சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்திரி மேளா கண்காட்சி Khan11

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்திரி மேளா கண்காட்சி

2 posters

Go down

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்திரி மேளா கண்காட்சி Empty வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்திரி மேளா கண்காட்சி

Post by நண்பன் Fri 17 Jun 2011 - 12:21

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்திரி மேளா கண்காட்சி
(களுத்துறை தினகரன் நிருபர்)
பண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் திறமையை பாராட்டி ஊக்குவிக்கும் முகமாக கடந்த 4 – 5 ஆம் திகதிகளில் களுத்துறை நகர மண்டபத்தில் நடைபெற்ற களுத்துறை மாவட்ட ‘ஸ்திரி மேளா’ கண்காட்சி மற்றும் இணைக் கருத்தரங்கு போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத் தலைவி விசாக்கா தர்மதாச அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் களுத்துறை மாவட்டத்தில் அரச பணிகள், சமூக சேவைகள் உட்பட பல்வேறு துறைகளிலும் வெற்றிபெற்ற மற்றும் திறமைகளை வெளிக்காட்டிய துணிச்சல் மிக்க பெண்கள் பாராட்டப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வின் பிரதான அதிதிகளாக திருமதி பேரியல் அஷ்ரஃப், திருமதி அமரா பியசீலி ரத்னாயக்க, திருமதி குசும் விக்கிரமநாயக்க, மாலனி பொன்சேகா, ரோஷி சேனாநாயக்க, அசோக்கா லங்காத்திலக்க, உப்புலாங்கனி மாலகம, சந்திக்கா சொய்சா ஆகியோருடன் மேல் மாகாண சபை உறுப்பினர்களான லால் குணத்திலக்க, சுதத் மத்துகமகே உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இவ் வைபவத்தின் போது ஐக்கிய நாடுகளின் சபையின் பெண்களுக்கான 4213 ஆம் முன்மொழிவின் கீழ் 1325 ஆம் கூற்றை முன்னுதாரணமாக கொண்டு பெண்கள் தனது பாதுகாப்பு மற்றும் உரிமைகள் மூலமாக வாழக்கையை எவ்வாறு பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் முகாமைத்துவம், வாழ்க்கை போராட்டம், குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, அனர்த்த முகாமைத்துவம், சிறுவர் பராமரிப்பு, சுயதொழில் அபிவிருத்தி, பெண் அலங்கார கலை என்பவற்றிற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

மேலும் இவ் வைபவத்தின் நோக்கம் பற்றிய கருத்தை தினகரனுக்காக வெளியிட்ட உலக தொழில் சங்க உப தலைவியும் கொழும்பு 1325 குழுவின், கொழும்பு மாவட்ட இணைப்பாளருமான திருமதி வை. பீ. த. சில்வா அவர்கள், இன்று இலங்கை சனத் தொகையில் 53 சதவீதம் பெண்கள் எனவும் அதேபோல் வாக்காளர் பட்டியல்களில் 56 சதவீதமானவர்கள் பெண்களாக இருந்தும் 1927 ஆண்டு முதல் இன்று வரை பாராளுமன்றத்தில் 6 சதவீதத்திற்கும் குறைவான பெண்களின் அங்கத்துவமே காணப்படுகின்றது. இந்நிலை மாற்றப்பட்டு 20 சதவீதமான பெண் அங்கத்தவர்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பதுடன் ஏனைய துறைகளிலும் பெண்களின் அங்கத்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கி கூறியதுடன் உலகின் முதல் பெண் பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்க, இந்திரா காந்தி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட பல பெண் தலைவர்களினையும் உதாரணம் காட்டினார்.

இலங்கை பொருளாதாரத்தை பொறுத்தளவில் பெண்களின் பங்கே கூடியளவில் கொண்டுள்ளதாகவும் தேயிலை, இறப்பர், தென்னை, தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி மற்றும் வெளிநாடுகளில் பணிப் பெண்கள் மூலம் இலங்கைக்கு பாரிய அளவிலான வருமானத்தை பெற்றுக் கொடுப்பதுடன் தனிமனித வாழ்க்கையை எடுத்து நோக்கின் இவர்களது வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமோ அபிவிருத்தியோ காணப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். எனவே இவர்களது முன்னேற்றத்திற்காக இவ்வியக்கம் எதிர்காலத்தில் இன, மத, பேதமின்றி உறுதியுடன் செயல்படுமெனக் கூறியதுடன்

பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் பெண்களின் வாழ்க்கை போராட்டத்தின் விடுதலைக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கில் வாழும் அப்பாவி பெண்களினதும் சுபீட்சமான எதிர்காலத்திற்கும் உதவும் வகையில் எதிர்வரும் காலப் பகுதியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி, நுவரெலியா, போன்ற மாவட்டங்களிலும் செப்டம்பர் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திலும் அதேவேளை மன்னார் மற்றும் வவுனியா போன்ற இடங்களில் நடமாடும் சேவை மூலமும் இவ்வாறான நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் இப்பிரதேச பெண்களினதும் விழிப்புணர்வையும் ஆலோசனைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

இதன் இறுதி வைபவம் டிசம்பர் மாதம் 8, 9, 10 ஆம் திகதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களதும் மற்றும் அவரது பாரியார் ஷிராணி ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகா நாட்டு மண்டபத்தில் மாபெரும் விழாவாக வெளிநாட்டு மகளிர் அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்திரி மேளா கண்காட்சி Empty Re: வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்திரி மேளா கண்காட்சி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 18 Jun 2011 - 6:13

நல்ல செய்தி பகிர்வுக்கு நன்றி


வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்திரி மேளா கண்காட்சி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum