சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம் Khan11

பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்

Go down

பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம் Empty பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்

Post by Atchaya Wed 20 Jul 2011 - 16:10

பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்
முகவுரை:
வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் எனத் திடடவட்டமாகப் பார்க்க வேண்டும். அதற்கு வாழ்க்கைத் தத்துவம், அல்லது நியதி என்ன என்று ஆராய வேண்டும். அதை ஞானிகள் சான்றிதழுடன் தந்தால்தான் அது நமக்கு ஏற்கக்கூடியதாக அமையும். அப்படிப் பார்க்கும்போது சிறு வயதிலேயே ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திலேயே ஸன்யாஸியாகி, தனது 32 வருட வாழ்வுக்குள் மஹா ஞானியாகி அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டி, ஸர்வக்ஞ பீடத்தில் அமர்ந்து, ஸனாதன தர்மத்தை (HINDUISM) உலகிற்குத் தந்து, நான்கு காஞ்சி மடங்களை ஸ்தாபித்து, ஸனாதன தர்மத்தைக் காக்கும் பொறுப்பை அவர்களிடம் தந்து 32-வது வயதில் நிர்வாணமாகிய ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்கள் நமக்குத் தொகுத்தளித்த இந்த “பஜ கோவிந்தம்” என்ற திவ்ய காவ்யத்தைப்போல ரொம்பவும் சுலபமாகப் பின்பற்றக்கூடிய சான்றிதழ் வெறுண்டோ? ஆத்மபோதம், பகவத்கீதை போன்ற நூல்களில் தந்துள்ள வாழ்க்கையின் நியதியை, வாழ்க்கை முறையை, வாழ்வின் தத்துவத்தை மிகத் தெளிவாகவும், நளினமாகவும் இதில் தந்துள்ளார்.

நம் வாழ்வின் தவறான நோக்கம் நம்மை எங்கு கொண்டு செல்லும், சரியான நோக்கம் எப்படி அமைய வேண்டும், வாழ்க்கை என்பது என்ன, வாழும் முறை யாது, அதனால் நமக்கு நிகழும் பலன் ஏது, சரியான வாழ்க்கை முறை எங்ஙனம் அமைய வேண்டும் எனக்கூடிய தத்துவங்களைத் தெள்ளத் தெளிய ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த திவ்ய காவ்யத்தில் தந்துள்ளார். அதில் தந்துள்ள தத்துவங்களைச் சரிவர கிரஹித்து, அவைகளை அயராது சரிவர நாம் பின்பற்றினோமானால் நம் வாழ்க்கை முறை மிகச் சீரும் சிறப்பும் பெற்று, வளமுடனும், ஆற்றலுடனும், தார்மிகமாகவும், அமைதியுடனும் அமைந்து நம்மை ஜீவன்முக்தன் நிலைக்கு உயர்த்த ஹேதுவாகும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. அதில் தந்துள்ள ததுவங்கள் எவை எனப் பார்ப்போமா?
காவியம்:
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

ஸ்லோகம் 01: கேளுங்கள்
ஸாரம்:
கோவிந்தனை பஜி, கோவிந்தனை பஜி, கோவிந்தனையே பஜி ஹே! தெளிவில்லாத புத்திஹீனனே.. உனது கடைசிக் காலம் (மரணம்) உன்னை நெருங்கும்போது, உனது இலக்கணம், வ்யாகரணம் (முதலிய ஞானம்) உன்னைக் காப்பாற்றாது. அதனால் (நித்திய ஆனந்த நிலையில் இருக்கும்) கோவிந்தனை என்னேரமும் பஜி.

விளக்கம்:
பஜ என்பத்ற்கு பஜிப்பது அல்லது, ஜெபிப்பது அல்லது பாடுவது அல்லது தியானிப்பது என்று பொருள். நித்திய சுத்த ஆனந்த நிலைக்குப் பெயர் கோவிந்தம். எப்பொழுதும் அந்த நிலையில் இருப்பது ஸ்ரீ கிருஷ்ணன் ஆதலால் அவர் கோவிந்தன் எனப்படுவார். மனித ஜென்மம் வேண்டுவது என்ன? நித்திய ஆனந்தம். அந்த நிலைக்கு உடமை யார்? ஸ்ரீ கிருஷ்னன். ஆகையால் எப்பொழுதும் அவனை நினை அல்லது பஜி என்று ஸ்ரீ ஆதி சங்கரர் புத்தி கெட்டு உழலும் மனித ஜாதிக்கு உபதேசம் செய்கிறார். அவர் க்ஷேத்திராடனம் செல்லும்பொழுது ஒரு மஹா வித்வான் சாஸ்த்ர கிரந்தங்களை வைத்துக்கொண்டு அதன் இலக்கணத்தை (வியாகரணம்) வாய்ப்பாடம் செய்வதைக் கண்டார். அதைச் சுட்டிக்காட்டி எழுதினது இந்த ஸ்லோகம். ஏனென்றால், நாம் எல்லோரும் நம் புஸ்தக ஞானத்தில் மிகவும் சமயம் கட்த்துகிறோம். தெய்வ சிந்தனயோ நம் சுய நிலை சிந்தனையோ இல்லாமல் எப்பொழுதும் உலக சம்பந்தப்பட்ட காரியங்களில் நம்து நேரத்தைச் செலவிடுகிறோம். சிறிதளவாவது ஆத்ம சிந்தனை தேவை எனக் கூறுவதாக அமைந்துள்ளது இந்த உபதேசம். நாம் மரணத்தை அணுகும்போது நாம் படித்த விஷயங்கள் (உலக ஞானம்) நம்மைக் காப்பாற்றாது. ஆத்ம ஞானம் ஒன்றுதான் அதற்கு மருந்து எனப் பொருள். அதை அறிய எந்தப் புஸ்தகமும் உதவாது. மஹா ஞானிகள் அவர்கள் தபோ நிலையிலிருந்து தெரிந்துகொண்ட ஆத்ம ஞானத்தை நமக்குப் பல கிரந்தகள் மூலமாகத் தந்துள்ளார்கள். அதன் ஸாரம்தான் பஜ கோவிந்தம்.

மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்

ஸ்லோகம் 02: கேளுங்கள்
ஸாரம்:
ஹே மூடா! திரவ்யத்தில் உள்ள பேராசையை (பணத்தாசை) விடு. இந்தப் பேராசை ஒழிய மனதில் நல்ல விசாரத்தை உண்டுபண்ணு. யாத்ருச்சிகமாக வரும் உனது கர்ம பலனை மிக சந்தோஷத்துடன் (மனத்ருப்தியுடன்) அனுபவி.
விளக்கம்:
மனித சுபாவம் ஸுகம் தனத்தால் வருகிறது என்ற தப்பான கருத்துக் கொண்டது. தனம் என்று சொல்வது, பணத்தால் கிடைக்கக் கூடிய எல்லா ஸௌகரியங்களையும் சேரும். நாம் பணத்தாசை பிடித்து அதன் மூலம் வரும் ஸுகத்தை நாடுவது நம் பலஹீனம். அதனால் நம் மனம் ச்ஞ்சலப்படும். ஸுகம் கிடைக்கவில்லயேல் துக்கமும், நினைத்த ஸுகம் கிடைத்தால் ஸந்தோஷமும் கொள்ளும் நம் மனம். இந்த தனத்திலுள்ள (ஸுகங்களிலுள்ள) பேராசையை விடு எனக் கூறுகிறார். ஆனால் நமக்கு தனம் இல்லாமல் வாழ முடியாதே. அதெப்படிப் பணத்தாசையை விடுவது என வினவலாம். கர்மம் பண்ணுவது நமது கடமை. அதுவும் அதில் கிடைக்கும் பலனைக் கருதாது கர்மம் பண்ண வேண்டும் எனக் கர்ம யோகத்தில் பார்த்தோம். அப்படி மனதில் பேராசையை வளர்க்காமல் நம் கர்மத்தில் மனதைச் செலுத்தி அதன்மூலம் தானே கிடைக்கும் பலனை அனுபவிக்க மனதைப் பழக்கிக்கொள் எனப் பொருள் கொள்ள வேண்டும்.

“கர்மன்யேவாSதிகாரஸ்தே மாபலேஷு கதாசன”

என்று ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் சொன்னதுபோல் “கர்மம் செய்வது உன் கையில, ஆனால் அதன் பலன் என் வசம்” எனக் கூறியிருக்கிறார். அதாவது, கர்மம் பண்ண நமக்கு அதிகாரம் உண்டு. என்ன கர்மம் பண்ண வேண்டும், எப்படிப் பண்ண வேண்டும் எனத் தீர்மானிப்பது நம் கையில் உள்ளளது. ஆனால் கர்ம பலன் நாம் எதிர்பார்க்கும் வண்ணம் நமக்குக் கிடைப்பதில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? கர்ம பலன் நாம் செய்யும் கர்மத்தின் தன்மையைப் பொறுத்திருக்கிறது. அது நம் வசம் இல்லை. ஆசை கூடாது என்றோ, பணத்தைத் தியாகம் செய்யவோ, அதை உபயோகிக்கக் கூடாது என்றோ அவர் கூறவில்லை. நம் கர்மத்திற்கு ஏற்பக் கிடைக்கும் தனத்தில் த்ருப்தி கொண்டு சந்தோஷமாக அதை உபயோகித்து மனதை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள் எனப் பொருள் கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் மனச்சாந்தி ஏற்ப்படும்.

நாரீ ஸ்தனபர நாபி தேசம்
த்ருஷ்ட்வாமாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸவஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்

ஸ்லோகம் 03: கேளுங்கள்
ஸாரம்:
ஸ்த்ரீகளுடைய மார்பகத்தையும் நாபி தேசத்தையும் பார்த்து அதி மோஹம் கொள்ளாதே. அதெல்லாம் வெறும் மாமிசத்தின் விகாரத்தால் தோன்றும் (அநித்திய) தோற்றம மட்டுமே என்று மனதில் தினம் தினம் (எப்பொழுதும்) சிந்தனை கொள்.
விளக்கம்:
முதல் ஸ்லோகத்தில் “ஆசையை (மோஹம்)” விடு எனக் கூறினார். இதில் “காமத்தை“ (பாசம்) விடு என உபதேசிக்கிறார். ஏன் ஸ்த்ரீகளின் மார்பிடத்தையும் நாபி தேசத்தையும் குறிப்பாகச் சொல்ல வேண்டும்? இவைதான் நம் காம உணர்ச்சியைத். தூண்டுகின்றன. வாக்யார்த்தத்தை எடுத்துக்கொள்ளாமல் அதன் கருத்தை மட்டும் பார்க்க வேண்டும். இது புருஷர்களுக்கு மட்டும் தந்த உபதேசமல்ல. ஸ்த்ரீகளைப் பொறுத்த மட்டில் புருஷர்களுடைய மயிர்கூபத்துடன் கூடின் மார்பிடமும் அவரகளுடய இடுப்பு, புஜங்கள் முதலியவையும் கூட மாமிசத்தின் தோற்றமே தவிர சாச்வதமல்ல எனப் பொருள் கொள்ள வேண்டும். ஆக, ஏதொரு வஸ்து நமக்குக் காமத்தை ஊட்டுகிறதோ அவையெல்லாம் இதில் படும் என்ற விரிவான கருத்தைக் கொள்ள வேண்டும்.. அதாவது இந்த இரண்டு ஸ்லோகங்களினால் ஆசா பாசத்தைத் துற எனக் கூறுகிறார். அப்படியானால் உலகில் எப்படி வாழ்வது என வினவலாம். என்ன மனோ நிலயில் நாம் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அடுத்த ஸ்லோகத்தில் தந்துள்ளார்.
...நன்றி...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம் Empty bajagovindham 2

Post by Atchaya Wed 20 Jul 2011 - 16:12

பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்
நளினீதள கத ஜலமதிதரளம்
தத்வஜ்ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம்ச ஸமஸ்தம்

ஸ்லோகம் 04: கேளுங்கள்
ஸாரம்:
தாமரை இலையில் தத்தளிக்கும் ஜலபிந்து போல அமைந்த நமது உலக ஜீவிதம் ரொம்ப ஆபத்கரமாகவும், அநித்தியமாகவும் வியாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பீடைகளை உடையதாகவும் அமைந்துள்ளது என அறிவாய்.

விள்க்கம்:
நமது ஜீவதம் அநித்தியம் என்றும், அது வியாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பீடைகளைக் கொண்டதுமாக அமைந்துள்ளது என்ற தத்துவத்தை ஒரு உவமையுடன் சுட்டிக் காட்டுகிறார் ஸ்ரீ சங்கரர். தடாகத்தில் மிதக்கும் தாமரை இலையில் தங்கி நிற்க்கும் ஜெலபிந்துக்கள் எப்படி அந்தத் தாமரை இலை காற்றில் ஆடும்போது தத்தளிக்கின்றனவோ அதுபோல்தான் நம் ஜீவிதமும். எந்த நேரமும் அந்த ஜெல பிந்துக்கள் தடாகத்தில் விழ நேரிடலாம். அதுபோல் நம் ஜீவிதம் எந்த நேரத்திலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது, அது எந்த நிமிடமும் முடியலாம். சாச்வதமில்லாத, துக்ககரமான உலக வாழ்க்கையை நம்பி ஏமாறாதே எனப் பொருள். இதைவிட வேறு உகந்த உவமை கிடைக்குமா? எவ்வளவு நளினமாக இந்த மிகப் பெரிய தத்துவத்தை போதிக்க இந்த உவமையைக் கையாண்டிருக்கிறார்!

யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோSபின ப்ருச்சதி கேஹே

ஸ்லோகம் 05: கேளுங்கள்
ஸாரம்:
நம்மால் எவ்வளவு காலம் சம்பாதிக்க முடியுமோ, அந்நாள் வரை நம்மைச் சார்ந்தவர்கள் நம்மிடம் நெருங்கிப் பழகுவார்கள். எப்பொழுது நரை விழுந்து தேஹம் நலிந்து போகிறதோ அப்பொழுது யாரும், நம் குடும்பத்தார் கூட நம்மிடம் பேசக்கூட மாட்டார்கள்.
விளக்கம்:
நாம் கண்கூடாகப் பார்க்கும் ஓர் சத்திய நிலையை எவ்வளவு சுலபமாகச் சித்தரித்திருக்கிறார்! நம்மால் எவ்வளவு நாள் சம்பாதித்து, பண உதவி பண்ண இயலுகிறதோ, அதாவது மற்றவருக்கு எவ்வளவு காலம் நம்மால் உபயோகமுண்டோ அது வரை நம்மைச் சார்ந்தவர்கள் நம்மிடம் ஒட்டி உறவாடுவார்கள். உலக நியதிப்படிப் பார்த்தால், எல்லோரும் மற்றவரிடம் உதவி எதிர்பார்த்து உறவு கொள்கிறார்கள். நமக்கு வயதாகி வந்து, நம் தேஹம் நரை கண்டு, க்ஷீணமாகி நம்மால் மற்றவருக்கு உபயோகமில்லாமல ஆகிவிடும் பொழுது, நம் சொந்தக் குடும்பத்தினரும் கூட நம்மிடம் ஒட்டி உறவாடத் தயங்குவார்கள். பேசுவதற்குக் கூட அருகில் வர மாட்டார்கள். இதிலிருந்து, உலகத்தில் எந்த உறவும் சாச்வதமல்ல என்ற தத்துவத்தை மிக எளிதாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

யாவத் பவனோ நிவஸதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாSபாயே
பார்யா பிம்ப்யதி தஸ்மின் காயே

ஸ்லோகம் 06: கேளுங்கள்
ஸாரம்:
(நம்) உடலில் எவ்வளவு காலம் வாயு (ஜீவன்) இருக்கிறதோ அதுவரை நமது குடும்பத்தினர் நம் நலனில் இச்சை காட்டுவார்கள். தேஹத்திலிருந்து வாயு (ஜீவன்) அகன்று விட்டால், நமது மனைவிகூட நமது (உயிரற்ற) சடலத்தைக் கண்டு நடுங்குவாள்.
விளக்கம்:
பந்தம், பாசம் என்பது உடலில் உயிர் உள்ள வரை தான். உயிர் போய் தேஹம் சடலமாகி விட்டால், அதற்குப் பெயர் பிணம். பிணத்தைப் பார்த்து யார்தான் பயப்பட மாட்டார்கள்? அப்பொழுது மனைவிகூட அந்தச் சடலத்தை அணுக பயப்படுவாள். ஏன் மனைவி என்று குறிப்பாகச் சொல்லணும்? ஏற்றவும் பாசத்துடன் கூடின உறவு கணவ்ன் மனைவி தானே. ஸ்த்ரீகளைக் கருதும்போது, இங்கு மனைவி என்பதைக் கணவன் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இது இரண்டு தரப்பினருக்கும் பொதுவான தத்துவம். இது எவ்வளவு கண்கூடான சத்தியம்! வாழும்போது, இந்த உடலை நாம் போற்றிக் கொண்டாடுகிறோம். அதற்கு எல்லா சௌகரியங்களையும் செய்து கொடுத்து மகிழ்ச்சி அடைகிறோம். இந்த உடல் நிரந்தரம் அல்ல, அழியக்கூடியது என்ற உண்மை நமக்குத் தெரிவதில்லை. மரணத்திற்குப் பிறகு உடல் தீண்டப்பட மாட்டாது என்ற உண்மையை விளக்குகிறார்.

பாலஸ்தாவத் க்ரீடாSஸக்த:
தருணஸ்தாவத் தருணீ ஸக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தாSஸக்த:
பரமே ப்ருஹ்மணி கோSபினஸக்த:

ஸ்லோகம் 07: கேளுங்கள்
ஸாரம்:
பால்ய வயது விளையாட்டில் செலவாகிறது, இளைய பிராயம் ஸ்த்ரீ ஸல்லாபத்தில் மூழ்கிவிடுகிறது,, முதிர்ச்சிக் காலம் விசாரத்தில் (சிந்தனையில்) நலிகிறது, (மனிதன்) ஒருபொழுதும் பிரஹ்ம்மத்தை நாடுவதில்லை.
விளக்கம்:
வாழ்க்கை எவ்வண்ணம் வியர்த்தமாகிறது என மிகத் தெளிவாகச் சித்தரித்திருக்கிறார். குழந்தைப் பிராயத்தில் நாம் களிப்பாட்டங்களில் மனதை இழக்கிறோம். அப்பொழுது சிந்தித்து வேலை செய்ய இயலாது. குட்டிக்காலம் இப்படி வியர்த்தமாகி விடுகிறது. பௌரனானால் ஸ்த்ரீ சுகத்தில் காலம் ஓட்டுகிறோம். ஸ்த்ரீ சுகம் என்பது பெண்களுடன் உறவாடுவது மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா வித சுகங்களையும் அது குறிக்கிறது; இப்படி உலகத்திலுள்ள ஸகல சுகங்களையும் அனுபவிக்க மனம் துடிக்கிறது. அப்பொழுதும் நம் சத்திய நிலையை அறிய ஆவல் கொள்வதில்லை. முதிர்ச்சியடைந்தால் நாம் தனித்து விடப்பட்டு சிந்தனையில், விசாரத்தில், கவலையில ஆழ்ந்து விடுகிறோம். நம் குடும்பம், குழந்தைகள், பேரன், பேத்தி முதலியவர்கள் நலனுக்காகக் கவலைப்படுதல், நம்மை யாரும் கவனிக்க வில்லையே என்ற ஆதங்கம், நம்மை மரணம் அண்டுமே என்ற கவலை இத்யாதி ஸதா ஸர்வ நேரமும் கவலைப்படுவதிலேயே நம் சமயத்தைக் கழிக்கிறோம். அப்பொழுதும் பிரஹ்ம்மத்தை (நம் சத்திய நிலையை) ஆராய்வதில்லை. ஆத்மஞானம் பெறப் பாடுபடுவதில்லை. இப்படி வாழ்நாள் முழுதும் வியர்த்தமாகக் கழித்து விடுகிறோம். பகவத் சிந்தனை (ஆதம விசாரம்) நம்மை நாடுவதில்லை. பிறகு எப்படி ஆத்ம சாந்தி பெறுவது? எப்படி ஜீவன்முக்தன் நிலையை எய்துவது?

காதே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரோயம் அதீவ விசித்ர:
கஸ்யத்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய த்திஹ ப்ராந்த:

ஸ்லோகம் 08: கேளுங்கள்
ஸாரம்:
நம்முடைய ப்ரியதமன் (அல்லது ப்ரியதமை) யார்? யார் நம்முடைய புத்திரன்? இந்த ஸம்ஸார ஸாகரம் (குடும்ப ஜீவிதம்) அதி விசித்ரமாக உள்ளது. நாம் யாருடையவன்? நான் யார்? எங்கிருந்து வந்தேன்? இப்படி (வாழ்க்கை) தத்துவத்தைப் பற்றி சிந்தனை செய் சகோதரா!
விளக்கம்:
இந்த ஸ்லோகம் மூலம் நம்மை ஆத்ம சிந்தனையில் ஈடுபடச் சொல்கிறார். யார் மனைவி அல்லது பர்த்தா? யார் புத்திரன்? நான் யாருடையவன்? நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், இந்த ஸம்ஸாரம் (குடும்ப பந்தம்) விசித்ரமாக உள்ளதே என்று தத்வார்த்தமாகச் சிந்தனை செய் எனப் பொருள். ஸ்ரீ ரமண மஹர்ஷியின் “நான் யார்” என்ற நூலில் இதைத்தான் அவர் கூறுகிறார். முதலில் நம்மை அறிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் உலக ஞானம் பூர்த்தியாகாது. உலகத்தை அறிவதற்கு முன் யார் அறிகிறார்கள் எனப் பார்க்க வேண்டும். (Know the Knower). அதாவது பார்ப்பவனை (Subject) அறியுமுன் பார்ப்பதை (Object) அறிய இயலாது. அந்த ஞான்ம் பூர்த்தியாகாது. ஸ்ரீ சங்கரர் ஆத்ம விசாரத்தில் ந்ம்மை மூழ்கச் சொல்கிறார்.

ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சல தத்வம்
நிச்சல தத்வே ஜீவன் முக்தி:

ஸ்லோகம் 09: கேளுங்கள்

ஸாரம்:
ஸத்துக்களுடைய (புண்ணியாத்மாக்கள்) கூட்டுறவு கிடைத்தால் பந்தபாசத்திலிருந்து விடுதலை கிடைக்கும். பந்தபாச விடுதலை நம்மை மோஹத்திலிருந்து (மாயை) விடுபடச் செய்யும். மோஹம் அகன்றால் ஸ்திரமாக உள்ள (நித்திய) வஸ்து விளங்கும். ஸ்திரமான வஸ்து விளங்கினால் அதுவே ஜீவன்முக்தி நிலை.
விளக்கம்:
ஆத்ம விசாரம் செய்ய நமக்கு வ்ழிகாட்டி வேண்டும். அதுதான் ஸத்துக்களுடைய சங்கம். அதாவது நல் வழியில் செல்லும் ஞானிகளின கூட்டுறவு. அப்படி அவர்களிடம் உறவு கொண்டால் அவர்கள் நமக்கு வழி காட்டுவார்கள். அப்படி அவர்கள் வழியில் சென்றால், பந்தபாசங்கள் ஒழியும். எப்படி? மேலே சொன்ன ஆத்ம விசாரப் பாதையில் செல்ல அவர்கள் நமக்கு உதவுவார்கள். அப்படி ஆத்ம விசாரம் செய்தால் மோஹம் (Deluision) அகலும். அதாவது மாயை அகலும். அதாவது ஞானம் உதயமாகும். அப்படி மாயை அகன்று ஞானம் வந்தால் ஸ்திரமாக உள்ள நிச்சலமான வஸ்து (SELF) நமக்குப் புலப்படும். அப்படிப் புலப்பட்டால் அதுவே நமக்கு மன அமைதியைத் தந்து இந்த உடலில் இருக்கும்போதே ஜீவன்முக்த நிலையைத் தரும். இதைத்தான் ஸ்ரீ ரமணமஹர்ஷி “Self Realization” எனக் கூறியிருக்கிறார். திருப்புகழ் என்ற கிரந்தத்தில் ஸ்ரீ அருணகிரி நாதர் “ஸ்வானுபூதி” எனக் குறிப்பிட்டுள்ளார். இதைத்தான் “ஆத்ம ஸாக்ஷாத்காரம்” என்று கூறுகிறார்கள். அதாவது தன்னைத் தானே அறிந்துகொள்வது. இதுதான் நம் வாழ்க்கை லக்ஷியம்.
நன்றி....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம் Empty baja govindham 3

Post by Atchaya Wed 20 Jul 2011 - 16:14

பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்
வயஸி கதே க:காமவிகார:
சுஷ்கே நீரே க:காஸார:
க்ஷீணே வித்தே க:பரிவார:
ஞாதே தத்வே க:ஸம்ஸார:

ஸ்லோகம் 10: கேளுங்கள்
ஸாரம்:
முதிர்ச்சி அடையும்போது (அதாவது சிறுவயது போய் வயதாகும்போது) என்ன காம விசாரம்? ஜலம் வற்றின பிறகு எங்கே தடாகம் (ஏரி)? தனமில்லதாகும் பொழுது எங்கே சுற்றத்தார்கள்? (ஆத்ம) ஞானம் கிடைத்தபிறகு ஏது ஸம்ஸாரம்?
விளக்கம்:
உலக பந்தம் பலனில் அடங்கியது. நமக்குப் பலன் இல்லையேல் நாம் யாருடனும் கூட்டுறவு வைத்துக்கொள்ள மாட்டோம். சிறுவயது போய் நாம் முதிர்ச்சி அடையும்போது நமக்குக் காம விசாரங்கள் அடங்கிவிடுகின்றன. முதியோர்களில் சிறுவர்களில் காணும் காம உணர்ச்சி அல்லது ஸல்லாபம் இருப்பதில்லை. ஒரு தடாகத்தில் (ஏரி) ஜலம் முழுதும் வற்றிவிட்டால் அதற்குத் தடாகம் என்ற பேர் போய்விடுகிறது. அதேபோல் நம்மிடம் தனமில்லையேல் நம உறவினர்கள் நம்மை நாடி வரமாட்டார்கள். அதாவது நம் பொருளாதார நிலை போய் விட்டால் சுற்றத்தார் விலகிவிடுவார்கள். ஆத்மஞானம் வந்து விட்டால் இந்த உலக வாழ்க்கை சுக தூக்கங்கள் ந்ம்மை பாதிக்காது. ஞானம் வந்தபிறகு ஸம்ஸார பந்தம் நம்மை அண்டாது எனப்பொருள். முன் சொன்ன ஸ்லோகத்தில் ஆத்ம ஞானம் பெற வழியைக் காண்பித்தார். எதற்காக ஆத்ம ஞானம் பெறவேண்டும் என்று இந்த ஸ்லோகத்திலும் அடுத்து வரும் ஸ்லோகங்களிலும் விவரிக்கிறார்.

மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

ஸ்லோகம் 11: கேளுங்கள்
ஸாரம்:
தனத்திலோ (ஸுகம்), குழந்தை பருவத்திலோ, யௌவ்வன் பருவத்திலோ அபிமானம் கொள்ளாதே, ஏனென்றால் காலம் இப்பருவங்களை எல்லாம் அகற்றிவிடுகிறது. மாயையால் உண்டான இந்த உலகவாழ்வை விட்டு (என்றென்றும் சாஸ்வதமான) ப்ரஹ்ம பதத்தை முறையே அறிந்து அதில் மூழ்குவாயாக.
விளக்கம்:
உலகஸுகம் தனத்தால் கிடைப்பது. தனம் சாச்வதமல்ல. அதேபோல் குழந்தை/யௌவனப் பருவவங்கள் சாச்வதமல்ல. ஏனெனில் அவை காலப்போக்கில் மாறக்கூடியவை, அழியக் கூடியவை.. ஸுகமும் துக்கமும் மாறி மாறி நிகழ்கின்றன. அவை இரண்டும் அநித்தியம். பால்யம், கௌமாரம், யௌவனம், வார்த்தக்யம் என நாலு நிலைகள் நம் ஜீவித்தத்தில் மாறி மாறி வருகின்றன. ஆகையால், இந்த ஒரு நிலையும் சாச்வதமல்ல். எனத் தெளிவாகிறது. ஆதலால் இதன்மேல் அபிமானம் அல்லது நாட்டம் கொள்வது மூடத்தனம். அதேபோல் இந்த உலகத்திலுள்ள எல்லா வஸ்துக்களும் மாறக்கூடியவை, கிரமேண அழியக்கூடியவை. எது சாச்வதமல்லவோ அது மாயாஸ்வரூபம் என அறிந்துகொள்ள வேண்டும். இந்த மாயா வடிவான உலகைத் துறந்து (விட்டு) நித்திய வஸ்துவான ப்ரஹம்த்தை உணர்ந்து அதாகவே பரிணமிக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஜீவன்முக்தர்களாவோம் எனக் கருத்து. ஸ்ரீ சங்கரர் இங்கு “ப்ரஹ்ம்ம ஸத்யம் ஜகன் மித்யா” (ப்ரஹ்மம் ஒன்றுதான் ஸத்யநிலை, நித்தியம், சாஸ்வதம், உலகம் அநித்தியம் அல்லது மாயை) என்ற தத்தவத்தை நிலை நாட்டுகிறார். அப்படி ப்ரஹ்மநிலை ஏயதி விட்டால் அதில்தானே திடமாக இருக்க வேண்டும். இதைத்தான் “ஆதம ஸாக்ஷாத்க்காரரம்” எனக் குறிப்பிடுகிறார்கள் பெரியோர்கள். ப்ரஹ்மத்தை அறிவது என்பதற்குப் பதிலாக ப்ரஹ்ம நிலையில் திகழ்வது என்பது மிகப் பொருத்தமான விளக்மாகும்.

தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:
சிசிர வ்ஸந்தௌ புனராயாத:
காலக்ரீடதி கச்சத்யாயு:
ததபின முஞ்சதி ஆசாவாயு:

ஸ்லோகம் 12: கேளுங்கள்
ஸாரம்:
இரவும் பகலும், உதயாஸ்தமனங்களும், காற்றுக்காலமும் வஸந்த காலமும் மாறி மாறி வந்தவண்ணம் இருக்கின்றன, காலம் விளயாடுகிறது, வாழ்க்கை நலிந்துகொண்டு வருகிறது, ஆனாலும் யாரும் ஆசையை விடுவதில்லை.
விளக்கம்:
நாம் உலகில் வாழ்ந்து வந்தாலும் உலகநீதிக்குட்ப்பட்டு நடப்பதில்லை என்பதைத் தெளிவாகத் தந்துள்ளார். பார்ப்போம். இரவு, பகல், உதயம், அஸ்தமனம், காற்றுக்காலம், வஸந்தகாலம் முதலியவை மாறுகின்றன. இப்படிக் காலம் மாறி மாறி விளயாடுகிறது, அத்துடன் நமது வாழ்க்கையும் மாறி மாறி வருகிறது (அதாவது பால்யம், கௌமாரம், யௌவனம், வார்த்தக்யம்) இது உலம நியதி (Natural Law). சுருங்கச் சொன்னால் உலகிலுள்ள எல்லாமே மாறக்கூடியவை. இது நம் கையில் இல்லை, அது உலக நியதி. அப்படி உலகமே மாறினாலும், அஹோ! நம் ஆசை மட்டும் ஏன் மாறுவதில்லை? எப்பொழுதும் நாம் ஆசாபாசத்தில் உழன்றவண்ணம் இருக்கிறோம். இது மதியீனமல்லவா எனச் சொல்லாமல் சொல்கிறார்.

காதேகாந்தா தனகத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா
த்ருஜகதி ஸஜ்ஜன ஸங்க்திரேகா
பவதி பவார்ணவ தரணே நௌகா

ஸ்லோகம் 13: கேளுங்கள்
ஸாரம்:
எதற்காக மனைவி (கணவன்), தனம் இத்யாதிகளில் விசாரம் கொள்கிறாய்? ஹே மதிஹீனனே! உன்னைப் பரிபாலிப்பவன் உனக்கு இல்லையா? இந்த மூன்று உலகத்திலும் ஸஜ்ஜனங்களுடைய கூட்டுறவு மட்டும்தான் உனக்கு இந்தப் பிறப்பிறப்புடன் கூடின ஸம்ஸார ஸாகரத்தைக் கடக்கத் தோணியாக அமைய முடியும்.
விளக்கம்:
ஸத்ஸங்கத்தின் மஹிமையை இங்கு விளக்குகிறார். உலகில் நாம் உழல்வது, மனைவி, மக்கள், பந்துக்கள், தன ஸம்பாத்தியம், ஸுகலோலுபம் போன்ற ஆசாபாச பந்தத்தில் கிடந்து உழலுகிறோம். இந்த பந்தங்கள் சரிவர அமையவில்லையானால், நாம் கலங்குகிறோம். நான், எனது என்ற அஹம்காரம் மமாகாரத்தில் உழல்வதால் நம்மைக் காக்கும் ஒருவன் (கடவுள்) இருக்கிறான் என்ற பாவம் நமக்கு வருவதே இல்லை. எல்லாம் நம்மால் இயங்குகிறது என்ற விசாரம் நமக்கு மேல் ஒருவன் நம்மை நடத்துகிறான் என்ற விசாரமே இல்லாமல் செய்துவிடுகிறது. மூன்று உலகம் எனப்படுவது, ஜாகர, ஸ்வப்ன, ஸுஷுப்தி என்ற மூன்று அவஸ்தை. நாம் சில சமய்ம் விழித்திருக்கிறோம், சில சமயம் ஸ்வப்ன உலகில் இருக்கிறோம், இன்னும் சில சமயம் உறக்கத்தில் போய்விடுகிறோம். இப்படி இந்த மூன்றும் மூன்று உலக வாழ்க்கை எனக் கூறப்படுகிறது. இந்த மூன்று நிலையிலிருந்தும் கடைத்தேற (அதாவது பிறப்பு இறப்பு என்ற நிலை இல்லாமலாக) நமக்கு உதவி புரிவது ஸத்ஸ்ஸங்கம் ஒன்றுமட்டும்தான் என அறிய வேண்டும். அதாவது ஞானிகளின் கூட்டுறவு. இது முன்பே சொன்னதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. உலகமே மாயம் என்று கூறும்போது, ஸத்ஸ்ஸங்கம் மாயை அல்லவா என்ற வினா எழலாம். இருட்டு அகல வேண்டுமானால், ஒளியைக் கொணர வேண்டும். ஒளி அநித்தியபாகுமா? ஆகாது. ஏன்? ஓளியில்லயேல் இருட்டு. அப்பொழுது ஒளி நிரந்தரமாக இருந்தால் இருட்டு என்பது வராதே. ஆதலால் அநித்திய அவஸ்தை மாற நித்திய அவஸ்தையை நாட வேண்டும். இருட்டு அஞ்ஞானம். ஒளி ஞானம். ஞானம் வந்தால் அஞ்ஞானம் அகலும் என்பது நமக்குப் புரிந்ததே. ஒளியில் எல்லாம் விளங்கும். அதுபோல் ஸத்துக்களுடைய கூட்டுறவு நமக்கு ஞானத்தைத் தரும். அப்பொழுதுதான் நமக்கு ஞானம் வரும். இதுதான் இதன் தாத்பர்யம்.

ஜடிலோ முண்டீ லுஞ்சிதகேச:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பச்யன்னபி ச ந பச்யதி மூடோ
ஹ்யுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:

ஸ்லோகம் 14: கேளுங்கள்
ஸாரம்:
தாடி மீசை வைத்து, தலயில் ஜெடைகள் நிறைந்து, அல்லது தலையைக் முண்டனம் செய்து, காஷாய வஸ்த்திரத்தைத் தரித்து, இப்படிப் பல வேஷங்கள் போடுபவன் மூடனேயாவான். அவன் பார்வை இருந்தும் குருடனாவான். ஏனென்றால் இவையெல்லாம் அவன் வயற்றுப் பாட்டிற்கே.
விளக்கம்:
சன்யாசம் என்ற ஓர் உன்னத நிலையைக் களங்கப்படுத்தும் வகையில் தாடி மீசை வைத்து, தலையை முண்டனம் செய்து, அல்லது தலையில் ஜெடையை வளர்த்தி, காஷாய வஸ்திரம் தரித்து, தம்மை சன்யாசி என்று கூறிக்கொள்பவர் மூடர்கள ஆவார்கள். அவர்கள் வயிற்றுப்பாட்டிற்காகப் போடப்பட்டவை இந்த வேஷம். இவர்களைக் கண்ணிருந்தும் குரூடர்கள் எனக் கூறலாம். சிந்திக்கத் திராணி இருந்தும் ஞானமில்லாதவர் எனப் பொருள். வெறும் வேஷம் போட்டதால் ஒருவன் சன்யாசி ஆகிவிட முடியாது. சன்யாசி வேஷம் போடவேண்டிய அவசியமில்லை என்ற கருத்தை இதுமூலம் தெளிவுபடுத்துகிறார். சன்யாசம் என்பது மனத்தளவில். ஆசாபாசத்தைத் துறந்து, உலக சிந்தனையற்று மௌனமாக தியான நிலையில் பிரஹ்மமானுபூதியில் எப்பொழுதும் நிலைத்திருப்பதுதான் ஒரு சன்யாசியின் லக்ஷணம் அல்லாது வேஷம் போடுவதல்ல எனப் பொருள். சன்யாசிக்கே இப்படியானால் நம் நிலை என்ன? உலகமே ஒரு நாடக மேடை, நாம் எல்லாம் அதில் வேஷதாரிகள் எனச் சொல்லலாமல் சொல்வதுபோல் இருக்கிறது.

அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசனவிஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபின முஞ்சதி ஆசாபிண்டம்

ஸ்லோகம் 15: கேளுங்கள்
ஸாரம்:
உடல் நலிந்து (சோர்வடைந்து), வாயில் பல்கள் வீழ்ந்துபோய், தலைமுடி நரைத்துப்போய், கையில் ஊன்றுகோலுடன் இருக்கும் விருத்தன் (கிழவன்) அந்த நிலையிலும் ஆசைகள் எனும் மூட்டையை விடுவதில்லை.
விளக்கம்:
ஆசை யாரை விட்டது எனக் கேட்பதுண்டு. ஆசை யாரையும் பிடிகூடுவதில்லை. நாம் தான் அதைப் பிடிகூடுகிறோம் என்று மாத்திரமல்ல, உடல் தள்ளாடி, வாயில் பல்களெல்லாம் உதிர்ந்து, தலைமுடி முழுவதும் நரைத்து, நடப்பதற்கு ஊன்றுகோல் வேண்டிய நிலையிலிருக்கும் ஒரு கிழவன்கூடத் தன ஆசையெனும் மூட்டையை விடுவதில்லை. இதிலிருந்து நாம் உலக ஸுகத்தில் எவ்வளவு ஆசை வைக்கிறோம் என்று தெரிகிறது. நாம் தள்ளாத நிலையிலும ஆசையை விடுவதில்லை. எவ்வளவு மூடத்தனம்! இது நம் அறிவீனம் என்றே சொல்லவேண்டும். மன உடல் நிலை மாறி வர்த்தக்யம் வந்தாலும் நாம் ஆசை எனூம் மூட்டையை ஏன் சுமக்கிறோம்? இதுதான் அஞ்ஞானம் என்பது.

அக்ரே வஹ்ன்னி: ப்ருஷ்டே பானூ:
ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜானு:
கரதல பிக்ஷஸ்தருதலவாஸ:
ததபின முஞ்சதி ஆசாபாச:

ஸ்லோகம் 16: கேளுங்கள்
ஸாரம்:
முன்னால் அக்னியும் (தீயும்), பின்னால் ஸூர்யனும், இரவு நேரம் தன் கால்முட்டுகள் தாடியைத் தொடும்விதம் மரச்சுவட்டில் சுருங்கி உட்கார்ந்து, தன் இரு கரங்களையும் ஏந்தி பிக்ஷை வாங்கிச் சாப்பிடும் நிலையிலும் (அவன்) ஆசாபாசங்களை விடுவதில்லை.
விளக்கம்:
தள்ளாடித் தத்தளிக்கும் முதியவரைப் பற்றிச் சொன்னார். ஆனால் முதியவர் மட்டுமல்லாமல், எவரும் தன் அனாத நிலையிலும் வெய்யிலில் அலைந்து, இரவு குளிரால் தாக்குண்டு தன் உடம்பை மூடக் கம்பிளி இல்லாமலும், தங்க இடம் இல்லாமலும், மரச்சுவட்டில் உடலைக் குறுக்கி உட்கார்ந்து இரு கைகளையும் ஏந்திப் பிச்சை எடுக்கும் ஒரு மனிதனும் தன ஆசாபாசங்களை விடுவதில்லை. அதாவது மனிதர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் தங்கள் உலக ஆசாபாசங்களை விட முயலுவதில்லை எனப் பொருள். ஆசை யாரை விட்டது?

நன்றி...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம் Empty Re: பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum