Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
"டிவி'யில் வன்முறை நிகழ்ச்சிகள்: குழந்தைகளுக்கு தூக்கம் போச்சு!
2 posters
Page 1 of 1
"டிவி'யில் வன்முறை நிகழ்ச்சிகள்: குழந்தைகளுக்கு தூக்கம் போச்சு!
வாஷிங்டன் : "டிவி'யில் வரும் வன்முறை நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதால், அவர்களின் தூக்கம் கெடுகிறது. அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் உடல் பருமன், பள்ளிக்கு செல்லாமை போன்ற மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும். எனவே, வன்முறையை தூண்டும் நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்க்காமல் இருப்பதில் அவர்களின் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்' என்று புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
பல "டிவி' நிறுவனங்கள், குழந்தைகளுக்கு என தனி சேனலை கொண்டுள்ளன. இதில், குழந்தைகளை கவர்வதற்காக நாடகங்கள், திரைப்படங்கள், கார்ட்டூன்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. குழந்தைகளிடம் கவனம் எடுத்துக் கொள்வதில் பெற்றோர் சலிப்படைகின்றனர். எனவே, "டிவி' பார்க்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் பழக்கி விடுகின்றனர்.
"டிவி' பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. அமெரிக்காவில் உள்ள சியாட்டில் குழந்தைகள் ஆய்வு நிறுவனம், மூன்று முதல் ஐந்து வயதுள்ள 600 குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.
குழந்தைகள் தூங்கும் போது ஏற்படும் தீய கனவுகள், தூக்கத்தில் அலறுவது, இருட்டை கண்டு பயப்படுவது, சரியாக தூங்காததால் பகலில் நடப்பதில் சிரமம், சோர்வாக இருப்பது உள்ளிட்ட பிரச்னைகளை குறித்து வைக்கும்படி பெற்றொருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதன் மூலம், மூன்று வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள், பகலில் "டிவி' நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். வன்முறையை தூண்டும் வகையிலான நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதால், இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, குழந்தைகள், இரவு 7 மணிக்கு மேல் "டிவி'யில் எந்த நிகழ்ச்சியையும் பார்க்காமல் இருப்பது அவர்களது ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்.
சிறு வயதில் தூக்கத்தை பாதிக்கும் "டிவி' நிகழ்ச்சிகளை தொடந்து பார்ப்பது, அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் உடல் பருமன், பள்ளிக்கு செல்லாமல் இருப்பது போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்' என்பது, தெரிய வந்துள்ளது. "வளரும் குழந்தைகளின் தூக்கத்தை பாதிப்பதில் "டிவி' நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கார்ட்டூன்கள், நேரடி ஒளிபரப்புகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளிலேயே பெரும்பாலும், வன்முறையை தூண்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
ஏழு முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு என காட்டப்படும் நிகழ்ச்சிகளை, மூன்று முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோரும் பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் காட்டப்படும் வன்முறை சம்பவங்கள் குழந்தைகளை வெகுவாக பாதிக்கின்றன. ஆனால், எவ்வளவு நேரம் குழந்தைகள் "டிவி' பார்க்கின்றனர்; அதில், எவ்வளவு நேரம் வன்முறை நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன என்பது குறித்து பெற்றோர் குறைவான மதிப்பீடு செய்கின்றனர்' என்கிறார் ஆய்வாளர் மைக்கெல் காரிசன்.
மியாமி மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் நீனா மாலிக் கூறுகையில், "பொதுவாக, காட்டப்படும் நிகழ்ச்சிகளில் எது உண்மையானது; எது உண்மை இல்லாதது என்பது குறித்து குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியாது. எனவே, இரவு நேரங்களில் வன்முறையை தூண்டும் "டிவி' நிகழ்ச்சிகளை குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது' என்று எச்சரிக்கிறார்.

ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: "டிவி'யில் வன்முறை நிகழ்ச்சிகள்: குழந்தைகளுக்கு தூக்கம் போச்சு!
கண்டிப்பாக குழந்தைகளை இவ்வாறான வன்முறைகளை பார்ப்பதைவிட்டும் தவிர்க்க வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum