சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Today at 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53

» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

“கொடை மடம்” Khan11

“கொடை மடம்”

+6
இன்பத் அஹ்மத்
செய்தாலி
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

“கொடை மடம்” Empty “கொடை மடம்”

Post by யாதுமானவள் Thu 7 Jul 2011 - 16:43

“கொடை மடம்”

நீலவானம் பூநிலத்தில் நீருதிர்க்கப் போவதைக்
கோலமயில் உள்ளுணர்ந்து கார்மேகம் நோக்கியே
நாலுதிசை தான்மறந்து நற்றோகைப் பூவிரித்து
கானகத்தில் ஆடுவதைக் காண்.

ஆடிமகிழ்ந் தங்குமிங்கும் ஆனந்தம் கொண்டுமிக
ஓடிவிரித் தாங்குகளித் தோடியஅத் தோகைக்கே
ஈடில்லா ஓர்துயரம் ஈந்திடத்தான் வீரமுடன்
தேடிவந்தான் மன்னவன் பே கன்.

கொள்ளை அழகுகொண்ட கோலமயில் ஆடுவதை
உள்ளம் பதைபதைக்கப் பார்த்தானம் மாமன்னன்
துள்ளும் மயிலதனைத் தோம்கூதை வாட்டுதென்றே
வள்ளல் வருத்தினனே வந்து.

வேகியாங்கு சென்றேயோர் போர்வை யுடனெடுத்து
மூடிவிட்டான் தோகையை யம்மூடன் தன்செயலை
ஓராம லேமுடித்தான் நன்நடனம் அம்முட்டாள்
ஓவிதுகொ டைமடம் ஆம்.

மழைவரும்கு றிப்பறிந்தே ஆடுமிது வென்றே
அறியாத மூடனவன் எப்படி நா டாண்டான்?
அழகுமயில் ஆட்டத்தில் ஆர்வமற்ற முட்டாள்
தழைத்தகுடி காத்ததெங்கன் கூறு?

ஆடும்தோ கைமூடி ஆட்டம் நிறுத்தியோனை
சூடுமுடி கொண்டவனென் றானதினால்; உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by முனாஸ் சுலைமான் Thu 7 Jul 2011 - 17:07

கொள்ளை அழகுகொண்ட கோலமயில் ஆடுவதை
உள்ளம் பதைபதைக்கப் பார்த்தானம் மாமன்னன்
துள்ளும் மயிலதனைத் தோம்கூதை வாட்டுதென்றே
வள்ளல் வருத்தினனே வந்து.


இலக்கிய நயம் மீண்டும் ஞாபகம் வருவது இப்படியான நேரத்தில்தான் வாழ்த்துக்கள்.தோழிக்கு..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by யாதுமானவள் Thu 7 Jul 2011 - 17:10

slmunas wrote:கொள்ளை அழகுகொண்ட கோலமயில் ஆடுவதை
உள்ளம் பதைபதைக்கப் பார்த்தானம் மாமன்னன்
துள்ளும் மயிலதனைத் தோம்கூதை வாட்டுதென்றே
வள்ளல் வருத்தினனே வந்து.


இலக்கிய நயம் மீண்டும் ஞாபகம் வருவது இப்படியான நேரத்தில்தான் வாழ்த்துக்கள்.தோழிக்கு..


நன்றி முனாஸ் ... தங்கள் இலக்கிய ஈடுபாடு கண்டு மகிழ்ச்சி..!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by நண்பன் Thu 7 Jul 2011 - 17:15

கொடை மடம்
என்றால் என்ன அக்கா?

மீண்டும் கவிதை வரிகளை படிக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by யாதுமானவள் Thu 7 Jul 2011 - 17:24

கொடை என்றால் தானம்.

நாம் ஒருவருக்கு ஒரு பொருளைத் தானமாக வழங்குகிறோம் என்றால் அதனால் பெறுபவருக்கு உபயோகம் இருக்க வேண்டும்.

அப்படியில்லாமல் அப்பொருளால் அவருக்கு கேடு/தீமை உண்டாகி விடக்கூடாது.

வள்ளல் பேகன் என்பவன் தோகை விரித்தாடும் மயிலுக்கு அது குளிரில் வாடுகின்றதென்று நினைத்து தனது சால்வை (போர்வை) கொடுத்ததால் கடை ஏழு வள்ளல்களில் ஒருவனாக போற்றப்பட்டவன்.

மயில் , மழைவரும்போது தனது தோகையை விரித்தாடும் என்பதைக்கூட அறியாத மூடனா பேகன். அல்லது, தோகைவிரித்தாடும் மயிலின் அழகை ரசிக்கத்தெரியாத மூர்க்கனா ?

அவனை உண்மையில் மூடனென்றோ மூர்கனென்றோதானே கூறியிருக்க வேண்டும்? அரசனாக இருந்ததனால் அவனை வள்ளல் என்று கூறிவிட்டார்களா?

இவனை வள்ளல் எனக் கூறிய அந்த மடையன் யார் ..? என்று கேட்டிருக்கிறேன் :)


Last edited by யாதுமானவள் on Thu 7 Jul 2011 - 17:30; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by நண்பன் Thu 7 Jul 2011 - 17:28

புரிந்தது அக்கா கொடை என்றால் தானம் மடம் என்றால் முட்டாள் புரிந்தது அக்கா
இலக்கிய தமிழில் அடியேனுக்கு கஸ்டம் அக்கா
நன்றி விரிவான விளக்கத்திற்கு
நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by நேசமுடன் ஹாசிம் Thu 7 Jul 2011 - 18:06

அழகிய கவிதை ஆற்றலை போற்ற வரிகளில்லை
மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்
நன்றி அக்கா பகிர்வுக்கு

முகஸ்துதி என்பது அதுதான் போலும் மன்னன் என்பதால் அவரை குறைகூற முடியாமல் வள்ளல் என்றிருக்கலாம்


“கொடை மடம்” Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by செய்தாலி Thu 7 Jul 2011 - 18:30

அபாரம் அபாரம் தோழி
வரிகளை வாசிக்கையில் கொடையின் பெருமை சொல்லும் மயிலுக்கு போர்வைபோர்த்திய வள்ளல் பற்றிய
சிறுவயதில் படித்த பாடம் ஞாபகம் வந்தது

ஆனால் உங்கள் வரிகளில் மயிலின் அழகிய ஆட்டத்தை இரசிக்க தெரியாத அரசன்
மயிலுக்கு குளிகிறது என்று போர்வை போர்த்தி மயிலாட்டத்தை நிறுத்திய
மன்னன் கொடை வள்ளல் அல்ல மூடன் என்ற உங்கள் வரிகள் ஆச்சிரியம்

சில விஷயங்களில் சில கேள்வி எழும் உண்மைகள் ஒளிந்திருக்கும்
அதனை ஆக்கபூர்வமாக கேட்ட உங்கள் இலக்கிய நடை கவிதை அருமை

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by யாதுமானவள் Thu 7 Jul 2011 - 18:46

நண்பன் wrote:புரிந்தது அக்கா கொடை என்றால் தானம் மடம் என்றால் முட்டாள் புரிந்தது அக்கா
இலக்கிய தமிழில் அடியேனுக்கு கஸ்டம் அக்கா
நன்றி விரிவான விளக்கத்திற்கு
நன்றியுடன்
நண்பன்

நன்றி நண்பன்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by யாதுமானவள் Thu 7 Jul 2011 - 18:47

செய்தாலி wrote:அபாரம் அபாரம் தோழி
வரிகளை வாசிக்கையில் கொடையின் பெருமை சொல்லும் மயிலுக்கு போர்வைபோர்த்திய வள்ளல் பற்றிய
சிறுவயதில் படித்த பாடம் ஞாபகம் வந்தது

ஆனால் உங்கள் வரிகளில் மயிலின் அழகிய ஆட்டத்தை இரசிக்க தெரியாத அரசன்
மயிலுக்கு குளிகிறது என்று போர்வை போர்த்தி மயிலாட்டத்தை நிறுத்திய
மன்னன் கொடை வள்ளல் அல்ல மூடன் என்ற உங்கள் வரிகள் ஆச்சிரியம்

சில விஷயங்களில் சில கேள்வி எழும் உண்மைகள் ஒளிந்திருக்கும்
அதனை ஆக்கபூர்வமாக கேட்ட உங்கள் இலக்கிய நடை கவிதை அருமை

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி


மிக்க நன்றி செய்தாலி!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by இன்பத் அஹ்மத் Thu 7 Jul 2011 - 20:31

சாதிக் wrote:அழகிய கவிதை ஆற்றலை போற்ற வரிகளில்லை
மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்
நன்றி அக்கா பகிர்வுக்கு

முகஸ்துதி என்பது அதுதான் போலும் மன்னன் என்பதால் அவரை குறைகூற முடியாமல் வள்ளல் என்றிருக்கலாம்
:”@: :”@:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by kalainilaa Thu 7 Jul 2011 - 21:07

மழைவரும்கு றிப்பறிந்தே ஆடுமிது வென்றே
அறியாத மூடனவன் எப்படி நா டாண்டான்?
அழகுமயில் ஆட்டத்தில் ஆர்வமற்ற முட்டாள்
தழைத்தகுடி காத்ததெங்கன் கூறு?

ஆடும்தோ கைமூடி ஆட்டம் நிறுத்தியோனை
சூடுமுடி கொண்டவனென் றானதினால்; உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்?

செய்கையும் அதன் பின் கொண்ட நிலையும் ,அழகாய் சொல்லி ,
அவனின் ,முட்டாள் எண்ணத்தை,கூறும் பாங்கு அருமை .
தொடருங்கள் உங்கள் ,செந்தமிழை ...!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by யாதுமானவள் Thu 7 Jul 2011 - 21:19

அப்துல் றிமாஸ் wrote:
சாதிக் wrote:அழகிய கவிதை ஆற்றலை போற்ற வரிகளில்லை
மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்
நன்றி அக்கா பகிர்வுக்கு

முகஸ்துதி என்பது அதுதான் போலும் மன்னன் என்பதால் அவரை குறைகூற முடியாமல் வள்ளல் என்றிருக்கலாம்
:”@: :”@:

நன்றி அப்துல் றிமாஸ்!

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by யாதுமானவள் Thu 7 Jul 2011 - 21:23

kalainilaa wrote:மழைவரும்கு றிப்பறிந்தே ஆடுமிது வென்றே
அறியாத மூடனவன் எப்படி நா டாண்டான்?
அழகுமயில் ஆட்டத்தில் ஆர்வமற்ற முட்டாள்
தழைத்தகுடி காத்ததெங்கன் கூறு?

ஆடும்தோ கைமூடி ஆட்டம் நிறுத்தியோனை
சூடுமுடி கொண்டவனென் றானதினால்; உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்?

செய்கையும் அதன் பின் கொண்ட நிலையும் ,அழகாய் சொல்லி ,
அவனின் ,முட்டாள் எண்ணத்தை,கூறும் பாங்கு அருமை .
தொடருங்கள் உங்கள் ,செந்தமிழை ...!

nanRi கலை நிலா,


உண்மையில் சொல்வதென்றால், கவிஞர்கள் வட்டத்தில் இது பெரிய எதிர்ப்பினைக் கண்டது. சங்க இலக்கியத்தில் போற்றப்படும் ஒரு புலவனை எப்படி தூற்றி எழுதலாமென்று நிறைய எதிர்ப்புக் குரல்.....

இதுக்கெல்லாம் போயா பயப்படுவா யாதுமானவள் ? புத்தகத்துல publish பண்ணியாச்சு... முதல்ல என்னை திட்டித் திட்டி பார்த்தவங்க... பிறகு அவங்களுக்குள்ள பேசி அடங்கிட்டாங்க...ஹிஹி...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by kalainilaa Thu 7 Jul 2011 - 21:40

யாதுமானவள் wrote:
kalainilaa wrote:மழைவரும்கு றிப்பறிந்தே ஆடுமிது வென்றே
அறியாத மூடனவன் எப்படி நா டாண்டான்?
அழகுமயில் ஆட்டத்தில் ஆர்வமற்ற முட்டாள்
தழைத்தகுடி காத்ததெங்கன் கூறு?

ஆடும்தோ கைமூடி ஆட்டம் நிறுத்தியோனை
சூடுமுடி கொண்டவனென் றானதினால்; உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்?

செய்கையும் அதன் பின் கொண்ட நிலையும் ,அழகாய் சொல்லி ,
அவனின் ,முட்டாள் எண்ணத்தை,கூறும் பாங்கு அருமை .
தொடருங்கள் உங்கள் ,செந்தமிழை ...!

nanRi கலை நிலா,


உண்மையில் சொல்வதென்றால், கவிஞர்கள் வட்டத்தில் இது பெரிய எதிர்ப்பினைக் கண்டது. சங்க இலக்கியத்தில் போற்றப்படும் ஒரு புலவனை எப்படி தூற்றி எழுதலாமென்று நிறைய எதிர்ப்புக் குரல்.....

இதுக்கெல்லாம் போயா பயப்படுவா யாதுமானவள் ? புத்தகத்துல publish பண்ணியாச்சு... முதல்ல என்னை திட்டித் திட்டி பார்த்தவங்க... பிறகு அவங்களுக்குள்ள பேசி அடங்கிட்டாங்க...ஹிஹி...

காய்க்கிற மரத்துக்கு ,கல் அடி வரத்தானே செய்யும்.

நன்றி யாதுமானவள் அவர்களே !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by முனாஸ் சுலைமான் Thu 7 Jul 2011 - 21:43

உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்? ம்ம்
தோழி யாதுமவள் இலக்கியவாதிக்கு “கொடை மடம்” 517195
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by யாதுமானவள் Thu 7 Jul 2011 - 21:45

kalainilaa wrote:
யாதுமானவள் wrote:
kalainilaa wrote:
செய்கையும் அதன் பின் கொண்ட நிலையும் ,அழகாய் சொல்லி ,
அவனின் ,முட்டாள் எண்ணத்தை,கூறும் பாங்கு அருமை .
தொடருங்கள் உங்கள் ,செந்தமிழை ...!

நன்றி கலை நிலா,


உண்மையில் சொல்வதென்றால், கவிஞர்கள் வட்டத்தில் இது பெரிய எதிர்ப்பினைக் கண்டது. சங்க இலக்கியத்தில் போற்றப்படும் ஒரு புலவனை எப்படி தூற்றி எழுதலாமென்று நிறைய எதிர்ப்புக் குரல்.....

இதுக்கெல்லாம் போயா பயப்படுவா யாதுமானவள் ? புத்தகத்துல publish பண்ணியாச்சு... முதல்ல என்னை திட்டித் திட்டி பார்த்தவங்க... பிறகு அவங்களுக்குள்ள பேசி அடங்கிட்டாங்க...ஹிஹி...

காய்க்கிற மரத்துக்கு ,கல் அடி வரத்தானே செய்யும்.

நன்றி யாதுமானவள் அவர்களே !

நன்றி கலைநிலா
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by யாதுமானவள் Thu 7 Jul 2011 - 21:46

முனாஸ் சுலைமான் wrote:உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்? ம்ம்
தோழி யாதுமவள் இலக்கியவாதிக்கு “கொடை மடம்” 517195

நன்றி முனாஸ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by Atchaya Fri 8 Jul 2011 - 14:04

அக்காலத்தில் , நம்மூர் செந்தில், வடிவேல் போல, மன்னர்களுக்கு இந்த அறிய யோசனைகளை கொடுக்கும் மந்திரிகள் தான் .....
அக்கா.....உங்களின் கவிதை நயம், நாசுக்காய் சாடல், வரித்தொகுப்பு, அருமை...அருமை...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 14:08

mravi wrote:அக்காலத்தில் , நம்மூர் செந்தில், வடிவேல் போல, மன்னர்களுக்கு இந்த அறிய யோசனைகளை கொடுக்கும் மந்திரிகள் தான் .....
அக்கா.....உங்களின் கவிதை நயம், நாசுக்காய் சாடல், வரித்தொகுப்பு, அருமை...அருமை...
யாதுமானவள் உங்கள் அக்காவா :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by Atchaya Fri 8 Jul 2011 - 14:55

வயதில் பெரியவரோ, சிறியவரோ, அக்கா என்று அழைக்கும்போது ஒரு சொந்த வுறவுடன் பகிர்ந்து கொள்வது போல் .....நண்பா......ஹி...ஹி...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 15:32

mravi wrote:வயதில் பெரியவரோ, சிறியவரோ, அக்கா என்று அழைக்கும்போது ஒரு சொந்த வுறவுடன் பகிர்ந்து கொள்வது போல் .....நண்பா......ஹி...ஹி...
அக்கா தம்பி உறவுகள் இருப்பது தெரியாமல் போய் விட்டது என்று நினைத்தேன்
நீங்கள் மரியாதைக்கு சொன்னீர்களா?

எப்படியோ சாமாளிச்சிட்டோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by யாதுமானவள் Fri 8 Jul 2011 - 15:37

mravi wrote:அக்காலத்தில் , நம்மூர் செந்தில், வடிவேல் போல, மன்னர்களுக்கு இந்த அரிய யோசனைகளை கொடுக்கும் மந்திரிகள் தான் .....
அக்கா.....உங்களின் கவிதை நயம், நாசுக்காய் சாடல், வரித்தொகுப்பு, அருமை...அருமை...

நன்றி ரவி...!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by ஜிப்ரியா Fri 8 Jul 2011 - 15:47

என்னவென்று சொலவது அக்கா? அபாரம்..அர்த்தம் பொதிந்த வரிகள் அத்தனையும் அற்புதம்..அழகான சொற்களை கையாண்ட விதம் அருமை..வாழ்த்துக்கள் அக்கா.. :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by *சம்ஸ் Fri 8 Jul 2011 - 17:42

அபராம் அக்கா அருமையான வரிகள் படிக்கும் போது இலக்கிய நயம் மீண்டும் ஞாபகம் வருவது வாழ்த்து என்று சொன்னால் மட்டும் போதாது அக்கா வாழ்த்த வார்த்தைகள் இல்லை. வாழ்க தமிழ் தொடரட்டும் உங்களின் பயணம் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

“கொடை மடம்” Empty Re: “கொடை மடம்”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum