Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மந்திரி பகுதி 2
Page 1 of 1
மந்திரி பகுதி 2
தர்மசங்கடமடைந்த காசி, "இத்தனை நாட்கள் பொறுத்துக் கொண்ட நீங்கள் இன்னும் ஒரு வாரம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா? காளை தேர்வு எழுதச் சென்றிருக்கிறது. இன்று உங்களைப் பார்க்க நேர்ந்தால், எஞ்சியுள்ள தேர்வுகளை எல்லாம் எப்படி எழுதுமென்று என்னால் கூற முடியாது. காளை இந்த ஆண்டு தேர்வில் வெற்றி பெறவில்லை என்றால் நீங்கள் செலவு செய்த அவ்வளவு பணமும் வீண். அதனால் யோசித்துச் செய்யுங்கள்"என்று நைச்சியமாகக் கூறினான்.
காசி சொல்வதிலும் நியாயம் இருப்பதாய்த் தோன்றவே, மாணிக்கம் அன்றும் காளையைப் பார்க்காமலேயே வீடு திரும்பினான். இரு வாரங்கள் கழித்து, தேர்வில் தன் காளை வெற்றி பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையோடு அதற்கு விருப்பமான புண்ணாக்கினையும் பருத்திக் கொட்டையையும் கோணியில் கட்டித் தூக்கிக் கொண்டு பல்கலைக் கழகம் சென்றான் மாணிக்கம்.
காளையை எப்போதோ விற்றுவிட்ட காசி மாணிக்கத்தைக் கண்டதும், "வாருங்கள் ஐயா. அதிபுத்திசாலியான காளையின் உரிமையாளர் நீங்கள். என்ன காரணத்திற்காக இங்கே வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டான்.
அதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற மாணிக்கம், "என்ன சொல்கிறீர்கள், ஐயா? என் காளையை அழைத்துக் கொண்டு போகவே வந்தேன்" என்று கவலையுடன் கூறினான்.
"தேர்வில் வெற்றி பெற்ற தங்கள் காளை இந்த நாட்டுக்கே மந்திரியாகிவிட்டது தங்களுக்குத் தெரியாதா?" என்று தன் கதையை அவிழ்த்துவிட்டான்.
"என்ன! என் காளை மந்திரியாகிவிட்டதா? என்னதான் இருந்தாலும் என்னிடம் வந்து சொல்லி அனுமதி கேட்டிருக்க வேண்டுமல்லவா?" மாணிக்கம் கோபத்துடன் கேட்டான்.
"ஆமாம், அதுதானே நியாயம்! தங்கள் ஆசியுடன்தான் காளை மந்திரி பதவியை ஏற்றது என்றல்லவா நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்!" என்று மாணிக்கத்துக்கு ஆதரவாகப் பேசினான் காசி.
"எனது காளை மந்திரியானால் என்ன, மன்னனானால் என்ன! அது எனக்குத்தான் சொந்தம். எனவே அதனை நான் அழைத்துப் போகத்தான் போகிறேன். அது எங்கே இருக்கிறதென்று மட்டும் சொல்லுங்கள்" என்றான் மாணிக்கம் மிகுந்த சினத்தோடு.
வேறு வழியில்லாமல் காசி காளை என்ற பெயருடைய மந்திரியின் முகவரியை மாணிக்கத்திடம் கொடுத்தனுப்பினான்.
மந்திரி காளையின் வீட்டினை அடைந்த மாணிக்கம் கதவைத் தட்டி, "ஏ காளையே, வெளியே வா" என்று அதிகாரமாக அழைத்தான்.
அதனைக் கேட்டு வெளியில் வந்த வேலைக்காரனிடம், "நான் என் காளையை அழைத்துப் போக வந்திருக்கிறேன். வெளியே வரச் சொல்" என்றான் கடுமையான குரலில்.
மாணிக்கத்தின் பேச்சு அபத்தமாய் இருந்ததால், அவன் மனநிலை சரியில்லாதவன் என்ற முடிவுக்கு வந்த வேலைக்காரன் அவனை அங்கிருந்து அகலுமாறு எச்சரித்தான்.
இதனால் இருவருக்குள்ளும் பலத்த வாய்த்தகராறு ஏற்பட்டது. வாசலில் குரல்கள் உயர்ந்து கேட்கவும் வெளியில் வந்த மந்திரி, வேலைக்காரனை அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு மாணிக்கத்திடம் முழுவிபரத்தையும் கேட்டறிந்தார். காளையைப் பல்கலைக் கழகத்தில் சேர்த்ததிலிருந்து நடந்த அனைத்தையும் மாணிக்கம் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தபோது மந்திரியும் மாணிக்கத்திற்கு மனநிலை சரியில்லை என்ற முடிவிற்குத்தான் வந்திருந்தார்.
அதனை அறியாத மாணிக்கம், "சரி, வா, காளை. நம் வீட்டுக்குப் போகலாம்" என மந்திரியின் கையைப் பிடித்து இழுத்ததோடு நில்லாமல், "நீ இப்படியே வந்தால், உன்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. அதனால் இந்த மாட்டுத்தோலைப் போர்த்திக் கொள்" என்று அவர் மேல் போர்த்தப் போனான்.
பொறுமையை இழந்த மந்திரி தன் வேலைக்காரர்களிடம், "இவனை அடித்து வெளியில் துரத்துங்கள்" என்று கட்டளையிட்டார்.
அவர்கள் தங்கள் கடமையைச் செவ்வனே செய்ய, அடி பொறுக்காத மாணிக்கம், ஒரே ஓட்டமாய் தன் ஊர் வந்து சேர்ந்தான்.
"காளை எப்படி இருக்கிறது? ஏன் அழைத்துவரவில்லை? தேர்வில் வெற்றி பெற்றுவிட்டதா? அறிவாளியாகிவிட்டதா?" என்று மாணிக்கத்தின் மனைவி கேள்விக் கணைகளால் அவனைத் துளைத்தாள்.
"காளை பெரிய அறிவாளியாகி மந்திரி பதவியிலிருக்கிறது. ஆனால் அதனிடம் இருக்கும் மிருகத்தனம் மட்டும் மாறவே இல்லை. நன்றி, விசுவாசம் மறைந்தே விட்டது" என்று வருத்தத்துடன் பதிலளித்தான் மாணிக்கம்.
நன்றி....

Similar topics
» மந்திரி....
» கறை நல்லது மந்திரி...!
» மந்திரி நட்ட மரம்
» தலைவர் சீக்கிரமே மந்திரி ஆயிடுவாராம்...!
» கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum