Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பறங்கிக்காய் மகிமை!
Page 1 of 1
பறங்கிக்காய் மகிமை!
என் வயது 31. சிறுநீர்ப் பையில் புண்கள் இருப்பது ஸ்கேன் செய்து பார்த்தபோது தெரிந்தது. அதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறது. உடல் எடை 45 கிலோதான் உள்ளது. புண்கள் ஆறவும் உடல் எடை கூடவும் வழி என்ன?
- வை.ச.விமல் ஆனந்த்
உணவின் மூலமாக ஏதேனும் விஷத் தொற்றோ, கிருமித் தொற்றோ ஏற்படுமானால், அதை வெளியேற்ற உடல் சிறுநீரகங்களைப் பயன்படுத்தி சிறுநீரைத் தாரையாகப் போகச் செய்கிறது. கல்லீரல் வழியாக இந்த விஷத் தொற்றை வெளியேற்ற, பித்த திரவங்களின் வழியாகச் சிறுநீரில் கலக்கும் போதும், சிறுநீர்ப் பையில் புண்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. அதனால் நீங்கள் உணவில் மாற்றங்களை ஏற்படுத்தி, மருந்துகளைச் சாப்பிட்டால், விரைவில் நிவாரணம் பெறலாம். வெளியே உணவுப் பண்டங்கள் சாப்பிடுவதை நிறுத்தி, வீட்டில் தயாரிக்கப்படும் தரமான உணவு வகைகளை மட்டுமே நீங்கள் சாப்பிடுவது நல்லது.
இனிப்பும் குளிர்ச்சியும் நிறைந்த பறங்கிக்காய் சாப்பிட மிகவும் நல்லது. அது உடல் அழற்சி, பித்தப் பெருக்கு இவற்றைத் தடுக்கும். பழுத்த பறங்கிக் காயின் காம்பை உலர்த்தி தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீரகங்களின் உள்ளே விஷப் பற்றுதலின் தாக்கம் குறையும். 4 - 8 விதையைச் சிறிது தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டிக் குடிக்க, சிறுநீரக அழற்சி குறையும். நீர்ச்சுருக்கை அகற்றும் பனங்கற்கண்டை அந்த விதைக் கஷாயத்துடன் சேர்த்துச் சாப்பிட, விரைவில் குணம் கிடைக்கும்.
பறங்கிக் காயைப் போல, பீர்க்கங்காய், புடலங்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கள் உள் அழற்சியைப் போக்கி, சிறுநீரை அதிகமாக வெளியேற்றும். இனிப்பும் குளிர்ச்சியும் நிறைந்த கறிகாய்களையும் உணவில் அதிகம் சேர்ப்பது நலமே.
நன்னாரி வேர்த்தூளைக் குடிநீரில் 5-10 கிராம் போட்டு அது ஊறியதும் சாப்பிட, சிறுநீரை அதிகமாக வெளியேறச் செய்து ரத்தத்தைத் சுத்தப்படுத்தும். உடற்காங்கை குறைக்கும். நன்னாரி பானகம் கோடையில் ஏற்றது.
வால்மிளகைப் பசுவின் பாலில் ஊற வைத்து, அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டு வர சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் சீழ் விழுதல், நீர்த்துவார வேக்காளம் குறையும்.
முலாம் பழச் சாற்றோடு சர்க்கரை சேர்த்துப் பருகினால் சிறுநீர் எரிச்சலுக்கு நல்லது.
தண்டுக் கீரை மலத்தை இளக்கி கொதிப்பை அடக்கும். வயிற்றுக் கடுப்பு, ரத்தபேதி, நீர்ச்சுருக்கு இவற்றுக்கு நல்லது. அதுபோல சிறுகீரையும் தண்டுக் கீரையைச் சார்ந்ததே. கண் புகைச்சல், நீர்ச்சுருக்கு, சிறுநீர்ப்பைப் புண், வீக்கம் இவற்றைப் போக்கும். உடல் அழகைத் தரும்., பசலைக் கீரை நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, ருசியின்மை, வாந்தி முதலியவற்றுக்கு நல்லது. பருப்புக் கீரை இனிப்பும் புளிப்பும் உள்ளது. கொதிப்பை அடக்கும். சிறுநீரைப் பெருக்கும். குடல் வறட்சியை நீக்கி மலத்தை இளக்கும். உள் புண்ணை ஆற்றும். இவற்றை நீங்கள் பயன்படுத்துவது நல்லது.
இனிப்பும் குளிர்ச்சியும் நிறைந்த சவ்வரிசிப் பாயாசம் சாப்பிடவும். புஷ்டி தரும் இனிய உணவாகிய சவ்வரிசியைக் கஞ்சி, கூழ், வடாம் என்று பல வகைகளில் நீங்கள் பயன்படுத்தினால் நீர்த்தாரை அழற்சியை நீக்கி, உடலையும் புஷ்டிப்படுத்தும்.
ஆயுர்வேத மருந்துகளில் சந்தனாஸவம் 15 மிலி, சாரிபாத்யாஸவம் 15 மிலி கலந்து காலை இரவு உணவுக்குப் பிறகு சுமார் 21 -28 நாட்கள் சாப்பிடலாம்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum