Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய நாகரீகம்..
4 posters
Page 1 of 1
இன்றைய நாகரீகம்..
இன்றைய நாகரீகம்
மனித இனமானது வாழ்விலே, தனிமனிதன் கடமை, கூட்டு வாழ்வின் கடமை என்ற இரண்டையும் சரிவர நிறைவேற்றி வருவதற்கு, ஒழுக்கம்தான் மிகவும் சிறந்த பாதையாகும். வெகுகால அனுபவத்தால், ஆராய்ச்சியால், அறிவின் உயர்வில் கண்ட விளக்கமே ஒழுக்கமாகும்.
மனித வாழ்க்கையைச் சீர்படுத்தும், செம்மைப்படுத்தும், ஒரு சிற்பியே ஒழுக்கம் எனலாம்.
ஒழுக்கங்களில், கற்பு ஒழுக்கமே தலையாயது. எண்ணம், சொல், செயல்களின் விளைவால் தனக்கோ, உணர்ச்சிக்கோ கேடு உண்டாகுமெனில் அதைச் செய்யக் கூடாது என்று அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட முடிவுதான் பலவிதமான ஒழுக்கங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
கற்பொழுக்கம் தவறினால் ஏற்படும் விளைவு, தனி மனிதன் வாழ்விலும், சமுதாய வாழ்விலும், எதிர்கால மக்கள் வாழ்விலும், உடல் நலத்திலும், மன வளத்திலும் பல கேடுகளைப் பயப்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். உயிரை விட ஒழுக்கம் மிகப் பெரியதாகக் கொள்ள வேண்டும்.
இச்சையின் வேகம்
எல்லா அனுபோக அனுபவங்களுக்கும் எண்ணம் - இச்சையே அடிப்படையாகும். இன்ப துன்பங்கள் அனைத்தையும் உணர்வது எண்ணமே. இச்சை தோண்றி விட்டால், அதை உடற்கருவிகளைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அனுபவித்தோ, ஆராய்ந்தோ தான் முடிக்க வேண்டும். இதைத் தணிக்க வேறு வழியில்லை. ஆகையினால் வாழ்க்கை நலனுக்கு எதிராக, தீமை தரக்கூடிய எண்ணங்களும், இச்சைகளும் எழாதவாறு நல்ல ஒழுக்க வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஆண் பெண் நட்பு
பருவ வயது அடைந்த ஆண், பெண் ஒருவரோடு ஒருவர் தனியே சந்தித்து பேசுதல் ஒழுங்கீனமாகக் கருதப்படும். திருமணமான தம்பதிகள் ஒருவரோடு தனித்து உரையாடலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி மற்றவருக்கு எந்த விதத்திலும் இடையூறாக இல்லாது இருக்க வேண்டும். கும்பலாகப் பலர் கூடியிருக்கும் போது ஆணும் பெண்ணும் தங்களுடைய கருத்துகளை, கொள்கைகளைத் துணிவோடு பிறருக்குச் சொல்வது நல்லது. இதுவே உயர்வான சிறப்பான ஒழுக்கமாகும்.
வாழ்க்கையிலே ஆண், பெண் நட்பொழுக்கத்தைக் காப்பாற்ற உலக மக்கள் அனைவர்களது உடல் மன நலன்களையும், எதிர்கால மக்களின் நலன்களையும் பாதுகாக்க, இத்தகைய கட்டுப்பாடு எல்லா நாட்டினருக்கும் மிகவும் அவசியம். ஒவ்வொருவரும் இதை ஆழ்ந்து ஆராய்ந்து இதிலடங்கிய நன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
இயற்கையின் வேகம்
மேட்டில் கொட்டும் தண்ணீர் பள்ளம் நோக்கி ஓடும், மேல்நோக்கி எறிந்த பொருள் கீழே பூமியை நோக்கித் திரும்பி வரும். பக்கத்தில் நின்று இருக்கின்ற கம்பத்திலோ, கொம்பிலோ செடி, கொடிகள் சுற்றிக் கொள்ளும். இவை போல இளம் வயதில் பருவகால ஆண், பெண் உள்ளங்கள் ஒன்று சேரும் இயல்பு உடையன. சமூகத்திலுள்ள ஒழுக்க வழக்கக் கட்டுப்பாடுகளால், எண்ணத்தின் வேகமும் அதை ஒட்டிய செயல் வேகமும் தடைப்படுவது ஓரளவிற்குத் தான் நிற்கும்.
நீரைத் தேக்கிக் கட்டியிருந்தாலும், அந்தக் கரை தாங்கும் அளவே தடையாகும். அப்போதும் தண்ணீர் வேகம் எப்போதும் கரையை உடைக்கும் வகையிலேயே அமைந்து இருக்கும். ஒன்றுடன் ஒன்று பிணைந்தால் - சேர்ந்தால் மற்றொன்று விளையும் என்பது இயற்கையாகும். எனவே, அறிஞர்கள் ஆண் பெண்களின் இயல்பறிந்து, அவர்களுடைய நட்பின் விளைவறிந்து, அவர்கள் ஒழுக்கமுடன் வாழ வழிகாட்டுவர்.
விளைவறிந்த விழிப்பு
விறகு எரிப்பதற்காகவே வாங்குகிறோம் எனினும், தேவையான போதுதான் எரிக்கின்றோம். அதுவரையில் மறந்தும் நெருப்புக்கு அருகில் வைக்க மாட்டோம். அது போலவே பருவம் அடைந்த ஆண் பெண்களைத் திருமணம் ஆவதற்கு முன்பு நெருங்கி உறவாட விடக்கூடாது.
அறிவின் உயர்வில் பற்றற்று வாழும் சூழ்நிலைகள் பல அமைந்த போதிலும், அளவு மீறி ஆண் பெண்ணுடனோ, பெண் ஆணுடனோ நட்புக் கொள்ளுதல் கூடாது. அவ்வித நட்பு ஒழுக்கத்திற்கு ஊறு விளைவித்து விடும். பத்து வயது வரையிலுள்ள சிறுவர்களுக்கும், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் வேண்டியதில்லை. எல்லோரும் கூடிக் கலந்து பேசத்தக்க பொது இடத்திலும், எல்லோரும் கூடித் தொழில் செய்யும் இடத்திலும், ஒழுக்கமான முறையில் யாவரும் நட்புக் கொள்ளலாம்.
நயவஞ்சகர்களின் காதல் :
சுற்றத்தார்கள், சமூகம், ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் கணவன் மனைவியராகி இல்லறம் நடத்துவதே ஆண், பெண் நட்பு ஒழுக்கத்தில் சரியான-பொருத்தமாக இருப்பாகும். இத்தகைய ஒழுக்கம் ஒரு மின்விளக்கில் இரு மின் கம்பிகள் எதிர் மின்வாய்-நேர் மின்வாய் (Negative and Positive) காந்தக் கம்பிகள் சீராக வந்து இணையும் போது எந்தவிதமான விபரீத விளைவுகளையும் தராமல், நல்ல வெளிச்சத்தை தொடர்ந்து கொடுப்பது போல் ஆகும். இது களங்கமில்லாத நலம் தருகிறது. இந்த ஒழுக்கம் தவறிய ஆண் பெண் நட்பு, இருவிதக் கம்பிகளும் சேர வேண்டிய இடத்தில் முறைப்படி சேராமல் மத்தியிலேயே ஒன்றுடன் ஒன்று சேரும்போது, மின்குறுக்கு ஏற்பட்டு முரணான விளைவுகள் ஏற்படுத்தும்.
பருவம், இரத்த ஓட்டம், உடல் இரசாயன மாறுபாடுகளுக்கேற்றவாறு விருப்ப வேகமாக எழும் எண்ணத்தின் இயல்பாலும், உலக அனுபவங்களை அடையாத கள்ளங் கபடமற்ற தன்மையினாலும், தந்திரசாலிகளின் மோக வேகத்தினால் காட்டும் பரிவைக் காதல் என்றே எண்ணி ஏமாந்து பல ஆண்களும், பெண்களும் கற்பைப் பறிகொடுத்து விடுகிறார்கள்.
சிறிது காலத்திலேயே உண்மையை வெளிப்படையாகத் தெரிந்து கொண்ட போதிலும், திருத்திச் சரிபடுத்திக் கொள்ளக்கூடிய தவறு அன்று. இத்தகைய ஒழுங்கீனம், இதன் விளைவுகளை வாழ்நாள் முழுவதும் அனுபவித்தேயாக வேண்டும்.
கிடைத்ததை தின்னும் உணவுக் கலாச்சாரம். மருந்தை நம்பி திறனை மறக்கும் மயக்க கலாச்சாரம். இயற்கையை ரசித்து வாழும் நிலை மறந்து மயக்கத்தில் வாழும் நிலை. வாழ்வின் நோக்கம் அறியாத இழிவு நிலை. என பேசிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு சரியான முறையான பயிற்சிதான். மகான்கள் வாழ்ந்து வழிகாட்டிய இந்தியக் கலாச்சாரத்தை மலரச்செய்வதன் மூலமே இதற்கு விடைகாண முடியும் என்பது தாங்கள் அறிந்ததே. சிந்தித்தது போதும். இன்றே செயலில் இறங்கி வெற்றி காணுங்கள். அருகில் உள்ள யோக மையங்களில் யோகப் பயிற்சிகள், தியானப் பயிற்சிகள் கற்று பயனடைய ICRO வேண்டுகிறது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum