சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இனிய இல்லத்தரசிகளை உருவாக்கும் பெற்றோர்கள் Khan11

இனிய இல்லத்தரசிகளை உருவாக்கும் பெற்றோர்கள்

Go down

இனிய இல்லத்தரசிகளை உருவாக்கும் பெற்றோர்கள் Empty இனிய இல்லத்தரசிகளை உருவாக்கும் பெற்றோர்கள்

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 17:32

ஃபாத்திமுத்து ஸித்தீக்

[ நிறைய வரதட்சணையும், சீர் செனத்தையும் கொண்டு மணமகன் வீட்டுக்கு வரும் மணப் பெண்ணுக்கு இயல்பாகவே தலை சற்று தூக்கலாகவே இருக்கும். நுழைந்த சில தினங்களிலேயே திருமணம் வரை பெற்றோர்களை ஆதரித்து வந்தது போதும், இப்போதுதான் தனியாக ஒரு குடும்பம் உருவாகியள்ளதே... தன் கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் எனும் தினுசில் ஒருவித ‘பொஸஸிவ்’ மனப்பான்மையுடன் கணவன் வீட்டாரோடு எதிர் ராஜ்ஜியம் நடத்தும் போதும் பொன்னான தாம்பத்திய வாழ்க்கையின் கடையாணி கலகலக்க ஆரம்பித்து விடுகிறது.
அன்றாட சமூக வாழ்க்கையில் ஆண் - பெண் உறவு முறையை உணர்த்த, உதாரணத்துக்கு ஒரேயொரு இறைவசனத்தை மட்டும் எடுத்துக் கொள்வதாக இருந்தால் நான்காவது அத்தியாயத்தில் 34 ஆவது வசனத்தைச் சொல்லலாம். ‘மனைவியை போஷிப்பது கணவனின் கடமை. ஆண்களே பெண்களின் நிர்வாகிகள். ஏனென்றால் அவர்களில் ஒருவரைவிட மற்றவரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். அன்றி ஆண்கள் தங்கள் பொருள்களை செலவு செய்கிறார்கள்’ என்பதாகும். இல்வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்த தேவையான அளவு பொருள் பொதிந்த வசனம் இது.]

பெண்ணுக்கு திருமணம் செய்விப்பதில் தாமதம்

கல்லூரிப்படிப்பு அத்தியாவசியமாக உள்ள இந்த காலக் கட்டத்தில் பருவ வயது எய்தியதும் திருமணம் செய்விக்க முடியாமல் போகிறது. படிப்பு முடிந்த பிறகோ, வசதியான குடும்பத்தினர்கூட மகள் ஆசைப்படுகிறாள் என்பதற்காக வேலைக்குச் செல்ல அனுமதித்து திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள். பருவ வயது காத்திருக்குமா?

வயது தன் கைவரிசையைக் காட்டும்போது பெற்றோர்கள் பரபரப்படைகிறார்கள். மகளுடைய ஆசை, அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய தோதான மாப்பிள்ளையைத் தேடிக் கைகூடி வரும்போதோ மகள், ‘இந்த மாப்பிள்ளை குண்டாக இருக்கிறார், குள்ளமாக இருக்கிறார், மீசை வைத்திருக்கிறார்’ எனும் தினுசில் கழித்துக்கட்டுகிறாள். சில சமயம் மணமகள் விதிக்கும் கண்டிஷன்கள், மணமகனின் வீட்டாருக்கு ஒத்து வருவதில்லை. மணமகன் வீட்டினரின் நிபந்தனைகள் மணமகள் வீட்டாருக்கு அடியோடு பிடிப்பதில்லை.

எல்லாப் பிரச்சனைகளையும் ஓரளவு ‘காம்ப்ரமைஸ்’ செய்து லட்சங்களில், ஆயிரங்களில் செலவு செய்து திருமணம் செய்வித்தாலும் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் புளித்துப் போய் விடுகிறது. தான் கற்பனையில் உருவாக்கி மகிழ்ந்த கணவனைப் போன்று நிஜக் கணவன் இல்லாத நிதர்சனத்தில் தூளாகிப் போகிறாள், புதுமணப் பெண். அதுவரை தான் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தன் விருப்பத்திற்கு முடிவெடுத்துப் பழகியவள், திடீரென்று கணவனும், அவனது வீட்டாரும் அவள் விஷயங்களில் குறுக்கிடுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது துடிக்க ஆரம்பிக்கிறாள். கணவனையும், அவனைச் சேர்ந்தவரையும் தன் சுதந்திரத்தில் தலையிடுவதாக குற்றப்பத்திரிகை வாசிக்கவும் அஞ்சுவதில்லை.

என்னதான் பெரிய உத்தியோகம் வகித்தாலும், மெத்தப் படித்திருந்தாலும் திருமணம், கணவன், குடும்பம் என்று ஆன பிறகு கணவனை குடும்பத் தலைவனாக ஏற்றுத்தானே ஆக வேண்டும்? அவன்தானே குடும்பப் பிரச்சனைகளில் முடிவெடுப்பவன்? கணவனின் சம்மதமின்றி மனைவி தன் இஷ்டத்துக்கு தானாக இயங்குவதை தவிர்க்க வேண்டும்.

கல்லூரிப் படிப்பு உண்டாக்கிய பாதிப்புகளில் இன்னொன்று சற்று வித்தியாசமானது. சினிமா, நாவல்களில் வரும் கதாநாயகர்களைப் போன்று நிஜ வாழ்க்கையிலும் மனைவிககுப் பாராட்டுதல்கள், பரிசுகள், மரியாதையான உபசார வார்த்தைகள், செல்லமான அழைப்புகள் … இத்தியாதிகளை எதிர்பார்த்து ஏமாற்றத்தைத் தழுவுகிறாள் புதுமணப் பெண்.

ஒரு மனைவிக்கு குடும்பம் என்பதுதான் எல்லாமும். ஆனால் ஓர் ஆண் மகனுடைய பொது வாழ்க்கையிலோ குடும்பம் என்பது ஒரு பகுதிதான்.

இன்றைய அவசர யுகத்தில், அன்றாட வாழ்க்கையில் மனைவி, மக்களின் பிறந்த நாட்களை, மணநாட்களை ஒரு கணவன் தானே ஞாபகம் வைத்திருந்து வாழ்த்துக்களும், பரிசுகளும் தர வேண்டும் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று. (ஞாபகப்படுத்திப் பெறலாமே!) ஆனால் இந்த சிறு விஷயங்களைக்கூட பெரிதுபடுத்தி சில வீடுகளில் மனைவிமார்கள் சண்டை சச்சரவிட்டு அந்த நல்ல நாட்களையும் சண்டை நாட்களாகி விடுவார்கள்.

நிறைய வரதட்சணையும், சீர் செனத்தையும் கொண்டு மணமகன் வீட்டுக்கு வரும் மணப் பெண்ணுக்கு இயல்பாகவே தலை சற்று தூக்கலாகவே இருக்கும். நுழைந்த சில தினங்களிலேயே திருமணம் வரை பெற்றோர்களை ஆதரித்து வந்தது போதும், இப்போதுதான் தனியாக ஒரு குடும்பம் உருவாகியள்ளதே … தன் கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் எனும் தினுசில் ஒருவித ‘பொஸஸிவ்’ மனப்பான்மையுடன் கணவன் வீட்டாரோடு எதிர் ராஜ்ஜியம் நடத்தும் போதும் பொன்னான தாம்பத்திய வாழ்க்கையின் கடையாணி கலகலக்க ஆரம்பித்து விடுகிறது.

மனைவிக்கு கணவன் சொந்தம் என்பது போல் பெற்றோர்களுக்கு மகன் உயிர் அல்லவா? உடன்பிறப்புகளுக்கு சகோதரன், சகோதரிகள் சொந்தமல்லவா? இவற்றையெல்லாம் அவள் படித்த கல்லூரியில் கற்பிப்பதில்லை. அவளது பெற்றோர்கள் தங்கள் கடமையிலிருந்து வழுவியதன் பலனே இவளது பலகீனம்.

ஆணும் பெண்ணும் சமமா?

‘பெண் உரிமை’, ‘பெண் விடுதலை’ எனும் பெயரில் மேலை நாடுகளில் பேசுவது, நடப்பது போன்று நம்மவர்களும் சில காலமாக ‘ஆணும் பெண்ணும் சரிசமம். உரிமையும், கடமையும், வேலையும் இருபாலருக்கும் பொது’ என்பது போன்ற கோஷங்களில் கண்மூடித்தனமாக, அதன் பின்விளைவுகளைப் பற்றியோ, நம் கலாச்சாரத்தைப் பற்றியோ கவலைப்படாமல் மேடையில் முழங்குகிறார்கள். கலர்க்கனவுகளை உலவ விட்டு, பத்திரிகைகளிலும் பிரசுரிக்கிறார்கள். கேட்பதற்கும், வாசிப்பதற்கும் சுவாரசியமாகவும் பெண்களுக்கு ஆதரவாக இருப்பது போலவும் தோன்றும். ஆனால், நடைமுறையில் உண்மை என்ன?

பிஞ்சிலேயே இஸ்லாத்தையம், ஷரீஅத்தையும் சரிவரப் பயிற்றுவிக்கப்படாததாலேயே, நாகரீகப் பின்னணியில் நடமாடும் பெயர்தாங்கி முஸ்லீம் பெண்மணிகள் தான்தோன்றித்தனமாக ‘ஸ்டேட்மெண்டுகளை’ பிறமத பத்திரிகைகளுக்குக் கொடுக்கிறார்கள். போதாக்குறைக்கு இத்தகைய பெண்கள் கானலை நீரென்று கருதி நடந்து கைசேதப்படுகிறார்கள்.

ஆக்கப்பூர்வமான, பகுத்தறிவுப்பூர்வமான மார்க்கம்; இஸ்லாம். நம்மை நேர்வழி காட்டி நெறி வழி நடத்திச்செல்ல இறைமறையும், இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறையும், பிசிறில்லாத சட்டங்களாக எக்காலத்துக்கும் பொருந்துகிறார்ப்போல் உள்ளது.

அன்றாட சமூக வாழ்க்கையில் ஆண் - பெண் உறவு முறையை உணர்த்த, உதாரணத்துக்கு ஒரேயொரு இறைவசனத்தை மட்டும் எடுத்துக் கொள்வதாக இருந்தால் நான்காவது அத்தியாயத்தில் 34 ஆவது வசனத்தைச் சொல்லலாம். ‘மனைவியை போஷிப்பது கணவனின் கடமை. ஆண்களே பெண்களின் நிர்வாகிகள். ஏனென்றால் அவர்களில் ஒருவரைவிட மற்றவரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். அன்றி ஆண்கள் தங்கள் பொருள்களை செலவு செய்கிறார்கள்’ என்பதாகும். இல்வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்த தேவையான அளவு பொருள் பொதிந்த வசனம் இது.

மேலெழுந்தவாரியாகப் பார்ப்பவர்களுக்கு இது ‘ஆணாதிக்கமுள்ள மதம்’ என்று தோன்றினாலும், ஆழ்ந்து நோக்கும்போது விஞ்ஞான ரீதியான உடற்கூறு புரிந்து, குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்க இறங்கிய வசனம் என்பதே சரியாகும். அனைத்துலகிலும் பெண்ணை போதைப் பொருளாகவும், அடிமையாகவும் வைத்திருந்த காலத்திலேயே ‘பெண்ணுக்கு உரிமையும், பெருமையும் வேண்டும். கல்வியும், சொத்துரிமையும் வேண்டும். மணவிலக்கும், மறுமண உரிமையும் வேண்டும்....’ என்றெல்லாம் முன்வந்து பொழிந்து கவுரவித்தது நம் இஸ்லாம் மட்டுமே என்பதை ஒவ்வொரு பெண்ணும் மறக்கக் கூடாது.

இஸ்லாமியக் கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்தவர்களின் குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுளும், சலசலப்புகளும் அதிகம் ஏற்படுவதில்லை. தப்பித்தவறி தவறுகள் நேர்ந்தாலும் ‘இலையில் முள் பட்டாலும், முள்ளில் இலை பட்டாலும் சேதமென்னவோ இலைக்குத்தான்!’ எனும் தத்துவத்தையே நடைமுறையில் காண்கிறோம்.

ஆணும், பெண்ணும் விட்டுக்கொடுத்து, பரஸ்பர அன்புடன் நடத்தும் இல்வாழ்க்கை இழுக்க இழுக்க நீண்டு, சுருங்கும் எலாஸ்டிக் தன்மையுடையது. ஆனால், ஒரு எல்லையை மீறும்போது ‘பட்’டென்று அறுந்து போகும் வாய்ப்புண்டு என்பதை நினைவில் வைத்து மிகவும் எச்சரிக்கையாக பாலன்ஸ் (balance) செய்து குடும்பம் நடத்த வேண்டும் இல்லத்தரசிகள். (நன்றி: ‘முஸ்லிம் முரசு’ மார்ச் 1996 இல் வெளியான கட்டுரை)

www.nidur.info


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum