சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Khan11

சின்னச் சின்ன கதைகள்

5 posters

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 13 Oct 2015 - 16:57

First topic message reminder :

கொடுத்துப் பெறுதல்
--------------------------------

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

நன்றி: ந. உதயகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:33

தவிக்கும் இடைவெளிகள்
-----------------------------------

பையன் வந்து ஒரு மணி நேரம் ஆயிற்று. இன்னும் தன்னிடம் பேசவில்லை. “என்னப்பா, எப்டியிருக்கீங்க.’ ரெண்டு வார்த்தைகள்தான். கேட்கத் தெரியவில்லை. பேச வேண்டும் என்று தோன்றவில்லையா? அல்லது “என்ன வேண்டிக் கிடக்கிறது?’ என்ற அலட்சியமா, “எதைப் பேசினாலும் கோபமாகக் கத்தத்தானே போகிறார்? இதற்குப் பேசினால் என்ன பேசாவிட்டால் என்ன?’ என்று தோன்றி விட்டதா?

கோபமாகத்தான் பேசுவார் என்று அவனாகவே எப்படி முடிவு செய்து கொண்டான்? தான் பேசுவதெல்லாம் கோபமானதுதான் என்று ஏன் தோன்றிற்று அவனுக்கு? பேச்சே அப்படித்தான், அதனால் அதில் பொதிந்திருக்கும் கருத்தும், அக்கறையும், அன்பும்தான் முக்கியம் என்று ஏன் தோன்றவில்லை?

உள்ளே நுழைந்து நேரே அவன் அறைக்குள் சென்று அடைந்தாயிற்று. கணினியைத் திறந்து அதற்கு முன் உட்கார்ந்தாயிற்று. எவனோ வெளிநாட்டில் இருக்கும் நண்பனாம். அவனோடு பேச்சு, பேச்சு அப்படியொரு பேச்சு. மனதுக்குப் பிடித்தது அதுதான் போலும். அவன் கேள்வி கேட்க இவன் பதில் சொல்ல… இவன் திருப்பிக் கேட்க, அவன் பதில் சொல்ல… “சேட்’ பண்ணுகிறார்களாம்… என்ன இழவோ எவனுக்குப் புரிகிறது இதெல்லாம்?

அந்தத் திரையும், எழுத்தும், அதன் பிம்பங்களும் தரும் சந்தோஷத்தையும் நிறைவையும் வீட்டில் உள்ள நான் தரவில்லை… அதுதானே? என்னிடம் அவனுக்கு அது கிடைக்கவில்லை. இவன் கொடுப்பதை வாய் மூடி வாங்கிக் கொள்கிறதே அது… அதனால் அதைப் பிடிக்கிறதா? இவனுக்கு எதிர்ப்பு இல்லாத அரூபங்கள் இணக்கமாக உள்ளன. அப்படித்தானே? தனது எந்தச் செயலுக்கும் எந்தவிதமான எதிர்ப்பும் இருத்தல் கூடாது. அதுதான் சுதந்திரம் என்று நினைக்கிறானா? சுதந்திரம் என்ற வார்த்தை அதன் பொருள் இன்று பலரிடமும் இப்படித்தானே படிந்து கிடக்கிறது?

அனந்தராமன் ஹாலுக்குள் தலை நீட்டிப் பார்த்தார். அங்கே அவன் வழக்கமாக அமரும் இடத்தில் அந்த நாற்காலி மட்டும் கிடந்தது. அவருடைய மனைவியையும் ஹாலில் காணவில்லை. மகனைப் பார்க்க அவன் அறைக்குள் போய் உட்கார்ந்துவிட்டாள்.

“மகன் வந்ததும் அவனோடு போய் உட்கார்ந்து கொண்டாயிற்று. இனி தான்கூட அவளுக்கு ஒரு பொருட்டில்லை. அதுவரையிலான இருவருக்கும் பொதுவான தவிப்பு, மனச் சங்கடம், வருத்தம், பயம் எல்லாமும் எங்கே போயிற்று அவையெல்லாம் வெறும் பெயரளவிலான உணர்ச்சிகளா அவளுக்கு? அவனைக் கண்ணால் கண்டதும் எல்லாமும் மறைந்து, மறந்து போயிற்றா சொல்ல வேண்டியதை அவர் சொல்லிக் கொள்ளட்டும், நமக்கெதற்கு வம்பு என்று தான் ஒதுங்கிக் கொண்டு நல்லபிள்ளையாகிக் கொள்ளும் தந்திரமா… அடி பாதகத்தி.

“அவன் உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே என்று சொல்லிவிட்டுச் செல்பவனடி… இது புரியவில்லையா? கடைசியில் நீ என்னிடம்தானடி தஞ்சம் அடைந்தாக வேண்டும். இதுகூடப் புரியாத அப்பாவியா நீ?’

“எதுக்கெடுத்தாலும் கோபப்படுறதும், டென்ஷனாகுறதும், படபடன்னு பேசுறதும், எல்லாம் உங்க அப்பாதாண்டா. பெரிய டென்ஷன் பார்ட்டி. சொல்லியிருப்பாளோ… ராத்திரி பூராவும் எனக்குக் கூடத்தான் துôக்கமில்லை. இதே நினைப்பாத்தான் இருந்தது…’ என்றாளே அது பொய்யா?

“நியாயமாய்த் தோன்ற வேண்டிய உணர்ச்சிகள் அந்தந்த நேரத்தில் தோன்றவில்லையென்றால் அவன் என்ன மனுஷன்? நியாயமாய் என்றால் எது நியாயம் உங்களுக்கு? உங்களுக்கு நியாயமாய்த் தோன்றுவது மற்றவங்களுக்கும் நியாயமாத் தோணனும்னு அவசியமா கட்டாயமா? மனுஷாளுக்கு மனுஷாள் மனநிலை மாறுபடாதா? குணநலன்கள வச்சிதானே மனநிலை?’

“எனக்குத் தோணலை…’

“எல்லாத்தையும் அப்டி அப்படியே விட்டிடணும். வளர்க்கப்படாது. நம்ம பையன்தானே… விடுங்கோ… விட்டுடுங்கோ…’

“இப்போ விடாம அவன என்ன பிடிச்சா வச்சிண்டிருக்கு. விட்டு விட்டுத்தானே இந்த நிலைமைல வந்து நின்னிருக்கு?’

“என்ன நிலைமை. இல்ல என்ன நிலைமைன்னு கேட்கறேன். அவனென்ன கெட்டுச் சீரழிஞ்சு நிக்கிறானா உதவாக்கரையாப் போயிட்டானா? என்னவோ பெரிசாப் பேச வர்றீங்களே?’

“அடிப்பாவி. ராத்திரி பூராவும் என்னோடு ஒத்துப் பாடிட்டு, இப்போ வந்தவுடனே சட்னு இப்டிப் பிரண்டு பேசறியே இது அநியாயம்டி… நீ நல்லவளாகிக்கிறியா என்னை மட்டும் மாட்டிவிடப் பார்க்கிறியா இது அடுக்காதுடி… ஆண்டவனுக்கே அடுக்காதாக்கும்’

“அடுக்காட்டிப் போகட்டும்… அவன்தான் வந்துட்டான்ல… சரின்னு விடுவீங்களா. இதப் போயி தேவையில்லாம இழுத்திட்டிருக்கீங்க. வெட்டிப் பேச்சு எதுக்கு விட்டுத் தள்ளுங்க’

பேசப் புகுந்தால் நிச்சயமாய் அவள் என்னவெல்லாம் சொல்வாளோ அது அத்தனையையும் இவர் தனக்குத்தானே சொல்லிப் பார்த்துக் கொண்டார். கேள்வியும் பதிலுமாகத் தான் இங்கேயொரு பெரிய மனப் போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கையில், உள்ளே பையனோடு ஜாலியாய் சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருக்கிறாள். அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு, புரிகிறதோ புரியவில்லையோ “ம்ம்…அப்டியா’ என்றும் “அடடே என்னல்லாம் தெரிஞ்சி வச்சிண்டிருக்கே’ என்று செயற்கையாய் அவனைப் புகழ்ந்து கொண்டும், இயல்பாயும் போலியாயும் சிரித்துக் கொண்டும், (உனக்குத்தாண்டி காலம்…) இணக்கமாய்ப் பொழுது போனால் சரி என்று கழித்து விடுகிறாள்.

இதுவும் ஒரு வகையிலான சாமர்த்தியம்தானே? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு. எவ்வளவு சமர்த்து அவள் அப்படியானால், தான் என்ன அசடா ஆமா. அசடுதான். அதிலென்ன சந்தேகம்?

“இந்தக் காலத்தில் இப்டிச் சின்னச் சின்ன விஷயத்தையெல்லாம் பெரிசாக்குவாங்களா கோபப்படுறது, கத்துறது, இதெல்லாம் ரொம்பப் பழசு. எதையுமே கண்டுக்காம இருக்கிறதுதான் இப்போ நாகரீகம்… அதத் தெரிஞ்சிக்குங்கோ முதல்ல. எல்லாமே டேக் இட் ஈஸி பாலிஸிதான். நடக்கிறபடி நடக்கட்டும்னு போயிட்டேயிருக்க வேண்டியத்தான்…’

“அதான்… அதான் சொன்னனே. கடைசில கேனக் கிறுக்கன் நானாத்தான் ஆவேன்னு. எனக்கொண்ணும் நஷ்டமில்லே இதுனால. நீ சொல்றதுனால அசடாயிட மாட்டேன் நான். ஆனா எது சரின்னு ஒண்ணு இருக்கு எந்தக் காலத்துக்கும் பொருந்துற மாதிரி… அதை எந்தக் கொம்பனும் மாத்த முடியாதாக்கும்… இப்போல்லாம் அப்டி இருக்க முடியாது. காலத்துக்கு ஏத்தமாதிரி மாறித்தான் ஆகணும்னு சொல்லலாம். செய்யலாம். ஆனா அந்த மாதிரிச் சொல்றதும் செய்றதும் என்னைக்குமே நல்ல ரிசல்டைத் தராது. தந்ததுமில்லே. தெரிஞ்சிக்கோ.. அதுதான் சத்தியம்’ தனக்குத்தானே புலம்பிக் கொள்கிறார் அனந்தராமன்.

உள்ளே பையனோடு சேர்ந்த தன் மனைவியின் சிரிப்பொலி கேட்கிறது. கொடுத்து வைத்தவள். சட்டுச் சட்டுன்னு நிறம் மாறிக் கொண்டு எத்தனை சகஜமாகி விடுகிறாள்? ராத்திரியெல்லாம் பட்ட பாடு இப்பொழுது அவள் நினைவில் இருக்குமா? “ஏங்க… இவனென்ன செல்லை சுவிட்ச் ஆஃப் பண்ணியே வச்சிருக்கான். ஆபீசிலேர்ந்தும் போட்டுப் பார்த்துட்டேன். கிடைக்கவேயில்லை… நீங்க பேசினீங்களா?’

“பேசாம எனக்கு மட்டும் எப்படிக் கிடைக்கும். அவன் ரூம் மேட் ராகுலுக்குப் போட்டேன்… ரிங் போகுது. எடுக்கவே மாட்டேங்கிறான். நம்ம பிள்ளையாண்டான் எங்க அப்பாதாண்டா பேசுவாரு. எடுக்காதன்னிருப்பான். சரி எங்கூடப் பேச வேண்டாம். நாந்தான் பகையாளி. உனக்குப் பதில் சொல்லலாமில்லியா? ரொம்பப் பீத்திக்கிறியே பையன் பையன்னு… ஒரு போன் நினைச்ச நேரத்துக்குப் பேச முடியுதா அவனோட உன்னால…?

உன்னை மதிச்சாவது ரெண்டு வார்த்தை சொல்றானா ஹாஸ்டல் வேண்டாம்னு தனியா வீடு பார்த்து வச்சு, எத்தனை செலவானாலும் பரவால்லன்னு நல்லா படிச்சு, பெரிய உத்தியோகத்துல உட்கார்ந்தாப் போதும்னு எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்து சென்னைல இவன உட்கார்த்தினா ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லக் கூட ஐயாவுக்கு வலிக்குது. எப்பப் போட்டாலும் சுவிட்ச் ஆஃப், சுவிட்ச் ஆஃப்னு வருது. நம்ம கூடப் பேசப் பிடிக்கலைங்கிறதுக்காக ஃபோனை எந்த நேரமுமா ஆஃப் பண்ணி வைப்பாங்க? பிடிக்காமப் போற அளவுக்கு அப்படி என்ன கொடுமை பண்ணினோம்? நாம எல்லாம் நல்லதுதானே பண்ணி வச்சிருக்கோம். எதிர்பார்ப்புக்கு மேலதானே எல்லாமும் செய்து வச்சிருக்கோம்? உடனுக்குடனே சுலபமா எல்லாமும் கிடைக்குதுங்கிறதாலேயே அதுமேல இவனுங்களுக்கு மதிப்பு இல்லாமப் போச்சு போலிருக்கு. கஷ்டப்பட்டுக் கிடைக்காத எதுவுமே மதிப்பிழந்து போகும்ங்கிறதுக்கு இதுதான் உதாரணம்.

அட, நம்ப கூடத்தான் பேச வேண்டாம்… அவன் ஃப்ரென்ட்ஸ்களோட பேச என்ன செய்றானாம்? ஒரு வேளை அதுக்குத் தனி ஃபோன் எதுவும் வச்சிருப்பானோ இருக்கலாம், எவனுக்குத் தெரியும்? பேங்க பாலன்ஸ் இறங்குறத மட்டும்தான நாம பார்க்கிறோம். என்ட்ரி போடறதைச் சொல்றேன்…என்ன செலவு, ஏது செலவுன்னு ஒண்ணும் கேட்குறதில்லையே செலவும் வேக வேகமாத்தானே ஆகுது…நின்னு நிதானிச்சு கேட்குற ஸ்பீடுலயா இருக்குது அப்டியே கேட்டாலும் அதுவும் தப்பாயிருமே எதத்தான் கேட்க முடியுது? இந்தக் காலத்துப் பசங்ககிட்டே எதாச்சும் பேசினா, எது நாகரீகம், எது அநாகரீகம்னு நமக்கே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுறானுங்க… எப்டியோ போகட்டும் வேண்டாங்கலே… இப்போ நமக்கு மதிப்பளிக்கலைன்னு யாரு கவலைப்பட்டா எவன் என்ன கேட்குறது அவன் ஒரு நல்ல இடத்துல உட்கார்ந்தாச் சரி.. அதுதான் நமக்கு வேணும்.

அதுக்குத்தான் இத்தனை கஷ்டமும் கேவலமும். ஆனாலும் ஒரு ரெண்டு வார்த்தை. கிளம்பிட்டேம்ப்பா… காலைல வந்திடுவேன். பஸ் ஸ்டான்ட் வந்ததும் பேசறேன். சொல்லலாம்ல? தெரியலையே…’

“எத்தனை வாட்டி சொல்லிக் கொடுத்தாலும் தெரியலியே  ஆரம்பிச்சிட்டீங்களா..?திரும்பவும் துவக்குறீங்க போலிருக்கு. அத்தோட விடமாட்டீங்க நீங்க…’

“ஏன் சொல்றேன்னா, அன்னைக்கே ரிசர்வ் பண்ணிட்டான்லடி. இதுவரைக்கும் ஒரு ஃபோனைக் கூடக் காணலியே எங்க போனான் என்ன ஆனான் மனசு தவிக்குமால்லியா? டிரெயின் எதையும் தவற விட்டுட்டானா பஸ்ல வரானா பெரிய மெட்ரோபாலிட்டன் சிட்டில என்னாச்சு ஏதாச்சுன்னு எவனுக்குத் தெரியும்? யாரையாச்சும் கேட்டுத் தெரிஞ்சிக்க முடியுமா சொல்லு? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்துல இருப்பாங்க… ஃபோன் இருந்து என்ன பிரயோஜனம் பேச முடியலியே இத்தன தவிப்புக்கு இவனைப் பேசாம ஹாஸ்டல்லயே இருத்தி வச்சிருக்கலாம் போலிருக்கு. ஏன்னா வார்டன்ட சொல்லாம வெளியேற முடியாது பாரு. ஆள் இல்லாட்டியும் ஹாஸ்டலுக்குப் பேசி விபரம் தெரிஞ்சிக்கலாமே? எப்பப் பார்த்தாலும் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கிறதுக்கா இவனுங்களுக்கு ஃபோன் வாங்கிக் கொடுத்தது? தண்டம்… தண்டம்…’

தான் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல், எதுவும் ஓடாமல், பெருத்த மனத் தவிப்போடு கண்களில் நீர் தளும்ப செய்வதறியாது அமர்ந்திருந்த அவள், இதோ… உள்ளே இன்று கலகலவென்று சிரித்துக் கும்மாளமிட்டபடி மகனோடு ஒன்றியிருக்கிறாள். எல்லாம் முடித்து தன்னிடம் வந்து எப்படியும் ரெண்டு வார்த்தை பேசுவான் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அனந்தராமன்.

சீரழிஞ்சு நிக்கிறானா உதவாக்கரையாப் போயிட்டானா? என்னவோ பெரிசாப் பேச வர்றீங்களே?’

“அடிப்பாவி. ராத்திரி பூராவும் என்னோடு ஒத்துப் பாடிட்டு, இப்போ வந்தவுடனே சட்னு இப்டிப் பிறண்டு பேசறியே இது அநியாயம்டி… நீ நல்லவளாகிக்கிறியா என்னை மட்டும் மாட்டிவிடப் பார்க்கிறியா இது அடுக்காதுடி… ஆண்டவனுக்கே அடுக்காதாக்கும்’

“அடுக்காட்டிப் போகட்டும்… அவன்தான் வந்துட்டான்ல… சரின்னு விடுவீங்களா. இதப் போயி தேவையில்லாம இழுத்திட்டிருக்கீங்க. வெட்டிப் பேச்சு எதுக்கு விட்டுத் தள்ளுங்க’

பேசப் புகுந்தால் நிச்சயமாய் அவள் என்னவெல்லாம் சொல்வாளோ அது அத்தனையையும் இவர் தனக்குத்தானே சொல்லிப் பார்த்துக் கொண்டார். கேள்வியும் பதிலுமாகத் தான் இங்கேயொரு பெரிய மனப் போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கையில், உள்ளே பையனோடு ஜாலியாய் சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருக்கிறாள். அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு, புரிகிறதோ புரியவில்லையோ “ம்ம்…அப்டியா’ என்றும் “அடடே என்னல்லாம் தெரிஞ்சி வச்சிண்டிருக்கே’ என்று செயற்கையாய் அவனைப் புகழ்ந்து கொண்டும், இயல்பாயும் போலியாயும் சிரித்துக் கொண்டும், (உனக்குத்தாண்டி காலம்…) இணக்கமாய்ப் பொழுது போனால் சரி என்று கழித்து விடுகிறாள்.

இதுவும் ஒரு வகையிலான சாமர்த்தியம்தானே? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு. எவ்வளவு சமர்த்து அவள்? அப்படியானால், தான் என்ன அசடா ஆமா. அசடுதான். அதிலென்ன சந்தேகம்?

“இந்தக் காலத்தில் இப்டிச் சின்னச் சின்ன விஷயத்தையெல்லாம் பெரிசாக்குவாங்களா கோபப்படுறது, கத்துறது, இதெல்லாம் ரொம்பப் பழசு. எதையுமே கண்டுக்காம இருக்கிறதுதான் இப்போ நாகரீகம்… அதத் தெரிஞ்சிக்குங்கோ முதல்ல. எல்லாமே டேக் இட் ஈஸி பாலிஸிதான். நடக்கிறபடி நடக்கட்டும்னு போயிட்டேயிருக்க வேண்டியதுதான்…’

“அதான்… அதான் சொன்னனே. கடைசில கேணக் கிறுக்கன் நானாத்தான் ஆவேன்னு. எனக்கொண்ணும் நஷ்டமில்லே இதுனால. நீ சொல்றதுனால அசடாயிட மாட்டேன் நான். ஆனா எது சரின்னு ஒண்ணு இருக்கு எந்தக் காலத்துக்கும் பொருந்துற மாதிரி… அதை எந்தக் கொம்பனும் மாத்த முடியாதாக்கும்… இப்போல்லாம் அப்டி இருக்க முடியாது. காலத்துக்கு ஏத்தமாதிரி மாறித்தான் ஆகணும்னு சொல்லலாம். செய்யலாம். ஆனா அந்த மாதிரிச் சொல்றதும் செய்றதும் என்னைக்குமே நல்ல ரிசல்டைத் தராது. தந்ததுமில்லே. தெரிஞ்சிக்கோ.. அதுதான் சத்தியம்’ தனக்குத்தானே புலம்பிக் கொள்கிறார் அனந்தராமன்.

உள்ளே பையனோடு சேர்ந்த தன் மனைவியின் சிரிப்பொலி கேட்கிறது. கொடுத்து வைத்தவள். சட்டுச் சட்டுன்னு நிறம் மாறிக் கொண்டு எத்தனை சகஜமாகி விடுகிறாள்? ராத்திரியெல்லாம் பட்ட பாடு இப்பொழுது அவள் நினைவில் இருக்குமா? “ஏங்க… இவனென்ன செல்லை சுவிட்ச் ஆஃப் பண்ணியே வச்சிருக்கான். ஆபீசிலேர்ந்தும் போட்டுப் பார்த்துட்டேன். கிடைக்கவேயில்லை… நீங்க பேசினீங்களா?’

“பேசாம எனக்கு மட்டும் எப்படிக் கிடைக்கும். அவன் ரூம் மேட் ராகுலுக்குப் போட்டேன்… ரிங் போகுது. எடுக்கவே மாட்டேங்கிறான். நம்ம பிள்ளையாண்டான் எங்க அப்பாதாண்டா பேசுவாரு. எடுக்காதன்னிருப்பான். சரி எங்கூடப் பேச வேண்டாம். நாந்தான் பகையாளி. உனக்குப் பதில் சொல்லலாமில்லியா? ரொம்பப் பீத்திக்கிறியே பையன் பையன்னு… ஒரு போன் நினைச்ச நேரத்துக்குப் பேச முடியுதா அவனோட உன்னால…?

உன்னை மதிச்சாவது ரெண்டு வார்த்தை சொல்றானா ஹாஸ்டல் வேண்டாம்னு தனியா வீடு பார்த்து வச்சு, எத்தனை செலவானாலும் பரவால்லன்னு நல்லா படிச்சு, பெரிய உத்தியோகத்துல உட்கார்ந்தாப் போதும்னு எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்து சென்னைல இவன உட்கார்த்தினா ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லக் கூட ஐயாவுக்கு வலிக்குது. எப்பப் போட்டாலும் சுவிட்ச் ஆஃப், சுவிட்ச் ஆஃப்னு வருது. நம்ம கூடப் பேசப் பிடிக்கலைங்கிறதுக்காக ஃபோனை எந்த நேரமுமா ஆஃப் பண்ணி வைப்பாங்க? பிடிக்காமப் போற அளவுக்கு அப்படி என்ன கொடுமை பண்ணினோம்? நாம எல்லாம் நல்லதுதானே பண்ணி வச்சிருக்கோம். எதிர்பார்ப்புக்கு மேலதானே எல்லாமும் செய்து வச்சிருக்கோம்? உடனுக்குடனே சுலபமா எல்லாமும் கிடைக்குதுங்கிறதாலேயே அதுமேல இவனுங்களுக்கு மதிப்பு இல்லாமப் போச்சு போலிருக்கு. கஷ்டப்பட்டுக் கிடைக்காத எதுவுமே மதிப்பிழந்து போகும்ங்கிறதுக்கு இதுதான் உதாரணம். அட, நம்ப கூடத்தான் பேச வேண்டாம்…

அவன் ஃப்ரென்ட்ஸ்களோட பேச என்ன செய்றானாம்? ஒரு வேளை அதுக்குத் தனி ஃபோன் எதுவும் வச்சிருப்பானோ இருக்கலாம், எவனுக்குத் தெரியும்? பேங்க பாலன்ஸ் இறங்குறத மட்டும்தான நாம பார்க்கிறோம். என்ட்ரி போடறதைச் சொல்றேன்… என்ன செலவு, ஏது செலவுன்னு ஒண்ணும் கேட்குறதில்லையே செலவும் வேக வேகமாத்தானே ஆகுது… நின்னு நிதானிச்சு கேட்குற ஸ்பீடுலயா இருக்குது அப்டியே கேட்டாலும் அதுவும் தப்பாயிருமே எதத்தான் கேட்க முடியுது? இந்தக் காலத்துப் பசங்ககிட்டே எதாச்சும் பேசினா, எது நாகரீகம், எது அநாகரீகம்னு நமக்கே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுறானுங்க… எப்டியோ போகட்டும் வேண்டாங்கலே… இப்போ நமக்கு மதிப்பளிக்கலைன்னு யாரு கவலைப்பட்டா எவன் என்ன கேட்குறது அவன் ஒரு நல்ல இடத்துல உட்கார்ந்தாச் சரி.. அதுதான் நமக்கு வேணும்.

அதுக்குத்தான் இத்தனை கஷ்டமும் கேவலமும். ஆனாலும் ஒரு ரெண்டு வார்த்தை. கிளம்பிட்டேம்ப்பா… காலைல வந்திடுவேன். பஸ் ஸ்டான்ட் வந்ததும் பேசறேன். சொல்லலாம்ல? தெரியலையே…’

“எத்தனை வாட்டி சொல்லிக் கொடுத்தாலும் தெரியலியே  ஆரம்பிச்சிட்டீங்களா..?திரும்பவும் துவக்குறீங்க போலிருக்கு. அத்தோட விடமாட்டீங்க நீங்க…’

“ஏன் சொல்றேன்னா, அன்னைக்கே ரிசர்வ் பண்ணிட்டான்லடி. இதுவரைக்கும் ஒரு ஃபோனைக் கூடக் காணலியே எங்க போனான் என்ன ஆனான் மனசு தவிக்குமால்லியா? டிரெயின் எதையும் தவற விட்டுட்டானா பஸ்ல வரானா பெரிய மெட்ரோபாலிட்டன் சிட்டில என்னாச்சு ஏதாச்சுன்னு எவனுக்குத் தெரியும்? யாரையாச்சும் கேட்டுத் தெரிஞ்சிக்க முடியுமா சொல்லு? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்துல இருப்பாங்க… ஃபோன் இருந்து என்ன பிரயோஜனம் பேச முடியலியே இத்தன தவிப்புக்கு இவனைப் பேசாம ஹாஸ்டல்லயே இருத்தி வச்சிருக்கலாம் போலிருக்கு. ன்னா வார்டன்ட சொல்லாம வெளியேற முடியாது பாரு. ஆள் இல்லாட்டியும் ஹாஸ்டலுக்குப் பேசி விபரம் தெரிஞ்சிக்கலாமே? எப்பப் பார்த்தாலும் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கிறதுக்கா இவனுங்களுக்கு ஃபோன் வாங்கிக் கொடுத்தது? தண்டம்… தண்டம்…’

தான் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல், எதுவும் ஓடாமல், பெருத்த மனத் தவிப்போடு கண்களில் நீர் தளும்ப செய்வதறியாது அமர்ந்திருந்த அவள், இதோ… உள்ளே இன்று கலகலவென்று சிரித்துக் கும்மாளமிட்டபடி மகனோடு ஒன்றியிருக்கிறாள். எல்லாம் முடித்து தன்னிடம் வந்து எப்படியும் ரெண்டு வார்த்தை பேசுவான் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அனந்தராமன்.

_ உஷாதீபன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:35

விடை வெண்திரையில்!
-------------------
ரங்கநாதனுக்கு முத்து சொன்ன யோசனையை ஏற்பது இயலாத ஒன்று. இன்னும் சொல்லப் போனால் சமூக நீதிக்கும் ஒழுங்குக்கும் புறம்பான ஒன்று. பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்த அவரால் அதற்கு உடன்படமுடியாது.

ஆனால்,மனம் வலுவிழந்து நிற்கிற நேரத்தில் ஒரு சாதாரண நபர் சொல்கிற யோசனைகூட மிகப்பெரிய அறிவுரைமாதிரி தோன்றி விடுகிறது. அப்படி ஒரு குழப்பத்தில்தான் ரங்கநாதன் ஆழ்ந்திருந்தார். புரஜெக்டர் அறைக்கு வெளியே மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். ”டிர்ர்….”என்ற புரஜெக்டரின் சப்தம் மெலிதாய் காதில் விழுந்து கொண்டிருந்தது.

சைக்கிள் ஸ்டாண்ட் பக்கம் பார்த்தார். எண்ணி பத்து சைக்கிள் கூட இல்லை. மொத்த டிக்கட்டே ஐம்பதைத் தொட்டிருக்காது. கார்பன் செலவுக்கும்,மின் கட்டணத்துக்கும் கூட தேறாது போல இருந்தது வந்திருந்த ஜனங்களின் எண்ணிக்கை. பெண்கள் பகுதி முழுவதும் காலியாகவே இருந்தது. முத்து புரஜெக்டர் ரூமில் இருந்தான். படம் ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. இனிமேல் ஆட்கள் வருவதற்கு வாய்ப்பில்லை.

இரண்டு வருடமாக சரியான மழை இல்லாததால் வயலெல்லாம் காய்ந்து கிடக்கிறது. அதே காரணம் ரைஸ் மில்லிலும் ஓட்டம் இல்லை. முன்பெல்லாம் விவசாயம் சரியாக இல்லாவிட்டால் திரையரங்கம் கை கொடுத்துவிடும். பணப்புழக்கத்துக்கு குறை வராது. ஆனால், நிலைமை இப்போது அப்படி இல்லை. பத்து வேலைக்காரர்கள் திரையரங்கை நம்பியே இருக்கிறார்கள். அவர்களுக்கு விவசாய வேலை எதுவும் தெரியாது. அதுவும் முத்து, அப்பா காலத்திலிருந்தே ஆபரேட்டராக இருப்பவர். ரங்கநாதனை விட ஏழெட்டு வயது மூத்தவர். சின்ன பிள்ளையிலிருந்தே ரங்கநாதன் முத்துவை ‘அண்ணா அண்ணா’ என்றுதான் அழைப்பார்.

அப்பாவின் மறைவுக்குப்பின் அனைத்துப் பொறுப்புகளும் ரங்கநாதன் கைக்கு வந்தது. நாலைந்து வருடங்கள் முன்புவரை திரையரங்கில் கும்பல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். டிக்கெட் கவுண்டரில் அடிதடி நேர்ந்து சமயத்துக்கு போலீûஸ அழைக்க வேண்டி வரும்.

அப்பா எந்த வருடத்தில் இந்த திரையரங்கைக் கட்டினார் என்பதை வரவு செலவு கணக்கு நோட்டில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டார் ரங்கநாதன். மற்றபடி அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே திரையரங்கோடு தொடர்பிருக்கிறது. ரங்கா திரையரங்கம் நியாயப்படி டூரிங் டாக்கிஸ் என்றுதான் எழுத வேண்டும். அப்பாவுக்கு தமிழ் மேல் பற்று அதிகம். எனவே தமிழிலேயே திரையரங்கம் என்று எழுத வைத்தார்.

ரங்கா என்று பெயர் வைத்ததன் காரணம் மகனின் பெயர் ரங்கநாதன் என்பதால் அல்ல. மகனுக்கு ரங்கநாதன் என்று பெயர் வைத்ததன் ஆதி காரணம் பக்திதான். மாதம் தவறாமல் ஸ்ரீரங்கம் போய் ரங்கநாத சுவாமியையும் தாயாரம்மாளையும் சேவிக்காமல் இருந்ததில்லை.

பத்து மைல் சுற்றளவுக்கு வேறு டூரிங் டாக்கீஸ் கிடையாது. நகரத்துக்குப் போனால்தான் நல்ல திரையரங்கம். ரங்கநாதனுக்கு நினைவிருக்கிறது. சுற்று வட்டாரத்திலிருந்து ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டு சினிமாவுக்கு வருவார்கள். சொந்த சினிமா கொட்டகை என்றாலும் ரங்கநாதனின் அப்பா அவரை தினமும் திரையரங்குக்கு வர அனுமதிக்க மாட்டார். படிப்பில் கவனம் சிதறி விடும் என்பதுதான்

அதற்குக் காரணம். புதிய படம் போடுகிற அன்று மட்டும் அம்மா தங்கைகளோடு ‘பாக்ஸில்’ உட்கார்ந்து படம் பார்ப்பது வழக்கம். புரஜெக்டர் அறையின் இரண்டு பக்கங்களிலும் பாக்ஸ் அமைப்பில் தடுப்புகள் இருக்கும். இரண்டு வரிசையில் நாற்காலிகள் இருக்கும். மொத்தம் பதினைந்து நாற்காலிகள். வலது பக்கம் இருக்கும் பாக்ஸ் ரங்கநாதனின் சொந்தக்காரர்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு. வெளியூரிலிருந்து வரும் உறவுகாரர்கள் அன்றைய தினம் படம் பார்க்க வந்து விடுவார்கள். குழந்கைள் சிறுவர்கள் இருந்தால் ரங்கநாதனும் ஒட்டிக்கொள்வார்.

இடது பக்கம் இருக்கும் பாக்ஸ் அப்பாவின் நண்பர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தாசில்தார்,காவல்துறையினர்,மின்சாரவாரிய என்ஜினியர் மற்றும் அவர்கள் குடும்பம் என்று அங்கே உட்கார்ந்து பார்ப்பார்கள்.

பிரபல திரைப்பட நடிகர் ஒருவர்,ஒரு முறை வெளிப்புற படப்பிடிப்புக்கு

வந்தபோது, அப்பா மற்றும் முக்கிய கட்சி பிரமுகர்களுடன் பாக்ஸில் உட்கார்ந்து படம் பார்த்தார். எந்த வகுப்பில் படித்துக் கொண்டிருந்தோம் என்பது ரங்கநாதனுக்கு நினைவில்லை. அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று ஃபிரேம் போட்டு புரஜெக்டர் ரூமில் மாட்டப்பட்டிருக்கிறது.

ரங்கநாதனுக்கு நினைவுகள் அலைஅலையாய் வந்து முட்டி மோதின. கடைசியாய் முத்து பேசியதும் கேட்டதும் நினைவுக்கு வந்தன. முத்து, ரங்கநாதன் சிறுவனாய் இருந்தபோது எப்படி ‘தம்பீ’ என்று அன்புடனும் வாஞ்சையுடனும் அழைத்தாரோ அப்படியேதான் இன்றும். ‘மொத்தம் எட்டாயிரம் அடிகள்தான் தம்பி. பத்து நிமிடம் கூட ஓடாதுன்னு வச்சுக்கங்களேன்.’ ரங்கநாதன் பதில் எதுவும் பேசவில்லை. சற்று யோசனைக்குப்பின்,”வேண்டாம்னே. அந்தப் பாவத்தை நாம் செய்ய வேண்டாம்.” ”எனக்கு தோணுன யோசனையைச் சொன்னேன். நானும் விசாரிச்சு பார்த்தேன். நடுப்பட்டு,ஆரியன் குளம்,அன்ன சத்திரம் எல்லா இடத்துலயும் செகண்ட் ஷோ இண்ட்டர்வெலுக்கப்புறம் போட்டுடறாங்களாம். கலக்ஷன் பரவாயில்லைன்னு பேசிக்கிறாங்க. நீங்க சரின்னு சொன்னா போலீஸ் ஸ்டேஷன்ல நான் ஏற்பாடு பண்ணிடறேன். அந்த ஊருங்கள்லயும் ஸ்டேஷனுக்கு மாமூல் குடுத்துடறதா கேள்விப்பட்டேன்.”

ரங்கநாதன் மெüனம் காத்தார். வயதில் பெரியவர் ஏதோ அசட்டுத்தனமாக பேசுகிறார் என்று தோன்றியது. ”கோயில் சிலைகள்லயும், தேர்லயும் பார்க்கறப்ப நமக்கு அது அசிங்கமாவோ,பாவமாவோ தோன்றதில்லையே. இயற்கைக்கு உட்பட்ட விஷயம்தானே. படிக்காத பாமரனின் தர்க்கம் மாதிரி தோன்றினாலும் அதில் எதுவும் தவறு இருப்பதாகப்படவில்லை. ஆனாலும்,பிரச்னைக்கான தீர்வு அதுவல்லவே. ”இப்பல்லாம் பள்ளிக்கூடத்து பசங்களோ பொம்பளைங்களோ தல வச்சு படுக்கிறதில்லை தம்பீ. ஏதோ கூலியாளுங்க அவுங்க இவுங்கன்னு ஒரு ஐம்பது டிக்கட் வந்தாலே பெரிசு. திருச்சியில் விசாரித்தேன். ஃபிலிம் இருக்குன்னு சொன்னாங்க. நீங்க பயப்படவேண்டாம். நான் பார்த்துக்கறேன். இதுல பழிபாவம் எதுவுமில்லை தம்பீ. அப்படியே எதுவும் வந்தாலும் பழிய என்மேல போட்டுடுங்க.”

”நான் யோசிச்சிட்டு சொல்றேன்.” ஆனால் ரங்கநாதனால் அதற்கு மேல் அதைப்பற்றி யோசிக்க முடியவில்லை. மாறாக,அவருக்குப் பழைய நினைவுகள்தான் வந்து போயின. இப்போதைய நிலையைப் பார்க்கும்போது கசப்பாகவே இருக்கிறது. என்ஜினியரிங் முடித்த கையோடு வேலைக்குப் போயிருந்தால்,பெரிய பதவியில் இருந்திருக்கலாம்.

கண்ணுக்கெட்டிய தூரம் நிலம்,ரைஸ்மில்,ரூட் பஸ் மூன்று,டூரிங் டாக்கிஸ் என அப்பா தனியாக நிர்வகிக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அனைத்தையும் நன்றாக நிர்வகித்தாலே போதும் என்கிற நிலை. கமலஹாசனின் கல்யாண ராமன் படம் ஓடியதில் கிடைத்த வருமானத்தில் இளையதங்கை சுலோச்சனாவின் கல்யாண செலவில் பாதிக்கும் மேல் வந்திருந்தது. டீ கடைக்காரப் பையன் ரங்கநாதனுக்கு எவர்சில்வர் டம்ளரில் காபி கொண்டு வந்து கொடுத்தான். அப்போதெல்லாம் திரையரங்கிற்குள் டீ கடை வைக்க நான் நீ என்று போட்டியிருக்கும். மாதம் ஓரு குறிப்பிட்ட தொகையையும் கொடுத்துவிடுவார்கள். காபியைக் குடித்தவாறே மீண்டும் ரங்கநாதன் யோசிக்கலானார். முத்துவையும் சேர்த்து எட்டு பேர் வேலை செய்கிறார்கள். பகல் நேரத்தில் ஒரு காவலாளி சாம்பசிவம் என்று பெயர். வயது அறுபதுக்கு மேல் சம்பளம் என்று எதுவுமில்லை.

சாப்பாட்டு நேரத்துக்கு ரங்கநாதன் வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்துவிடுவார். மனைவி காலமாகிவிட்டாள். ஒரே மகன் மிலிட்டரியில் இருக்கிறான். எனவே சினிமா கொட்டகைதான் அவருக்கு வீடு. காபியைக் குடித்து முடித்தபின் டம்ளரைக் கீழே வைத்தார் ரங்கநாதன். சாம்பசிவம் அதை பவ்யமாக கையிலெடுத்து டீக்கடையில் கொண்டு போய் கொடுத்தார்.

போன வாரம் தேடிப்பிடித்து ஒரு நல்ல படத்தைக் கொண்டு வந்து திரையிட்டார்கள். அன்றைய தினம் பார்த்து அதே படத்தை டெலிவிஷனில் ஒளிபரப்பினார்கள். சாதாரணமாக வருகிற முப்பது நாற்பது டிக்கெட் கூட வரவில்லை. மூன்று நாள் கழித்து பெட்டியை அனுப்ப வேண்டியதாகி விட்டது.

முத்து சொன்னது ரங்கநாதனை மீண்டும் யோசிக்க வைத்தது. அதில் என்ன தப்பு? மனுஷக்கு வயிற்றுக்கு உணவு எப்படி தேவையோ அப்படித்தானே அதுவும். அதில் பழி சொல்லவோ பாவம் என்று எண்ணுவதற்கோ என்ன இருக்கிறது? லட்சோப லட்ச ஆண்டுகள் மனித இனம் அதைக் கடந்துதானே வந்திருக்கிறது.

முதல் காட்சி இடைவேளையின் போது வெளியே வந்தார். சிகப்பு கலர் ஈரிழைத் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். கொட்டைகைக்குள் பழைய எம்.ஜி.ஆர். பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. ”என்ன முத்தண்ணா…..புதுப்பாட்டு எதுவும் இல்லையா?”புதுப்படத்துல வர்ற பாட்டுங்கள்ல எங்க தம்பி வரியெல்லாம் புரியுது” என்று சிரித்தார். மெüனமாகி,”தம்பீ…. நான் சொன்னதை யோசிச்சிங்களா!”மனமென்னவோ ஒப்பவில்லைதான். ஆனால் கொட்டகைக்கும் வாய்க்குமாவது ஓடட்டுமே என்கிற எண்ணத்தில் ஒரு ஆழ்ந்த பெருமூச்சுக்குப்பின் ரங்கநாதன், ”சரிண்ணே,பிரச்சனை வராம பார்த்துக்கங்க” என்று எழுந்தார்.

திரையரங்கினுள் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்கிற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. முத்துவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.”மெட்ராஸ்ல ஓரு வேலை இருக்கு முத்தண்ணா. வர்றதுக்கு பத்து நாள் பிடிக்கும். பார்த்துக்கங்க.”நான் பார்த்துக்கிறேன் தம்பி.நீங்க போயிட்டு வாங்க.”

மறுநாள் முத்து திருச்சிக்குப் போய் படச்சுருளை வாங்கி வந்தார். முதல் நாள் இரண்டாவது காட்சியில் இடைவேளை முடிந்து பத்து நிமிடம் கழித்து வருவதைப்போல் மெயின் படத்துடன் ஓடவிட்டார். தியேட்டரில் கூச்சலும் விசில் சப்தமும் எழுந்து அடங்கி ஓசையின்றி பார்க்கத் தொடங்கினர். முடிவடைந்த பின் மீண்டும் கூச்சல். பின்னர் அமைதி. ஸ்டேஷனில் பேசி மாமூலுக்கு எற்பாடு செய்துவிட்டு வந்தார் முத்து. கிட்டத்தட்ட திரையரங்கின் மேனஜர் அந்தஸ்துதான் முத்துவுக்கு. வருகிற கலெக்ஷனுக்குத் தனியாக மேனஜரெல்லாம் போட முடியாத நிலை.

முதல் நாள் திரையிட்டதின் பிரதிபலிப்பு மறுநாள் இரண்டாவது ஆட்டத்தில் தெரிந்தது. நூறு டிக்கெட்டுக்கும் மேல் கும்பல் வந்தது. மூன்றாம் பகற்பொழுதில் ஸ்டேஷனுக்குப் போய் கவனித்துவிட்டு வந்தார் முத்து. அதற்கடுத்த வாரம் இரண்டாவது ஆட்டத்துக்கு கும்பல் சூடு பிடித்தது. இரவு நேரப் பணியிலிருந்த கான்ஸ்டபிள் இருவர் கூட வந்து பார்த்து விட்டுப் போயினர். ‘அந்த சீன்களை மட்டும்’. இந்த விபரம் நாலைந்து தினங்களில் சுற்று வட்டாரத்தில் கற்றவர்களிடமும் கல்லாதவர்களிடமும் ரகசியமாக கசியத் தொடங்கியது. ஏழாம் நாள் இரவுக் காட்சியில் ஒரு கும்பல் மீண்டும் ஒரு தடவை அந்தப் பகுதிகளை ஓட்டச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தது. வேறு வழியின்றி அதே பகுதிகளை அரைமணி நேரத்தில் வெட்டி ஒட்டி மீண்டும் திரையிட்டார் முத்து. மறுநாள் வசூல் கணிசமாக கூடியது. அதற்குள் படச்சுருளைத் திருப்பி அனுப்பச் சொல்லி திருச்சியிலிருந்து ஆள் அனுப்பியிருந்தார்கள். மறுநாள் காலை தானே வந்து கொடுத்துவிட்டுப் பணத்தையும் தருவதாகப் பதில் சொல்லியனுப்பினார் முத்து. ஆனால் நடந்ததோ வேறு!

மெட்ராஸில் சொந்த வேலைகளை முடித்துக் கொண்டு ஒன்பதாம் நாள் மதியம் ரங்கநாதன் ஊருக்கு வந்து சேர்ந்தார்.

அவர் இந்த பஸ்ஸில்தான் வருவார் என்பதைச் சரியாக யூகித்து வைத்திருந்த இரண்டு காவலர்கள்,அவரை பஸ் ஸ்டாண்டிலேயே சந்தித்து,”இன்ஸ்பெக்டர் ஐயா உங்களை அவசரமா பார்க்கணும்னு சொன்னாங்க. கொஞ்சம் வந்து போனீங்கன்னா நல்லா இருக்கும்” மிகவும் பவ்யமாகவே அழைத்தார்கள். ரங்கநாதன் இதுவரை எந்த விஷயத்திற்கும் காவல்நிலையம் போனதில்லை. அதற்கு தேவையும் இருந்ததில்லை.

எதிர்பார்த்த மாதிரியே இன்ஸ்பெக்டர் சீக்கிரம் வரவில்லை. மதிய உணவை முடித்துக் கொண்டு சாவகாசமாக மூன்று மணிக்கு வந்து சேர்ந்தார். ரங்கநாதன் முகமன் கூறியும் அவர் அதை உரிய முறையில் ஏற்கவில்லை. முகத்தில் சற்று சிடுசிடுப்பு இருந்தது. ரங்கநாதனுக்கு மனதில் சுரீரென்றது.இன்ஸ்பெக்டர் காவலரிடம் சைகை காண்பித்தார். காவலர் உள்பக்கம் போனார்.மேற்கொண்டு என்ன கேட்கலாம் என்று ரங்கநாதன் யோசித்த சமயத்தில், முத்து தலையில் அடித்துக் கொண்டு அழுதவாறு வந்து ”என்னயை மன்னிச்சிடுங்க தம்பி. விஷயம் விபரீதமா போயிடுச்சி…” என்று காலில் விழுந்தார்.

திடுக்கிட்ட ரங்கநாதன் முத்துவை தூக்கி நிறுத்தினார். பக்கவாட்டில் திரையரங்கில் வேலை செய்யும் பணியாட்கள் இருவர் கை கட்டி நின்றனர். எஜமான் விசுவாசத்தில் அவர்களுக்கு கண்கலங்கியது. இப்போது ரங்கநாதனுக்கு தெளிவாக விளங்கிவிட்டது. இனிமேல் சொல்வதற்கோ,செய்வதற்கோ என்ன இருக்கிறது என்று யோசித்தார். இன்ஸ்பெக்டர் அலமாரியைத் திறந்து படச்சுருள் பெட்டி ஒன்றை எடுத்து வைத்தார். ”இப்போ உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். நான் எதுக்கு உங்களைக் கூப்பிட்டேன்னு…” இன்ஸ்பெக்டர் பீடிகையுடன் சொன்னார். ” என்னோட அனுமதியோடதான் இது நடந்துச்சி.” குரலில் ஓரு அசாத்திய அமைதியும் அழுத்தமும் இருந்தது. கொஞ்சம் அதிகார தோரணைகூட இருந்தது. உண்மையை ஒப்புக் கொள்கிற ஒரு மனிதனுக்கு இயல்பாக வந்து சேருகிற தைரியம் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.சட்டப்படி குற்றம்னு தெரியாதா? ”தெரியும்..” சற்று அழுத்தமாய். ”தெரிஞ்சா செய்தீங்க…?”

”ஆமாம்…சூழ்நிலை…” ரங்கநாதன் பழியைப் பணியாட்கள் மேல் போட்டுவிடுவார் என்றுதான் இன்ஸ்பெக்டர் எதிர்பார்த்தார். ஏனென்றால், முத்து இந்த சம்பவத்துக்கும் முதலாளிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றுதான் சொல்லியிருந்தார். ஆனால்,ரங்கநாதனோ அதற்கு தானே பொறுப்பு என்கிற மாதிரி பேசுகிறாரே என்றும் யோசித்தார். ”இப்போ என்ன செய்யலாம்?” என்றார் இன்ஸ்பெக்டர். ”சட்டப்படி நீங்க என்ன செய்யணுமோ அதை செய்யுங்க…” வீட்டுக்கு வந்தபோது ரங்கநாதன் குற்ற உணர்வோடு பிரேமாவைப் பார்த்தார். பிரேமா குரெலடுத்து அழுதாள். ஊரில் எப்படி தலைகாட்ட முடியும் என்கிற கவலை அவளுக்கு. ரங்கநாதனிடம் கலக்கம் எதுவுமில்லை. முத்துவும் வேலையாட்களும் திரும்பி வந்தனர். ”தம்பீ…உங்களை …இந்த நிலைக்கு ஆளாக்கிட்டேன்…பாவி…” ரங்கநாதனின் கால்களுக்கருகில் தரையில் விழுந்து கதறினார் முத்து. ”முத்தண்ணா….என்னா…நீங்க….கஷ்டம் யாருக்குத்தான் வர்றதில்லை. வயசுல பெரியவர்…தைரியமாக இருங்க”. தோள்களைப் பற்றி தூக்கி நிறுத்தினார். முத்து சமாதானம் ஆகவில்லை. குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி அழுதார். புரஜக்டரை ஒரு குழந்தையைப் போல பாவித்து வந்தார் முத்து. ஒரு சின்ன சப்தம் கூடுதலாக வந்தால்கூட மெக்கானிக்கை வரவழைத்து சரி செய்துவிடுவார். மெலிதான குரலில்,”இன்ஸ்பெக்டருக்கான பங்கு சரியா போய்ச் சேரலைன்னு கேள்விப்பட்டேன். அதனாலதான்…” என்று இழுத்தார் முத்து. ”பரவால்லேண்ணே… எப்படி விழுந்தோம்கறது முக்கியமில்லை. எப்படி எழுந்திரிக்கறோம்கறதுதான் முக்கியம். நீங்க போய் பெருமாள் மேஸ்திரிய கூட்டிகிட்டு வாங்க.”

”மேஸ்திரியாவா…எதுக்கு தம்பீ?”

” நீங்க கூட்டிக்கிட்டு வாங்களேன்” முத்து வேகமாய் புறப்பட்டார்.

ரங்கநாதன் கூப்பிட்டனுப்பினார் என்றதும் வேலையைப் பாதியில் விட்டுவிட்டு ஓடி வந்தார் மேஸ்திரி. வேலைகள் மளமளவென்று தொடங்கப்பட்டு ஆறுமாத காலத்தில் ரங்கா திரையரங்கம்,ரங்கா திருமண மண்டபமாக மாறியிருந்தது. முத்து, ரங்கா திருமண மண்டபத்தின் மேலாளர் ஆனார். மற்ற பணியாளர்கள் மண்டபத்தின் இதர ஊழியர்கள் ஆனார்கள்.

ஓரு வருடம் கழித்து அந்த ஊருக்குப் புது இன்ஸ்பெக்டர் மாற்றலில் வந்தார். தன் மகளின் திருமணத்தை நடத்த கல்யாண மண்டபத்தைச் சகாய வாடகைக்கு தருமாறு ரங்கநாதனைக் கேட்டுக் கொண்டார். தனக்கு மூன்று பெண் பிள்ளைகள் என்றார். அவரைத் தன் வீட்டில் வரவேற்று உபசரித்த ரங்கநாதன் வாடகை எதுவும் இல்லாமல் இலவசமாக நடத்திக் கொள்ள அனுமதித்தார். இன்ஸ்பெக்டர் இரு கரம் கூப்பி நன்றி சொல்லி புறப்பட்டார்.

தவறான பாதையில் எவ்வளவுதூரம் பிரயாணித்தாலும் தவறில்லை. மீண்டும் திரும்பி வந்துவிட வேண்டும் என்று தீர்மானித்த பிறகு அதற்கான தைரியம்தான் முக்கியம்.

- காவ்யா புகழேந்தி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:37

பூத்தலும் உதிர்தலும்
-----------------------------
காலை வெயிலில் கண் கூசிற்று. இதுவரை எந்தச் சப்தமும் இல்லை. நேற்றைய இரவு ஏதும் வெடியும், புகையும், அவலமும், கூச்சலும் இன்றிக் கழிந்தது. இன்றைய பொழுது எப்படியிருக்குமோ தெரியவில்லை. பகலில் பெரும்பாலும் அதிகம் தொந்தரவில்லை. இரவுதான் எமகண்டமாய் கழிகிறது. ஈரக்குலையை கையில் பிடித்தபடி குழிக்குள் நடுங்கிக் கிடக்க வேண்டுமாய் இருக்கிறது.

புதிதாய் ஒரு வெடிக்கும் குண்டு கண்டுபிடித்ததாய் பேசிக் கொள்கிறார்கள். தரையைத் தொட்டதும் வெடிக்காது தரைக்குள் இரண்டடி புதைந்து பின்னர் வெடிக்கும் வகையினது அது.

அது வெடித்தால் குழியும் சேர்ந்து நொறுங்கிப் போகும்.

“”அப்பா…”

யோசித்தல் கலைந்து திரும்ப…. பாவாடை சட்டையிலேயே பார்த்துப் பழகிய மகள் சிற்றாடை கட்டி நின்றாள். தலையில் கை வைத்துக் கோதினேன்.

என் தோளுயரமிருந்தாள். இன்னும் ஒரு வருடத்தில் என்னையும் விஞ்சி வளர்ந்து நிற்பாள். காலையில் பூசிய மஞ்சளின் மினுமினுப்பு மென்மையாய் முகமெங்கும் ஆடியிருந்தது

“”என்னடா செல்லம்…”

“”இனி நான் உங்களன்ட மடியில் உட்காரக்கூடாதென்டு எல்லாரும் சொல்லறாங்கள்… அப்படியா அப்பா?”

“”அறிவிலிகள்… யார் அப்படியெல்லாஞ் சொன்னது… நீ எப்பவும் போல் எண்ட மடியில் உக்காந்து விளையாடலாம்…” இழுத்து மடியில் உட்கார்த்திக் கொண்டேன். பூப்பெய்தி இன்றோடு மூன்று நாட்கள் ஆகப் போகிறது. அதற்குள் என்னவெல்லாம் யோசிக்கிறது!

எனக்குள்ளும் என்னென்னவோ ஓடுகிறது. எவரிடத்திலும் பகிர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ மனதுக்குள் எழுகிறது.

இந்த வெடிகுண்டு சத்தமும், யுத்தமும் அவ்வப்போது பார்க்கும் ரத்தமும் பார்த்து பூத்துப் போய்க் கிடக்கிறது மனம். தினமெழுந்து காலை உணவுக்காய் கிழங்கும், பழமும், வெள்ளரிப் பிஞ்சுகளும், சமைத்தலுக்காய் சுள்ளிகளும் தேடி முடிக்கையில் இருள் கவிந்து விடுகிறது.

இருள்…இருள்… எத்தனை பயமாய் இருக்கிறது? இந்தப் பழைய கட்டடத்துக்குள் உடல் படுத்திருந்தாலும் மனம் உறங்கி எத்தனை நாளாகிறது.
இரவுகளில் தூரத்தில் வெளிச்சம் பார்த்தாலே மனம் துணுக்குற்று எழுந்து விடுகிறது. எது எப்போது நிகழும் என்று ஏதுவும் சொல்ல இயலாது. மரணம் எப்போதும் குழிக்கு மேலும் உள்ளுமாய் காவல் காத்துக் கொண்டிருக்கும் நிலையை எவரிடம் சொல்லிப் போவதென்று புரியவில்லை.

குண்டு வெடித்து, புகை பிடிக்க ஆரம்பித்தால், வானமெங்கும் கரியும், கருமையும், கரி வாசனையுமாய் நெஞ்சு எரிந்து போகிறது. ரெண்டு நாட்கள் முன்பு இதற்கு முந்தைய பள்ளிக் கட்டடத்தில் இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிருக்கும்… போடப்பட்ட ஏறிகுண்டின் சப்தமும், கரிமணமும் இன்னமும் வானத்தில் மிச்சமிருக்கிறது.
அதைவிட எறிகுண்டின் வெடிப்பில் பிய்ந்து பறந்து விழுந்த கை ஒன்றின் காட்சியில் இன்னும் மனம் அதிர்ந்து கொண்டிருக்கிறது.

அந்தக் கை ஒரு இளம் பெண்ணினுடையதாய் இருக்க வேண்டும். கண்ணாடி வளையல்கள் இன்னும் ஒன்றிரண்டு மிச்சமிருக்கிறது. அதில், வலது கையாகத்தான் இருக்க வேண்டும். அதன் மோதிர விரல் கை பிய்ந்து பறந்து கீழே விழுந்த பின்பும் லேசாய் துடித்துக் கொண்டு இருந்தது.

“”யப்பா” பையனின் அலறல் என்னைக் கலைத்து உலுக்கிற்று. எழுந்து விரைந்தேன். என்னோடு மகளும் ஓடி வந்தாள்.
“”என்ன… என்ன…”

பையனின் நெஞ்சு மூச்சுவிடும் வேகத்தில் ஏறி இறங்கிற்று. கண்ணில் தெரியும் பயம்…

“”ஒன்றும் ஆகல… என்ன ஆயிற்று…” என்றபடி கட்டித் தூக்கினேன்.

“”நான் பார்த்தேன் அப்பா… அது நம்ம குழிக்குள்ளதான் போயிற்று… பெருசாய்… நம்ம குழி வாசலில் கிடந்த செங்கல்லை சுற்றிக்கொண்டு கிடந்தது அப்பா… எவ்வளவு நீளம் தெரியுமா? அதைவிட அது நாக்கை நீட்டி…நீட்டி…” ஏதோ ஒரு பாம்பைப் பார்த்திருக்கிறான். பயத்தில் துவண்டு போயிருந்தான். மகளிடம் பையனைத் தூக்கிக் கொடுத்தேன். மணி ஆறேகால் ஆறரை இருக்கும். அந்தியில் சூரியன் விழுந்து கொண்டிருந்தான்.

எம்மைப் போலவே விலங்குகளும் இடம் தேடி அலைகின்றன. இரை தேடி அலைகின்றன. எமக்கும் அதற்கும் ஏதும் வித்தியாசம் இல்லை. அவை உயிரைத் தொங்கவிட்டபடி அலைவதைப் போலவே நாங்களும் அலைகிறோம்.

குழிக்குள் பாம்பைத் தேடுவது கடினம். பொந்துகள் நிறைய உள்ளன. நண்டுகளும் சிற்றெலிகளும், அணில்களும் வந்து போகும். அவற்றிற்காக  பாம்புகளும் எப்போதாவது குழிக்குள் வருவதுண்டு. மெல்லக் குழிக்குள் இறங்கினேன். எங்கிருந்தாவது அது எதிரில் வந்தால் திரும்பி ஏற வசதியாக நின்றபடி சுற்று முற்றும் தேடினேன்.

சற்றுமுன் அது கடந்து போன தடம் இருந்தது. தடம் பெரிதாய் இருந்தது. இந்த அளவு அகலமான தடம் எனில் அதுவும் பெரிதாய்தான் இருக்க வேண்டும். பிள்ளை பயந்து அலறியதில் வியப்பு ஏதும் இல்லை.
தடம் முடிந்த இடத்தில் சரியாய் ஒரு பொந்து இருந்தது. அதற்குள்தான் இருக்க வேண்டும். கையில் தயாராய் இருந்த குச்சியை இடுக்கிப்போல ஒடித்து உள்ளே நுழைக்க அது இறுதி வரை போயிற்றே தவிர ஏதுமில்லை.

நான் யோசித்து நின்ற சிறு இடைவெளியில் பக்கத்திலிருந்த வேறொரு பொந்திலிருந்து சீறிய படி வெளியே வந்து விழுந்த அதன் நீளம் நான்கரை அடி இருக்கும். குச்சியை வைத்து தலையை அழுத்திப் பிடிக்க துடித்து உடலைத் தூக்கிற்று. பிடி நழுவ தலை தூக்கி மீண்டும் கோபமாய் சீறிற்று. அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அதனைத் தூக்கி வெளியே எறிந்தேன்.

அக்கமும் பக்கமும் வேடிக்கை பார்த்தது…

“”யாரைத் தீண்டியிருந்தாலும்… மரணம் நிச்சயம்…” என்றனர்.

மரணம் ஏதாவது ஒரு வகையில் நிச்சயம்தான். எனினும், பாம்பும் தேளும் தீண்டியும், மலேரியாகவும், கழிச்சலும் வந்தும், வெடித்தாக்குதலில் கையும் காலும் இழந்தும்… இதற்கு ஏதும் உரிய மருந்தும் மருத்துவமும் இன்றி படும் அவலம் மரணத்தினும் கொடிது.

இருள் கொஞ்சமாய் மிச்சமிருந்த நிலையில் திருநுதற்செல்வி கிழங்குக் கொத்தும் பழக் கொத்தும் இரு கையில் ஏந்தி தலையில் சுள்ளிக் கட்டுடன் வந்து சேர்ந்தாள்.

“”என்ன ஒரு வெயில் பார்த்தீங்களா? பிள்ளைகள் ஏதாவது உண்டார்களா? நீங்கள் என்ன உண்டீர்கள்?”

“”செல்வி… கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்… பிறகு பேசலாம்…”
அவள் பள்ளிக் கட்டடத்தின் முன் பகுதியில் கால் நீட்டிப் படுக்க நான் மெல்ல கழுதை விரியன் பற்றிச் சொன்னேன்.
சட்டென்று எழுந்தவள்…

“”பிள்ளைகள் எங்கே…” என்று கேட்கையில் இருவரும் வந்து சேர… அவர்களைத் தன் மேல் கிடத்திக் கொண்டாள்.
செல்வியை நான் கைப்பிடித்து பதினேழு வருடமாயிற்று. முதல் எட்டு வருட வாழ்க்கையின் இனிமை அவ்வப்போது நெஞ்சுக்குள் குளிர்விக்கும்.

தூணின் மீது காய்ந்து படுத்திருந்த அவளின் மீது பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்தன. அன்றுதான் அவளைப் புதிதாய்ப் பார்ப்பது போலிருந்தது எனக்கு.

நெற்றி சிறியதாய் வளைந்து ஓவியத்தில் வரும் பெண்களுடையதை போலிருந்தது.

“”செல்வி… உனக்கு சரியாய்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். திருநுதற்செல்வியென்று…”

அவள் மெல்ல சிரித்தாள். அதே நேரம் சைக்கிளும் அதன் மணியின் சப்தமும் கேட்க எல்லோரும் அதனருகே விரைந்தனர்.

இந்த ஓசை கேட்டால் உணவுப் பண்டம் ஏதாவது வந்திருக்குமென்று அனைவருக்கும் தெரியும்.
வழக்கமாய் உணவு பெறும் இடத்தில் அடையாள அட்டை காட்ட நாலு பேருக்கான பொறையும், பாலும், ரொட்டியும், முட்டையும் தந்து அதிசமாய் உடன் அரிசியும் வெல்லமும் தந்தார்கள். மகிழ்வும் வியப்பும் கூடிற்று எனக்கு. தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும்.

உடன் பாலும் ரொட்டியும் தின்றுவிட்டு பொறையை காலை உணவுக்காய் வைத்தாள் செல்வி. அரிசியும் வெல்லமும் பார்த்து மலர்ந்த அவள், “”பிள்ளைகள் பூப்பெய்தினால் மூன்றாவது நாள் பிட்டு சுற்றிப் போடுவது நம்மளோட வழக்கம்…”

கொஞ்ச நேரம் ஏதும் பேசாது மெளனமானாள். அவள் பூப்பெய்தி சடங்கு செய்த நாட்கள் மனதில் ஓடியிருக்க வேண்டும்.
இரவு நேரத்தில் அதிகம் விறகு கொளுத்தினால் அது ஆபத்து என்பதால் மந்தமான சுள்ளி வெப்பத்தில் அரிசியும் வெல்லமும் கலந்து பிட்டு கொஞ்ச நேரத்தில் தயாராயிற்று.

பிள்ளை என் மடி மீது உட்கார செல்வி பிட்டு சுற்றினாள். வெகு ஞாபகமாய் அதை தூக்கி ஏறியாது, தூக்கி ஏறிவது போல் பாவனை காட்டிவிட்டு, நால்வரும் ஆளுக்குக் கொஞ்சமாய்த் தின்றோம்.

சுள்ளி வெளிச்சத்தில் செல்வியின் கண்ணிலோடிய கண்ணீர் மின்னிற்று.

“”பிட்டு சுற்றித் தூக்கி எறியக்கூட இயலாது… என்ன பிழைப்போ இது…”

இரவு அரற்றியபடி கிடந்தாள் செல்வி. எனக்குத் தூக்கம் முழுதாய் இல்லை.

பின்னிரவு பொழுதில் விமானங்களின் ஓசை உலுக்கி எழுப்பிற்று. குண்டு விழுமோ? ஈரக்குலை நடுங்கிற்று. செல்வியும் நானும் விழித்திருந்தோம். பிள்ளைகள் சப்தம் கேட்காது உறங்கிக் கொண்டிருந்தன.

எதுவோ விழும் ஓசை தொடர்ந்து கேட்டது. மெல்ல விமானங்களின் ஓசை மறைய, என்ன விழுந்தது என்று புரியவில்லை. புதுவகை குண்டோ? வீசி அரைமணி கழித்து வெடிக்குமோ?

குழிக்குள்ளும், மண்டபத் தூண்களின் பின்புறமும், புதர் மறைவிலும் இருந்தவர்கள் எல்லோரும் உற்றுப் பார்க்க பைகள் ஆங்காங்கே கிடந்தன.

யாரோ ஒருவன் நகர்ந்து சென்று எடுத்துப் பார்த்து…

“”எல்லோரும் வாருங்கள்… புதுத்துணிகளும்… அரிசியும் ரொட்டியும் பால் பவுடரும்…’
அதற்கு மேல் அவன் குரல் கேட்காத அளவுக்கு, எல்லோரும் ஆளுக்கு ஒரு பைகளைத் தேடி ஓட செல்வியும் எழுந்து ஓடினாள்.

நான் மண்டபத் தூண் மீது தளர்வாக சாய்ந்து கால் நீட்டிய நொடியில் “”சடசட”வென கிளம்பிற்று. துப்பாக்கி குண்டுகளின் அரவம். பிள்ளைகள் இரண்டும் என் கழுத்தில் தொங்க நான் ஓடி, விழுந்து, எழுந்து குழிக்குள் இறங்குகையில் இடறிற்று திருநுதற்செல்வியின் உடல். திருநுதலில் குருதி உறைந்திருந்தது.

-தினமணி கதிர்

ஆர்.கே. சண்முகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:38

கசப்பானதொரு உண்மை
--------------------------------------

கசப்பானதொரு உண்மைசிறுகதை

போட்ட பட்ஜெட்டுக்கு மேலேயே இழுத்துக் கொண்டு போய்விட்டிருந்தது எங்கள் மகளின் கலியாணம்.

வீட்டைக் கட்டிப்பார். கலியாணத்தைப் பண்ணிப்பார்னு சும்மாவா சொன்னாங்க” என்று என் நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள் எனக்கு.

“நான் அது பத்தியெல்லாம் கவலைப்படலை’ என்று எப்படி அவர்களிடம் சொல்வது…?

வாழ்க்கைப்பட்ட இடத்தில் பெண் வசதியாய், மனநிறைவாய் வாழ்ந்தால் அது போதும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் என் சம்பந்தி அருகில் வந்தார்.

“கலியாணத்தை எந்தக் குறையும் வைக்காம பண்ணிட்டீங்க” என்று புன்முறுவலுடன் சொன்னார்.

“அது என் கடமை.”

“ஆனாலும்…”

“என்ன சொல்லுங்க. இன்னும் ஏதாவது நாங்க செய்யணுமா?” என்று நான் கேட்க, “என்ன சம்பந்தி இப்படி கேட்டுட்டீங்க?” என்றார்.

“தவறாயிருந்தா என்னை மன்னிச்சிடுங்க” என்றேன்.

“எங்களை என்ன ஈவிரக்கம் இல்லாதவங்கனு நினைச்சிட்டீங்களா சம்பந்தி” என்றார் கண்ணீருடன்.

“ஐயோ.. நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாதுதான். தேவையில்லாமல் ஒருத்தர் மனசைப் புண்படுத்திட்டேன்.” என்றேன்.

“மறுபடி மறுபடி ஏன் பெரியபெரிய வார்த்தையெல்லாம். நாம் ஒண்ணுக்குள் ஒண்ணாயிட்டோம். இந்த சம்பிரதாய மன்னிப்பெல்லாம் நமக்குள்ள தேவையா?” என்றவரிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை எனக்கு.

பிறகு அவரே தொடர்ந்தார். “இதபாருங்க நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்கக்கூடாது நீங்க”

“நான் ஏன் உங்களைத் தப்பா நினைக்கிறேன்.”

“எங்க ஒரே மகனுக்கு கலியாணம் பண்ண பெண் பார்த்தப்ப உங்க பெண் ஜாதகம் கிடைச்சது.. பொருத்தம் அருமையாயிருந்தது. பையனுக்குப் பெண்ணையும்,பெண்ணுக்குப் பையனையும் பிடிச்சுது. நமக்குள்ளயும் ஒரு புரிதல் இருந்திச்சி. நாங்க எதையும் உங்க கிட்டயிருந்து எதிர்பார்க்கலைன்னு பல முறைகள் சொல்லிப் பார்த்தோம். ஆனா நீங்க கேட்கலை. எங்க பெண்ணுக்கு நாங்க என்ன செய்யணுமோ அதை செய்ய அனுமதிக்கணும். இல்லைனா எங்க மனசு புண்பட்டுப் போகும்னு நீங்க வற்புறுத்தி கேட்டதாலதான் உங்க விருப்படியே செய்யுங்கனு விட்டோம் மனசேயில்லாம. நீங்க செஞ்ச எந்த சீர்செனத்தி பத்தியும் குற்றம், குறை சொல்லலை. மனநிறைவாதான் ஏத்துகிட்டோம். மத்தவங்க மாதிரியில்லை நாங்க. இந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமமா நல்லா படிக்கிறாங்க. நல்ல வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்கிறாங்க. ஆட்டோகூட ஓட்டுறாங்க. அப்பப்பா… கிரேட். ஐயா நான் பெண்களை மதிக்கிறவன்” என்றவர் சற்று நிறுத்தி,ஆம் ஐ போரிங் யூ சம்பந்தி?” என்றார்.

“நாட் அட்டால். ஆனா இப்ப என்ன சொல்ல வர்ரீங்கனு என் சிற்றறிவுக்கு எட்டலை. நாங்க ஏதாவது தெரிஞ்சோ, தெரியாமலோ தவறு செஞ்சிருந்தா எங்களை மன்னிச்சிரணும். கலியாணத்தில் உங்களைச் சேர்ந்தவங்களை எங்க பக்கத்தில் யாராவது தரக்குறைவா நடத்திட்டாங்களா?”

” நோ.. நோ.. ஏன் இப்படியெல்லாம் எதை எதையோ எண்ணி மறுகறீங்க.”

“நாங்க எல்லாருமே பூரண திருப்தியோடதான் இருக்கோம். நான்.. நான்.. மனப்பூர்வமா ஒரு கேள்வியை உங்ககிட்ட கேட்கப்போறேன். கேள்வி தவறாயிருந்தா என்னை மன்னிச்சிரணும். ஆனா அக்கேள்வியின் உள்அர்த்தம் உங்களுக்கு ஒருநாள் புரியவரும்.. அதனால் தயவுபண்ணி நான் கேட்கப்போற கேள்வியைத் தப்பா எண்ணக்கூடாது.”

“பரவாயில்லை சொல்லுங்க. ஏன் இவ்வளவு பீடிகை? நீங்க கேட்க நினைச்ச கேள்வியை எங்கிட்ட தாராளமா கேட்கலாம்”

“குட். உங்களுக்கு உங்க ஆபிசில் ஓய்வூதியம் உண்டா?”

“கிடையாது”

“அப்ப ரிடையர்ட்மென்டுக்குப் பிறகு நீங்களும் சம்பந்தியம்மாவும் எப்படி காலத்தை ஓட்டப் போறீங்க?” அவர் இப்படியொரு கேள்வியைக் கேட்டதும் அப்படியே நிலைகுலைந்து போனேன்.

சே.. என்ன மனிதர் இவர். பிள்ளையைப் பெற்றவன். பிள்ளை கைநிறைய சம்பாதிக்கிறான். பார்த்துப் பார்த்து பிள்ளைக்கும் ஒரு கலியாணம் பண்ணியாயிற்று.

என் பெண்ணும் படித்து நல்லவேலையில் இருப்பது இவர்களுக்குப் பிளஸ் பாயிண்ட்தான்- இதனால் ஏற்பட்ட ஆணவமா?

மெதுவாய் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல இப்படியொரு கேள்வி என்னிடத்தில் அவசியமா?

எனக்கு ஓய்வூதியம் வராவிட்டால் என்ன? எனக்கு உதவி செய் என்று மகள் வீட்டிலா வந்து டேரா போடப்போகிறேன்.

நான் ஏதாவது ஏடாகூடமாய் கேட்க, அது நிச்சயம் என் பெண் வாழ்க்கையைப் பாதித்துவிடக்கூடாது.

கடவுளே இவர்களை மன்னியுங்கள் அதாவது இவர்கள் அறியாமல் செய்த பிழைகளை மன்னித்தருள்க.. அதனால் மெளனம் காத்தேன்… வேறு என்ன செய்வது?

அவர்களை அக்கு வேறு,ஆணிவேறாக பிய்த்திருப்பேன்.

எங்களால் முடியாத அளவுக்குப் போகும் காலகட்டத்தில் ஏதாவதொரு முதியோர் காப்பகமா கிடைக்காமல் போய்விடும்.

அப்போதும் நிச்சயமா பெண்ணைக் கொடுத்தவன் வீட்டில் வந்து ஒண்டிக்கொள்ள மாட்டோம்.. மனம் இடங்கொடுக்காது.

இருந்தாலும் மனம் அமைதியின்றி தவித்தது.

ஆனால் காலம் போகும்.. வார்த்தைகள் நிற்கும் என்பது முதுமொழி.. அது மட்டுமா? பேசாத வார்த்தைக்கு நீ எசமான் என்றொரு கருத்தும் உண்டு..

கடவுளே எங்களை இப்படி நிர்கதியாய் படைத்தாய்?

படைத்தது உன்குற்றமல்லதான்…

நாங்கள் எங்கள் ஏழ்மையை வெளிச்சம்போட்டு காட்ட விரும்பவில்லை…

நாட்டில் எங்களைப்போன்றவர்கள் ஏராளம்…ஏராளம்…

ஒரு பெண்ணைக் கரையேற்றிடவே அரும்பாடுபட்டேனே,அதுவே 50/60களில் எப்படியெல்லாம் முன்னோர் அல்லல்பட்டிருப்பார்கள் என்ற எண்ண ஓட்டம் என் மனதில் வந்து போயிற்று.

“என்ன சம்மந்தி…யுஸீம்டு பி பெர்டர்ப்ட்” என்றார். அவர் கேள்வியின் தாக்கம் புரியாமல்…

நான் அப்போதும் பதில் சொல்லாமல் மழுப்பினேன்.

“விடுங்க..விடுங்க சம்பந்தி.. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணைம்பாங்க” என்று மேலும் சொல்லி மறுபடியும் என் மனப்புண்ணைக் கிளறிவிட்டார்.

கல்லினுள் தேரைக்கும்,கருப்பை அண்டத்துயிர்க்கும் படியளக்கிறவன் அந்தப் பரம்பொருள் இல்லையா” என்றேன் என் மன வருத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல்.

“ஆமாமாம்.. சரியாச்சொன்னீங்க. விடுங்க. பெத்த பசங்க முதுமை காலத்தில் பெற்றவர்களைக் கவனிக்காட்டி என்ன.. எத்தனை,எத்தனை முதியோர் இல்லங்கள் பல்கிப்பெருகிக்கிடக்குது இன்னைக்கு. இது ஏதாவதொன்றில் அடைக்கலம் கிடைக்காமலா போயிடும் நம்மைப்போல் உள்ளவங்களுக்கு” என்றார்.

மிக மிக சிரமப்பட்டு பதிலே பேசாமல் அமர்ந்தேன் அங்கு.

பிறகும் தவிர்க்க இயலாத சந்தர்ப்பங்களில் மட்டுமே சம்மந்தி வீட்டுக்குச் சென்று பெண்,மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டு ஒரு சில நொடிகளில் திரும்பிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். காலப்போக்கில் ஒரு நாள் திடீர் என்று உடல் நிலை சரியில்லாமல் போயிற்று எனக்கும் என் மனைவிக்கும். உதவிக்கும் ஆள் இல்லை.

பக்கத்து வீட்டு மனிதர்கள் உதவியுடன் ஒரு முதியோர் இல்லத்தில் இடம் கிடைத்தது.

காலத்தை அங்கேயே கழித்துவிடுவதான் சாலச்சிறந்தது என்று தோன்றவே, அந்த முதியோர் இல்லம் செல்லத் தயாரானோம். எங்களது சொற்ப சாமான் செட்டுகள் எல்லாம் எடுத்துக் கொண்டு, போனிலேயே மகள், மருமகனுக்கு விபரம் சொன்னேன். அவர்களும் ஏன் இப்படியொரு முடிவு என்று எங்களைக் கேட்கவில்லை. ஊரிலும் கேட்கவேயில்லை.

ஒரு சுபயோக, சுபதினத்தில் முதியோர் இல்லத்து வாயிற் கதவைத் திறந்துகொண்டு எங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்துக்குப்போனால் அங்கு “வெல்கம் சம்பந்தி என்னைக்காவது ஒருநாள் இதுபோல இடத்துக்கு வருவீங்கனு நினைச்சேன். ஆனா இதே இல்லத்துக்கு நீங்களும் வருவீங்கனு நினைக்கல” என்றவர் குலுங்கி, குலுங்கி அழத் தொடங்கினார்.

பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டு சொன்னார்… “நாம் பெற்ற பிள்ளையோ, பெண்ணையோ குற்றம் குறை சொல்ல முடியாது. அவசரமான உலகம்.. இதில் வயசானவங்களை வீட்டில் வச்சு பராமரிக்கணும்னு நாம் நினைக்கக்கூடாது.

யதார்த்தம் புரிஞ்சு, சின்னஞ் சிறிசுகளுக்கு இடம் கொடுத்துட்டு நாம் விலகிடணும்.. அவங்க நல்லாயிருக்கணும்னு மட்டும் பிராத்தனை பண்ணுவோம் என்ன” என்றார் உலகம் போகும் போக்கைப் புரிந்து கொண்டவர் போல.

- கெளசல்யா ரங்கநாதன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:40

மீண்டும் துளிர்த்தது!
-------------------------------

கதைசிறுகதை

ஜோஸ்யக் கிளியின் முன்னால் பரப்பப்பட்டிருக்கும் ராசிக் குறிப்புகள் போல, தனசேகருக்கு முன்னால் முப்பத்திரண்டு கடிதங்கள் சிதறிக் கிடந்தன. அவனுடைய நண்பர்கள் அவனுக்காகக் கொடுத்திருந்த நான்கு வரித் திருமண விளம்பரத்திற்கு வந்திருந்த கடிதங்கள் அவை. கிளி, ஜோஸ்யக்காரன் விரல்களுக்குள் ஒளித்துக்காட்டும் நெல்மணியைக் கண்டதும் மிக எளிதாக ராசிக் குறிப்பைத் தேர்ந்தெடுத்து விடுகிறது. இவனுக்குத்தான் எப்படி இந்தக் குவியலிலிருந்து தன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதென்ற சூட்சுமம் புரியவில்லை.

நாற்பது வயதைக் கடந்துவிட்ட மனைவியை இழந்த ஒரு விடோயரை மணந்து கொள்ளத்தான் எவ்வளவு பேர் – இளம் பெண்கள், முதிர்கன்னிகள், விதவைகள், விவாகரத்தானவர்கள் என்று -     ஆர்வம் காட்டி விண்ணப்பம் அனுப்பி இருக்கிறார்கள். தனசேகருக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், இவர்களிலிருந்து ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஒரு முறை கல்யாணம் பண்ணி… ஆயாசமாகவும் இருந்தது.

சுமித்ராவின் மீது கோபம் கிளர்ந்தது அவனுக்குள். ஏன் இப்படிப் பண்ணினாள்? அவனுடன் ஐந்து வருடங்கள் கூட முழுதாய் வாழ்ந்து முடிக்காமல் அல்ப ஆயுஸில் விருட்டென்று விடைபெற்றுக் கொண்டு போய்விட்டாளே! ஆனால் அவளை மரணத்தை நோக்கித் தள்ளியதில் அவனுக்கும் தானே பங்கிருக்கிறது என்ற குற்ற உணர்ச்சியும் பொங்கியது. அவன் மட்டுமா? முதல் காரணம் அவனுடைய அம்மா.

அவள்தான் சுமித்ராவைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து அவனுக்கு மணமுடித்து வைத்தாள். ஆனால் கல்யாணமான ஆறாவது மாதத்திலிருந்தே அவளைக் கரித்துக் கொட்டத் தொடங்கிவிட்டாள். சீக்கிரம் பேரனோ, பேத்தியோ பெற்றுக் கொடுக்கச் சொல்லி. நாளுக்குநாள் அவளின் நச்சரிப்பும், வார்த்தைகளால் வதைப்பதும் அதிகமானது. அவ்வப்போது தன்னுடைய மகனுக்கு வேறொரு கல்யாணம் செய்து வைத்துவிடுவதாய் பயமுறுத்த வேறு செய்தாள். தனசேகர் அம்மாவிடம் இதற்காகச் சண்டை போட்டிருக்கிறான்.

எங்கு போனாலும் குழந்தை இல்லையா என்கிற கேள்வி சுமித்ராவை சித்ரவதை செய்தது. ஆளாளுக்கு அறிவுரைகளை வேறு தாராளமாய் அள்ளி வழங்கியபடி கடந்து போனார்கள். அப்புறம் தொலைக்காட்சி, சினிமா என்று எல்லாவற்றிலும் பெண் என்றால் பிள்ளை பெற்றுத் தர வேண்டும். குடும்பத்தின் சந்ததி தழைக்க எப்பாடுபட்டாவது அவள் உதவ வேண்டும் என்கிற சித்திரத்தையே முன் வைத்து அப்படி முடியாத பெண்களைக் குற்ற உணர்ச்சி கொள்ள வைத்தன.

ஒருநாள் இந்த மன அழுத்தத்திலேயே திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் சுமித்ராவின் உயிர் பிரிந்தது.

சுமித்ரா இறந்த சில மாதங்களிலேயே அம்மாவும் இறந்து போனது, மனித மனங்களின் ஆழங்காண முடியாத மர்ம முடிச்சாகவே இருந்தது. இருவரையும் இழந்த பின்பு தனிமை தனசேகரைத் தின்று கொண்டிருந்தது.

வந்திருந்த கடிதங்களை மேலோட்டமாகப் புரட்டிக் கொண்டு இருந்தபோது ஒரு கடிதத்துடன் ஒட்டப்பட்டிருந்த பாஸ்போர்ட் அளவிலான போட்டோவிலிருந்த முகம் கொஞ்சம் பரிச்சயமானதாயிருக்கவே உற்றுப் பார்த்தான். காலம் தன் ரேகைகளை அழுத்தமாகப் பதித்து அந்த முகத்தில் நிறைய மாற்றங்களை நிகழ்த்தியிருந்த போதிலும் அவனுக்கு அந்த முகத்தை அடையாளம் தெரியவே செய்தது. பெயரைப் படித்தவனுக்கு நரம்புகளில் எல்லாம் ஒரு சிலிர்ப்பு ஓடியது. மறக்க முடியுமா அன்னபூரணியை? அவள் எப்படி இந்தக் கடிதக் குவியலுக்குள்?

தனசேகர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் பேச்சுப் போட்டிகளிலும் கவியரங்கங்களிலும் கலக்கிக் கொண்டிருந்தான். ஒருமுறை கோவையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையிலான கவிதைப் போட்டியில்தான் அன்னபூரணியைச் சந்தித்தான். அவளும் கவிதைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து வந்திருந்தாள். அவள் வாசித்த கவிதை அவளைப் போலவே எளிமையான அழகுகளுடன் கவித்துவம் பொங்க அற்புதமாக இருந்தது.

ஆனால் அது கவியரங்குகளில் வாசிக்கப்படக்கூடிய கவிதை அல்ல. எழுதப்பட்டு தனியாய் வாசித்தால் இலக்கிய அனுபவம் தரக்கூடிய கவிதை. மாணவர்களுக்குப் புரியாததால் அவளைக் கவிதையே வாசிக்கவிடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். தனசேகர் வாசித்த கவிதைக்கே பரிசு கிடைத்தது.

போட்டி முடிந்ததும் இவன் வலியப் போய் அன்னபூரணியிடம் அவளுடைய கவிதையைச் சிலாகித்துப் பேசினான். அவளுக்கோ முகத்தில் கோபம் கொப்பளித்தது. “”உங்க கவிதைக்குத்தான் முதல் பரிசு அறிவிச்சிருக்காங்க. நீங்க என் கவிதையைப் பாராட்டிப் பேசுறீங்க. என்ன நக்கல் பண்றீங்களா?” என்றாள் படபடவென்று.

அரங்கத்தில் அவளுடைய கவிதைக்கு ஏற்பட்டுவிட்ட அவமானத்தைத் துடைக்க வேண்டுமென்று துடித்தான். தமிழ்மன்றத்தினரிடமிருந்து அவளுடைய கவிதையின் கையெழுத்துப் பிரதியை வாங்கி அதை அப்படியே ஒரு சிறுபத்திரிகைக்கு அனுப்பி வைத்தான்.

அடுத்த மாதமே அந்தக் கவிதை பிரசுரமானது. ஒரு சிறு கடிதம் எழுதி பிரசுரமான இதழை அவளுடைய முகவரிக்கு அனுப்பி வைத்தான்.

தன்னுடைய கவிதையை அச்சில் பார்த்த சந்தோஷமும், மகிழ்ச்சியும் அப்பட்டமாய் முகத்தில் தெரிய அவளே அவனை வந்து பார்த்துப் பேசினாள். அன்றிலிருந்து இருவருக்குமான நட்பு துளிர்விட்டு புதுப் புதுக் கிளைகளுடன் விரியத் தொடங்கியது. இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே பல பட்டிமன்றங்களிலும், கவியரங்கங்களிலும் கலந்து கொண்டனர்.

கல்லூரிக் காலம் முடிந்த பின்பும், வேலைக்காக அல்லாடிய காலத்திலும் இருவருக்குமான நட்பும் நேசமும் உயிர்ப்புடன் இருந்தது. தனசேகருக்குச் சென்னையில் வேலை கிடைத்தது. தாராளமாய்ச் சம்பளம் வரத் தொடங்கியது. கல்யாணம் பண்ணிக் கொள்ளத் தைரியம் வந்தவுடன் அவன் மனதிற்குள் மனைவியாய் நிழலாடியவள் அன்னபூரணிதான். தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்ற தயக்கத்தையும் மீறி தன் விருப்பத்தைச் சொன்னான்.

அவள் ரொம்ப நேரத்திற்கு எதுவுமே பேசவில்லை. அப்புறம் சிரித்துக் கொண்டே சொன்னாள். “”உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கூட வந்துட்டா, அப்புறம் எங்க மாமாவை யாரு கட்டிப்பா?”

அவள் சீரியஸôகச் சொல்கிறாளா? இல்லை விளையாட்டுக்குச் சொல்கிறாளா? என்று குழப்பமாக இருந்தது. அவளுக்கு ஒரு தாய்மாமா இருக்கிற விஷயத்தை இதுவரை அவனிடம் அவள் சொல்லியதில்லை.

அதுதான் அவர்களின் கடைசிச் சந்திப்பாய் இருந்தது. அதற்குப் பின்பு அவளைப் பார்க்கவேயில்லை.

அன்னபூரணியிடம் இருந்து வந்திருந்த கடிதம் வித்தியாசமாக இருந்தது. அது திருமணம் விளம்பரம் பார்த்து அனுப்பப்பட்டது இல்லை. முகவரி மாறி வந்திருந்தது.

தற்செயலாக இருந்தாலும் அன்னபூரணியின் கடிதம் தனக்குத் தவறுதலாக வந்ததில் ஏதோ சூட்சுமம் ஒளிந்திருப்பதாக அவனுக்குப் பட்டது. அன்னபூரணியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தால் என்ன? என்கிற எண்ணம் மெல்ல எட்டிப் பார்த்தது. திடீரென்று போய் நின்றால் அவள் தன்னை எப்படி எதிர்கொள்வாளோ? தன்னுடைய வருகை அவளுடைய குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுமோ? என்ன ஆனாலும் பரவாயில்லை. அவளைப் போய் பார்த்துவிட்டு வருவது என்று தீர்மானித்தான்.

திருநெல்வேலி டவுனின் முக்கிய வீதியிலிருந்த அன்னபூரணியின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் அவனுக்குச் சிரமமேதும் இருக்கவில்லை. வீட்டின் மையத்தில் மூன்று படிக்கட்டுகளும் அதன் இருபுறமும் சிமெண்ட் திண்ணைகளும், நிறைந்த பூ வேலைப்பாடுகளுடன் ஓங்குதாங்காய் நின்ற தேக்கு மரக் கதவுகளும் பழம் பெருமை பேசி அவனை வரவேற்றன. திண்ணையில் வயதான ஒரு பெண் படுத்திருந்தாள். அவனைப் பார்த்ததும் அவசரமாய் எழுந்து, “”நீ யாருப்பா? உனக்கு என்ன வேணும்?” என்றாள்.

“”நான் சென்னையிலிருந்து வாரேன். இங்க அன்னபூரணிங்கறது?….”

“”என் பொண்ணுதான். கொஞ்சம் இருப்பா. கூப்புடுறேன்” என்றபடி வீட்டுக்குள் பார்த்துச் சத்தங் கொடுத்தாள். அவசர அவசரமாய் வெளியே வந்த அன்னபூரணி இவனைக் கொஞ்ச நேரம் யாரோ போல் புரியாமல் ஏற இறங்கப் பார்த்துவிட்டு சட்டென்று ஞாபகம் வந்தவளாய், “”ஏய் தனா, நீ எங்க இந்தப் பக்கம்?” என்றபடி மலர்ந்தாள்.

“”அம்மா இவர் தனசேகர். கவிதையெல்லாம் எழுதறவர். ஏற்கனவே இவரப் பத்தி உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல” என்று அறிமுகப்படுத்தினாள்.

“”அம்மாட்ட பேசிட்டுரு ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்” என்றபடி அவசரமாய் வீட்டுக்குள் போனாள். சிறிது நேரத்தில் ஒரு டம்ளர் மோருடன் வந்தாள்.

“”இவ்வளவு வருஷங்களுக்கப்புறம் மறுபடியும் உன்னைப் பார்த்தது மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு தனா! ஆமா, இந்த வீட்டு முகவரி உனக்கெப்படிக் கிடைச்சது? நாங்களே இங்க குடிவந்து ரெண்டு மாசந்தானே ஆகுது?” என்றாள்.

தனசேகர் எல்லா விபரங்களும் சொல்லி அவளின் கடிதத்தை எடுத்துக் காண்பித்தாள். கொஞ்ச நேரம் பலதையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “”இரு உனக்கு காபி கலந்து எடுத்துட்டு வர்றேன். நீ தான் காபின்னா பெண்டாட்டியையே விக்கிற ஆளாச்சே” என்று எழுந்தபடி சமையலறைக்குள் போனாள் அன்னபூரணி.

“”பூரணிக்கு எத்தனை குழந்தைங்கம்மா? ஒண்ணையும் கண்ணுல காங்கல” என்று அன்னபூரணியின் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான் தனசேகர்.

கொஞ்சநேரம் எதுவும் பேசாமல் அவனையே குறுகுறுவென்று பார்த்திருந்துவிட்டு “”கொழந்தையா? அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலையேப்பா” என்றாள்.

இவனுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

“”பூரணி சொன்னாங்களே அவுங்களைக் கல்யாணம் பண்றதுக்காக தாய்மாமன் காத்திருந்த கதையெல்லாம்.”

பூரணியின் அம்மா சிரித்தாள். “”அவளுக்குத் தாய்மாமன்னு யாருமில்லப்பா” என்றாள் மெதுவான குரலில்.

“”நீ அன்னத்தக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டியாமே. அன்னைக்கு முழுவதும் அழுதுக்கிட்டே இருந்தாள். உன் மேல் அவளுக்கு ரொம்ப இஷ்டம் தெரியுமா?”

“”பூரணிக்கு என் மேலே ரொம்ப இஷ்டம்ங்குறீங்க. அப்புறம் ஏன் புதுசா ஒரு தாய் மாமாவை உருவாக்கி என்னைத் தட்டிக் கழிக்கணும்? எனக்குப் புரியலேம்மா” தனசேகர் கேட்கவும் அவள் பொட்டென்று அழத் தொடங்கிவிட்டாள். அன்னபூரணி காபியுடன் வந்ததும் கண்களைத் துடைத்தபடி, “”நீ காபி குடிப்பா?” என்றாள்.

அன்னபூரணி அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்தாள்.

இவன் காபியைக் குடித்ததும் காலி கோப்பைகளுடன் உள்ளே போனதும், அம்மா சொன்னாள்:

“”உன்னப் பார்த்தா, ரொம்ப நல்ல மாதிரியாத் தெரியுது. கண்டிப்பா புரிஞ்சுக்குவங்குற நம்பிக்கையில அவ கல்யாணம் பண்ணிக்க மறுத்த காரணத்தை நான் சொல்றேன். அது இயற்கை அவளுக்குப் பண்ணுன சதி…வேறென்ன?” அன்னபூரணியின் அம்மா சற்று நிறுத்தினாள். பின்பு தொடர்ந்தாள்.

“”அன்னம் இன்னும் பெரிய மனுஷியாவே ஆகல தம்பி. நாங்க பாக்காத வைத்தியமில்ல. ஒண்ணும் பிரயோசனமில்ல தம்பி. சரி, அவளுக்கு விதிச்சது அவ்வளவுதான்னு விட்டுட்டோம். வேறென்ன செய்றது?”

அவன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றான். அன்னபூரணிக்கு எவ்வளவு நல்ல மனது?

வீட்டினுள் இருந்து அன்னபூரணி வந்து நின்றாள். அவளைப் பார்த்துக் கொண்டே அவன் சொன்னான்.

“”தாம்பத்ய சுகமும், வம்ச விருத்தியுமே வாழ்க்கை இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டவன்மா நான். பூரணி சம்மதிச்சா நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்மா. அவ எனக்கு ஒரு தோழியா இருந்தாப் போதும். அன்னபூரணியாலே அது நிச்சயமா முடியும்.”

“”அப்படின்னா தாராளமா கூட்டிட்டுப் போங்க தம்பி. உங்கள மாதிரி மனுஷனுக்காகத்தான் அவ இவ்வளவு நாளாக் காத்திருந்தாலோ என்னமோ?”

“”பூரணி மட்டுமில்லம்மா. நீங்களும் வாங்க” என்றான் தனசேகர்.

அன்னபூரணியின் முகத்தில் சந்தோஷம். விழிகளில் வழிந்த சிரிப்பு. விடிவே இல்லை என்று இருட்டில் கிடந்தவள் திடீரென்று கண்ணைத் திறந்து பார்த்தபோது விடிந்து வெகுநேரம் ஆகி கண்ணைக் கூசும் வெளிச்சம் பளீச் என்று தெரியும்போது ஏற்படும் திகைப்பு. என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்று தெரியாத பிரமிப்பு.

அம்மா இருக்கிறாளே என்ற உணர்வின்றி அன்னபூரணி சட்டென்று அவனை நெருங்கி நின்று அவனுடைய கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு நின்றாள்.

- சோ.சுப்புராஜ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:44

சிறுகதை – தன்மானம்
--------------------
தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை

கடைவீதி பரபரப்பாக இருந்தது. எங்கிருந்து ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தில் தடுமாறிப் போய் நின்றிருந்தார் பெருமாள்சாமி. முகூர்த்தநாள் வேறு. சுப்பிரமணியசுவாமி கோயிலில் நல்ல கூட்டம். கோயிலுக்கு வெளியே வேப்பமரத்தடியில் நின்றுகொண்டு யாரிடம் கேட்பது, எப்படி கேட்பது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

பெருமாள்சாமி பிச்சை எடுத்துப் பிழைப்பது என்று முடிவு செய்துவிட்டார்.

பிச்சை எடுப்பது ரொம்ப கஷ்டமான வேலை போல தோன்றியது. முதன்முதலாக பிச்சை எடுக்கும் ஒரு மனிதனின் நிலைமை எப்படியிருக்கும்? யாரிடம் முதலில் பிச்சை கேட்பது என்று யோசித்திருப்பானோ? இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகிவிட்டோமே என்று நினைத்திருப்பானோ? அப்படியெல்லாம் தோன்றாமல் கூட போயிருக்கலாம். பசி வேறு எதையும் நினைக்கவிடாது.

உண்மையிலேயே இன்றைக்கு பசியின் கொடுமையை நன்றாகவே உணர்ந்துவிட்டார். இதற்குமேல் தாங்க முடியாது. கையில் இருந்த காசெல்லாம் சுத்தமாகக் கரைந்துவிட்டது. நான்கு நாட்கள் எப்படியோ ஓடிவிட்டன.

எண்பது வயதில் இப்படி ஒரு சூழ்நிலை தனக்கு வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. லட்சுமிக்கு முன்னால் இவர் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் லட்சுமி முந்திக் கொண்டுவிட்டாள். இரண்டு வருடங்களுக்குள் என்னவெல்லாமோ நடந்துவிட்டது.

லட்சுமிக்கு தன்னுடைய கடைசிக் காலம் தெரிந்துவிட்டிருந்தது.

“”நான் போயிட்டா… உங்களை யாரு பார்த்துக்குவா… காட்டையும் தோப்பையும் என்னைக்கும் வித்துப் போடாதீங்க… அது இருக்கறவரைக்கும்தான் மதிப்பு…”

போச்சு லட்சுமி… போச்சு… எல்லாமே போச்சு…

பெருமாள்சாமி வயிற்றைப் பிடித்துக் கொண்டார். பசி தாங்க முடியவில்லை.

“பிச்சை எடுத்துப் பொழைக்கிற நெலமைக்கு வந்துட்டேன்… என் நெலமையைப் பார்த்தியா லட்சுமி… நீ இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு நெலமை வந்திருக்குமா?’

பசி… பசி… பசி… பசி…  வயிற்றைச் சுண்டிவிட்ட மாதிரி இருந்தது. கண்கள் கலங்கிப் போய்விட்டன.

“”அய்யா… எனக்கு ஏதாச்சும் வேலை இருந்தா  கொடுங்க…”

“”இங்க வேலை இல்லீங்க பெரியவரே…”

“”ரொம்ப வயசனாவரா இருக்கறீங்க… என்ன வேலை கொடுக்கறது?”

“”ஆளைப் பார்த்தா சீக்கு வந்த ஆளு மாதிரி இருக்குது… போங்க… வியாபாரத்தைக் கெடுக்காதீங்க..”

“”போ பெரிசு… நாங்களே வேலையில்லாம கெடக்கறோம்.. உனக்கு எங்க போய் வேலை கொடுக்கறது? தடத்து மேலே நிக்காதே…”

மளிகைக் கடை, டீக்கடை, ஹோட்டல், அரிசிக்கடை, துணிக்கடை… எத்தனை கடைகள் இந்த இரண்டு  நாட்களில்… பொள்ளாச்சியை நிறைய தடவை சுற்றிவிட்டார். அவர் வயதையும் உடல் நிலையையும் பார்த்து யாரும் வேலை கொடுக்கத் தயாராக இல்லை.

பெருமாள்சாமிக்கு பாளையம்தான் சொந்த ஊர். ஐந்து ஏக்கர் காட்டுக்கு சொந்தக்காரராக இருந்தார். இரண்டு மகன்கள்.

பெருமாள்சாமி நல்ல உழைப்பாளி. கூலி வேலையில் வாழ்க்கையைத் துவக்கியவர். குத்தகைக்கு காடு பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஐந்து ஏக்கர் காட்டை வாங்கினார். மூன்று ஏக்கரை தென்னந்தோப்பாக வளர்த்தார். லட்சுமியும் சும்மா இருக்கவில்லை. மாடுகளும் ஆடுகளும் வாங்கி மேய்த்தாள். பால், தயிர் என விற்று கொஞ்சம் காசு சேர்த்து வந்தாள்.

பெருமாள்சாமி ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து காட்டுக்கு போய்விடுவார். ஏதாவது வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இரண்டு ஏக்கர் வயலில் நெல், கடலை, சோளம், கம்பு என்று பயிர்கள் வளர்த்தார்.

மகன்களை நல்ல முறையில் படிக்க வைத்தார். இரண்டு மகன்களுக்குமே விவசாயத்தில் ஈடுபாடு இல்லை. பெரியவனுக்கு சொந்தமாக லேத் ஒர்க் ஷாப் வைத்துக் கொடுத்தார். சின்னவனுக்கு சொந்தமாக எலட்ரிக்கல் கடை வைத்துக் கொடுத்தார். வசதியான இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார்.

பெருமாள்சாமியின் தோப்பு மெயின் ரோட்டு ஓரத்தில் இருந்தது. ரியல் எஸ்டேட்காரர்கள் கண்களை உறுத்தியது. மெயின் ரோட்டில் இருப்பதால் நல்ல விலைக்கு போகும் என்று பெருமாள்சாமிக்கு ஆசை காட்டினர்.

“”என் உசுருள்ள வரைக்கும் அந்தக் காட்டை விக்க மாட்டேன். அது எம் புள்ள மாதிரி…”

விலைபேச வந்தவர்களிடம் ஒரே பேச்சாக சொல்லி அனுப்பிவிட்டார்.

“”காடு இருக்கறவரைக்கும்தான் மதிப்பு… அந்தக் காடு போச்சுன்னா… மானம், மரியாதை எல்லாம் போயிடும்… அவசரப்பட்டு காட்டை வித்துப் போடாதீங்க…” லட்சுமி சாவதற்கு ஒருநாள் முன்பு இதைச் சொன்னாள். அடுத்த நாள் நெஞ்சுவலி என்று படுத்தவள்தான். போய்விட்டாள்.

அவள் இறந்த பின் பெருமாள்சாமி இரண்டு கைகள் இல்லாத மாதிரி உணர்ந்தார். அவர் காட்டோடுதான் பேசி வந்தார்.

“இது லட்சுமி வச்ச மாமரம்… இந்தக் கொய்யா மரம் மேட்டுப்பாளையத்து அத்தை நட்டு வச்சது. இந்த வேப்பமரம் நம்ம சின்னான் வளர்த்தது…’

காடும் அவரோடு பேசியது. மரங்கள், செடிகள் எல்லாமே அவரோடு பேசின. சருகுகள்கூட சலசலத்தபடி அவரோடு பேசின. காட்டையும் அவரையும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் பிணைத்திருந்தது..

 

பெரிய மகன் சந்திரனுக்கு கார், பங்களா என்று வாழ வேண்டும் என்று ஆசை. சந்திரனின் மகன் பிளஸ் – டூ முடித்திருந்தான். அவனை எஞ்சினியரிங் காலேஜ் சேர்க்க சந்திரன் முடிவு செய்திருந்தான். அதற்குப் பணம் வேண்டும். மெயின் ரோட்டில் காடு இருப்பதால் கோடிக் கணக்கான ரூபாய்க்கு ரியல் எஸ்டேட்காரர்கள் விலை பேசினார்கள்.

இரண்டாவது மகன் காட்டை விற்றால் கிடைக்கும் பங்குத் தொகையில் என்னென்ன வாங்கலாம் என்று பட்டியல் போட்டு வைத்திருந்தான்.

“”அப்பா… இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி காடு தோப்புன்னு கஷ்டப்பட்டுட்டு இருக்கப்போறீங்க… நல்ல வெலைக்கு வருது. வித்துப்போடலாம்…”

பெருமாள்சாமி துடித்துப் போனார்.

“”அய்யோ… காட்டை நான் விக்கமாட்டேன்… அது என்னோட உசுரு…”

இரண்டு மகன்களும் போராடிப் பார்த்தார்கள்.

அவர் காட்டை விற்பதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருந்தார். ஆனால் மகன்கள் கோடிகளைப் பார்க்கும் ஆசையில் இருந்தார்கள்.

பெருமாள்சாமி வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்து எல்லாவற்றையுமே தலைகீழாக மாற்றிவிட்டது. அவர் மட்டும் குளியலறையில் வழுக்கி விழாமல் இருந்திருந்தால்…

நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார். மருத்துவமனையில் மட்டும் ஒரு மாதம் தங்க வேண்டி இருந்தது. இடுப்பில் நல்ல அடி. ஆபரேசன் செய்தார்கள். அவர் எழுந்து நன்றாக நடக்கவே நான்குமாதங்கள் ஆகிவிட்டன.

நான்கு மாதங்களுக்குப் பின்னால் காட்டைப் பார்க்கச் சென்றவர் அதிர்ந்து போனார். காட்டைக் காணவில்லை. தென்னை மரங்கள் எல்லாம் பிடுங்கி எறியப்பட்டிருந்தன. வெறும் நிலமாக இருந்தது. தென்றல் நகர் என்று பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

பெருமாள்சாமியின் உயிரை யாரோ பிடுங்கிக் கொண்டு ஓடுகிற மாதிரி இருந்தது.

“”அய்யோ… என்னோட உசுரைப் பறிச்சுட்டாங்களே… லட்சுமி… லட்சுமி… உன் புள்ளக பண்ணியிருக்கற காரியத்தைப் பார்த்தியா அய்யோ… அய்யோ…”

அலறிக் கொண்டு மகன்களைத் தேடி ஓடினார்.

“”டேய்… பாவிகளா என் காட்டை என்னடா பண்ணினீங்க கொன்னுட்டீங்களேடா… என் உசுரை எடுத்திட்டீங்களேடா…”

“”அப்பா…பொறுமையா இருங்க… எங்களுக்கு வேற வழி தெரியலே… உங்களுக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் வேணும். எங்களுக்கு தொழில்ல நஷ்டம். அதுதான் காட்டை வித்துட்டோம்..” என்றான் பெரிய மகன்.

“”பொய் சொல்லாதீங்கடா…  நீங்க சதி பண்ணிட்டீங்க… என்னை ஏமாத்திட்டீங்க…”

“”இப்ப என்னப்பா நடந்து போச்சு… இடம் நல்ல வெலைக்குப் போயிருக்கு. கோடிக் கணக்கில பணம் கிடைச்சிருக்கு. நீங்க ராஜா மாதிரி உட்கார்ந்துட்டு சாப்பிடலாம்” என்றான் சின்ன மகன்.

“”நான் உட்கார்ந்துட்டு சாப்பிடறதா? என்னோட உழைப்பை அழிச்சுட்டு என்னை உட்கார்ந்து சாப்பிடச் சொல்றீங்களா? போச்சே… எல்லாம் போச்சே… சுடுகாடு ஆக்கீட்டிங்களேடா… எப்படிடா வித்தீங்க? என் கையெழுத்து இல்லாம எப்படிடா வித்தீங்க?”

“”நீங்கதான் கையெழுத்துப் போட்டீங்க… ஆஸ்பத்திரியில வச்சு கையெழுத்துப் போட்டீங்க… ஞாபகம் இருக்கா?”

“”அடப்பாவிகளா அது ஆபரேசன் பண்றதுக்குன்னு சொல்லித்தானே கையெழுத்து வாங்கினீங்க… ஏமாத்திட்டீங்களேடா… நானும் என்ன ஏதுன்னு தெரியாம கையெழுத்தைப் போட்டுத் தொலைச்சுட்டனே…”

“”அப்பா… எல்லாம் நல்லதுக்குத்தான்…  உங்களுக்கு எந்தக் குறையும் இல்லாம நாங்க பார்த்துக்கறோம். கவலைப்படாம இருங்க… பெரிய பங்களா கட்டப்போறோம். கார் வாங்கப் போறோம். உங்க பேரன் எஞ்சினியர் ஆகப்போறான்.  உங்க பேரக் குழந்தைக எல்லாம் பெரிய பெரிய ஸ்கூல்ல படிக்கப் போகுதுக… இதுக்கு மேல என்ன வேணும்?”

“”இதுக்கு மேல என்ன வேணுமா? போடா என்னோட உசுரே போச்சே…  என்னைக் கொன்னுட்டீங்களேடா… எப்படிடா இப்படி ஒரு துரோகம் செய்ய மனசு வந்துச்சு?”

“”அப்பா நீங்க ராஜா… உங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமா நாங்க பார்த்துக்கறோம்…”

பெருமாள்சாமி நிம்மதி இழந்து தவித்தார்.

மகன்கள் சொன்னதுபோல் அவரை ராஜா மாதிரி நடத்தவில்லை.

“”அப்பா ஒரு இடத்தில உட்காரமாட்டீங்களா?”

“”போட்டதைச் சாப்பிட்டு பேசாம படுத்துத் தூங்குங்க…”

“”வயசான காலத்தில  கோயில் குளம்னு போகாம ஏன் இப்படி உயிரை வாங்கறீங்க?”

“”அடப்பாவிகளா உழைச்சு சாப்பிடாத சாப்பாடு உடம்புல ஒட்டாது… என்னை மூலையில போயி அடையச் சொல்றீங்களே…?”

பெருமாள்சாமி மனசு கெட்டுப் போய் புத்தி பேதலித்தமாதிரி ஆகிவிட்டது. ரொம்பவும் தளர்ந்து போய்விட்டார். உள்ளூரில் எங்காவது வேலை கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டுப் பார்த்தார். அவர் வயதையும் உடல் இருக்கும் நிலையையும் பார்த்து யாரும் அவருக்கு வேலை தர முன்வரவில்லை.

ஒரு நாள் காய்ச்சல் வந்து ரொம்பவும் அவதிப்பட்டுப் போய்விட்டார். பெரியமகனிடம், “”காய்ச்சலடிக்குது… ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போடா..” என்றார்.

“”அப்பா… நீங்க சின்னவன் வீட்டுக்குப் போயிடுங்க… நாங்க ஒரு வாரம் டூர் போயிட்டு வர்றோம்…”

சின்ன மகன் வீட்டில் விட்டுவிட்டுப் போனார்கள்.

“”எனக்கு ஆயிரம் வேலை இருக்குது… உசுரை வாங்காதீங்க… நீங்களே ஆஸ்பத்திரிக்குப் போயிக்குங்க… உங்க பெரிய பையன் அலுங்காம கொண்டுவந்து உங்களை இங்க தள்ளிவிட்டுட்டுப் போயிட்டான்”

அவரே தனியாக தட்டுத்தடுமாறி மருத்துவமனைக்குப் போய் வந்துவிட்டார்.

மருமகளிடம், “”மாத்திரை சாப்பிடணும்… கொஞ்சம் சுடுதண்ணி வச்சுக் கொடும்மா…” என்று கேட்டார்.

“”இப்பத்தான் அடுப்பை ஆப் செஞ்சேன்… சாயங்காலம்தான் சுடுதண்ணி வச்சுக் கொடுக்க முடியும்…”

“”என்னம்மா இப்படிச் சொல்றே? ஒரு டம்ளர் சுடுதண்ணி வைக்க எத்தனை நேரம் ஆகும்?”

“”என்ன… ரொம்ப ஓவரா அதிகாரம் பண்றீங்க? சொன்னதைக் கேட்டுட்டு நடக்கற மாதிரி இருந்து நடங்க… உங்க சவுகரியத்துக்கு எல்லாம் நாங்க நடக்க முடியாது…”

பெருமாள்சாமி இடிந்து போய்விட்டார்.

“”ஊருல யாருக்கெல்லாமோ சாவு வருது… இதுக்கு ஒரு சாவு வரமாட்டேங்குது. இதை அடிக்கடி இங்க தள்ளிட்டுப் போயிடறாங்க…”

மருமகள் முணுமுணுத்ததைக் கேட்டதும் அப்படியே செத்துப் போய்விடலாம் என்று தோன்றியது.

மகன் வந்ததும் மருமகள் புகார் சொன்னார்.

“”விடுடி… கொஞ்ச நாள் பார்த்துட்டு ஏதாச்சும் முதியோர் இல்லத்துல சேர்த்துடலாம்…”

“”அதைச் செய்யுங்க முதல்ல…”

பெருமாள்சாமி நொறுங்கி போய்விட்டார்.

“இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா? இனிமே இங்க இருக்கக் கூடாது…’

அன்று இரவு வீட்டை விட்டுக் கிளம்பியவர்தான்.

கையில் ஓர் ஐந்நூறு ரூபாய் மட்டுமே இருந்தது.

அங்கே இங்கே சுற்றி எப்படியோ பொள்ளாச்சி வந்து சேர்ந்துவிட்டார். கையில் இருக்கிற காசெல்லாம் தீர்ந்துவிட்டது. எப்படியாவது வேலை கிடைத்துவிடும் என்கிற நப்பாசையில் கடை கடையாக ஏறி இறங்கினார். வேலை கிடைக்கவில்லை.

பசித்தது. தாங்கிக் கொள்ள முடியவில்லை.  பிச்சை எடுத்தாவது சாப்பிடு… என்றது வயிறு.

சுப்பிரமணியசுவாமி கோயிலில் இருந்து தன் பிச்சைத் தொழிலை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து வந்து நின்றார்.

எப்படிப் பிச்சை கேட்பது? என்று தெரியவில்லை. யாராவது ஏதாவது சொல்லிவிட்டால்… உழைத்துச் சாப்பிட்ட உடம்பு… பிச்சை கேட்கிறது.

பெற்ற பிள்ளைகள் செய்த துரோகம் மனசுக்குள் வந்தது.

“”ச்சே… பணத்துக்காக எப்படியெல்லாம் மாறிடறாங்க…”

பெருமாள்சாமி கூட்டத்தைப் பார்த்தார். ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். நாற்பது வயதுதான் இருக்கும். உடம்பு நன்றாகத்தான் இருந்தது. அவனே பிச்சை எடுக்கும்போது நாம் ஏன் எடுக்கக்கூடாது?

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைப் போட்டுக்கிட்டு இருக்கறாரே… அவர்கிட்ட இருந்து ஆரம்பிக்கலாமா? இல்லே பட்டுச்சேலை கட்டிட்டு நிக்கற இந்தப் பொம்பளைகிட்ட கேட்கலாமா? அந்த பெரியவருக்கும் ஏறக்குறைய எண்பது வயசிருக்கும்போல… ஆள் நல்லா திடமா இருக்காரு… அவர்கிட்ட கேட்டா கொடுப்பாரா? யாருகிட்ட கேட்கறதுன்னு தெரியலியே…

பெருமாள்சாமிக்கு வயிற்றை என்னவோ செய்தது. நிற்க முடியவில்லை. இருண்டு போய்விட்ட மாதிரி உணர்ந்தார். அப்படியே மயங்கிக் கீழே சரிந்து விழுந்தார்.

பெருமாள்சாமி கண் விழித்துப் பார்த்தபோது தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. யாரோ முகத்தில் தண்ணீரை அடித்திருக்கிறார்கள்.

“”பசி மயக்கம் போலிருக்கு…” யாரோ சொன்னார்கள்.

“”இந்தாங்க பெரியவரே… ஏதாச்சும் வாங்கிச் சாப்பிடுங்க…” ஒருத்தர் பத்து ரூபாய் நோட்டை நீட்டினார்.

பெருமாள்சாமிக்கு உயிரே போய்விட்ட மாதிரி இருந்தது.

“”அய்யா… நான் பிச்சை எடுக்கவரலீங்க… எனக்கு பிச்சை வேண்டாங்க… ஏதாச்சும் வேலை கொடுங்க…” வயிற்றில் அடித்தபடி பெருமாள்சாமி கதறி அழுதார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:50

ஓட்டைப் பானை!
-----------------------------
விநாயகபுரம் என்ற ஊரின் மலை உச்சியில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அந்த ஊருக்கே அந்தக் கோவில்தான் பிரசித்தம். வேண்டியதை வேண்டும் வரம் கொடுக்கும் பிள்ளையார் என மக்கள் அங்கு சென்று வழிபடுவார்கள். மலைக்குக் கீழே ஓடும் ஆற்றில் இருந்துதான், பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் கொண்டு செல்வார்கள்.

பொன்னான் என்பவன் ஏழை. அவனிடம் இரண்டு பானைகள் இருந்தது. அதில் ஒன்று ஓட்டைப் பானை. அந்தப் பானைக்கு நடுவில் ஒரு சின்ன ஓட்டை இருந்தது. பொன்னான் தினமும் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்வான். மலை உச்சிக்குச் செல்வதால் ஒரு காவடி போல செய்து இருபக்கம் பானைகளைக் கட்டி தண்ணீர் நிரப்பி காவடி போல தூக்கிச் செல்வான்.

இதை அவன் இறைவனுக்கு சிறு தொண்டாக செய்து வந்தான். மலை உச்சிக்குச் செல்லும் போது ஓட்டைப் பானையிலிருந்து தண்ணீர் ஒழுகிக் கொண்டே போகும். அபிஷேகம் செய்யப் போகும் நேரத்தில் பாதியளவு தண்ணீர்தான் இருக்கும். ஓட்டைப் பானை இதற்காக வருத்தப்பட்டது. பிள்ளையாருக்கு என்னால் பாதி அளவுதான் தண்ணீரை அபிஷேகம் செய்ய முடிகிறதே. தண்ணீர் கொண்டு செல்பவனோ ஏழை.  என்னுடைய ஓட்டை சரி செய்யாமல் இருக்கிறானே என வருத்தப்பட்டது.

ஒரு நாள் ஓட்டைப் பானை தன் நிலைமையைச் சொல்லி பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டது. பிள்ளையார் அந்தப் பானை முன் தோன்றினார்.

“பானையே இதற்காக நீ வருத்தப்படாதே. எல்லோரிடமும் ஒரு குறை இருக்கத்தான் செய்யும். நீ உன் உடம்பிலுள்ள ஊனத்திற்காக கவலைப்படாதே. நல்ல பானையின் தண்ணீர் எனக்கு அபிஷேகத்திற்கு மட்டுமே பயன்படுகிறது. ஆனால், நீயோ எனக்கு இரண்டு விதத்தில் பயன்படுகிறாய்’ என்றார்.

“எப்படி?’ என்று கேட்டது ஓட்டைப் பானை.

“நீ நாளை தண்ணீருடன் மலை உச்சிக்கு வரும் பொழுது கவனி’ என்று பிள்ளையார் கூறி விட்டு மறைந்தார்.

மறுநாள் பொன்னன் வழக்கம் போல் இரு பானைகளிலும் தண்ணீரை நிரப்பிக் கொண்டு மலை உச்சிக்கு கொண்டு சென்றான். ஓட்டைப்  வழியே வழியில் தண்ணீர் ஒழுகிக் கொண்டே வந்தது. அபிஷேகம் முடிந்தவுடன் ஓட்டைப் பானை பிள்ளையாரை வழிப்பட்டது. பிள்ளையார் அதன்முன் தோன்றினார்.

“சாமி! தாங்கள் நேற்று சொன்னது போல்தான் இன்றும் ஒழுகிக் கொண்டே வந்தேன். ஒரு வித்தியாசமும் தெரியவில்லையே’ எனக் கூறியது.

“நீ வரும் வழியில் பூச்செடிகளும், அருகம்புல்லும் முளைத்திருப்பதை கவனிக்கவில்லையா? அச்செடிகளுக்கும், அருகம்புல்லுக்கும் நீதானே தண்ணீர் பாய்ச்சிக் கொண்டே வருகிறாய். அச்செடியில் உள்ள பூக்களைக் கொண்டு என்னை அர்ச்சனை செய்தும், அருகம்புல்லை மாலையாகவும் அணிவித்து மக்கள் வழிபடுகின்றனர். அதனால்தான் நீ இரண்டு விதங்களில் பயன்படுகிறாய் என்று கூறினேன். இனி இதற்காக வருத்தப்படாதே’ என்று கூறி மறைந்தார் பிள்ளையார்.

அன்று முதல் ஓட்டைப் பானை தன்னால் பிள்ளையாருக்கு இரண்டு விதத்தில் பயன்படுகிறோமே என்று சந்தோஷம் அடைந்தது. ஓட்டை விழுந்ததற்காக கவலைப்படாமல் இருந்தது.

- விஜயலஷ்மி கங்காதரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:05

சிறுகதை: புதிய பயணம்!
----------------
   
சங்கர் சொன்ன விஷயம் மகேஷின் தலைக்குள் எரிமலையை உருவாக்கியது.

“”சங்கர், நெஜமாத்தான் சொல்றியா… அந்த ராஸ்கல், இப்ப சென்னையில்தான் இருக்கானா…நல்லா பாத்தியா.. அது அவன்தானான்னு?”

“”ஆமாம் மகேஷ். நானென்ன உன்கிட்ட பொய்யா சொல்லப் போறேன். பிரபுவை ஒருநாள் தி.நகரிலேயும் இன்னொரு நாள் வடபழனி ஏ.வி.எம்.க்கு எதிரேயும் பார்த்தேன். பைக்கிலே போய்க்கிட்டிருந்தான். அவனுக்கு இங்கேதான் வேலை கிடச்சு ஜாயின்ட் பண்ணியிருப்பான்னு நெனைக்கிறேன்.”

“”அவனைச் சும்மா விடக் கூடாது. ஊரிலேயே அடிச்சு நொறுக்கியிருக்கணும். சூழ்நிலை சாதகமா இல்லாமப் போச்சு. இப்ப இங்கே வச்சு குமுறினோம்னா கேக்க நாதி இல்லே..என்ன சொல்றே?”

“”உண்மைதான். ஒரு நாளைக்கி அவனைப் பதம் பார்த்துட வேண்டியதுதான்”

“”இன்னொருநாள் அவனைப் பார்த்தா அட்ரஸ் கேட்டு வாங்கு. என்ன”

“”ஓ.கே.” என்றான் சங்கர்.

***

மகேஷ், சங்கர், பிரபு மூவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தான். பக்கத்து பக்கத்துக் கிராமம். பத்து கிலோ மீட்டர் தூர இடைவெளியில் வசிப்பவர்கள்.

மகேஷின் அப்பாவிற்கு மத்திய அரசில் உத்யோகம். வேலை இடமாற்றம் காரணமாக சென்னைக்கு மாற்றலாகி இருந்தது குடும்பம்.

மகேஷிற்கு பிரபுவிற்கும் மோதல் கல்லூரி ஆண்டு விழாவின்போதுதான் நிகழ்ந்தது.

கல்லூரி ஆண்டு விழாவில் மகேஷ் மேடையேறி ஒரு கவிதையை வாசித்தான். சக மாணவர்களின் கைதட்டலைப் பெற்றான்.

பிரபு சும்மா இருக்க முடியாமல், அந்த மேடையிலேயே அந்தக் கவிதையைப் பற்றி மட்டமாக விமர்சனம் செய்தான். அப்போது அவனை விட்டுவிட்ட மகேஷ் மறுநாள் கல்லூரி வளாகத்தில் பிரபுவைப் பிடித்தான்.

“”ஏன்டா, என்னயப் பத்தி எல்லோர்கிட்டேயும் தப்பா பேசிக் கிட்டுத் திரியிற?” என்றான்.

“”முதல்ல வார்த்தையைத் திருத்திக் கொள். நான் விமர்சனம் பண்ணியது உன்னைய இல்ல. நீ வாசிச்ச கவிதைய”

“”நீ ரசனை கெட்டவன். அதான் கவிதையே புரியலை”என்றான் மகேஷ்.

“”நீ எழுதியதா அன்னிக்கு வாசிச்சியே…அது உன்னோட கவிதையே இல்ல. பழைய புக்ல காபி பண்ணினது. அதனாலதான் அப்படிச் சொன்னேன். உண்மையை எல்லார்கிட்டேயும் சொல்லணுமா… சொல்லட்டுமா?” என்றான் பிரபு.

மகேஷ் கூனிக் குறுகிப் போனான். அவமானம் அவனைச் சாட்டையால் அடித்தது. அந்தச் சம்பவம் அத்துடன் முடிந்துவிடவில்லை. எரியும் நெருப்பில் சிறு சிறு துரும்பை எடுத்துப் போட்டதுபோல வார்த்தைகளாலும், பார்வைகளாலும் அவ்வப்போது மோதிக் கொண்டனர். ஒரு சின்ன விஷயம் பெரிதானது. சிறுநெருப்பு புகைந்து புகைந்து பெரும் பகையானது. பார்த்தால் ஒருவரையொருவர் தாக்கும் அளவுக்கு.

இந்த நிலையில் கல்லூரி படிப்பு முடியவும், மகேஷின் இடமாற்றம் நிகழவும் சரியாக இருந்தது.

அப்போது மகேஷின் மனதில் பற்றிய தீ இன்னும் அணையாமல் அப்படியே இருந்தது.

இப்போது சங்கர், பிரபுவைப் பற்றிச் சொல்லி மேலும் அதைக் கிளறி விட்டுவிட்டான்.

என்றாவது ஒருநாள் அவனிடம் ஏதாவது வம்புச் சண்டையிழுத்து அவனை அடித்தால்தான் மனது ஆறும் என்று தோன்றியது.

***

அன்று-

மகேஷ் ஒரு கம்பெனி இண்டர்வியூ விஷயமாகப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான்.

பேருந்தின் ஜன்னலோரமாக இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்க, பேருந்து அசோக் நகர் நெடுஞ்சாலையில் சிக்னலுக்காக நின்றது.

மகேஷ் ஜன்னல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் அந்தக் காட்சி அவன் கண்ணில் பட்டது.

சிக்னலுக்கு எதிர்திசையில் பைக்கில் பிரபு இருப்பதைப் பார்த்தான். அவனைப் பார்க்கப் பார்க்க உடலெங்கும் உஷ்ணம் பரவியது.

“விடாதே பிடி’ என்று  மனதிற்குள் ஆத்திரம் பொங்கியது. அதற்குள் சிக்னல் விழ எதிர்திசையில் வாகனங்கள் கிளம்புகின்றன.

பிரபு வண்டியைக் கிளப்புகிறான் அவன் பின்னால் யாரது? தெரிந்த முகமாக இருக்கிறதே. அது…அது…உமா அல்லவா?

பிரபுவின் இடுப்பைச் சுற்றி வளைத்துப் பிடித்தபடி அமர்ந்திருக்கிறாள் உமா, மகேஷின் தங்கை.

மகேஷுக்குக் கோபம் உச்சிக்குப் போனது. ஆனாலும் கொஞ்சம் யோசித்தான்.

உமா பிறவியிலேயே கால் ஊனமாகப் பிறந்தவள். அந்த ஊனமே அவள் திருமணத்திற்குத் தடையாக இருந்தது. இதுவரை ஒருவர் கூட அவளைப் பெண் கேட்டு வரவில்லை. இவனாகச் சிலரிடம் முயற்சித்த போது அவமானமே பரிசாகக் கிடைத்தது. உமாவைக் கரையேற்ற என்ன செய்யலாம் என்று தடுமாறிக் கொண்டிருந்தான் மகேஷ்.

இந்தப் பிரபு என் தங்கை உமாவைக் காதலிக்கிறானா? அவளைக் கல்யாணம் செய்து கொள்வானா? உமாவின் எதிர்கால வாழ்வில் வெளிச்சம் தெரிந்தது. தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவனுக்கு கண்ணெதிரே உதவிக்கரம் ஒன்று தென்படுவதைப் போல இருந்தது.

இவ்வளவு நாட்களாக மகேஷின் மனதில் கனன்று கொண்டிருந்த கோபம் சட்டென்று காணாமல் போனது. தன் தங்கைக்குக் கணவனாகப் போகிறவன் என்ற எண்ணம் வந்ததும் ஒரு புதிய கோணத்தில் அவன் பிரபுவைப் பார்த்தான். சிக்னல் மாறி பஸ் புறப்பட்டது. புதிய பாதையில் சென்றது. மகேஷின் சிந்தனையும்.

- ஜி. சுந்தரராஜன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:10

குடும்ப ஒற்றுமைக்காக முதல்வர் சொன்ன கதை

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Jayalalitha-300x201குடும்பத்தில் கணவன்-மனைவி வீணாக சண்டை போடக் கூடாது என்பதை ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கினார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னையில் கடந்த 2012ஆம் ஆண்டு 1006 திருமணங்களை நடத்தி வைத்த போது முதல்வர் சொன்ன குட்டிக் கதை:
ஒரு ஊரில் வேலைவெட்டி இல்லாமல் ஒருவர் இருந்தார். அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். மனைவியும் வந்து சேர்ந்தார். ஒரு நாள் மனைவி தனது கணவனைப் பார்த்து, “”சும்மாவே உட்கார்ந்து இருக்கிறீர்கள்? சம்பாதிக்கும் வழியைப் பாருங்கள்” என்றாள்.
உடனே கணவன், “”தான் ஒரு ஆட்டுக்குட்டி வாங்கப் போகிறேன். அதற்கான பணத்தை நீ தான் உன் அப்பாவிடம் கடனாக வாங்கித் தர வேண்டும். நான் மானஸ்தன். எனக்கு ஒன்றும் இனாமாக வேண்டாம். கடன் கொடுத்தால் போதும்” என்றான்.
“”ஆட்டுக்குட்டியை வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றாள் மனைவி.
அதற்கு கணவன், “”அந்தக் குட்டி வளரும். பிறகு நிறைய குட்டிகள் போடும். அதையெல்லாம் சந்தையில் கொண்டு போய் விற்றுவிட்டு அந்தக் காசுக்கு ஒரு பசு மாடு வாங்குவேன். பசு நிறைய பால் கொடுக்கும். அதைக் கொண்டு போய் பண்ணையில் கொடுத்தால் அதிக காசு கிடைக்கும். நாமும் காபி சாப்பிடலாம். உடல் நலம் இல்லாத எனது தந்தைக்கு குடிக்க பால் கொடுக்கலாம்” என்றான் கணவன்.
உடனே மனைவி, “”அடுத்த தெருவில் இருக்கும் எங்க அம்மா வீட்டுக்கும் கொஞ்சம் பால் கொடுத்து அனுப்பலாம்” என்றாள்.
இதற்கு கணவன் மறுக்க இந்த இடத்தில் சண்டை தொடங்கி விட்டது. இரண்டு பேரும் சத்தம் போடத் தொடங்கி விட்டார்கள். இதை அறிந்து பக்கத்து வீட்டுக்காரன் ஓடி வந்தான். இருவரும் வாங்காத மாட்டுக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்பது வாக்குவாதத்தில் தெரிந்தது.
உடனே, இரண்டு பேரையும் பார்த்து, “”உன் மாடு என் தோட்டத்தில் மேய்ந்து பயிரை எல்லாம் நாசம் செய்து விட்டது. பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நீ நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்” என்றான்.
இதைக் கேட்டு அரண்டு போன கணவன், பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்து, “”நான் இன்னும் மாடே வாங்கவில்லை. உனக்கு தோட்டமே இல்லை. மாடு எப்படி உன் தோட்டத்தில் மேயும்” என்றான்.
உடனே பக்கத்து வீட்டுக்காரன், நீ தான் உளறுகிறாய். மாடே வாங்காமல் எப்படி உன் மனைவி அவர்களுடைய அம்மா வீட்டுக்கு பால் கொடுத்து அனுப்ப முடியுமோ அதுபோலத் தான் அந்த மாடு இல்லாத என் தோட்டத்திலும் மேய்ந்தது” என்றான்.
அப்போதுதான் அர்த்தமே இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்தான் கணவன். இல்லாத விஷயத்துக்கு சண்டை போட்டுக் கொண்டு இல்லறத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின்ற மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கணவனும், மனைவியும் அன்பாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். விட்டுக் கொடுக்கின்ற மனப்பான்மை வேண்டும். இதுதான் நல்ல குடும்பத்துக்கு அழகு என்று குட்டிக் கதை மூலம் விளக்கினார் முதல்வர் ஜெயலலிதா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:19

ஆசை அதிகம் வெச்சு
ஆசை அதிகம் வச்சுசிறுகதை
--------------
aasaiஸ்கூட்டரை உள்ளே நிறுத்திய பின் மாருதியை வெளியே எடுத்தான். வாசலில் நிறுத்திவிட்டு வழக்குக் கட்டுகளை எடுத்து வர அலுவலகத்தினுள் நுழையப் போனவனைத் தடுத்தழைத்தது அனுராதாவின் குரல். நாற்பத்தைந்து வயதிருக்கும். வசதியின் வனப்பு மிளிரும் முகம்.

“”ஹலோ! கண்ணன் சார்! வீட்டில் எல்லாரும் சவுக்யமா இருக்காங்களா?”

“”ம்.. நல்லாருக்காங்க.”

“”சார்! ஒரு பத்து நிமிஷம் ஸ்பேர் பண்ணலாமா?” இவனிடமிருந்து பதிலேதும் வருமுன்பே, “பண்பலை’போல் தொடர்ந்தார் அனுராதா. பக்கத்து ப்ளாட், கணவர் பெரிய அதிகாரி. பணிபுரிய ஏவலாள்கள், டிரைவர் என வீட்டிலேயே நான்கு பேர் வெளியாட்கள்.

“”உங்க வக்கீல் புரொஃபஷன்ல சம்பாதிக்கிறதோட அதிக ஸ்ட்ரெயின் இல்லாம, இன்னும்கூட சிம்பிளா மாசம் முப்பதாயிரம், ஐம்பதாயிரம் வரை சம்பாதிக்கலாம். ஒரு ஸ்கீம் – நாங்க இப்ப பிரமாதமாக பண்ணிக்கிட்டிருக்கோம். மேன்பவர் வேணாம்; எஸ்டாபிளிஷ்மெண்ட் வேணாம். வெறும் ஃபோன் காண்டாக்ட் போதும். உங்களுக்கு இருக்கிற வொயிடு கான்டாக்ட்ல ரொம்ப சிம்பிளா ஏர்ன் பண்ணலாம்.”

கண்ணன் நெளிய ஆரம்பித்தான். அனுராதா ஒரு வெள்ளைத்தாளில் பேனாவால் சதுரம் போட்டு அம்புக்குறியீடுகள் இட்டு, எண்களைக் குறித்தபடியே தொடர்ந்து பேசினாள்.

“”இந்த செயின் இன்ஸ்வெஸ்ட்மென்ட் ஸ்கீம்ல வெறும் இருபதாயிரம் ரூபாய் – அதுவும் அஞ்சாயிரம் அஞ்சாயிரமா நாலு இன்ஸ்டால்மெண்ட்ல கட்டினாப் போதும். இது மட்டும்தான் உங்க முதலீடு. ஒரு வருஷத்துக்கப்புறம் உங்க முதலீடு இருபதாயிரமும் திரும்பி வந்துவிடும். ஆனால், ஆறாவது மாசத்திலிருந்தே மாசா மாசம் ஆயிரத்திலிருந்து போனஸ் வந்து விழ ஆரம்பிச்சுடும். உங்க ஃபர்பார்மென்ஸ்க்கு ஏத்தபடி மாசம் இருபதாயிரம் வரை கூட வரும். நீங்க மாசம் நாலுபேர் இன்ட்ரட்யூஸ் செய்யணும். அந்த நாலு பேரும் தலா நாலுநாலு பேரைக் கொண்டு வரணும்…”

கண்ணன் கைக்கெடிகாரத்தைப் பார்த்தான்.

“”நீங்க ஃப்ரீயா இருக்கப்ப சொல்லுங்க… வந்து டீடெய்லா எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன். நீங்க ராத்திரி பூரா கண்முழிச்சு நோட்ஸ் எடுத்து கோர்ட்டுக்குப் போய் வாதாடி, வக்காலத்து வாங்கி ஜட்ஜ்மென்டுக்குக் காத்திருந்து உங்க உழைப்புக்கு ஏத்த வருமானம் உங்க புரொஃபஷன்ல வராதுன்னு நெனைக்கிறேன். அதுனால் இந்த ஸ்கீம்ல…”

கண்ணனின் நெஞ்சுக்குள் நெருப்புப் பற்ற ஆரம்பித்துவிட்டது. வாசலில் தெருவருகே வழிமறித்து வலைவீசும் அனுராதாவின் வாதத்தை நார்நாராய்க் கிழிக்கத் துடித்தது மனசு. நீதிமன்ற விசாரணை நேரம் பாசவலை வீச, இவன் உள்வாங்கும் சிற்றலையானான்.

“”இல்லை மேடம். என் வேலையும் அதன் வருமானமும் எனக்குப் போதும். நீங்க சொல்ற சம்பந்தமில்லாத வருமானம் எதிலயும் எனக்கு ஈடுபாடு இல்லை. இந்த மாதிரி, மத்தவங்களைக் கோர்த்துவிடற சங்கிலித் தொடர் முதலீடு – வணிகம் எதுவுமே எந்த வடிவத்திலயுமே எனக்குப் பிடிக்காத ஒண்ணு.”

“”நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை… இன்னும் மேலதிகமாகச் சம்பாதிக்கலாமேன்னு…”

“”இல்லைம்’மா நன்றி வர்றேன்!”

காரின் கதவைத் திறந்து பளிச்சென்று உள்ளே அமர்ந்தான்.

“”நட்ராஜ், கேஸ் கட்டெல்லாம் எடுத்து வச்சுக்கீட்டீங்கள்ல? வந்து உக்காருங்க!” அதி வேகமாய்க் கிளப்பினான் காரை. வாகனத்தைவிட அவன் எண்ணம்தான் வேகமாய் ஓடுகிறது…

“நகர சாலை நெரிசலில் காலைப் புயலில் புறப்பட்டுப் புகுந்து “பிளஷர் காரில்’ மகிழ்ச்சியுடனா பயணிக்க முடிகிறது?

வீங்கிப் புடைத்த நெற்றியாகவும் பல் விழுந்து குழியான பொக்கை வாயாகவும் திகழும் தெருவில் சாகச சர்க்கஸ் வித்தைத்தான் வாகனப் பயணம். எந்த வகை வாகன ஓட்டிக்கும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது தனது அவசியக் கடமை என்கிற உணர்வே இருப்பதில்லை. அட, சாலை விதிகள் என்னென்னங்கிற அறிவு இருந்தாலல்லவா அதைக் கடைப்பிடிக்கிற நினைவு வரும்? தான்-தான் மட்டுமே பயணிக்க இந்தச் சாலை என்கிற அபத்தமான அழுச்சாட்டிய மனோநிலை தொத்து வியாதியாய் வேகமாகப் பரவிவிட்டதே.

“காதைத் துளைக்கும் எச்சரிக்கை ஒலியால் மிரட்டி தொலைவில் தெருவைக் கடக்கும் ஜீவனைத் தேவையற்று சில நிமிடங்கள் நிற்க வைத்துத் தன் வாகன வேகத்தைக் குறைக்காமல் சுகமாகப் பயணிக்கிற அதிகாரத்தை யார் தந்தது இவர்களுக்கு? வாகனங்களுக்கு இடையே விட்டுப் பயணிக்க வேண்டிய தொலைவு என்று ஒன்று உண்டு என்கிற சட்டமும் காணாமல் போனது. இடதும் வலதும் மிக நெருங்கி வந்து தாண்டிச் செல்ல – காது வழியே நெஞ்சைப் பிளக்கும் “ஹாரன்’ சமிக்ஞை – அடையாளக் குறியீடு எதையும் காண்பிக்காமலேயே அருகில் வரும் வாகனத்தைக் கடப்பதும், திரும்புவதும் எனப் பிறரைத் திக்குமுக்காட வைப்பதும்… அவன் எப்படிப் போவான் எப்படி, எங்கே, எப்போது திரும்புவான், திரும்புவானா, நேரே போகப் போகிறானா? எனக்குத்தான் அந்தக் கவலை. தன் வண்டியைத் தான் இயல்பாய் ஓட்டுவதற்குப் பதில் அவன் எப்படி ஓட்டுகிறானோ அதற்குத் தகத் தன் பயணத்தை அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே, யோசிக்காத, அக்கறையற்ற அவனுக்காகவும் சேர்த்து நானல்லவோ யோசிக்க வேண்டியிருக்கிறது.

“பயணத்தில் மட்டுமா – வாழ்க்கையிலேயும் அல்லவா இந்தச் சுயநலம் பாசியாய்ப் படர்ந்துவிட்டதே! சுயநலச் சுதந்திரத்தின் எல்லை எதுவரை? மற்றவர் சுதந்திரத்தின் எல்லைக்கோடு வரை என்கிற அறிவு வேண்டாமா?’

நிமிர்ந்து நிற்கும் சிகப்புக் கட்டிடத்தின் உள்ளே ஒரு வழியாய் நுழைந்து மரத்தடியில் வண்டியை நிறுத்தி இறங்குகிறான் இவன். நீண்டு மடித்து வைக்கப்பட்ட கட்டுக்களை எடுத்துக்கொண்டு இவனைப் பின் தொடர்கிறார் இளைய வழக்கறிஞர்.

சுட்டெரித்த சூரியன் விடைபெறும் மாலை நேரம்.

ஆவி மேலெழும் இஞ்சி தட்டிப்போட்ட தேநீரைச் சுவைத்தபடியே எதிரே அமர்ந்திருக்கும் இளைஞர் ரகுவின் பேச்சை உற்று கேட்கிறானிவன். வெள்ளைத் தாளில் சிறுசிறு குறிப்புகளாக எழுதிக் கொள்கிறான்.

“”ம்…டீயக் குடிங்க, ஆறிடப் போகுது.”

“”தேங்க்ஸ்!”

கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டே தேநீர் அருந்தி முடிக்கிறான் ரகு. தொடர்கிறான்:

“”நான் மட்டுமில்லை. எங்க கம்பெனியிலிருக்கிற ஆறேழு பேர், அப்புறம் மிடில்கிளாஸ்வுமன் கொஞ்சம்பேர், வயசானவங்க கொஞ்சம் பேரு – கிட்டத்தட்ட எனக்குத் தெரிஞ்சு நாற்பது அம்பது பேர் இப்படி இந்த “எவர் கிரீன் குரோ பைனான்ஸ்’ல பணம் கட்டி ஏமாந்திருக்கோம். ஒரு வருஷம் இருக்கும். முதல் நாலு மாசத்துக்குப் பின்னாடி மூணு மாசம் மட்டும் “செக்’ தந்தாங்க. அப்புறம் தரவேயில்லை. இன்னும் நாலைஞ்சு “ஸ்கீம் ப்ளோட் பண்றோம்ன்னு, மேலும்மேலும் எங்கக்கிட்டயிருந்து பணம் கறக்கப் பார்த்தாங்களே தவிர, அவுங்கக்கிட்டயிருந்து ரிட்டன் எதுவும் வரவேயில்லை. சொன்னபடி எதுவுமே சரியாத் தரலை.”

“”அவுங்க உங்களைக் குறி வைச்சு வளைச்சாங்களா? நீங்களா போய் விழுந்தீங்களா?”

“”அது வந்து… மீடியாவெல்லாம் செம விளம்பரம் செய்ஞ்சு எங்க மனசுக்குள்ள அவுங்க கம்பெனிய பத்தி ஒரு “இமேஜைப் பில்டப்’ பண்ணீட்டாங்க. அதுவுமில்லாம அப்பல்லாம் எங்கள மாதிரி ஐ.டி.தகவல் தொழில்நுட்பத் துறையில கைநெறையக் காசு புழங்குற தகவல்தான் உலகம் தெரிஞ்ச ரகசியமாச்சே. ஃபோன் மேல ஃபோன், எஸ்.எம்.எஸ்., பர்சனல் கேன்வாஸ்ன்னு நுனிநாக்கு இங்கிலீஷ்ல தேன் குழைச்சுப் பேசிக்கிட்டே இருந்தாங்க. ஒரு பத்து நிமிஷம் எப்ப ஸ்பேர் பண்ண முடியும்ன்னு கேட்டு அப்பாய்ண்டமெண்ட் வாங்கிக்கிட்டு வந்து லேப்-டாப்பில கிராஃப் காண்பிச்சு, அவுங்க இன்வெஸ்ட்மெண்ட் பிளான், ஹைப்பா டைரக்டர்ஸ் ஃப்ரொஃபைல்லாம் காண்பிச்சு அப்படியே கரைச்சாங்க. எங்களுக்கும் செலவு போக மிஞ்சியதை, ஃப்ளாட், வீடு வாங்க உதவுமேன்னு, இப்படி இன்வெஸ்ட் பண்ணினா பெட்டர்னு தோணுச்சு.”

தன் பேனாவால் மேஜையை “டக்டக்’கெனத் தட்டியபடியே இவன் குறுக்கிட்டான்.

“”ம்… அப்ப… அவுங்களாத் தேடி வந்தவங்கக்கிட்ட நீங்க அப்படியே இலகுவா “இந்தாங்க’ன்னு எடுத்துக் கொடுத்திருந்கீங்க…”

“”யெஸ் சார்.”

“”ஒங்க பணத்தைப் பாதுகாப்பான இடத்தில முதலீடு செய்யணுங்கிற அக்கறையில்லாம, உங்களைத் தேடிவந்தவங்ககிட்ட, அப்படியே கையில் இருக்கிறதைச் சுலபமா குடுத்தீங்க?”

“”இன் எ வே யெஸ்..”

“”ம்…”

வேதனையும் கசப்பும் கலந்த பெருமூச்சு இவனுள் – படித்த முட்டாள்களை அடிக்கடி தற்போது பார்க்க நேரிட்டு விடுகிறதேயென.

“”மிஸ்டர் ரகு! “ஸிஸ்டம்’ “நெட்’, கேளிக்கை சேனல் தவிர உங்களுக்குத் தெரிஞ்சது “பப்’பும் “வீக்என்ட் பார்ட்டியும்தானா? எவ்வளவு நியூஸ் பேப்பர் பத்திரிகை, சேனல்லாம் பொருளாதாரத் தகவலைத் தருது…”

“”நோ டைம் சார்!” படீரெனப் பதில் வருகிறது ரகுவிடமிருந்து.

“”ரகு! ஒங்களை நீங்களே ஏமாத்திக்கிற முயற்சியில் சுகங்காணாதீங்க. உங்களுக்குத் தெரிஞ்சுக்கிற ஆசையும் ஆர்வமும் இல்லை. முக்கியமாகப் பொறுப்பு இல்லை. ஒங்க பாட்டி காலத்தில அடுப்படிப் பாத்திரம், தகர டப்பாவில சிறுகச்சிறுகச் சேமிச்சாங்க. உங்க அப்பா காலத்தில.. எதில கூட வட்டி வரும். அதே சமயம் முதலுக்கு மோசம் வந்துடக் கூடாதுங்கிற அக்கறை கவலையோட பத்து எடம் அலைஞ்சு, நாலு பேர் கிட்டக் கேட்டு, அரசு நிறுவனங்கள்ல, அஞ்சலகச் சேமிப்பு, தேசவுடமை வங்கின்னு சேமிச்சாங்க. உங்களுக்கு எல்லாத்திலயும் போல இதுலயும் மிக எளிதான – சுகமான சோம்பேறித்தனம். நேரமில்லைங்கறது சால்ஜாப்பு. கூடுதல் சம்பளம் தர்றாங்கன்னா அதிகமாகத்தான் ஒழைக்கணும். ஆனா,சுயத்தை இழந்து, அப்படிக் கொத்தடிமையா ஒழைச்சுச் சம்பாதிப்பதைக் கவனமா சேமிச்சு, பாதுகாப்பா முதலீடு செய்யணுங்கிற அக்கறை வேண்டாமோ? நான் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க.

ஒங்களுக்கே “அவுங்க தர்ற சம்பளம் அதிகந்தான்; ஈஸியா சம்பாதிக்கிற பணம்தானே’ன்னு ஒரு அக்கறையின்மை உங்களுக்குள்ளே பரவிடுது. அதுக்கு மேலே எதிர்த்தாப்பில நவீனமா எப்படி திருட்றது, எப்படி ஏமாத்தறது, எப்படி கண்கட்டு வித்தை காண்பிச்சு கொள்ளயடிக்கிறதுன்னு புதுப்புது வழிகளை, நுட்பங்களைக் கண்டுபிடித்து ஒரு பெரிய கொள்ளைக்காரக் கும்பலே எல்லாத் துறையிலும் பகட்டா பவனி வருது. நாமதான் விழிப்போட செயல்படணும். சரி… இப்ப எப்படி நடவடிக்கை எடுக்கலாம்ன்னு யோசிக்கிறேன். ஒரு நாலு நாளுக்குள்ல பாதிக்கப்பட்டவங்களை ஒருங்கிணைச்சு ஒரு குழு அமைச்சுக்குங்க. காவல்துறை முறையீடு, வழக்குத் தொடுப்பது, மீடியாவிடம் போறதுன்னு எல்லா வழியிலயும் முயல்வோம். முழு விபரமும் சேகரிச்சு வையுங்க. சட்டபூர்வமாகச் செய்ய வேண்டியதை நான் திட்டமிட்டுச் செய்யிறேன்.”

“”தேங்க்ஸ்” எழுந்து நின்று வணங்குகிறான் ரகு. ரகுவின் தோள் அணைத்துப் பேசுகிறான் இவன்.

“”ரகு! நான் தனிப்பட்ட முறையில உங்களை விமர்சனம் செய்ததா நெனக்காதீங்க. நான் சொன்னதையெல்லாம் சரியான கண்ணோட்டத்தில எடுத்துக்குங்க…”

“”நோசார். ஒரு எல்டர் பிரதரா நீங்க உரிமையோட வழி காண்பிக்கிறதாத்தான் நெனைக்கிறேன்.”

கைகுலுக்கலில் இனிமை மலர்ந்தது. இவனையே ஊற்றுப் பார்த்து வியக்கிறான் நடராஜ். “சாந்தமான முகம்; ஆனால் கம்பீரமான உள்ளம். முப்பத்தைந்து வயதில் பக்குவமும் சமூக அக்கறையும் கொண்டவர் என் சீனியர்.”

“”என்ன அப்படிப் பார்க்கிறே நட்ராஜ், நான் சொன்னது சரியா, தப்பா சொல்லு?”

“”கரெக்ட்தான் சார். காலைல அந்தம்மாகிட்ட… “சார் ஏன் அவ்வளவு கோபப்பட்டார்’ன்னு நான் கொஞ்சம் யோசிச்சேன். ஆனா, இதோ இப்பப் பாக்குறேன்ல! துள்ளித் திரியிற மீன்லருந்து விலாங்குமீன் வரை மாட்டாதான்னு வலைய விரிய வீசுறவுங்க அதிகமாகிட்டாங்க. இப்பிடியிருக்கிறப்ப நீங்க எடுத்துச் சொல்றது எப்படி சார் தப்பாகும்?”

“”பக்கத்து ஃப்ளாட் அனுராதாம்மாவுக்கு என்ன தேவை? வீட்டுக்காரர் கைநெறயச் சம்பாதிக்கிறாரு. நல்ல வசதி. இது பத்தாதுன்னு தம்மோட பேராசை வலைக்குள்ள மத்தவங்களையும் இழுக்கறது தப்பில்லையா? ஆசைப்படு – தப்பில்லை. பேராசைப் படாதே. அதுவுமில்லாமல நம்ம உழைப்பு இல்லாம வரக்கூடிய பொருள் நமக்கு மகிழ்ச்சி தராதுன்னு நம்புகிறவன் நான். ஓ.கே., பேசிக்கிட்டிருந்தா பேசிக்கிட்டேயிருப்போம். வீட்டுக்குக் கிளம்பலாம். பூட்டிக்கிட்டு வா! கார்ல இருக்கேன்.”

கையில் மடித்துப்போட்ட கருப்புக் கோட்டுடன் வேக நடைபோடுகிறான் இவன்.

ஜில்லென்று பூ மணத்துடன் வீசும் வேப்பமரக்காற்று முகத்தில் பட்டு மோதுகிறது; நின்று அதை உள்வாங்கிச் சுவாசித்துப் பின் நடக்கிறான் இவன்.

-அகிலன் கண்ணன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:36

துளிர்களும் ஒரு நாள் பழக்கமும
-----


இன்று விடியும் போதே மிகவும் சோர்வாக இருந்தது வாணிக்கு. அன்றைய நாளின் வேலைகள் குறித்த நினைவுகள் மண்டைக்குள் நிரந்தரமாக தங்கி விட்டதாகத் தோன்றியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகத்தான் விடிகிறது. வாரத்தின் எல்லா நாட்களுக்கென்றும் ஒரு மனநிலை இருக்கிறது. திங்கள்கிழமைகள் கொஞ்சம் ஆசுவாசமாக விடியும்.

அன்று அவளது வேலைகள் அத்தனை சிரமமில்லை. செவ்வாய்க்கிழமை ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ளும், புதன் கிழமைகளில் பெரும்பாலும் முந்தைய நாளின் இரவே எதையாவது செய்து வைத்துக் கொண்டு அதை எடுத்துக் கொண்டு ஓட வேண்டும். வியாழக்கிழமைகள் பெருமூச்செடுத்துக் கொள்ளக் கூடியவை. வெள்ளிக் கிழமைகளுக்கு என்று அவள் தனியாகச் சக்தி சேமிக்க வேண்டியிருக்கும். சனிக்கிழமைகள், நேரடியாக ஞாயிற்றுக்கிழமைகள் வந்தால் நன்றாயிருக்கும் என்ற ஏக்கத்தோடு விடியும். ஞாயிற்றுக்கிழமைகள் அவளுக்கு அடுத்த வாரத்திற்கான புத்துணர்வு தருவதற்காகவே விடிபவை. அதை தவற விடாமல் முழுமையாய் அனுபவிப்பாள் அவள்.

இன்று செவ்வாய்க்கிழமை. கர்ப்பிணிகள் பரிசோதனை நாள், ஆய்வுக்கூட்டம், அது இது என்று இன்று வாணியின் அலுவலக வேலை கொஞ்சம் பதட்டமானது தான். ஊரிலிருந்து மாமியார் வந்திருந்தார். சர்க்கரை நோயாளியான அவருக்கு, தனியாகச் சமைத்து வைத்து விட்டுத்தான் அவள் கிளம்ப வேண்டும். இந்த மாதம் முழுக்க மாமியார் இங்கு தான் இருப்பார்கள். அடுத்த ஒரு மாதம் அவளுக்கு சமையல் வேலை குறையும். அவள் கணவனின் தம்பி வீட்டுக்கு போய் விடுவாள் மாமியார். பரபரவென்று வேலைகளைத் தொடங்கினாள்.

வெளியில் வாக்கிங் போயிருந்த அவள் கணவன் வந்து மின்விசிறியைச் சுழல விட்டு, “”அப்பாடா” என்று அமர்ந்தான். மாமியாருக்கும், கணவனுக்கும் தேநீர் கொண்டு போய் கொடுத்தாள். யாரைப் பற்றியோ மாமியார் கணவனிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த தெருவிலிருந்த பலரும் மாமியாரின் தோழிகளாயிருந்தனர். அவர்களின் கதைகள் அடிக்கடி அந்த வீட்டின் பேசு பொருளாயிருக்கும். லீலாவதியின் மருமகள் குறித்தோ, கமலாவின் மகன் குறித்தோ, மீனாட்சியின் கணவன் குறித்தோ பேச அவள் மாமியாரிடம் நிறைய விஷயங்கள் இருந்தன. கேட்கத் தான் வாணிக்கு நேரமிருப்பதில்லை. காலை நேரங்கள் தன் மகனிடம் கதை பேசும் நேரமாயிருந்தது மாமியாருக்கு. சில சமயம் காதில் விழும் செய்திகளுக்கு கருத்து சொல்வதோடு வாணி அதை மறந்து வேலைக்குக் கிளம்பி விடுவாள். இன்றும் ஏதோ மீனாட்சியின் கணவன் பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தார்கள். “பாவம், பாவம்’ என்ற வார்த்தைகள் மட்டும் தான் அவள் காதில் விழுந்தன.

வேலைகளை முடித்து, சாப்பாட்டு கூடையுடன் கிளம்பி விட்டாள் வாணி.

“”என்னங்க, போயிட்டு வரேன். உங்களுக்கு மதிய சாப்பாடு பையில வச்சிருக்கேன். அத்தே, சாப்பாடு மேசையில எல்லாம் எடுத்து வச்சிருக்கேன், மாத்திரை எல்லாம் மறக்காமச் சாப்பிடுங்க. கீரைக் கூட்டு கட்டாயம் சாப்பிடுங்க. சாயங்காலம் சீக்கிரம் வர்றேன்” என்று சொல்லிக் கொண்டே செருப்பை மாட்டிக் கொண்டாள்.

“”சரிம்மா, கோயிலுக்குப் போகணும் இன்னைக்கு, மறக்காம சீக்கிரம் வந்துடு”

மாமியார் நினைவூட்டலுக்கு “”ம்ம்ம். சரி..” என்றபடி பேருந்து நிறுத்தம் நோக்கிப் போனாள் வாணி. அருகிலேயே வீடு இருப்பது ஒரு வசதி அவளுக்கு. இன்னும் நிறுத்தம் மக்களால் நிரம்பத் தொடங்கவில்லை. அது சரி, நம்மை மாதிரி ஏழு மணிக்கே வந்து பேருந்தைப் பிடிக்க எல்லோருக்கும் அவசியமா என்ன? என்று நினைத்துக் கொண்டாள். அதிலும் இது மே மாதம் பள்ளிகள் விடுமுறை என்பதால் அடுத்த தெரு புவனா டீச்சர் கூட வரவில்லை. இல்லையென்றால் அவளும் இவளைப் போலவே காலை ஏழு மணி பேருந்துக்கே வந்து நிற்பாள். “ம்ம்ம், பெண்களுக்கு ஆசிரியை வேலை தான் சரியாயிருக்கும்’ என்று அவள் அம்மா அடிக்கடி சொல்வாள். புவனா டீச்சர் வராத நாட்களில் எல்லாம் அம்மா சொன்னது நினைவுக்கு வந்து வாணிக்கு வருத்தமாக இருக்கும். இந்த மருந்தாளுநர் பணிக்கு படிக்காமல் டீச்சர் வேலைக்குப் படித்திருக்கலாம் என்று தோன்றும். “”எப்போதாவது யாராவது நீங்க நேத்து தந்த மாத்திரையில் இடுப்பு வலி நல்லா குறைஞ்சிடுச்சும்மா”ன்னு சொன்னா, இந்த வேலைக்கு வந்தது நினைத்து சந்தோஷம் வந்து விடும். என்ன மனசு இதுன்னு நினைத்துக் கொள்வாள்.

மருத்துவமனைக்குள் நுழையும் போதே அங்கு நிறைந்திருந்த கூட்டத்தைப் பார்த்து அவளுக்கு மலைப்பாக இருந்தது. பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு தன்னறைக்கு வந்து, மாத்திரைகள் அடங்கிய பிளாஸ்டிக் ட்ரேக்களை எடுத்து மேசையில் அடுக்கி வைத்தாள். இன்று வரப்போகும் கர்ப்பிணிகளுக்கான மாத்திரைகள் தனியாக எடுத்து வைத்தாள். மருத்துவர் வந்து நோயாளிகளைப் பார்க்கத் தொடங்கியதும், மெல்ல மெல்ல மக்கள் அவள் அறையின் சன்னலில் சேரத் துவங்கினர். கொஞ்சம் இயந்திரத்தனமாய் அவள் வேலை துவங்கியது. நேரம் செல்லச் செல்ல, கூட்டம் அதிகமாகத் துவங்கியது. கையில் சீட்டுக்களை வாங்குவதும், அதற்கான மாத்திரைகளைப் பொறுக்குவதும், சாப்பிடும் முறைகளைச் சொல்லியபடி அவற்றைச் சன்னலுக்கு வெளியே தெரியும் மரப் பலகையில் வைப்பதுமாய் அவள் ஓர் இயந்திரம் போல இயங்கிக் கொண்டிருந்தாள். இடையில் வந்த ஒரு சீட்டுக்கு தலை நிமிர்த்திப் பார்த்தாள். அது இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைச் சீட்டு. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை நாளாக இருந்தது. அந்த நாட்களில் பெரும்பாலும் ஏற்கெனவே அதற்கான மருந்துகளை வாங்குபவர்கள் வருவார்கள். புதிதாக வரும் நோயாளிகள் வாரத்தின் எந்த நாளும் வருவதுண்டு. வாணியின் முன் ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார்.

“”என்னப்பா, இன்னைக்குத் தான் புதுசா இரத்த அழுத்தம் பரிசோதனை செய்தீங்களா?” என்ற அவளது கேள்விக்கு, அவர் “”இல்லம்மா” என்றார்.

“”அப்புறம் ஏன் இன்னைக்கு வந்திருக்கீங்க? வெள்ளிக் கிழமை வரணும்னு தெரியாதா?” கொஞ்சம் வேகம் கூடியிருந்தது வாணியின் கேள்வியில்.

விநாடி நேரம் மெüனித்தவர் மெல்லச் சொன்னார், “”இல்லம்மா, ஊருக்குப் போயிட்டேன். அதான் வெள்ளிக் கிழமை வர முடியல”.

“”நோட்டைக் கொடுங்க”, என்றபடி அவரது கையிலிருந்த நோட்டை வாங்கினாள். அவர் கடந்த வெள்ளிக்கிழமையே மாத்திரை வாங்கியிருக்க வேண்டியவர் என்பது தெரிந்ததும்,வாணிக்கு சர்ரென்று கோபம் வந்தது.

“” ஏன் இப்படி பண்றீங்க? போன வெள்ளிக் கிழமையே வந்து மாத்திரை வாங்கியிருக்கனும். ஏன் வரலை?”

“”அதான் சொன்னேனேம்மா, ஊருக்குப் போனேன், போன இடத்தில வர முடியாம போச்சு. இந்த ஒரு வாட்டி தாங்க. அடுத்த முறை சரியா வந்துடுவேன்” சின்னப் பிள்ளை போல பேசும் அவரை முறைத்துப் பார்த்தாள் வாணி.

“”சொல்ற மாதிரி ஒழுங்கா வந்து மாத்திரை வந்து வாங்கறதில்ல. ஊருக்குப் போனேன், அது இதுன்னு ஒரு சாக்கு போக்கு. கொஞ்சமாவது அக்கறை இருக்கா உங்களுக்கு. ஊருக்கு போறது தான் முக்கியமா? போய் அங்கே கொஞ்ச நேரம் உக்காருங்க, நான் மாத்திரை எடுத்து தர்றேன்”

பட படவென்று அவள் பொரிந்தாலும், அந்த முதியவர் எதுவும் பேசவில்லை. “”சரிம்மா” என்றபடி அவர் விலகி எதிரில் இந்த நீளமான திண்டில் அமர்ந்து கொண்டார்.

கூட்டம் குறைந்து கொண்டே வந்தது. வாணி அவரை மறந்தே போனாள். அநேகமாக அவள் சன்னலை சாத்தும் நேரம் வந்த போது தான் எதிரில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்த முதியவரைப் பார்த்தாள். அவளுக்கு பாவமாகி விட்டது.

“”அய்யா, இங்கே வாங்க. முன்னாடியே வந்து இன்னொரு முறை எனக்கு நினைவு படுத்தியிருக்கலாமே, மறந்தே போயிட்டேன்பா” என்றபடி அவர் சீட்டை வாங்கினாள்.

“”இல்லம்மா, நீங்க வேலையா இருந்தீங்க. நான் தாமதமா வந்துட்டு உங்களைத் தொந்திரவு பண்ணக் கூடாதில்ல. அதான் அப்படியே உக்கார்ந்திட்டேன்” அமைதியாய் சொன்னார்.

“”எந்த ஊருக்குப் போயிருந்தீங்க. மகன் வீட்டுக்குப் போயிருந்தேம்மா, திருச்சிப் பக்கம்”

“”எங்க போயிருந்தாலும், அங்க பக்கத்தில இருக்கிற ஆஸ்பத்திரியில காட்டி இந்த மாத்திரைய வாங்கியிருக்கலாமே, இப்ப ரெண்டு நாளா என்ன பண்ணினீங்க? மாத்திரைக்கு வெளியில வாங்கினீங்களா?”

“”இல்லம்மா, அங்கே ஆஸ்பத்திரி எங்கே இருக்குன்னு தெரியல, நான் நோட்டையும் கொண்டு போகல. ரெண்டு நாளா மாத்திரை சாப்பிடலைம்மா”

“”அப்படி இருக்கக் கூடாதுப்பா. முறையா பரிசோதனை செய்துக்கணும், ஒழுங்கா மாத்திரை சாப்பிடணும். சரியா இப்படி விட்டு விட்டு சாப்பிடக் கூடாது” பேசியபடியே மாத்திரைகளை எடுத்து வைத்தாள் வாணி.

“”ஆமா, மாத்திரை சாப்பிட்டு எதுக்கு தான் உயிரோட இருக்கனும். போய் சேந்தா தேவலை. இன்னும் வேளை வரலையே அங்கே கொஞ்ச நாள் இங்கே கொஞ்ச நாளுன்னு எத்தன நாளைக்கு இந்த அலைச்சலோ” புலம்பிக் கொண்டே மாத்திரைகளை எடுத்து வைத்துக் கொண்டார் அவர்.

“”ஏம்பா, என்ன ஆச்சு, எங்கே அப்படி அலையிறீங்க” என்றாள் வாணி.

“”ம்ம்ம், வயசாகக் கூடாதும்மா” சொல்லிக் கொண்டே கிளம்பினார். பாவம், அவருக்கு என்ன பிரச்சனையோ என்றபடி தன் அடுத்த வேலைகளில் கவனமானாள் வாணி.

மாலை பேருந்தைப் பிடித்து வீடு வருவதற்குள் வழக்கத்தை விடவும் தாமதமாகி விட்டது. எல்லா செவ்வாய்க்கிழமையும் அவள் மாமியாருடன் அருகிலிருந்த முருகன் கோயிலுக்குச் சென்று வருவாள். இன்று தாமதமாகிவிட்டது. இனி குளித்து கிளம்ப முடியுமா என்று யோசித்தபடியே உள்ளே நுழைந்தாள்.

“”வா வாணி உனக்காகத் தான் காத்துகிட்டிருக்கேன்”

“”கோயிலுக்கு தானே அத்தே. இருங்க வந்துடறேன்”

“”இல்ல வாணி, நம்ம பக்கத்து வீட்டு மீனாட்சி புருஷன போய் பாத்துட்டு வரலாம் வா”

“”என்ன அத்தே என்ன சொல்றீங்க அவங்களுக்கு என்ன ஆச்சு”

“”அய்யோ பாவம் அவங்க கத. காலையில நான் ராஜேஷ் கிட்டெ சொல்லிகிட்டு இருந்தத நீ கேக்கலையா?”
 எரிச்சல் வந்தது வாணிக்கு. காலையில கதைக் கேக்கவா நேரம் இருக்கு என்று நினைத்துக் கொண்டே, “”என்ன அத்தே சொல்லுங்க”

“”அந்த மனுஷனுக்கு ஒரு கையும் காலும் வரலயாம் வாணி”

இப்போது வாணிக்கு சுரீரென்றது. அய்யோ என்று அவள் மனமும் அடித்துக் கொண்டது. “”ஏன் அத்தே, எப்படி அவர் பீ.பி க்கு மாத்திரை சாப்பிட்டுகிட்டு இருந்தார் தானே விட்டுட்டாராமா?” கேட்டபடியே மறுபடியும் வெளியில் வந்து காலை செருப்புக்குள் திணித்து மாமியாருடன் மீனாட்சி வீட்டுக்கு கிளம்பினாள்.

இரண்டு வீடு தள்ளியிருந்தது மீனாட்சியம்மாவின் வீடு. பாதி நாட்கள் பூட்டிக் கிடக்கும் அந்த வீடு. அவர்களது பிள்ளைகள் வீட்டுக்கு சென்று விடுவார்கள்.

“”மீனாட்சி” அத்தையின் குரலுக்கு வெளியே வந்த மீனாட்சி தளர்ந்து போயிருந்தாள். “”வாங்க” என்று பொதுவாக இருவரையும் அழைத்தாள். உள்ளறைக்குப் போனார்கள். கட்டிலில் படுத்திருந்த மீனாட்சியின் கணவர் கண்கள் நிறைந்திருந்தது. எதையோ பேச விரும்பி, இயலாமல் கண்களை மூடிக் கொண்டார்.

“”என்னம்மா, என்ன ஆச்சு?” வாணியின் கேள்விக்கு மீனாட்சியம்மா பதில் சொன்னாள்.

“”கொஞ்ச நாளாவே அவருக்கு உடம்பு சரியில்ல. சரியா மாத்திரை சாப்பிடாம இப்படி வந்திடுச்சுன்னு டாக்டர் சொல்றாங்க” புடவைத் தலைப்பால் வாயை மூடிக் கொண்டாள்.

“”உங்க பிள்ளைகளுக்கு சொல்லிட்டீங்களா” தலையை மட்டும் அசைத்தார்.

“”பிள்ளைங்க வீட்டுக்குத் தானே அடிக்கடி போவீங்க? அவங்க கவனிச்சுக்க மாட்டாங்களா? ஏன் அவர் மாத்திரை சாப்பிடலை” வாணியின் கேள்விக்கு பதிலாக மீனாட்சியம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“”எங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க. பத்து நாள் இந்த பையன் வீட்டில, பத்து நாள் அந்த பையன் வீட்டிலன்னு அலையறோம். இவர் சம்பாரிச்ச காலத்தில பிள்ளைங்களுக்காகன்னு செலவு பண்ணினோம். எங்க எதிர்காலத்துக்குன்னு எதுவும் சேத்து வைக்க முடியல. இப்ப சாப்பாட்டுக்கு பிள்ளைங்க கைய எதிர்பார்த்து இருக்கோம். அவங்களுக்கு நாங்க சுமையா இருக்கோம். பத்து பத்து நாளு பிள்ளங்க வீட்டில, பத்து நாளு எங்க வீட்டிலன்னு அலையறோம். இதில வைத்தியம் எங்க சரியா பண்ணிக்க முடியுது? ஊருக்குப் போகும் போது சில சமயம் மாத்திரைய மறந்துட்டு போயிடறோம். அங்க போயி அவங்களுக்கு இருக்கிற வேலையில நம்ம விஷயத்த சொல்லவா முடியுது? இப்பொ இப்படி படுத்திட்டாரு. சரி பண்ணிடலாமுன்னு டாக்டர் சொல்றாங்க. செலவுக்கு என்ன பண்றதுன்னு தெரியல. பசங்களுக்கு சொல்லியிருக்கேன். என்ன செய்றாங்களோ தெரியல?” சொல்லிக் கொண்டே போனவர் உடைந்து அழ ஆரம்பித்தார்.

வாணிக்கு அவரை எப்படித் தேற்றுவது? என்று தெரியவில்லை. காலையில் அவள் சந்தித்த முதியவர் நினைவுக்கு வந்தார். அவர் புலம்பியது நினைவுக்கு வந்தது. அய்யோ அவரைக் காக்க வைத்ததும் இல்லாமல், கடுமையாக வேறு பேசினோமே என்று தன்னை நொந்து கொண்டாள்.

“”கவலைப்படாதீங்க மீனாட்சிம்மா. நான் எங்க டாக்டர் கிட்டே } என்ன செய்யலாம் என்னன்னு கேக்கறேன், கவலப்படாதீங்க” வேறு என்ன சொல்வது என்று தெரியாமல் வெளியில் வந்தாள் வாணி.

வழியெல்லாம் புலம்பிக் கொண்டே வந்தாள் மாமியார். இந்த மகன் வீட்டிலும், அந்த மகன் வீட்டிலுமாய் காலம் தள்ளும் தன்னைப் பற்றி பயம் வந்திருக்க வேண்டும் அவளுக்கு.

வீட்டிற்குள் நுழைந்ததும், “”நீங்க பேசாம எங்க கூடவே இருந்துடுங்களேன் அத்தே, அங்கேயும் இங்கேயுமா என்னத்துக்கு அலைச்சல்?” வாணியின் கேள்விக்கு பதில் பேசாமல் கண் கலங்கி அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள். அடுத்த வெள்ளிக்கிழமை அந்த முதியவர் வரும் போது அவரிடம் தன்மையாகப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் வாணி. தனக்கும் வயதாகுமே என்ற நினைவு ஆட்கொண்டது அவளை.

தினமணி – நெய்வேலி  புத்தகக் கண்காட்சி நடத்திய  சிறுகதைப் போட்டியில்  ஆறுதல் பரிசு பெற்ற கதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:37

‘செல்’ மொழி
---------
   
அந்த விடிகாலை நேரத்திலும் ரயில் நிலையம் தூங்காது விழித்திருந்தது.”தயவு செய்து வண்டி நிற்கும்போது கழிவறைகளைப் பயன்படுத்தாதீர்கள்’ என்ற அறிவிப்பை அலட்சியம் செய்ததன் துர்நாற்றம் எங்கும் வீசிக் கொண்டிருக்க… என்னோடு சேர்ந்து பதினோரு பேர் நின்று கொண்டு இருந்தோம். இன்னும் பன்னிரண்டாவது நபர் வரவில்லை. “”செல்ல எடுக்க மாட்டேன்றான். அநேகமாக வந்துட்டு இருப்பான்னு நெனக்கறேன்.”

“”இன்னும் இருபது நிமிடத்தில் சேலம் வழியாக கோவை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் பிளாட்பாரம் மூன்றில் இருந்து….” அறிவிப்பு காற்றில் பரவிற்று.

“”இன்னொரு முறை போடுப்பா, தூங்கிக்கிட்டு இருக்கப் போறான்.”

மாதத்துக்கு இரண்டு நாட்கள் அலுவலக செலவிலேயே விடுமுறைப் பயணம் எனக்கு உண்டு. என்னைப் போலவே நண்பர்கள் கூடி ஒருமுறை தனியாகவும், இன்னொருமுறை குடும்பத்தோடும் பயணம் போவது வழக்கம். இம்முறை தனியர்கள் பயணம். சேலம் வரை சென்று பிறகு அங்கிருந்து கார் மூலம் கொல்லிமலை செல்வதாகப் பயணத் திட்டம்.

ரயில் ஒன்று பெருத்த சப்தத்துடன் அப்போதுதான் வந்து விட்டிருந்தது. அதிலிருந்து இறங்கிய மக்கள் கூட்டம் ஒரே திசையில் வேகமாக நகர்ந்தபடி இருந்தது. ஆறுமணிக்கு நாங்கள் பயணிக்க வேண்டிய ரயில் தயாராக இருந்தது. அது புறப்பட பத்து நிமிடங்கள் இருந்த போது…பன்னிரண்டாவது நண்பன் வந்து சேர்ந்தான்.

எல்லாருடைய முகங்களிலும் மகிழ்ச்சி ஆடிற்று.

“”என்னடா கடைசி நேரத்துல டென்ஷன் ஏத்திட்டியே” அவனுடைய லக்கேஜ் மட்டும் அதிகமாக இருந்தது. “”பாத்து வைங்கப்பா, உடைஞ்சிடப் போவுது”

சரியாக ஆறுமணிக்கு ரயில் கிளம்பிற்று. நகரத்தின் வெப்பம் அப்போதே துவங்கிவிட்டிருந்தது. பகல் நேர ரயிலாதலால் காலை புத்துணர்வுடன் மக்கள் பயணிக்க, கீழே நின்றோரின் கையசைப்பில் பிளாட்பாரம் பின்னேறிக் கொண்டிருந்தது.

கொஞ்சநேரத்தில் ரயில் வேகம் பிடித்தது. “”விடுறா மாப்ள…அவனுக்கு பைல்ஸ் ப்ராப்ளம்…அதான் வர்ல…”

“”அவனுக்கு ஃபைல்ஸ்லயும் ப்ராப்ளம்…இன்னிக்குக் கூட ஆபிஸ்ல கவுந்தடிச்சுக்கிட்டு கணக்கு பாத்துக்கிட்டிருப்பான்டா”

நானும் நண்பர்களுமாகப் பேசிச் சிரித்தபடி.. எனக்கு நாக்கில் எச்சில் ஊறிற்று. கடைசியாய் வந்த நண்பன் கொண்டுவந்த லக்கேஜை விட்டுக் கண்ணும் மனமும் நகர மறுத்தது.

செல் சிணுங்கி சிந்தனையைக் கலைக்க…

“”அப்பா…சொல்லுங்கப்பா” என்றேன்.

“”ஞாயிற்றுக்கிழமையின்னா வீடு தங்கணும். இல்ல பொண்டாட்டி பிள்ளைங்களோட எங்கியாவது போகணும்…அத விட்டுட்டு எங்கடா போயிட்டு இருக்க. காலைல எழுந்து வந்து பாத்தா ஆளக் காணாம்”

அவர் கடைசி வார்த்தையைச் சொல்லி முடிப்பதற்குள் செல் கோபுரமிழந்து மெüனமாயிற்று. இம்சை அரசன்!

காலை எழுந்ததும் நான் இல்லாதது கண்டு…உடன்…

மீண்டும் செல் ஒலித்தது.

“”ஏன்டா…அவ்ளோ ஆயிடுச்சா உனக்கு…எதுக்குடா செல்ல கட் பண்ற? மரியாதைங்கறதே இல்ல…எங்க போய்க்கிட்டிருக்கீங்க”

“”கொல்லிமலை போலான்னு”

“”யார் யாரெல்லாம்…அதே க்ரூப்பா…அப்ப உன் சினேகிதன் இருப்பானே…அந்த ஆடிட்டர்..அவன்கிட்ட கொடு”

ஆடிட்டர் நண்பன்.

“”வணக்கம் மாமா…எப்படியிருக்கீங்க?” என்று சிரித்துக் கொண்டே துவங்க, இரண்டு வினாடிக்குமேல் அவன் முகத்தில் சிரிப்பேதும் இல்லை.

“”சரிங்க மாமா…ஆமாங்க அங்கிள்” என்பதையே ஐந்துநிமிடம் மாற்றி மாற்றிச் சொல்லிவிட்டு,

“”யப்பா…காது பத்திக்கிட்டு எரியுது” என்று சொல்லியபடி செல்லை என்னிடம் நீட்ட…

“”சரி..நான் விழிக்கறதுக்குள்ள தப்பிச்சுப் போயிட்ட..அருவிப் பக்கமெல்லாம் போகாதே”

என்று துண்டித்தார்.

“”இவனுக்கு ஒரு ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டுவிட்டு, பெஞ்ச் மேல நிக்க வெக்கலாம். முப்பத்தேழு வயசாகுது. இன்னும் இவனப் போட்டு வாங்கறார்.”

நண்பர்களின் கேலியும், சிரிப்பும் “தடக்…தடக்’ ஓசையில் மறைய எனக்கு அடிநாக்கில் எச்சில் ஊறிற்று.

“”எப்படா ஆரம்பிக்கலாம்” என்றேன்.

ரயிலில் இருந்து இறங்கி வாகனத்தைப் பிடித்தாகிவிட்டது…..

டிரைவர் சின்னப் பையனாய் இருந்தாலும் எந்த ஒரு வளைவுக்கும் சிறிது அஞ்சாமல் டெம்போ டிராவலர் மேலே ஏறிக் கொண்டிருந்தது.

மாசும், மருவும் இல்லாத பச்சை எங்கும் கண் சிமிட்டிக் கொண்டிருக்க, வேனின் எந்திர ஓசை காதை அறுத்தது.

“”பாதில நிறுத்தி கொஞ்சம் ரேடியேட்டருக்குத் தண்ணி ஊத்திக்கணும்”

கொஞ்சம் கண் அயர்ந்த மாதிரியிலிருந்து கலைந்தேன். மீண்டும் அடிநாக்கு ஊறிற்று.

இம்முறை செல் சிணுங்க அழைப்பில் செல்வி.

“”எங்கங்க இருக்கீங்க”

“”மலை ஏறிக்கிட்டுருக்கோம். இன்னும் இருபது கிலோமீட்டர் ஏறணும்.”

“”காலைல சாப்பிட்டீங்களா?”

“”இல்ல செல்வி…ம்.. ரயில்ல சாப்பிட்டோம்.”

“”உளறாதீங்க. மத்தியானம் எங்க சாப்பிட்டீங்க?”

“”இப்ப மணி பன்னிரண்டே கால்தான். மேலே என் நண்பனோட பண்ணை வீடு இருக்கு. அங்கதான் மதிய சாப்பாடு”

“”பாத்து அளவா சாப்பிடுங்க..ரெண்டு நாள் கழிச்சு ஆபிஸ் போகணும்.”

எதை அளவாய்ச் சாப்பிடச் சொன்னால் என்று புரிந்தது. கொஞ்சநேரம் இடைவெளிவிட்டு, “”அருவிப் பக்கமெல்லாம் போகாதீங்க…ப்ளீஸ்”

நான் பேச்சை மாற்ற எண்ணி,

“”பாப்பா என்ன செய்யறா”

“”தாத்தாவோட வெளில போயிருக்கா…வந்ததும் பேசச் சொல்றேன்”

….

அருவிக்கு ஆகாய கங்கை என்று பெயர் வைத்திருந்தார்கள். இரண்டு கிலோ மீட்டருக்கு மலையில் இறங்கி நடக்க வேண்டுமாய் இருந்தாலும்…அந்த அருவியும், அதன் உயரமும் வடிவமும்…வீழ்ந்தும் எழும் அதன் கம்பீரமும்…களைப்பை உணர்த்தவில்லை. மேலே பூத்தூவலாய் வந்து தெறித்த அருவியின் நீர்த்துளிகளின் சிலிர்ப்பில் மீண்டும் அடிநாக்கில் ஊறிற்று.

“”இந்தச் சுமைய மெட்ராஸ்ல இருந்து தூக்கிட்டு வரணுமா? இங்க எங்கியாவது வாங்கிக்கக் கூடாதா?”

“”இது ஒரிஜினல்டா. இங்க எதையாவது கொடுத்து ஏமாத்திடுவாங்க”

“”அந்த டிரைவர் ஒண்ணும் சரியில்லே மச்சான். வர்ற வழில கூடவே கூடாதுன்னுட்டான்.”

“”ஏன்டா…ரூமுக்கே போயிறலாமே”

“”எவன்டாவன்…அதுக்கு மெட்ராஸ்லயே ஏதாவது ஒரு ஹோட்டல் ரூம் போதுமே”

செல் ஒலிக்க எரிச்சலுடன்..

“”என்ன” என்றேன்.

இம்முறை பேசியது மூன்றாவது படிக்கும் மகள். என் எரிச்சலான குரலில் பயந்திருக்க வேண்டும்.

“”என்னடா செல்லம்”

“”எங்கப்பா இருக்கீங்க?”

“”அப்பா கொஞ்சம் வெளில இருக்கேன்.”

“”எப்பப்பா வருவீங்க?”

“”நாளைக்குச் சாயங்காலம் வந்துருவேன்”

“”நீங்க குடிக்கறதுக்குத்தான் வெளில போயிருக்கீங்களாம். தாத்தா திட்டிக்கிட்டு இருக்காங்க. வேணாம்பா…குடிக்காதப்பா… அது தப்புன்னு என் தமிழ்ப் பாடத்துல கூட வருதுப்பா”

மனசுக்குள் என்னவோ செய்தது.

பாட்டிலின் கழுத்தைத் திருகி கண்ணாடி கிளாஸில் ஊற்றியாயிற்று. எல்லாரும் ஆவலாய் எடுத்துக் கொண்டு சியர்ஸ் சொல்ல கைகளை உயர்த்த நான் கண்ணாடி கிளாஸை கையில் எடுக்காமல் சிந்தனையில் இருந்தேன்.

“”என்னடா மாப்ள…என்ன ப்ராப்ளம்?”

“”இல்லடா…எனக்கு வேண்டான்டா…உடம்புக்குச் சரியில்லேடா”

இன்னொருமுறை இதுக்காகக் கிளம்பி வரக் கூடாதுன்னு மனதுக்குள் உறுதியாக ஓடிற்று.

- ஆர்.கே.சண்முகம்

தினமணி கதிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:40

கனவு பொய்ப்பட வேண்டும்
------

அன்று விடியற்காலை ஒரு கனவு கண்டேன். அது உறக்கத்திலா அல்லது இல்லையா என்று சொல்ல முடியாத ஒரு இரண்டுங்கெட்டான் நிலை. முதுகு முழுவதும் பசபசவென்று வியர்த்திருந்தது. சில்வண்டுகளின் “கிர்’ ஓசை ஒலித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ நாய் ஒன்று வெகு நேரமாய்க் குரைத்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால் அது கனவுதான். என்னால் தாங்க இயலாத அளவு அவஸ்தையின் வரம்பில்தான் அந்தக் கனவு கண்டேன். கனவின் நிகழ்ச்சி இதுதான்.

ஒரு நாள் மதியம் நான் தோட்டத்தில் கிணற்றடிக்குப் பக்கத்தில் துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். தூரத்தில் பக்கத்து வீட்டு சேஷன் என்கிற சேஷகிரிராவ் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறான். தோட்டத்தில் வேலையாள் ஒருவன் புல் வெட்டிக் கொண்டிருக்கிறான். நான் புத்தகத்திலிருந்து விலகி சுற்றிலும் நோட்டம் விடுகிறேன். அப்போதுதான் அந்த வேப்பமரக் கிளையின் மத்தியில் அந்த அதிசயமான விகார பறவையைப் பார்க்கிறேன்.

அது தன் சிவப்புக் கண்களை உருட்டி விழிக்கிறது. அதன் கழுத்து பாகம் சற்று பளபளப்பாக இருக்கிறது. உருவத்தில் சற்று சிறிய பறவைதான் என்றாலும் அதன் கூரிய மூக்கின் ஆதார அழுத்தம் என்னை வியக்க வைக்கிறது. அது தன்  இறக்கைகளைச் சற்று படபடத்துவிட்டு “ஹவ்’ “ஹவ்’ என்று அபத்தமாக குரல்  எழுப்புகிறது.

ஐந்து நிமிடங்களில் நான் வியக்கத் தக்க அளவில் அந்த வேப்ப மரக்கிளைகளில்  அந்த அதிசய பறவையின்  ஆக்கிரமிப்பு அதிகமாகின்றது. பின் சட்டென்று அந்த மரக்கிளையிலிருந்து  அந்தப் பறவை ஜிவ்வென்று கிளம்பி கண்ணிமைக்கும் நேரத்தில் கிணற்றடியில் நீர் இறைத்துக்கொண்டிருந்த சேஷனின் மார்பைக் குறிவைத்து பறந்து சென்று அவன் குரல்வளையைத் தன் பலமான மூக்கால் குத்த, அவன் “”ஹோ” என்ற இரைச்சலுடன் தொண்டைப் பகுதியிலிருந்து ரத்தம் குபுகுபுவென்று, கிளம்ப, தள்ளாடி விழுகிறான். மற்ற பறவைகள் உற்சாகக் குரல் எழுப்பிக்கொண்டு அவனை நோக்கிப் பறந்து சென்று தங்கள் பங்குக்கு அவனைத் துவம்சம் செய்கின்றன. நான் என்ன நேர்ந்தது என்பதை ஊகிக்கும் முன்பே சேஷன் முகத்தில் கண்கள், உதடு, தொண்டை எனப் பல உறுப்புகள் இழந்து துடிப்பு அடங்கிக் கொண்டிருந்தான். தூரத்தில் புல் வெட்டிக் கொண்டிருந்த வேலையாள் கையில் கத்தரிக்கோலுடன் சேஷனுக்கு உதவி செய்ய ஓடி வந்த பறவைகளை நோக்கி “”சூ…சூ” என்று விரட்ட அவைகளின் ஒட்டுமொத்த கவனம் முழுவதும் அவன்மேல் திரும்ப…” – மேலும் ஒரு கொலையைக் காண சகியாது நான் விழித்துக் கொண்டேன். இது ஒரு சாதாரணக் கனவுதான் என்று ஒதுக்கித் தள்ள என்னால் முடியவில்லை. காரணம் கனவுகள் என்பது எனக்கு மிக அரிது. எனவே அன்று மாலை ஒரு சைக்கியாட்ரிஸ்டைச் சந்திக்கவும் அவர் ஆலோசனை பெறவும் புறப்பட்டேன். டாக்டர் என்னுடைய கனவு நிகழ்ச்சியைக் கூர்மையாகக் கேட்டார்.

“”ஐ..ஸீ” என்று சொல்லிவிட்டு சற்று நேரம் யோசித்தார்.

“”மிஸ்டர்….”

“”சரவணன்…” என்றேன் நான்.

“”யெஸ்… மிஸ்டர் சரவணன். கனவு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இதுபோன்ற கனவுகள் எனக்கு வந்தால் நான் “ஹிட்ச்ஹாக்’, “விட்டாலாச்சார்யா’ படங்களுக்குப் போகவேண்டிய அவசியம் ஏற்படாது… இல்லையா?”

“”இல்லை… டாக்டர்… ஐ திங்க் சம்திங் சீரியஸ் பிகைன்ட் திஸ் டைப் ஆப் ட்ரீம்ஸ்”

“”நிச்சயமாக இல்லை, மிஸ்டர் சரவணன்” என்ற டாக்டர் நான் எந்த மாதிரியான புத்தகங்கள் படிக்கிறேன், எந்த வகையான திரைப்படங்கள் பார்க்கிறேன் என்ற வழக்கமான கேள்விகள் கேட்டுவிட்டு தீவிரமாக உடற்பயிற்சி செய்யவும், இரவில் தொல்லை தராத உணவு வகைகளை உட்கொள்ளுமாறும், முடிந்தால் இரவு படுக்கப் போகுமுன் சற்றுநேரம் தியானம் செய்யவும் அறிவுறுத்தினார்.

நான் டாக்டரிடமிருந்து கிளம்பும்முன் அவரிடம்,”"நீங்கள் நினைப்பதுபோல் இது ஒரு சாதாரண கனவு என்று எனக்குத் தோன்றவில்லை டாக்டர். காரணம் இதே மாதிரி நான் இதற்குமுன் கண்ட இரண்டு கனவுகள் எதிர்பாராத வகையில் முழுமையாகப் பலித்திருக்கிறது. ஒன்று அதிகம் முக்கியமில்லாதது. இரண்டாவது, நான் நான்கு மாதங்கள் முன்பு இதே போன்று விடியற்காலை நேரத்தில் கனவில் வெüவால் ஒன்று தலைகீழாக தொங்கிக் கொண்டிருப்பது போன்றும், அதை விரட்ட அதனருகில் செல்லும்போது அதன் முகம் உள்ளூரில்  இருக்கும் என்னுடைய கஸின் ஒருவரது முகத்தைப் போன்று இருப்பதை உணர்ந்தேன். பின்பு அந்த வெüவாலை நான் தொட்டபோது அது இறந்துவிட்டதில் மாட்டிக் கொண்டு இருந்ததுபோல் தோன்றியது. ஆறு முழு நாட்கள் – நான் கனவில் கண்ட அதே கஸின் மூன்றாவது மாடியில் டி.வி.ஆண்டெனாவைச் சரி செய்ய மாடிச் சுவர் ஏறியவர் தவறி மின் சப்ளை கம்பியைத் தொட்டுவிட அங்கிருந்து தூக்கி எறியப்பட்டு இறந்துபோனார்.

இதில் மேலும் ஓர் அதிசயத்தக்க விஷயம் என்னவென்றால், ஷாக் அடித்து இறந்துபோன என் கஸினின் உடல் தரைக்கு வரவேயில்லை. “சன்ஷேட்’ ஒன்றில் அவரது உடை மாட்டிக்கொண்டு, “வெüவால்’ போன்று தொங்கிக்கொண்டிருந்தது அவரது உடல். இதை எந்த வகையில் சேர்க்கிறீர்கள் டாக்டர்? சின்னக் குழந்தை போல் பேய்க் கனவு கண்டுவிட்டு பயந்து உங்களிடம் ஓடிவரவில்லை டாக்டர்… குட்பை…” என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன். டாக்டர் வியர்த்திருந்தார்.

மறுநாள் நான் சேஷனைப் பார்க்கும்போது எனக்குச் சங்கடமாக இருந்தது. சேஷனுக்குச் சிறிய வயதுதான். காது சற்று மந்தம். மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒண்டுக் குடித்தனம் ஒன்றில் வாழும் மத்திய வர்க்கத்தினன். சமீபத்தில்தான் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவன். தமிழ் அதிகம் தெரியாது. அவன் பேசும் கன்னடத்தை நான் புரிந்துகொள்வதுபோல், நான் பேசும் தமிழையும் அவன் புரிந்துகொள்வான். நான் அவனைச் சந்தித்து என்ன சொல்வேன்?

“”பட்சி ஒன்று வரப்போகிறது தோழா – உன்னைக் கொல்ல – உஷார்” என்று எச்சரிக்கை செய்யவா? அல்லது, “”வீட்டின் உள்ளேயே முடங்கிக் கொண்டு உன்னைக் காப்பாற்றிக் கொள்” என்று அறிவுரை சொல்லவா? இப்படிச் செய்தால் உலகம் என்னைப் பைத்தியக்காரன் என்று ஒதுக்கித் தள்ளும். பின்பு அந்த நிகழ்ச்சி நடந்தபின்பு, “தெய்வீகச்சக்தி’ என்று சொல்லி என்னைச் சாமியாராக்கி விடும். இதை நான் விரும்பவில்லை. அப்படியானால் சேஷன் இறக்க வேண்டியதுதானா? அல்லது அவனை என்னால் காப்பாற்ற முடியுமா?

சேஷனைச் சந்தித்து அவனை மறைமுகமாக எச்சரிக்கை செய்தேன். “”சேஷன்! அவசியம் ஏற்பட்டாலொழிய தனிமையாக எங்கும் செல்வதைத் தவிர்த்துவிடு. குறிப்பாக தோட்டத்துக்கு ஆயுதம் எதுவுமின்றி செல்லாதே” என்று நான் சொன்னவுடன் சேஷன் ஏளனமாகச் சிரித்தான்.

“”ஏசுப்பா நினே நன்ன பிராணக்க ஹானி தருவி தோரத்தல்லா. நானு பூஜிசுவா தேவரு நன்ன காயுதித்தானே. சிந்த்தேபிடு” என்றான்.

நான் அத்தோடு விட்டுவிட்டு வந்துவிட்டேன். என்னால் முடிந்தது அவ்வளவுதான். இருந்தாலும் சேஷனுக்கு ஆபத்து ஏற்படுவது போன்ற சூழ்நிலை ஏற்படுமானால் அதைத் தடுக்கவாவது முயற்சி செய்ய வேண்டும்.

மூன்று நாட்கள் சென்ற பின்பு விடுமுறை நாள் ஒன்றின் மந்தமான மதியத்தில் நான் மேல் மாடியில் அமர்ந்து சிறுவர்மணியில்  வந்த குறுக்கெழுத்துப் புதிரில் ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். கனவின் தீவிரம் சற்று அடங்கி, மறந்து போயிருந்தது.

“”பனிப்பிரதேசத்தில் வாழும் ஒரு கொடிய பறவை…” என்று குறுக்கெழுத்துப்  புதிரிப் பகுதியில் பார்த்ததும் நான் சட்டென்று விதிர்த்து எழுந்து தோட்டத்தை நோக்கினேன்.

சேஷன் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தான் வேலையாள் ஒருவன். தூரத்தில் புல்வெட்டிக் கொண்டிருந்தான். நான் வேப்பமரத்தை நோக்கினேன். அதுதான் – அதே பறவைதான். தன் சிவப்புக் கண்களால் உருட்டி விழித்துக் கொண்டிருந்தது. அதிர்ச்சியின் உச்சத்தில் நான் “சேஷன்’ என்று கத்திக்கொண்டே மாடிக் கைப்பிடிச் சுவற்றின் மீது ஏறிநின்றுகொண்டு, “”ஜாக்கிரதை சேஷன்… உடனே உள்ளே போய்விடு…. அவசரம்” என்று கத்திய வேகத்தில்  தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்தப் பறவை அலறியடித்துக் கொண்டு என் தலைக்கு மேலே படுவேகமாகப் பறந்து போனது.


படித்தேன் பகிர்ந்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:42

மாதா, பிதா, கூகுள், தெய்வம்!

---------

அந்தத் தனியார் பேருந்து, ஒரு புகழ்பெற்ற ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் நின்று பெரியவர் சிவசண்முகத்தை இறக்கிவிட்டுப் போகும்போது நண்பகல். நல்ல சித்திரை மாதம் கத்திரி வெயில்.

தூய வெண்ணிற வேட்டி, பருத்திச் சட்டை, துண்டு அணிந்திருந்தபோதிலும் வியர்வை ஆறாகப் பெருகி ஓடியது அவருக்கு.
 குடை ஒரு கையிலும் மதிய உணவடங்கிய துணிப் பை மறுகையிலுமாக மெல்ல அந்தப் பள்ளியின் முகப்பில் நின்ற பாதுகாவலரிடம் அடையாள அட்டையினைக் காண்பித்து, அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார்.

இடப் புறத்தில் அழகிய பாலமுருகன் ஆலயம். இது பள்ளியா அல்லது பல்கலைக் கழகமா என்று வியக்கும் வண்ணம் பரந்திருந்த வளாகம். பெரிய விளையாட்டு மைதானம். சுற்றிலும் பசுமை சேர்க்கும் மரங்கள் என்று வெயிலின் கடுமை உள்ளே சற்றுத் தணிந்திருந்தது.

முருகனை வணங்கியபின், குடை போல நிழல் விரித்திருந்த இலுப்பை மரமொன்றின் நிழலில் சிவசண்முகம் அமரவும், பள்ளியின் மதிய இடைவேளை மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

தூரத்தில் பேரன் எழிலமுதன் இளமஞ்சள் வெந்தய நிறச் சீருடையில் அவரை நோக்கி வருவது தெரிந்தது.
 அம்மா வழித் தாத்தாவான இவரைப் போலவே அவனும் நெடுநெடுவென வளர்ந்திருந்தான்.

சிறுவயதில் இடுப்பில் அரைஞாண் கட்டிக் கொள்ள, இவர் அவன் பின்னால் ஓடியதும், நீண்ட நேரப் போராட்டத்துக்குப்பின் கலகலவென சிரித்தவாறே தாத்தாவின் மீசையைப் பேரன் முறுக்கியதும் அதேவேளையில் பேரனின் இடுப்பில் கயிறைக் கட்டியதுமான அந்த இனிய நிகழ்வு அவர் மனதில் மின்னலாய்த் தோன்றி மறைந்தது.

அவனெங்கே? இவனெங்கே? நடையில் சோர்வு, உடையில் கசங்கல், கேசப் பராமரிப்பில் கவனமின்மை… ஹூம்..! பெருமூச்செறிந்தவரின் அருகில் வந்து அமர்ந்தான் எழிலமுதன் (இனி சுருக்கமாக அமுதன்).

“”இப்பத்தான் வந்தீங்களா?”

“”ம்… நல்லா இருக்கியா கண்ணு?”

“”ப்ச்…” உச்சுக் கொட்டியபடி முழங்கால்களைக் கட்டிக்கொண்டு எங்கேயோ பார்த்தான் அமுதன்.

“”நேத்து அம்மா என்கிட்டே போன்ல பேசினபோதே தெரியும்! என்னை சமாதானப்படுத்த நீங்க வருவீங்கன்னு. இவ்வளவு தூரம் நீங்க வந்தது, வீண் தாத்தா! என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன். ஸாரி!”

தாத்தா அவனையே கூர்ந்து பார்த்தார். வெறும் மூன்றே வரிகளில் தான் இங்கு வந்ததன் காரணத்தையும் அவனது நிலைப்பாட்டையும் சுருக்கமாகச் சொல்லிவிட்ட அமுதனுடைய சாமர்த்தியத்தைப் பாராட்டுவதா? அப்படியில்லாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசம் இந்தத் தலைமுறைய எண்ணி வருந்துவதா என்று ஒருகணம் தடுமாறினார்.
 “”நாம பிறகு நிதானமாகப் பேசுவோம். நீ இப்ப உங்க பாட்டி செஞ்சு கொடுத்த உணவை முதல்ல சாப்பிடு…”

“”நீங்க?”

“”நான் சாப்பிட்டாச்சு…” என்றவாறே கையோடு கொண்டுவந்த பாக்குமட்டைத் தட்டில் நடுங்கும் கைகளால் உணவைப் பரிமாறினார். கைகளைக் கழுவியதும் பாட்டியின் சமையலை ஆசை ஆசையாய் அள்ளி விழுங்கும் பேரனைப் பரிவோடு பார்த்தார்.

ஒரே பையன். பொத்திப் பொத்தி வளர்த்த மகன். பெருநகரத்தின் ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்தவனை, 11 மற்றும் 12-ஆம் வகுப்பிற்காக, ஒருகாலத்தில் கோழிப் பண்ணைக்கும் இப்போது கல்விக்கும் புகழ்பெற்று விளங்கும் அந்த மாவட்டத்திலுள்ள சிற்றூர் ஒன்றில் தரம்வாய்ந்த உறைவிடப் பள்ளியில் தங்கிப் பயில வைத்துள்ளனர் அவரின் மகளும் மருமகனும்.

அவர்களும் ஆசிரியர்கள்தான்! ஆனாலும் தங்களின் ஒரே மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமென்னும் ஆவலில் இங்கே சேர்த்துள்ளனர். ஆனால் அமுதன் திரும்பவும் வீட்டிலிருந்தே படிக்கப் போவதாகவும் இங்கிருக்கப் பிடிக்கவில்லை எனவும் அடம் பிடிப்பதுதான் இப்போது பிரச்னை! அவனை சமாதானப்படுத்தத்தான் தாத்தாவின் இந்தப் பயணம்!

கைகழுவிவிட்டு நிமிர்ந்த பேரனின் முகத்தைத் தன் துண்டால் ஒற்றியெடுத்தார்.

“”திரும்பவும் வகுப்புக்கு எத்தனை மணிக்குப் போகணும்?”

“”இல்லை தாத்தா… இன்று மாதத்தின் கடைசி சனிக்கிழமை! அரைநாள்தான் வகுப்பு”

“”ம்… நல்லதாப் பேச்சு! நிதானமாச் சொல்லு. உனக்கு இங்கே என்னடா கண்ணு பிரச்னை? நான் உனக்கு நல்லதுதான் செய்வேன்ங்கிற நம்பிக்கை உனக்கு இருந்தா தயங்காம சொல்லு!”

அமுதனின் கண்கள் ஒரு விநாடி கலங்கின. சிறிய மெüனத்துக்குப் பின் பேசத் தொடங்கினான்-

“”தாத்தா… இங்க ஒண்ணுமே சரியில்லை. காலையில் கட்டாயம் 5 மணிக்கே எழுந்து படிக்கணும். பாத்ரூம்ல வரிசையா நின்னுதான் குளிக்கணும். சாப்பாட்டுக்கும் வரிசை. ராத்திரி 11 மணி வரை மறுபடியும் படிக்கணும். பச்சைத் தண்ணியிலதான் குளிக்கணும். 2 மாதத்துக்கு ஒரு தடவைதான் வீட்டுக்குப் போய் வரணுமாம்…” அமுதனின் குரல் உடைந்தது.

மெல்ல இயல்பு நிலைக்கு வந்தவன் தொடர்ந்தான்…

“”எல்லாத்தையும் விடக் கொடுமை.. நாம சொந்தமா எதுவும் எழுதக் கூடாதாம்! பாடப் புத்தகத்திலிருப்பதை மனப்பாடம் பண்ணி அப்படியே எழுதணுமாம். எனக்குப் புடிக்கலை! என்னை வீட்டுக்குக் கூட்டிப் போங்க தாத்தா… ப்ளீஸ்!”

“”சரி, இன்னும் ஏதாவது குறைகள் இருக்கா? நான் உன்னை நிச்சயமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். ஆனால் நீ சொன்னதை நான் கேட்ட மாதிரி நான் சொல்வதையும் நீ கவனமாகக் கேட்கணும்… சரியா?”

“”ம்… சரி!”

“”எங்கே, இப்போ சிரி…”

அமுதன் இன்னமும் “உம்’மென்று இருக்க, தாத்தா, “”நான் ஒரு புதிர் போடறேன். விடை சொல்லு பார்க்கலாம். மூணு பூச்சி பேருந்துல ஏறிச்சாம். ரெண்டு பூச்சிக்கு டிக்கெட் கொடுத்த நடத்துனர் மூணாவது பூச்சிக்கு மட்டும் டிக்கெட்டோட லக்கேஜ் சார்ஜும் போட்டாராம், ஏன்?”

“”தெரியலையே தாத்தா!” விழித்தான் அமுதன்.

“”ஏன்னா, அது மூட்டைப் பூச்சி!” தன் வயதையும் மறந்து கலகலவெனச் சிரித்த தாத்தாவின் உற்சாகம் அமுதனையும் தொற்றிக் கொள்ள அவனுக்கும் மெதுவாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.

தான் சொல்வதைக் கேட்கும் மனநிலைக்கு பேரன் வந்துவிட்டதை உணர்ந்தவராகப் பலத்த யோசனையோடு பேச ஆரம்பித்தார்-

“”கண்ணு, நீ இப்பப் படிக்கிற கல்வி நிறுவனங்கள் ஆழமான அறிவும் பலமான அனுபவமும் உள்ள அர்ப்பணிப்பு உணர்வு உள்ள சில ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் உருவானது. வெறும் லாபம்தான் இவங்களோட நோக்கமா இருந்தா இந்த இடத்தில் திரையரங்கமோ, வணிக வளாகமோ கட்டியிருக்கலாம். ஆனால், இவங்க தங்களோட கல்வி அனுபவத்தை முதலீடா வச்சு, அதிக மதிப்பெண்களை சுலபமா எடுப்பதற்கான நுணுக்கங்களைக் கற்றுத் தருகிற பயிற்சி மையங்களாக இந்தப் பள்ளிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இவங்க குறிக்கோளில் லாபமும் ஓர் அங்கமே தவிர லாபம் மட்டுமே நோக்கம் அல்ல! இதை முதலில் நீ மனசுல ஏத்திக்கணும்!”" – சிறிய இடைவெளி விட்டுத் தண்ணீர் பாட்டிலில் இருந்து ஒரு மடக்கு நீரைக் குடித்தார் தாத்தா.

“”இந்தப் பள்ளியின் இயக்குநர்கள், பசுமையான மரங்கள், பாதுகாப்பான கட்டடங்கள், மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிற ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம், தரமான உணவு, சுகாதாரமான குடிநீர், முறையான பயிற்சி, ஒவ்வொரு மாணவன் மேலும் தனிப்பட்ட கவனம், ஒழுக்கம், கனிவு, கண்டிப்பு, சில நேரம் தண்டனை, சுணங்கிப் போன மாணவனுக்கு ஊக்கம், வெற்றி பெற்ற மாணவனுக்குப் பாராட்டு…ன்னு ஒருநாளின் 24 மணி நேரமும் பம்பரமா சுழன்று, உங்களோட நல்ல எதிர்கால வாழ்க்கைக்கு உங்க அப்பா, அம்மாவை விடவும் அதிகமா உழைக்கறாங்க… இதை உன்னால மறுக்க முடியுமா?”
 அமுதன் சிறு கல்லொன்றை எடுத்து மாணவர்கள் உபயோகித்த நீரை மறுசுழற்சி செய்து மரங்களுக்கு நீர் விடும் சிறு கால்வாயொன்றில் எறிந்தான். அவனது மெüனத்தை சம்மதமாக உணர்ந்த தாத்தா தொடர்ந்தார்…

“”அமுதா, 12-ஆம் வகுப்பு முடியும் வரை உன் கற்பனைக்கோ, சொந்தக் கருத்துகளுக்கோ, படைப்பாற்றலுக்கோ தேர்வில் மதிப்பெண்கள் கிடைக்காது என்பதுதான் யதார்த்தம்! பல நூறு வருடங்களாகப் போராடி, பெரியவங்க கண்டுபிடிச்ச உண்மைகளைத் தொகுத்து, பாடப்புத்தகங்களாக வச்சிருக்காங்க. அதை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும்போது கவனிச்சு, பிறகு புரிஞ்சு, மனப்பாடம் பண்ணி தேர்வில் எழுதினாத்தான் மதிப்பெண்கள்! என்ன புரிஞ்சுதா?”

“”ஹூம்… இதெல்லாம் ஒரு செகண்ட்ல இன்டர்நெட்ல கூகுள் மூலம் தெரிஞ்சுப்பேன்…” முணுமுணுத்தான் அமுதம்.

“”என்னது கூகுளா? நம்ம வரவேற்பறையில தகவலைக் குப்பை மாதிரி கொட்டற தொழில்நுட்ப சாதனங்களால கெடுதல்கள்தான் அதிகம்! நல்லது ரொம்பவும் குறைவு. நம்ம பாரம்பரிய குருகுலக் கல்வி உருமாறி கூகுள் கல்வியா சிதைஞ்சு போனது எவ்வளவு அவலம் தெரியுமா? எந்தத் தகவலானாலும் ஒரு நல்ல ஆசிரியர், தான் முதல்ல கிரகிச்சு, பிறகு அதை மாணவனுக்கு ஏத்தமாதிரி வடிகட்டித் தர்றதுனாலதான் அவருக்கு ஆசு+இரியர், அதாவது குற்றங்களைக் களைபவர்னு பேர் வந்துச்சு! இதை நீ குறை சொல்லலாமா?”

-இப்போது அமுதன் சுவாரஸ்யமாக கவனிக்கத் துவங்குவதை தனக்குக் கிடைத்த பாதி வெற்றியாக எண்ணிய தாத்தா, உற்சாகமாகத் தொடர்ந்தார்…

“”அந்தக் காலத்துல அரசன் மகனோ ஆண்டியின் மகனோ யாராக இருந்தாலும் குருகுலத்துலதான் பாடம் படிக்கணும்! நீ அஞ்சு மணிக்கு எழுந்துக்க அலுத்துக்கறியே, அந்தக் காலத்துல அதிகாலையில் எழுறது மட்டுமல்ல, குருவுக்கும் குருபத்தினிக்கும் சேவையும் செய்யணும். கடுமையான தண்டனைகளும் உண்டு. உப்பில்லாத உணவுதான் சாப்பிடணும். அறிவுத்திறன், நினைவாற்றல், மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் இது மூணும் இருந்தா 1200-க்கு 1200 மதிப்பெண்களே எடுத்துடலாம். ஆனா, வெறும் மதிப்பெண்கள் மட்டுமில்லை, கூடவே ஒழுக்கமும் அவசியம்கிறதனால்தான் இங்கே இவ்வளவு சட்ட திட்டங்கள்!

ஒரு வழக்கம், பழக்கமா மாற 21 நாட்கள் வேணுமுன்னு பெரியவங்க சொல்வாங்க. இங்க 2 வருடப் பழக்கம் நீயே விட்டுவிட நினைச்சாலும் உன் வாழ்நாள் முழுக்க உன் நிழல் போலக் கூட வரும் தெரியுமா? இதுபோன்ற பள்ளிகளை நம்ம பாரம்பரியமான குருகுலக் கல்வியின் நவீன வடிவமாகவே நான் பார்க்கறேண்டா கண்ணு…”

ஒரு நிமிடம் இடைவெளி விட்ட தாத்தா, தன் பையினுள் கைவிட்டு அவனுக்குப் பிடித்த தேன்மிட்டாய்களை எடுத்து நீட்டினார்.

“”கண்ணு, உன் கற்பனையையும் படைப்பார்வத்தையும் நான் குறை சொல்லலை! நியூட்டனின் புவியீர்ப்பு விசையைப் பற்றி அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் நீ புரிஞ்சுக்கணும்! அதைத்தான் நீ தேர்விலும் எழுதணும். அதுக்குத்தான் “விதி’ன்னு பேர். நீ 12-வது வகுப்பு முடிச்சபின் உன் படைப்பாற்றலை வச்சு அந்த விதிக்கு மேலேயோ இல்லை அந்த விதியே தப்புன்னு கூட நீ நிரூபிக்கலாம். உன்னை யாரு வேண்டாம்னு சொன்னது?”

அமுதன் இடைமறித்தான்-

“”அது சரி தாத்தா! கரப்பான் பூச்சி எப்படிக் குடும்பம் நடத்துதுன்னு நான் தெரிஞ்சு என்ன பண்ணப் போறேன்? அது போர் இல்லையா சொல்லுங்க?”

தாத்தாவுக்குப் புன்முறுவல் எட்டிப் பார்த்தது. “”ஏன், நம்ம எல்லாருடைய வீடுகளிலும் வாழற ஒரு ஜீவன்தானே அது? அதைப் பற்றியும் தெரிஞ்சுக்கலாமே!” என்றவர்…

“”அமுதா, எந்தவொரு நன்மையிலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்யும். நல்ல சோறு வேணும்னு நினைச்சா அந்த அரிசியை கல், குருணை, பூச்சி நீக்கி நாம பயன்படுத்துறது இல்லையா? அதுபோலத்தான்… இப்போ சமச்சீர் கல்வி முறை எல்லோராலும் பாராட்டற மாதிரி மாறி வருது இல்லையா? கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே மாறும்!”

அமுதனின் முகத்தில் சிந்தனை ரேகைகள்!

“”அமுதா! விடுதியில் படிக்கிறதால நிறைய நன்மைகள் இருக்குப்பா. குழு மனப்பான்மை, யதார்த்த சிந்தனை, தலைமைப் பண்பு, பெற்றவர்களின் அருமை இதெல்லாம் இங்கேதான் கைகூடும். இந்தப் பண்புகளினால் மனம் பக்குவமடையும். இதை நான் என் சொந்த அனுபவத்தால சொல்றேனப்பா!” தாத்தா மேல் துண்டால் முகத்தை ஒற்றியெடுப்பதை பரிவோடு கவனித்தான் அமுதன்.

“”தாத்தா இந்த பெஞ்சில உட்காருங்க. கொஞ்சம் தண்ணி குடிங்க” என்றபடி நீர் பிடிக்க ஓடினான்.
 அமுதன் கொண்டு வந்த நீரைக் குடித்ததும் தெம்பாகப் பேச ஆரம்பித்தார்-

“”அமுதா மணி ஆகிவிட்டது. பேருந்துக்கு நேரமாச்சு! உன் முடிவு என்னன்னு சொன்னா நான் உங்க அப்பா அம்மாகிட்டப் பேச வசதியாயிருக்கும்” என்றவாறு அன்றலர்ந்த தாமரை போன்ற தன் பேரன் முகத்தையே பார்த்தார்.

அவன் கேசத்தை தனது கரங்கலால் ஒதுக்கிவிட்டார்.

“”ம்…” தன் ஆட்காட்டி விரலை முகவாயில் வைத்து ஆழ்ந்த யோசனையில் இருப்பது போல நடித்தவன்…
 “”நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன், தாத்தா!” என்று சஸ்பென்சாக இடைவெளி விட்டு, “”அடுத்த மாதம் நீங்க வரும்போது பாட்டி செய்யற குழிப் பணியாரமும் கொண்டு வந்தாத்தான் நான் இங்கே இருப்பேன்” என்று சொல்லிவிட்டு சிறு குழந்தையாய்ச் சிரித்தான். அதற்கு வலு சேர்ப்பது போல பாலமுருகனின் கோவில்மணி ஒலித்தது.

தன் பேரனுக்காகவாவது தான் நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆதுரத்தோடு முருகனிடம் வேண்டியபடி, அவன் முன் நெற்றியில் முத்தம் கொடுத்தார் தாத்தா.


புதிய மனிதனாய்ப் பிறந்த களிப்பில் அமுதனின் முகமும் மலர்ந்தது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:45

குறிஞ்சாங் காட்டில் குறட்டைச் சத்தம்
------

குறிஞ்சாங்காட்டு சிங்கராஜா குண்டப்பனின் மந்திரி புல்லன் புலிக்கு, “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மந்திரியாகவே இருப்பது?’ எனும் எண்ணத்தில் திடீரென ராஜாவாகும் ஆசை வந்துவிட்டது. குண்டப்பனுக்கு எதிராக காட்டு மிருகங்கள் அனைத்தும் ஏற்றும் கொள்ளும் வகையில் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை வைக்க அது தீவிரமாக யோசித்தது.

பார்க்கும் கண்கள் பிரமிக்கும் வகையில் பரந்து விரிந்து கிடந்த பெரிய குறிஞ்சாங்காட்டுக்கு மந்திரி என்று பெயர்தானே ஒழியே, மட்டி மடையனாக இருந்தது அந்தப் புல்லன் புலி. இரண்டு நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டும் சிங்கத்திற்கு எதிராக சொல்லக் குற்றம் எதையும் கண்டுபிடிக்காத புல்லன், மூன்றாவது நாள் குறுக்கன் நரியிடம் போய் ஆலோசனைக் கேட்டது.

”குண்டப்பனுக்கு எதிரா பொருத்தமா குற்றம் சொல்லி உங்களை ராஜாவா ஆக்கறதால எனக்கு என்ன பிரயோஜனம்?” என்று புல்லனிடம் காரியார்த்தமாக கேள்வியை வைத்தது குறுக்கன் நரி.

”குண்டப்பனுக்கு மாற்றா குறிஞ்சாங்காட்டுக்கு நான் ராஜாவானால் நீதான் மந்திரி. இதுல கொஞ்சமும் சந்தேகம் தேவையில்லை” என்று புல்லன் அதிரடியாக குறுக்கனைக் குஷிப்படுத்திற்று.

“எதிர்கால மந்திரி’ எனும் கற்பனையில் நரியின் குறுக்குப்புத்தி சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தது. ஒருசில நிமிட இடைவெளியில் குறுக்கன், புல்லனிடம் தனது யோசனையை விவரமாக தெரிவித்தது.

”கொஞ்ச நாளாவே ராத்திரில ராஜா குண்டப்பனோட குறட்டைச் சத்தம் காட்டையே அதிர வைக்குது. இந்தக் கோரமான குறட்டைச் சத்தம் காட்டு மிருகங்கள நிம்மதியா தூங்க விடாம தடுக்குது. காட்டுக்கே காவலா இருக்க வேண்டிய ராஜா இப்படி நிம்மதியா குறட்டை விட்டு தூங்குற நேரத்துல பக்கத்துக் காட்டு மிருகங்க, நம்ம மேல படையெடுத்து வந்தா நம்ம கதி என்னாவறது? அதனால், குண்டப்பன் ராஜாவா நீடிக்கக் கூடாது. உடனடியா குண்டப்பனுக்கு பதிலா ரொம்ப காலமா நமக்கு நல்ல மந்திரியா இருக்கும் புல்லன் புலிய ராஜாவாக்கணும்’னு நீதிமன்றத்துல சொல்லணும். எப்படி என் யோசனை?”

”நல்ல யோசனைதான். ஆனால், குறட்டைச் சத்தத்தை ஒரு குறையா சொன்னா காட்டு மிருகங்க ஏத்துக்குமான்னு எனக்குள்ள சின்னதா ஒரு சந்தேகம்.”

”சந்தேகம் தேவையில்லை. குண்டப்பன் மீது புகார் சொல்ற விவகாரத்த நான் பார்த்துக்கறேன். காட்டுக்கு ராஜாவாகணும்னா இனிமே நீங்க நான் சொல்றபடி சரியா நடந்துக்கணும். என்ன சரியா?”

”சரி சரி! உன் பேச்சுப் படி ரொம்ப சரியா நடந்துக்கறேன்” என்று தலையாட்டியது புல்லன்.

புல்லனும், குறுக்கனும் பேச்சு சுவாரஸ்யத்தில் நாவல் மரத்தில் உட்கார்ந்திருந்த கரடி கண்ணப்பனைக் கவனிக்கத் தவறிவிட்டன.

அவர்களது பேச்சை தற்செயலாக கேட்டறிந்த கண்ணப்பன், ”காட்டுக்குள் புதிதாக உருவாகியிருக்கும் இரண்டு சதிகாரர்களுக்கு எதிராக என்ன செய்யலாம்?” என்று யோசனையில் மூழ்கியது.

வழக்கு சிங்கத்திற்கு எதிராக எனும் காரணத்தினால் சிங்கம் இனம் ஒன்றைத் தவிர யானை, புலி, கரடி, சிவிங்கி, குரங்கு, மான், முயல் என இப்படி வகைக்கொருவராக வயது முதிர்ந்த நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தில் குறுக்கன், குண்டப்பனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியது. கூடவே ”ஆயிரக்கணக்கான நமது காட்டு மிருகங்களிடையே குறட்டையே விடாத ஒருவர் எனும் தகுதியில் அடுத்த ராஜாவாக புல்லன் இருக்கலாம் என்பது எளியவன் எனது தாழ்மையான கருத்து” என்று பக்குவமாக புல்லனைப் பரிந்துரை செய்தது.

குண்டப்பனுக்கு எதிராக குறுக்கன் வைத்த குற்றச்சாட்டை கவனமுடன் கேட்ட நீதிபதிகளின் எதிரில் கரடி கண்ணப்பன், குறுக்கனுக்கு எதிராக திடீரென்று ஆஜராகியது கூடியிருந்தவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்திற்று.

”சாதாரண குறட்டைச் சத்தத்தை குண்டப்பனுக்கு எதிராக குற்றமா வைக்கறதுல ஏதோ உள்நோக்கம் இருக்கறதா நான் நினைக்கிறேன். மேலும், குண்டப்பனின் குறட்டைச் சத்தத்தால நம்ம காட்டுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இன்னைக்கு வரைக்கும் ராஜா குண்டப்பனின் தைரியம், துணிச்சல், பலத்துக்கு நிகரா காட்டுக்குள்ள யாரும் இல்லன்றது அனைவருக்கும் நல்லா தெரியும். குண்டப்பனின் குறட்டையை குற்றம் என நீதிமன்றம் கருதுவதா இருந்தா காட்டிலிருக்கும் எல்லா மிருகங்களின் குறட்டையையும் நீதிபதிகள் ஆய்வு செய்யணும்னு பணிவா கேட்டுக்கறேன்.”

குறுக்கன், கண்ணப்பன் இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், ”இன்றிரவு குரிஞ்சாங்காட்டில் நாங்கள் குறட்டையை ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன் பிறகு தீர்ப்புக் கூறுவோம்” என்று அறிவித்தனர்.

குண்டப்பனுக்கு எதிரான வழக்குக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் ஒன்றுமறியாத அப்பாவியாக நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த புல்லன், குறுக்கனை ரகசியமாக அதன் குடிசையில் சென்று சந்தித்து கவலையோடு சில கேள்விகளை கேட்டது.

”என்ன குறுக்கா இப்படி செய்துட்டே? குறிஞ்சாங்காட்டுக்குள்ள குறட்டையே விடாதவர் புல்லன் ஒருத்தர்தான்னு சொல்லிட்டியே! இருட்ட ஆரம்பிக்கறதுலேர்ந்து பொழுது விடியற வரைக்கும் நான் நல்லா தூங்கிப் பழக்கப்பட்டவன். கூடவே குண்டப்பன் அளவுக்கு இல்லாட்டியும் நானும் குறட்டை விடறவன். ராத்திரி நீதிபதிகள் ஆய்வுக்கு வர்றப்ப நான் குறட்டை விட்டுத் தூங்கிக் கிட்டிருந்தா நம்மளோட எதிர்கால திட்டம் வீணாயிடுமே? இப்ப என்ன செய்யறது?”

”ராஜாவா ஆவறதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் ஆகணும். குறட்டை ஆய்வுக்கு நீதிபதிகள் வரும் போது நல்லா தூங்கற மாதிரி நடிக்கணும். ஆனா தூங்கக் கூடாது” என்ற நரியின் யோசனையை ஏற்றுக் கொண்டது புல்லன்.

இரவு புல்லன் தூங்காமலிருக்க ஒரு யோசனையையும் கூறியது குறுக்கன்.

”என் மனைவி சூப்பரா சூப் தயாரிப்பா. பத்து கப் சூப்ப சாயங்திரம் பையன்கிட்ட கொடுத்தனுப்பறேன். ராத்தி பத்துமணிக்கப்புறம் அரைமணிக்கொரு தரம் ஒரு கப் சூப் சாப்பிட்டா தூக்கம் கிட்டவே வராது” என்ற குறுக்கனின் யோசனையைக் கேட்டு மகிழ்ந்தது புல்லன்.

புல்லனும், குறுக்கனும் இந்த முறையும் தங்களின் சுற்றுப்புறத்தை மறந்ததால், அவைகளின் உரையாடல் குடிசையின் பக்கத்தில் இரை தேடிக் கொண்டிருந்த கண்ணப்பனின் நெருங்கிய நண்பன் கண்டன் காக்கையின் காதுகளில் விழுந்தது. அது தான் கேள்விப்பட்ட செய்தியைச் சொல்ல கண்ணப்பனைத் தேடிப் பறந்தது.

அன்று இரவு குறுக்கனின் மகன் கொண்டு வந்து கொடுத்த சூப்பை ருசி பார்த்துவிட்டு, ”ஆகா! அற்புதம்! இருந்தாலும் அவசரப்படக் கூடாது. பத்து மணிக்கு மேலதான் அரைமணிக்கொருதரமா சாப்பிட ஆரம்பிக்கணும்” என்று சூப்பை பாத்திரத்துடன் அடுப்புதணலில் பத்திரப்படுத்தியது. “பத்து மணி வரைக்கும் கொஞ்சம் தூங்கி எழுந்துட்டா பிறகு விடிய விடிய முழிச்சிருக்கலாம்’ எனும் சிந்தனையில் கட்டிலில் கால்களை நீட்டிப் படுத்தது புல்லன்.

அந்த நேரம் கண்ணப்பனின் வேண்டுகோளின் படி ஓசையில்லாமல் வீட்டினுள் நுழைந்த கண்டன் காகம் அடுப்பின் மேலிருந்த சூப்பில் தூக்க மாத்திரைகளைக் கலக்கியதை அது அறியவில்லை.

இரவு முழுவதும் காடு முழுவதும் வீடு வீடாக சென்று மிருகங்களின் குறட்டை ஆய்வைச் செய்து முடித்த நீதிபதிகள், தங்களின் ஆய்வு முடிவை பொழுது விடிந்ததும் அறிவித்தனர்.

”குறிஞ்சாங்காட்டுல குறட்டை விடாதவங்க ஒருத்தர் கூட இல்லைன்ற எங்களோட உண்மையான ஆய்வின் அடிப்படையில, குறட்டைப் பழக்கம் சகஜமாகிப் போன காட்டுல இன்றைய ராஜா குண்டப்பன் மேலும் ராஜாவா நீடிக்கறதுல தவறில்லை. குறட்டையில குண்டப்பனுக்கு இணையா இருக்கும் புல்லனை “குறட்டையே விடாதவர்’னு பொய் சொல்லி சிபாரிசு செய்த குறுக்கனுக்கு ஆறுமாத காலம் இந்தக் காட்டை இரவுக் காவல் காக்கணும்னு நாங்க உத்தரவிடுகிறோம்.”

அப்போது, புல்லன், குறுக்கன் இரண்டின் சதித்திட்டம் குறித்து தான் அறிந்ததையும், புல்லன் குடிக்க வைத்திருந்த சூப்பில் தூக்க மாத்திரையைக் கலந்தக் குற்றத்திற்காக நீதிபதிகளிடம் மன்னிப்பும் கேட்டது கண்ணப்பன்.

கண்ணப்பன் மூலம் புல்லன், குறுக்கன் இருவரின் சதியைப் புரிந்து கொண்ட நீதிபதிகள், புல்லன் மந்திரியாக நீடிக்க தகுதி இழந்ததைச் சுட்டிக் காட்டினர். புல்லனின் இடத்திற்கு கண்ணப்பன் பொருத்தமாக தெரிவதாக முன் மொழிந்தனர்.

”பதவி ஆசைக்காக நான் எதையும் செய்யவில்லை” என்று தன்னைத் தேடி வந்த மந்திரி பதவியை மறுத்த கண்ணப்பன், புல்லனுக்குப் பதிலாக மந்திரி பதவிக்கு அறிவு, அன்பு, அடக்கம் அனைத்திலும் சிறந்த குரங்கு குதூகலனை தன்னலமின்றி சிபாரிசு செய்தது. கரடி கண்ணப்பனின் பெருந்தன்மையைப் பாராட்டி மகிழ்ந்த மற்ற மிருகங்கள், கண்ணப்பனின் சிபாரிசு நபரான குரங்கு குதூகலனை ஆரவாரமாக வரவேற்றனர்.

குரங்கு குதூகலனை மந்திரியாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த தலைமை நீதிபதி துதிக்கை தூசாமணி, ராஜா குண்டப்பன் வெட்கப்படும் வகையில் ”இனியாவது ராஜா தனது தூக்கத்தையும், குறட்டையும் குறைத்துக் கொள்வது காட்டுக்கு நல்லது!” எனக் கூறியதை கேட்டு, அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.

-ப. ஜீவகாருண்யன்

தினமணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:10

சிறுகதை : வேண்டுதல்..!
------

அய்யனார்வேண்டுதல்

கிட்டத்தட்ட நாற்பது வருசமிருக்கும். அய்யனாரைப் பார்த்து…

அம்மா, அப்பாவின் விடாப்பிடியான வற்புறுத்தலால் இந்தத் தடவை எப்படியும் அவரைப் பார்த்துவிடுவதென்று கிளம்பினேன்.

கானல் நீர் காட்டும் கரிசல் மண். கண்ணுக்கெட்டியது வரை சீமைக்கருவேல மரங்கள். பாதித் தோலுரித்த சாரைப்பாம்பு போல சிதிலமடைந்து கிடக்கும் சாலை.

அதிலிருந்து பிரிந்து செல்லும் மாட்டு வண்டிப்பாதையின் முடிவில் தென்படும் சிறிய குளம். அதன் கரையில் பேய் பிடித்து தலைவிரித்தாடும் பெண்போல கிளைபரப்பிய ஆலமரங்கள்!

தரையிலிருந்து நாலஞ்சடி உயரமிருப்பார். இருபக்கமும் தேவதைகள். முன்கால் ஒடிஞ்சு ஆறடி உயரத்தில் நிற்கும் மண்குதிரை!- இப்படித்தான் அய்யனாரை எனக்கு அறிமுகம்.

“எப்போ இடரு வந்தாலும் அவர நினைச்சுக்க.. எல்லாம் சரியாயிடும்’ -ஐந்து வயதில் அப்பா சொன்னது இப்போதும் நினைவில் நிற்கிறது.

புழுதி கிளம்பும் சாலையில் கீச்…கீச் என போகும் மாட்டுவண்டியில் உறவுகளோடு, கிளம்பிப்போய் அய்யனாரை வழிபட்டது உண்டு.

சின்ன வயதில் எனக்கு உடம்புக்கு சரியில்லை என்றால், தனது தோளில் உட்காரவைத்து அய்யனார் முன்நின்று விபூதி பூசுவது அப்பாவின் வழக்கம். அவரது நம்பிக்கை வீண்போவதில்லை. ஆஸ்பத்திரிக்குப் போகாமலே குணமாகிவிடுவேன்.

“அய்யனாரு தீர்க்காத நோயவா ஆங்கிலமருந்து தீர்க்கப்போகுது?’ என்று அப்பா அடிக்கடி சொல்வதும் உண்டு.

மாசித் திருவிழா கொண்டாட்டம் நடக்கிறபோது, அங்காளி, பங்காளிக எல்லாம் சேர்ந்து போயி கடாவெட்டி பொங்கல் வைப்பது வழக்கம்.

தேங்கா உடைச்சு, சூடம் சாம்பிராணி போட்டு, ஊதுவத்திய வாழைப்பழத்துல குத்திவைச்சு நீர் தொட்டு தெளிச்சு. அப்பாதான் பூஜைசெய்வார்.

மொட்டை போடணும்னா கண்ணார்பட்டி கண்ணுச்சாமியை கூப்பிடுவோம். அவரும் தலையை பிடிச்சுக்கிட்டு அப்பாகூட அரசியல் பேசிக்கிட்டே சொரட்டு, சொரட்டுன்னு தலைமுடியை வழிப்பார். கையில அஞ்சு ரூபாயும் சாப்பாடும்தான். கண்ணுச்சாமி சந்தோசமா கைகூப்பிட்டுப் போவார்.

மொட்டைபோட்டு குளத்துல குளிச்சிட்டு, தலையில சந்தனம் பூசிக்கிட்டாலே தனிசுகம்.

சாமி கும்பிட்டதும், பொங்கல், தேங்காய், பழம் எல்லாத்தையும் சரிபங்கா வச்சு ஆலமரத்தடியில உட்கார்ந்து ஆடு..மாடு மேய்க்கறவங்க, அக்கம் பக்கத்துல இருக்கறவங்க.. என எல்லோரையும் கூப்பிட்டு பரிமாறுவோம்.

அப்போ, நானும் அக்காவும், கொஞ்சூண்டு சோத்த எடுத்துட்டுப் போயி அய்யனாருக்கு ஊட்டிவிடுவோம். இத அப்பா பார்த்தா கோபத்தோட அதட்டுவார். “சாமிக்கு எச்சில் சோத்தை வைக்கக் கூடாது’ என எங்களைத் திட்டுவார்.

அப்போதெல்லாம் எனக்கு “கண்ணப்பநாயனார் கதை’ தெரியாது.

சோறூட்டும் போது எங்களப் பார்த்து அய்யனாரு சிரிப்பதாகத் தோணும். அப்படி ஒரு தோற்றம் அவருக்கு.

அய்யனாருக்கு சின்ன திண்டு கட்டி மழை காத்துக்கு நனையாம இருக்க ஓடுல கூரைபோட அப்பா நினைச்சாரு. அதுக்கு உத்தரவு கேட்டு அய்யனாரு முன்னால பூ போட்டாக. ஆனா உத்தரவு கிடைக்கலையாம்.

வெயிலோ, மழையோ அய்யனாருக்கு சுதந்திரமாக இருக்கத்தான் விருப்பமாம். அதனால கட்டடம் கட்டுற எண்ணத்தையே கைவிட்டுட்டாங்க.

படிப்பு, வேலை என மதுரை வந்ததிலிருந்து குலதெய்வம் கும்பிட நேரமில்லாமப் போச்சு. இப்போ குழந்தை குட்டி என குடும்பஸ்தனா ஆன பிறகும் ரொம்ப வருசம் கழிச்சு அய்யனாரைப் பார்க்குற ஆவலோட, கமுதிப் பக்கம் போறேன்.

பழைய நினைவுகள் அலைமோதிய நிலையில் அய்யனாரு கோயிலும் வந்திருச்சு. கடைகள், கட்டடங்கள் என அந்த இடமே மாறியிருந்தது.

பெரிய கோபுரம். நீண்ட பிரகாரம் எனக் கோயிலைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. இருபதடி உயரத்துல வெள்ளைக் குதிரை. கருப்பண சுவாமி உள்ளிட்ட சிறிய சன்னதிகள்.

குயிலின் ஓசை, மயிலின் நடமாட்டம் என அமைதி தவழும் இடமாகியிருந்த ஆலமரத்து அடிப்பகுதியில் மனிதக் கூட்டத்தின் இரைச்சல். அதையும் தாண்டிய ஒலிபெருக்கிகளின் ஓலம்.

மஞ்சள்படிந்த பால் போல இருக்கும் குளத்து நீர் இப்போது கழிவுநீர்க் கலந்து துர்நாற்றம் வீசிய நிலையில்…

நாற்பது வருசத்துல இப்படியொரு மாற்றமா? என வியந்தபோது “மாற்றம் என்பது மானிடத் தத்துவம்’ என்ற கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரி நினைவுக்கு வந்தது.

கோயில் முன் அறிவிப்புப் பலகைகள். பூஜைக்கு, நேர்த்திக் கடன், மொட்டைக்கு என விதவித கட்டணங்கள் விவரமாக எழுதப்பட்டு கடைசியில் “நிர்வாக அலுவலர்’ என குறிப்பிட்டிருந்தது.

“அரசாங்கம் ஏத்து நடத்துற அளவுக்கு அய்யானாரு புகழ் பரவிடுச்சு’- அப்பா என்னிடம் கூறியது சரியாகத்தான் இருக்கிறது.

பூஜைத் தட்டை அம்மா, அப்பா கொண்டு வர, மனைவி, குழந்தையுடன் அய்யனாரைக் காணும் ஆவலில் சிறப்பு தரிசனக் கட்டண வரிசையில் சென்றேன்.

பக்கத்தில் இருந்து சோறு ஊட்டிப் பார்த்த அய்யனாரு.. இப்போது என்னிடமிருந்து விலகி.. இருபதடி தூரத்தில்!

முகம் தெளிவாகத் தெரியவில்லை. தகதகவென மின்னும் உலோகத்தால் முகம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அவரு சிரிக்கிறாரா? கோபத்தோட இருக்காரா? என எதுவும் புரியமுடியாத அளவுக்கு செயற்கை ஜோடனைகள்.

கண்களை மூடி சின்ன வயசுல பார்த்த அய்யனாரை நினைத்தேன். “நாலஞ்சடி உயரம். அவர் முன் காலொடிந்த மண் குதிரை. அக்காவுடன் சேர்ந்து, சோறூட்டிய போது சிரித்த சிநேகிதம்’- கண் திறந்தால் எல்லாம் மாயம்.

இப்போது என் மகள் கேட்டாள், “அப்பா அய்யனார கட்டிப்பிடிப்பேன்னு சொன்னீங்கேளே செஞ்சு காட்டுங்க’ -கொஞ்சும் மழலை மொழி நெஞ்சில் அடித்தது போல இருந்தது.

கையிலிருந்த பொருளை யாரோ களவாடியது போன்ற உணர்வு இப்போது என் இதயத்தில்!

அய்யனாரைக் கட்டிப்பிடித்து சோறூட்டியதாக நான் கூறியது குழந்தையிடம் பொய்யாய்ப் போய்விட்டதே!- இதை எப்படி நான் நிரூபிப்பேன்?

அழுகை..அழுகையாய் வந்தது. அப்பாவைத் தேடினேன். அவராவது குழந்தைக்கு விளக்குவார் என்று.

அவரோ, ஏற்கெனவே கட்டணம் செலுத்தி அய்யனாரைப் தரிசித்துவிட்டதால் இப்போது இலவசத் தரிசன வரிசையில் தூரத்தில் நின்று எட்டி, எட்டி அய்யனாரைப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.

“எப்போ இடரு வந்தாலும், அய்யனார நினச்சுக்கோ. எல்லாம் சரியாகிவிடும்’ -சின்ன
 வயதில் அப்பா சொன்னது இப்போதும் நினைவுக்கு வந்தது.

“சாமீ.. காப்பாத்துங்க..’ -அய்யனாரை நினைத்து கண்ணீர்மல்க வேண்டிக்கொண்டேன். அவருக்குத் தெரியாமலா இருக்கும்?, எனது வேண்டுதலின் அர்த்தம்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:19

உயிருள்ள குப்பைத் தொட்டிகள்..

கண்ணாடி முன் நின்று நீங்கள் ஏக்கப் பெருமூச்சு விடுவது புரிகிறது.

“சிட்டுப்போல இருந்த நான், இப்படி குண்டு பீரங்கி ஆயிட்டேனே’ என்று உங்கள் மனம் புலம்புவதும் தெரிகிறது.

என்னங்க செய்ய? இது உங்க பிரச்னை மட்டுமில்லீங்க, இன்று இந்தியாவில் லட்சக்கணக்கான பெண்களின் பிரச்னைங்க. ஆம் அதிக எடையால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் 30 சதவீதம் பெண்கள் அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எடை அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நடுத்தர வயது பெண்களே அதிக எடையுடன் காணப்படுகின்றனர்.

ஏன் இப்படி? என்று குடும்பத் தலைவி ஒருவரிடம் கேட்டபோது, ஆமாங்க நாங்கதான் “உயிருள்ள குப்பைத் தொட்டி’ என்று கூறினார். நீங்க சொல்றது புரியலீங்க என்றபோது, அவர் விளக்கினார். “வீட்டில் எது மிஞ்சினாலும் அதை அந்த வீட்டு பெண்தான் சாப்பிடுகிறாள். வீணாக்க மனம் வருவதில்லை. இதனால் பிள்ளைகள் மீதி வைத்தாலும் சரி. கணவர் மீதி வைத்தாலும் சரி அதை எடுத்து வயிற்றில் கொட்டிக் கொள்கிறோம். பின்னே எடை கூடாம என்ன செய்யும்’ என்று அவர் அங்கலாய்த்தார். அதுமட்டுமல்ல காரணம். ஒரு குழந்தை பெற்றுவிட்டாலே போதும், “இனி எப்படி இருந்தா என்ன’? என்ற மனப்போக்கு  இந்தியப் பெண்களிடம் பரவலாகக் காணப்படுகிறது.

என்ன காரணம்: வாழ்க்கை முறை மாற்றம். பொருளாதார ஏற்றம், மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கம் ஆகியவை எடை கூடுவதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. முன்பு வீட்டு வேலைகளை பெண்களே செய்து வந்தனர். ஆனால் இன்று பொருளாதார ஏற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக வீட்டு வேலைகளை இயந்திரங்கள் (மிக்சி, வாஷிங் மிஷன், வெட்கிரைண்டர்) செய்கின்றன. உணவுப் பழக்கத்திலும் பெரும் மாறுதல் மேற்கத்திய பழக்க வழக்கங்கள் காரணமாக கொழும்பு, சர்க்கரை, மாவுச் சத்து அதிகம் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடும் நிலை உருவாகி உள்ளது.  அதேவேளையில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துகள் குறைந்துவிட்டன.

எப்படித் தெரிந்து கொள்வது?: உயரத்துக்கு ஏற்ற எடை இருக்க வேண்டும்.  நீங்கள் அதிக எடை உள்ளவரா என்று தெரிந்துகொள்ள “பாடி மாஸ் இண்டெக்ஸ்’ (பிஎம்ஐ) என்ற அளவு உள்ளது. பிஎம்ஐ அளவு 25-க்கு மேல் அதிகரித்து விட்டாலே உங்கள் எடை அதிகம் என்று தான் அர்த்தம். அந்த அளவு 30-க்கும் மேல் சென்றுவிட்டால்  நீங்கள் குண்டுப் பெண் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதை டாக்டரிடமோ அல்லது அருகில் உடற் பயிற்சி மையங்களிலோ தெரிந்து கொள்ளலாம்.

வேலைக்குப் போகும் பெண்களானாலும் சரி அல்லது வீட்டிலிருக்கும் பெண்கள் என்றாலும் சரி இனி அம்மியில் அரைக்க முடியாதுதான். அதற்குப் பதிலாக நாள்தோறும் உடல் பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். நடைபயிற்சி நல்ல உடற் பயிற்சி. தற்போது எடையைக் குறைக்க ஏராளமான சிகிச்சை முறைகள், கருவிகள், மருந்துகள் வந்துள்ளன. ஆனால் டாக்டரின் அறிவுரைப்படி உரியவர்களிடம் உரிய முறையில் சிகிச்சை பெறுவதே சிறந்தது. உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரியுங்கள். இல்லையெனில் சர்க்கரை, இதய நோய் என பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால் நீண்ட நாள்களுக்கு நீங்கள் இளமையாக இருக்கலாம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:34

பொட்டல்காடுகளும் பூங்காக்களும்
-----------
   
இரண்டு பக்கமும் புளிய மரங்கள் நிறைந்திருந்த பாதையைத்தான் அந்தக் கிழவன் கைகாட்டியிருந்தான். வெயிலின் வெம்மை புளியமர நிழலோடு சேர்ந்து தகித்தது. பூபாலனுக்கு வழியைப் பார்த்ததுமே அழுகை வந்தது. ஏதோ சுடுகாட்டுக்குப் போகிற வழி மாதிரி பொட்டலாய்க் கிடக்கிறதே.. இங்கு போயா ஆரம்பப் பள்ளிக்கூடம் இருக்கிறது? ஊரைத்தாண்டி ஒதுக்குப்புறமாய் இருக்கிற பள்ளி இதுவாகத்தான் இருக்கும். கவர்மெண்ட் வந்து பார்த்துவிட்டா பள்ளி ஆரம்பித்தது… இருந்திருந்து ஆறு வருஷம் கழித்து இந்தக் காட்டில்தானா வேலை கிடைக்க வேண்டும். ஊருக்கு பேரைப் பார்… பொட்டவெளி. பொருத்தமான பெயர்தான்! பள்ளிக்கூடம் தெரிந்தது. ஓடு வேய்ந்த பழைய ஒற்றைக் கட்டிடம். அருகில் கீற்றுக் குடிசை. சத்துணவுக்காக இருக்கும். புங்கை மர நிழலில் சேர் போட்டு புத்தக அட்டையால் விசிறிக் கொண்டிருந்தவர் கீழே பத்துப் பதினைந்து பிள்ளைகள் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருந்தனர்.

பூபாலனைக் கண்டதும் அட்டை விசிறியைப் போட்டுவிட்டு எழுந்தார்.

“”வாங்க சார்… நீங்க பூபாலன்தானே? நான் இந்த ஸ்கூலுக்கு இன்னொரு ஆசிரியர். கதிரேசன்னு பேரு. இந்த ஊர்தான்” என்றார்.

பூபாலன் கைகுலுக்கினான். வெறுப்புடன் கட்டிடத்தைப் பார்த்தான்.

“”உள்ளே உட்கார முடியாது சார்… மேலேயிருந்து சுணை பூச்சி கொட்டும். அதான் வெளியில வகுப்பு நடத்துறேன். தாசில்தார் ஆபிஸ்ல முறைப்படி ஜாயிண்ட் பண்ணிட்டீங்களா? போன வாரம் சொன்னாங்க… எப்படியோ ஒத்தை ஆளா குப்பை கொட்டிக்கிட்டு இருந்தேன். பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லை சார்.. என்ன ஊரு?”

மூச்சு விடாமல் பேசிய கதிரேசனையும் பூபாலனையும் பிள்ளைகள் வியப்பாய் பார்த்தனர்.

“”நான் திண்டிவனம் பக்கம்… என்ன சார் இது ஸ்கூல் ஒதுக்குப்புறமா இருக்கு… இது எத்தனையாவது வகுப்பு? மீதிப் பசங்க உள்ளே இருக்காங்களா?”

கதிரேசன் சிரித்தார்.

“”மொத்த பிள்ளைங்களே இவ்ளோதான். அஞ்சு வகுப்பும் கலந்திருக்கு. அட்டெண்டன்ஸ்லே எழுபது எண்பது பிள்ளைங்க பேர் இருக்கும். ஆனா எதுவும் ஸ்கூலுக்கு வராதுங்க.. எப்பவாச்சும் டி.ஓ. இன்ஸ்பெக்ஷனுக்கு கெஞ்சி கூத்தாடி கூப்பிட்டு வருவேன். அந்தளவுக்கு இங்கே வயல் வேலை கொட்டிக்கிடக்கு. அதுவுமில்லாம கிராமத்துக்குள்ளே இன்னொரு தனியார் ஸ்கூலும் இருக்கு. அதுலதான் கிராமத்துப் பிள்ளைங்க நிறையப் பேர் படிக்கிறாங்க. என்னமோ சார்.. ஈராசிரியர் பள்ளின்னு பேருதான். ரெண்டு வருஷமா கூட இருந்தவரும் வேற ஸ்கூலுக்குப் போயிட்டாரா.. தனியாத்தான் இருந்தேன். இங்கு யார் வந்தாலும் சீக்கிரம் டிரான்ஸ்பர் வாங்கிட்டுப் போயிடுவாங்க.. நீங்க எத்தனை மாசத்துல போவீங்களோ…”

கதிரேசன் எந்தவித பதிலையும் எதிர்பார்க்க மாட்டார் போலிருக்கிறது. பூபாலன் பிள்ளைகளைப் பார்த்தான். வறுமையோடு பிறந்து வறுமையோடே வளர்பவர்கள். கடமைக்குப் பள்ளி வருவது சத்துணவுக்குத்தான் என்று தெரிந்தது.

“”இங்கே வர அதிகாரிங்ககிட்டே சொல்ல மாட்டாங்களா” என்றான்.

“”ம்.. பஸ்ûஸ விட்டு இறங்கி அஞ்சு கிலோமீட்டர் நடக்க வேண்டிய ஊராச்சே… அப்படியே வந்தாலும் சீக்கிரம் ஏற்பாடு பண்றோம்னு சொல்லிட்டுப் போயிருவாங்க. தம்பி எங்க தங்கப் போறீங்க.. ஊருக்குள்ளே டீக்கடையில தங்கலாம். வீடு எதுவும் கிடைக்காது. என் வீடே ஸ்கூல் மாதிரிதான் இருக்கும்! எனக்கு ஆறு பசங்க… வேற எங்க தங்குவீங்க? வேணுமின்னா வழியில புளியந்தோப்பு காவக்கார கிழவன் ஆரோக்கியத்தைக் கேட்கலாம். கிழவன் அந்த குடிசையில தனியாத்தான் இருக்கான். டிரான்ஸ்பர் கிடைக்கிறவரை தங்கிக்கலாம்… பசங்களா ஸôரு புதுசா வந்திருக்காரு.. குட்மார்னிங் சொல்லுங்க…”

பிள்ளைகள் ஆர்வமும் வெட்கமுமாய் குட்மார்னிங் சொன்னார்கள். பூபாலன் பெருமூச்சுவிட்டான்.

 

வேறுவழியின்றி ஆரோக்கியம் தாத்தா குடிசையில்தான் பூபாலன் தங்கினான். இதுநாள்வரை அவனுக்குப் பழக்கப்படாத சூழலில் தவித்துக் கொண்டிருந்தான். குண்டு பல்பு வெளிச்சத்தில் பக்கம் பக்கமாய் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பங்கள் எழுதிக் குவித்தான். நண்பர்களிடம் செல்போன் மூலம் யார் யாரையோ அணுகி சீக்கிரம் மாறுதலுக்கு வழிவகுக்கச் சொன்னான். எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் தரத் தயாராய் இருந்தான்.

அன்றொரு நாள் வெம்மை குறையாத மாலைப் பொழுது. இரவானால் தான் குளிர் காற்று வீசும் போலிருந்தது. வெளியே கயிற்றுக் கட்டிலில் சாயந்திருந்த ஆரோக்கியம் தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்த பூபாலன், திடீரென்று கேட்டான்…

“”ஆமா… தாத்தா.. உங்களைப் பார்த்தா நம்ம பக்கத்து ஆள் மாதிரியே தெரியலியே நீங்க எந்த ஊரு..?”

ஆரோக்கியம் தாத்தா சிரித்தார்.

“”நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆஸ்திரேலியாவில்… பூர்வீகத்தைத் தேடி இந்தியா வந்து இங்கேயே செட்டிலாயிட்டேன்… நான் ஒரு ஆங்கிலோ இந்தியன் வம்சாவளியைச் சேர்ந்தவன். நாற்பது வயசுல வந்தேன்.. இனிமே சாகற வரை இங்கேதான்…”

பூபாலன் ஆச்சரியத்தில் திகைத்தான்.

“”எப்பிடி தாத்தா… வெளிநாட்டுல பிறந்து வளர்ந்து.. இந்த பொட்டல் காட்டில உங்களால வாழமுடியுது? டவுன்ல வளர்ந்த என்னால இந்தச் சூழல்ல ஒரு மாசம் கூட தாங்கமுடியாது போலிருக்கே… எப்பிடி?”

ஆரோக்கியம் தாத்தா புன்னகைத்தார்.

“”இதில ஆச்சரியப்பட என்ன இருக்கு? சூழ்நிலைக்கு தகுந்தாற்போல நம்மை மாத்திக்கணும். இல்லாட்டி நமக்குத் தகுந்தாற்போல சூழ்நிலையை மாத்திக்கணும்… அவ்வளவுதான்…”

பூபாலனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது. எத்தனை அழகாய் சொல்லிவிட்டார். யோசிக்க யோசிக்க தன்னைக் குறித்து வெட்கப்பட்டான். இரவு முழுக்க இதே சிந்தனையில் தூக்கமே வரவில்லை. மறுநாள் பொழுது விடிந்தபோது, பூபாலனுக்கு தான் செய்ய வேண்டியது என்னவென்று புரிந்தது.

“”நீங்க சொல்றது கேட்க நல்லாத்தான் இருக்கு தம்பி… என்னோட வயலுக்கு மண்ணடிக்கிறப்போ பள்ளிக்கூட பாதைக்கும் மண்ணடிக்க சொல்றீங்க… சரி.. ஸ்கூல சுத்தி வேலி கட்ட சொல்றீங்களே.. செலவுக்கு என்ன பண்றது.. வேணுமினா வேலிக்கு முள்ளு என் தோட்டத்திலேருந்து தரலாம்..” என்றார் கதிரேசன்.

“”அது போதும் சார்… ஆரோக்கியம் தாத்தா நம்ம பிள்ளைகளை வைச்சே அருமையா வேலி கட்டுவாரு..” உற்சாகமாய்ச் சொன்னான் பூபாலன். சொன்னது போலவே பள்ளிக்கூடப் பாதை மண்ணடித்து செம்மைப்படுத்தப்பட தாத்தா பிள்ளைகளை வைத்துக் கொண்டு பள்ளியைச் சுற்றி வேலி அமைத்தார். இப்போது பள்ளி என்பது ஒரு அமைப்பிற்குள் வந்தது. பூபாலன் ஊராட்சி மன்றத் தலைவர் உதவியுடனும் பள்ளிச் சீரமைப்பு நிதி உதவியுடனும் பள்ளிக்கூடத்தை அழகாகச் செப்பனிட்டான். வெள்ளையடித்து பளிச்சென்று ஆன கட்டிடத்தைச் சுற்றி ஏதோ வெறுமை தெரிந்தது. டவுனுக்குச் சென்று மரக்கன்றுகளும் பூச்செடிகளும், காய்கறிச் செடிகளும் நிறைய வாங்கி வந்த பூபாலன், ஒவ்வொரு பள்ளிச் சிறுவர்களுக்கும் ஒரு செடியை பிரித்துவிட்டான்.

“”டேய்.. ராமகிருஷ்ணா.. இனி இது உன் செடி. நீதான் பாதுகாக்கணும். ரமணி.. இது உன்னோடது. நீலா.. இது உனக்குச் சொந்தம். கவிதாவுடையது இந்தச் செடி… பார்க்கலாம் யாரு பத்திரமா வளர்க்கறாங்கன்னு…” பூபாலனின் இந்த அஸ்திரம் பிரமாதமாய் வேலை செய்தது.

ஒவ்வொரு பள்ளிக் குழந்தைகளுக்கிடையேயும் இந்தத் திட்டம் பரவியதால் பள்ளிக்கு வராமல் இருந்த குழந்தைகளும் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களின் நேரடி கண்காணிப்பில் கத்திரி, வெண்டை, கீரைகள் நன்றாக விளைந்தன. விளைந்தவற்றை சத்துணவில் உபயோகப்படுத்தச் சொன்னான் பூபாலன். ருசியான உணவும் பிள்ளைகளின் ஆர்வத்துக்கு ஊக்குவிப்பாக இருந்தது.

“ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு அடம் பிடிச்ச காலம் போயி, ஸ்கூலுக்கு போயே தீருவேன்னு அடம்பிடிக்கிறானுவ..’ என்று பெருமிதமாய் அலுத்துக் கொண்டார்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள்.

“”தம்பி.. பெரிய புரட்சியே பண்ணீட்டிங்க.. நானும் பலவருஷமா இங்கேயேதான் இருந்தேன். எனக்கு இப்படியெல்லாம் செய்யணும்னு கூட தோணல. இங்கே வர்றவங்களும் “எப்படா டிரான்ஸ்பர் கிடைக்கும்?’னு துடிச்சுக்கிட்டு எப்பிடியாவது இந்த ஊரை விட்டு கிளம்பிடுவாங்க… இந்தப் பள்ளிக்கூடம் இத்தனை மேன்மையா ஆகும்னு கனவில் கூட நினைச்சதில்லை. பெரிய சாதனை பண்ணீட்டிங்க தம்பி..” மனமாரப் பாராட்டினார் கதிரேசன். அவர் மட்டுமல்ல, ஊரே வியந்து பாராட்டி நெக்குருகியது. கல்வித் துறை அதிகாரிகள் பூபாலனை உயர்வுபடுத்தினார்கள்.

“”பொட்டவெளின்னு பேரு இனிமே பொருத்தமா இருக்காதே…” சிரித்தார் ஆரோக்கியம் தாத்தா.

“”பூங்காவெளி’ன்னு மாத்திடலாமா?” என்ற பூபாலன் பள்ளியையே உற்றுப் பார்த்தான். பின் பெருமூச்செறிந்து சொன்னான்.

“”நான் இந்த ஊருக்கு வந்தவுடனே எந்த வழியில டிரான்ஸ்பர் வாங்கலாம்? எப்படா இங்கிருந்து கிளம்பலாம்னுதான் இருந்தேன். ஆனா ஆரோக்கியம் தாத்தா சொன்ன வார்த்தை என்னை உலுக்கிடுச்சு… என் தவறை உணர்ந்தேன். என்னால முடிஞ்சதை உங்க எல்லாருடைய ஒத்துழைப்போட செய்தேன்…”

 

அன்றைய தபாலில் பூபாலனுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. அனைவரும் அதிர்ந்தார்கள். முதலில் தேற்றிக் கொண்டவர் கதிரேசன்தான்.

“”சரி விடுங்க.. கிராமத்திலேயே எவ்வளவு நாளுதான் தம்பி கஷ்டப்படும்? அது ஆசைப்பட்டாற்போலவே டவுன் பக்கம் டிரான்ஸ்பர் போகட்டும்…”

“”நீங்க நினைக்கற மாதிரி டவுனுக்கு இல்லே சார்… தமிழகத்தின் தென்கோடியில் ஒரு குக்கிராமம்… வலசக்காடுன்னு பேரு. யாருமே போக விரும்பாத இடம். நான் அந்த ஊருக்கு போவதற்கு விரும்பிக் கேட்டேன். வலசக்காட்டை முடிஞ்ச அளவு செம்மைப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு..” என்றான் பூபாலன்.

ஊர் மக்கள் அனைவரும் பேச நா எழாமல் திகைத்து நின்றார்கள்.

“”எப்பிடி தாத்தா… வெளிநாட்டுல பிறந்து வளர்ந்து.. இந்த பொட்டல் காட்டில உங்களால வாழமுடியுது? டவுன்ல வளர்ந்த என்னால இந்தச் சூழல்ல ஒரு மாசம் கூட தாங்கமுடியாது போலிருக்கே… எப்பிடி?”

ஆரோக்கியம் தாத்தா புன்னகைத்தார்.

“”இதில ஆச்சரியப்பட என்ன இருக்கு? சூழ்நிலைக்கு தகுந்தாற்போல நம்மை மாத்திக்கணும். இல்லாட்டி நமக்குத் தகுந்தாற்போல சூழ்நிலையை மாத்திக்கணும்… அவ்வளவுதான்…”

பூபாலனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது. எத்தனை அழகாய் சொல்லிவிட்டார். யோசிக்க யோசிக்க தன்னைக் குறித்து வெட்கப்பட்டான். இரவு முழுக்க இதே சிந்தனையில் தூக்கமே வரவில்லை. மறுநாள் பொழுது விடிந்தபோது, பூபாலனுக்கு தான் செய்ய வேண்டியது என்னவென்று புரிந்தது.

“”நீங்க சொல்றது கேட்க நல்லாத்தான் இருக்கு தம்பி… என்னோட வயலுக்கு மண்ணடிக்கிறப்போ பள்ளிக்கூட பாதைக்கும் மண்ணடிக்க சொல்றீங்க… சரி.. ஸ்கூல சுத்தி வேலி கட்ட சொல்றீங்களே.. செலவுக்கு என்ன பண்றது.. வேணுமினா வேலிக்கு முள்ளு என் தோட்டத்திலேருந்து தரலாம்..” என்றார் கதிரேசன்.

“”அது போதும் சார்… ஆரோக்கியம் தாத்தா நம்ம பிள்ளைகளை வைச்சே அருமையா வேலி கட்டுவாரு..” உற்சாகமாய்ச் சொன்னான் பூபாலன். சொன்னது போலவே பள்ளிக்கூடப் பாதை மண்ணடித்து செம்மைப்படுத்தப்பட தாத்தா பிள்ளைகளை வைத்துக் கொண்டு பள்ளியைச் சுற்றி வேலி அமைத்தார். இப்போது பள்ளி என்பது ஒரு அமைப்பிற்குள் வந்தது. பூபாலன் ஊராட்சி மன்றத் தலைவர் உதவியுடனும் பள்ளிச் சீரமைப்பு நிதி உதவியுடனும் பள்ளிக்கூடத்தை அழகாகச் செப்பனிட்டான். வெள்ளையடித்து பளிச்சென்று ஆன கட்டிடத்தைச் சுற்றி ஏதோ வெறுமை தெரிந்தது. டவுனுக்குச் சென்று மரக்கன்றுகளும் பூச்செடிகளும், காய்கறிச் செடிகளும் நிறைய வாங்கி வந்த பூபாலன், ஒவ்வொரு பள்ளிச் சிறுவர்களுக்கும் ஒரு செடியை பிரித்துவிட்டான்.

“”டேய்.. ராமகிருஷ்ணா.. இனி இது உன் செடி. நீதான் பாதுகாக்கணும். ரமணி.. இது உன்னோடது. நீலா.. இது உனக்குச் சொந்தம். கவிதாவுடையது இந்தச் செடி… பார்க்கலாம் யாரு பத்திரமா வளர்க்கறாங்கன்னு…” பூபாலனின் இந்த அஸ்திரம் பிரமாதமாய் வேலை செய்தது.

ஒவ்வொரு பள்ளிக் குழந்தைகளுக்கிடையேயும் இந்தத் திட்டம் பரவியதால் பள்ளிக்கு வராமல் இருந்த குழந்தைகளும் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களின் நேரடி கண்காணிப்பில் கத்திரி, வெண்டை, கீரைகள் நன்றாக விளைந்தன. விளைந்தவற்றை சத்துணவில் உபயோகப்படுத்தச் சொன்னான் பூபாலன். ருசியான உணவும் பிள்ளைகளின் ஆர்வத்துக்கு ஊக்குவிப்பாக இருந்தது.

“ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு அடம் பிடிச்ச காலம் போயி, ஸ்கூலுக்கு போயே தீருவேன்னு அடம்பிடிக்கிறானுவ..’ என்று பெருமிதமாய் அலுத்துக் கொண்டார்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள்.

“”தம்பி.. பெரிய புரட்சியே பண்ணீட்டிங்க.. நானும் பலவருஷமா இங்கேயேதான் இருந்தேன். எனக்கு இப்படியெல்லாம் செய்யணும்னு கூட தோணல. இங்கே வர்றவங்களும் “எப்படா டிரான்ஸ்பர் கிடைக்கும்?’னு துடிச்சுக்கிட்டு எப்பிடியாவது இந்த ஊரை விட்டு கிளம்பிடுவாங்க… இந்தப் பள்ளிக்கூடம் இத்தனை மேன்மையா ஆகும்னு கனவில் கூட நினைச்சதில்லை. பெரிய சாதனை பண்ணீட்டிங்க தம்பி..” மனமாரப் பாராட்டினார் கதிரேசன். அவர் மட்டுமல்ல, ஊரே வியந்து பாராட்டி நெக்குருகியது. கல்வித் துறை அதிகாரிகள் பூபாலனை உயர்வுபடுத்தினார்கள்.

“”பொட்டவெளின்னு பேரு இனிமே பொருத்தமா இருக்காதே…” சிரித்தார் ஆரோக்கியம் தாத்தா.

“”பூங்காவெளி’ன்னு மாத்திடலாமா?” என்ற பூபாலன் பள்ளியையே உற்றுப் பார்த்தான். பின் பெருமூச்செறிந்து சொன்னான்.

“”நான் இந்த ஊருக்கு வந்தவுடனே எந்த வழியில டிரான்ஸ்பர் வாங்கலாம்? எப்படா இங்கிருந்து கிளம்பலாம்னுதான் இருந்தேன். ஆனா ஆரோக்கியம் தாத்தா சொன்ன வார்த்தை என்னை உலுக்கிடுச்சு… என் தவறை உணர்ந்தேன். என்னால முடிஞ்சதை உங்க எல்லாருடைய ஒத்துழைப்போட செய்தேன்…”

 

அன்றைய தபாலில் பூபாலனுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. அனைவரும் அதிர்ந்தார்கள். முதலில் தேற்றிக் கொண்டவர் கதிரேசன்தான்.

“”சரி விடுங்க.. கிராமத்திலேயே எவ்வளவு நாளுதான் தம்பி கஷ்டப்படும்? அது ஆசைப்பட்டாற்போலவே டவுன் பக்கம் டிரான்ஸ்பர் போகட்டும்…”

“”நீங்க நினைக்கற மாதிரி டவுனுக்கு இல்லே சார்… தமிழகத்தின் தென்கோடியில் ஒரு குக்கிராமம்… வலசக்காடுன்னு பேரு. யாருமே போக விரும்பாத இடம். நான் அந்த ஊருக்கு போவதற்கு விரும்பிக் கேட்டேன். வலசக்காட்டை முடிஞ்ச அளவு செம்மைப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு..” என்றான் பூபாலன்.

ஊர் மக்கள் அனைவரும் பேச நா எழாமல் திகைத்து நின்றார்கள்.

சொன்னான் பூபாலன். ருசியான உணவும் பிள்ளைகளின் ஆர்வத்துக்கு ஊக்குவிப்பாக இருந்தது.

“ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு அடம் பிடிச்ச காலம் போயி, ஸ்கூலுக்கு போயே தீருவேன்னு அடம்பிடிக்கிறானுவ..’ என்று பெருமிதமாய் அலுத்துக் கொண்டார்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள்.

“”தம்பி.. பெரிய புரட்சியே பண்ணீட்டிங்க.. நானும் பலவருஷமா இங்கேயேதான் இருந்தேன். எனக்கு இப்படியெல்லாம் செய்யணும்னு கூட தோணல. இங்கே வர்றவங்களும் “எப்படா டிரான்ஸ்பர் கிடைக்கும்?’னு துடிச்சுக்கிட்டு எப்பிடியாவது இந்த ஊரை விட்டு கிளம்பிடுவாங்க… இந்தப் பள்ளிக்கூடம் இத்தனை மேன்மையா ஆகும்னு கனவில் கூட நினைச்சதில்லை. பெரிய சாதனை பண்ணீட்டிங்க தம்பி..” மனமாரப் பாராட்டினார் கதிரேசன். அவர் மட்டுமல்ல, ஊரே வியந்து பாராட்டி நெக்குருகியது. கல்வித் துறை அதிகாரிகள் பூபாலனை உயர்வுபடுத்தினார்கள்.

“”பொட்டவெளின்னு பேரு இனிமே பொருத்தமா இருக்காதே…” சிரித்தார் ஆரோக்கியம் தாத்தா.

“”பூங்காவெளி’ன்னு மாத்திடலாமா?” என்ற பூபாலன் பள்ளியையே உற்றுப் பார்த்தான். பின் பெருமூச்செறிந்து சொன்னான்.

“”நான் இந்த ஊருக்கு வந்தவுடனே எந்த வழியில டிரான்ஸ்பர் வாங்கலாம்? எப்படா இங்கிருந்து கிளம்பலாம்னுதான் இருந்தேன். ஆனா ஆரோக்கியம் தாத்தா சொன்ன வார்த்தை என்னை உலுக்கிடுச்சு… என் தவறை உணர்ந்தேன். என்னால முடிஞ்சதை உங்க எல்லாருடைய ஒத்துழைப்போட செய்தேன்…”

அன்றைய தபாலில் பூபாலனுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. அனைவரும் அதிர்ந்தார்கள். முதலில் தேற்றிக் கொண்டவர் கதிரேசன்தான்.

“”சரி விடுங்க.. கிராமத்திலேயே எவ்வளவு நாளுதான் தம்பி கஷ்டப்படும்? அது ஆசைப்பட்டாற்போலவே டவுன் பக்கம் டிரான்ஸ்பர் போகட்டும்…”

“”நீங்க நினைக்கற மாதிரி டவுனுக்கு இல்லே சார்… தமிழகத்தின் தென்கோடியில் ஒரு குக்கிராமம்… வலசக்காடுன்னு பேரு. யாருமே போக விரும்பாத இடம். நான் அந்த ஊருக்கு போவதற்கு விரும்பிக் கேட்டேன். வலசக்காட்டை முடிஞ்ச அளவு செம்மைப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு..” என்றான் பூபாலன்.

ஊர் மக்கள் அனைவரும் பேச நா எழாமல் திகைத்து நின்றார்கள்.

- எஸ். ஜூலியட் மரிய லில்லி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:36

விட்டுவிட்டு வா


சின்னச் சின்ன கதைகள் - Page 3 Vaa-185x300பிரிவது கஷ்டமான காரியம். சுகங்களிலிருந்து பிரிவது இன்னும் கஷ்டம். சாயந்தரம் சாப்பிட்ட டீ மாதிரி உலகத்தில் ஒரு டீயை வேலைக்கார பெண் மீனாட்சியைத் தவிர யாரால் போட முடியும்? கள்ளிச் சொட்டுப் பாலில் -ஒரு லேசான டீ டிகாக்ஷனும் இனிப்பும் சூடும். புது வெள்ளத்து நுரை ததும்பி நிற்க, டீயின் மணம் நாக்கில் நீர் ஊற வைக்க -சூட்டோடு சிறிது சிறிதாக விழுங்கும் சுகத்தைத் துறக்க முடியுமா? ஏன் துறக்க வேண்டும்? ஃபிரிட்ஜைத் திறந்து நைஸாக ஒரு ரசகுல்லாவை லபக் என்று போட்டு விழுங்குவது அலாதி ஆனந்தம். முன் அறையில் புத்தக அலமாரி ஓரத்தில் அவித்த பனங்கிழங்கைப் பதுக்கியிருக்கிறேனே -அதை முகவர்வது, உரிப்பது, வகிர்வது உள் குருத்தை ருசிப்பது, கிழங்கை நாருடன் மெல்லும்போது தொண்டையில் இறங்கும் ரசானந்தத்தை இழப்பதா?
தீனிகள் பட்டியல் கிடக்கட்டும். மடிப்புக் கலையாத நியூஸ் பேப்பர்களை அடுக்கி வைத்துக்கொண்டு, யாரும் பங்குக்கு வராமல், தொந்தரவு தராத இடமான பின்பக்க பால்கனியில் உட்கார்ந்து, நான் காணப் பிறந்து வளர்ந்து சம்பாதிக்கும் பிள்ளைகள்போல் நான் செடி நட்டு வளர்த்த மாமரத்துக் கிளைகளில் தொங்கும் திரண்ட கனிகளை அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டு நியூஸ் படிப்பதும், தமிழ் நியூஸை, இங்கிலிஷ் நியூஸுடன் ஒப்பிட்டு ரசிப்பதன் இன்பத்தை எவ்வாறு பிரிவது?
டாணென்று ஆறு மணிக்கு வாக்கிங் கோஷ்டியுடன் அரட்டையும் அவுட்டுச் சிரிப்பாக ஒரு மணி நடந்து விட்டுப் பிரிவது, மருமகள் ஸ்பெஷலாகத் தானே சிரத்தையுடன் அயர்ன் செய்து வைத்திருக்கும் புடவை ரவிக்கை, அணியும் போது ஏற்படும் மகிழ்ச்சி -இத்தனை சுத்தமாக.. அதில் வாசனை வேறு -எல்லாம் அறிந்த தங்கமான மருமகள் -பார்த்துப் பார்த்து அவள் பரிவுடன் செய்யும் சேவைகள், அப்புறம் பூஜை -அடஅட! மீனாட்சியின் கை பட்டு சுவாமி அலமாரி சொர்க்கம்போல் ஜொலித்துக் கொண்டிருக்கும் -அவளே அனைத்து அலங்காரமும் முடித்திருப்பாள். நான் வெறுமே பூவை அள்ளிப் போட வேண்டியதுதான். கமகமவென்று ஊதுவத்திகளின் நறுமணம், தீபச் சுடர்களில் நெய் ஏற்படுத்தும் தெளிவு, கோவில் பிரதோஷ தரிசனங்கள், சாண்டிங் பாக்ஸில் ஒலிக்கும் எஸ்.பி.பி.யின் பக்திக் குரல், விட்டுவிட்டுப் போகமுடியுமா? எதைத்தான் என்னால் பிரிய முடியும்? ஆனால் பிரியத்தான் வேண்டும். வலியில்லைதான். அவஸ்தை இல்லைதான். ஆனால் அதுவேதான் அவஸ்தை. எத்தனை காலம் இப்படி இருந்துவிட முடியும்? தொண்ணூற்றொன்று. இப்போதும் திடமாக இருக்கிறதில் மகிழ்ச்சிதான். ஆனால் அதன் ஊடே சரிக்குச் சரி துக்கமும்.
எவ்வளவு நாள் இருந்துவிட முடியும்? பேப்பரைப் பிரித்தால் ஆபிச்சுவரியில் மலரச் சிரித்துக் கொண்டு பல பேர் கடந்துவிட்டது தெரிகிறது. நானும் பிரிய வேண்டியவளே. ஆனால் மனசாகவில்லையே இனிமேல் எந்தச் சுகமும் வேண்டாமென்று வெறுக்கப் பழகிக் கொள்ளலாமா?
ஏன் அப்படியெல்லாம் சிரமப்படுகிறே? அன்பும், வசதியும் இருக்கும்போது இறைவன் பெயரைச் சொல்லிக் கொண்டு அனுபவி. அவனுக்கு உன்னை எப்போது வரவழைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். சந்தோஷமாக இரு என்று செல்லமாகக் கண்டிக்கிற மனத்தை, “இருக்க முடியவில்லையே’ என்று செல்லமாகத் திருப்பித் திட்டும் சுகங்களையெல்லாம் விட்டு எப்படிப் பிரிவேன்.
இந்த பங்களாவின் அழகை இந்தத் தெருவே புகழும். தோட்டமும் பூத்துக் குலுங்கும் செடி கொடிகளும் போவோர் வருவோர் நின்று பார்த்து ரசித்துப் போகிறதை ஊஞ்சலில் லேசாக ஆடிக்கொண்டே ரசிக்கிறேன். ரோஜாக்களில் நாற்பத்தாறு ரகம் -அத்தனை செடியிலும் ஆரோக்யமான ரோஜாக்கள் -தோட்டக்கார முனுசாமிக்கு ரோஜா அலவன்ஸ் ரகசியமாக மாசம் இருநூறு ரூபா தருகிறேன். பசங்களுக்குத் தெரிந்தால் தடுத்து விடுவார்கள். எனக்கும் முனுவுக்கும் ரகசிய உடன்பாடு -இப்படிப் பல ரகசிய உடன்பாடுகள் உண்டு.
டிரைவருக்கும் மூவாயிரம், வாட்ச்மேனுக்கு ஆயிரம் இந்த மாதிரி திரும்பி வராக்கடனாக ஒளித்து ஒளித்து தருவதிலுள்ள சந்தோஷம் -”ம்மா’ என்று பங்களாவின் பின்பக்கத்திலிருந்து கற்பகம் அழைப்பு விடுகையில், கைக்கு நார் கிளவுஸ் மாட்டிக் கொண்டு அதன் முதுகை நன்றாகத் தேய்த்து விடுவேன். அது சுகப்படுவதைக் கண்டு நான் சுகப்படும் மிருதுவான இன்பத்தை நான் ஏன் இழக்க வேண்டும்.
அலமாரி புத்தகங்களை, “”பாட்டி நான் அடுக்கி வைக்கிறேன்” என்று பரிவுடன் பொறுப்பேற்கும் பக்கத்து வீட்டு கல்லூரிப் பையனின் சேவை மனதுக்கு எத்தனை இதம்.
இனிமேல் ஸெலக்டிவாகத்தான் படிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் அலமாரியின் டாப்பில். விவேகானந்தர், பரமானந்தா, சின்மயானந்தா, சித்பவானந்தா, தயானந்தா இந்த ஆனந்தாக்களை எப்படிப் பிரிவேன். மியூசிக் ரூமிலிருந்து அந்தக் கால எம்.எஸ்.மீராவையும் வசந்த கோகிலத்தையும் பட்டம்மாவின் தாயின் மணிக் கொடியையும் வாரத்தில் ஒரு நாளாவது கேட்டுவிடுவேனே. காதுகள் அந்தப் பாக்கியத்தை இழக்க அழுமே.
ராமகிருஷ்ண மடத்தின் சாயந்தர பூஜை, மலர் அலங்காரம், விதவிதமான பூக்கள் ஆசிரமத்துச் செடிகளில் அமர்ந்திருக்கும் அழகு, காவியுடையில் இருந்தாலும் வருகிற பக்தர்களுக்காகத் தங்களை சாதாரணமானவர்களாக ஆக்கிக்கொண்டு அவர்களுடன் சிரித்துப் பழகும் கமலானந்தா, விமூர்தானந்தா போன்ற மகராஜ்களை வணங்கி எழுவதிலுள்ள புல்லரிப்புக்குத் திருப்தி உண்டா?
இவற்றையெல்லாம் எப்படி, எப்படிப் பிரிவேன்?
சொட! சொட! லொட லொட! தப தப! பெரிய பிளாஸ்டிக் கூடையிலிருந்து விளையாட்டுச் சாமான்களை சின்ன மருமகள் நடுக் கூடத்தில் கொட்டுகிறாள். குழந்தை மேல் ஏதோ கோபம். “”எல்லாத்தையும் கொண்டு வந்து கொட்டியாச்சு. உன் இஷ்டத்துக்கு துவம்சம் பண்ணிக்கோ.”
பொம்மைக் கூடையைத் தொப்பென்று போட்டுவிட்டு நறுக்கென்று குழந்தையை உட்கார வைத்துவிட்டுப் போய்விட்டாள்.
சின்னக் குட்டி அந்த மிரட்டலுக்கெல்லாம் ஆடுகிற குட்டி இல்லை.
பொம்மைகளை ஆராய்ந்தது.
“”கம்ப்யூத்தர் காணமே. என் கம்ப்யூத்தர்.”
அதனுடைய விளையாட்டுக் கம்ப்யூட்டர் பொம்மை விட்டுப் போய்விட்டது போலிருக்கிறது.
“”இந்தா! சரியான பிசாசுடி. இத்தனை நூறுலே அது ஒண்ணு விட்டுப் போச்சாக்கும்.”
தாயார்க்காரி எரிச்சலுடன் அந்தப் பொம்மையையும் கொண்டு வந்து தந்து சென்றாள்.
சின்னக்குட்டி விளையாடத் தொடங்கியது. அது விளையாடறதைப் பார்க்க ரொம்ப நன்றாயிருக்கும்.
பொம்மனாட்டிக் குட்டியாச்சே, நிறைய பொம்மனாட்டி டால்ஸ்.
ஒவ்வொண்ணுத்துக்கும் அவளோடு அவள் அம்மாவும் சேர்ந்துகொண்டு வீட்டிலுள்ள கை மிஷினில் விதவிதமாக அந்தந்த அளவுக்குத் தைத்து டிரெஸ் பண்ணயிருப்பார்கள்.
சின்னக் குட்டியின் டிராயர் பெரிய ஆபரணப் பெட்டிதான். காதில் தொங்கவிட கழுத்தில் தொங்கவிட, தலையலங்காரம் -விதவிதமான பொருள்கள் -ஷூ வகைகள் -ஸாக்ஸ் -ஸகார்ஃப்.
எல்லாப் பொம்மைகளும் சில சமயம் சின்னக் குட்டியின் தோழிகளாகவும், சில சமயம் அவள் குழந்தைகளாகவும், சில சமயம் அவளிடம் டான்ஸ் கற்றுக்கொள்ளும் மாணவிகளாகவும் -சில பொம்மைகளுக்குப் பாட்டி அந்தஸ்தும் தரப்படும்.
பாட்டின்னா கடைசி வரை அந்தப் பொம்மை பாட்டியே இல்லை. கொஞ்ச நேரத்தில் பாட்டிக்கு சமையல்கார அக்கி மாமியாகும் சான்ஸும் தரப்படும். “”அக்கி மாமி, இன்னிக்கு வண்டக்கா வேணாம்.
அது உவ்வே. பொட்டடோவே பண்ணிருங்கோ -பெரிசு பெரிசாத் துண்டு இருக்குமே -அந்த மாதிரி-”
இன்றைக்கு பர்த் டே பார்ட்டி போலிருக்கிறது.
கச்சேரிக்கு அரேஞ்ச் பண்ணிக் கொண்டிருந்தாள் சின்னக்குட்டி.
ஜ்வ்லந்தியும், மல்லிகாவும் ரிஸப்ஷனிஸ்ட்டுகள். “”நீங்க முன்னாலே நிற்கணும். ஒக்காந்துக்கப்படாது. நில்லு.. நன்னா ஸ்டிரெய்ட்டா நிற்கணும். இப்படி…இப்படி கையை ஆட்டு” பொம்மைகளுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் தருகிறது குழந்தை.
“”வெல்கம் சொல்லணும்.”
அவசரமா மாமி வருகிறாள்.
“”என்ன டிஃபன்? கல்யாணமா?”
“”ஆமாம். சீமந்தம்.”
“”யாருக்கு சீமந்தம்?”
“”யாருக்கானா என்ன? சீமந்தம்…”
“”தாலி கட்டியாச்சா?”
“”இனிமேல்தான். நீங்க சாப்பிட்டுவிட்டுத்தான் போணம்!”
இப்படிச் சின்னக் குட்டிதானே பலராகப் பேசி விளையாடிக் கொண்டிருப்பாள்.
சுற்றிலும் சாமான்களைப் பரப்பிக்கொண்டு வெகு சுவாரசியமான டயலாக்குகளுடன்தானே விளையாடிக் கொண்டிருந்தாள்.
நான் பார்த்துக் கொண்டிருந்தேன். கல்யாணத்துக்கு மளிகை சாமான் வந்துட்டுது போலிருக்கு.
“”ஏம்ப்பா… சாக்லேட் வரலையா? போ. போய்க்கொண்டா. பொண்ணு மாப்பிள்ளைக்கு சாக்லேட் தரணும். இந்தா. ஸ்கூட்டர் எடுத்துண்டு சீக்கிரம் போ. இரு. இரு. ஸ்கூட்டர் வேணாம். இந்தக் காரை எடுத்துண்டு போ. நானோ கார் புதுசா ஒன் லாக் ருபீஸுக்கு வாங்கினது. கார் ஓட்டத் தெரியுமோன்னோ?”
விளையாட்டு சுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்தது.
“”ஏய்! சின்னக்குட்டி!” உள்ளிருந்து குழந்தையின் அம்மாக்காரி கூப்பிடுகிறாள்.
“”தோ!” அடுத்த நிமிஷம் குழந்தை அத்தனை பொம்மைகளையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு எழுந்து உள்ளே போயாயிற்று.
இவ்வளவு நேரம் நடத்திய கல்யாணம், ரிசப்ஷன் கார், டிரைவர், ஃபிரிண்டர்ஸ் எல்லாத்தையும் அப்படியே விட்டுவிட்டு -அது பாட்டுக்குச் சட்டென்று கிளம்பிவிட்டது.
“”வர்ரேம்மா…”
“”வான்னா சட்டுனு வரணும். கூப்பிட்டவுடனே வரணும்… ஓடி வரணும்.”
“”ஊம்” சலித்துக் கொண்டே சின்னக்குட்டி உள்ளே போகிறாள். இடுப்பில் மதுமிதா. இன்னொரு கையில் பச்சைக் குழந்தை புதுப் பாப்பா. பேர் இன்னும் வைக்கவில்லை. தொங்கிக் கொண்டிருக்கிறது.
அம்மாக்காரியின் குரல்.
“”எல்லாத்தையும் போட்டுட்டு வாடி! தூக்கிண்டு தூக்கிண்டு.”
எனக்கும் புரிந்தது. புறப்படுன்னு குரல் வந்ததும் நிமிஷத்திலே எல்லாத்தையும் போட்டுட்டு அப்படியே புறப்பட்டுடணும்.
எதையாவது தூக்கிண்டு போனாக்கூட, “அதையெல்லாம் விட்டுட்டு வா!’ன்னுதான் அம்பாளும் சொல்லுவாளோ!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:41

அதுவரை வாழவிடு..!
----
   
இன்னும் இரண்டு நாள்தான் உயிரோடு இருப்பேனாம். டாக்டர் கூறியது அரை மயக்க நிலையிலும் என் காதுகளுக்குக் கேட்கவே செய்தது.

இன்னும் இரண்டே நாட்கள்..


இதில் எனக்கொன்றும் அதிர்ச்சி இல்லை. என்னைப் போன்ற மோசமான பொறுக்கி, திருட்டுப் பயல்களுக்கு, போதைப் பொருள்களிலேயே மூழ்கிக் கிடப்பவர்களுக்கு இதுதான் இறுதி முடிவு. எனக்கு வயசு 34 தான். இதற்குள் எத்தனை ஆட்டம் ஆடிவிட்டேன். எத்தனை பேர் மனதை சுக்கு நூறாக்கியிருக்கிறேன்.

இந்த ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்து ஒரு வாரம் ஆச்சு. நாளுக்குநாள் நிலைமை படுமோசமாகத்தான் போச்சு. போதைப் பொருள்களும் குடி பழக்கமும் எனது குடல், ஈரல் பாகங்களைச் சீரழித்துவிட்டன. ஒன்றுமே செய்ய முடியாது என்று டாக்டர்கள் பேசிக் கொண்டனர்.

“”நர்ஸ்! இந்த பேஷண்ட்டுக்கு விசிட்டர்ஸ் வந்தா நிலைமையைச் சொல்லிடுங்க. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகட்டும். கடைசி நிமிஷங்களையாவது சொந்தக்காரங்களோட கழிக்கட்டும்..”

“”இல்ல டாக்டர்.. இவருக்கு விசிட்டர்ஸ் யாரும் வர்றதேயில்லை…”

ஆமாம்.. நான் கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் நினைவின்றி மிகவும் சீரியஸாக மயங்கிக் கிடந்தபோது, அக்கம் பக்கத்தில் இருந்த நான்கைந்து பேர் என்னை ஆட்டோவில் கிடத்தி இந்த ஆஸ்பத்திரியிலே சேர்த்துட்டுப் போனாங்க. அதற்குப் பிறகு நான் கண்விழித்ததே இன்னைக்குக் காலையிலேதான். எனக்குன்னு யார் இருக்கா என்னைப் பார்க்க வர்றதுக்கு. நான் எல்லோரையும் விரோதித்துக் கொண்டவனாயிற்றே..! நினைக்க நினைக்க மனம் கனத்தது.

ஆஸ்பத்திரி ஜன்னல் வழியா பார்க்கும்போது ராயப்பேட்டை பிரிட்ஜ் மேலே வாகனங்கள் சர் சர்ரென வேகமாகப் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. என்னோட நினைவுகளும் சினிமா ஸ்லைடுகள் போல் சரேலென தோன்றி தோன்றி மறையத் தொடங்கின.

********

அப்போது எனக்கு 6 வயசு இருக்கும். புதுப்பேட்டை கூவம் ஆற்றோர குடிசைப் பகுதியில்தான் எங்கள் குடிசையும் இருந்தது. அம்மா சித்ரா தியேட்டர் பக்கத்துல இருக்கற முஸ்லிம் பாய் வீட்டுல வீட்டு வேலை செய்து வந்தாள். நைனாவுக்கு “சைக்கிள் ரிக்ஷா’ சவாரி.

பொழுது விடிஞ்சா நைனா என்னைக் கூட்டிக்கிட்டு காசினோ தியேட்டர் பக்கத்தில் உள்ள டீக்கடையில் பன்னும் டீயும் வாங்கித் தருவார்.

ஒரு நாள் அம்மா என்னை “இஸ்கூல்’ல சேர்க்கணும்னு நைனா கிட்ட சொல்லிக்கிட்டிருந்தா. நைனா அதுக்கு ஒத்துக்கல. “”அடி போடி..நானே ரிக்ஷா ஓட்டறேன். அவன் இஸ்கூல் போய் படிச்சிட்டு பிளேனா ஓட்டப் போறான்? வர்ர வருமானம் குடிக்கும் குடித்தனத்துக்குமே பத்த மாட்டேன்து.. இதுல இவன எங்க படிக்க வைக்கறது? சிந்தாதிரிபேட்டையில டிங்கர் ஷாப்பில் விட்டு வைச்சா பையன் வேலை கத்துக்குவான். 15 வயசுக்குள்ள சம்பாதிக்கவும் ஆரம்பிச்சுடுவான்” என்றார்.

“”போய்யா கஸ்மாலம்… உனக்கு நல்ல புத்தி இருந்தா இப்படி பேசுவியா..?” என்று அம்மா சத்தம் போட்டாள். பின்னர் இருவருக்கும் வாய்ச் சண்டை முற்றியது. நைனா, அம்மா மீது கை வைத்தார்.

அதன் பிறகு அவர்களின் சண்டை நாளுக்குநாள் அதிகமானது. முன்பைவிட நைனா அதிகமாகக் குடித்துவிட்டு வந்தார். சில நாட்களாக வீட்டுக்கு வருவதையே குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார்.

அம்மா ஒரு நாள் திடீரென என்னை அழைத்துக்கொண்டு கையில் 2 துணிப் பைகளுடன் கால்நடையாகவே ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு பக்கம் வந்தாள். அங்கேயும் கூவம் ஆற்றோரம் ஒரு குடிசைக்குள் நுழைந்தாள்.

“”இனி இதுதான் நம்ப வீடு” என்றாள்.
 “”ஓ! புது வீடாம்மா?”" என்றேன் உற்சாகமாக.
 “ஆமாம்’ என்று தலையசைத்தாள் அம்மா.

சற்று நேரத்தில் சிவப்பாக ஒரு ஆள் வந்தான். கரை வேட்டி கட்டி இருந்தான்.

“”இனிமே இவர் தான்டா உன் நைனா,” என்றாள் அம்மா.
 “”ஓ.. புது வீடு.. புது நைனாவா அம்மா?”
 “”ஆமாம்” என்றாள் என்னை நிமிர்ந்து பாக்காமலே.

சில நாட்களில் புது நைனா ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்த்துவிட்டார். எனக்கு பள்ளிக்கூடமும் பிடிக்கவில்லை, புது நைனாவும் பிடிக்கவில்லை.

பழைய நைனாவை என்னால் மறக்கவும் முடியவில்லை. அவராவது எனக்கு டீயும் பன்னும், சமயத்தில் சம்சாவும் வாங்கித் தருவார். இவர் அப்படி அல்ல.

அம்மாவிடம் நச்சரிக்க ஆரம்பித்தேன்.. “”நைனா எப்பம்மா வருவார்?” என்று. “”டேய் நைனா நைனான்னு நை.. நைன்னாதே… அவர் ஒண்ணும் உன்னோட நைனா இல்ல..”

“”என்னம்மா சொல்றே?”

“”உன் நைனா யாருன்னு எனக்கே தெரியாது..”–என்று மேலும் ஒரு குண்டை போட்டாள்.

(ஒரு குழந்தைக்குத் தாய் சொல்லித்தான் அதனோட தந்தையே யாருன்னு தெரியும்னு சொல்லுவாங்க. ஆனா என் தாயோ என் அப்பன் யாருன்னே தெரியலைன்னு சொல்றா.. இது எவ்வளவு கேவலம்?) மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

இனிமேல் நான்கூட உன் அம்மா இல்லன்னு அவ சொன்னாலும் சொல்லிடுவாளோன்னு பயந்து போனேன்.

மறுநாள் பள்ளிக்கூடம் புறப்படுவது போல் புறப்பட்டு கால்போன போக்கில் கிழக்குப் பக்கமாக நேரே நடந்தேன். எழும்பூர் ரயில்நிலையம் வந்தது. நின்றிருந்த ஒரு ரயிலில் உள்ளே ஏறினேன். நடந்துவந்த களைப்பில் ஒரு சீட்டில் படுத்து உறங்கினேன்.

விழுப்புரம் அருகே டிக்கெட் பரிசோதகர் வந்து என்னை விசாரித்து இறக்கிவிட்டார். என்னை போலீஸில் ஒப்படைக்க இருந்தார். நான் கூட்டத்தில் நைஸôக நழுவி வெளியே வந்துவிட்டேன். ஒரு டீக்கடை வாசலில் யாராவது டீயும் பன்னும் வாங்கித் தருவார்களா என ஏங்கினேன். கடைசியில் என் நிலையை உணர்ந்து டீக்கடைக்காரரே என்னைக் கூப்பிட்டு தன் கடையில் வேலைக்கு வைத்துக்கொண்டார்.

அதன்பிறகு நான் பல டீக்கடைகளில் வேலை பார்த்தேன். எந்த வேலையிலும் ஓரிரு மாதங்களுக்கு மேல் என்னால் நிலைக்க முடியவில்லை. யாராவது என்னை அதட்டி, உருட்டி, மிரட்டி வேலை வாங்கினால் எனக்குப் பிடிக்காது. கோபம் வந்துவிடும். உடனே முறைத்துக்கொண்டு வந்துவிடுவேன். அதன்பிறகு ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்தேன். அங்கு மட்டும் சில வருடங்கள் வேலையில் நீடித்தேன். காரணம் அந்த வேலை மட்டுமல்ல.. பெட்ரோல் வாசனையும் எனக்குப் பிடித்துப்போயிற்று.

இத்துடன் பீடி, சிகரெட், கஞ்சா, சாராயப் பழக்கங்களும் என்னை தொற்றிக்கொண்டன.

20 வயதானபோது மீண்டும் சென்னைக்கு வந்தேன். கிரீம்ஸ் ரோடு குடிசைப் பகுதிக்குச் சென்றேன். எனது தாயுடனும் புதிய நைனாவுடனும் சில வாரங்கள் மட்டுமே வசித்த அந்தக் குடிசை வீட்டைத் தேட முயன்றேன். சுத்தமாக அடையாளம் காண முடியவில்லை,

பிழைப்புக்கு வழிதேடி சபையர் தியேட்டர் அருகே உள்ள பெட்ரோல் பங்க், ஸ்பென்சர், ஒயிட்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வேலை கேட்டேன். முகவரியே இல்லாத முரட்டுக் களையும், முரட்டுக்காளை போன்ற தோற்றம் கொண்ட எனக்கு யாருமே வேலை தர துணியவில்லை.

சோர்வுடன் நடந்தேன். சத்யம் திரையரங்கை கடந்து கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு மைதானத்துக்கு வந்தேன். விஸ்தாரமான அந்த மைதானம் எனது வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கடக்க உதவியது. மைதானத்தில் கட்டப்பட்டிருந்த பார்வையாளர்களுக்கான படிக்கட்டு மாடம் நான் கஞ்சா அடிக்கவும் பீடி, சிகரெட் மற்றும் சாராய வஸ்துகளைப் பயன்படுத்தவும், இரவு பகல் எந்த நேரமும் உறங்கிக் கொள்ளவும் செளகரியமாக இருந்தது.

ஆனால் பிழைப்புக்கு வழி?

மைதானத்தின் மேற்கு, வடக்குப் பகுதிகளில் பெரிய, பெரிய பங்களாக்களும் அடுக்குமாடி வீடுகளுமாக இருந்தன. அந்த வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என் பிழைப்புக்கு வழி தேடிக்கொடுத்தன. பெட்ரோல் பங்க்குகளில் வேலை செய்து பழக்கப்பட்ட எனக்கு அந்த வாகனங்களில் பெட்ரோலை திருடி விற்பது கடினமாக வேலையாகத் தோன்றவில்லை.

இதற்காக போலீஸிலும் சில முறை பிடிபட்டேன். பல முறை சிறை சென்றும் வந்தேன். பின்னர் இதுவே வாழ்க்கை என்றாகிவிட்டது.

இதற்கிடையே பெட்ரோல் திருடுவதற்காக பகலில் ஓர் நாள் அடுக்குமாடி வீடுகளை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கும் போதுதான் அந்த வேலைக்காரப் பெண் என்னை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

நான் அவளைத்தான் நோட்டமிடுகிறேன் என்று அவள் தப்பாக நினைத்துக்கொண்டிருந்தாள். அவளாக என்னைப் பார்த்து சிரித்தாள். இருவரும் பழகத் தொடங்கினோம். வலுக்கட்டாயமாக என்னைக் கல்யாணமும் செய்து கொண்டாள். அதன் பிறகு அவள் குடியிருக்கும் ஆனந்த் திரையரங்கை ஒட்டிய குடிசைப் பகுதியில் நானும் அவளுடன் தங்க ஆரம்பித்தேன் புது மாப்பிள்ளையாக.

கல்யாணம் ஆன சில நாள்களில் அவள் என் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தாள். “”ஒழுங்காக ஏதாவது வேலைக்குப் போகணும், திருட்டுத் தொழில் எல்லாம் விட்டுடணும்”னு.. சொன்னா. எனக்குப் பிடிக்கல..

“”அடி போடி!” என்று சொல்லிவிட்டு வந்த எனக்கு பழையபடி கோபாலபுரம் மைதானமே குடிலாக மாறியது.

அவள் அடிக்கடி வந்து அழுவாள். ஒரு நாள் விழுப்புரத்தில் சொந்த கிராமத்துக்குப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாள். சனியன் தொலைந்தது என்று நினைத்திருந்தபோது, ஒரு வருடம் கழித்து 3 மாதக் கைக்குழந்தையோடு வந்தாள்.

“”நம்ம குழந்தை” என்றாள்.

“”எப்படி நம்புவது? என் ஆத்தாவாலேயே என் அப்பனை அடையாளம் காட்ட முடியலயே..”-என்றேன் ஏடாகூடமாக.

“”ச்சீ.. நீ மனுஷனே இல்ல..”

–என்று காரித்துப்பிவிட்டு போனவள்தான் அப்புறம் அவளைப் பார்க்கவேயில்லை.

அதன்பிறகு மனம்போல வாழ எனக்கு எவ்வித இடையூறும் இருக்கவில்லை. பீடி, சிகரெட், கஞ்சா, டாஸ்மாக், பெட்ரோல், பிரியாணி.. இதுதான் உலகம் என்றிருந்த எனக்கு புது உறவு ஒன்று பூத்தது.

அன்றைக்கு டாஸ்மாக்கில் 2 “கட்டிங்’ போட்டுக்கொண்டு ராயப்பேட்டை ஹைரோடில் உள்ள ராவுத்தர் கடையில் பிரியாணி பொட்டலம் வாங்கிக்கொண்டு கோபாலபுரம் மைதானத்துக்கு வந்தேன். போதை தலைக்கேறிய நிலையில் பிரியாணி பொட்டலத்தை அலங்கோலமாக பிரித்து அரையும் குறையுமாக சாப்பிட்டுவிட்டு தூர எறிந்தேன்.

அங்கே திரிந்துக்கொண்டிருந்த ஒரு வெள்ளை நாய்க்குட்டி ஓடிவந்து பொட்டலத்தை ஆவலுடன் முகர்ந்து பார்த்து அதில் இருந்த பிரியாணியை அவசர அவசரமாகச் சாப்பிட்டது. அதன்பின் வாலை ஆட்டிக்கொண்டு என்னை நோக்கி வந்தது. நன்றியோடு என்னைப் பார்த்தது. நான் அதனை தட்டிக்கொடுத்தேன். அதன்பிறகு அது என்னோடு ஒட்டிக்கொண்டது.

நான் எங்கு சென்றாலும் என்னைப் பின் தொடர்ந்து வந்தது. அதற்கு “டாமி’ என்று பெயர் வைத்து அன்பாக அழைத்து வந்தேன்.

சில நேரங்களில் 13-ம் எண் பஸ்ஸில் திருவல்லிக்கேணிக்குப் போவேன். நான் பஸ் ஏறியதும் டாமியும் கொஞ்ச நேரம் லாயிட்ஸ் ரோடு வரை பஸ் பின்னாலேயே ஓடி வரும். பிறகு திரும்பிப் போய்விடும். இப்படியே சில வருடங்கள் ஓடிவிட்டன.

கடந்த வாரம் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து என்னை சேர்த்தபோது கூட டாமி என் பின்னாலேயே ஓடி வந்திருக்கும். இப்போதுகூட ஆஸ்பத்திரி வாசலில் எனக்காக நிச்சயம் காத்திருக்கும்.

பழைய நினைவுகளின் ஸ்லைடுகள் தீர்ந்த நிலையில் சுவர் கடிகாரத்தைப் பார்த்தேன். மணி அதிகாலை 5. இன்னும் ஒன்றரை நாளில் என் உயிர்பிரிந்துவிடும். அதற்குள் இந்த ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி, டாமியைப் பார்க்க வேண்டும்.

மெல்ல எழுந்தேன். டாய்லெட் போவது போல கிளம்பி ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்துவிட்டேன். வார்டு பாய்கள் எவரும் கவனிக்கவில்லை.

நான் நினைத்ததுபோலவே ஆஸ்பத்திரி வெளி கேட் அருகே டாமி ஏக்கத்துடன் உட்கார்ந்திருந்தது. என்னைப் பார்த்ததும் உயிர்வந்தது போல எழுந்து நின்றது. நான் தடுமாறியபடியே நடந்து அதனருகே சென்றேன். டாமி ஒருவித முனகல் குரலில் என்னைச் சுற்றி சுற்றி வந்தது. தன் நாவால் என் பாதங்களை நக்கியது. அது எச்சில் அல்ல. அன்பின் ஊற்று.

என்னால் சரியாக நடக்க முடியவில்லை. தட்டுத் தடுமாறி சாலையைக் கடந்து எதிர்ப்புறம் சென்றேன். பிரிட்ஜின் கீழே உள்ள ஒரு தூணில் சாய்ந்தேன். டாமியும் என் அருகே அமர்ந்துகொண்டது. என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது.

நான் வானத்தைப் பார்த்து புலம்ப ஆரம்பிச்சேன்.. அதைத் தவிர வேற வழி எனக்குத் தெரியல்ல.

“”இறைவா..! நான் உன்னை இதுவரையும் நினைச்சதில்லை.. உன் தயவையும் நாடினதில்ல.. எதுக்காகவும் அழைச்சதுமில்லை.. அதனால என்ன பெயர் சொல்லி உன்ன கூப்பிட்றதுன்னும் புரியல்ல. ஆனா ஒண்ணு, இந்த டாமிக்கு என்னைவிட்டால் வேறு யாரும் இல்லை. இந்த வாயில்லா ஜீவனுக்காகவாவது நான் உயிருடன் இருக்க வேண்டும். ப்ளீஸ்..தயவு காட்டு… கருணை காட்டு…”

- இயற்கைப்பிரியன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:45

சிறுகதை: அதற்குத் தெரிவதில்லை..!



“”ஜாக்கி… ஜாக்கி…” என்று கத்திக் கொண்டே உள்ளே இருந்து வாசலுக்கு ஓடிவந்தாள் ராஜம்மாள்.
ஜாக்கி ஒரு அழகான வெள்ளை நாய். அந்த வீட்டிற்குச் செல்லமான நாய். எப்பவும் அது துருதுரு என்றிருக்கும்.
தெருவுக்கும், வீட்டுக்குமாய் ஓடிக் கொண்டும், குரைத்துக் கொண்டும் இருக்கும். ராஜம்மாளிடமும், அவளுடைய கணவன் கோபாலனிடமும் ஜாக்கி ரொம்பப் பிரியமாய் துள்ளி விளையாடும். அவர்களும் அதனிடம் பாசமாய் இருந்தார்கள்.
ஆனால், அதற்கு ஒரு கெட்டப் பழக்கம் இருந்தது. தெருவில் எந்த நாயையும் நடமாட விடாது. தெருக்கடைசி வரை விரட்டிக் கொண்டு போய் விட்டுத்தான் வீட்டுக்குத் திரும்பும். அதனால், அந்தத் தெருவில் இருந்த நாய்களும் வேறு தெருவுக்குப் போய்விட்டன. இருந்த ஒன்றிரண்டு நாய்களும் பயந்து போயிருந்தன.
நாய்க் குட்டி வைத்திருந்த சிலர், ஜாக்கியின் தொல்லைத் தாங்காமல் ராஜம்மாவிடம் சண்டைக்கும் வருவார்கள். அவள் என்ன செய்வாள் பாவம்! ஜாக்கியைக் கட்டிப் போடுவாள். கட்டிப் போட்டுவிட்டாள் போதும், உடனே அவிழ்த்து விடச் சொல்லி சங்கிலியை இழுத்து உலுக்கி ஒரே கத்தலாய் கத்திக் குரைக்கும். அந்த இரைச்சல் தாங்காமல் ராஜம்மாளும் சிறிது நேரத்துக்குப் பிறகு அதை அவிழ்த்து விட்டு விடுவாள்.
இப்போது யார் வீட்டு நாயோ வீட்டுக்கு எதிரில் தெருவில் போனதைப் பார்த்து விட்டுத்தான் ஜாக்கி விரட்டிக் கொண்டு ஓடியது. ஜாக்கியைக் கண்டு பயந்து ஓடிய நாய், ஓட முடியாமல் அது ஜாக்கியிடம் அகப்பட்டு விட்டால், ஜாக்கி அதைக் கடித்து குதறி விடுமோ என்னவோ… கடிபடப் போகும் நாய்க்குச் சொந்தக்காரர்கள் தன்னிடம் சண்டைக்கு வந்து விடுவார்களோ என்ற பயத்தில்தான், “”ஜாக்கி… ஜாக்கி…” என்று சத்தமாய் கூப்பிட்டுக் கொண்டே வாசலுக்கு ஓடி வந்து பார்த்தாள் ராஜம்மாள். ஜாக்கி எங்கே ஓடியதோ கண்ணுக்குத் தென்படவே இல்லை.
“”என்ன இது வம்பு. வரவர இந்த ஜாக்கியின் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் தினம் யாராவது வந்து புகார் சொல்லுகிறார்கள். அல்லது சண்டைக்கு வருகிறார்கள். வரட்டும் ஜாக்கியைக் கட்டிப் போட்டால்தான் சரிப்பட்டு வரும்!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.
கொஞ்ச நேரத்தில் ராஜம்மாளின் பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்தார்கள். அவர்களுக்குத் தின்பண்டங்கள் கொடுத்தார் ராஜம்மாள். அப்போது, அவள் கணவர் கோபாலன் கையில் ஒரு பெரிய பார்சலுடன் வந்தார். எல்லோரும் புரியாமல் அதை ஆவலோடு பார்த்தனர். ராஜம்மா, “”என்னங்க அது?” என்றாள்.
கோபாலன் பார்சலைப் பிரித்தார். அது ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி.
“”ஹாய்… கண்ணாடி!” என்று பிள்ளைகள் கைகளைத் தட்டி சந்தோஷத்தில் குதித்தனர்.
காலை நேரத்தில் அம்மா எப்போதும் சமையல் கட்டில் பரபரப்பாய் இருப்பாள். பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு தலைவாரி பின்னிவிட அவளால் முடிவதில்லை. பிள்ளைகளே தலைவாரிக் கொள்ள வசதியாய் கண்ணாடி வீட்டில் இல்லை. இருந்தது ஒரு சிறிய கண்ணாடிதான். அதில், எல்லோரும் பார்த்துத் தலைவாரிக் கொள்ள முடியாமல் நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக் கொள்வார்கள். அதனால், ஒரு பெரிய கண்ணாடி வாங்கி சுவரில் மாட்டிவிட அப்பா கோபாலன் ரொம்ப நாளாய் நினைத்திருந்தார். அது அவருக்கு இன்றுதான் முடிந்தது.
“”ராஜம், இந்தக் கண்ணாடியை எந்தச் சுவரில் மாட்டிவிடலாம் சொல்!” என்று கேட்டார் கோபாலன்.
“”எந்தச் சுவரில் மாட்டினாலும் பிள்ளைகளுக்குப் பார்க்க வசதியாய் இருக்காது. கூடத்தில் இருக்கிற தூணில் மாட்டி வையுங்கள்” என்றாள் ராஜம்மாள்.
கோபாலன் பிள்ளைகள் உயரத்துக்கு ஏற்றபடி தாழ்வாக தூணில் ஆணி அடித்து கண்ணாடியை மாட்டி விட்டார். திடீரென அவருக்கு ஞாபகம் வந்தது. எங்கே நம்ம ஜாக்கியைக் காணோம்?” என்றார்.
“”அது தெருவில் ஒரு நாயைத் துரத்திக் கொண்டு ஓடியது. அரைமணி நேரமாச்சு இன்னும் திரும்பவில்லை” என்றாள் ராஜம்மாள்.
கோபாலன் வாசலில் நின்று “”ஜாக்கி…” என்று சத்தமாகக் குரல் கொடுத்தார்.
ஜாக்கி எங்கிருந்தோ மூச்சு வாங்க ஓடி வந்தது. ஆவலோடு கோபாலனிடம் துள்ளியது. பிள்ளைகளை சுற்றிச் சுற்றி வந்தது. அப்படித் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் போது, ஜாக்கியின் பார்வை அந்தக் கண்ணாடியின் பக்கம் திரும்பியது. உடனே, நின்று கண்ணாடியை உற்றுப் பார்த்தது. கண்ணாடியில் ஜாக்கியின் உருவம் தெரிந்தது. ஜாக்கி “உர்’ரென உறுமியது.
கண்ணாடியில் தெரிந்தது தன்னுடைய உருவம்தான் என்று ஜாக்கிக்குப் புரியவில்லை. வேறு ஏதோ ஒரு நாய் வீட்டுக்குள் வந்துவிட்டதாக நினைத்து விட்டது. திடீரென குரைத்துக் கொண்டு கண்ணாடியை நோக்கிப் பாய்ந்தது. கோபாலனும், ராஜம்மாளும் அதை அதட்டியும், மிரட்டியும் நிற்கவில்லை. மீண்டும் மீண்டும் குரைத்துக் கொண்டு கண்ணாடியில் பாய்ந்தது.
சின்னச் சின்ன கதைகள் - Page 3 Naayகண்ணாடி உடைந்தது. தரையில் விழுந்து நொறுங்கியது. சிதறிய கண்ணாடிச் சில்லுகளில் ஜாக்கியின் முகம் தெரிந்தது. அவற்றைக் கால்களால் பிராண்டியது; கடித்தது. கண்ணாடிச் சில்லுகளால் ஜாக்கியின் முகம், வாய், கால்கள் எல்லாம் காயங்களாகி ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. அதை அடக்குவதற்காக கோபாலன் ஒரு குச்சியை எடுத்து வரப் போனார். பிள்ளைகள் எல்லாம் என்ன செய்வதென்று புரியாமல் திகைக்க நின்றிருந்தனர்.
அதற்குள் ஜாக்கி கோபம் தீர கண்ணாடிச் சில்லுகளோடு மோதி பிராண்டி உடம்பு மேலும் ரணமாகி கடைசியில் அதுவே அடங்கிப் போய் மூலையில் படுத்தது. கோபாலன் ஒரு குச்சியோடு அதை அடிக்க வந்த போது, ராஜம்மாள் அவரைத் தடுத்து, “”அடிக்க வேண்டாம், விட்டு விடுங்கள். அதுவே அடங்கிப் படுத்து விட்டது” என்றாள்.
“”ச்சே… புதுக் கண்ணாடிய உடைச்சுப் பாழாக்கிட்டுதே! அதை சும்மா விடக் கூடாது” என்று குச்சியை ஓங்கிக் கொண்டு அடிக்கப் போனார்.
“”வேண்டாம் விடுங்க. தன்னைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாதுன்ற பொறாமைக் குணம் எல்லா நாய்களுக்கும் உண்டு. ஜாக்கிய நாம செல்லமா வளர்த்ததால அந்தப் பொறாமைக் குணம் அதுக்கு அதிகமாகவே இருந்தது. இனி அதுக்குப் புத்தி வரும்.
நாய் நன்றி உள்ள பிராணிதான். ஆனால், தன்னைப் போல மற்ற பிராணிகளையும் எண்ணி நேசித்து அன்பு காட்டுவதில்லை. அது அதற்குத் தெரியாது. அதனால்தான் நாய்கள் எப்பவும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கின்றன. ஒருவர் மீது மற்றவர் அன்பு காட்டுகின்ற பண்பாடு இருந்தால் எங்கும் சண்டைகள் இருக்காது. போட்டி பொறாமைகள் இருக்காது!” என்றாள் ராஜம்மாள்.
ராஜம்மாள் சொன்னது போல அதன்பிறகு ஜாக்கி எந்த நாயிடமும் சண்டைக்குப் போவதில்லை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:50

சிறுகதை : அறைகூவல்

 
ரு நாள் வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். என் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது திடுக்கிட்டேன். இரண்டு நாளைக்கு முன்னர் ரூம் பாய் ஒருவன் திறந்து அறைகுறையாக சுத்தம் செய்துவிட்டு சென்ற பிறகு நான் கேட்ட சப்தம்தான் அது. இரு வாலிப பையன்கள் கையில் பெரிய டிராவல் பேக்குகளுடன் வாசலில் இருந்து உள்ளே நுழைந்தார்கள் அதில் ஒருவன் என்னை மேலும் கீழுமாக பார்த்து விட்டு “”இது போதுன்டா ரெண்டு பேருக்கும்” என்றான். இன்னொருவன் முதல்ல ரூம் பாயை கூப்பிட்டு சுத்தம் செய்ய சொல்லணும் தலைகாணி உறையையும் மாத்தச் சொல்லணும்” என்றான். அதில் ஒருவன் பெயர் சரவணன். இன்னொருவன் பெயர்  தனபால் என்று பேசிக் கொண்டதில் தெரிந்தது. தனபால் என் ஜன்னலைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தான்.
சரவணன் தனது பைகளை கட்டிலுக்கு அடியில் வைத்துத் திணித்துக் கொண்டிருந்தான். என்னுள் ஒரு ஜன்னல், ஒரு கட்டில், ஒரு கதவு, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, ஒரு நாற்காலி, ஒரு டியூப் லைட், ஒரு குப்பை டப்பா ஆகியன இருந்தன. ஒரு வாட்டர் ஜக்கு மட்டும் அவ்வப்போது வரும் போகும். நீண்ட நாளாக என்னை யாரும் திறக்காமல் பூட்டியே வைத்திருந்தனர். இவர்கள் இருவரும் வந்துதான் என்னைத் திறந்து எனக்குச் சுதந்திரம் அளித்தனர். நான், ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். நான் ஒரு சட்டை மாட்டக் கூடிய ஏங்க்கரும் வைத்துள்ளேன். அதில்தான் இருவரும் சட்டையை மாட்டுவார்கள். சரவணன், தனபால் இருவரும் எப்பொழுமே இரவு 11.30க்கு மேல்தான் வருவார்கள். அதுவரை நான் இருட்டிலேயே இருப்பேன். அவர்கள் வந்த பிறகுதான் எனது டியூப் லைட்டை போடுவார்கள். காலையில் 10 மணிக்குள் எல்லாம் கிளம்பி விடுவார்கள்.
இவர்கள் இரவில் சற்று நேரம் பேசிக் கொள்வார்கள். தனபால் சில புத்தகங்களைச் சிறிது நேரம் படிப்பான். சில சமயம் தனபால், சரவணனை கிண்டல் செய்வான். நீண்ட நேரம் அவர்களது தொழிலைப் பற்றி, படிப்பைப் பற்றி அன்றைய நிகழ்வைப் பற்றி பேசுவார்கள். ஆனால், என்னைப் பற்றி எதுவுமே பேச மாட்டார்கள். சில சமயம் வாய்த் தகராறில் வாய்ச் சண்டை போட்டுக் கொள்வார்கள். கொச்சை வார்த்தைகளில் திட்டிக் கொள்வார்கள். ஒருவரையொருவர் கண்டித்துக் கொள்வார்கள். என்னால் அவர்களது சண்டையை தீர்க்கவோ, பஞ்சாயத்து செய்யவோ, கருத்து சொல்லவோ இயலாது. எப்பொழுதும் போல அமைதியாகவே இருப்பேன், அவர்கள் அமைதியை குலைக்கும் போதும் அமைதியாக இருக்கும் போதும்.
என்னைச் சுத்தம் செய்ய மட்டும் அவ்வப்போது நேரம் எடுத்துக் கொள்வார்கள்.
இந்திக்கார ரூம் பாயிடம் ரூமை நன்றாகச் சுத்தம் செய்யும்படி அரைகுறை இந்தியில் தனபால் கூறுவான். அது மட்டுமே ஆறுதல் செய்தி மற்றபடி என்னைப் பற்றி எந்தப் பேச்சும் பேச மாட்டார்கள், சட்டை செய்ய மாட்டார்கள். நான் மட்டும் அவர்களுக்காகக் காத்திருப்பேன் நிரந்தரமாக.
நான் பல்வேறு மனிதர்களைப் பார்த்திருக்கிறேன் ஒரு முறை ஒரு மலையாளி என்னுள் குடித்தனம் ஆனான். அவன் முகம் பார்ப்பதற்கு எப்பொழுதும் பரபரப்புடனே இருக்கும். பதினைந்து நாட்கள் தங்கி விட்டு கிளம்பி விட்டான். பின்னர் ஒரு நபர் கிட்டத்தட்ட ஐம்பது வயது இருக்கும். முழங்கைக்கு மேல் இரும்பாலான கொலுசு போன்ற ஒன்றை அணிந்திருப்பார். அவரின் குல வழக்கமோ என்னவோ, அடித்த டை மறைந்து செம்பட்டை மற்றும் வெள்ளை நிற மயிர் கலந்த தலையுடன் இருப்பார். தினமும் குளித்து ரெடியாகிவிட்டு ஒரு கருப்பு கலர் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு அதிகாலையிலேயே கிளம்பி விடுவார். மாலையில் மீண்டும் திரும்புவார் இப்படி ஒரு பத்து நாள்கள் தங்கிவிட்டு கிளம்பினார்.
ஒரு முறை ஓர் ஆணும், பெண்ணும் வந்தார்கள். ஒரே ஓர் இரவு மட்டும் தங்கி என்னை அசுத்தப்படுத்திவிட்டுச் சென்றார்கள். காலையில் அந்தப் பெண் அவனின் பர்சிலிருந்து தேவையான அளவு பணத்தை எடுத்துக் கொண்டாள். அவனை எழுப்பி “”நான் கிளம்புகிறேன் நேரமாச்சு” என்றாள், அவன் நான் போன்ல கூப்பிடறேன்” என்று படுக்கையில் இருந்தவாறே தூக்கக் கலக்கத்தில் சொன்னான்.
ஒரு முறை எழுத்தாளர் ஒருவர் என்னுள் தங்கினார். அவரைச் சந்திக்கச் சில நண்பர்களும் வந்தனர். அவரது புத்தகங்களைப் பற்றியும் கதை, கட்டுரை, நாவல்களைப் பற்றியும் கூறி வாழ்த்துத் தெரிவித்தனர். இரண்டு நாள் தங்கியிருந்தார். இரண்டு நாளும் அந்த எழுத்தாளரும் அவரது நண்பர்களும் என்னை ஒரு விவாதக் களமாகப் பயன்படுத்தினர். உள்ளூர் இலக்கியம் முதல் ஆரம்பித்து உலக இலக்கியம் பற்றியெல்லாம் பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருந்தனர். பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன் என்று யார் பெயரெல்லாமோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவர்களெல்லாம் பெரிய எழுத்தாளர்களாம். என்னுள் குடித்தனம் வந்தவர்களில் இவர்கள் மட்டுமே நாட்டு நலன், மக்கள் நலன் என அதிகம் பேசிக் கொண்டவர்கள். நாட்டின் வளர்ச்சி பற்றியும் பெரிய அக்கறை எடுத்துக் கொண்டு பேசினர். மக்கள் மீது கரிசனம் கொண்டனர். கவலை கொண்டனர். அறியாமையைப் போக்க ஏதாவது செய்ய வேண்டும். கல்வியில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றனர்.
ஒரு முறை சினிமாக்காரர்கள் வந்து தங்கினார்கள். கதை விவாதம் என்று சொல்லி ஒரு கதையை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் காட்சியை அமைக்கலாம், எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தலாம், யாரிடம் பாட்டெழுத கொடுக்கலாம். சண்டை பயிற்சி பொறுப்பை யாரிடம் கொடுப்பது, நடிகர்கள், நடிகைகள் தேர்வு, படத்துக்குப் பெயர் என்ன, நிதி திரட்டுவது எப்படி ஸ்கிரிப்ட் யார் எழுதுவது, திரைக்கதை எப்படி அமைப்பது, இசையமைக்க, நடனம் அமைக்க யாரை அழைப்பது என விவாதித்துக் கொண்டிருந்தனர். ஒரு கை நிறைய இளம்பெண்கள் போட்டோக்களை வைத்துக் கொண்டு ஒருவர் இதைப் பாருங்கள் என மூன்று விரல்களில் பெரிய சைஸ் மோதிரம் போட்டிருந்த, கறுத்து சற்றே பெருத்திருந்த நபரிடம் கொடுத்தார். இரண்டு நாள்கள் தங்கியிருந்து விவாதங்களை முடித்துக் கொண்டு பல விதமான உணவு வகைகளை உண்டுவிட்டு சென்றனர்.
ஒரு நாள் அதிகாலை ஆறு மணிக்குக் கணவன், மனைவி இருவர் வந்தனர். வந்தவுடன் குளித்து ரெடியாகி விட்டு சென்றனர். “”மேரேஜ் டைம் எய்ட் ஓ கிளாக் சீக்கிரம் கிளம்புடீ” என்று கணவன் மனைவியை அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார். மேரேஜ் முடிந்ததும் அப்படியே கிளம்ப வேண்டியதுதான் என மேலும் பேசிக் கொண்டார்கள்.
என்ஜினீயரிங் காலேஜில் சேர கவுன்சிலிங்க்காக ஒரு நாள் அப்பாவும், மகனும் வந்தனர். முதல் நாள் இரவு வந்தனர் இரவு தூங்கும் வரை “”எப்படியோ சீட் கிடைச்சுட்டா பரவாயில்லை” என்று அப்பா கூறிக்கொண்டே இருந்தார். “”கிடைச்சிடும்பா” என்று பையனும் கூறிக்கொண்டே இருந்தான். மறுநாள் காலை காலி செய்து விட்டனர். சீட் கிடைத்ததா இல்லையா என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை.
ஒரு முறை இரு வாலிபர்கள் வந்து தங்கினர். “”அலுவலகத்திலேயே ரூம் கொடுக்கும் வரை இங்குதான் தங்கனும்” என்று பேசிக் கொண்டனர். வெளியூரிலிருந்து வேலை கிடைத்து இங்கு வந்திருந்தனர். இரண்டு வாரம் தங்கிவிட்டுக் கிளம்பினர்.
ஒரு நாள் ஒரு வாலிப பையனும் அவனது மாமாவும் வந்து தங்கினர். அந்தப் பையனின் அப்பாவுக்கு மூளையில் கட்டி என்பதால் ஆபரேஷனுக்காக அழைத்து வந்திருந்தனர். “”சீக்கிரம் நல்லாயிட்டா பரவால்ல. இந்த ஊர விட்டும், இந்த ரூம விட்டும் சீக்கிரம் கிளம்பிடலாம்” என அடிக்கடி கூறுவான். மூன்று வாரம் சோதனை, வேதனை கலந்தவாறு தங்கிவிட்டு கிளம்பினர்.
சில கும்பல்கள் என்னுள் தங்கி சிலரை அழிப்பதற்கு வியூகங்களும் வகுத்துள்ளனர்.
இதுபோன்ற எண்ணிடலங்கா மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான மனம், சிந்தனை, செயல். பெரும்பாலும் அனைவரும் அவர்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தனர். பல முதிர்ச்சி பெறாத அப்பாவி சிந்தனைகள். விதிவிலக்காக மிகச் சில உயர் சிந்தனைகள்.
இந்த தனபாலும் சரவணனும்கூட என்னைப் பற்றி எதுவும் சிந்திக்காமல், மதிக்காமல் இருந்தனர். அவரவருக்கு எண்ணிலடங்கா அக மற்றும் புறச் சிந்தனைகள். செயல்பாடுகள். அதில் என்னைப் பற்றி எங்கே நினைக்கப் போகிறார்கள்.
நான் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அமைதியாக, உறுதியாக இருந்து கொண்டு அனைத்தையும் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். வாய் இன்றி பெரிய காதுகளுடன் கண்களுடன்.
ஆனால் இத்தனை சிக்கல்களுக்கிடையே தனபால் மட்டும் என்னைப் பற்றி ஒரு நாள் பேச்சு எடுத்தாள். “”இந்த ரூம்ல தங்கியிருக்கிறோம். ஆனால் காலையில நேரமாகக் கிளம்புறோம். இரவு லேட்டா வர்றோம். தூங்க மட்டுமே பயன்படுத்திக் கிட்டு இருக்கோம். ஏனோ தெரியல. இந்த ரூம் மேல ஒரு திடீர் பீலிங் வந்திருக்கு. இதையும் ஓர் உயிர் போல நினைக்கத் தோணுது. நாம இனிமே ரூமுக்கு நேரமா வரணுண்டா, கொஞ்ச நேரமாவது இந்த ரூம்ல அமர்ந்து ரிலாக்ஸா ஏதாவது பேசணும்டா. இந்த ரூமுக்கும் ஓர் லைப் இருக்குடா. இதுக்கு எவ்வளவோ அனுபவங்கள் இருக்கு. எத்தனையோ மனிதர்களைச் சந்திச்சிருக்கு. எத்தனையோ மன ஓட்டங்களைக் கண்டிருக்கு. மனிதர்களின் அந்தரங்கங்களை அறிந்தது இந்த ரூம் மட்டுமே. மொத்தத்தில் இந்த ரூம் பூரா பல்வேறு மனிதர்களோட எண்ண ஓட்டங்கள் வழிந்து ஓடிக்கிட்டு இருக்கு. இதையெல்லாத்தையும் சுமந்து கொண்டு இந்த ரூம் எவ்வளவு திடமா நின்னுக்கிட்டு இருக்கு பாத்தியா” என்று தனபால் பேசி முடிக்க, சரவணன், “”ஆமாடா” என்றான்.
எனக்கு அப்படியே புல்லரித்துவிட்டது போல இருந்தது. என்னுடைய அந்தரங்கத்தையும் ஒருவன் தெரிந்து வைச்சிருக்கானே! உச்சகட்ட மகிழ்ச்சியையும் அடைந்தேன் முதல் முறையாக.
அதுமட்டுமில்லை என்னைப் பற்றி ஒரு கதை எழுதுவதாகவும், அந்தக் கதையை நானே சொல்வது மாதிரியும் எழுதப் போகிறதா தனபால் சரவணன் கிட்ட சொன்னான். கதைக்கு பெயர் } அறையுடன் ஒரு நேர்காணல், அறை பேசுது, மனிதனின் அந்தரங்கம் அறிந்த அறை, நோட்டமிடும் அறை, அறையில் கதை, அறை ஒரு குட்டி உலகம், அறைகூவல் என இவற்றில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்து வைக்கப்போவதாகவும் பேசிக் கொண்டான்.
சில நாள் கழித்து ஓர் இரவில் அந்தக் கதையை எழுதத் துவங்கினான் தனபால். அதற்கு அவன் இட்ட பெயர் “அறைகூவல்’.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:53

சிறுகதை: நிஜ மனம்
-----
செப்.11. பயங்கரவாதத்தின் கொடூரத்தைப் பற்றி அலறிக் கொண்டிருந்தது உலகம். ‘எப்பேர்ப்பட்ட அமெரிக்காவே இப்படி ஆடிப் போயிடுச்சே!” குரல்கள் என் காதுகளில் ரீங்காரமிட்டன. டி.வி. முன் உட்கார்ந்தேன். தரைமட்டமாகிவிட்ட கட்டிடங்கள், அதிக உஷ்ணத்தை என் மனதில் ஏற்றிக் கொண்டிருந்தது.
 மற்ற எல்லோரையும் போலவே எனக்கும் அந்த மத வெறியர்கள் மீது கோபம் கோபமாய் வந்தது. காஷ்மீர் தொடங்கி இஸ்லாமிய பயங்கரவாதத்தின் வலியை மும்பையிலும் கோவையிலும் நெல்லையிலும் என்று வரிசையாகக் கண்டுவிட்டதால், என் மனம் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது….
 குல்லாவையும் குறுந்தாடியையும் முட்டுக்கு மேல் ஏற்றிக் கட்டிய கைலியையும் கண்டபோதெல்லாம் என் கண்கள் சந்தேகப் பார்வை வீசியது…
 நாட்கள் கழிந்தன. சென்னையிலிருக்கும் என்னைப் பார்க்க அப்பா வந்திருந்தார். வந்த கையோடு மறுநாளே ஊருக்குக் கிளம்பிவிட்டார்.
 அன்று ஞாயிற்றுக் கிழமை. ஊர் வெறிச்சோடிக் கிடந்தாலும் பஸ் ஸ்டாண்ட் மட்டும் பரபரப்பாக இருந்தது. இரவு மணி எட்டு. அப்பாவை செங்கோட்டை பஸ்ஸில் ஏற்றிவிட்டு அவருக்கு வசதியான சீட்டாகப் பார்த்து உட்கார வைத்தேன். புழுக்கமாக இருந்தது. கீழே இறங்கி நின்றேன். பஸ் கிளம்பட்டும் என்று காத்திருந்தேன்.
 அரக்கப்பறக்க மூன்று சிறுவர்கள் அந்த பஸ்ஸைப் பார்த்து ஓடி வந்தார்கள்.
 “சார் இந்த பஸ் தென்காசி போகுமா?” என்ற சிறுவர்களின் கேள்விக்கு “ம்… போகும்… போகும்… ஏறிக்கிங்க..” என்றார் கண்டக்டர்.
 வேகவேகமாக ஏறிய அம்மூவரில் ஒருவன், அப்பாவைப் பார்த்துக் கேட்டான்… “தாத்தா… நீங்க தென்காசி வரைக்கும் போறீங்களா?”
 அப்பா ஒரு ‘உம்’ போட்டார்.
 “டேய் காதர், இந்த சீட்ல உட்காருடா…” என்றான் அவன்.
 அப்பா சீட்டுக்கு அடுத்த சீட்டில் பத்து பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுவன் காதர் வந்து உட்கார்ந்தான்.
 காதரின் சூட்கேஸை கவனமாக மேலே வைத்தான் ஒருவன். அதற்குள் இன்னொருவன் அதை எடுத்துக் கொண்டே அப்பாவை நோக்கி, “தாத்தா இந்த சூட்கேஸை ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்குங்க. இந்தப் பையன் தூங்கிடுவான். யாராவது எடுத்துட்டுப் போயிட்டா கஷ்டம்..” என்று சொல்லியவாறே, அப்பாவின் பெட்டியை ஒட்டி, அதை வைத்தான்.
 கொஞ்சம் விவரமாகத் தெரிந்த ஒரு பையன் கண்டக்டரிடம் போய் டிக்கெட் வாங்கி வந்தான். வாங்கிய டிக்கெட்டை காதரிடம் கொடுக்காமல், நேரே அப்பாவிடம் கொடுத்தான். “தாத்தா இதை நீங்களே வெச்சிருங்க.. இவன் தொலைச்சிடுவான்” என்றான்.
 அப்பா மறுப்பேதும் சொல்லவில்லை.
 வேகமாக பஸ்ஸை விட்டு இறங்கிய ஒருவன், கடையை நோக்கி ஓடினான். அடுத்த ஐந்து நிமிடத்தில் கையில் உணவுப் பொட்டலத்துடன் திரும்பினான். காதரிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான்.
 கீழே நின்று கொண்டு இதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
 அப்பாவைப் பார்த்துக் கேட்டேன்… “அப்பா… என்னவாம்?”
 அப்பாவிற்கு இயல்பிலேயே எல்லோரிடமும் சிநேகமாய்ப் பழகும் சுபாவம். அதிலும் அவரிடம் அறிமுகமாகிற யாராயிருந்தாலும் சரி… “எலேய்.. நீ அவன் மகன்தானலே…” என்று தனக்குத் தெரிந்தவரைப் போல் கேட்பார். அவ்வாறு காட்டிக் கொள்வதில் அவருக்கு அவ்வளவு அலாதிப் பிரியம்.
 இப்பவும் அப்படித்தான்… “ஒண்ணுமில்லடா… சம்பங்குளம் சாய்பு பையன்!” என்றார். காதர் என்னைப் பார்த்து புன்னகைத்தான்.
 காதரைப் பற்றி தெரிந்து கொள்ள என் மனம் அலைபாய்ந்தது. இந்தப் பையன் ஏன் தனியாக ஊருக்குப் போகணும்? கூட வந்திருக்கும் பசங்க யார்? யோசித்தேன்.
 பஸ் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார். இரண்டு சிறுவர்களும் பஸ்ஸை விட்டு கீழே இறங்கினர். நான் மெதுவாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். ஒருவன் பெயர் யூசுப் என்றும், மற்றவன் மதன் என்றும் இருவரும் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது. நான் காதரைப் பற்றி விசாரித்தேன்…
 யூசுப் சொன்னான்… “அண்ணே… காதர் பயலோட அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டிங்கண்ணே.! மூத்தவங்க பையந்தான் காதரு. அந்த ஆளு… அதான் காதரோட அப்பா, இவன் அம்மாவ வூட்டவுட்டு தொரத்திட்டாரு. அப்பால அந்த அம்மா செத்துட்டாங்க… அதுக்கப்புறம் காதர் அவன் சித்திகிட்டதான் இருந்தான். அவுங்க சரியான ராட்சசி. ரொம்ப கொடுமைப்படுத்துவாங்க!”
 மதன் இடைமறித்தான்.. “பக்கத்து வூட்டுக்காரங்கதான் பாவப்பட்டு எழும்பூர்ல இருக்கற குழந்தைங்க ஆஸ்பத்திரியில வேலைக்கி சேத்து விட்டாங்க… அவன் சித்தியும் அங்கதான் வேலை பாக்குது. காதர் வேலைக்கி சேந்து பத்து நாள்தான் ஆச்சி. அதுக்குள்ள நீ இங்க வேல பாக்கக்கூடாதுன்னு, சித்தி அவனைத் தொரத்தி விட்டுட்டுது. பாவம்ணே காதரு. அழுதுக்கிட்டிருந்தான். நாங்கதான் அவனைக் கூட்டியாந்து அவனோட தாத்தா ஊருக்கு அனுப்பிச்சிடலாம்னு நெனச்சி இங்க பஸ் ஏத்தி விட வந்தோம்” என்றான்.
 “சரி.. காதருக்கு அவன் தாத்தா ஊருக்குப் போகிற வழி தெரியுமா?” நான் கேட்டேன்.
 அதுவரை எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காதர் என்னைப் பார்த்து “சம்பங்குளம் போய்ட்டேன்னா எனக்கு தாத்தா வூட்டுக்குப் போகிற வழி தெரியும்” என்றான்.
 “அதுசரி, சம்பங்குளம் தென்காசிலேர்ந்து 25 கிலோ மீட்டருக்கும் மேல இருக்குமே… அதுவும் பஸ் வேற அதிகம் கிடையாதே” என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
 மதனும் யூசுப்பும் பதறிப் போனார்கள். “தாத்தா, இவன எப்படியாச்சும் சம்பங்குளம் பஸ்ஸில் ஏத்தி விட்டுடுங்க.. ப்ளீஸ்…” கெஞ்சினார்கள். அவர்களின் பரிதவிப்பு என் மனதை என்னவோ செய்தது.
 “எலேய்… எனக்கு தென்காசி பஸ் ஸ்டாண்ட் டைம் கீப்பரை நல்லாத் தெரியும்லே. அவன்ட பத்திரமா ஏத்தி விடச் சொல்றேன்.. ஒண்ணும் கவலைப் படாதீங்க” தேற்றிக் கொண்டிருந்தார் அப்பா.
 நான் கீழிருந்தபடியே.. காதரின் முதுகைத் தட்டிக் கொடுத்து “பாத்து ஜாக்கிரதையாப் போ.. வழியில் எங்கயும் இறங்கினா தாத்தாவோட சேந்துதான் இறங்கணும். என்ன!” என்றேன் கனத்த இதயத்துடன்!
 பஸ் கிளம்பியது. யூசுப்பும் மதனும் டாட்டா காட்டினார்கள். “காதரை ஜாக்கிரதையா பஸ்ஸில் ஏத்தி விட்டுடுங்கோ” அப்பாவிடம் கூறினேன்.
 அன்று இரவு கனவில் காதர் அடிக்கடி வந்து போனான். மறு நாள் இரவு அப்பாவுக்கு போன் செய்தேன். பிரயாணம் நல்லபடியாக இருந்ததா, வண்டி சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்ததா… பாவம் அப்பா என்ன செய்தாரோ… அப்பாவிடம் கேட்கவேண்டும்… வழக்கம்போல் மனதில் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. மறுமுனையில் அப்பா போனை எடுத்தார். எடுத்த வேகத்தில் அப்பாவிடம் கேட்டேன்… “அப்பா.. காதரை சம்பங்குளம் பஸ்ஸில் ஏத்தி விட்டேளா?”


நன்றி கதைகள் | By வாணிஸ்ரீ சிவகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:55

கொடுத்து வைத்தவன்
------------
“”டேய்.. கந்தா! இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.. முதலாளி வீட்ல இருந்துக்கிட்டு உயிர வாங்குவாரு. இதைப் புடுங்கி வை.. அதை நட்டு வை.. ஒட்டி வை.. கட்டி வையும்பாரு..”

தோட்டக்காரர் சோமையா சமையல் கந்தசாமியிடம் புலம்பிக் கிட்டிருந்தார்.

“”ஆமா! என்னய மட்டும் விட்டுவைப்பாரா என்ன? ஆடு, கோழி, மீன், இறால், நண்டுன்னு சகல ஜீவராசிகளையும் வாங்கி வந்து ஆக்கச் சொல்லி பாடாபடுத்துவாரே..”

கந்தசாமி பதிலுக்குப் புலம்பினான்.

ஆனால் எனக்கு மட்டும் குஷி. ஏன்னா லீவு நாள்ல முதலாளி தன் குட்டிப் பெண் ஷீபா, மனைவி ஜான்சியோட என்னையும் வெளியே கூட்டிக்கிட்டுப் போவார். எனக்கு அந்த வீட்ல பெரிசா வேலை எதுவும் கிடையாது. வீட்டைச் சுத்திச் சுத்தி வருவேன். எனக்கு நினைவு தெரிந்த நாள்ல இருந்து இங்கேதான் இருக்கேன்.

மத்த வேலக்காரங்கள விரட்டற மாதிரி முதலாளி என்ன விரட்டி வேலை வாங்க மாட்டாரு.. அன்பா கருப்பான்னு கூப்பிடுவாரு.. ஏன்னா என் நிறம் அப்படி.

அதுமட்டுமல்ல.. முதலாளி அவங்க சொந்தக்காரங்க, நண்பர்கள் கிட்டயும் “எனக்கு இவன் புள்ள மாதிரின்னு’ பெருமையா அறிமுகப்படுத்துவாரு. புள்ளன்னு சொல்றதுனால பிற்காலத்துல எனக்கு அவர் சொத்துல கொஞ்சம் எழுதி வைப்பாரோ என்னவோ? இருந்தாலும் நமக்கு எதுக்குங்க அதெல்லாம்? எனக்கும் எவ்வளவோ ஆசைகள் இருக்கு. ஏகப்பட்ட மனக்குறைகள் கிடக்கு. எனக்கு இந்த பங்களாவில் வேலை பெரிசா எதுவும் இல்லன்னாலும் அடிப்படை சுதந்திரம் ஒண்ணும் கிடையாது.

இஷ்டம்போல பங்களாவை விட்டு வெளியே போய்வர முடியாது. ஏன்.. சாப்பாடு விஷயத்துல கூட நான் நினைத்ததை சாப்பிட முடியாது. முதலாளியோ அல்வா முதல் அயிர மீன் வரை வக்கணையாகச் சாப்பிடுவாரு. எனக்கு மட்டும் இனிப்பை கண்லயே காட்ட மாட்டாரு. அதே மாதிரி கருவாடு, நெத்திலி அயிட்டங்களையும் தரக் கூடாதுன்னு கந்தசாமிகிட்ட உத்தரவுப் போட்டுட்டாரு. பிற வேலைக்காரங்க சாப்பிடுறதுகூட எனக்குக் கிடைக்கிறதில்ல.

எனக்கென்ன அப்படியா வயசாகிப் போச்சு..உப்பு, சர்க்கரை எல்லாம் ஒதுக்கிடறதுக்கு? சாப்பாட்டை விடுங்க..நானும் வாலிபப் பருவத்துல தான இருக்கேன்றது முதலாளிக்கு ஏன் தெரியல? என் உணர்வுகள ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்றார்?

நான் காலாற சுதந்திரமா வெளியே போய் வர விடமாட்டேங்கறாரு. எப்பப் பார்த்தாலும் வீட்டுக்குள்ளேயே இருக்கணுமாம். காலைலயும் இரவும் அவர் வெளியே போகும்போது அவரோட போகணுமாம். எங்கேயும் தனியாகப் போகக் கூடாதாம். என் வயசுள்ள பசங்களைப் பாக்கறேன். அவங்க எல்லாம் தனக்குன்னு ஒரு துணையைத் தேடிக்கிட்டு புள்ள குட்டிகளோட சுதந்திரமாக இருக்காங்க..நான் மட்டும் இங்க தனி மரமாக கிடக்கறேன்.

எதிர்வீட்டில் என்னைப் போலவே வேலை செய்கிற ராணி இருக்கிறாள். அவளும் என்னைப் பார்க்கும்போது சந்தோஷப்படுவது அவள் கண்ணில் தெரியும். நான் பதிலுக்கு ஏதாவது “சிக்னல்’ தருவதற்குள் முதலாளி வந்துவிடுவார். அப்புறம் காதலை எங்கே டெவலப் பண்ணுவதாம்?

தங்கக் கூண்டில் சிறைப்பட்ட கிளி போல நான் கிடக்கறேன். ஒரு நாள் வெறுத்துப்போய் பங்களாவை விட்டு வெளியேற முடிவு செய்தேன். நடுராத்திரியானதும் காம்பவுண்ட் சுவரை ஒரே தாண்டாகத் தாண்டிக் குதித்து வெளியே போய்விட்டேன். எங்க தெருவைத் தாண்டி நாற்சந்திக்கு வந்தேன். அங்கே என் வயதையொத்த நாலைந்து பசங்க பிளாட்பாரத்துல அந்த நடுராத்திரியிலும் நின்றிருந்தாங்க.

என்னைப் பார்த்ததும் திடீரென என்னை நோக்கி படையெடுத்து வருவதுபோல் வந்தனர்.

“”எங்கேயிருந்து வர்ற? எங்கே போற..இது எங்க ஏரியா..நீ எங்களை தாண்டி போக முடியாது..மரியாதையா வந்த வழியே திரும்பிப் போய்டு..”

காரணமில்லாமல் ஆளாளுக்கு மிரட்ட ஆரம்பித்தனர்.

எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ரொம்ப பயமாகவும் இருந்தது. குலை நடுங்கியது. கால்கள் பின்னிக்கொண்டன. அப்படியே திரும்பி நடந்தேன். முதலில் மெதுவாக..பின்னர் வேகமாக ஓடினேன். ஒரே மூச்சில் பங்களாவை அடைந்தேன். காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்தேன். எனது அறைக்குள் போய் சுருண்டு படுத்துக்கொண்டேன் எதுவும் நடக்காததுபோல.

இருப்பினும் வெளியே சந்தித்த அதிர்ச்சி அனுபவத்தால் ஏற்பட்ட நடுக்கம் குறைய வெகு நேரமாயிற்று. வீட்லதான் நம்மள அடிமையாக நடத்துறாங்கன்னா…வெளியிலுமா அப்படி நடத்துவாங்க? அந்த ரெüடிப் பசங்களுக்கு என்னைப் பார்த்தா இளக்காரமா இருக்கும் போல.

அதுக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே போகணும்கிற ஆசையை விட்டுட்டேன். ஏதோ விதிவழி வாழ்க்கைன்னு வாழ்ந்துக்கிட்டிருக்கேன்.

இதோ முதலாளி, தனது மனைவி, சுட்டிப்பெண் ஷீபாவோட கார் அருகே போகிறார். கதவைத் திறந்தவாறே என்னைப் பார்த்து “நீயும் வர்றியா..’ என்கிறார். அதற்காகவே காத்திருந்த நானும் போய் பின் சீட்டில் அமர்ந்துகொள்கிறேன். முன்புறம் முதலாளி அம்மா. பின்புறத்தில் ஷீபா. ஷீபாவுக்குப் பக்கத்தில் அவளை ஒட்டிக் கொண்டு உட்கார்ந்து வருவது எனக்குப் பிடிக்கும்.

அவளுக்கு என்னோட விளையாடுவது என்றால் ரொம்பப் பிடிக்கும். அவ சாப்பிட வைத்திருக்கும் பிஸ்கெட், சாக்லெட் எல்லாம் எனக்கும் தருவாள். அவ அன்பை என்னால் மீறமுடியாது. என்னோட சுவாரஸ்யமற்ற வாழ்க்கையில் இதுதான் எனக்கு ஒரே ஆறுதல்.

கார் ஒரு மேம்பாலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பீச்சுக்குத்தான் போவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மரங்கள் அணி வகுத்து நிற்கும் கடைகள் நிறைந்த அந்த சாலையில் கார் நின்றது. அந்த இடத்தை பாண்டி பஜார் என்று பேசிக்கொண்டார்கள்.

காரை பார்க் செய்துவிட்டு முதலாளி தன் மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு அருகே இருந்த பிரமாண்ட கடைக்குள் நுழைந்தார்.

என்னைக் கூப்பிடவில்லை. வீட்டில் வேலை செய்கிற என்னை ஷாப்பிங்கிற்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா? காருக்குக் காவலாய் காருக்குள்ளேயே உட்கார்ந்திருந்தேன். அவர்கள் வரும்வரை வேடிக்கைப் பார்த்து பொழுதைக் கழிக்க வேண்டியதுதான். வெறுப்பாக இருந்தது.

பக்கவாட்டில் திரும்பி பார்த்தேன். அங்கே ஒரு காரின்மீது புஸý புஸýவென நாய்க்குட்டி, கரடிக்குட்டி பொம்மைகள் விதவிதமான கலர்களில் மிகவும் தத்ரூபமாக வீற்றிருந்தன. பல பேர் அந்த பொம்மைகளை வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றனர். ஒரு சிலர் விலை கேட்கவும் செய்தனர். இந்நிலையில் திடீரென மழை தூற ஆரம்பித்தது.

பொம்மை விற்பவர்கள் அவசர அவசரமாக மிகப் பெரிய பாலித்தீன் பைகளில் பொம்மையைத் திணித்துக் கொண்டிருந்தனர். அந்த வியாபாரிகளில் ஒருவன் காரில் உட்கார்ந்திருக்கும் என்னை அடிக்கடி பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் மற்றவனிடம் சொன்னான்: “”நாய் பொம்மை விற்கும் நம்ம பொழப்பும் நாய் பொழப்புத்தாம்ப்பா. மழை வேறு வந்திடிச்சி. இனி ஒண்ணும் போணி ஆகாது. ஆனால் அதோ பார் அந்தக் கார்ல உக்காந்திருக்கிறத…கார்லயே சொகுசா வந்திட்டு…கார்லயே சொகுசாப் போறதுக்கு நம்மால முடியுமா? எதுக்கும் போன ஜென்மத்துல புண்ணியம் செஞ்சிருக்கணும்..எல்லாத்துக்கும் குடுப்பனை வேணும்..ம்..ஹூம்..”

அவன் இப்ப நேரடியாகவே என்னைப் பார்த்து பொருமினான்.

எனக்கு ஆத்திரமாக வந்தது.

என் கஷ்டம் இவனுக்கு என்ன தெரியப் போகுது? தெரு நாய்க்கு இருக்கிற சுதந்திரம் கூட எனக்கு இல்லைன்னு இவனுக்கு என்ன தெரியும்? பேசறான் பாரு மடையனாட்டம்..”

அவனைக் கோபத்தோடு முறைத்தேன். உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது. “”என்ன முறைக்கிறே?” என்று கேட்டு அடிக்க வந்துவிட்டால்?

அதற்குள் முதலாளி தன் மனைவி, குட்டிப் பெண்ணோட கை நிறைய பைகளோட கார் அருகே வந்துகொண்டிருந்தார்.

எனது ஆத்திரம் அடங்கவில்லை. நான் முறைப்பதை நிறுத்தவில்லை.

“”என்னடா கருப்பா? நாங்க லேட்டா வந்துட்டம்னு உனக்கு கோபமா? கூல் டவுன்..கூல் டவுன்..” என்றார் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே.

நான் என்னத்தைச் சொல்ல முடியும்? அவரையா நான் முறைத்தேன்?

என் வெறுப்பையும் சலிப்பையும் அவரிடம் வெளிக்காட்டாமல் போனால் போகிறதென்று வாலை ஆட்டி வைத்தேன்.


  நன்றி கதைகள் | By வாணிஸ்ரீ சிவகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 8:57

நிலமென்னும் நல்லாள்
--------

சிறுகதைநிலம் என்னும் இல்லாள்வேளாண் நிலம்

“”காணி நிலம்னா சுமார் எத்தனை சதுர அடி இருக்கும் மிஸ்டர் ராம்நாத்?” என்றார் பரமேஸ்வரன். இப்படி ஒரு திடீர்க் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ராம்நாத் கொஞ்சம் தடுமாறித்தான் போனார்.

“”ஸா… தெரியலியே ஸார்; எதுக்குக் கேட்குறீங்க? நான் வேணும்னா நெட்ல தேடிப் பார்த்துச் சொல்லட்டுமா?” என்றார் பணிவுடன்.

“”நோ… நோ… பரவாயில்லை விடுங்க; சும்மாதான் கேட்டேன். நம்ம பாரதியார், பராசக்திகிட்ட காணிநிலந்தான் கேட்டார். கடைசி வரைக்கும் அவருக்கு அது கை கூடவே இல்ல. ஆனால் அந்த மகா கவிக்கு சாத்தியப்பாடதது, நாம இப்பத் தேடிப்போற மிஸ்டர் காளியப்பனுக்கு சாத்தியமாகி இருக்கு பார்த்தீங்களா? அதான் கேட்டேன்” என்றார் பரமேஸ்வரன்.

“”ஆமாம் ஸôர்..” என்று ஆமோதித்து சிரித்தார் ராம்நாத்.

பரமேஸ்வரன் டெல்லியைத் தலைமை இடமாகக் கொண்டு, சென்னை, கல்கத்தா, பெங்களூரூ, ஹைதராபாத் என்று அத்தனை மெட்ரோ நகரங்களிலும் கிளைபரப்பி விரித்திருக்கும் கே.ஜே.எம். என்னும் ரியல் எஸ்டேட் கம்பெனியின் நிர்வாக இயக்குனர். ராம்நாத் அதே நிறுவனத்தின் சென்னைக் கிளைக்கு ரீஜினல் மேனேஜர். பரமேஸ்வரன் டெல்லியிலிருந்து கிளம்பி வந்து காரியத்தையே மறந்து காளியப்பனின் தோப்பைப் பார்த்து மலைத்துப் போய் நின்றார்.

“”நல்ல விளைநிலங்களா இருக்கே எப்படி வித்தாங்க?  இதெல்லாம் அசலான விவசாய நிலங்களா இருந்துருக்கும் போலருக்கே…”  ஆச்சர்யமாய்க் கேட்டார் பரமேஸ்வரன்.

“”ரொம்ப காலத்துக்கு முன்னாலியே விவசாயம் நொடிச்சுப் போயிருச்சு ஸார்; அதான் நமக்கு வசதியாப் போயிருச்சு.. அரசியல்வாதிங்களையும், அரசாங்க அதிகாரிகளையும் சரிக்கட்டுறதுக்குதான் ரொம்ப செலவழிக்க வேண்டி இருந்துச்சு சார்…” என்றார் ராம்நாத்.

“”எல்லாம் சரிதான் ராம்நாத்.. இந்த நெலத்தையும் வாங்கிப் போட்டிருந்தீங்கன்னா நாம் இப்ப வந்திருக் வேண்டிய அவசியமே வந்திருக்காது…”என்றார்.

“”எவ்வளவோ பேசிப் பார்த்துட்டோம் ஸார்; இந்த நெலத்துக்காரன் எதுக்குமே மசிய மாட்டேங்குறான்…”

“”கவலைப்படாதீங்க… வாங்கிடலாம்; அதுக்குத்தான நான் வந்துருக்கேன்; மத்தவங்களுக்குக் குடுத்தத விட கொஞ்சம் காசை அதிகமாத் தூக்கி எறிஞ்சா சலாம் போட்டுக் குடுத்துடுவாங்க..” பரமேஸ்வரனின் குரலில் நம்பிக்கையும் பலரை இப்படி வீழ்த்திய அனுபவமும் வழிந்தது.

சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையில் கொஞ்சம் உள்ளடக்கி பரந்து விரிந்து கிடக்கிறது சுமார் முன்னூறு ஏக்கர் நிலம். சுற்றிலுமிருக்கிற நிலங்களையெல்லாம் கே.ஜே.எம். ஏற்கனவே காசு கொடுத்து கையகப்படுத்திவிட்டது. அடுக்குமாடி வீடுகளும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுமாய் வானத்தை எட்டிப் பிடிப்பது மாதிரியான உயர உயரமான கட்டிடங்களாக நிர்மாணிக்க உத்தேசித்திருக்கிறார்கள். சிங்கப்பூரிலிருந்தும், லண்டனிலிருந்தும் பெரிய பெரிய ஆர்க்கிடெக்ட் ஜாம்பவான்கள் எல்லாம் வரப்போகிறார்கள். இந்தப் பகுதியின் முகமே மாறப்போகிறது. அதற்கு பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது காளியப்பன்தான். பரமேஸ்வரன் அவரைச் சமாதானப்படுத்தி நிலத்தை வாங்குவதற்காகத் தான் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்.

 

வேப்ப மரத்துக் காற்று சிலுசிலுவென்றிருந்தது. பம்பு செட்டிலிருந்து தண்ணீர் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.காளியப்பன் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடி கீழே உட்கார்ந்திருந்த வயதான பெண்மணிக்கு வெற்றிலை இடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணிக்கு தொண்ணூறுக்கு மேல் வயதிருக்கும். கூன்விழுந்து, உடம்பெல்லாம் சுருங்கி முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்களுடன் சந்தோஷமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தார்.

பரமேஸ்வரனும் ராம்நாத்தும் அங்கே போகவும், காளியப்பன் கயிற்றுக் கட்டிலிலிருந்து எழும்பி, அவர்களை வரவேற்று கட்டிலில் உட்கார வைத்தார்.

“”உங்க நில விஷயமாப் பேசத்தான் வந்தோம்…” பரமேஸ்வரன் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“”அப்பவே நான் ஸார்ட்ட சொல்லிட்டனே, அதை எப்பவுமே நான் விக்கிறதா இல்லன்னு…” என்றார் காளியப்பன்.

“”நீங்க கொஞ்சம் உங்க முடிவ மறுபரிசீலனை பண்ணணும்; எல்லாருக்கும் சென்ட்டுக்கு முப்பதாயிரம்னு கொடுத்துத் தான் கெரயம் பண்ணுனோம்; உங்க நிலத்துக்கு அம்பது தர்ரோம்; வீடுகள் கட்டி முடித்ததும் உங்க குடும்பம் குடியிருக்க மூணு படுக்கை அறை வசதி கொண்ட பிளாட் ஒண்ணும் ஃப்ரியாவே தர்ரோம்.. இப்பல்லாம் விவசாயத்துல என்ன வருமானம் வருது? போட்ட முதலே திரும்புறதுல்ல; உங்க மொத்த நிலத்துக்கும் சுமார் ரெண்டரைக் கோடி ரூபாய் கெடைக்கும். அதை வச்சு நீங்க வேற ஏதாவது பிஸினஸ் பண்ணலாம்; ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணலாம்; பேங்க்ல கூட டெபாஸிட் பண்ணலாம்… எதுல போட்டாலும் விவசாயத்துல வர்றத விட கண்டிப்பா அதிகமா வருமானம் வரும்…”

“”இதப் பாருங்க ஸார்; விவசாயத்த லாப நஷ்டக் கணக்குப் பார்க்கிற தொழிலா நாங்க நடத்தல; அது ஒரு வாழ்க்கை முறை; அது இல்லாட்டா செத்துப் போயிருவம் சார்..” என்றார் காளியப்பன்.

“”கொஞ்சம் சென்டிமென்ட்ட எல்லாம் தள்ளி வச்சுட்டு யோசிங்க மிஸ்டர் காளியப்பன்; காலத்துக்குத் தக்கன மாற வேண்டாமா? எல்லாத்துக்குமே பயன்பாடுன்னு ஒண்ணு இருக்குல்ல..”

“”அப்படி வாழ்க்கையில எல்லாத்தையும் பயன்பாட்டை மட்டும் வச்சி பார்க்க முடியாது ஸார்.. இதோ இந்தக் கிழவி.. அதான் எங்கம்மாவுக்கு 93 வயசாகுது. இனிமே பயன்பாடுன்னு பார்த்தா ஒண்ணுமே இல்ல; என்ன பண்ணலாம்? வெளில வீசிடலாமா?… விவசாயம் பண்ண விடுங்க.. நெலத்த விலைக்குக் கேட்டுக்கிட்டு இனி ஒருமுறை தயவு பண்ணி இங்க வராதீங்க…” கை கூப்பி வழி அனுப்பி வைத்தார் காளியப்பன்.

பரமேஸ்வரன் தான் படு தோல்வி அடைந்து விட்டதாக உணர்ந்தார். எல்லா வழிகளும் அடைபட்டுப் போனது போலிருந்தது. அலுவலகத்தில் உட்கார்ந்து நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த போது பரமேஸ்வரனுக்கு அந்த ஆச்சரியம் கவனத்திற்கு வந்தது. வில்லங்கம், பட்டா, சிட்டா அடங்கல் என்று எல்லா ஆவணங்களிலும் நிலத்தின் உரிமையாளராக சேதுராம அய்யர் என்பவரின் பெயரே இருந்தது. 1930க்கப்புறம் நிலம் கை மாறவே இல்லை. அப்படியே கை மாறி இருந்தாலும் அது முறையாகப் பதிவு பண்ணப்படவில்லை. உற்சாகத்தில் துள்ளிக் குதித்து ராம்நாத்தை சத்தம் போட்டு அழைத்தார்.

“”டாக்குமெண்ட்படி காளியப்பனுக்கோ அவரோட வாரிசுகளுக்கோ நிலத்துல எந்த பாத்தியதையுமே இல்லையே! அப்புறம் ஏன் நாம அவரோட மல்லுக் கட்டிக்கிட்டிருக்கோம்… சேதுராம அய்யரோட வாரிசு யாரையாவது கண்டுபிடிச்சட்டமின்னா, அவங்க மூலம் நெலத்த நம்ம கம்பெனிக்கு எழுதி வாங்கிக்கலாம்… இனியும் காலந்தாழ்த்தாம அவரோட வாரிசத் தேடுங்க..” என்றார் பரமேஸ்வரன்.

ஊருக்குள் அலைந்து வயதான கிழவர்களிடம் ஒருவர் விடாமல் விசாரித்ததில் மின்மினி மாதிரி ஒரு புள்ளி வெளிச்சம் தெரிந்தது. தொடர்ந்து பிரயாணித்ததில் சேதுராம அய்யரின் கொள்ளுப்பேரன் ஒருவன் நடேஷன் என்ற பெயரில் இப்போது மும்பையில் வசிப்பதாகத் தகவல் கிடைத்தது. பரமேஸ்வரன் உடனே மும்பைக்குப் பயணமானார்.

 

நடேஷனுக்கு சுமார் முப்பத்தைந்து வயதிருக்கும். தாராவி பகுதியில் சிதிலமடைந்து கிடந்த ஒரு பழைய வீட்டில் தன்னுடைய தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அன்றாட வயிற்றுப் பாட்டுக்கே அல்லாடுகிற வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார். எக்ஸ்போர்ட் பிஸினெஸ் நொடித்து சுகமெல்லாம் இழந்து, இப்போது 75 லட்ச ரூபாய் கடனுடன் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். பரமேஸ்வரன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களின் பூர்வீக நிலத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

நடேஷனின் அம்மா, “”அது எங்க பூர்வீக நிலந்தான்; ஆனால் இப்ப அங்க எங்களுக்கு யாருமில்ல.. ரொம்ப காலத்துக்கு முன்னாலேயே சொத்தெல்லாம் வித்தாச்சே…!” என்றார்.

“”இல்ல, இன்னும் விற்கப்படாம ஒரு நாலரை ஏக்கர் விவசாய நிலம் இருக்கு; ஆனால் அனாமத்தா ஒருத்தன் அனுபவிச்சுக்கிட்டு இருக்கான்…” தான் கையோடு கொண்டு போயிருந்த ஆவணங்களைக் காட்டி விளக்கமளித்தார் பரமேஸ்வரன்.

“”நீங்க சேதுராம அய்யரோட லீகல் வாரிசுங்குறதுக்கான ஆதாரங்களோட என்னோட கௌம்பி, சென்னை வந்து உங்க நிலத்த எங்க கம்பெனிக்கு எழுதிக் கொடுத்தீங்கன்னா, உங்களுக்கு ரெண்டு கோடி ரூபாய் கெடைக்கும்; அதை வச்சு நீங்க உங்க பிரச்னைகல் எல்லாத்தையும் தீர்த்துக்கலாம்…” பரமேஸ்வரன் சொல்லச் சொல்ல நடேஷனின் முகம் பிரகாசமானது.

அவர்கள் காளியப்பனின் வீட்டிற்குப் போனார்கள். சேதுராம ஐயரின் பேரன் வந்திருக்கிறார் என்றதும் குடும்பமே நடேஷனை சந்தோஷமாகப் பார்த்தது. தம் தாத்தாவின் மீது அந்தக் குடும்பத்தினருக்கு அப்படியென்ன பாசம் என்ற யோசனையின் ஆழ்ந்தார் நடேஷன்.

ஆகஸ்ட் 15, 1947. சேதுராம அய்யர் தன் பண்ணையாட்களையெல்லாம் அழைத்து தன் வீட்டில் சமைத்த பசு மெய்யொழுகும் சர்க்கரைப் பொங்கலை தொன்னை இலைத் துண்டங்களில் கரண்டி கொள்ளாமல் அள்ளி அள்ளிப் பரிமாறினார். அவர் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது.

“”என்ன சாமி விசேஷம்..?” என்றான் இருளாண்டிப் பகடை.

“”நம்ம தேசத்துக்கு சுதந்திரம் வந்துருச்சுடா; நம்மள அடிமையா வச்சு ஆண்டுக்கிட்டிருந்த வெள்ளைக்காரன் நம்ம நாட்டை விட்டு வெளியப் போப்போறாண்டா..”

“”அதனால நமக்கு என்ன சாமி?”

“”அட முட்டாப் பயலே, நம்ம நாட்ட நாமளே, ராஜாங்கம் பண்ணப் போறம்டா…”

“”நீங்க ராஜாங்கம் பண்ணுவீங்க; நாங்க என்ன பண்ணப் போறோம் சாமி?” காளியப்பனின் அப்பன் இருளாண்டி கேட்டான்.

இருளாண்டியின் கேள்வி சேதுராம அய்யருக்கு சுரீலென்றது. அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இந்தியாவில் சாதிகளின் ஆதிக்கம் உதிரும் நாள்தான் உண்மையான விடுதலை; அது சிந்திக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடக்கணுமோ? என்று எண்ணிக் கொண்டார்.

“”வியாக்கியானமெல்லாம் பண்ணாம நீங்களும் சந்தோஷமா கொண்டாடுங்கடா; காந்தி இருக்கார்; அவர் உங்களக் கைவிட மாட்டாருடா… போடா, போயி சர்க்கரைப் பொங்கல சந்தோஷமா வாங்கிச் சாப்புடுடா, கேள்வி எதுவும் கேட்டுக்கிட்டு நிக்காம…” என்று விரட்டினார்.

1950 வாக்கில் அய்யரின் ஒரே பையனுக்கு டெல்லியில் மத்திய சர்க்காரில் வேலை கிடைத்து அவன் அங்கு போகவும், பையனை விட்டுப் பிரிந்திருக்க முடியாத அய்யரும் அய்யரம்மாவும் கிராமத்திலிருந்த நிலபுலன்களையும் சொத்து சுகங்களையும் விற்றுக் காசாக்கிக் கொண்டு டெல்லிக்கே போய்விட முடிவு செய்து, ஒவ்வொன்றாக விற்கத் தொடங்கினார்கள். கடைசியில் இருளாண்டியின் குடும்பம் குடிசை போட்டுத் தங்கியிருந்த ஏரிக்கரைத் தோப்பு நிலம் மட்டும் மீதமிருந்தது. அய்யர் இருளாண்டியை வீட்டிற்கு அழைத்தார்.

“”எல்லாத்தையும் வித்திட்டீங்களே சாமி, இனிமே இந்தப் பக்கமே வரமாட்டீகளா” இருளாண்டியின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“”வயதான காலத்துல அங்கிட்டும் இங்கிட்டும் அலைய முடியாதில்லடா, அதான்; கொஞ்ச நஞ்ச தூரமா என்ன? நீ இப்ப இருக்குற தோட்டத்தப் பத்தி ஒரு முடிவு எடுக்கத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.. உங்க பாட்டன் காலத்துலருந்து எங்கள அண்டியே பொழச்ச, உங்கள அப்படி நிர்க்கதியா விட்டுட்டுப் போக மனசு கேட்கலடா.. பேசாம அந்த நெலத்த நீயே எடுத்துக்கடா…”

“”அய்யோ சாமி, என்கிட்ட ஏது அவ்வளவு பணம்? அதோட பகடையெல்லாம் சொந்தமா நெலம் வச்சுப் பொழச்சா, சம்சாரிங்க பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா என்ன?”

“”நான் முடிவு பண்ணீட்டேன்டா; அந்த நெலம் உனக்குத்தான்; அதை உனக்கு நான் தானமாத் தர்றதா ஏற்கெனவே பத்தரம் எழுதியாச்சு.. இந்தா பத்தரம். பத்தரமா வச்சுக்க…” என்று மடியிலிருந்து ஒரு பத்திரத்தை எடுத்துத் தரவும், “சாமி’ என்றபடி அவரின் கால்களில் விழுந்தான்.

“”அடக் கோட்டிப் பயலே எழுந்திருடா… பதமா பொழச்சுக்கடா. இதை அப்படியே வச்சுக்காதேடா, தலையாரிட்டக் குடுத்து பத்தரப் பதிவு ஆபிசுல போயி பதிஞ்சு வச்சுக்கடா…” என்றும் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.

கதை போல நிலம் தங்கள் கைக்கு வந்து வரலாற்றைச் சொல்லி, காலத்தின் கசங்களும் பழுப்புமேறிக் கிடந்த சேதுராம அய்யர் தன் பாட்டனுக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தை எடுத்து நடேஷனிடம் கொடுத்தார் காளியப்பன்.

“”இதெல்லாம் செல்லாது மிஸ்டர் நடேஷன். ரெஜிஸ்டர் ஆபிஸ்ல இந்தப் பத்திரம் பதிவு பண்ணப்படவே இல்ல…” அவசரமாய்ச் சொன்னார் பரமேஸ்வரன்.

நடேஷன் அந்தப் பத்திரத்தையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சேதுராம அய்யரின் கையெழுத்தை கைகளால் மெதுவாய் வருடினான். அவனது கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. நடேஷன் நா தழுதழுக்கப் பேசத் தொடங்கினான்.

“”மன்னிக்கனும் மிஸ்டர் பரமேஸ்வரன்; இந்த நெலத்தை காளியப்பனே தொடர்ந்து அனுபவிக்கட்டும். தானமாத் தந்தத திருப்பி வாங்குறது முறை இல்ல. நீங்க உங்க பிளான்ல மாற்றம் பண்ணிக்குங்க… மிஸ்டர் காளியப்பன். நாளைக்கு நீங்க பத்திர பதிவு அலுவலகத்துக்கு வந்துடுங்க, இதை முறைப்படி உங்க பேருக்கே மாத்திக் குடுத்துடுறேன்… அப்பதான் உங்களுக்குப் பின்னாடி பிரச்னை வராது…” என்றான் நடேஷன்.

நன்றி கதைகள் | By வாணிஸ்ரீ சிவகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 3 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum