சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்! Khan11

மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்!

Go down

Sticky மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்!

Post by ஷஹி on Wed 29 Jun 2011 - 16:10

மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்! Bakteria-1மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்! Bakteria
இன்று உலகம் முழுவதும் பேசப்படுகின்ற ஒரு விடயம் நோய்கள் பற்றியதாகும். மனிதனின் நோய்க்கு கிருமிகள் காரணமாக அமைகின்றன. இலங்கையிலும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எலிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி மக்களை கிலிகொள்ளச் செய்த சமாச்சாரம் நாம் அறியாத விடயமா என்ன?

இவற்றுக்கெல்லம் காரணமாக அமைகின்ற கிருமிகள் எம் உடம்பினுள் சென்று உரித்தான நோய்களை ஏற்படுத்தி விடுகின்றபடியினால்தான் இறப்பு ஏற்படும் அளவிற்கு இன்று இந்நோய்களின் தாக்கம் காணப்படுகிறது. எனவே தான் நுண்ணங்கிகள் பரவாது தடுக்கும் நோக்குடன் நமது சுற்றாடலையும், சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வுகள் தற்போது பட்டிதொட்டியெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

சரி இக்கிருமிகள் எமது உடம்பில் புகுந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி ஆளையே அபேஸ் பண்ணிவிடும் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதில் முழுமையான உண்மை இல்லை என்றுதான் கூறவேண்டும்.கொலராவை ஏற்படுத்தும் கிருமி நம் உடம்பினுள் சென்றுவிட்டால் சில மணி நேரத்தினுள் நமக்கு பேதி ஏற்படும் வாந்தியோ பயங்கரமாக வெளியேறும். சிறிது நேரத்தினுள் நாடி நரம்பு கூட தளர்ந்து மயக்கம் ஏற்பட்டு சிறுநீர் வெளியேறாது இருதயமோ சரியாக இயங்காது விடும் அவ்வளவு பயங்கரமானது இக்கொலரா கிருமி.

நமது உடம்பு ஆரோக்கியமாக உள்ள நிலையில் இது நடவாது. இதனை நிரூபித்திருக்கிறார் ஒரு விஞ்ஞான டாக்டர். என்ன நம்ப மறுக்கிறீர்களா? இதோ அச்சம்பவம் 1892ம் ஆண்டில் புரசரும் டாக்டருமான பெட்டன் கோபர் என்ற மருத்துவ விஞ்ஞான கொலரா தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கிருமிகளை ஒரு சோதனைக் குழாயினுள் நிரப்பிக்கொண்டு எல்லோர் முன்னிலும் அதைக்காட்டிவிட்டு கிருமிகளை வாயில் கொட்டி விழுங்கி விடுகிறார். பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள்.

என்ன ஆச்சரியம் விஞ்ஞானிக்கோ கொலராவும் இல்லை, பேதியும் இல்லை வாந்தி மயக்கம் எதுவுமே ஏற்படவில்லை. அவர் கூறினார். ‘ஆரோக்கியமான உடம்பில் எந்த நோய்க்கிருமி நுழைந்தாலும் நோய் உண்டாவதில்லை. இதை நிரூபித்துக் காட்டவே இச்சாகசத்தை செயதேன்’ என்று விடை பகிர்ந்தார்.

நோயினைத் ஏற்படுத்தும் கிருமிகளோ காற்றில், தண்ணீரில் கலந்தும், உணவு வழியாக சேர்ந்தும் விடுகின்றன. ஈ, நுளம்பு, நாய், பன்றி, குரங்கு போன்றன மூலமாக பரவியும் வருகின்ற நிலையும் காணப்படுகிறது. எவ்வடிவில்தான் கிருமிகள் வந்திடினும் ஆரோக்கியமான உடம்பை எந்தக் கிருமியாலும் அசைக்க முடியாது. கிருமிகள் தோற்றுவிடுகின்றன. அப்படித்தான் நோய்வந்தாலும் உடம்பினுள் இருக்கின்ற கிருமிகளை விரட்டியடிக்க புதிய புதிய மருந்துகளும், சிகிச்சை முறைகளும் இன்றைய நவீன உலகில் வந்தவண்ணமே உள்ளன. இதன் காரணமாக கிருமிகளைக் கொல்லவும் அல்லது அதன் வளர்ச்சியைத் தடுக்கவும் முடிகிறது.

கியணீடைடi கிருமிகளை அடையாளம் கண்டு பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வைரஸ் கிருமிகள் கண்டறியப்பட்டு சுமார் 72 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்னும் இன்னும் கிருமிகளைப் பற்றி ஆராய்ந்தே வருகின்றனர் விஞ்ஞானிகள். கிருமிகள் நோய்களை உண்டாக்குவது போல் பல்வேறு நன்மைகள் செய்யும். கிருமிகளும் ஏராளமாகவே இருப்பது கண்டறியப்பட்டுள்ள உண்மையாகும்.

கிருமி நோய்களைத்தான் உண்டாக்குகின்றன என்று நம்மில் பலர் நினைப்பதில் தப்பேதுமில்லை. அவற்றிலிருந்து சற்று விலகி அவை செய்யும் நன்மைகளையும் சீர்தூக்கி பார்போமானால் பாலைத் தயிராக்கும் பணியில் இந்த கண்ணுக்குத் தெரியாத கிருமிதான் உதவுகிறது. பூதக் கண்ணாடியில் பார்த்தால் நாம் ஒருவருமே தயிர் உண்ணமாட்டோம். அவ்வளவு கிருமிகள் அங்கே காணப்படும். இதனைப்பலர் நன்மை செய்யும் கிருமிகள் என்று அழைப்பதுண்டு.

அதுமட்டுமன்றி நமது சிறுகுடலில் இனப்பெருக்கம் செய்து கொண்டு ஏராளமான கிருமிகள் வாழ்ந்து வருகின்றன. இவை எமக்கு கெடுதல் செய்யாது. நாம் உண்ணும் உணவைச் ஜீரணிக்க நீர்களைச் சுரந்து கொடுத்து உதவுகிறது. இவை இல்லாவிடின் உணவுப் பொருள்கள் இரத்தத்தில் கலக்க இயலாமல் போகும். ஆதலினால் தீய விளைவுகளை ஏற்படுத்திவிடும். காய்கறி உணவில் காணப்படும் ‘செலுலோஸ்’ என்கிற நார்ச் சத்தினை புளிக்கச் செய்வதும் இந்தக் கிருமிகள் தான்.

எமக்கு ஏற்படுகின்ற விபத்தினால் காயம் ஏற்பட்டு குருதி வெளியேறி விடுகிறது. சில வேளைகளில் அதிக குருதி வெளியேறினால் உயிர்ப்பிரிவும் ஏற்படும். இவ்வாறு இரத்தத்தை உறையவைக்க உதவுவதும் இந்த பக்ரீறியா கிருமிகளே. நாம் உண்ணும் தோசை மாவைப் புளிக்கவைப்பது.

பீட்ரூட்டின் சாறு மதுவாக மாற்றமடைய வைப்பது ஈஸ்ட் என்ற நுண்ணுயிர்களே காரணமாக அமைகின்றன. இவைமட்டுமா? நைதரசன் உப்பை மண்ணில் உண்டாக்கி தாவரங்களுக்கு உயிரளிப்பதுவும் பக்ரீறியாக்களே. இதுபோல் இன்னும் பல்வேறுவிதமான நன்மைகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

எனவே பக்ரீறியாக்கள் பலவிதம் காணப்படுகின்றன. கிருமிகளை உணவிலே வளரவிட்டால் உடம்பின் செல்களாக மாறுகிறது. அதே நுண் உயிர்களை அழுகிக்கொண்டிருக்கும் பொருள்கள் மீது விட்டால் அவை தீமையைத் தருகின்ற கிருமிகளாக மாறுகின்றன என்கிற உண்மையை அன்றே கண்டுபிடித்துச் சொன்னவர் வேறுயாருமல்ல அவர்தான் விஞ்ஞானி லூயிபாஸ்டர் ஆவார்.

எஸ்.எம். மன்சூர் (ஆசிரியர்)
அட்டாளைச்சேனை
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

Sticky Re: மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்!

Post by றிமா on Wed 29 Jun 2011 - 17:27

பயனுள்ள தகவல் நன்றி ஷஹி
றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

Sticky Re: மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்!

Post by ஹம்னா on Wed 29 Jun 2011 - 18:46

மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்! 480414 மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்! 517195


மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum