சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! Khan11

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!

+3
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
நண்பன்
7 posters

Go down

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! Empty இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 10:49

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2071%20%20%201%20937
குர்ஆனில் சொன்னபடி நடக்கிறோம் என புர்காவை ஆபாசமாக அணிந்து இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி கண்ணியமாக நடந்து கொள்ளாத பெண்களுக்கு புர்கா கண்ணியமளிக்காது. அழகு மற்றும் பூ வேலைப்பாடுகளோடு, உடல் அங்கத்தை வெளிக்காட்டும் இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.

இன்ன நிறம்தான் உடுத்த வேண்டும் என இஸ்லாம் கூறாத நிலையில் கருப்பு புர்காக்கள் அணியப்படுவது முஸ்லிம் கலாச்சாரமாக பரவி வருகிறது. ஆபாச உடையாக இன்று புர்கா மாறிவருகிறது. யாரோ விரித்த சதி வலையில் சமூகம் சிக்கிச் சீரழிகிறது.

புர்கா அணிந்தபடி நடுரோட்டில் ஆணுடன் மணிக்கணக்கில் பேசுவது. பொதுத்தொலைபேசியில் முகத்தை மூடிய புர்கா அணிந்தபடி 100 ரூபாய்க்கு தொடர் உரையாடல் நிகழ்த்துவது. பேருந்து நிலையத்தில் புர்கா அணிந்த நிலையில் யாருக்காகவோ காத்திருப்பது. ஷாப்பிங்மால், தியேட்டர், வணிக வளாகங்களில் சுற்றித்திரிவதை கைவிடாத வரை புர்கா பெருமையளிக்க போவதில்லை.]

கோஷா முறை கடைப்பிடிக்கும் சில ஊர் முஸ்லிம்கள் தவிர, மற்ற பகுதி, ஊர் முஸ்லிம்களுக்கு 1970களில் கருப்பு புர்கா தெரியாது. சென்னை, திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் இன்னும் சில இடங்களில் வெள்ளைத் துப்பட்டி அணிவர். உடல் மேல் போர்த்தி தலைமேல் இட்டு பல்லில் கவ்விக் கொள்வர். கைகளில் பிடித்துக் கொள்வர். ஏழைகளுக்கு புர்காவாக, கபனுக்குப் பயன்படுத்தும் காடா, மல்துணிகள் பயன்பட்டன. வசதியுள்ள பெண்களுக்கு சிறு துளையுடன் எம்ராய்டரி செய்யப்பட்ட விலை உயர்ந்த துணிகள் பயன்பட்டன.

அன்றைய முஸ்லிம் சமூக ஏற்றத்தாழ்வை, வாழ்வியலை பெண்கள் அணிந்திருக்கும் துப்பட்டாவை வைத்துக் கணிக்கலாம். ஆனால் அவ்வுடையில் ஆபாச மிருக்காது. தமிழகத்தின் உட்கிராமங்களில் இந்த துப்பட்டாவையும் அறிந்தவர்களில்லை அன்று. அவர்களுக்குத் தெரிந்தது சேலை, கைலி, தாவணி, இடுப்பு வரை சட்டை. கணவன் தொழில் நிமித்தம் வேற்றூர் குடியேறும் போது தான் துப்பட்டா என்ற ஒன்றை அணிய வேண்டும் என்பதை அறிந்து அணியத்துவங்குவர். இதுதான் அன்றைய நிலை. சமூகத்துக்கிடையில் எந்த வித விதர்ப்பங்கள், வேறுபாடுகள், கலாச்சார சீரழிவுகளும் புர்கா அணியாத அந்தக் காலத்தில் இல்லை.

அந்நிய ஆண் பார்வை அந்நியப் பெண் மீது படக்கூடாது. அந்நியப் பெண் பார்வை அந்நிய ஆண் மீது படக் கூடாது. இருபுறமும் பார்வைகள் தாழ்த்திக் கொள்ள வேண்டும். பெண் உடை கை மணிக்கட்டு, கணுக்கால் வரை முழுவதும் மூடியிருக்க வேண்டும். முகத்தை மூடக்கூடாது. இதுவே இஸ்லாம் வலியுறுத்துவது. இஸ்லாம் கூறுவதன் அடிப்படையில் புர்கா அணிகிறோம் என்ற பெயரில் புர்கா அணிகின்றனர். ஆடை அணிவகுப்பு ஆபாச உடை போல் புர்காக்கள் காட்சியளிக்கின்றன.

மற்ற உடைகள் உள்ளுடம்புப் பகுதிகளை வெளிக்காட்டுவதை விட ஆபாசமாக பெண்ணுடைய சதைச் திரட்சிகளை இன்றைய நவீன புர்கா வெளிப்படுத்திக் காட்டுகின்றது. அத்தகைய விதத்தில் இறுக்கமாக அணியப்படுகிறது. உடலின் மேலளவு, இடையளவு, பின்னளவுக் கொப்ப புர்கா தைத்துக் கொடுக்கும் டைலர்கள் மலிந்திருக்கின்றனர். இளம்பெண்கள் கூட்டம் அவர்களைத் தேடி படையெடுக்கிறது.

கடைகளில் கேட்லாக்கில் உள்ள புர்கா மாடல்கள், ஸ்ட்ரெய்ட்கட், பிஷ்கட், அம்பர்லா கட், கிரிஸ்டல் ஸ்ட்டட், புர்கா வித் லெதர் பேட்ஜ் 550லிருந்து 15,000 வரை விற்கப்படுகின்றன. மும்பை பெண்டி பஜாருக்கு அடுத்துள்ள முஹமதலி வீதியில் 80 வருடமாக நியூ ஜனதா புர்கா சென்டர் நடத்தி வரும் முஹம்மது யூசுப் கூறுகிறார் "அந்தக் காலத்தில் என் கடையில் 3 வகை புர்கா மட்டுமே இருக்கும். இன்று 100 வகை புர்கா வைத்திருக்கிறேன். அத்தனையும் பிடிக்கவில்லை இன்னும் புதிய மாடல் வேண்டும் என்கின்றனர்."

மும்பை பாந்த்ராவில் புர்கா கண்காட்சி நடத்தும் பௌசியா, சபா என்ற இடு பெண்களும் துபாய், ஈரான் நாடுகளிலிருந்து துணிகள் வரவழைத்து மினரா, காஃபா படங்கள் வரைந்து 2,400/லிருந்து, 7,000ம் வரை விற்பதாகக் கூறுகின்றனர்.

இன்ன நிறம்தான் உடுத்த வேண்டும் என இஸ்லாம் கூறாத நிலையில் கருப்பு புர்காக்கள் அணியப்படுவது முஸ்லிம் கலாச்சாரமாக பரவி வருகிறது. ஆபாச உடையாக இன்று புர்கா மாறிவருகிறது. யாரோ விரித்த சதி வலையில் சமூகம் சிக்கிச் சீரழிகிறது.

குர்ஆனில் சொன்னபடி நடக்கிறோம் என புர்காவை ஆபாசமாக அணிந்து இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி கண்ணியமாக நடந்து கொள்ளாத பெண்களுக்கு புர்கா கண்ணியமளிக்காது. அழகு மற்றும் பூ வேலைப்பாடுகளோடு, உடல் அங்கத்தை வெளிக்காட்டும் இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.

புர்கா அணிந்தபடி நடுரோட்டில் ஆணுடன் மணிக்கணக்கில் பேசுவது. பொதுத்தொலைபேசியில் முகத்தை மூடிய புர்கா அணிந்தபடி 100 ரூபாய்க்கு தொடர் உரையாடல் நிகழ்த்துவது. பேருந்து நிலையத்தில் புர்கா அணிந்த நிலையில் யாருக்காகவோ காத்திருப்பது. ஷாப்பிங்மால், தியேட்டர், வணிக வளாகங்களில் சுற்றித்திரிவதை கைவிடாத வரை புர்கா பெருமையளிக்க போவதில்லை.

- ஜெ. ஜஹாங்கீர், நவம்பர் 2010 முஸ்லிம் முரசு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! Empty Re: இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!

Post by kalainilaa Thu 21 Jul 2011 - 12:41

பகிர்வுக்கு நன்றி தோழரே .தொடரட்டும் உங்கள் பணி!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! Empty Re: இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 12:43

இது உண்மையில் அவசியமான பதிவு ஏன்னா இந்தப்பிரச்சினையினை அதிகமாக பார்த்து மனம் கவலையடைந்ததுண்டு கவனமெடுக்க வேண்டும் கண்மணிகளே

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! Empty Re: இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!

Post by முனாஸ் சுலைமான் Thu 21 Jul 2011 - 12:52

புர்கா அணிந்தபடி நடுரோட்டில் ஆணுடன் மணிக்கணக்கில் பேசுவது. பொதுத்தொலைபேசியில் முகத்தை மூடிய புர்கா அணிந்தபடி 100 ரூபாய்க்கு தொடர் உரையாடல் நிகழ்த்துவது. பேருந்து நிலையத்தில் புர்கா அணிந்த நிலையில் யாருக்காகவோ காத்திருப்பது. ஷாப்பிங்மால், தியேட்டர், வணிக வளாகங்களில் சுற்றித்திரிவதை கைவிடாத வரை புர்கா பெருமையளிக்க போவதில்லை.]

நிச்சயமாக இப்படிப்பட்டவர்களுக்கு நானும் சவுதி அரேபியாவில் வைத்து பேசியிருக்கிறேன் கொடுமை பெரிய கொடுமை நடக்கிறது அனைவரும் முன்நின்று தடுக்கலாம் முயற்சிசெய்வோம் வாழ்த்துக்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! Empty Re: இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 19:11

:”@: :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! Empty Re: இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!

Post by Atchaya Fri 29 Jul 2011 - 19:47

முஸ்லிம் சமூக ஏற்றத்தாழ்வை, வாழ்வியலை பெண்கள் அணிந்திருக்கும் துப்பட்டாவை வைத்துக் கணிக்கலாம். ஆனால் அவ்வுடையில் ஆபாச மிருக்காது. தமிழகத்தின் உட்கிராமங்களில் இந்த துப்பட்டாவையும் அறிந்தவர்களில்லை அன்று. அவர்களுக்குத் தெரிந்தது சேலை, கைலி, தாவணி, இடுப்பு வரை சட்டை.
ஆடை அணிவகுப்பு ஆபாச உடை போல் புர்காக்கள் காட்சியளிக்கின்றன.
நண்பா...இரண்டு தினங்களாக இந்த பதிவுக்கான கருத்தை எழுத எண்ணினேன். உங்களின் மனம் புண்பட்டு விடுமோ என்று அஞ்சினேன்....
ரமலான் மாதத்தில் இறைவனுக்காக, உள் (ஆழ்) மனதிலிருந்து துவா செய்ய வேண்டுமெனில், தூய்மை மனத்தூய்மை தேவை...
:”@: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! Empty Re: இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 20:12

mravi wrote:முஸ்லிம் சமூக ஏற்றத்தாழ்வை, வாழ்வியலை பெண்கள் அணிந்திருக்கும் துப்பட்டாவை வைத்துக் கணிக்கலாம். ஆனால் அவ்வுடையில் ஆபாச மிருக்காது. தமிழகத்தின் உட்கிராமங்களில் இந்த துப்பட்டாவையும் அறிந்தவர்களில்லை அன்று. அவர்களுக்குத் தெரிந்தது சேலை, கைலி, தாவணி, இடுப்பு வரை சட்டை.
ஆடை அணிவகுப்பு ஆபாச உடை போல் புர்காக்கள் காட்சியளிக்கின்றன.
நண்பா...இரண்டு தினங்களாக இந்த பதிவுக்கான கருத்தை எழுத எண்ணினேன். உங்களின் மனம் புண்பட்டு விடுமோ என்று அஞ்சினேன்....
ரமலான் மாதத்தில் இறைவனுக்காக, உள் (ஆழ்) மனதிலிருந்து துவா செய்ய வேண்டுமெனில், தூய்மை மனத்தூய்மை தேவை...
:”@: :”@:
எனக்கு ஒன்றும் புரியலயே அண்ணா ஏன் என்ன நடந்தது உங்கள் கருத்தை சொல்லுங்கள் கட்டுரை படித்து உங்கள் மனம் நொந்து விட்டது அதை சுட்டிக்காட்டுங்கள் தவறாக இருந்தால் திருத்திடலாம் இதில் தப்பில்லை
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! Empty Re: இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!

Post by lafeer Fri 29 Jul 2011 - 21:28

உண்மையிலேயே இப்படியான தகவல்கள் அவசியம் சேனைக்குத் தேவை தொடரட்டும் ....
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! Empty Re: இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!

Post by jasmin Fri 29 Jul 2011 - 21:40

எந்த உடையானாலும் அதை எப்படி வேண்டுமானலும் அணியலாம் .புர்கா என்பது ..ஹிஜாப் என்ற அரபு வார்த்தையின் உருது மொழிபெயர்ப்பு ...ஹிஜாப் என்றால் அலங்காரங்களை மறைத்துக் கொள்வது .

இயற்கையில் ஆண்களைவிட பெண்களுக்கே கவர்ச்சிகளை வெளிக்காட்டும் அங்கங்கள் அதிகம் ...பெண்களின் ஒவ்வொரு அங்கமும் ஆண்களைக் கவரும் வண்ணம் படைக்கப் பட்டு இருக்கின்றன .ஆதலால் அதில் எந்த அங்கங்கள் ஆண்களை எளிதில் கவருமோ அவற்றை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ள இறைவன் கட்டளை உண்டு..அதற்கான ஒரு தனி சட்டமே திருக் குரானில் உண்டு.

ஆனால் இன்றைய சமுதாயம் ஆண்களை எப்படி கவரலாம் என்பதில் அக்கரை காட்டுகிறதே தவிர மறைக்க முயலுவதில்லை. நண்பர் கூறி இருப்பது முற்றிலும் உண்மை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! Empty Re: இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 21:42

நன்றி லாபிர்
நன்றி ஜஸ்மின்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்! Empty Re: இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum