சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அடேனார் கொன்ராடு Khan11

அடேனார் கொன்ராடு

Go down

அடேனார் கொன்ராடு Empty அடேனார் கொன்ராடு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 16:48

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி சீரழிந்து போனது. ஜெர்மனி மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என பிளவுப்பட்டு போனது. இதில் மேற்கு ஜெர்மனி வெகு சீக்கிரமாக தலைநிமிர்ந்தது. பொருளாதாரத்தில் தன்னை வலுபடுத்திக் கொண்டது. மேற்கு ஜெர்மனி விரைவாக பொருளாதார வளமிக்க நாடாக மாறுவதற்கு பெரும் காரணமாக விளங்கிய அடேனார் கொன்ராடு என்பவர் மிகச்சிறந்த அரசியல்வல்லுநர்.

அடேனார் கொன்ராடு (Adenauer konrad) 1876 - ல் கோலோ நகரில் பிறந்தார். தந்தையார் கொன்ராடு ஒரு சட்டத்துறை எழுத்தர். இவர் ரோமன் கத்தோலிக்கச் சமயத்தைச் சார்ந்தவர்.

அடேனார் சட்டத்தையும், பொருளாதாரத்தையும் கற்றுத் தேர்ந்து கோலோன் நகரின் மாவட்ட நீதிமன்றத்தில் துணை நீதிபதியானார். 1906 - ல் கோலோன் நகரின் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1917 முதல் 1933 வரை மேயராகப் பதவி வகித்தார். நகரசபையோடு நில்லாமல் தேசிய அரசியலிலும் ஈடுபட்டார். கத்தோலிக்க மையக்கட்சியில் உறுப்பினராக சேர்ந்து 1917 முதல் 1933 வரை இரைன்லாந்து மாநிலச் சட்டமன்றத்தில் பணியாற்றினார். 1926 - ல் அடேனார் இலான்சிலிக்கல் கட்சியினரையும், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களையும் அரசியலில் இணைக்க வேண்டுமென வெளிப்படையாக பேசினார்.

இதனால் ஹிட்லரின் கோபதுக்கு ஆளானார். 1933 - ல் ஹிட்லரின் ஆட்சியைச் சார்ந்தவர்கள் அடேனாரை ஜெர்மனிய மக்களுக்கு எதிராக குற்றம் செய்தவர் எனக்கூறி அனைத்து பதவிகளிலிருந்தும் விலக்கிவிட்டனர். பன்னிரெண்டு ஆண்டுகள் அரசியலிலிருந்து விலகியிருந்தார். 1944 - ஆம் ஆண்டின் இறுதியில் நாசிகள் இவரை அரசுக்கு எதிர்ப்பானவர்களை ஒதுக்கிவைக்கும் முகாம்களில் தள்ளி ஒதுக்கி வைத்தனர்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்விற்றது. அமெரிக்கர்கள் 1945 - ல் அடேனாரைச் கோலோன் நகரின் மேயராக்கினர். கோலோன் நகர் ஆங்கிலேயர் வசப்பட்டபோது ஆங்கிலேயர் இவரது பதவியைப் பறித்தனர்.

அப்போது கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் என்னும் அரசியல் கட்சி உருவானது. அதை உருவாக்கியவர்களில் அடேனாரும் ஒருவர். போரில் அழிவுற்ற ஜெர்மனியைச் சீராக்கப் பாடுபடுவதே அக்கட்சியின் நோக்கமாக இருந்தது. கிறிஸ்தவ சமய உயர்வை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துடைய அக்கட்சியின் முயற்சியால் கிறிஸ்தவர்களிடையே நல்லிணக்கம் தோன்றியது.

அடேனாரின் எழுபதாவது வயதில் அவரது பெரும் அரசியல் வாழ்வு துவங்கியது. விரைவில் கட்சியின் தலைவரானார். அவரது கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. இதனால் இவரது செல்வாக்கு உயர்ந்தது.

மேற்கு ஜெர்மனி மூன்று பகுதிகளாக இருந்தது. அவை அமெரிக்க, ஆங்கில, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தன. இம்மூன்று பகுதிகளையும் இணைத்து மேற்கு ஜெர்மனி உருவானபோது அடேனார் அதன் தனிப்பெரும் தலைவராக உயர்ந்தார். 1948 - ல் பாராளுமன்றக் குழுவின் தலைவராக ஆனவுடன் ஜெர்மானியக் கூட்டாட்சி குடியரசுக்கான புதிய அரசியல் அமைப்புத் திட்டத்தை வரையும் பணியில் ஈடுபட்டார். 1949 - ல் முதல் ஜெர்மானியக் கூட்டாட்சி நாடாளுமன்றத்தால் இவர் தலைமை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1953, 1957, 1961 ஆகிய ஆண்டுகளிலும் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

1963 அக்டோபர் திங்களில் அடேனார் தனது 87 வது வயதில் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது தலைமையிலேயே மேற்கு ஜெர்மனி 1955 - ல் முழு விடுதலை பெற்றது. அந்நாடு வியத்தகு முறையில் பொருளாதார முன்னேற்றம் பெற்றதற்கும் இவரே பொறுப்பாவார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum