Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வயிற்றுக்கான யோகாசனம்
5 posters
Page 1 of 1
வயிற்றுக்கான யோகாசனம்
ஜீரண மண்டலத்தைத் தூண்டி ஜீரண சக்தியைச் சீர்படுத்தும் யோகாசனங்கள் பல உள்ளன அவற்றில் சிலவற்றை உங்களது கவனத்திற்குத் தருகிறோம். சுருக்கமான செய்முறையும் விளக்கவுரையும் தருகின்றோம்.
யோகாசனங்களைக் கற்றுத் தேர்ந்த ஆசிரியர் மூலம் பயில்வதே மிகச் சிறந்த பயனைத் தரும். இருப்பினும் நீங்களே அதிகம் சிரமப்படாமல், உடலை வெகுவாகக் கஷ்டப்படுத்தாமல், தளர்ந்த நிலையில் முயற்சிக்கக் கூடியவையே இவை. முயற்சி செய்துபார்க்கலாம்.
கும்மராசனம் (பூனை)
இந்த ஆசனம் வயிற்றுப் பகுதி, பின்புறம், முதுகு, தண்டுவடம் போன்ற பகுதிகளை உறுதிப்படுத்தக் கூடியது. இது ஜீரண சக்தியைத் தூண்டக் கூடியது. நரம்பு மண்டலம் மற்றும் தசைகளை வலுப்படுத்தவும் செய்கிறது.
நிலை 1: முழங்காலில் நின்று கொண்டு உடம்பை முன்புறமாக வளைத்து
தரையில் கைகளை ஊன்ற வேண்டும்.
நிலை 2: முழங்காலை சரியாக இடுப்புப் பகுதிக்குக் கீழாகவும் கைகளை
சரியாக தோள்களுக்குக் கீழாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நிலை 3: மூச்சை வெளியில் விட்டபடி தலையைக் குனிந்து முதுகை மேலே
உயர்த்தி அடிவயிற்றை உள்ளே இழுக்கவும்.
நிலை 4: மூச்சை உள்ளிழுத்து மெதுவாக அடிவயிற்றைத் தளர்த்தி முதுகை
சமப்படுத்தி தலையை நிமிர்ந்து மேலே பார்க்கவும்.
நிலை 5: தொடர்ந்து 4 மற்றும் 5 ஐ மாறி மாறி முடிந்தவரை செய்து பின்
தளர்த்தவும்.
பாய்வ கோனாசனா
இந்த ஆசனா இடுப்பு, பின்புறம் அடிவயிறு போன்ற பகுதிகளை வலுப்படுத்தக் கூடியது. ஜீரண உறுப்புக்களை சீராக இயக்கச் செய்கிறது. கால்களுக்கு வலுச் சேர்க்கின்றது. சுவாசமண்டலப்பிரச்சனைகளுக்கும். உதவி புரிகின்றது.
நிலை 1: சமமான தரையில் இரு கால்களையும் முடிந்தவரை பிரித்து வைத்துக்
கொண்டு இரு கைகளையும் இருபுறம் தூக்கி கழுத்து அளவிற்கு
வைத்துக் கொள்ள வேண்டும். (மூச்சை உள்ளிழுத்த நிலையில்).
நிலை 2: பின் மூச்சை வெளியே விட்டு ஒரு புறம் கால் முட்டியை மட்டும்
மடக்கி உடம்பை அந்தப்புறம் வளைக்க வேண்டும்.
நிலை 3: இரு கைகளையும் கீழே போட்டு ஒரு புறம் வளைந்த
முட்டிக்காலுடன் நிற்க வேண்டும். பின் எதிர்புறம் உள்ள கையை
தலைக்கு மேலே மூச்சை உள்ளே இருந்த வண்ணம் கையை உயர்த்த
வேண்டும்.
நிலை 4: உடம்பையும் ஒரே புறமாக ஒரு சாய்க்க வேண்டும்.
நிலை 5: மூச்சை மெதுவாக வெளியே விட்டு மெதுவாக முதல் நிலைக்கு வர
வேண்டும்.
நிலை 6: பின் இது போல மறுகாலின் முட்டியை வளைத்து இருந்து கையை
மேலே தூக்கி பின் தளர்த்தவும்.
நிலை 7: முடிந்தவரை இரு புறமும் மாறி மாறி செய்திடல்.
திரிகோனாசனா
இந்த ஆசனமும் கால்களுக்கும் பின்புறத்திற்கும் வலுவூட்டக் கூடியவை இது உடலின் வளை திறனை அதிகப்படுத்தக் கூடியது. வயிற்று உபாதைகளை சீர்படுத்தக் கூடியது. வயிற்றின் செயல்பாட்டையும் ஜீரணசக்தியையும் உந்தக் கூடியது. இது மார்பகங்களை விரிவுபடுத்தக் கூடிய ஆசனமாகும்.
நிலை 1: சம தரையில் நேராக நின்று முடிந்தவரை கால்களை அகற்றி
வைத்துக் கொள்ளவும்.
நிலை 2: மூச்சை உள்ளே இழுத்து இரு கைகளையும் இருபுறமும் தோள்
அளவிற்கு உயர்த்தவும்.
நிலை 3: மூச்சை வெளியே விட்டு இடது புற காலை இடப்புற கையால்
உடம்பை பக்கவாட்டில் வளைந்து தொடவும்.
நிலை 4: மூச்சை உள்ளே இழுத்து நெஞ்சை பெரிதாக்கி மேலே ஒரு கையும்
கீழே ஒரு கையும் ஒரே கோட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்
நிலை 5: மூச்சை வெளியே விட்டு முகத்தை மேலே திருப்பி மேலே
உயர்த்தியுள்ள கையைப் பார்க்கவும்.
நிலை 6: பின் தளர்ந்து 2 ஆம் நிலைக்கு வந்து முதல் நிலையை அடையவும்.
நிலை 7: பின் ஒரு சில விநாடிகள் விட்டு விட்டு மறுபுறம் இதே நிலைகளை
முயற்சிக்கவும்.
உத்தானாசனா
இந்த ஆசனம் அடிவயிறு குடல், மலத்துவாரம் போன்றவற்றை வலுப்படுத்தும் உடலுக்கு புத்துணர்வை பரவச் செய்திடும். கால்களை வலுப்படுத்திடும்.
நிலை 1: சம தரையில் வலுவாக நின்று கொள்ளவும்.
நிலை 2: மூச்சை உள்ளே இழுத்து கைகளை மடக்காமல் தலைக்கு மேலே
உயர்த்தவும்.
நிலை 3: மூச்சை வெளியே விட்டு உடலை மடக்கி தரையில் கால்களுக்குப்
பக்கத்தில் கையை ஊன்றவும். (முழங்கால் கைகள்ஆகியவற்றை
வளைக்காமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்).
நிலை 4: ஒரு சில விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு பின் தளர்த்தி முதல்
நிலைக்கு வரவும்.
நிலை 5: மாறி மாறி முடிந்தவரை இதனை தொடர்ந்து செய்திடலாம்.
பரசவோடானாசனா
இந்த ஆசனம் இடுப்புப் பகுதிக்கு நல்ல வளையும் திறனைக் கொடுக்கும். அடிவயிற்றின் உட்புறச் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. சிறுகுடல் பெருங்குடல் போன்றவற்றை வலுப்படுத்திடும்.
நிலை 1: சம தரையில் நன்றாக நின்று கொள்ள வேண்டும்.
நிலை 2: கால்களை சிறிது அகற்றி விரித்து வைத்துக் கொண்டு இரு
கைகளையும் பின்புறமாகக் கட்டிக்கொள்ள வேண்டும்.
நிலை 3: கால்களை சிறிது முன்னும் பின்னுமாக வைத்துக் கொண்டு மூச்சை
உள்ளே இழுக்கவும்.
நிலை 4: மூச்சை வெளிவிட்டு விட்டு அப்படியே (கைகள் பின்புறம்
கட்டியபடி). குனிந்து முடிந்தவரை காலைத் தொடவும் அல்லது
தொட முயற்சிக்கவும்.
நிலை 5: பின் மூச்சை உள்ளே இழுத்து 2 ஆம் நிலைக்குத் திரும்பி பின் முதல்
நிலையை அடையவும்.
நிலை 6: இதே போல மறுபக்கமும் செய்யவும் பின் சிறிது இடைவெளி விட்டு
மாறி மாறி செய்யவும்.
இவை தவிர, கீழ்க்கண்ட ஆசனங்களும் ஜீரண மண்டல கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
1. பசியை தூண்ட – பஸ்சி மோத்தாசனம், புஜங்காசனம், சலபாசனம் தனுராசனம், மத்ஸ்யாசனம், மகராசனம்
2. மலச்சிக்கலுக்கு – பாவனமுக்தாசனா, பஸ்சிமோத்தாசனம், புஜங்காசனம் சலபாசனம், தனுராசனம், சர்வாங்காசனம், அர்த்த மத்ஸ்யேன்திர ஆசனம்
3. வாய்வு / உப்புசம் – பாவனமுக்தாசனம், வஜ்ராசனம், அர்த்தமத்ஸ்யேன்திர ஆசனம்,
புஜங்காசனம்
4. அதிக அமில சுரப்பு – சர்வாங்காசனம், புஜங்காசனம், தனுராசனம் பஸ்சிமோத்தாசனம்,
மத்ஸ்யேந்திர ஆசனம்.
5. அஜீரணம், இதர ஜீரண கோளாறுகள் – எல்லா நிர்க்கின்ற நிலை ஆணங்கள்,
6. சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், புஜங்காசனம், சலபாசனம், கூர்மாசனம், மயூராசனம்.
7. வாய் துர்நாற்றத்திற்கு – சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், சிம்ஹாசனம் மத்ஸ்யேந்திராசனம்.
8. வயிற்று பூச்சிகளுக்கு – சர்வாங்காசனம், ஹாலசனம், மத்ஸ்யாசனம், பஸ்சிமோஸ்தாசனம், மத்ஸ்யேன்திராசனம்.
9. மஞ்சள் காமாலை – சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், தனுராசனம்,
குறிப்பு
1. மேற்கண்ட ஆசனங்களுடன், சூர்ய நமஸ்காரம், பிராணாயாமம் செய்வது நல்லது.
2. எல்லா ஆசனங்களின் முடிவில் “சவாசனம்” செய்வது நல்லது.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வயிற்றுக்கான யோகாசனம்
சூர்ய நமஸ்காரம் மூன்று வாரங்கள் செய்த பின், யோகா ஆரம்பிப்பது நல்லது. ://:-:
Re: வயிற்றுக்கான யோகாசனம்
நான் இவ்வளவு நாள் செஞ்சிருன்தவ இப்போதான் விட்டேன்... சோம்பல் தான் காரணம். மறுபடி ஆரம்பிக்கணும்..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வயிற்றுக்கான யோகாசனம்
பகிர்வுக்கு நன்றி யோகா செய்யனும் ஆனால் செய்ய முடியல ஏன் தெரியுமா? சாதிக்.....சாதிக் wrote:இதுவரை யோகா செய்தில்லை இனிமேல் செய்ய முயற்சிக்கிறேன் நன்றி பகிர்வுக்கு
Re: வயிற்றுக்கான யோகாசனம்
யாதுமானவள் wrote:நான் இவ்வளவு நாள் செஞ்சிருன்தவ இப்போதான் விட்டேன்... சோம்பல் தான் காரணம். மறுபடி ஆரம்பிக்கணும்..
அதனாலதான் குண்ண்ண்ணடா இருக்கிங்களா அக்கா
Re: வயிற்றுக்கான யோகாசனம்
பார்த்தா அப்படி தெரியலயே சாதிக் அக்கா குண்டா? :,;: :,;: :,;:சாதிக் wrote:யாதுமானவள் wrote:நான் இவ்வளவு நாள் செஞ்சிருன்தவ இப்போதான் விட்டேன்... சோம்பல் தான் காரணம். மறுபடி ஆரம்பிக்கணும்..
அதனாலதான் குண்ண்ண்ணடா இருக்கிங்களா அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வயிற்றுக்கான யோகாசனம்
அடடா... டாபிக் மாறிபோச்சே ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வயிற்றுக்கான யோகாசனம்
நண்பன் wrote:பார்த்தா அப்படி தெரியலயே சாதிக் அக்கா குண்டா? :,;: :,;: :,;:சாதிக் wrote:யாதுமானவள் wrote:நான் இவ்வளவு நாள் செஞ்சிருன்தவ இப்போதான் விட்டேன்... சோம்பல் தான் காரணம். மறுபடி ஆரம்பிக்கணும்..
அதனாலதான் குண்ண்ண்ணடா இருக்கிங்களா அக்கா
ஹலோ இது அக்கா தம்பிக்குள்ள சமாச்சாரம் நீங்க கேக்கப்படாது :”: :”:
Re: வயிற்றுக்கான யோகாசனம்
சாதிக் wrote:நண்பன் wrote:பார்த்தா அப்படி தெரியலயே சாதிக் அக்கா குண்டா? :,;: :,;: :,;:சாதிக் wrote:யாதுமானவள் wrote:நான் இவ்வளவு நாள் செஞ்சிருன்தவ இப்போதான் விட்டேன்... சோம்பல் தான் காரணம். மறுபடி ஆரம்பிக்கணும்..
அதனாலதான் குண்ண்ண்ணடா இருக்கிங்களா அக்கா
ஹலோ இது அக்கா தம்பிக்குள்ள சமாச்சாரம் நீங்க கேக்கப்படாது :”: :”:
ஹ்ஹஹா ...சாதிக் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வயிற்றுக்கான யோகாசனம்
அக்கா பீல் பன்றாங்க எங்கேப்சாதிக் wrote:நண்பன் wrote:பார்த்தா அப்படி தெரியலயே சாதிக் அக்கா குண்டா? :,;: :,;: :,;:சாதிக் wrote:யாதுமானவள் wrote:நான் இவ்வளவு நாள் செஞ்சிருன்தவ இப்போதான் விட்டேன்... சோம்பல் தான் காரணம். மறுபடி ஆரம்பிக்கணும்..
அதனாலதான் குண்ண்ண்ணடா இருக்கிங்களா அக்கா
ஹலோ இது அக்கா தம்பிக்குள்ள சமாச்சாரம் நீங்க கேக்கப்படாது :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum