிக்கப் போறானாக்கும்...”
“ஆமா... அடியே சுதா.... எம்மவனுக்கு காலேசுல சேரச் சொல்லி லட்டர் வந்திருக்கு... சின்னக்கண்ணு மாமோவ் உங்க பேராண்டிக்கு காலேசுல இடங்கெடச்சிருக்கு... ராசு மச்சான் உங்க மயன் காலேசுக்குப் போகப்போறான்..”
வாசலில் உக்காந்து கொண்டு வருவோர் போவோரிடமெல்லாம் தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள் அந்த ஏழைத்தாய்.
“அம்மோவ்... அம்மா... எதுக்கும்மா கூவுறே... அவனுக்கு காலேசுல வந்து சேரச்சொல்லித்தானே லெட்டர் வந்திருக்கு... என்னமோ கலெக்டர் உத்தியோகம் கிடைச்ச மாதிரி எதுக்கு இப்புடி கத்தி ஊரைக்கூட்டுறே... “ அம்மாவை அடக்கினாள் சீதா.
“ஒனக்கு அவன் பெரிய படிப்பு படிக்கப் போறான்னு வயித்தெரிச்சடி... எம்புள்ள நாளக்கி கலக்கிட்டரு ஆகத்தான் போறான்... நீயும் பாக்கத்தான் போறே...”
“ஆமா.... வயித்தெரிச்சல்ல சுருண்டு கெடக்கம்பாரு.... பொட்டப்புள்ள படிக்க வேண்டாமின்னு வீட்டு வேல பாக்கச் சொன்னது நீயி.... இல்லயின்னா நாங்களும் காலேசு போயிருப்போம்... ஆமா எங்க உன்னோட சீமந்த புத்திரன்... இன்னும் ஆளக் காணோம்... இருட்டுக்குள்ள பயந்துக்கிட்டு வேர்க்க விறுவிறுக்க சைக்கிளை ஓட்டிக்கிட்டு வருவான்... வந்ததும் ஆத்தா முந்தானையில மூச்சி தொடக்கிறதும்... எதுக்குச்சாமி இப்பிடி படபடக்க வாறேன்னு நெஞ்சத்தடவி விடுறதும்... இப்பவே ரொம்ப ஓவரா இருக்கு... இனி காலேசு போனா அம்புட்டுத்தான் தரையில காலு ஊன விடமாட்டே...”
“ஆமாண்டி... அதுக்கு என்ன இப்போ... அடுப்பு புகையிது பாரு... போயி ஊதிவிடு....”
சைக்கிள் மணி அடிக்கும் சத்தம் தூரத்தில் கேட்கும் போதே “எம்மவன் வந்துட்டான்... சாயந்தரம் பால ஊத்திட்டு வாங்கிக்கிட்டு வந்த அப்பத்தை எடுத்தா... புள்ள ஒண்ணுகூட திங்காம வந்திருக்கும்...”
“அம்மா.... வரட்டும் வந்தோடனே கொடுக்கலாம்.... தூக்கிக்கிட்டு ஓடி வழியில கொடுக்கப் போறியா... இல்ல நாந் தின்னுடுவேன்னு பயப்படுறியா...”
சைக்கிளை நிப்பாட்டிவிட்டு சீதா சொன்னது போல அம்மாவின் முந்தானையில் வியர்வையை துடைத்தான்.
“அண்ணன்கிட்ட பேசினியா? என்ன சொன்னான்?”
“பணம் அனுப்பி வைக்கிறேன்னு சொன்னுச்சு... எதுக்கும் சின்னம்மாகிட்ட பணம் வாங்கி வச்சிக்க சொன்னுச்சு... பணம் டயத்துக்குள்ள வரலைன்னா.... கட்ட வேணுமில்லன்னு சொன்னுச்சு...”
“ஆமா... ஆ... ஊன்னா அவகிட்ட வாங்க சொல்லிடுவான்... நா இங்க எல்லாத்தையும் போட்டது போட்டபடி போட்டுட்டு இதுக்காக உங்க சின்னத்தா வீட்டுக்குப் போகணுமாக்கும்... சரி நம்ம மாரிக்கண்ணு மாமாகிட்ட சொல்லி வச்சு வாங்கிக்கலாம்... இந்தா இந்த அப்பத்தைத் தின்னு...”
“எதுக்கும்மா மாரியய்யாக்கிட்ட கேட்டுக்கிட்டு... நா வேணா சின்னம்மாக்கிட்ட வாங்கிட்டு வாறேன்...”
“ஏண்டா... மாரிக்கண்ணு மாமா ராசியானவங்க... அவங்க பணம் உனக்கு கட்ட கெடைக்கணுமே...”
“அதுக்காக அவருகிட்ட கேக்கப் போயி கட்டப் பணமில்லன்னு கேட்டா என்ன நெனப்பாரு...”
“ஒண்ணு நெனக்க மாட்டாரு... மூத்தவன் அனுப்புன பணம் வந்துட்டா வாங்க வேண்டாம்... இல்லேன்னா வாங்கிட்டு பணம் வந்தோடனே கொடுத்துடலாம்...”
“ம்... சரிம்மா”
----


ம்பி முத நாலு காலேசுக்குப் போறே... நல்லா சாமிய விழுந்து கும்பிட்டுட்டு துணூறை அள்ளிப் பூசிக்க... அப்பா படத்தையும் கும்பிட்டுட்டு போ... போகும் போது  மாரியாத்தா கோயில்ல இந்த காசை உண்டியல்ல போட்டுட்டு ஆத்தா குங்குமத்தை நெத்தியில வச்சிக்கிட்டு நல்லா படிச்சு பெரியாளா வரணுமின்னு வேண்டிக்க... அப்புறம் அங்கிட்டு இங்கிட்டு திரும்பிப்பாக்காம தலய குனிஞ்சிக்கிட்டே போயிடு... எவளாவது வெறும்கொடத்தோடவும்... வெத்து நெத்தியோடவும் வருவாளுங்க... இந்தா இந்த தண்ணியக் குடிச்சிட்டு அந்தத் திண்டுல கொஞ்சம் ஒக்காரு... அடியேய் சீதா அடுப்படிக்குள்ள நிக்காம வாசப்பக்கமா நின்னு யாரும் வாறாகளா பாரு... தம்பி சீதை ராசியானவ... அவளை பாத்துட்டு விறுவிறுன்னு கோயிலுக்குப் போயிரு...”
“டேய் யாரும் வரல... வேகமா வாடா....” சீதா மெதுவாகச் சொன்னாள்.
“சரிம்மா வர்றேன்...”
பள்ளி மாணவனாக புத்தகப் பை தூக்கிக் கொண்டு போன ராம்கி, புதிய உடையில் கல்லூரி மாணவனாக ஒரு நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
“வாடா... எங்கடா சரவணன்... இன்னும் வரக்காணோம்...” என்றபடி ராம்கியின் தோளில் கை வைத்தான் அறிவு.
“வருவான்டா... ஆமா பழனி மட்டும்தானே எங்கிளாஸ்....”
“ஆமாடா... அவன் இருக்கானுல்ல... அப்புறம் என்ன... டேய் ஒரு வாரத்துக்கு ராக்கிங் பண்ணுவாங்களாம்.... என்ன பண்ணப் போறாங்களோ தெரியலை.... இன்னைக்கு தப்பிச்சிருவோம்.... ஏன்னா இன்னைக்கு செகண்ட் இயர் தேர்டு இயருக்கெல்லாம் லீவு... நமக்கு மட்டும்தான் காலேஜ்...”
“ம்.. அதான்டா எனக்கும் பயமா இருக்கு... சரி எப்படியிருந்தாலும் மூணு வருசத்துக்கு இந்தக் காலேஜ்தானே...”
நண்பர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, ஒரு குழுவாக புதிய அத்தியாயம் நோக்கிப் பயணித்தார்கள்... கல்லூரியில் வகுப்பறை எது என்று அறிந்து அவரவர் வகுப்பறை நோக்கிச் செல்ல...
ராம்கியும் பழனியும் இந்தப் பிரிவு இனி வளர்ந்து கொண்டே போகுமென்பதை உணராமல் வகுப்பிற்குள் நுழைந்தார்கள்.
(தொடரும்)

-'பரிவை' சே.குமார்
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Fri 17 Jul 2015 - 9:35

பள்ளிக்கால நட்புக்கள் காலேஜ்  சென்றபின் அங்கே கிடைக்கும் புதிய நட்புக்களின்  வரவால்  பிரிந்து விடும்  வாய்ப்பு அதிகம்  தான். பழனியும் ராம்கியும் பிரிந்து தான் விடுவார்களோ?  


க்கோவ்.... ராசாத்தி அக்கோவ்... உம்மருமவனுக்கு காலேசுல வந்து சேரச் சொல்லி லட்டர் வந்திருக்கு...”
“ம்... மாப்பிள்ளை பெரிய படிப்பு படிக்கப் போறானாக்கும்...”
“ஆமா... அடியே சுதா.... எம்மவனுக்கு காலேசுல சேரச் சொல்லி லட்டர் வந்திருக்கு... சின்னக்கண்ணு மாமோவ் உங்க பேராண்டிக்கு காலேசுல இடங்கெடச்சிருக்கு... ராசு மச்சான் உங்க மயன் காலேசுக்குப் போகப்போறான்..”
இயபான கிராமத்து எழுத்து நடை.ரசிக்க வைக்கும் வார்த்தையாடல்கள்.  உங்க  ஊரின் இப்படித்தான்   பேசுவதுண்டா குமார்?

ஏழைத்தாயின்  மன வோட்டங்கள், அவன் படிப்புக்குறித்த பெருமிதங்கள், எதிர் பார்ப்புகள்,   ஆண்பிள்ளை என்பதால்  ராம்கிக்குரிய படிப்புக்கான உந்துதலும், சீதாவுக்கான தடைகளும்,பணத்தேவைகளுமாய் சின்ன விடயம் கூட  கவனித்து எழுதி இருக்கிங்க குமார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by பானுஷபானா Fri 17 Jul 2015 - 13:20

குமார் கதை திங்கள்கிழமையிலிருந்து படிக்கிறேன்...

தொடர்ந்து எழுதுங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Fri 17 Jul 2015 - 16:29

Nisha wrote:பள்ளிக்கால நட்புக்கள் காலேஜ்  சென்றபின் அங்கே கிடைக்கும் புதிய நட்புக்களின்  வரவால்  பிரிந்து விடும்  வாய்ப்பு அதிகம்  தான். பழனியும் ராம்கியும் பிரிந்து தான் விடுவார்களோ?  


க்கோவ்.... ராசாத்தி அக்கோவ்... உம்மருமவனுக்கு காலேசுல வந்து சேரச் சொல்லி லட்டர் வந்திருக்கு...”
“ம்... மாப்பிள்ளை பெரிய படிப்பு படிக்கப் போறானாக்கும்...”
“ஆமா... அடியே சுதா.... எம்மவனுக்கு காலேசுல சேரச் சொல்லி லட்டர் வந்திருக்கு... சின்னக்கண்ணு மாமோவ் உங்க பேராண்டிக்கு காலேசுல இடங்கெடச்சிருக்கு... ராசு மச்சான் உங்க மயன் காலேசுக்குப் போகப்போறான்..”
இயபான கிராமத்து எழுத்து நடை.ரசிக்க வைக்கும் வார்த்தையாடல்கள்.  உங்க  ஊரின் இப்படித்தான்   பேசுவதுண்டா குமார்?

ஏழைத்தாயின்  மன வோட்டங்கள், அவன் படிப்புக்குறித்த பெருமிதங்கள், எதிர் பார்ப்புகள்,   ஆண்பிள்ளை என்பதால்  ராம்கிக்குரிய படிப்புக்கான உந்துதலும், சீதாவுக்கான தடைகளும்,பணத்தேவைகளுமாய் சின்ன விடயம் கூட  கவனித்து எழுதி இருக்கிங்க குமார்.

வணக்கம் அக்கா...
தங்கள் கருத்துக்கு நன்றி.
எங்கள் வட்டார வழக்குத்தான்.... ஆனால் எங்கள் ஊரில் பேசுவது போல் இல்லை என்றாலும் கொஞ்சம் ஒட்டியே வரும்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Fri 17 Jul 2015 - 16:30

பானுஷபானா wrote:குமார் கதை திங்கள்கிழமையிலிருந்து படிக்கிறேன்...

தொடர்ந்து எழுதுங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வணக்கம் அக்கா...
வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க அக்கா...
நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty கலையாத கனவுகள் - 3

Post by சே.குமார் Fri 17 Jul 2015 - 17:09


கலையாத கனவுகள் - 3






3. ராக்கிங் ஆரம்பம்...
முன்கதைச் சுருக்கம்...
ஏழைக் குடும்பத்தில் பிறந்து  தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்கிறான். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் அவனை அவனது தாயார் அக்கம் பக்கம் பார்த்து அனுப்பி வைக்கிறாள். அவனும் நண்பர்களுடன் கல்லூரிக்கு சென்று ராக்கிங் பயத்துடன் வகுப்பறையில் அமர்கிறான்...
இனி...
       
முதல் நாள் கல்லூரி வாழ்க்கை வித்தியாசமாக இருந்தது. முதல் நாள் என்பதால் அறிமுகப் படலம்... அறிவுரை என சென்றது. துறைத்தலைவர் எம்.எஸ், ‘பள்ளிப் படிப்பு வேற... கல்லூரிப் படிப்பு வேற... இந்த வயசுதான் உங்களை எல்லாப் பக்கமும் போகத்தூண்டுற வயசு... நீ நல்ல வழியில போனியன்னா நாளைக்கு நல்ல நிலைமையில இருக்கலாம்... இல்லே காலேசுனாலே சண்டியர்தனம் செய்யணுமின்னு அந்தப் பக்கமா போனியன்னா... மூணு வருசம் முடிஞ்சு வெளிய போறப்போ அரியரோட போயி அவஸ்தைதான் படணும்... உன்னோட வாழ்க்கையை தீர்மானிக்கிற தராசு இப்ப உன்னோட கையில இருக்கு... இதை நீ எப்படி பயன்படுத்திக்கிறியோ அப்படித்தான் வாழ்க்கை அமையும்’ அப்படின்னு பேசி ஒரு நீண்ட லெக்சரைக் கொடுத்தார்.
மாலை கல்லூரி முடிந்ததும் நண்பர்களுடன் கூடி பேசி மகிழ்ந்து வீட்டுக்குப் போனபோது அம்மா அவனிடம் ‘காலேசு எப்படிப்பா இருக்கு... புடிச்சிருக்கா... முதல்ல காலழம்பிட்டு வந்து சாப்பிடு’ என வாஞ்சையாய் முகத்தைத் தடவினாள்.
-----------

புதுமுகங்களும் பழைய முகங்களுமாக கல்லூரி சாலையில் சென்ற காலை வேளை..
.
“டேய் சரவணா... இன்னைக்கு சீனியர்ஸ் வருவாங்களேடா... ராக்கிங் பண்ணுவாங்கள்ல... எனக்குப் பயமா இருக்குடா...”

“என்னடா பயம் வேண்டிக்கெடக்கு... என்ன கேட்டாலும் பயப்படாம சொல்லு போதும்... அப்படிப் பேசினா அவங்க விட்டுடுவாங்களாம்... அக்கா சொன்னுச்சு... அவங்க டிபார்ட்மெண்ட் பசங்களை எனக்குத் தெரியும்... அவங்க வந்தா நாம தப்பிச்சிக்கலாம்... ஆனா ஒண்ணுடா... மதிக்காம மட்டும் நின்னமின்னா நம்மளை ஒரு வழி பண்ணிடுவாங்களாம்...”

“ரொம்ப ராக்கிங் பண்ணினா டிபார்ட்மெண்ட்ல வந்து சொல்லச் சொல்லி எங்க எம்.எஸ் சார் சொன்னாருடா... “

“டேய் லூசு... டிபார்ட்மெண்டுக்குப் போனா அப்புறம் அவ்வளவுதானாம். நம்மளை அதுக்கு அப்புறம் கரம்வச்சு அடிப்பாங்களாம்... சும்மா ரெண்டு நாள் மிரட்டிட்டு பின்னாடி பிரண்ட் ஆயிடுவாங்களாம்... அதுவுமில்லாம ராக்கிங் பண்ணுறவனெல்லாம் யாரா இருக்குமின்னு நெனக்கிறே.... அவனுக்க எல்லாம் படிக்காம சுத்துற கோஷ்டியா இருக்கும்... இல்லேன்னா சாதியை வச்சு பொழப்பு ஓட்டுறவங்களோட புள்ளையாவோ, தம்பியாவோ, இல்லை உறவுக்காரனாகவோ இருப்பானுக... அவங்க மேல எப்படி துறைத்தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்? அதுவும் இங்க வைரவன்னு ஒருத்தன் இருக்கானாம்... தேர்ட் பிகாம் படிக்கிறான்னு பேர்தானாம்... வகுப்புக்கே போகமாட்டானாம்... மத்த கிளாஸ்லாம் போயி உக்காந்து இருப்பானாம்... எப்பவும் தண்ணிதானாம்... அவங்கிட்ட மாட்டுனா சும்மா விட மாட்டானாம்... மத்தவங்களெல்லாம் பிரச்சினையில்லையாம்... நீ சும்மா பயப்படாத... சமாளிப்போம்... நம்ம அறிவை பாரு எந்தப் பயமுமில்லாம வாறான்...”

“அவனுக்கென்ன அவங்க அப்பா இங்க வேல பாக்குறாரு... அதனால அவனை ராக்கிங் பண்ண மாட்டாங்க...”

“எல்லாரையும் பண்ணுவாங்க... இதெல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்டா...”

முதல் பாடவேளை முடிந்ததும் அடுத்த பாடவேளை ஆரம்பிக்கும் முன்னர் பெண்கள் குரூப் ஒன்று  வகுப்பிற்குள் நுழைந்தது. எல்லாரும் அவர்களை பார்த்துக் கொண்டிருக்க,

“பழனி... இவங்க யாருடா...”

“தேர்ட் இயரா இருப்பாங்க... ராக்கிங் பண்ண வந்திருப்பாங்க...”

“என்னடா சொல்றே..? பொண்ணுக கூட பண்ணுவாங்களா...?"

“ம்... பேசாம இருடா... பேசுறதைப் பார்த்தா நம்மளைத்தான் கூப்பிடுவாங்க...”

“என்ன சீனியருக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதா... சொல்லித்தான் தெரியணுமா... ம்... எல்லாரும் எந்திரிங்க..” வந்த கூட்டத்தின் தலைவி மாதிரி இருந்தவள் சத்தமாக பேச சர்வ நாடியும் அடங்கிப் போக எழுந்து நின்றனர் மௌனமாக...

“ம்... நான் ராணி... நாந்தான் இங்க ராணி... புரியுதா... நான் கேக்கிறதுக்கு டக்கு டக்குன்னு பதில் வரலை... கொன்னேபுடுவேன்... ஏய் எந்திரிடி... என்ன சுடிதார் போட்டு வந்திருக்கே.... தாவணி போடனுமின்னு உனக்குத் தெரியாதா... நாளையில இருந்து தாவணியிலதான் வரணும்... உக்காரு... ம்.... பர்ஸ்ட் எதாவது பால்வடியிற முஞ்சியா பாருங்கடி...” என்று தேட ஆரம்பித்தவள் ராம்கி மேல் கண்களை நிலைக்குத்தினாள்.

“உம் பேர் என்னடா சின்னப்பயலே...?” என்று ராம்கியை கேட்டாள்.

“ராம்... ரா... ராமகிருஷ்ணன்...”

“ராம்... உங்க தாத்தா... ரா... உங்கப்பா... நீ ராமகிருஷ்ணனா...”
“இல்ல எம் பேரு ராமகிருஷ்ணன்...”

“ம்... நல்ல பேரு... ஆமா இன்சியல் இல்லாம பொறந்தியா?”

“மு.ராமகிருஷ்ணன்... எல்லாரும் ராம்கின்னு கூப்பிடுவாங்க...”

“இங்க பாருங்கடி... இவரு ராம்கியாம்... ஆமா நிரோஷா எங்க இருக்கா... இந்தக் கூட்டத்துல இருந்தா யாருன்னு காமி... நச்சின்னு செந்தூரப்பூவேக்கு ஒரு குத்து டான்ஸ் போடலாம்...”

‘செந்தூரப் பூவேக்கு குத்து டான்ஸா...?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பேசாமல் நின்றான்.

“என்ன ஒருத்தியும் இல்லையா...? சரி ராணி விட்டா அழுதுடுவான் போல... பாவம் விட்டுடு...” என்று அவளது தோழி சொல்ல...

“சரி... இதுக்குப் பதில் சொல்லிட்டு உக்காரலாம்... உனக்கு இங்க இருக்கவங்கள்ல யாரைப் புடிச்சிருக்குன்னு சொல்லு...?

“...”

“என்னடா... பொண்ணுங்களே புடிக்காதா...? இப்ப சொல்லலை மவனே... ஜட்டியோட கிரவுண்ட்ல ஓட வேண்டியிருக்கும்...”

‘சொன்னபடி செஞ்சுருவாங்களோ’ என்று நினைத்தபடி மெதுவாக தலையைத் தூக்கி அவனுடன் படிக்கும் பெண்களை ஒரு பார்வை பார்த்தான்...

“என்னடா லுக்கு விட்டுட்டு பேசாம இருக்கே... அழகிகளா தெரியலையோ?”

“யாரையும் பிடிக்கலை...” பட்டென்று சொன்னான்.

“இங்க பாருங்கடி... இந்த ஆண் அழகனுக்கு இங்க இருக்க அழகிக யாரையும் பிடிக்கலையாம்... அப்ப என்னைய பிடிச்சிருக்கா...”

“...”

“சொல்லுடா... வாத்தியார் வரப்போறாரு...?”

“ம்...”

‘ஹே...’ என்று எல்லாப் பெண்ணுகளும் கூவ...

“ஏய் சங்கி... கேட்டியா மச்சானுக்கு என்னையத்தான் புடிச்சிருக்காம்... இனி உன்னைய நான் மச்சான்னுதான் கூப்புடுவேன்... ஒகேயா.... உக்காரு... ஏய் நீ எந்திரிடி...” அவர்களது அதட்டலும் உருட்டலும் அடுத்த ஆசிரியர் வரும் வரை தொடர்ந்தது.
--------------

மதியம் சாப்பிட்டு விட்டு வகுப்பிற்கு வரும் போது ‘டேய் இங்க வாங்கடா...”என்றான் மூண்றாம் ஆண்டு மாணவன் ஒருவன்.

ஒருவரோடு ஒருவர் உரசிக் கொண்டு ஒன்றும் பேசாமல் அவங்க கூப்பிட்ட இடத்துக்குப் போக...

“என்னடா சீனியருக்கு முன்னால இன் பண்ணி வரக்கூடாதுன்னு தெரியாதோ இன் பண்ணுனதை எடுத்து விடுங்கடா...”

“மாப்ளே அந்த சின்னப்பய பொசுக்கு பொசுக்குன்னு முழிக்கிறான்... அவனை அங்கிட்டு ஓரங்கட்டிட்டு மத்தவங்களை இங்கிட்டு விடு... டேய்... பச்சை சட்டை உம் பேரு என்னடா...”

“அறிவு...”

“உனக்கு மட்டும்தான் அறிவு இருக்குன்னு பேரு வச்சாங்களோ...”

“இல்ல அறிவழகன்... எல்லாரும் அறிவும்பாங்க... எங்கப்பா இங்கதான் வேல பாக்குறாங்க...”

“இங்கயா... யாரு..?”

“சூப்பிரண்டென்ட் நாகப்பன்...”

“அந்தாளு மவனா... எங்கள என்னபாடு படுத்துறான் உங்கப்பன்... மவனே நீ மாட்டுனேடா... சரி பாடத்தெரியுமா?”

“தெரியாது...”

“சரி இப்ப தெரிஞ்சிக்க... ம்... பாடு... பாடுறான்னா...”

“ஆயிரம் நிலவே வா.... ஓர் ஆயிரம் நிலவே வா...”

“நிறுத்து... இப்ப என்ன பாடினே... ஆயிரம் நிலவே வான்னுதானே.... இருக்கது ஒரு நிலாதானே... அப்புறம் எப்படி ஆயிரம் நிலா வரும்... ம்... எங்கே ஒரு நிலா வர்ற வரைக்கும் பாடு...”

“எப்படி பாடணும்?”

“இப்ப ஆயிரத்தைக் கூப்பிட்டே... அப்படியே இறங்குவரிசையில ஒண்ணு ஒன்னாக் கூப்பிட்டு ஒண்ணுக்கு வா” என்று சீனியர் சொல்லும் போது அவனது நண்பர்கள் சிரிக்க...

“என்னடா சிரிக்கிறீங்க?”

“இல்ல மாப்ளே... நீ ஆயிரத்துல இருந்து ஒண்ணுக்கு வரச்சொன்னே... இப்பவே ஒண்ணுக்கு இருக்கப் போற மாதிரித்தா இருக்கான்... ரொம்ப மிரட்டினே பேண்ட் நாஸ்தியாயிடும்...”

“சரி அப்படி ஓரமா போயி நின்னு நிலாவை கூப்பிடு... டேய் உம் பேர் என்னடா...”

“பழனி...”

“அடிவாரமா... இல்ல மலை உச்சியா...”

“....”

“கோழி பிடிக்கத் தெரியுமா?”

“ம்...”

“அப்ப பிடி...”

“கோ...கோழி...?”

“அதை சுட்டுத் தின்னாச்சு... மயிராண்டி கோழி இருந்தாத்தான் பிடிப்பிங்களோ... சும்மா பிடிச்சுக் காமிடா...” என்று அவன் மண்டையில் தட்டினான் நெடுமரமாட்டம் இருந்த ஒருவன்...

இன்னும் அடிப்பாங்களோ என்று நினைத்தபடி ‘பேக்...பேக்...’ என்று கூப்பிட்டபடி ஒடினான்.

ராம்கி ஓரமாக நின்று நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க...

“டேய் நீ பர்ஸ்ட் இயரா...?” மரியக்கண்ணுவைப் பார்த்து ஒருவன் கேட்டான்.

“ம்...”

“பேரென்ன?”

“மரியக்கண்ணு”

“உனக்கு யுனிவர்சிட்டி சல்யூட் தெரியுமா?”

“தெரியாது...”

“டேய் மாப்ளே... தம்பிக்கு யுனிவர்சிட்டி சல்யூட் சொல்லிக் கொடு..”

“இங்க வா... எப்படி அடிக்கணும் தெரியுமா... இப்படி செஞ்சு... இப்படி அடிக்கணும்... புரியுதா?”

அவன் செய்து காண்பித்த யுனிவர்சிட்டி சல்யூட் ஆபாசமாக இருக்க, பேசாமல் தலையைக் குனிந்து கொண்டான்.

“புரியுதா... போ... போயி அந்தா வர்றா பாரு பச்சைத் தாவணி அவளுக்கு யுனிவர்சிட்டி சல்யூட் அடிச்சிட்டு வா... போ... போடா”

மரியக்கண்ணு படபடக்கும் இதயத்துடன் மெதுவாக அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். என்ன நடக்கப் போகுதோ என்ற படபடப்பில் ராம்கியும் நண்பர்களும் அவன் போகும் பாதையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
(தொடரும்...)
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Sat 18 Jul 2015 - 1:41

காலேஜ் வாழ்க்கையில் ராக்கிங்க்! அனுபவித்து எழுதியது போல் இருக்கின்றதே குமார்! சொந்த அனுபவமோ?

அம்மா அவனிடம் ‘காலேசு எப்படிப்பா இருக்கு... புடிச்சிருக்கா... முதல்ல காலழம்பிட்டு வந்து சாப்பிடு’ என வாஞ்சையாய் முகத்தைத் தடவினாள்.

ஏழைத்தாயாருக்கு  தம் பிள்ளைகள் பெரிய படிப்பு படிக்க காலேஜ் போய் வருவதே  பெருமையான விஷ்யம் தான். கவனிப்பும் ஜாஸ்தியாய் தான் இருக்கும். 

 ஆரம்ப நாள்  காலேஜ் வாழ்க்கையில் ஆசிரியரின் அறிவுரை அருமை.  ஏற்கனவே படித்திருந்தாலும்  மீண்டும் புதிதாய் படிப்பது போல தான் இருக்கின்றது குமார். 

 தொடருங்கள் குமார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Sat 18 Jul 2015 - 9:10

Nisha wrote:காலேஜ் வாழ்க்கையில் ராக்கிங்க்! அனுபவித்து எழுதியது போல் இருக்கின்றதே குமார்! சொந்த அனுபவமோ?

அம்மா அவனிடம் ‘காலேசு எப்படிப்பா இருக்கு... புடிச்சிருக்கா... முதல்ல காலழம்பிட்டு வந்து சாப்பிடு’ என வாஞ்சையாய் முகத்தைத் தடவினாள்.

ஏழைத்தாயாருக்கு  தம் பிள்ளைகள் பெரிய படிப்பு படிக்க காலேஜ் போய் வருவதே  பெருமையான விஷ்யம் தான். கவனிப்பும் ஜாஸ்தியாய் தான் இருக்கும். 

 ஆரம்ப நாள்  காலேஜ் வாழ்க்கையில் ஆசிரியரின் அறிவுரை அருமை.  ஏற்கனவே படித்திருந்தாலும்  மீண்டும் புதிதாய் படிப்பது போல தான் இருக்கின்றது குமார். 

 தொடருங்கள் குமார்.
கதைக்கு தங்களின் கருத்துக்கள் மிகவும் அருமையாக இருக்கிறது...
ரொம்ப நன்றி அக்கா...
என்னைய எல்லாம் ரொம்ப சின்னப்பயலா இருக்கான் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்னு ஓரமா ஒதுக்கிட்டானுங்க...
அந்த மரியக்கண்ணும் யுனிவர்சிட்டி சல்யூட்டும் மட்டுமே நடந்த உண்மை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Sat 18 Jul 2015 - 9:20

அக்கா... 
தொடர்கதையோட  உள் தலைப்பில் நம்பர் வருவதால் பொதுத் தலைப்பில் நம்பர் வேண்டாமே அக்கா....
அதை எடுத்து விடுங்களேன்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Sat 18 Jul 2015 - 9:58

கலையாத கனவுகள்


4. ராக்கிங் ராஜாங்கம்



முன்கதைச் சுருக்கம்...

ஏழைக் குடும்பத்தில் பிறந்து  தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்கிறான். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் அவனை அவனது தாயார் அக்கம் பக்கம் பார்த்து அனுப்பி வைக்கிறாள். அவனும் நண்பர்களுடன் கல்லூரிக்கு சென்று ராக்கிங் பயத்துடன் வகுப்பறையில் அமர்கிறான்... சில பெண்கள் வகுப்பறைக்கே வந்து மிரட்டிவிட்டுச் செல்ல... கல்லூரி ரவுடியிடம் மாட்டிக் கொள்கிறார்கள். ..
இனி...

ச்சைத் தாவணியை நோக்கி படபடக்கும் இதயத்துடன் நடந்து சென்றான் மரியக்கண்ணு. “மணி... அவனைக் கூப்பிடு... பெரிய ஆளா இருக்கான்... இவன் பாட்டுக்கு அவகிட்ட யுனிவர்சிட்டி சல்யூட் அடிச்சு செருப்படி வாங்கிடமா...”

“டேய் சத்யராஜ்...”

“அவன் மரியக்கண்ணுன்னு சொன்னான்...”

“வளர்ந்து இருக்கானுல்ல... அதான்... மரியக்கண்ணை சத்தியராஜ் ஆக்கிட்டேன்... டேய்... வளர்ந்து கெட்டவனே இங்க வா” என்று அவனைக் கூப்பிட்டான்.

“டேய் இங்க வா... உன் பேரு என்ன?”

“அண்ணாத்துரை...”

“ம்... நீ எங்களை அண்ணான்னு கூப்பிட்டா நாங்களும் உன்னைய அண்ணான்னு கூப்பிடனுமோ?” சிகரெட் புகையை அவன் முகத்தில் ஊதியபடி சிரித்தான் வைரவன். கல்லூரியின் முதல் தாதா. யாருக்கும் பயப்படமாட்டான். ஆசிரியர்களுக்கு இவன் வகுப்பிற்குள் வந்தால்தான் பயம். எப்பவும் தண்ணியில்தான் இருப்பான். அடிதடி என்றால் முதல் ஆளாய் நிற்பான். தள்ளாட்டமாய் எழுந்தவன் ‘...க்காலி... என்ன பர்ஸ்ட் இயர்லயே எகிறுறே...? இனி நாங்க உன்னைய சின்னானுதான் கூப்பிடுவோம்... நெஞ்சை நிமித்துறே... நெஞ்சே இருக்காதுடி...” என்றபடி அவனை தள்ளினான்.

“இப்ப என்ன வேணும் உங்களுக்கு... எம் பேரு அண்ணாத்துரை... அண்ணான்னு கூப்பிடுறது... டேய்யின்னு கூப்பிடுறதும் உங்க விருப்பம்...”

“என்னடா... எகத்தாளமா பேசுறே?”

“எகத்தாளம் எல்லாம் பேசலை... நீங்க கேட்டதுக்கு சொன்னேன்... என்ன செய்யணும் சொல்லுங்க செய்யிறேன்...”

“...க்காலி... எல்லாரும் பம்முறாய்ங்க... நீ துள்ளுறே... ஆமா எந்த ஊருடா நீயி... எங்ககிட்ட பகைச்சுக்கிட்டா உன்னய செட்டைய ஒடிச்சுப்புடுவோம்...”

“....”

“என்னடா பேசாம நிக்கிறே?”

“ஒண்ணுமில்லண்ணே...”

“நீச்சலடிக்கத் தெரியுமா?”

“தெரியும்...”

“அப்ப அடி...”

“இங்கயா?”

“இங்கதான்... அடிடா...”

“தண்ணியிலதான் அடிக்க முடியும்... தரையில அடிடான்னா... எப்படிங்க... கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க”

“என்ன எங்களுக்கே பாடம் நடத்துறியா...? ம்... இந்தா போறா பாரு ஊதா தாவணி அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு வாறியா.. கிளுகிளுப்பா இருக்கும்... அடிடான்னா...”

“இல்ல டிரஸ் அழுக்காயிடும்... நான் பண்ண மாட்டேன்...”

“பண்ணுடான்னா...” என்று அவனை ஒருவன் தள்ளிவிட, மற்றொருவன் மண்டையில் தட்டினான்.

திரும்பி முறைத்தவன் “பூபாலன் தெரியுமா?” என்றான்.

“பூபாலனா... உனக்கு அவரு என்ன வேணும்...?” எதோ சாமி பேரைக் கேட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வது போல கையிலிருந்த சிகரெட்டை எறிந்துவிட்டு அவசரமாய்க் கேட்டான் வைரவன்.

“அவரு தம்பிதான் நான்...”

“பூபாலண்ணன் தம்பியா நீயி... அதை ஏன்டா நீ முன்னமே சொல்லலை...”

“அவரைச் சொல்லி தப்பிக்க நினைக்கலை...”

“ம்... அப்ப காலேசுக்கு அடுத்த ரவுடி வந்தாச்சு...”

“நா... படிக்கத்தான் வந்திருக்கேன்... ரவுடித்தனம் பண்ண வரலை... இப்ப என்ன நீச்சல் அடிக்கணும்... அடிக்கிறேன்...”

“நீச்சலா... நீயா... இன்னைக்கு நீச்சலடிப்பே... நாளைக்கு பூபாலண்ணன் எங்களை அடிக்கும்... நீங்க போங்கடா... இனி ஒருபய உங்க்கிட்ட வராம நான் பாத்துக்கிறேன்... ஆமா ஓரமா நின்னகட்டையா உன்னோட பேரென்ன சொல்லிட்டுப் போ...”

“ராமகிருஷ்ணன்”

“ராம்கியா... சரி... இனிமே நாம பிரண்ட்ஸ்... ஓகேவா... ஆனா மொத ஒரு மாசத்துக்கு எவனும் இன் பண்ணிக்கிட்டு வரக்கூடாது”

“சரிண்ணே...”

 “ம்... தாங்க்ஸ் அண்ணே...” என்ற ராம்கிக்கு இதே வைரவனுக்காக ஒருநாள் தானும் தடியை கையில் எடுக்க வேண்டி வரும் என்பது அப்போது தெரியாது... சினேகமாக அவனிடம் சிரித்து விடை பெற்றான்.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Sat 18 Jul 2015 - 18:03

சே.குமார் wrote:அக்கா... 
தொடர்கதையோட  உள் தலைப்பில் நம்பர் வருவதால் பொதுத் தலைப்பில் நம்பர் வேண்டாமே அக்கா....
அதை எடுத்து விடுங்களேன்.
 தலைப்பு மாற்றம் நீங்களும் செய்ய இயலுமே குமார்!@


 தட்டச்சிடும்  இடத்துக்கு கீழே Modify topic title  என தெரிகின்றது பாருங்கள். அதன் பெட்டிக்கும்  நீங்கள் எழுதுவது தான் பொதுத்தலைப்பாய் வரும். 

Post title என  தட்டச்சிடும்  பெட்டிக்கு மேலே இருப்பதில் தலைப்பு மாற்றினால் அந்த பதிவின் தலைப்பு மட்டுமே மாறும். 

இரண்டும் உங்களால் செய்ய இயலும் குமார். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Sat 18 Jul 2015 - 18:20

Nisha wrote:
சே.குமார் wrote:அக்கா... 
தொடர்கதையோட  உள் தலைப்பில் நம்பர் வருவதால் பொதுத் தலைப்பில் நம்பர் வேண்டாமே அக்கா....
அதை எடுத்து விடுங்களேன்.
 தலைப்பு மாற்றம் நீங்களும் செய்ய இயலுமே குமார்!@


 தட்டச்சிடும்  இடத்துக்கு கீழே Modify topic title  என தெரிகின்றது பாருங்கள். அதன் பெட்டிக்கும்  நீங்கள் எழுதுவது தான் பொதுத்தலைப்பாய் வரும். 

Post title என  தட்டச்சிடும்  பெட்டிக்கு மேலே இருப்பதில் தலைப்பு மாற்றினால் அந்த பதிவின் தலைப்பு மட்டுமே மாறும். 

இரண்டும் உங்களால் செய்ய இயலும் குமார். 
சரி அக்கா...
தெரிந்து கொண்டேன்.
நாலாவது பகுதியும் போட்டாச்சு...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Sat 18 Jul 2015 - 18:36

நாளைக்குத்தான் படிப்பேன் குமார். இன்று ஹோட்டலில் ஆர்டர் இருக்கும் விடிய விடிய பார்ட்டி இருக்கும். அதனால் நாளை தான் அமைதலாய் படித்து கருத்திட இயலும். 

ஸாரிப்பா.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Mon 20 Jul 2015 - 6:10

தொடர்கதை : கலையாத கனவுகள்


5. ஞாயிறு மதியமும் கம்மாய்க்கரையும்....

முன்கதைச் சுருக்கம்...

ஏழைக் குடும்பத்தில் பிறந்து  தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்கிறான். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் அவனை அவனது தாயார் அக்கம் பக்கம் பார்த்து அனுப்பி வைக்கிறாள். ராக்கிங் அதன் பின்னான நட்பு வட்டம் என கல்லூரி வாழ்க்கை இனிமையாக கழிய ஆரம்பிக்கிறது.

இனி...


ல்லூரி வாழ்க்கை சுமூகமாகப் போய்க்கொண்டிருந்தது. ராக்கிங் எல்லாம் முடிந்து எல்லாரும் நண்பர்களாகி, கல்லூரி ஸ்ட்ரைக் அது இது என்று பள்ளி வாழ்க்கைக்கு முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைக்கு மாறியிருந்தார்கள் ராம்கியும் அவனது நண்பர்களும்...

கல்லூரி விடுமுறை தினமான சனிக்கிழமை மதியவேளை, ராம்கியும் சேகரும் கண்மாய்க்கரை வேப்ப மரத்தில் அமர்ந்திருந்தனர். விடுமுறை என்றாலே வீட்டில் இருப்பது என்பது அரிது. விவசாய சமயம் என்றால் மாடு மேய்க்கப் போவார்கள். மற்ற நேரங்களில் மாடுகளை அவிழ்த்து விட்டால் மேய்ந்து விட்டு தானே வீட்டுக்கு வந்துவிடும். அதனால் மாரியம்மன் கோவிலில் நண்பர்களுடன் அரட்டை இல்லை என்றால் கண்மாய் மடையின் பின்புறமோ வேப்ப மரமோதான் அவர்கள் கதை பேசும் இடமாக இருக்கும். எல்லாரும் ஒன்றாக கூடிவிட்டால் அவர்களுக்குள் நடக்கும் விளையாட்டுக்கு அளவே இருக்காது. எல்லார் தோளிலும் குத்தாலம் துண்டு இருக்கும். கபடி, மரக்கொரங்கு போன்ற விளையாட்டுக்களின் போது எல்லார் இடுப்பிலும் அந்தத் துண்டு இருக்கும். கோவிலிலோ வேப்ப மரத்திலோ படுக்கும் போது அதை விரித்துத்தான் படுப்பார்கள். அவர்களுடைய விளையாட்டில் முக்கியமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமான விளையாட்டு துண்டு போர்த்துதல்தான். எல்லாரும் அமர்ந்து சீரியஸாக பேசிக்கொண்டிருக்கும் போது எவனையாவது துண்டால் போர்த்திவிடுவார்கள். அவ்வளவுதான் எல்லாரும் அவனுக்கு தர்ம அடி கொடுப்பார்கள். யார் அடித்தார்கள் என்பது தெரியாது. ஆனால் ஒருவர் மாற்றி ஒருவர் என எல்லாருக்கும் எப்படியும் அடி விழுந்துவிடும்.

மற்றவர்களைவிட ராம்கி மிகவும் நெருங்குவது சேகரிடம்தான்... சேகர், ராம்கிக்கு மச்சான் முறை... ஒரே வயது... பத்தாவது படித்ததோட ராயவரம் பாலிடெக்னிக்கில் படிக்கிறான். இருவருக்குள்ளும் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. இன்று எவனையும் காணோம் என்பதாலும் இருவரும் மனம் விட்டுப் பேசி ரொம்ப நாளாச்சு என்பதாலும் இந்தப் பக்கம் வந்திருந்தார்கள்.

“என்ன மச்சான்... காலேசு எப்படிடா போகுது?”

“நல்லா போகுதுடா... ஸ்கூல் லைப்புக்கு அப்படியே நேர்மாறா இருக்குடா... ஒரே அடிதடி சண்டையின்னு இது வேற உலகண்டா...”

“நம்ம காலேசுல எப்பவுமே சாதிப்பிரச்சினை இருக்குமேடா... அது தெரிஞ்சதுதானேடா...”

“சாதிப்பிரச்சினைங்கிறதுகூட ரொம்ப இல்லடா... தேவகோட்டையா திருவாடனையான்னு அடிச்சிக்கிறாங்கடா... பாடம் நடத்தும் போது கூட வாத்தியார் ‘டி’ன்னு சொன்னா நாம குச்சி டியா குண்டு டியான்னுதானே கேப்போம்... ஆனா இங்க வாத்தியாரே  ‘டி’ன்னு சொல்லிட்டு உடனே  திருவாடானை டி, தேவகோட்டை டின்னு சொல்றாங்கன்னா பாரேன்...”

“எல்லா இடத்துலயும் ரெண்டு பிரிவு இருக்குடா... எங்க பாலிடெக்னில என்ன வாழுதுங்கிறே... பஸ்ல போற நாங்க எல்லாம் ஒரு குரூப்பு... அங்கிட்டு பக்கத்து ஊர்ல இருந்து வாறவங்க ஒரு குரூப்பு அவங்க ஸ்ட்ரைக்குன்னா நாங்க உள்ள போவோம்... நாங்க நிப்பாட்டுன்னா அவங்க போவாங்க... அப்புறம் அடிதடி ரகளைதான்... ஆமா இப்போ நீ கோ-எட்டுல்ல... உங்க கிளாஸ்ல எத்தனை பொண்ணுங்கடா...?”

“ம்... எட்டுப் பொண்ணுங்கடா... நா... யார்கிட்டயும் பேசுறது இல்லை...”

“உனக்கு பேசுறதுக்கு என்னடா... அவனவன் அலையுறாங்க... காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க... கிளாஸ்ல பொண்ணுங்களை வச்சிக்கிட்டு பேசமாட்டியா... எனக்கு எல்லாம் காலேசுல பொண்ணுக இல்லைன்னு பேருதான்... ஆனா பஸ்ல வாற பள்ளத்தூர் காலேசுப் புள்ளைங்க எல்லாம் ரொம்ப குளோஸ்... காரைக்குடியில எத்தனை படம் பார்த்திருக்கோம் தெரியுமா?”

“உனக்கு சரியா வரும்... எனக்கு சரிப்படாதுடா... வேற பேச்சுப் பேசுடா... பொண்ணுகளைப் பத்தி நமக்கு என்ன பேச்சு... விடு... எங்க காலேசுல தேர்ட் இயர்ல வைரவன்னு ஒருத்தர் இருக்காருடா... பெரிய ரவுடி... அடிதடிக்கு அஞ்சமாட்டார்... புரபஸரெல்லாம் பயப்படுறாங்க... தண்ணி தம்முன்னு ஆளு வித்தியாசமான வட்டத்துக்குள்ள இருக்காருடா... அவரை சுத்தி பத்துப் பேரு திரியிறாங்கடா... எங்களை முதல்ல ராக்கிங் பண்ணுனதே அவரு குரூப்தான்டா...”

“என்னடா காலேசு ரவுடிக்கு இம்புட்டு மரியாதை... அவரு இவருன்னு பேசுறே...?”

“அவரு ரவுடிதான்டா... ஆனா பசங்களுக்கு நல்லா ஹெல்ப் பண்ணுவாரு... பொண்ணுககிட்ட பேசவும் மாட்டாரு... சும்மா அலம்பல் பண்ணவும் மாட்டாருடா...”

“உன்னைய மாதிரி சாமியாரா? அதான் இம்புட்டு மரியாதை... காலேசு ரவுடின்னாலே ரெண்டு மூணு பொண்ணுங்க பிரண்டா இருப்பாளுங்களே.... அப்ப இவன் உதார் பேர்வழி போற... இவனையெல்லாம் தூக்கி வச்சிப் பேசாத...” என்றதும் சிறிது அமைதி நிலவியது.

இவர்களது பேச்சு... எல்லாப்பக்கமும் சுத்தி வந்தபோது இருட்டத் தொடங்கியதால் எழுந்து நடக்கலானார். பேசிக் கொண்டே நடக்கும் போது பின்னால் சைக்கிள் மணியின் சப்தம் கேட்டு இருவரும் விலகித் திரும்ப ‘என்னங்கடா... வெட்டிப் பேச்சா...?’ என்றபடி இருவருக்கும் இடையில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு போனாள் காவேரி.

“திமிர் பிடிச்சவ... ஞாயித்துகிழமையும் டியூசன் போறா... பிளஸ் டூவுல ஸ்டேட்டு பர்ஸ்ட் வரப்போற மாதிரி... பந்தாவுக்கு கொறச்சலில்லாத குந்தானி... இவளைக் கட்டிக்கிட்டு எவன் கஷ்டப்படப் போறனோ...” ஒரு கெட்ட வார்த்தையை சத்தமாக சொல்லி திட்டினான் சேகர்.

“உனக்கு அவளைப் பார்த்த ஏன் இம்புட்டுக் கோவம் வருது... தங்கச்சி உறவு விட்டுப் போயிடக்கூடாதுன்னு உங்கப்பா உனக்கே கட்டி வச்சாலும் வச்சிருவாரு பாத்துக்க... அப்புறம் இப்ப திட்டுனதுக்கு ரொம்ப வருத்தப்படுவே...”

“இவுகளத்தான் கட்டுறாக... எத்தனையோ பேர் பஸ்ஸூல பழகுறாளுங்க... அதுல ஒருத்திய கட்டுனாலும் கட்டுவேன் இந்தக் குந்தானியைக் கட்ட மாட்டேன்...” என்றான் வேகமாக.

ராம்கி சிரித்தான். இருவரும் தோள்மீது கை போட்டபடி நடக்கலாயினர்.

காலம் என்ன கோலம் செய்யும் என்பது யாருக்குத்தான் தெரியுமா? சேகரின் மனைவியாக காவேரி வரவேண்டும் என்று இருந்தால் யாரால் தடுக்க முடியும். நடப்பது நடந்துதானே ஆகும் என மனசுக்குள் நினைத்த ராம்கி, சேகரைப் பார்த்து லேசாக சிரித்தான்.
(தொடரும்...)
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Mon 20 Jul 2015 - 14:05

ராக்கிங்க் ராஜாங்கத்தில் வைரவன் , அண்ணாத்துரை, ராம்கி, பூபாலன் குறித்த அறிமுகமும்,   பூபாலன் என்பவரின் தம்பி என்பதற்காக  அண்ணாத்துரைக்கு கிடைக்கும் தீடீர்மதிப்பும்.  பூபாலனும்,வைரவன் போல் அடி தடி வில்லன் தான்  போல.. 

அண்ணாதுரை எனும் பெயர் ... சுருக்கினால் வயதில் பெரியவர்களுக்கும் அண்ணா தான் !ஐ ஜாலி எங்கூரில் தம்பித்துரை என ஒருத்தர் இருந்தார். எல்லோரும் தம்பி என்பார்கள். நான் தம்பி அண்ணா என அழைப்பேன். என்னை விட ஆறேழு வயது பெரியவர் அவர். ஹாஹா!


இன்னாருக்கு உறவு என  ஊரில் பெரிந்தலைகளை, படிப்பிக்கும் ஆசிரியர்களை  சொல்லிக்கூட தப்பிக்க முடியாத போது அடிதடிவில்லங்கள் பெயரை சொல்லி தப்பிக்க முடிவது தான் இன்றைய உண்மை அல்லவா?


எழுத்து நடை அருமை குமார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum