சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மாற்று மருத்துவம்  -  அலெக்சாண்டர் தொழில் நுட்பம். Khan11

மாற்று மருத்துவம் - அலெக்சாண்டர் தொழில் நுட்பம்.

Go down

மாற்று மருத்துவம்  -  அலெக்சாண்டர் தொழில் நுட்பம். Empty மாற்று மருத்துவம் - அலெக்சாண்டர் தொழில் நுட்பம்.

Post by ஹம்னா Sat 18 Dec 2010 - 20:43

மாற்று மருத்துவம்— அலெக்சாண்டர் தொழில்நுட்பம்

அலெக்ஸாண்டர் தொழில் நுட்பம் என்பது ரிலாக்ஸேஷன் மருத்துவ முறையில் பின்பற்றப்படும் ஓர் உத்தி. இதைக் கண்டுபிடித்தவர் ஃப்ரெடரிக் அலெக்ஸாண்டர் என்பவர். இவர் ஒரு மருத்துவர் அல்ல, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகர்!

ஒவ்வொரு மனிதனும் தனது உடலின் சீரான இயக்கத்துக்குப் பொறுப்பாகிறான். தன் உடல் மற்றும் மனதைப் புரிந்து கொள்ளும் திறமையை அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும் _இதுதான் அவரது கண்டுபிடிப்புக்கு அடிப்படை.

தொடக்கத்தில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் அலெக்ஸாண்டரால் நீண்ட வசனங்களைப் பேசமுடியாமல் போனது. என்ன காரணம்? அவருக்கு நினைவாற்றல் குறைவா? அல்ல. அவரது தொண்டையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகத்தான் நீண்ட வசனங்களைப் பேசமுடியவில்லை. ஓரிரு வாக்கியங்களைப் பேசியவுடனே தொண்டையில் ஒருவித கரகரப்பு, வலி. ஒரு கட்டத்தில் குரலே எழும்ப முடியாமல் போய்விட, பதற்றத்துடன் மருத்துவரை அணுகினார். அவரது குரல்வளையில் பாதிப்பு என்று கூறினார் மருத்துவர். அதற்குரிய மருந்துகளை எழுதிக் கொடுத்து, ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிபாரிசு செய்தார்.

மருத்துவர் கூறியபடியே மருந்துகள் சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொண்டாலும் அலெக்ஸாண்டரின் தொண்டை சரியாகவில்லை. அதற்குப் பிறகும் அவரால் மேடையில் வசனங்களை சரியாகப் பேசமுடியவில்லை. அப்போதுதான் அவர் அமைதியாக சிந்திக்கத் தொடங்கினார்.

மேடையில் இல்லாதபோது தன் குரல் சரியாக இருக்கிறது. ஆனால், மேடையில் பேசும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. ஏன் அப்படி?


தன் அறையில் பல இடங்களில் கண்ணாடிகளைப் பொறுத்திவிட்டு மேடையில் பேசுவது போன்றே நடிப்புடன் பேசத் தொடங்கினார். வசனங்களைப் பேசும்போது தான் காற்றை உள்இழுப்பதும் தன் தலையைத் தொங்கவிடுவதும் இயல்பாக நடப்பதை கவனித்தார். இதன் காரணமாக அவரது குரல்வளைகள் அழுத்தப்படுவதையும் கவனித்தார். இதனால் அவரது முதுகெலும்புப் பகுதி அழுத்தப்படுவதையும், சுவாசம் பாதிக்கப்படுவதையும் அவரால் கண்டறிய முடிந்தது. எனவே, வசனம் பேசும்போது தன் உடலை அவர் வைத்திருந்த விதம்தான் பிரச்னைக்கு மூலகாரணம் என்பதை கண்டுபிடித்தார். அதை மாற்றிக் கொள்ளும் முயற்சிகளில் அவர் ஈடுபட, பிரச்னை தீர்ந்தது.

தலை, கழுத்து, முதுகு ஆகிய மூன்றும் இணைந்து சீராக இயங்கும்போது ஒருவரின் உடல்நலமும் மனநலமும் ஒத்துப் போகின்றன என்பதை அறிந்து கொண்டார்.

தனது சக நடிகர்களைக் கவனித்து அவர்கள் மேற்படி தவறுகளைச் செய்யும்போது அவற்றைத் திருத்திக்கொள்ளச் சொன்னார். அவர்களும் இதனால் பலனடைந்தனர். ஆக, அலெக்ஸாண்டர் நுட்பம் பரவத் தொடங்கியது. இதை சிகிச்சை என்று சொல்வதைவிட ஒருவித புரிந்து கொள்ளுதல் என்று கூறலாம். அதாவது, நம் உடலைத் தெளிவாக அறிந்து கொள்ளும் முயற்சி. அலெக்ஸாண்டர் நுட்பத்தின் அடிப்படைகள் இவைதான்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மாற்று மருத்துவம்  -  அலெக்சாண்டர் தொழில் நுட்பம். Empty Re: மாற்று மருத்துவம் - அலெக்சாண்டர் தொழில் நுட்பம்.

Post by ஹம்னா Sat 18 Dec 2010 - 20:52

1. தொடக்க காலத்தில் தான் எதைச் செய்ததாக நினைத்தோமோ, அதை உண்மையில் செய்யவில்லை என்பதை அலெக்ஸாண்டர் உணர்ந்து கொண்டார். உதாரணத்துக்கு _ முதுகெலும்பிலிருந்து தனது தலை திரும்பியுள்ளது என்று அவர் நினைத்திருக்க, கண்ணாடியில் பார்க்கும்போது அவரது தலை குனிந்திருந்தது தெரியவந்தது. இதிலிருந்து உங்கள் புலன்கள் உங்களுக்கு உண்மையைத்தான் உணர்த்துகின்றன என்பது நிச்சயம் அல்ல என்ற முடிவுக்கு வந்தார் அலெக்ஸாண்டர். அதுவும் நீண்ட காலத்திற்கு உடலை தவறாகப் பயன்படுத்தியிருந்தால் புலன்கள் நம்மை ஏமாற்ற வாய்ப்பு மேலும் அதிகம் என்றார். 2.இப்போதும் கூட பலரும் அலெக்ஸாண்டர் நுட்பம் என்பது முழுவதும் உடல் சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உடல், மனம் இரண்டும் அமைந்து ஒன்றாகச் செயல்படுகிறது என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. 3. ஒரு மாணவன் தனக்கு முதுகுவலி அல்லது கழுத்துப் பகுதியில் இறுக்கம் என்று கூறலாம். உடனே ஆசிரியர் பலவித சூழல்களில் அவனை இயங்கச் செய்வார். உட்காரச் சொல்வது, டைப் செய்யச் சொல்வது, தொலைபேசியைப் பயன்படுத்தச் சொல்வது இவ்வாறு பலவிதங்களில் அவரை செயல்பட வைத்து நோட்டம் பார்ப்பார். இதையெல்லாம் பார்க்கும்போது அவன் தன் உடலுக்குச் செய்யும் தீங்குகளை ஆசிரியரால் கண்டுபிடித்து விட முடியும். எனவே, அவரால் அவற்றை சீர்செய்துவிட முடியும்.


4. உடல் தானாக இயங்குவதை நிறுத்தி நமது விருப்பப்படி இயங்க வைக்க வேண்டும். அதாவது முடிந்தவரை அனிச்சை நரம்பு மண்டலத்தைச் செயல்பட வைக்கக்கூடாது. இதுதான் அலெக்ஸாண்டர் வழிமுறை. உதாரணத்திற்கு டென்ஷனை ஏற்படுத்தக்கூடிய ஒரு செய்தியைக் கேட்கும்போது கழுத்துப் பகுதி இறுகாமல் இருக்கவும் உடல் முழுவதும் விரைத்துப் போகாமலும் இருக்கவும் உங்களால் பயிற்சி எடுத்துக் கொள்ளமுடியும். தனக்குத்தானே கழுத்து இயல்பாக இருக்கட்டும், முதுகுப் பகுதி நீண்டே இருக்கட்டும், தலை முன்புறமாகச் செல்லட்டும் என்பது போல் கூறிக்கொள்வதன்மூலம் இதை சாத்தியமாக்கலாம். அலெக்ஸாண்டர் நுட்பம் எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது அல்ல. இதன் ஒட்டுமொத்த சிறப்புகள் குறித்து அறிவியல் ஆதாரம் கிடைத்துவிடவில்லை. என்றாலும் பலவித பிரச்னைகள் இதன் மூலம் ஓரளவோ, அதிகமாகவோ சரியாகி இருப்பதாக கூறுகிறார்கள். உடல் களைப்பு, சுவாசச் சிக்கல்கள், முதுகுவலி, கழுத்துவலி, மூட்டுவலி ஆகியவற்றுக்கு இதன் மூலம் நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. முக்கியமாக ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிலிருந்து விரைவில் மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அலெக்ஸாண்டர் நுட்பம் உதவக்கூடும்.

அலெக்ஸாண்டர் நுட்பத்தைத் தன்னுள் கொண்டுள்ள ரிலாக்ஸேஷன் வழிமுறை பாதுகாப்பானது. எனினும் குறைவான ரத்த அழுத்தம் கொண்டவர்கள், தசையில் பாதிப்பு கொண்டவர்கள் (பக்கவாதம் அல்லது பித்தத்தினால் ஏற்படுவது) போன்றவர்கள் இந்த முறைகளைப் பின்பற்றுவது நல்லதல்ல. ஏனென்றால் இதற்கான வழிமுறைகளில் கீழே படுத்துக்கொண்டும், உட்கார்ந்து கொண்டும் கணிசமான நேரம் இருக்கும்படி நேரலாம். தீவிர இதயநோய் கொண்டவர்களும் இந்த வழிமுறையைப் பின்பற்றும்போது கவனமாக இருக்க வேண்டும். மனநலம் குன்றியவர்கள் _ முக்கியமாக மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் _ பயிற்சி பெற்ற மருத்துவரின் உதவியோடுதான் இவற்றை செய்ய வேண்டும். இதில் இன்னொரு சங்கடமும் உண்டு. ஒவ்வாமை காரணமாக பாதிப்பு ஏற்பட்டவர்கள் தங்கள் மனதில் கற்பனை செய்துகொள்ளும் இயற்கைக் காட்சிகளில் புற்களோ, பூக்களோ இடம் பெற்றால், ஒவ்வாமை உணர்வு ஏற்படுகிறதாம்.



மாற்று மருத்துவம்  -  அலெக்சாண்டர் தொழில் நுட்பம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum