Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என்ன நடக்கிறது அரபு மண்ணில்…?
Page 1 of 1
என்ன நடக்கிறது அரபு மண்ணில்…?
இந்த ஆண்டு தொடக்கத்தில் வட
ஆப்ரிக்காவில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் சிறிய நாடான துனீஸியாவில் ஏற்பட்ட
மக்கள் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பல அரபு நாடுகளுக்கும் பரவி வருகிறது.
துனீஸியாவிலும் எகிப்திலும் இந்தப் போராட்டம் அந்நாட்டின் அதிபர்களை
நாட்டைவிட்டு ஓடச் செய்துள்ளது. தற்போது லிபியாவிலும் ஏமனிலும் போராட்டத்
தீ பற்றி எரிகிறது.
எதனால் இந்தப் போராட்டம் நடக்கிறது? அரபு மண்ணில் என்ன நடக்கிறது? இந்தப்
போராட்டங்களின் பின்னணியில் யாருடைய கை உள்ளது? என்பன குறித்து இந்த
கட்டுரை விரிவாக அலசுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக வரைபடத்தில் பல நாடுகளின் எல்லைக்கோடுகள் மாற்றி அமைக்கப்பட்டன.
பல நூறு ஆண்டுகளாக தீட்டப்பட்ட சதித்திட்டங்களின் அடிப்படையில் உலகில்
இரண்டாவது பெரிய சமூகமான முஸ்லிம் சமுதாயத்திற்கான ஒருங்கிணைந்த தலைமையோ
அல்லது மிகப் பிரம்மாண்டமான பரப்பளவைக் கொண்ட நாடோ உருவாகி விடக் கூடாது
என்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த அமெரிக்க மற்றும் ஐரோப்பியர்கள்,
முஸ்லிம்களின் இதயத்தில் துளையிட்டு இஸ்ரேல் என்கிற பயங்கரவாத நாட்டை
பாலஸ்தீன மண்ணில் பலவந்தமாக உருவாக்கினார்கள்.
1948ல் இஸ்ரேலின் உருவாக்கத்திற்குப்
பிறகு இன்று வரையிலான 63 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்
தங்களுடைய அரசியல், பொருளாதாரம், சமூகம், இராணுவம் போன்ற அனைத்து
துறைகளிலும் இஸ்ரேலின் இருப்பை பாதுகாத்
திடவும் அதன் வளர்ச்சியை மேம்படுத்திடவும் இஸ்ரேலை எதிர்பவர்களை
ஒடுக்கிடவும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதற்கு தேவையான அனைத்து
நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாகவும் சட்டத்திற்கு அப்பாற்பட்டும் செய்து
வருகின்றனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேலின் பயங்கரவாதத்தை, இஸ்ரேல் இராணுவம்
நடத்தும் படுகொலைகளை இந்த மேற்கத்திய நாடுகள் கண்டும் காணாமலும்
இருக்கின்றனர்.
இஸ்ரேலின் அடாவடித் தனத்தை எதிர்த்துக்
குரல் கொடுக்கும் ஒரு சில நாடுகளுக்கு எதிராக, அவர்களின் எதிர்ப்புக்
குரலை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட அயோக்கியர்களின் அவையான ஐ.நா. சபை,
உலகப் பெரும் கந்துவட்டிக் கடையான சர்வதேச நிதியகம் (IMF) உலக நாடுகளை
சுரண்டும் உலக வங்கி போன்ற படு பயங்கரவாதிகளை வைத்து பொருளாதார தடை,
இராணுவ நடவடிக்கை என்று பகிரங்கமாக மிரட்டுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் இன்றைய தேதியில்
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அனைத்து துறை சார்ந்த அரசின் முடிவுகளும்
யூதர்களால் தான் இறுதிவடிவம் கொடுக்கப்படுகிறது. உலகில் இப்போது யூதர்களின்
சிந்தனைக்கு செல்லாமல் எந்த நாடும் எந்த முடிவையும் எடுத்துவிட இயலாது
என்ற நிலை தான் நிலவுகிறது.
இன்றைய உலக சூழ்நிலையை தெளிவாக
புரிந்துகொண்டால் தான் அரபு மண்ணில் தற்போது நடைபெற்று வரும் அத்துனை
பிரச்சனைகளுக்குமான மூல காரணம் என்ன என்பது விளங்கும்.
உலக மக்கள் தொகையில் வெறும் 1 கோடியே 45
இலட்சமாக உள்ள யூதர்களின் பிடியில் மீதமுள்ள 679 கோடி மக்களும் சிக்குண்டு
கிடக்கின்றனர். மிகக் குறிப்பாக 180 கோடி முஸ்லிம்களும் 57 இஸ்லாமிய
நாடுகளும் யூதர்களின் கவனம் இல்லாமல் எதையும் சாதித்துவிட இயலாது என்பது
தான் இன்றைய நிலை.
இன்றைக்கு புரட்சியை சந்தித்து வரும்
துனீஸியா, எகிப்து, லிபியா, எமன், ஜோர்டான் ஆகிய 57 அரபு நாடுகள் உள்ளிட்ட
இஸ்லாமிய நாடுகள் 1920 வரை ஒரே தலைமையின் கீழ் இருந்தவை.
உலக முஸ்லிம்களுக்கு ஆகுமாக்கப்பட்ட
அரசியல் வழிமுறையான கிலாஃபத் என்ற ஒருங்கிணைந்த தலைமையாக துருக்கி
உதுமானியா கிலாஃபத்தின் கலீஃபா வீற்றிருந்தார். இது அமெரிக்கா, பிரிட்டன்
மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது. முஸ்லிம்களின்
உலகத் தலைமையான இந்த உதுமானியா கிலாஃபத்தை வீழ்த்திட 300 ஆண்டுகளாக
திட்டமிட்டு முஸ்லிம்களை வைத்தே சிறுக சிறுக சதிசெய்து இறுதியாக
முஸ்லிம்களின் ஒருங்கிணைந்த தலைமையை 1923 அக்டோபர் மாதம் 29 அன்றோடு
வீழ்த்தினார்கள். கடைசி கலீஃபா அப்துல் மஜீதை நாடு கடத்தினார்கள்.
500 ஆண்டுகால முஸ்லிம்களின் உலக தலைமையான
உதுமானியா கிலாஃபத்தை வீழ்த்தியப் பிறகு ஏற்கனவே திட்டமிட்டபடி முஸ்லிம்
நிலப்பரப்புகளை பலகூறுகளாக்கி பல நாடுகளை உருவாக்கினார்கள். அந்த புதிய
நாடுகளில் தங்களுக்கு விசுவாசமான அடிமைகளை ஆட்சியில் அமர்த்தினார்கள்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சதிதிட்டம் தீட்டி 1949இல் பாலஸ்தீன மண்ணை
அபகரித்து இஸ்ரேலை உருவாக்கி இனி எக்காரணம் கொண்டும் மீண்டும்
முஸ்லிம்களுக்கான உலக தலைமையான கிலாஃபா உருவாகி விடாமல் இந்த நிமிடம் வரை
அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்றனர்.
இஸ்ரேல் உருவாக்கப்பட்ட புதிதில் அதாவது 1948 முதல் 1973 வரை இந்த அரபு
நாடுகளின் அதிபர்களாக இருந்தவர்களுக்கு கொஞ்சமாவது ஈமான் இருந்தது.
உதுமானிய கிலாபத்தின் கடைசி கலீஃபா அப்துல் மஜீத் நாடு கடத்தப்படுகிறார்
அதன் காரணமாக வலிமையிழந்து போன தங்களது கிழட்டு இராணுவத்தை வைத்துக்
கொண்டு இஸ்ரேல் உருவாக்கத்தை எதிர்த்து போரிட்டு பார்த்தனர். அமெரிக்கா,
பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஆதரவோடு நவீன ஆயுதங்களை வைத்திருந்த
இஸ்ரேலை எதிர்த்து சோவியத் யூனியன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் கடன்
வாங்கப்பட்ட காலாவதியாகிப் போன ஆயுதத்தை வைத்திருந்த அரபு நாடுகளினால்
இஸ்ரேலை அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
எண்ணெய் விநியோகத்தை வைத்து மிரட்டிப் பார்த்தனர் ஒன்றும் நடக்கவில்லை.
1973 அரபு – இஸ்ரேல் போரோடு அனைத்து அரபு நாடுகளும் ஒடுங்கிப் போய்விட்டன.
அதற்குப் பிறகு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலோடு கூட்டு
சேர்ந்து கொண்டு அரபு மண்ணில் அவர்கள் நடைமுறைப்படுத்திய அரசியல், சமூக,
பொருளாதார திட்டங்களின் அடிப்படையில் தான் இன்றைக்கு ஈரான் தவிர்த்த எல்லா
அரபு நாடுகளுமே அவர்களின் தலையாட்டி பொம்மைகளாக மாற்றப்பட்டுள்ளனர்.
அரபு நாடுகளுக்கு கொஞ்சம் ஆதரவும் ஆயுதமும் அளித்து வந்த சோவியத் யூனியன்
90களில் வீழ்ச்சியடைந்த பிறகு அமெரிக்க – இஸ்ரேல் வகுத்தது தான் உலக
நியதிகளாகிப் போனது. வேறுவழியில்லாமல் கடந்த 60 ஆண்டுகளாக பெரும்பான்மையான
அரபு நாடுகளில் அதிபர்களாக அமர்ந்திருப்பவர்கள் அமெரிக்க ஐரோப்பிய
நாடுகளின் பரம அடிமைகளாகிப்போனார்கள்.
சில அரபு நாடுகளில் அமெரிக்காவில் அரசியல் பாடம் பயின்று வந்துள்ள இந்த அடிமைகளின் வாரிசுகள் ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.
துனீஸியா, எகிப்து, ஜோர்டான், லிபியா, எமன், அல்ஜீரியா, பஹ்ரைன் ஆகிய
நாடுகளில் இப்போது நடைபெற்று வருகின்ற மக்கள் போராட்டம் என்பது இந்திய
பத்திரிகைகள் விழுந்து விழுந்து எழுதி தள்ளுவது போன்ற மக்கள் புரட்சியும்
கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.
இது முழுக்க முழுக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினால் திட்டமிடப்பட்டு
ஒரு அடிமைக்கு மாற்றாக மற்றொரு புதிய தலைமுறை அடிமையை ஆட்சியில்
அமர்த்துகின்ற சதித்திட்டத்தின் அரங்கேற்றம்தான்.
அமெரிக்காவில் உள்ள FREEDOM HOUSE, The National Endownment for
Democracy. The International Centre for Non violent conflict போன்ற
சதிகார அமைப்புகள் உலகில் அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநிறுத்திட NGOக்கள்
என்ற பெயரில் உலகம் முழுவதும் கிளை பரப்பி 24 மணி நேரமும் இயங்கி
வருகின்றன.
இந்த படுபயங்கர நிறுவனங்கள் அனைத்தும் ஈமான் இழந்துபோன அரபு இளைஞர்களை
ஆசை வார்த்தை காட்டி அமெரிக்காவுக்கு அழைத்து வந்து உங்களுக்கு
ஜனநாயகத்தை கற்று தருகிறோம்; அரசியல் மேலாண்மையை கற்றுத் தருகிறோம் என்று
கூறி அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
பிறகு Facebook, Twitter போன்ற சமூக வலைத் தளங்களையும் இன்னும் பிற
தொலை தொடர்பு சாதனங்களையும் இக்கட்டான சூழலில் கூட இயக்குவது எப்படி என்று
கற்றுத் தந்து அவர்களை தங்களது கட்டளைப்படி நடக்கும் அடிமைகளாக்கி
அவர்கள் நாட்டிற்கு அனுப்புகின்றனர். இத்தகைய இளைஞர்களையும் அமெரிக்க
மோகத்தின் மீதும் உலகியல் அபிலாஷைகளுக்கும் அடிமையானவர்களையும் வைத்து
தான் இந்த போராட்டங்களை அமெரிக்கா இயக்கி நடத்துகிறது.
துனீஸியாவில் தான் முதலில் போராட்டம் தொடங்கியது. ஆனால் அமெரிக்காவின்
இலக்கு துனீஸியா அல்ல; எகிப்து! எகிப்து தான் என்று இதுவரை நாம்
நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது ஈரானாகத் தான் இருக்கும் என்பதும்
பலருடைய கருத்தாக இருக்கிறது. இறுதியாக இது எங்கு போய் முடியும் என்று
அரசியல் வல்லுனர்களே குழம்பிப் போய் கிடக்கின்றனர்.
துனீஸியாவில் போராட்ட வடிவம் உருவாக்கப்பட்டு தற்போது துனீஸியா எகிப்து
ஆகிய இரு நாடுகளிலும் அடிமைகள் மாற்றம் நடந்துள்ளது. இப்போது லிபியா
பற்றி எரிகிறது. ஏற்கனவே துனீஸிய அதிபராக இருந்த இபின் அலியும் எகிப்து
அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கும் அமெரிக்காவின் எலும்பு துண்டை கவ்வும்
….ய்கள் தானே? பிறகு ஏன் அவர்களை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு
ஏற்படலாம்.
இந்த இடத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கர்களின் ஆய்வுப் பூர்வமான அரசியல் அணுகுமுறைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
செப் 11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின்
இராணுவ நடவடிக்கையும் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களும் சதாம் ஹுசைன்
தூக்கிலிடப்பட்டதுமாக சேர்த்து உலக முஸ்லிம்களிடம் ஒரு மாபெரும் எழுச்சியை
ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக இதுவரையிலும் இல்லாத அளவிற்கு இஸ்லாத்தின்
வரைமுறைக்குட்பட்டு வாழ வேண்டும், எல்லா நிலைகளிலும் மார்க்கத்தை
நிலைநிறுத்திட வேண்டும் என்கிற வேட்கை உலக முஸ்லிம்களிடம் பல்கி பெருகி
வருகிறது. இது அரபு நாடுகளிலும் அப்பட்டமாக தெரிகிறது.
துனீஸியா, அல்ஜீரியா, எகிப்து நாடுகளில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆதரவு
பெருகி வருவதை இது வெளிப்படுத்துகிறது. அரபு நாடுகளின் மிகப்பெரிய
இஸ்லாமிய அமைப்பான இஃஹ்வானுல் முஸ்லிமீன் என்ற முஸ்லிம் சகோதரத்துவ
அமைப்பிற்கு ஆதரவு மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்து வருகிறது.
முஸ்லிம்களிடம் இஸ்லாமிய உணர்வுகள் அதிகரிப்பதும், இஸ்லாமிய இயக்கங்கள்
பெரிய அளவில் வளர்ந்து வருவதும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு
கவலையளித்தது. மேலும் 30 ஆண்டுகளாக அசையாமல் ஆட்சியை பிடித்துக்
கொண்டிருந்த எகிப்தின் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவரின் குடும்பத்தார்
அடித்த கொள்ளைக்கு அளவே இல்லை.
எகிப்தில் இரண்டே வர்க்கம் தான் உள்ளது. ஒன்று முபாரக்கின் குடும்பம்.
இவர்கள் தான் நாட்டின் 90 விழுக்காடு வளங்களை சுரண்டிக் கொழுத்தனர்.
மற்றொன்று ஏழை வர்க்கம். இவர்கள் தான் எகிப்தின் 95 விழுக்காடு மக்கள்.
இந்தியாவைப் போன்று நடுத்தர வர்க்கம் என்ற நிலையே எகிப்தில் கிடையாது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், வறுமையும், ஊழலும், லஞ்ச
லாவண்யமும் வேலை இல்லாத்திண்டாட்டமும் தலைவிரித்து ஆடியபோது 2005 லேயே
புரட்சி வெடிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகளே கணித்து சொன்னார்கள்.
எச்சரிக்கவும் செய்தனர்.
இதே போன்ற நிலை தான் துனீஸியாவிலும் இருந்தது.
இப்படி மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். புரட்சி செய்ய தயாராகி
வருகின்றனர் என்ற செய்திகளை தெரிந்து கொண்டு; மக்களின் இந்த வேகத்தை
இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு புரட்சியில்
ஈடுபட்டால் அது இஸ்ரேல் – அமெரிக்க நாடுகளுக்கு மிகப்பெரும் ஆபத்தை
ஏற்படுத்தும் என்பதாலும்;
மேலும் அமெரிக்க முன்னிலையில் எகிப்தும் – இஸ்ரேலும் 1979இல் செய்து
கொண்ட கேடுகெட்ட “கேம்ப் டேவிட்” ஒப்பந்தத்திற்கு ஆபத்து ஏற்படும்
என்பதாலும் மக்களின் கோபத்திற்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக ஊழல்
பெருச்சாளிகளான வயதான கிழட்டு அடிமைகளை துரத்திவிட்டு புதிய அடிமைகளை
ஆட்சியில் அமர்த்துவதற்கான அமெரிக்க – இஸ்ரேலின் சதித்திட்டத்தில் உருவான
ஏற்பாடு தான் இந்த மக்கள் போராட்டம்.
நேரிடையாக எகிப்தில் தொடங்கினால் முபாரக் அசைந்து கொடுக்கமாட்டார்
என்று அமெரிக்காவிற்கு தெரியும். அதனால் சிறிய நாடான துனீஸியாவில் தொடங்கி
அதையே வழிகாட்டலாக வைத்து முபாரக்கை துரத்தியுள்ளது அமெரிக்க – இஸ்ரேல்
நாசகார கூட்டணி.
துனீஸியாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது அமெரிக்காவின் சிமிகி
நிறுவனம் துனீஸியாவின் இராணுவத் தளபதிகளோடு நேரடித் தொடர்பு வைத்து
போராட்டத்தின் வடிவத்தையும் இராணுவத்தின் போக்கையும் பரப்படியாக
நகர்த்திச் சென்று இபின் அலியை துரத்திவிட்டு மஹமூத் கணூசி என்ற மற்றொரு
அமெரிக்க அடிமையை அதிபராக்கி உள்ளனர்.
துனீஸியாவில் ஆள் மாறியவுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச்செயலாளர்
ஜெஃப்ரி ஃபெல்ட் மேன் துனீஸியாவிற்கு வந்து புதிய அதிபர் மேற்கொள்ள
வேண்டிய நடவடிக்கைகளை முறைப்படுத்தி விட்டுச் சென்றுள்ளார். அதேபோல
எகிப்தில் மக்கள் போராடத் தொடங்கிய போது எகிப்து இராணுவ ஜெனரல் சமி ஹஃபீஸ்
அமெரிக்காவில் இருந்தார்.
அமெரிக்க சிமிகி நிறுவனம் சமி ஹஃபீஸீக்கு பாடம் நடத்தி அனுப்பியது. அதை
அப்படியே கடைபிடித்து முபாரக்கை துரத்திவிட்டு இராணுவம் அங்கே ஆட்சியை
பிடித்துள்ளது. ஜனநாயக முறையிலான தேர்தல் நடத்துவோம் என்று இராணுவம்
கூறியிருப்பதன் நோக்கம் என்னவென்றால் முபாரக்கை விட சிறந்த அடிமை
கிடைக்கின்ற வரை எங்கள் ஆட்சி தொடரும் என்று பொருள்.
ஹோஸ்னி முபாரக்கும் சாதாரண ஆள் இல்லை. இவரும் இப்போது இவரால் துணைஜனாதிபதியாக அமர்த்தப்பட்டுள்ள சுலைமா
னும் செய்த அட்டூழியங்கள் கொஞ்சமல்ல. அமெரிக்க – இஸ்ரேலை எதிர்த்து
யாரெல்லாம் உலக அளவில் குரல் கொடுக்கின்றனரோ அவர்களை பிடித்து வந்து
எகிப்தில் வைத்து சித்ரவதை செய்தவர் தான் இப்போது துணை ஜனாதிபதியான
சுலைமான். எகிப்தில் பல இரகசிய சித்ரவதை கூடங்கள் இன்றைக்கும்
செயல்பாட்டில் உள்ளன. இதில் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய இயக்கங்களைச்
சேர்ந்தவர்கள் அடைபட்டு வதைபட்டுக் கிடக்கின்றனர்.
ஆக மொத்த முஸ்லிம் சமூகம் வலிமை அடைந்து விடக்கூடாது என்பது தான் இந்த
சதிகாரர்களின் எண்ணம். மத்தியக்கால உலக வரலாற்றில் உலகின் அனைத்துக்
கொள்கை முடிவுகளையும் தீர்மானிக்கும் ஆற்றல் முஸ்லிம்களிடம் இருந்தது.
இனி மீண்டும் அரபு நாடுகளும் முஸ்லிம் சமூகமும் தாங்களின் பொருளாதார
வளங்கள் கொள்ளையடிக்கப்படாமல் பாதுகாத்திடவும் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள
இஸ்ரேலை அப்புறபடுத்திடவும் வேண்டும் என்றால் முஸ்
லிம்களுக்கு ஆகுமாக்கப்பட்ட அரசியல் வழிமுறையான ஒருங்கிணைந்த அரசியல் தலைமை உருவானால் மட்டும் தான் சாத்தியம்.
இது உருவாகி விடக்கூடாது என்பதற்காகவே அமெரிக்க – இஸ்ரேல் – ஐரோப்பியக்
கூட்டணி முஸ்லிம்களை இஸ்லாமியப் பாதையிலிருந்து விலகுவதற்கான அத்துனை
வகையான நடவடிக்கைகளும் செய்து வருகின்றனர். ஏறக்குறைய இதில் அவர்கள் வெற்றி
பெற்றுள்ளனர் என்றே சொல்லலாம்.
இன்று அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஆட்டம் பாட்டம் கழியாட்டங்களை
கண்டால் இவர்கள் முஸ்லிம்கள் தானா? இது இஸ்லாமிய மண் தானா? என்று கேள்வி
எழுகிறது. இந்த சதியை கடந்த 250 ஆண்டுகளாகவே மேற்கத்தியவாதிகள்
திட்டமிட்டு நடத்தி வருகின்றனர்.
இதற்கெல்லாம் எப்போது விடிவு வரும் என்று தான் உண்மையான இறை
நம்பிக்கையாளர்கள் இறைவனிடம் பிரார்தித்து வருகின்றனர். மக்களிடம்
மாற்றங்கள் தென்படுகின்றன. வெகுவிரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்பதில்
நம்பிக்கை இருக்கிறது.
- CMN சலீம்
Source: http://www.samooganeethi.org/?p=929
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum