Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஈசன் திரைப்படம் பற்றி!!
Page 1 of 1
ஈசன் திரைப்படம் பற்றி!!
மூன்று மணி நேரத்தையும் தாண்டி ஒடுகிறது படம். தாக்குப்பிடித்து உட்கார்ந்திருக்கிற ரசிகனுக்கு கடைசி நேரத்தில் தரப்படுகிற பிரசாதம்... |
வேறென்ன, பிரமிப்புதான்! (புண்ணியமாப் போவும், அரை மணி நேர படத்தை தூக்குங்க சாமி) ராத்திரி பத்துமணிக்கு மேல வேற உலகம் இருக்கு சென்னையில்! பப், பார்ட்டி, என்று தறிகெட்டு திரியும் அவர்களின் அட்டகாசங்களும், அதற்குண்டான சவுக்கடியும்தான் முழுப்படம். இடையிலே வரும் கொசுக்கடியை தவிர்த்திருந்தால் படத்தையும், சசிகுமாரையும் 'பலே வெள்ளையத்தேவா...' பாராட்டி சீராட்டியிருக்கலாம். அமைச்சரின் மகன் வைபவ் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஒரே பொழுதுபோக்கு சரக்கும், சைட் டிஷ்ஷ§க்கு பெண்களும்தான். தன்னைவிட பெரும் பணக்காரியை முதல் பார்வையிலேயே காதல் கொள்கிறார் அவர். அமைச்சர் குடும்பமாக இருந்தாலும் அந்தஸ்து இடிக்க, பெண்ணை கண்டிக்கிறார் தொழிலதிபர். எப்படியோ இரு குடும்பமும் திருமணத்திற்கு சம்மதிக்கிற நேரத்தில், வைபவ் எஸ்கேப். அசிஸ்டென்ட் கமிஷனர் சமுத்திரக்கனி தேடுகிறார். ஆனால் வைபவ் கிடைத்தது எப்படி? என்னவாக? என்பதுதான் க்ளைமாக்ஸ். அமைச்சர் அழகப்பனின் அலட்டல்களை வாய்விட்டே ரசிக்கலாம். அதுவும் தனது வேட்டி, சட்டையை அவர் மாற்றுகிற அழகு இருக்கிறதே... பிரமாதம்! கடைசியில் அவரது அண்டர்வேர் விழுகிற இடம் நுணுக்கமான கற்பனை! படுத்துக்கொண்டே பிரச்சனையை டீல் செய்பவரிடம் லேப் டாப்பில் டெமோ காட்டுகிற காட்சியெல்லாம் சிரிப்பு தோரணம். தோளுக்கு மேல் வளர்ந்த பையனை அறைந்துவிட்டு பின்பு அவரிடமே இறங்கி வந்து பேசுகிற போதெல்லாம் தொழில்முறை நடிகர்களையே தோற்கடிப்பார் போலிருக்கிறது இந்த புதுமுக அழகப்பன்! வைபவுக்கு கிடைப்பதற்குரிய வாய்ப்பு. சமர்த்தாக பற்றிக் கொள்கிறார். முன் வரிசை தாய்மார்கள் 'மண்ணாப்போவ....' என்று து£ற்றுவது நிச்சயம்! காரில் ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு திணறி சாமர்த்தியமாக தப்பிக்கிற காட்சி லேசாக திகில் மூட்டுகிறது. அந்த அப்பாவி ஜீவன் அபிநயாவிற்கு நிஜத்திலும் பேச வராது என்கிற நிலையில் படத்தில் அவருக்கு நேர்கிற கொடுமை கலங்கடிக்கிறது. அப்பா ஆசையோடு கொடுக்கிற காபியை பருகுகிற அந்த வினாடி நேரத்தில், நிஜம் புரிந்து ஒரு பார்வை பார்க்கிறாரே... வசனங்களில் சொல்லக் கூடிய விஷயமா அது? படம் முழுக்க வாக்கிங் போய் கொண்டேயிருக்கிறார் சமுத்திரக்கனி. எவ்வளவோ கம்பீர போலீஸ்களை பார்த்த தமிழ்சினிமா... ஹ்ம்! படத்தின் இறுதிக்காட்சியில் வன்முறையின் உச்சத்தையே தொட்டு கலங்கடிக்கிற அந்த சிறுவன் துஷ்யந்த், புதுமுகம் என்றால் யாரால்தான் நம்ப முடியும்? நாங்க எப்படியிருந்தோம் தெரியுமா என்று அவன் ஆரம்பிக்கும்போதே புரிந்துவிடுகிறது, இப்படி ஒரு பிளாஷ்பேக் பின்னால் வரப்போகிறதென்று! "அவ்வளவு அடிக்கும் அவன் சாகலையே" -யாரோ காமெண்ட் அடிக்கிற நேரத்தில், "விஷம் குடிச்சே சாகல நான். இவங்க அடிச்சா சாகப்போறேன்" என்கிறான். நல்ல பதில்! படம் நெடுக இழையோடும் அமானுஷ்யத்தை மீறி முகத்தில் புன்னகையை வரவழைக்கிறது அந்த 'ஜில்லா விட்டு...' பாடல். தஞ்சை செல்வியின் குரலும், தினேஷின் நடன அமைப்பும் மந்திரம் போட்ட மாதிரி மனசையும் சேர்த்து ஆட வைக்கிறது! எல்லாம் சரி... இந்த படத்தை இயக்கியிருப்பது நம்ம சசிகுமாராம். நெசமாத்தான் சொல்றாங்களா? |
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum