சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

16 வகை பிரெட் சமையல் Khan11

16 வகை பிரெட் சமையல்

+4
ஹம்னா
ஜிப்ரியா
நண்பன்
Atchaya
8 posters

Go down

16 வகை பிரெட் சமையல் Empty 16 வகை பிரெட் சமையல்

Post by Atchaya Sat 9 Jul 2011 - 4:51

இட்லி முதல் வடை வரை
16 வகை பிரெட் சமையல்!

நம் எல்லோர் வீடுகளிலும் இருக்கிற பிரெட் பாக்கெட்தான்! இதை வைத்து பிரெட் சாண்ட்விச்சும் பிரெட் ஆம்லெட்டும் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், இட்லி, கொழுக்கட்டை, வடை, போண்டா.. என்றெல்லாம் விதம்விதமாக செய்து ருசித்திருக்கிறீர்களா? அப்படி ஒரு அட்டகாச வாய்ப்பைத்தான் கொடுத்திருக்கிறோம் இந்த இணைப்பிதழில்! சமையல் கலை நிபுணர் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கும் இந்த ரெசிபிகளை டிஷ்களாக்கி, சந்தோஷமாகுங்கள்.. சந்தோஷமாக்குங்கள்!
-----------------------------------------------------------
பிரெட் தோசை

தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 3 முதல் 4, தோசை மாவு - ஒரு கப், பச்சைமிளகாய் - 2, வெங்காயம் - 1, மல்லித்தழை - சிறிது, எண்ணெய் - தேவை யான அளவு.
செய்முறை: வெங்-காயம், பச்சை மிளகாய், மல்லித்-தழை மூன்றையும் பொடியாக நறுக்கி தோசை மாவுடன் சேர்த்து கலக்கவும். பிரெட் துண்டுகளை மாவில் முக்கி, தோசை கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். தக்காளி சாஸ் ஊற்றி பரிமாறவும்.
________________________________________
பிரெட் பராத்தா

தேவையானவை: பூரணத்துக்கு: உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும்), பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), சால்ட் பிரெட் துண்டுகள் - 3, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
மேல் மாவுக்கு: மைதா - 2 கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் விட்டு கெட்டி பதத்தில் மிருதுவாக பிசையவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை நன்றாக மசித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாயைச் சேர்த்து பிசையவும். பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, உருளைக் கிழங்கு கலவையுடன் சேர்த்து பிசையவும். இத்துடன் சீரகத்தூள், உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிசைந்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து சப்பாத்தி குழவியால் தேய்க்கவும். நடுவில் பிரெட் கலவை உருண்டையை வைத்து மூடி லேசாக பரத்தவும். இதை தோசை கல்லில் போட்டு இரு புறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
________________________________________
பிரெட் இட்லி

தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 4, வேக வைத்த உருளைக்கிழங்கு - 2, தயிர் - ஒரு கப், இஞ்சி - பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 (துருவியது), பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன். கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்-தழை, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட் துண்டுகளை ஒரு மூடியின் உதவியால் வட்டமாக வெட்டிக் கெள்ளவும். உருளைக்கிழங்குடன் உப்பு, துருவிய வெங்காயம், பெருங்காயத்தூள், இஞ்சி-பச்சைமிளகாய் விழுதைச் சேர்த்து நன்றாக மசிக்கவும். தயிரைக் கடைந்து, அதில் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். வட்டமாக வெட்டி வைத்துள்ள பிரெட் துண்டில் உருளைக்கிழங்கு பேஸ்ட்டைத் தடவவும். இதன் மேல் சிறிது எண்ணெய் தடவவும். இதே போல் எல்லா துண்டுகளையும் செய்து கொள்ளவும். தோசை கல் காய்ந்ததும், மிதமான தீயில் உருளைக்கிழங்கு பேஸ்ட் கல்லில் படுமாறு பிரெட் வட்டங்களை கவிழ்த்து வைத்து, மேல்புறம் தயிரை சிறிது ஊற்றி, மூடி வைக்கவும். இரண்டு நிமிடம் வேக விட்டு எடுக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
பிரெட் உப்புமா

தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 10 (மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்), எண்ணெய் - -2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தக்காளி - 2, வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2 (மூன்றையும் பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு வறுக்கவும். வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். தக்காளி, பச்சைமிளகாயைச் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். பிறகு பிரெட் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி (தேவைப்பட்டால் எண்ணெய் சிறிது சேர்க்கலாம்) சூடாக பரிமாறவும்.
________________________________________
பிரெட் பக்கோடா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, வேக வைத்த உருளைக்கிழங்கு - 1, பச்சைமிளகாய் - 1, கடுகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகை தாளித்து, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்க்கவும். பிறகு மஞ்சள்தூள், மசித்த உருளைக்கிழங்குடன் சிறிது உப்பு சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கவும். கடலை மாவில் தண்ணீர், உப்பு, மிளகாய்த்தூள், சமையல் சோடா சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். ஒரு பிரெட் துண்டின் மேல் ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு கலவையை வைத்து பரப்பவும். அதன்மேல் ஒரு பிரெட் துண்டை வைத்து மூடி, அதை நான்கு துண்டுகளாக்கி, கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். கொத்தமல்லி சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ்!
________________________________________
பிரெட் ஊத்தப்பம்

தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 12, புளித்த மோர் - ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டின் ஓரங்களை வெட்டி விடவும். அதை மோரில் நனைத்து உப்பு சேர்த்து நைஸாக அரைத்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். தோசை கல் காய்ந்ததும், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி லேசாக பரத்தவும். அதன் மேல் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித்தழை, மிளகுத்தூள் எல்லாவற்றையும் கலந்து ஒரு டீஸ்பூன் தூவி வேக விடவும். மறுபுறம் திருப்பிப்போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
________________________________________
பிரெட் குர்குரே

தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 6, கடலை மாவு - ஒன்றரை கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவு, வெங்காயம், மிளகாய்த்தூள், மல்லித்தழை, கரம்மசாலா தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக்கி இந்த மாவில் முக்கி எடுத்து, தோசை கல்லில் போடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக எடுத்தால் கரகரப்பான குர்குரே ரெடி! இதற்கு கொத்தமல்லி சட்னி நல்ல காம்பினேஷன்.
________________________________________
பிரெட் கோஃப்தா

தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 8, பால் - தேவையான அளவு, வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, (இரண்டையும் பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து தோலுரிக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், தக்காளி - 2 (தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுக்கவும்), மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாலில் பிரெட்டை நனைத்து வேக வைத்த உருளைகிழங்குடன் பிசையவும். உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி ப்யூரியை (தக்காளி சாறு) ஊற்றி, மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். பரிமாறுவதற்கு முன் பொரித்தெடுத்த பிரெட் கோஃப்தாக்களை அதில் போட்டு மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
பிரெட் டோக்ளா

தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 4 , கொத்தமல்லி சட்னி (கொத்தமல்லி, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைத்தது) - 2 டேபிள்ஸ்பூன், தயிர் - 4 டேபிள்ஸ்பூன், மிளகு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கொப்பரை தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில் தயிரை ஊற்றி, உப்பு, மிளகு சேர்க்கவும். கடுகை தனியாக தாளித்து வைத்துக் கொள்ளவும். பிரெட் துண்டுகளில் ஒன்றில் சட்னியையும், மற்றொன்றில் தயிரையும் ஸ்பூனால் பரப்பவும். இரண்டு துண்டுகளையும் ஒன்றாக சேர்த்து சிறிய சதுரங்களாக வெட்டவும். தாளித்த கடுகு, கொப்பரைத் துருவல், மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
தக்காளி பிரெட்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 1 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), தக்காளி - 1 (தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்), கறிவேப்பிலை - சிறிது, பச்சைமிளகாய் - 4, சால்ட் பிரெட் துண்டுகள் - 6, எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கு வெந்ததும் தக்காளி ப்யூரியை (தக்காளி சாறு) ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். சாறு கெட்டி யானதும் முக்கால் கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், கறி வேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் ஒவ் வொரு பிரெட் துண்டையும் கையால் அழுத்தி சாறில் நனையும்படி செய்யவும். தீயைக் குறைத்து மேலும் 5 நிமி டம் கொதிக்கவிடவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
கலர்ஃபுல் பிரெட் சாட்

தேவையானவை: கோதுமை பிரெட் துண்டுகள் (பிரவுன் கலர்) - 4, தயிர் - 2 கப், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், ஓமப்பொடி, காராபூந்தி - தலா அரை கப், வெங்காயம், தக்காளி, மல்லித்தழை - தலா அரை கப், வறுத்த முந்திரி - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தயிரைக் கடைந்து தேன் சேர்த்து தனியே வைக்கவும். பிரெட்டின் ஓரத்தை எடுத்துவிட்டு முக்கோண மாக வெட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித் தெடுக்கவும். அதை பரிமாறும் தட்டில் வரிசையாக அடுக்கி அதன் மேல் ஒரு கரண்டி தேன் கலந்த தயிரை பரவலாக ஊற்றி, வெங்காயம், தக்காளி, மல்லித்தழையைப் பரத்தவும். பிறகு காராபூந்தி, ஓமப்பொடி, மிளகாய்த்தூள், வறுத்த முந்திரி என வரிசையாக தூவி பரிமாறவும்.
________________________________________
பிரெட் வெஜ் நூடுல்ஸ்

தேவையானவை: சால்ட் பிரெட் - 10 துண்டுகள், கேரட், வெங்காயம், பச்சை பட்டாணி - அரை கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து உடனே பிழியவும். ஐந்திலிருந்து ஆறு துண்டுகளை இதே போல் செய்து கெட்டியாக பிசையவும். அதை தேன்குழல் அச்சில் பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுத்து ஆற விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு, கேரட், பட்டாணி, மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். இத்துடன் வெந்த பிரெட் நூடுல்ஸை சேர்த்து லேசாக கிளறி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
பிரெட் வெஜ் ஆம்லெட்

தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 6 முதல் 8, கடலை மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவில் வெங்காயம், காரட், குடமிளகாய், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். தோசை கல் காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு பிரெட் துண்டை போட்டு, அதன் மேல் ஒரு கரண்டி கடலைமாவை பரவலாக ஊற்றவும். 2 நிமிடம் கழித்து மெதுவாக மறுபுறம் திருப்பிப் போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக எடுக்கவும்.
________________________________________
பிரெட் போண்டா

தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 7, உருளைக்கிழங்கு - 3 (வேகவைத்து தோல் உரித்துக் கொள்ளவும்), பச்சை பட்டாணி - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), பச்சைமிளகாய் - 2, எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். பிறகு பட்டாணி, எலுமிச்சை சாறு, சர்க்கரை, உப்பு, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, ஆற வைத்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். ஒரு பிரெட் துண்டை தண்ணீரில் நனைத்து உடனே பிழிந்து நடுவில் உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து மூடி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
________________________________________
இனிப்பு சேமியா பிரெட்

தேவையானவை: இனிப்பு பிரெட் துண்டுகள் - 6, சேமியா - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரைத்தூள் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - சிறிது, பாதாம், முந்திரி துண்டுகள் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கடாய் காய்ந்ததும் நெய் ஊற்றி சேமியாவை வறுக்கவும். அதில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் இறக்கி, ஏலக்காய்த்தூள், எசென்ஸ் சேர்த்து முள் கரண்டியால் கிளறி, ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் குழைத்து, ஆற வைத்த சேமியாவை சேர்த்து கலக்கவும். பிரெட்டை வறுத்து, அதன்மேல் ஒரு டேபிள்ஸ்பூன் சேமியா கலவையைப் பரத்தி, பருப்பு துண்டுகளை தூவி பரிமாறவும்.
________________________________________
பிரெட் மாம்பழ சாண்ட்விச்

தேவையானவை: ஸ்வீட் பிரெட் துண்டுகள் - 6, மாம்பழம் - 1 (தோலுரித்துக் கொள்ளவும்), வெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மாம்பழத்தை மெல்லிய வட்டங்களாக நறுக்கி ஃபிரிட்ஜில் வைக்கவும். பிரெட் துண்டுகளை வறுக்கவும். ஒரு பிரெட் துண்டின் மேல் வெண்ணெய் தடவி அதன் மேல் மாம்பழ துண்டுகளை வைத்து, மேல்புறம் மற்றொரு வறுத்த பிரெட் துண்டால் மூடி பரிமாறவும். இதுபோல் 2 (அ) 3 வரிசைகள்கூட செய்யலாம்.
குறிப்பு: பிரெட் துண்டுகள் சூடாக இருக்கவேண்டும். மாம்பழ துண்டு ஜில்லென்று இருக்க வேண்டும். இது வித்தியாசமான சுவையில் இருக்கும்.
நன்றி.....பெட்டகம்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

16 வகை பிரெட் சமையல் Empty Re: 16 வகை பிரெட் சமையல்

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 8:10

ஒரே நேரத்தில் இவ்வளவு சுவைகளா
நன்றி ரவி அண்ணா தொடருங்கள்
தேடுவோருக்கு விருந்துண்டு சேனையில்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

16 வகை பிரெட் சமையல் Empty Re: 16 வகை பிரெட் சமையல்

Post by ஜிப்ரியா Sat 9 Jul 2011 - 8:28

ம்ம்ம் செய்வதற்கு சுலபமாக இருக்கு..ஆனால் சுவை அதிகமாக இருக்கும்.நல்ல குறிப்புகள்..பகிர்வுக்கு மிக நன்றி.. :!+:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

16 வகை பிரெட் சமையல் Empty Re: 16 வகை பிரெட் சமையல்

Post by ஹம்னா Sun 10 Jul 2011 - 19:34

செய்து பார்த்துட்டு சொல்ரன் அண்ணா. 16 வகை பிரெட் சமையல் 800522 16 வகை பிரெட் சமையல் 800522


16 வகை பிரெட் சமையல் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

16 வகை பிரெட் சமையல் Empty Re: 16 வகை பிரெட் சமையல்

Post by *சம்ஸ் Sun 10 Jul 2011 - 21:41

நண்பன் wrote:ஒரே நேரத்தில் இவ்வளவு சுவைகளா
நன்றி ரவி அண்ணா தொடருங்கள்
தேடுவோருக்கு விருந்துண்டு சேனையில்
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

16 வகை பிரெட் சமையல் Empty Re: 16 வகை பிரெட் சமையல்

Post by இன்பத் அஹ்மத் Mon 11 Jul 2011 - 6:46

பகிர்வுக்கு நன்றி சுவையான சமையல்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

16 வகை பிரெட் சமையல் Empty Re: 16 வகை பிரெட் சமையல்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 11 Jul 2011 - 6:48

அருமையான பகிர்வு மிக்க நன்றி


16 வகை பிரெட் சமையல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

16 வகை பிரெட் சமையல் Empty Re: 16 வகை பிரெட் சமையல்

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 7:57

quick டிப்ஸ்! அவசரத்திற்கு உபயோகமாக இருக்கும்
நன்றி!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

16 வகை பிரெட் சமையல் Empty Re: 16 வகை பிரெட் சமையல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum