சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தன்னம்பிக்கை வார்த்தைகள்.. Khan11

தன்னம்பிக்கை வார்த்தைகள்..

3 posters

Go down

தன்னம்பிக்கை வார்த்தைகள்.. Empty தன்னம்பிக்கை வார்த்தைகள்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 9:17

தன்னம்பிக்கை வார்த்தைகள்.. Confidence

இலட்சியத்தில் வெற்றிபெறுவோம் என்ற உறுதிமட்டும் இருந்தால்போதும். உங்கள் பணிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உழையுங்கள். தன்னம்பிக்கைதான் உங்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பான வாழ்க்கையாக மாற்றித் தருகிறது என்பதை மறவாதீர்கள். வெற்றியைச் சந்திக்காமல் திரும்பமாட்டேன் என்ற உங்களது உறுதிஒன்றே எப்பொழுதும் கைவிளக்காக இருக்க வேண்டும். "வெற்றிபெறவேண்டும்" என்னும் உங்களுடைய திடமான எண்ணம்தான் வேறு எந்தக் காரியத்தையும் விட மிக மிக முக்கியமானது. மிக இக்கட்டான சூழ்நிலைகளில், நான் தோற்றுவிடுவேனோ? என்று சிந்திக்காதிர்கள். நான் வெல்வேன் என்று நம்புங்கள். அப்போதுதான் பிரச்சினைகளை வெல்ல வழிபிறக்கும். வீட்டிலும், வேலையிலும், வெளியிலும் நான் வெற்றிபெறுவேன் என்கிற மனநிலையே உங்களை வெற்றிபெறச் செய்துவிடும். எதையும் ஒரு திட்டத்தோடு மட்டும் தொடங்காதிர்கள்.செயலோடும் தொடங்குங்கள்.

சிந்தனை செய்யுங்கள்; முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கை யுடனேயே உங்களுடைய சிந்தனை அமைந்திருக்கட்டும். இந்த மனப்பான்மையிலிருந்து மாறிவிடாமல் சிந்தித்தைச் செயலில் காட்ட மிகுந்த மகிழ்ச்சியுடன் உழையுங்கள். வெற்றி மிக அருகில் இருப்பதை உணர்வீர்கள்.

தாழ்வுமனப்பான்மை வேண்டாம்.அனைத்தையும் வெல்ல முடியும்.வெற்றியைப்பற்றிய சிந்தனையுடன் செயல்படுங்கள். தோல்வி, வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடமளிக்காமல் வெற்றியை மட்டுமே சிந்தித்து உயர்வடையுங்கள். உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சியத்தை நோக்கித்தான் இருக்க வேண்டும். தடைகள் எதிர்படும்பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள் மனத்தையும், செயலையும் பின்வாங்கவிடாதீர்கள். இவையெல்லாம் உங்கள் உறுதியை சோதிகக வந்தவை என்று கருதி அந்தத் தடைகளையும் தாண்டி உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடையுங்கள்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

தன்னம்பிக்கை வார்த்தைகள்.. Empty Re: தன்னம்பிக்கை வார்த்தைகள்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 9:17

வெற்றியைக் கற்பனையில் நம்பிக்கையுடன் பார்க்கும் திறன்,என்னால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்ற செயல்வேகம், எது வேண்டும் என்றாலும் பொறுமையுடன் விடாப்பிடியாக முயற்சி செய்யும் குணம், இந்த நான்கும் உள்ளவரே தன்னம்பிக்கையுள்ள மனிதர்.

நம்முடைய வெற்றி,தோல்வியைத் தீர்மானிப்பது மனவளர்ச்சியோ, மனவளர்ச்சி இன்மையோ அல்ல.நல்லதே நடக்கும் என்ற மனோபாவம்தான்.எனவே எப்போதும் உண்மையான ஆர்வத்துடன் வெற்றிக்காக உழையுங்கள். நம்முடைய உழைக்கும் நேரம் நாள்தோறும் அதிகரிக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி நமது சிந்தனை,செயல்வேகம் ஆகியவை இருக்க வேண்டும். முயற்சியை எவனொருவன் எப்பொழுது கைவிடுகிறானோ அப்பொழுதே அவனது சக்தி முழுவதும் அவனிடமிருந்து பறந்து போய்விடுகிறது.

அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல.விடாமுயற்சியினால் தான்.வெற்றியின் இரகசியம் "கடின உழைப்பு" என்ற சொற்களில் தான் அடங்கி இருக்கிறது. நம்பிக்கையும் உற்சாகமும் மட்டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடைந்துவிடலாம்.
சிந்தனையைவிடச் செயல்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். முன்னேற்றத்தையும் தரும். எப்போதும் சிந்தித்துக் கொண்டே மட்டும் இருக்காமல் செயல்பட்டுக் கொண்டெ இருங்கள்.

நீங்கள் பணிவுடன் பழகுபவர் என்றால் பலரை உங்கள் பக்கம் ஈர்த்து விடுவீர்கள். நேர்மை உள்ளம் கொண்டவர் என்றால் உங்களை எல்லோரும் நம்புவார்கள். விடாது முயற்சி செய்யும் அரிய குணத்தைப் பெற்றிருந்தால், எப்போதும் நீங்கள் வெற்றி வீரனாகத் திகழ்வீர்கள்.
மனம் அமைதியாக இருக்கவேண்டுமானால் எதிர்மறையான சிந்தனைகளையும், பிறரது திறமைகளை சிறுமைபடுத்துவதையும், கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பதையும் நிறுத்துங்கள். உங்கள் மனதை சுத்தப்படுத்துங்கள். ஊக்கமான சிந்தனைகளையே நிரப்புங்கள். எதிலேயும் நல்லதே நடக்கும் என்றே செயல்படுங்கள். இப்போது நீங்கள் தான் உலகிலேயே மிகவும் அமைதியான மனம் உடையவர்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

தன்னம்பிக்கை வார்த்தைகள்.. Empty Re: தன்னம்பிக்கை வார்த்தைகள்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 9:18

வெற்றி பெறுவோம்' என்ற திடமான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்துவிடாது செயலாற்றிக்கொண்டேயிருந்தால் மிக எளிதாக வெற்றிக் கனியைப் பறிக்கமுடியும். வாழ்க்கையில் உயரவேண்டும் என்று உங்கள் மனத்திற்கு கட்டளையிடுங்கள். கட்டளையை முழு வேகத்துடனும் விருப்பத்துடனும் அடிக்கடி இட்டால் நீங்கள் உண்மையில் அதை அடைய செயலிலும் இறங்கிவிடுவீர்கள்.தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்த ஆயுதம். இந்த ஆயுதம் இருந்தால் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு அதற்கான காரணகாரியத்தை ஆராய்ந்து தீர்வு காணமுடியும். தன்னம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மனவேதனைகளையும் நீக்குகிறது. தன்னம்பிக்கையே நீடித்த நல்வாழ்க்கையை அமைத்துத் தருகிறது.

வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்திரச்சொல் "இப்பொழுது". தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் "பிறகு". வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே எதையும் தள்ளிப் போடாதிர்கள்.

பிரச்னைகள்தாம் மிகப்பெரிய சாதனைகளையும், உறுதிமிக்க சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன. எனவே பிரச்னைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள். தோல்வி எனக்கு மனச்சோர்வை அளிப்பதில்லை. மாறாக அது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது.

எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும் ஒருவனால் வெற்றி பெறமுடியாது. தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் ஊக்கம் அவனிடம் இருந்தால்தான் முன்னேற முடியும், வெற்றி பெற முடியும். இந்த ஊக்கம் இருந்தால், கல்வியறிவு இல்லாதவனும், பொருள்வசதி இல்லாதவனும் கூட முன்னேறுவது உறுதி.

முன்னேற முயற்சியை, உழைப்பை, அறிவை, ஒழுக்கத்தை நம்புங்கள். இதைத்தவிர வேறு எதை நம்பினாலும் முன்னேற முடியாது. அறிவுக்கு இந்த உலகம் எப்போதும் வணங்கும். திறமைக்கு இருகரம் நீட்டி ஆதரவு தரும். தூய்மையான உள்ளத்திற்கு மிகுந்த வரவேற்பு தரும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

தன்னம்பிக்கை வார்த்தைகள்.. Empty Re: தன்னம்பிக்கை வார்த்தைகள்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 9:18

வேதனையை மனோபலத்துடன் எதிர்கொள்ள முடிந்தால், எப்படிப்பட்ட துக்கத்தையும் தாங்கிக்கொள்ள முடியும். வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பிரச்சனையை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதை எதிர் கொள்வது எப்படி என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்தாலே போதும். குழப்பநிலையிலிருந்து நீங்கள் வெளியில் வந்துவிட்டதாக அர்த்தம். இந்த நிலையில்தான் நீங்கள் சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கவேண்டியுருக்கும். பிரச்சனை களுக்குத் தீர்வு காணும் முன்பு மனதை சமநிலைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

மிகப்பெரிய எழுத்தாளராகத் தன்னைக் கற்பனை செய்துகொள்ளும் ஒருவன் தான் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பு 'எப்படி முடிந்தால் சிறப்பாக இருக்கும்' என்பதை கற்பனையில் பார்த்து, அதற்கு ஏற்றபடி எழுதினால் நிகழ்காலத்தில் வெற்றி பெறமுடியும். ஆகவே நாம் செய்து முடிக்க எடுத்துக்கொண்டுள்ள காரியங்களும் அதை கற்பனையில் பார்த்தபடி உருவாக்கும் குணமும் நம் வாழ்வில் நிச்சயம் பலம் சேர்க்கும். எனவே ' முடிவு இப்படி இருக்க வேண்டும்' என்று உறுதியாக கற்பனையில் படமாகப் பார்த்து முடிவு செய்துகொண்டு தீவிராமாக உழைத்து வெற்றி அடையுங்கள். இதைப் பழக்கத்தில் கொண்டுவந்து தொடர்ந்து சாதனை புரியுங்கள்.

செயல்படுங்கள். காரியத்தில் இறங்குங்கள். அறிவுடன் இருங்கள். காலத்தை வீண் அடிக்காதிர்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி. உறுதியாக நின்று, நானும் ஓர் 'வெற்றி வீரனே' என்று காட்டுங்கள். வெற்றி வீரனாக செயல்படுங்கள். நிறைந்த முயற்சியை உடையவன், மலர்ந்த வாழ்வைப் பெறுவான்.

ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி பிரார்த்திக்க மாட்டேன். ஆபத்துகளைச் சந்திக்க எனக்கு அஞ்சாமையைக் கொடு. நோய்களிலிருந்து காப்பாற்றும்படி யாசிக்க மாட்டேன். நோயைப் பொறுத்துக்கொண்டு வெற்றி கொள்ளும் மனதிடத்தை எனக்கு கொடு. வாழ்க்கை எனும் போரில் எனக்கு துணை கேட்க மாட்டேன். வெற்றியடைய சுயலாபத்தைக் கொடு. எதிர்பார்ப்புகள் என்ன ஆகுமோ? என்ற பயத்திலிருந்து காப்பாற்றும்படி வேண்ட மாட்டேன். நம்பிக்கையுடன் இருந்து வெற்றியடைய பொறுமையைக் கொடு.
-தாகூர்

நிகழ்வதை கொண்டு நிகழ்ச்சிகள் உறுதிப்படுகின்றன. அகமகிழ்வதும், தோல்வியில் வருந்துதலும் சூழல்நிமித்தம். முழுமை பெறுவதே அமைதி.
-தொல்காப்பியர்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

தன்னம்பிக்கை வார்த்தைகள்.. Empty Re: தன்னம்பிக்கை வார்த்தைகள்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 9:19

எந்தப் பணியை நாம் மேற்கொள்கிறோம் என்பது முக்கியமில்லை. அந்தப் பணியில் நம்முடைய ஆற்றலை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். நமக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி வளர்த்துக்கொள்வது நம்முடைய ஆர்வத்தையும் முயற்சிகளையும் பொறுத்தே அமைகிறது. விரும்பியது கிடைக்கவில்லையெனில், கிடைத்தை விரும்பக் கற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு காரணங்களால் நமக்குள்ளே உருவாகும் தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை, அச்சம், சந்தேகம், எதிர் காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை ஆகியவற்றறின் காரணமாக நம்மிடம் உள்ள ஆற்றல்செயல்பட முடியாமல் முடக்கி வைக்கப்பட்டுவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம்மைப்பற்றி நமக்கென்று "ஒரு சுயமதிப்பீடு" இல்லாதபோது நம்முடைய ஆற்றலைப்பற்றிய உணர்வும் நமக்கில்லாமல் போய்விடுகிறது. என்னால் இது முடியுமா? என்று சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, என்னால் முடியும் என்கிற நம்பிக்கையினைப் பெறுகிறபோது ஆற்றலும் செயல்படத் தொடங்குகிறது.

ஆற்றல் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும்தான் வெளிப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. எத்தனைத் துறைகளில் ஈடுபட்டாலும் அத்தனைத் துறைகளிலும் நம்முடைய ஆற்றலை நம்மால் வெளிப்படுத்த முடியும். ஆனால் அத்தனைத் துறைகளிலும் அக்கறை காட்டுகின்ற மனஉறுதி நமக்கிருப்பது அவசியம்.

முயற்சிகள் தொடரும்போது ஆற்றல் வெளிப்படத் தொடங்குகிறது. முயற்சி விடாமுயற்சியாகும் போது ஆற்றல் வலிமை பெறுகிறது. ஆற்றல் வலிமை பெறுகிறபோது மனத்தளவில் ஏற்பட்ட தடைகள் தகர்ந்து போகின்றன.

நான் விரும்பிய துறை கிடைக்கவில்லை. ஆகவே என்னுடைய ஆற்றல் வெளிப்பட வழியில்லை என எண்ணுவது தவறு. அவ்வாறு எண்ணுகின்ற மனிதன் தன்னுடைய ஆற்றலுக்குத் தானே தடை விதித்துக்கொள்ளுகிறவன் என்றுதான் கருத வேண்டும்.

கதவைத் தட்டி வாய்ப்புகள் தங்களை அறிவித்துக் கொள்வதில்லை. நாம்தான் வாய்ப்புகளின் கதவைத் தட்டி , திறக்க வைத்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்பு சிறிதாயினும், பெரிதாயினும் உங்களுடைய முழுத்திறமையைக் காட்டி செயல்படுங்கள். அப்போது உங்கள் ஆற்றல் வளர்ந்து கூர்மையடைவதை உணரலாம்.

தன் திறமையில் சந்தேகம், பயம், சோம்பல், வேண்டாத வீணான கற்பனை, கீழ்நிலையில் உள்ளவர்களின் துன்பத்தைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருப்பது, ஆரம்பத்திலேயே வெற்றியின் அறிகுறியை எதிர்பார்ப்பது, சிறுதடை என்றாலும் மனமுடைந்துபோவது, இவைபோன்ற பல காரணங்களால் ஒருவருக்குத் தோல்வி மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது. மனஉறுதியென்பது நமக்கு நாமே உண்மையோடும்,நம்பிக்கையோடும் உண்டாக்கிக் கொள்வதுதான்.

விழுவதில் தவறில்லை. விழுந்தபின்பும் அமைதியாய் இருப்பதுதான் தவறு. விழுந்தபின்பு மீண்டும் எழுந்து நடப்பதில்தான், நமது வெற்றியின் ரகசியமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மூடிய கதவுகளை முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்காதிர்கள். அதையே நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்காதிர்கள். திறந்திருக்கும் கதவுகளை தேட முயலுங்கள். ஒவ்வொரு வினாடியும் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் மனிதனுடைய கால்களை முன்னோக்கி நடக்கும் விதத்தில் அமைத்திருக்கின்றார்.

பார்க்கின்ற பொருட்களில் மகிழ்ச்சியில்லை. அந்தப் பொருளை பார்க்கின்ற மன நிலையில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது. முயற்சி என்னும் விளைநிலத்தில் உழைப்பு எனும் இரயில் வெற்றி அனும் இடத்தை அடைய வேண்டுமானால் உற்சாகம் என்னும் பச்சைவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்க வெண்டும்.

தாமதிப்பதால் நம் ஒளியை வீணாக்குகிறோம்.அது பகலில் விளக்குகளை எரிப்பதற்குச் சமம். தாமதம் செய்து கொண்டிருப்பவர்களும், தடுமாறிக் கொண்டிருப்பவர்களும் ஒருபோதும் செயலில் துணிந்து இறங்கமாட்டார்கள்.

ஒரு முக்கியமான காரியத்தை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுவிட்ட பின்பு, யாருடைய அபிப்பிராயத்துக்காகவும் காத்துக்கொண்டு இருக்கக் கூடாது. யாருடைய பேச்சைக் கேட்டும் இடையில் காரியத்தை நிறுத்திவிடுவதும் சரியல்ல. நாம் மேற்கொள்ள வேண்டிய காரியங்களைப் பற்றி நாம் ஆலோசனை செய்து பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. செயல் புரியாமல் சோம்பி இருப்பவர்கள் செத்துப்போன சவத்துக்கு ஒப்பானவர்கள்.

முன்னேற்றப்பாதைக்கு, அகத்தூண்டுதல் ஒரு சதவிகிதம். வியர்வை சிந்துதல் 99 சதவிகிதம் .
-எடிசன்

சுறுசுறுப்பு என்பது ஒரு செயலை நோக்கி தேக்கமில்லாமல், மந்தமில்லாமல் அதே சமயத்தில் அமைதியோடு முன்னேறும் (முன்னேற்றும்) உன்னத நிலையாகும். நாம் முன்னேற்றமடைந்து உயர்வடைவதை நம்மைத்தவிர வேறு எவராலும் தடுத்துவிட முடியாது.

எந்தத் தொழிலும் வெற்றி பெறக் கூடியவர்கள் தங்களுடைய வேலை நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள்.
-ஆண்ட்ரு கார்னீகி.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

தன்னம்பிக்கை வார்த்தைகள்.. Empty Re: தன்னம்பிக்கை வார்த்தைகள்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 9:19

ஊதியத்திற்கு மேற்பட்ட உழைப்பைச் செய்வதன் மூலம் நமக்கு நாமே பெரிய உதவியை செய்து கொள்கிறோம்.

ஒரு இடத்திற்குப் போய் சேரவேண்டுமானால், இருக்கின்ற இடத்தை விட்டுத்தான் செல்லவேண்டும். ஆக உயர்ந்த குறிக்கோளை அடைய வேண்டுமெனில் சில இன்பங்களை மறந்துதான் ஆகவேண்டும்.

'இன்று' என்பது நம்மிடம் உள்ள ஒரு பணநோட்டு போன்றது. அதனை எப்படி வேண்டுமானாலும் நம்மால் செலவு செய்ய குடியும். 'நாளை' என்பது பின்தேதியிட்ட காசோலை போன்றது. அந்தத் தேதி வரும்வரை நம்மால் அதனைக் காசாக்க முடியாது. இன்று அது வெறும் தாளுக்குச் சமம்.

தோல்வியை சந்திக்க நேரும் போது அதிருப்தி ஏற்படுவது இயற்கைதான். ஆனால் அந்த அதிருப்தியானது உங்களை இயலாதவர்களாக, அவமானப்பட்ட வர்களாக உருமாற்றும் முன்பே அதை "பிடிவாதமாக" மாற்றிக் கொள்ளுங்கள். எதையோ சாதிப்பதற்காக நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். அது என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுடைய வேதனைகளை நினைத்து வருத்தப்படாதீர்கள். அப்படி வருத்தப் பட்டாலும் அதை வெளியில் சொல்லாதீர்கள். முக்கியமாக 'சுய இரக்கம்' என்பது கூடாது.

உங்களை யாராவது விரும்பாவிட்டால் அது அவர்களுடைய பிரச்சனை. அது பற்றி நீங்கள் வருத்தப்பட வேண்டிய தேவை இல்லை. மற்றவர்கள் உங்களுடன் கழிக்கப் போகும் நேரம் ரொம்பக் குறைவுதான். ஆனால் உங்களுடன் நீங்கள் 24 மணி நேரம் கழிக்க வேண்டியிருக்கும். உங்களுடைய கம்பெனி உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும்.

விரும்பியதை யாராலும் பெறமுடியும்.முயன்றால் முடியாதது இல்லை.யாரையும் நம்மைவிட தாழ்ந்தவர்களாக எண்ணிவிடக் கூடாது. நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களை மிகவும் முக்கியமானவராக, தவிர்க்க இயலாதவராக மாற்றிக் கொள்ளுங்கள். இனிமையான பேச்சுக்களின் மறுபதிப்பாக இருங்கள்.

ஒரு மனிதனுக்குத் தேவை தன்னம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கையே அவனை முழுவேகத்தில் செயல்படவைத்து தடைகளையும் தாண்டி வலிமையுடன் வெற்றியைச் சந்திக்க வைக்கிறது.எல்லாக் கவலைகளையும் மறக்கவும், கவலையே இல்லாமல் வாழவும் தன்னம்பிக்கையுடன் சிந்தியுங்கள்.வழிபிறக்கும்.

"தோல்வி உறுதி" என்கிற நிலையிலும் போராடத் துணிந்தவனே உண்மையான வீரன். "வெற்றி பெறுவோம்" என்று நம்புங்கள். இறுதிவரை போராடுங்கள். விடாமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
-முசோலினி தன் மேஜை மீது வைத்திருந்த பொன்மொழி

மனதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.இலட்சியத்தை அடையும்வரை, நமது மனமும் செயலும் இலட்சியத்தை நோக்கியே சென்று கொண்டிருக்க வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றினாலும் மனப்பழக்கத்தினால் நம்முடைய பணிகளை வெகு எளிதாக தொடர்ந்து செய்யமுடியும். கடினமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சியை காணும் மனநிலை கொண்டவர்கள் எப்போதும் வெற்றியையும் அதன்மூலம் புகழையும் பெறுகிறார்கள். மனம் சோர்ந்து போனால் நீங்கள் இதுவரை பெற்ற வெற்றிகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் நண்பர்கள் உங்களைப் பாராட்டிய அம்சங்களை நினைவிற்குக் கொண்டுவாருங்கள். நாம் எழுந்து எழுந்து உறுதியுடன் எடுத்து வைக்கும் முயற்சிகளில்தான் நம்பிக்கையும் வெற்றியும் உள்ளன.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

தன்னம்பிக்கை வார்த்தைகள்.. Empty Re: தன்னம்பிக்கை வார்த்தைகள்..

Post by ஹம்னா Mon 27 Jun 2011 - 9:21

சிறந்த கட்டுரை நன்றி ##* ##*


தன்னம்பிக்கை வார்த்தைகள்.. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தன்னம்பிக்கை வார்த்தைகள்.. Empty Re: தன்னம்பிக்கை வார்த்தைகள்..

Post by இன்பத் அஹ்மத் Mon 27 Jun 2011 - 9:39

சிறந்த கட்டுரை :”@:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

தன்னம்பிக்கை வார்த்தைகள்.. Empty Re: தன்னம்பிக்கை வார்த்தைகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum